புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 8 Poll_c10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 8 Poll_m10இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா. - Page 8 Poll_c10 
5 Posts - 63%
heezulia

2 Posts - 25%
வேல்முருகன் காசி

1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கேட்கப்படும் கேள்வியாளர்கள்- நண்பர்கள் அப்புக்குட்டி,கலைநிலா,மற்றும் பவதாரணி அக்கா.

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sun Jun 06, 2010 10:51 am

First topic message reminder :

இன்று கேள்வி கேட்கபடுபவர்களின் பெயர்

1. சிவா அண்ணா
2. நண்பன் வாசன்
3. தங்கை ப்ரயதர்ஷினி

கேட்கப்படும் கேள்வி இதுதான் உங்கள் வாழ்க்கையிலே மறக்க முடியாத சம்பவங்கள்
இரண்டை குறிப்பிட்டு அதனை விளக்கமாகவும் சொல்லவேண்டும்

உங்கள் வாழ்க்கைலே நடந்த சந்தோஷமான நிகழ்வு என்ன ?
உங்கள் வாழ்க்கைலே நடந்த துக்கமான சம்பவம் என்ன?

[You must be registered and logged in to see this link.]

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 8:17 pm

தங்களின் பொன்னான நேரங்களை எங்களுக்காக ஒதுக்கி, எங்களுடன் உங்கள் மனதினை பகிர்ந்துக்கொண்டதில் பெரும் மகிழ்ச்சி அடைக்கின்றேன்...

நன்றி... வணக்கம்...

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 09, 2010 8:30 pm

சபிர் சார் மிக நன்றி
கலை சார் ,உதய சுதா போன்ற மிக முக்கிய ஈகரை புள்ளிகளுடன் ஒப்புக்கு சப்பானியாக என்னையும் சேர்த்து கேள்வி கேட்டதற்கு அன்னைவருக்கும் என் நன்றி.மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்

எனது வாழ்வின் மிக துன்பமான சம்பவங்கல் 10ம் வகுப்பு படித்த போது என் அப்பாவின் அகால மரணமும்,அவர் சிகிச்சைக்காக மொத்த பணமும் செலவழிந்ததும்,மீதி பணமும் என் அக்காவின் திருமனதிற்காக செலவழிந்ததும் ,என் தங்கை எங்களிடம் சொல்லாமல் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதும் ,பிழைப்புகாக நாங்கள் கோவை விட்டு தாதாவுடன் கிராமம் வந்ததும்,விவசாயம் பார்த்ததும்,ஒன்றுமே தெரியாத என் அம்மா எங்களுக்காக விவசாயம் பார்த்ததும்,கடைசியில் இருந்த அன்னைத்து மாடுகளையும் என் சொந்தங்களே கடனுக்காக பிடித்து சென்றதும் ,மஹாபலிபுரம் கடர்கரையில் குளிக்க சென்ற பல நன்பர்களில் ஒருவன் நீரில் மூழ்கி இறந்ததும் , அவனுடைய உடலை தேடி சென்னை கோவளம் வரை ஒரு இரவு,ஒரு பகல் என 16 மனி நேரம் அலைந்ததும்,அவன் உடலுடன் கோவை வந்து அவன் நன்பர்கள் எங்களை அடிக்க வந்து உயிரை பிடித்து கொன்டு ஓடியதும் என பல கடினமான நினைவுகள்

ஆனால் மிக மிக கடினமான தினம் 12 ம் வகுப்பு முடித்து பின் வேரு எங்கேயும் சேற முடியாத சூழலில் என்னை தினமும் பால் ஊற்ற அனுப்ப எனது குடும்ப்பம் முடிவு செய்தது.இரு வருடம் முன் ஜாலியாக,வசதியாக நகரத்தில் இருந்தவனை கிராமத்தில் பால் ஊற்ற அனுப்பகிரார்கலே என நினைத்து அன்று இரவு தென்னை தோப்பில் காவலுக்கு சென்று தற்கொலைக்கு முயல முடிவு செய்து இரவு முழுவது கண்ணீருடன் இருந்த 12 மணி நேரம் மிக கொடிய நேரம்.நல்ல காலம் விடியல் வரை நான் பூச்சி மருந்தை குடிக்காமல் இருந்து பின் வேறு வழியில்லாமல் சைக்கிளில் பால் ஊற்றிவிட்டுவந்தேன்.ஒரு வருடம் பால் ,மாடு,விவசாயம் என இருந்தவனை எனது அக்கா கணவர் காப்பாற்றி மீண்டும் படிக்க வைத்தார்.டிப்ளமொ படித்து ஊரில் இருந்து தப்பித்தேன்.
என் அம்மாவின் உழைப்பால் நாங்கள் மேலே வந்தது தனி கதை.

ஆனாலும் அந்த 12 மணி நேரம் கையில் பூச்சி மருந்துடன் தென்னந்தோப்பில் தனியாக ஒரு சில மாடுகளுடனும் உயிரை மாய்க்க முடிவெடுத்து இருந்தது மிகவும் வருத்தப்பட விசயம் .கொடுமை என்னவென்றால் அதே பூச்சி மருந்தை என் தம்பி ஒரு வருட்ம் கழித்து குடித்து 5 நாள் உயிருக்கு போராடி உயிர் பிழைத்தான்.
இப்பொதும் நினைத்தால் உள்ளே சிலிர்கும் நினைவுகல்

சுவையான சம்பவம்

எனது கல்யானமும் ,எனது முதலிரவு அறைக்கு என் மனைவி பயத்தில் வர மறுத்து 11 மனி வரை எனை காக்க வைத்ததும் , வர மறுத்த மனைவியை ஒரு புறம் என் அக்காவும் மறு புறம் என் அத்தையும் தர தர என இழுத்து வந்ததும் ,அதனை கண்டு நான் அறையில் வெளியே வந்து த்லையில் அடித்துகொன்டதும்,அதன் பின்னே என்மனைவி ஒன்ருமே நடவாததுபோல அறையின் உள்ளே சென்றதும் இன்று நினைத்தலும் சிரிப்பு வரும்.சம்பாதிக்க ஆரம்பித்து அம்மாவிடம் மொத்தமாக 50 ஆயிரம் கையில் தந்ததும், எனது வாழ்கையின் மிக முக்கிய கட்டங்கலில் உதவிய என் மாமாவிற்கு நான் உதவியதும் ,சொந்தமாக புதிய சிரிய நிறுவனத்தில் இருவருக்கு வேலை கொடுத்ததும்,எனது நிறுவனதில் முதல் விற்பனையும்,மஹாபலிபுரத்தில் கடலில் மூழ்கிய 3 நன்பர்கலில் இருவரை என் நீச்சல் திறமையால் உயிரை பனயம் வைத்து காப்பாற்றியதும் என பல நிகழ்வுகல்

ஆனால் 7 ஆன்டுகளுக்கு முன் என் பெண் பிறக்க போவது அறிந்து பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வரை போன பயனம்.1 மனி நேரதில் நான் எதிர் பார்த்த பெண் குழந்தை பிறந்தது என செய்தி கிடைத்தது .அதன் பின் வாழ்கையின் மிக மிக சந்தோசமான 4 மனி நேர பயனம். நடத்துனரே கேட்டுவிட்டார்.ஏன் சிரித்துகோன்டே இருக்கிறீற்கள் என ?
ரகசியமாய் சொன்னேன் நான் அப்பா ஆகிவிட்டதாக!மிக மிக மகிழ்ந்த தருனம் அது.
ராம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Wed Jun 09, 2010 8:32 pm

அசை போட உதவிய ஈகரைக்கு நன்றி
ராம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Wed Jun 09, 2010 8:41 pm

அன்புள்ள ராம்,

உங்களின் சோகத்தில் என்னின் வாழ்கையும் 50% ஒத்துபோகும்... உங்களின் நினைவுகளை படிக்கும் சமயத்தில் என்னின் கண்களில் கண்ணீர் கண்களை விட்டு வெளியே வராத குறையாய்...
தங்களின் வாழ்கையை எங்களுடன் பகிர்ந்துகொண்டமைக்கு என் நன்றியும் வணக்கமும்....

இப்படிக்கு,
உங்களை போல் நானும் ஒருவனாய்

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Wed Jun 09, 2010 8:49 pm

rarara wrote:சபிர் சார் மிக நன்றி
கலை சார் ,உதய சுதா போன்ற மிக முக்கிய ஈகரை புள்ளிகளுடன் ஒப்புக்கு சப்பானியாக என்னையும் சேர்த்து கேள்வி கேட்டதற்கு அன்னைவருக்கும் என் நன்றி.மனதில் பட்டதை சொல்லி இருக்கிறேன்.தவறு இருந்தால் மன்னிக்கவும்

எனது வாழ்வின் மிக துன்பமான சம்பவங்கல் 10ம் வகுப்பு படித்த போது என் அப்பாவின் அகால மரணமும்,அவர் சிகிச்சைக்காக மொத்த பணமும் செலவழிந்ததும்,மீதி பணமும் என் அக்காவின் திருமனதிற்காக செலவழிந்ததும் ,என் தங்கை எங்களிடம் சொல்லாமல் காதலனுடன் வீட்டை விட்டு சென்றதும் ,பிழைப்புகாக நாங்கள் கோவை விட்டு தாதாவுடன் கிராமம் வந்ததும்,விவசாயம் பார்த்ததும்,ஒன்றுமே தெரியாத என் அம்மா எங்களுக்காக விவசாயம் பார்த்ததும்,கடைசியில் இருந்த அன்னைத்து மாடுகளையும் என் சொந்தங்களே கடனுக்காக பிடித்து சென்றதும் ,மஹாபலிபுரம் கடர்கரையில் குளிக்க சென்ற பல நன்பர்களில் ஒருவன் நீரில் மூழ்கி இறந்ததும் , அவனுடைய உடலை தேடி சென்னை கோவளம் வரை ஒரு இரவு,ஒரு பகல் என 16 மனி நேரம் அலைந்ததும்,அவன் உடலுடன் கோவை வந்து அவன் நன்பர்கள் எங்களை அடிக்க வந்து உயிரை பிடித்து கொன்டு ஓடியதும் என பல கடினமான நினைவுகள்

ஆனால் மிக மிக கடினமான தினம் 12 ம் வகுப்பு முடித்து பின் வேரு எங்கேயும் சேற முடியாத சூழலில் என்னை தினமும் பால் ஊற்ற அனுப்ப எனது குடும்ப்பம் முடிவு செய்தது.இரு வருடம் முன் ஜாலியாக,வசதியாக நகரத்தில் இருந்தவனை கிராமத்தில் பால் ஊற்ற அனுப்பகிரார்கலே என நினைத்து அன்று இரவு தென்னை தோப்பில் காவலுக்கு சென்று தற்கொலைக்கு முயல முடிவு செய்து இரவு முழுவது கண்ணீருடன் இருந்த 12 மணி நேரம் மிக கொடிய நேரம்.நல்ல காலம் விடியல் வரை நான் பூச்சி மருந்தை குடிக்காமல் இருந்து பின் வேறு வழியில்லாமல் சைக்கிளில் பால் ஊற்றிவிட்டுவந்தேன்.ஒரு வருடம் பால் ,மாடு,விவசாயம் என இருந்தவனை எனது அக்கா கணவர் காப்பாற்றி மீண்டும் படிக்க வைத்தார்.டிப்ளமொ படித்து ஊரில் இருந்து தப்பித்தேன்.
என் அம்மாவின் உழைப்பால் நாங்கள் மேலே வந்தது தனி கதை.

ஆனாலும் அந்த 12 மணி நேரம் கையில் பூச்சி மருந்துடன் தென்னந்தோப்பில் தனியாக ஒரு சில மாடுகளுடனும் உயிரை மாய்க்க முடிவெடுத்து இருந்தது மிகவும் வருத்தப்பட விசயம் .கொடுமை என்னவென்றால் அதே பூச்சி மருந்தை என் தம்பி ஒரு வருட்ம் கழித்து குடித்து 5 நாள் உயிருக்கு போராடி உயிர் பிழைத்தான்.
இப்பொதும் நினைத்தால் உள்ளே சிலிர்கும் நினைவுகல்

சுவையான சம்பவம்

எனது கல்யானமும் ,எனது முதலிரவு அறைக்கு என் மனைவி பயத்தில் வர மறுத்து 11 மனி வரை எனை காக்க வைத்ததும் , வர மறுத்த மனைவியை ஒரு புறம் என் அக்காவும் மறு புறம் என் அத்தையும் தர தர என இழுத்து வந்ததும் ,அதனை கண்டு நான் அறையில் வெளியே வந்து த்லையில் அடித்துகொன்டதும்,அதன் பின்னே என்மனைவி ஒன்ருமே நடவாததுபோல அறையின் உள்ளே சென்றதும் இன்று நினைத்தலும் சிரிப்பு வரும்.சம்பாதிக்க ஆரம்பித்து அம்மாவிடம் மொத்தமாக 50 ஆயிரம் கையில் தந்ததும், எனது வாழ்கையின் மிக முக்கிய கட்டங்கலில் உதவிய என் மாமாவிற்கு நான் உதவியதும் ,சொந்தமாக புதிய சிரிய நிறுவனத்தில் இருவருக்கு வேலை கொடுத்ததும்,எனது நிறுவனதில் முதல் விற்பனையும்,மஹாபலிபுரத்தில் கடலில் மூழ்கிய 3 நன்பர்கலில் இருவரை என் நீச்சல் திறமையால் உயிரை பனயம் வைத்து காப்பாற்றியதும் என பல நிகழ்வுகல்

ஆனால் 7 ஆன்டுகளுக்கு முன் என் பெண் பிறக்க போவது அறிந்து பொள்ளாச்சியில் இருந்து திருச்சி வரை போன பயனம்.1 மனி நேரதில் நான் எதிர் பார்த்த பெண் குழந்தை பிறந்தது என செய்தி கிடைத்தது .அதன் பின் வாழ்கையின் மிக மிக சந்தோசமான 4 மனி நேர பயனம். நடத்துனரே கேட்டுவிட்டார்.ஏன் சிரித்துகோன்டே இருக்கிறீற்கள் என ?
ரகசியமாய் சொன்னேன் நான் அப்பா ஆகிவிட்டதாக!மிக மிக மகிழ்ந்த தருனம் அது.
ராம்
ராம் அரசியலுக்கு அப்பாற்பட்ட உங்கள் சகோதரன் இலக்கியன் பேசுகிறேன்.எனக்கு கண்ணீரே வந்துவிட்டது இருந்தும் முதலிரவு சம்பவத்தை வாசித்து வாய்விட்டு சிரித்து விட்டேன்.நினைவுகளைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி ராம்
அன்பு மலர்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 10, 2010 12:19 pm

அன்புள்ள ஈகரை உறவுகளுக்கு,

அனைவருக்கும் வணக்கம். முதலில் என்னின் தாமதமான பதிலளிப்புக்கு அனைவரும் என்னை மன்னிக்கவேண்டுகின்றேன். என்னாருயிர் அன்பு நண்பன் சபீர் என்னை மிகவும் மன்னிக்கவும்.

1. அது ஒரு அழகிய நிலாக்காலம்...

நம்வாழ்கையின் கடந்தகால நிகழ்வுகளின் சிறு தாக்கம் நம்மனதில் இன்று நினைவுகளாய் இருப்பவை. நம்இதயத்தில் இன்றும் பல நினைவுகள் தோன்றி நம் கண்முன்னே வந்து மீண்டும் மீண்டும் நம்மை ஆட்கொள்ளுவது இயற்கைதான். இன்றும் நம்இயல்பான வாழ்கையை மாற்றி அந்தகால கட்டத்திற்கு எப்போதாவது கொண்டு செல்வதுண்டு. நிகழ்வுகள், சுகம் மற்றும் சோகம் என்று ஆயிரம் இருந்தாலும் நினைவுகளாய் ஒண்டிரண்டு நம்மால் மறக்கமுடியாது என்றும். பழைய நண்பர்களையோ, உறவினர்களையோ காணும் சமயம் அல்லது புதிய நண்பர்களிடும் நம்மைபற்றி கூறும்போதோ நம்மை நாமே மறந்து போவதுண்டு நினைவுகளால். இதோ என் நினைவிலிருந்து ஒன்று உங்களுடன் பகிர்ந்துகொள்ள
...

எனக்கு பருவவயது, பத்தாம்வகுப்பு இறுதிதேர்வு முடிந்த சமயம், விடுமுறை காலம் என்பதால் இனிமையாய் ஒவ்வொருநாளும் நண்பர்களோடு ஆட்டம், பாட்டம், விளையாட்டு மற்றும் ஊர்சுற்றி நேரம் கழிந்தது. மட்டைபந்து விளையாட செல்வது என்பது அன்றாட நிகழ்வு. ஒருநாள் வழக்கம்போல் கதிரவன் கிழக்கிலிருந்து எழுந்திருந்தான், நானும் மற்றும் நண்பர்கள் அனைவரும் தஞ்சை அரண்மனை மைதானத்தில் உழவர்சிலை அருகே ஆடிகொண்டிருந்தோம். ஆடுகளத்தில் நின்றிருந்த என்னைநோக்கி ஒரு நண்பன் பந்தை வீச, அது என் இடதுகை பக்கம் தோளுக்கு மேலே சற்று உயர்ந்து வர, நான் பந்தை லாவகமாக சுழற்ற முயற்சி பண்ண, கையில் பூத்திருந்த வியர்வை துளியின் ஈரபதத்தால் என்கைகளின் பிடிப்பிலிருந்து மட்டை நழுவி கண்மூடி திறக்கும் கணத்திற்குள் பறந்து சென்று பின்னால் பந்தை தடுப்பதற்கு நின்றிருந்த என்தோழன் ஒருவனின் தலையை பதம்பார்த்ததை இன்றும் மறக்கமுடியாது.

பதம்பார்த்தது என்றதும் பதறி போக வேண்டாம். கடவுள் புண்ணியம் மட்டை விழுந்தது அவன் முன்நெற்றியில், சற்று பெரிதாகவே புடைத்து கொண்டது. அவ்வளவுதான். ஒரு ஓரமா உட்காரவைத்து பின் கடைத்தெரு பக்கம் என்பதால் உடனடியாக ஐயோடெக்ஸ் தைலம் வாங்கிவந்து நன்றாக தேய்த்துவிட்டோம். மீண்டும் அவனுடன் சேர்ந்து பாதியில் விடப்பட்ட விளையாட்டை ஆடினோம். அதனால ஒரு அரைமணி துளிகள் எங்கள் விளையாட்டு தடைபட்டு போனதுதான் மிச்சம். அந்த நேரத்தில் அவன் நெற்றியை பார்த்து நண்பர்களிடம் நான் கேளிக்கை செய்ய அவனுக்கு என்மேல் கோபம் வந்து திட்டி தீர்த்துவிட்டான். மட்டை தெரியாமல் வீசியதால் பொறுமையாக இருந்த அவன், கிழக்கில் செங்கதிரோன் ஒளி வீச, அது அவன் நெற்றியில் ரத்தகாயத்தின் மீது விழ, இங்கேயும் ஒரு சூரியன் என்று கேலி செய்திட வெகுண்டு விட்டான். வீட்டுக்கு தெரியாமல் காயத்தை மறைக்க இரண்டுநாள் அவன் தொப்பிய கழட்டாமலே இருந்தான் ரெண்டு நாள் என்கூட பேசவே இல்லை... அப்புறம் காயமும் மறைந்து போச்சு என்மேல் இருந்த கோபாமும் பறந்து போச்சு...

2. எங்கள் வீட்டில் எனக்கு விபரம் தெரிந்த நாள் முதல் வளர்க்கப்பட்ட என் தம்பியாய் வளர்ந்த(வாழ்ந்த) 8 வருடம் அப்பு என்கிற நாயின் மறைவு. நாய் என்று சொல்ல மனமும் இல்லை அப்படி சொல்லவும் முடியாது. அப்படியொரு அறிவு அவனுக்கு. எங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் கூட அவனிடம் மராட்டிய மொழியில் (வம்ச மொழி) பேசுவார்கள். அவன் அதனை நன்றாக புரிந்துக்கொள்வான். ஆனால் அவர்கள் எங்களிடம் பேசியது கிடையாது காரணம் தெரியாது என்பது வேறு விடையம்.

சிறு வயது முதல் எந்த ஆண்டு தேர்வு விடுமுறைக்கும் எந்த ஊருக்கும் அனுப்பி வைக்கும் பழக்கம் என்னின் தந்தைக்கு கிடையாது. 1993ம் ஆண்டு மே மாதம் அந்த ஆண்டுதான் என் தந்தையின் நண்பர் திருச்சி மாநகரில் புதிதாக வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்த அதற்காக எங்களை அவர்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். அவரின் அன்பான தீராத வற்புறுத்தலின் காரணமாக அதுவும். எங்களை அங்கே 3 நாட்கள் தங்க சொல்லிவிட்டு இரவு மட்டும் அங்கே தங்கிவிட்டு பகலில் என் தந்தை ஊருக்கு புறப்பட்டு வந்துவிட்டார். பகலில் என் தந்தை வீட்டிற்கு சென்ற சிறிது நேரத்திற்குள் எங்கள் வீட்டு நிலைவாசலில் தலைவைத்து நன்றாக இருந்த அப்பு இரத்தம் கக்கிய நிலையில் உயிரை விட்டுவிட்டது.

எங்களை காணாத ஏக்கமோ (எங்கள் வீட்டிற்கு அவன் வந்த பிறகு என்றுமே அவனை தனியாக விட்டு எங்கேயும் சென்றதே இல்லை) அல்லது மற்றவர்கள் சொல்லிய காரணமோ தெரியாது(உங்கள் வீட்டில் வேறு ஏதோ உயிர் போகவேண்டிய நிலை செய்வினை கோளாறு…அதனை அறிந்த நாய் அதன் உயிரை விட்டுவிட்டது என்றும்). இதனை எங்களுக்கு தெரிவித்தால் எங்கள் மனம் பாடுபடும் என்று தெரிவிக்கவில்லை. மூன்று நாட்கள் கழித்து ஊருக்கு சென்ற எங்கள் குடும்பத்தினருக்கு அப்புவின் மறைவு மிகுந்த மனபாதிப்பை அளித்தது. அவனின் முகத்தை கூட இறுதியாக பார்க்கமுடியாமல் போனது என்னின் அந்த பால்ய வயதில் மனதை மிகவும் பாதித்தது இன்றும் மனதுக்குள் நிழலாடிக்கொண்டு என்றும் என் வாழ்வில்…இதற்கு முக்கிய காரணம் அவனுக்கு என் தந்தையின் மீது மிக பாசமிருந்தாலும், என் மீது என் தந்தை கோபமாக ஏதோ பேசினால் கூட குரைக்க ஆரம்பித்துவிடுவான். வேறு யாராவது சும்மா அடிக்க கையை ஓங்கினால் கூட கையை கடிக்கின்ற அளவுக்கு பாய்ந்து விடுவான். இன்னும் எத்தனையோ அவனுடைய புராணங்கள்...
என் தந்தையின் மறைவு, என் அக்காவின் 6 மாத கைக்குழந்தை இறந்தது என எத்தனையோ...

மனிதனின் மறைவுகள் இங்கே எழுதப்டும்போது மற்ற உயிரனங்களின் மறைவை நான் எழுதியது தவறாக சிலருக்கு தெரியலாம். அவர்களிடம் என் தாழ்மையான மன்னிப்பை முன்னே வைக்கின்றேன்.

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Thu Jun 10, 2010 12:24 pm

எனது ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்படவோ ?கண்ணீர் விடவோ?ஏதும் இருப்பதாக எனக்கு இப்பொது தோன்றவில்லை.
அன்று ஏற்பட்ட
நிகழ்வுகள் இப்பொது வாழ்கையை திரம்பட நடத்த உதவிகிறது.அப்போது வாய்புகள் பற்றிய அரியாமை அதிகம்.அதே பிரசினைகள் இப்பொது வந்தால் மிக எளிதாக என்னால் சமாளிக்க முடியும். அந்த வாழ்கையே இன்றைய இனிய் வாழ்வுக்கு அக்சாரமாக அமைந்த்தது.
பல சமயங்கலில் அப்போதய கடின நிகழ்வுகல் இப்பொது சிரிப்பைதான் வறவழைக்கிறது
காலம் எல்லா புன்களையும் ஆற்றிடும் அரு மருந்து.
நன்றியுடன்
ராம்

srinihasan
srinihasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3827
இணைந்தது : 10/02/2010
http://thanjai-seenu.blogspot.com

Postsrinihasan Thu Jun 10, 2010 12:36 pm

rarara wrote:எனது ஆரம்ப கால வாழ்க்கையை நினைத்து வருத்தப்படவோ ?கண்ணீர் விடவோ?ஏதும் இருப்பதாக எனக்கு இப்பொது தோன்றவில்லை.
அன்று ஏற்பட்ட
நிகழ்வுகள் இப்பொது வாழ்கையை திரம்பட நடத்த உதவிகிறது.அப்போது வாய்புகள் பற்றிய அரியாமை அதிகம்.அதே பிரசினைகள் இப்பொது வந்தால் மிக எளிதாக என்னால் சமாளிக்க முடியும். அந்த வாழ்கையே இன்றைய இனிய் வாழ்வுக்கு அக்சாரமாக அமைந்த்தது.
பல சமயங்கலில் அப்போதய கடின நிகழ்வுகல் இப்பொது சிரிப்பைதான் வறவழைக்கிறது
காலம் எல்லா புன்களையும் ஆற்றிடும் அரு மருந்து.
நன்றியுடன்
ராம்

மன்னிக்கவும் என்னின் கருத்திற்கு....தங்களின் ஆரம்பகால நிலை என்னின் மனதில் சிறு தாக்கத்தை செய்தது தவிர... உங்களை உண்மையில் வருத்தியோ இல்லையோ அது எனக்கு தெரியாது... ஆனால் அது போன்ற சம்பவங்கள் என்னின் வாழ்கையில் நடந்ததை எனக்கு நினைவு கூர்ந்து எனக்கு கண்ணீரை வரவழைத்தது...

மீண்டும் என்னை அன்புடன் மன்னிக்கவும்....

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jun 10, 2010 3:12 pm

ப்ரியதர்ஷி wrote:இன்னும் ஒன்று சொல்லணும் அண்ணா ..
மற்றைய சம்பவங்கள் என் சொந்த அண்ணன் பற்றியது தான் .வேண்டாமே .என்கவலைஎனோடு போகட்டும் .
நான் அரட்டைக்கு வருவது அதால் தான் அண்ணனே ,கூட இருந்த என் அண்ணனோடு எவ்வளவு சண்டைகள் சேட்டைகள் பிடித்திருப்பேன் ,இன்று அவனோடு இருந்து சண்டை பிடித்த திண்ணையில் நான் மட்டும் தனியாக .வீரனாக மரணித்து விட்டான் .நான் தனியாக இருந்தால் இந்த நினைவுகள் என்னை கொன்றுகொண்டு இருக்கும் ,அதனால் என்ன்டிடம் மாட்டுவது பிச்சையும் அப்புவும் தான் .எதோ அரட்டை என்று சந்தோசமாக போகும் .

நன்றி என் அன்புத் தமிழ் உறவுகளே ...
இன்று இரவு கொழும்பு செல்கின்றேன், மீண்டு இணைய சுமார் 45 நாட்டகள் ஆகலாம் . பரீட்சையும் நெருங்கு கின்றது நன்றி

உங்கள் போஸ்ட்கள் படித்தேன். ரொம்ப வருத்தமாக இருந்தது சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் ஆனாலும் மன உறுதியோடு இருக்கிறிர்கள் . வாழ்த்துகள் ! உங்கள் பரிட்சைகளை நன்றாக எழுதுங்கள் ! ஆண்டவன் உங்கள் பக்கத்தில் இருக்க வாழ்த்துகிறேன். அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Jun 10, 2010 3:19 pm

ப்ரியதர்ஷி wrote:இன்னும் ஒன்று சொல்லணும் அண்ணா ..
மற்றைய சம்பவங்கள் என் சொந்த அண்ணன் பற்றியது தான் .வேண்டாமே .என்கவலைஎனோடு போகட்டும் .
நான் அரட்டைக்கு வருவது அதால் தான் அண்ணனே ,கூட இருந்த என் அண்ணனோடு எவ்வளவு சண்டைகள் சேட்டைகள் பிடித்திருப்பேன் ,இன்று அவனோடு இருந்து சண்டை பிடித்த திண்ணையில் நான் மட்டும் தனியாக .வீரனாக மரணித்து விட்டான் .நான் தனியாக இருந்தால் இந்த நினைவுகள் என்னை கொன்றுகொண்டு இருக்கும் ,அதனால் என்ன்டிடம் மாட்டுவது பிச்சையும் அப்புவும் தான் .எதோ அரட்டை என்று சந்தோசமாக போகும் .

நன்றி என் அன்புத் தமிழ் உறவுகளே ...
இன்று இரவு கொழும்பு செல்கின்றேன், மீண்டு இணைய சுமார் 45 நாட்டகள் ஆகலாம் . பரீட்சையும் நெருங்கு கின்றது நன்றி

தர்ஷிம்மா... ஒரு பக்கம் ஒரே அண்ணன் உயிராய் இருந்த அண்ணன் பாசத்தோடு இருந்த அண்ணன் மரணித்த செய்தி கேட்டு மனவருத்தம் கஷ்டமா இருக்குப்பா.. இந்த சின்ன குழந்தையின் மனதை இறைவன் இப்படி வருத்திட்டாரேன்னு நினைக்கும்போது கோவம் கூட வருது கடவுள் மேலே.. ஆனால் மரணித்தது வீரனாக... இதோ ஈகரை முழுக்க நன் உறவுகள் எல்லாருக்குமே இந்த அன்பு தர்ஷிக்குட்டி செல்லக்குட்டிபா நீ... எங்க எல்லாருக்குமே அன்புக்குட்டி நீ.... நல்லா படிச்சு பரிட்சையில் நீ நிறைய மதிப்பெண் எடுத்து அந்த சந்தோஷத்தையும் இதோ நம் உறவுகளோடு பகிர்ந்துக்கொள்வேப்பா... அன்பு வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும் ஆசிகளும் தர்ஷி.... [You must be registered and logged in to see this image.]

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக