புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
156 Posts - 79%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 2%
Pampu
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%
prajai
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
321 Posts - 78%
heezulia
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
2007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_m102007 ஒரு கண்ணோட்டம் - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

2007 ஒரு கண்ணோட்டம்


   
   

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:28 am

First topic message reminder :

தமிழகம்



ஜன.1: பெரியாறு அணையின் கைப்பிடி சுவர் 6 அடி நீளத்துக்குக் கடப்பாரையால் உடைக்கப்பட்டது.



ஜன.2: ஈ.வெ.ரா., சிலை உடைப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சி மாநில பொதுச்செயலர் அர்ஜுன் சம்பத் சிறையில் அடைப்பு.


ஜன.5: திருப்பூர் சாயப்பட்டறைகளுக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்ததை எதிர்த்து 5 நாட்கள் நடந்த ஸ்டிரைக் வாபஸ்.


*இமாம் அலி தப்பிய வழக்கில் 7 பேருக்கு 7 ஆண்டு தண்டனையும் 30 பேருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து மதுரை கோர்ட் தீர்ப்பு.


ஜன.12: சென்னை மாநகராட்சி தேர்தல் வழக்கில் மறு தேர்தல் நடத்த ஒரு நீதிபதியும், வழக்கை தள்ளுபடி செய்து மற்றொரு நீதிபதியும் முரண்பட்ட தீர்ப்பு.


ஜன.13: சுனாமியால் பாதிக்கப்பட்ட வட சென்னை மீனவர்கள் வறுமைக்காக கிட்னியை விற்ற தகவல் வெளியானது.



ஜன.14: முன்னாள் அமைச்சர் செம்மலையின் மனைவி, மகன் மீது அவரது மருமகள் வரதட்சணை புகார்.
*இலவச எரிவாயு இணைப்பு மற்றும் அடுப்பு கொடுக்கும் திட்டத்தை சென்னை தி.நகரில் முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார்.



ஜன.18: சென்னை மாநகராட்சியில் தேர்தலில் நடந்த முறைகேடு காரணமாக மேயர் உட்பட 98 கவுன்சிலர்கள் ராஜினாமா.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:35 am

இந்தியா


மார்ச் 1: ஏ.எக்ஸ்.என்., சேனல் மீதான தடை நீக்கம்.

* உ.பி., முதல்வர் முலாயமுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கும்படி சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
* சட்டீஸ்கரில் நக்சலைட்டுகள் வைத்த கண்ணிவெடியில் சிக்கி எட்டு பேர் பலி.


மார்ச் 2: கோர்ட் அவமதிப்புக் குற்றத் திற்காக மேற்கு வங்கத்தின் மூன்று உயர் அதிகாரிகளுக்கு கோல்கட்டா ஐகோர்ட் ஆறு மாத சிறை தண்டனை விதித்தது.
* பஞ்சாப் முதல்வராக பிரகாஷ் சிங் பாதல், 17 அமைச்சர்களுடன் பதவியேற்பு.


மார்ச் 5: புனேயில் போதை விருந்தில் கலந்து கொண்டதாக பி.பி.ஓ., அதிகாரி, சாப்ட்வேர் இன்ஜினியர்கள் உட்பட பலர் கைது செய்யப்பட்டனர்.


மார்ச் 7: அசாம் காங்., எம்.பி., மோனி குமார் சுபா நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என்பதை தனியார் "டிவி' சேனல் வெளிப்படுத்தியது.


மார்ச் 8: எய்ம்ஸ் பதிவாளர் பி.சி.குப்தாவைப் பதவி நீக்கம் செய்து நிர்வாக இயக்குனர் வேணுகோபால் உத்தரவு.


மார்ச் 13: முலாயம் சிங் அரசால் தன் உயிருக்கு ஆபத்துள்ளது என உ.பி., கோரக்பூர் பா.ஜ., எம்.பி., யோகி ஆதித்யாநாத் லோக்சபாவில் கண்ணீர்.
* இன்சாட்-4பி தென் அமெரிக்காவின் பிரஞ்சு கயானாவின் கொரு ஏவுதளத்திலிருந்து வெற்றிகரமாக ஏவப்பட்டது.
* சென்னையில் கடல்சார் பல்கலை., அமைக்கும் மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்த போது, மத்திய அமைச்சர் பாலுவை மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் தாக்க முயற்சி.


மார்ச் 15: நந்திகிராம் போலீஸ் துப்பாக்கிச் சூடு குறித்து சி.பி.ஐ., விசாரிக்க மேற்கு வங்க ஐகோர்ட் உத்தரவு.


மார்ச் 16: முலாயம் மீதான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் தனக்கு மிரட்டல் கடிதம் வந்ததாகக் கண்ணீர்.
* மேற்கு வங்கம் நந்திகிராமில் போலீசாரால் விவசாயிகள் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் பந்த்

.
மார்ச் 17: நந்திகிராமில் நிலம் கையகப்படுத்தப்படாது என்று மேற்கு வங்க அரசு அறிவிப்பு.


மார்ச் 21: முன்னாள் பா.ஜ., பொதுச்செயலர் பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மும்பை கோர்ட்டில் துவங்கியது.


மார்ச் 22: பாபர் மசூதி இடிப்பு வழக்கை லக்னோ மற்றும் ரேபரேலி கோர்ட்டில் நடத்த சுப்ரீம் கோர்ட் அனுமதி.
* நிதாரி கொலைகள் வழக்கில் மொனிந்தர் சிங் எந்தக் கொலை
யிலும் ஈடுபடவில்லை. சதி வேலையில் தான் ஈடுபட்டார் என சி.பி.ஐ., குற்றப் பத்திரிகை.


மார்ச் 25: விண்ணிலிருந்து விண்ணிலுள்ள மற்றொரு இலக்கை தாக்கும் "அஸ்திரா' ஏவுகணை சோதனை பாலாசோரேயில் வெற்றிகரமாக நடந்தது.
* காஷ்மீர் பிரச்னையில் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தாத இந்தியாவின் நிலைப்பாடு சரிதான் என ஐரோப்பிய எம்.பி.,க்கள் குழு ஆய்வறிக்கை.


மார்ச் 26: இந்தியன் ஆயில் நிறுவன மேலாளர் மஞ்சுநாத் கொலை வழக்கில் பவன் குமாருக்கு மரண தண்டனை விதித்து உ.பி., கோர்ட் தீர்ப்பு.


மார்ச் 29: உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு.


மார்ச் 30: பேஷன் "டிவி'க்கு மத்திய அரசு தடை விதித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:35 am

உலகம்


மார்ச் 6: இந்தோனேசியா சுமத்ராவின் மேற்குப் பகுதியில் 6.3 ரிக்டர் அளவுக்கு ஏற்பட்ட பூகம்பத்தில் 70 பேர் பலி.


மார்ச் 8: வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதாஜியாவின் மகன் தாரிக் ரகுமான் ஊழலுக்கு எதிரான நடவடிக்கையில் கைது செய்யப்பட்டார்.


மார்ச் 9: இந்திய டாக்டர்களுக்கு எதிரான குடியேற்ற சட்டத்தை வாபஸ் பெற்றது பிரிட்டன்.


பாக்., சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி இப்திகார் சவுத்ரியை அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டி அதிபர் முஷாரப் நீக்கினார்.


மார்ச் 22: இலங்கையில் பயங்கரவாத பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்ட முனு பரமேஸ்வரி என்ற தமிழ் பத்திரிகையாளர் விடுதலை.


மார்ச் 24: பாகிஸ்தான் தலைமை நீதிபதியாக ராணா பகவன்தாஸ் பதவியேற்பு.


மார்ச் 25: ஈரானுக்குப் பிற நாடுகள் ஆயுதங்கள் ஏற்றுமதி செய்வது, நிதி ஆதாரங்கள் அளிப்பதற்கு ஐ.நா., தடை விதித்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:36 am

சிறப்பு தகவல்கள்


1. மீண்டும் முதல்வர்

மணிப்பூர் முதல்வராக காங்கிரசை சேர்ந்த இபோபி சிங் மார்ச் 2ல் பொறுப் பேற்றுக்கொண்டார். பெரும்பான்மைக்கு ஒரு இடம் குறைந்த போதும் இந்திய கம்யூ., ராஷ்ட்ரீய ஜனதா தள் ஆதரவுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக இபோபி சிங் அம்மாநில முதல்வரானார்.


2. நக்சல் தலைவலி

சட்டீஸ்கர் மாநிலத்தில் தண்டவத்தா பகுதியின் காவல் நிலையத்தின் மீது மார்ச் 15ல் நக்சல்கள் தாக்குதல் நடத்தியதில் 55 போலீசார் பலியானார்கள். கோரத்தாக்குதலில் இறங்கிய நக்சல்கள் காவல் நிலையத்தை கொள்ளையடித்து ஆயுதங்களை எடுத்து சென்றனர்.

3. இந்தோனேஷியா சோகம்

மார்ச் 7ல் இந்தோனேஷியாவின் யாக்யகர்த்தா விமான நிலையத்தில் தரையிறங்க வந்த "கருடா' பயணிகள் விமானம், திடீரென டயர் வெடித்து அருகில் இருந்த நெல் வயலில் பாய்ந்தது. இதில் விமானம் முழுக்க தீப்பிடித்து எரிந்து, பயணிகள் 49 பேரும் பலியானார்கள்.

4. சுற்றுச்சூழல் மாதா

சர்வதேச நேரு நல்லிணக்க விருதை மார்ச் 22ல் கென்யாவை சேர்ந்த சுற்றுச்சூழல் அறிஞர் வங்காரி மாதா மாதாய்க்கு ஜனாதிபதி அப்துல் கலாம் வழங்கினார். இவர் ஆப்ரிக்காவிலிருந்து நோபல் பரிசு பெற்ற முதல் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:36 am

தமிழகம்

ஏப். 2: கேன்ஸ் பட விழாவில் திரையிட "வெயில்' படம் தேர்வு.



ஏப். 3: சங்கரா மருத்துவமனை ரூ. 257 கோடிக்கு விற்கப்பட்டது.


ஏப். 5: சென்னை வந்த மலேசிய அமைச்சர் டத்தோ சிவலிங்கம் ஏர்போர்ட்டில் மயங்கி விழுந்து மரணம்.


ஏப். 6: முதல்வர் கருணாநிதியுடனான பேச்சுவார்த்தைக்கு பிறகு கரூர் சாயப் பட்டறைகள் "ஸ்டிரைக் வாபஸ்'.


ஏப். 7: திண்டிவனம் அருகே சென்டூரில் கார் குண்டு வெடித்து 16 பேர் பலி.


ஏப். 14: அம்பேத்கர் படத்தை யார் திறப்பது என்ற பிரச்னையில் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரசார் ரகளை.


ஏப். 15: காவிரி நடுவர் மன்றத்தில் விளக்கம் கோரும் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்வது என தமிழகத்தில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு.


ஏப். 17: தி.மு.க.,வினருக்கு "பார்' நடத்த அனுமதிக்கும்படி சபாநாயகர் ஆவுடையப்பனின் உதவியாளர் கடிதம் எழுதியது தொடர்பாக ஊழல் தடுப்பு இயக்குனரிடம் அ.தி.மு.க., புகார்.



ஏப். 23: ஜெயா "டிவி'க்கு வந்த மிரட்டல் கடிதத்தை தொடர்ந்து மோப்ப நாயுடன் போலீசார் வெடிகுண்டு சோதனை.
* முன்னாள் ராணுவ வீரர் நல்லகாமனை தாக்கிய வழக்கில் மதுரை விரைவு கோர்ட் எஸ்.பி., பிரேம்குமாருக்கு "கைது வாரண்ட்'.




ஏப். 25: மதுரையில் முதன்முறையாக விமானப்படையினர் வான் சாகசம்.
* பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆந்திர அரசுக்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு.


ஏப். 27: சஸ்பெண்ட் செய்யப்பட்ட நான்கு அ.தி.மு.க., உறுப்பினர்கள் மீதான தடை சட்டசபையில் விலக்கப்பட்டது.
* கூடுதலாக 60 டி.எம்.சி., தண்ணீர் தர வேண்டும் காவிரி நடுவர் மன்றத்தில்தமிழகம் கோரிக்கை.



ஏப். 28: பாலாற்றின் குறுக்கே அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து ஆந்திர எல் லைக்குள் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் விரட்டியடிக்கப்பட்டனர்.
* பெரியாறு அணையின் ஸ்திரத்தன்மை குறித்து தமிழக அரசு நியமித்த தொழில்நுட்ப குழுவினர் ஆய்வு.


ஏப். 29: விருதுநகரில் நடிகர் சரத்குமார் காமராஜர் மணிமண்டப அடிக்கல் நாட்டுவிழாவை நடத்தினார். புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவிப்பு.
* ஸ்டாலினுக்கு கறுப்புக்கொடி காட்ட முயன்ற ஸ்ரீதர் வாண்டையார் கைது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:37 am

இந்தியா


ஏப். 2: சட்டசபையில் உள்ள பொருட் களை சேதப்படுத்திய திரிணமுல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அபராதம் விதித்து மேற்கு வங்க சபாநாயகர் அறிவிப்பு.


ஏப். 4: டில்லியில் சார்க் மாநாடு துவங்கியது.


ஏப். 5: உ.பி.,யில் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்ல. உ.பி., ஐகோர்ட் அறிவிப்பு.


ஏப். 6: அமால்கமேசன் குழுமத்தலைவர் சிவசைலத்துக்கு பத்ம ஸ்ரீவிருது வழங்கப்பட்டது.


ஏப். 7: டில்லி மாநகராட்சியை பா.ஜ., கைப்பற்றியது.


ஏப். 9: சர்ச்சைக்குரிய "சிடி' விவகாரத்தில் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜரான ராஜ்நாத் சிங்கை போலீசார் கைது செய்ய மறுப்பு.


ஏப். 10: டில்லியில் சீல் வைக்கப்பட்டிருந்த கட்டடங்களில் சீலை உடைத்த பா.ஜ., எம்.எல்.ஏ., ஹர்சரண் சிங்க்கு சிறை தண்டனை விதித்தது சுப்ரீம் கோர்ட்


ஏப். 12: முழுவதும் இந்திய தொழில் நுட்பத் தால் உருவான அக்னி 3 ஏவுகணை சோதனை வெற்றி பெற்றது.


ஏப். 18: மனைவி மற்றும் மகனின் பாஸ்போர்ட் மூலம் வேறு நபர்களை வெளிநாடு அழைத்து செல்ல முயன்ற பா.ஜ., எம்.பி. கடாரா கைது.


ஏப். 22: ஒரிசாவின் சந்திப்பூர் கடற்கரையில் உள்ள ஆய்வு மையத்தில் "பிரமோஸ்' ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தது.


ஏப். 23: இத்தாலியின் "ஏஜைல்' செயற்கைக்கோளுடன் விண்ணில் செலுத்தப்பட்டது இந்தியாவின் பி.எஸ்.எல்.வி.,


ஏப். 26: போலி பாஸ்போர்ட் மூலம் ஆள் கடத்தலில் ஈடுபட்ட பா.ஜ., எம்.பி., கடாரா லோக்சபாவில் கலந்து கொள்ள தடை.


ஏப். 29: மீண்டும் நந்திகிராமில் நடந்த துப்பாக்கி சண்டையில் ஒருவர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:37 am

உலகம்


ஏப். 2: தென் பசிபிக் கடலில் ஏற்பட்ட பூகம்பத்தில் சலோமன் தீவை சேர்ந்த 50 பேர் பலி.


ஏப். 6: ஆப்கன் தலைநகர் காபூலில் தற்கொலைபடையினர் நடத்திய தாக்குதலில் 5 பேர் பலி.


ஏப். 11: வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினா மீதான ஊழல்களை விசாரிக்க சிறப்பு விசாரணைக்குழு அமைப்பு.


ஏப். 14: தாய்லாந்து நீர்வீழ்ச்சியில் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் 35க்கும் அதிகமானோர் பலி.


ஏப். 20: அமெரிக்கா நாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் பணிபுரிந்த ஒருவர் உடன் பணிபுரிந்தவரை துப்பாக்கியால் சுட்டு தானும் தற்கொலை.


ஏப். 23: பாகிஸ்தானில் உள்ள சிறப்பு முகாம்களில் இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிக்கப்படுவதாக சீனா குற்றச்சாட்டு.


ஏப். 24: இலங்கை ராணுவத்தின் மீது விடுதலை புலிகள் விமான தாக்குதல். 6 பேர் பலி.
* அமெரிக்க உளவாளியாக கருதப்பட்டவரை தலிபான் சிறுவன் கழுத்தை அறுக்கும் காட்சி அடங்கிய "சிடி' வெளியிடப்பட்டதால் பரபரப்பு.


ஏப். 26: புலிகள் தாக்குதல் நடத்தப் போவதாக தகவல் கிடைத்ததால் கொழும்பு விமான நிலையம் மூடல்.


ஏப். 28: ஈராக் கர்பாலா நகரில் கார் குண்டு வெடித்ததில் மூன்று இந்தியர்கள் உட்பட 58 பேர் உடல் சிதறி பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:38 am

சிறப்பு தகவல்கள்


1. சஸ்பெண்ட்

சட்டசபையில் எம்.ஜி.ஆர்., குறித்து அவதூறாக பேசியதாக ரகளை செய்த அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சபையிலிருந்து வெளியேற்றப் பட்டனர். கலைராஜன், நத்தம் விஸ்வநாதன், பொள்ளாச்சி ஜெயராமன், சி.வி.சண்முகம் ஆகிய நான்கு பேரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.


2. பிச்சைக்காரர்கள் வேட்டை

மதுரை வரும் சுற்றுலா பயணிகளுக்கு பிச்சைக் காரர்கள் தொந்தரவாக இருந்தனர். இவர்களை கைது செய்ய வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தர விட்டது. ஏப்.9ல் களமிறங்கிய போலீசார் நகரில் திரிந்த பிச்சைக்காரர்களை கைது செய்து ஆதரவற்றோர் இல்லம் மனநல காப்பகங்களில் சேர்த்தனர்.


3. லெவல் கிராசிங் பயங்கரம்

ஏப். 16ல் சென்னையில் கிராம நிர்வாக அலுவலர்களின் பேரணி சென்னையில் நடக்கவிருந்தது. இதில் கலந்து கொள்ள வேலூரில் இருந்து வந்த வேன் ஆளில்லாத லெவல் கிராசிங்கில் விபத்தில் சிக்கியது. இதில் 11 கிராம நிர்வாக அலுவலர்கள் பரிதாபமாக உடல் சிதறி உயிரிழந்தனர்.


4. பல்கலைக்கழகத்தில் பரிதாபம்

ஏப். 16ல் அமெரிக்காவின் வெர்ஜினியா டெக் பல்கலை கழகத்தில் நுழைந்த கொரிய மாணவன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தினான் . இதில் தமிழகத்தை சேர்ந்த பேராசிரியர் லோகநாதன், மும்பை மாணவி மினால் உட்பட 32 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:38 am

தமிழகம்

மே 3: சட்டசபையில் சபாநாயகருக்கு அருகில் சென்று புத்தகங்களை கிழித்து வீசிய அ.தி.மு.க., எம்.எல்.ஏ., சண்முகம் சஸ்பெண்ட்.


மே 4: பொதுசொத்துகள் சேத வசூல் சட்டம் வாபஸ். சட்டசபையில் அறிவிப்பு.


* நதிநீர் பிரச்னை குறித்து 1961லேயே தினமலர் நாளிதழ் மூலம் மக்களை தட்டி எழுப்பியவர் டி.வி.ராமசுப்பையர் என வைகோ பேச்சு.


மே 5: ஒக்கேனக்கல் அருவியின் மேற் பகுதியில் காவிரியின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டும் பணிகளை கர்நாடகா தொடங்கியது.


மே 8: மதுரையில் போலி மருத்துவ இன்ஸ்டிடியூட் நடத்திய போலி பேராசிரியர் உட்பட 2 பேர் கைது.
* பெரியாறு அணையின் "கேலரி' பகுதிக்கு செல்ல தடை விதித்து தமிழக பொதுப்பணித்துறை உத்தரவு.



மே 12: பொன்விழா நினைவாக புதிய சட்டசபை கட்டடம் கட்டப்படும் என கருணாநிதி அறிவிப்பு.


மே 13: மதுரை சம்பவம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் மத்திய அமைச்சர் தயாநிதி ராஜினாமா.


மே 15: அமைச்சர் தா.கிருட்டினன் கொலைவழக்கை விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை.


மே 18: கடத்தப்பட்ட மீனவர்கள் 11 பேரை விடுவித்தனர் விடுதலைப்புலிகள்.

* மத்திய உள்துறை இணையமைச்சராக தமிழகத்தை சேர்ந்த ராதிகா செல்வி பொறுப்பேற்பு.


மே 19: ஜெயா "டிவி'யின் பங்குதாரர் வைகுண்டராஜன் நிறுவனங்களில் அதிகாரிகள் சோதனை.


மே 21: முதல்வர் கருணாநிதி மீதான, மேம்பால ஊழல் வழக்கை தொடர முகாந்திரமில்லை என்ற சி.பி.சி.ஐ.டி., யின் அறிக்கையால் வழக்கு ரத்து.
* பரபரப்பு வழக்குகளில் சிக்கி சிறை தண்டனை பெற்ற எஸ்.பி., பிரேம்குமார் "டிஸ்மிஸ்'.


மே 22: மாஜி அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை.


மே 23: திருப்பூர் அருகே மதுபான கடையின் "பார்' இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி.


மே 25: ஊட்டி அருகே முத்தநாடுமந்து வனப்பகுதியில் 1.5 கி.மீ., தூரத்துக்கு பிளவு ஏற்பட்டு புகை வந்ததால் மரங்கள் கருகின.


மே 27: தமிழக "பார்'களில் பீடி, சிகரெட் விற்பனைக்கு தடை. மேலும் பல கட்டுப்பாடுகள் விதிப்பு.


மே 28: தமிழக எல்லையில் இருக்கும் 51 கிராமங்களில் ஆந்திர அரசு மின்சாரத்தை துண்டித்தது.


மே 30: திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டியில் கோயில் பிரச்னையில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதால் பரபரப்பு.


மே 31: கோத்தகிரியில் ஜெயலலிதா தங்கியிருந்த கொடநாடு எஸ்டேட்டில் போலீசார் சோதனை. உள்ளே அனுமதிக்க மறுத்த தொழிலாளர்கள் கைது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:39 am

இந்தியா


மே 3: டெல்லியில் பிரதமர் வீட்டருகே தற்கொலை செய்து கொல்ல முயன்ற நபர் கைது.


மே 4: மருத்துவ உயர் படிப்பு படிக்கும் டாக்டர்கள் அரசு மருத்துவமனையில் மூன் றாண்டுகள் பணிபுரிவது அவசியம் என மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு.

* "டைம்' பத்திரிகையின் செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் சோனியா , இந்திரா நூயி, லட்சுமி மிட்டலுக்கு இடம்.


மே 5: குஜராத் போலி என்கவுன்டர் வழக்கில் கைது செய்யப்பட்ட ஐ.பி.எஸ். அதிகாரிகள் வன்ஜரா, ராஜ்குமார் பாண்டியன், தினேஷ் குமார் "சஸ்பெண்ட்'.


மே 7 : இந்து கடவுள்களை அவமதிக்கும் வகையில் ஒவியம் வரைந்த ஒவியர் எம்.எப். உசேனின் சொத்துக் களை பறிமுதல் செய்ய கோர்ட் உத்தரவு.


மே 8: ஆள் கடத்தல் வழக்கில் ராஷ்டிரிய ஜனதாதள எம்.பி. முகமது சகாபுதீனுக்கு சிவான் கோர்ட் ஆயுள் தண்டனை விதித்தது.


மே 10: இந்தியாவில் இரண்டு கட்சி நடைமுறையை உருவாக்க வேண்டும் என கலாம் யோசனை.


மே 11: உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தனிப் பெரும் பான்மை பெற்று ஆட்சியை பிடித்தது.


மே 13: 49 அமைச்சர்களுடன் உ.பி., முதல்வராக மாயாவதி பொறுப்பேற்றார்.


மே 18: ஐதராபாத்தில் உள்ள மசூதியில் குண்டுவெடிப்பு. 12பேர் பலி 20 பேர் படுகாயம்.


மே 21: அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது முலாயம் அரசு: உ.பி., சட்டசபையில் கவர்னர் ராஜேஷ்வர் கோபம்.


* பெங்களூருவில் பா.ஜ., எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா முத்தம் கொடுக்கும் படங்களை வெளியிட்டு நர்ஸ் ஜெயலட்சுமி பரபரப்பு.


* கேரள மார்க்சிஸ்ட் கட்சி கோஷ்டி பூசலால் கேரள முதல்வர் அச்சுதானந்தனும், பினராயி விஜயனும் "பொலிட் பீரோ'விலிருந்து நீக்கம்.


மே 28: அருணாச்சல பிரதேச ஐ.ஏ.எஸ்., அதிகாரிக்கு விசா மறுக்கப் பட்டதால், இந்திய ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் சீன பயணத்தை ரத்து.
* பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென குஜ்ஜார் இன மக்கள் நடத்திய ஆர்ப் பாட்டத்தில் வன்முறை. 14 பேர் பலி.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 06, 2008 6:40 am

உலகம்



மே 1: இலங்கை வன்னி பகுதியில் நடந்த சண்டையில் 13 புலிகள் சுட்டுக்கொலை.


மே 3: கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் கடத்த முயற்சி செய்த மூவர் பிடிபட்டனர்.


மே 5: கென்ய விமானம் கேமரூனில் விழுந்து விபத்து. 15 இந்தியர்கள் உட்பட 118பேர் பலி.


மே 7 : வங்கதேச முன்னாள் அதிபர் ஷேக் ஹசீனா நாடு திரும்பினார்.


மே 12: பாகிஸ்தானின் முன்னாள் தலைமை நீதிபதி இப்திகர் சவுத்ரி கராச்சி சென்ற போது கலவரம்: 15 பேர் பலி.


மே 15: பிரான்ஸ் அதிபர் ஜாக் சிராக் பதவி விலகினார்.


மே 16: நிக்கோலஸ் சர்கோசி பிரான்ஸ் அதிபராக பொறுப்பேற்றார்.


மே 17: கேன்ஸ் திரைப்பட விழா தொடக்கம்.


மே 18: சர்ச்சைக்குரிய உலகவங்கித் தலைவர் உல்போவிட்ஸ் ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு.


மே 23: பாகிஸ்தானில் பெண் ஆணாக மாறி திருமணம் செய்து கொண்டதை கண்டித்து, லாகூர் கோர்ட் இருவருக்கும் சிறை தண்டனை விதித்தது.


மே 24: விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படையினர் நடத்திய தாக்குதலில் இலங்கை ராணுவத்தினர் 35 பேர் பலி.


மே 28: கேன்ஸ் திரைப்பட விழாவில் "நான்கு மாதங்கள், மூன்று வாரங்கள் மற்றும் இரண்டு நாட்கள்' என்ற திரைப் படம் சிறந்த படமாக தேர்வு.

Sponsored content

PostSponsored content



Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக