புதிய பதிவுகள்
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Today at 11:01 am

» கருத்துப்படம் 26/06/2024
by mohamed nizamudeen Today at 8:36 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Today at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
34 Posts - 43%
heezulia
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
32 Posts - 40%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
prajai
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
Manimegala
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
1 Post - 1%
jothi64
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
400 Posts - 49%
heezulia
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
27 Posts - 3%
prajai
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
sugumaran
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_m10தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் சினிமாவில் செக்ஸ் - ஓர் ஆய்வு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:38 am

பல்வேறு ரசனைகளை உள்ளடக்கிய படைப்புக் கலை வெளிப்பாட்டில் உயிர்களின் இயல்பான போரிடல், தியாகம், காதல் மற்றும் பாலுறவுக் காட்சிகளும் இயல்பாகவும் அதீதமாகவும் சேர்த்துக் காட்டப்பட்டு வருவது பிரபஞ்ச ரீதியிலானது. இதில் பாலுறவு விஷயம் ரசாபாசமானதென்றானதாலும் பண்பாடு, நாகரிகம் கருதி மூடி மறைத்தே கையாளப்படும் ஒன்று.

மனிதனையும் பிற உயிரினங்களையும் இந்த விஷயமும் பெரிதும் வேறுபடுத்தி வைக்கிறது. காட்சி வெளிப்பாட்டில் பாலுறவு விஷயம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே சிற்பங்களில் விலங்குகளின் புணர்ச்சிக் காட்சி சித்தரிப்பைக்கொண்டு முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் - எனும் போது குகைகளில் வரலாற்றுக்கு முற்பட்ட மனித ஓவியங்களில் பாலுறவுக் காட்சிகள் இடம் பெற்றதாக தெரியவில்லை. ஆனால் ஐயாயிரமாண்டுகளுக்கு முன் நைல் நதி சமவெளியில் பரவியிருந்த பண்டைய எகிப்தின் ஐந்தாவது பேரரசின் ''பிடேஹோடெப் எனும் கல்லறையில் செதுக்கப்பட்டுள்ள புடைப்புச் சிற்பங்களில் உயிரினங்களின் பாலுறவுக் காட்சி சித்தரிக்கப்பட்டிருப்பதை காண முடிகிறது.

ஒரு சிறுத்தை ஜோடியும், குள்ளநரி ஜோடியும் உடலுறவில் ஈடுபட்டுள்ள சிற்பக் காட்சி, பண்டைய எகிப்தியர் இயற்கையை - குறிப்பாக விலங்குகளை கடவுளர்களாக வடித்து வழிபட்டு வந்ததையும், தங்களையே அவற்றின் பிரதிபிம்பமாய்க் கருதி வந்ததையும்; எனவே விலங்குகளின் உடலுறவுக் காட்சி சித்தரிப்பு வாயிலாக மனித பாலுறவு சித்தரிப்பையே பூடகமாக்கியிருக்கக்கூடும் என்று எகிப்து ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.

அஜந்தா குகை ஓவியங்களில் எவ்வித உடலுறவு சித்தரிப்புகளும் இருப்பதாய் காணோம். மெளரிய, பல்லவ, சாளுக்கிய, ராஷ்டிர கூட, சோழ, ஹொய்சாளர் சிற்பங்களிலும் இவ்வகை கட்டத்து சிற்பத் தொடர் சித்தரிப்பில் குறிவிரித்த நிலையில் குத்துக்காலிட்டு அமர்ந்த விகார பெண்ணுருவமும், குறி விரைத்திருக்கும் நிலையில் அமர்ந்த ஆணுருவமும் அங்கங்கே காட்டப்பட்டுள்ளன. இவற்றின் கழுத்துக்கு மேலே மனித தலைக்குப் பதிலாக, நட்சத்திரமோ, தீப்பிழம்போ, தாமரை மொட்டோ அல்லது சிங்கத் தலையோ வைக்கப்பட்டிருக்கும். இத்தகைய உருவச் சித்தரிப்பு ''லஜ்ஜ கெளரி'' என்று அழைக்கப்படுகிறது.

பத்தாம் நூற்றாண்டு வாக்கில் எழுப்பப்பட்ட கோயில்களில் ஆண் - பெண் உடலுறவுக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேசத்திலுள்ள கஜுராஹோ கோயில்களிலும் ஒரிஸ்ஸாவில் கொனாரக் - சூரியக் கோயிலிலும் இவ்வகைச் சிற்பங்கள் ஏராளம். தமிழகத்தில் விஜயநகர பாணி கோயில்களில் இவ்வகைச் சிற்பங்களும் ஓவியங்களும் ஓரளவுக்குத் தென்படுகின்றன. காஞ்சியிலுள்ள வரதராஜபெருமாள் கோயிலுள்ள கல்யாண மண்டபத்துத் தூண்களில் தயங்கித்தயங்கியே செதுக்கப்பட்டுள்ளன. இதே கோயிலினுள்ளே சுற்றுச் சுவர்களில் தீட்டப்பட்டுள்ள நாயக்கர் காலத்து வைஷ்ணவ ஓவியங்களில் கிருஷ்ணன் கோபிகா ஸ்திரியுடன் உடலுறவு கொள்ளும் ஓவியங்கள் இருக்கின்றன.

தமிழக - கர்நாடக கோயில் மரத்தேர்களிலும் இவ்வகைச் சித்தரிப்புகள் அனேகம். அதே சமயம் இவை பல்வேறு சாஸ்திரங்களில் இன்றியமையாத ஒரு சாஸ்திரமாகவே கருதப்பட்டு இடம் பெற்றிருக்கின்றன. இவற்றின் வெளிப்பாட்டுச் சித்தரிப்பில் விரசம் எதுவுமின்றி அழகியல் உணர்வே மேலலோங்கித் தெரிகின்றது. எனவே கலை வெளிப்பாட்டில் பாலுறவு அம்சங்கள் வெவ்வேறு வழியில், ரீதியில், கதியில் புகுத்தப்பட்டே வந்திருக்கின்றன என்பதை கலை வரலாறு காட்டுகிறது. ஆண் - பெண்களின் நிர்வாணச் சித்தரிப்பு ஐரோப்பிய மறுமலர்ச்சி கால - ஓவிய - சிற்பங்களில் பிரதானமாயுள்ளது. நவீன ஓவிய - சிற்பச் சித்தரிப்பில் இவையெல்லாம் மிகுந்த சுதந்திரத்தோடு கையாளப்படுகின்றன.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:38 am

காட்சிரீதியான சலனத் திரைப்படங்களில் எவ்வித சித்திரிப்பும் எல்லாரையும் மிக விரைவிலும் எளிதாயும் தீவிரமாயும் சென்றடையக் கூடியது என்பதோடு விளைவுகளை உடனுக்குடன் ஏற்படுத்தவல்லது. எனவே பாலுணர்வு - உடலுறவுத் தொடர்பான காட்சிகள் கட்டுப்பாட்டோடும், தயக்கத்தோடும் கையாளப்படுபவை. டி.எச். லாரன்ஸின் 'FOX' என்ற கதை பெண்கள் ஒருவருக்கொருவர் கொள்ளும் ஓரினச் சேர்க்கை விஷயத்தை உள்ளடக்கியது. பல ஆண்டுகளுக்கு முன் இக்கதை திரைப்படமாக்கப்பட்டு திரையிடப் பட்டபோது மிகவும் பூடகமாய் கையாளப்பட்டிருப்பதைக் காண முடிந்தது. பல பிரெஞ்சு படங்களில் இவ்வகைச் சித்தரிப்புகள் கலை நேர்த்தியோடும் அழகியல் ததும்பவும் கையாளப்பட்ட படங்கள் கொஞ்சம் உண்டு. அவற்றில் குறிப்பிடத்தக்கது. ''சித்தார்த்தா'' ஆங்கிலப்படம். கோன்ராட்ரூக் தயாரித்து இயக்கியது. சசிகபூரும் சிமியும் நடித்தது. ஒரு காட்சியில் இருவரும் முழு நிர்வாணமாகத் தோன்றுகின்றனர். இக்காட்சியை காமிராவில் படமெடுத்த ஒளிப்பதிவாளர் ஸ்வென் நிக்விஸ்ட் வெவ்வேறு ·பில்டர்களைக் கொண்டு இருநிர்வாண உடல் தோற்றத்தையும் சோழர்கால செப்புத் திருமேனி போன்று தோன்றுமாறு செய்துள்ளார். ஸ்வென் நிக்விஸ்ட் உலகின் முதல் நிலை ஒளிப்பதிவாளர்களுள், ஒருவரும் ஸ்வீடனின் உலகப் புகழ் பெற்ற இயக்குனர் இங்மார்பெர்க்மனின் ஒளிப்பதிவாளருமாவார். சித்தார்த்தா படத்தின் மிக முக்கிய சிறப்பம்சமே இவரது ஒளிப்பதிவு ஒன்றுதான். செக்ஸ் காட்சிகளைப் பார்க்க முண்டியடித்து வந்த ஜனங்கள் ஏமாந்து போயினர். அதே சமயம் ஜனாதிபதி விருது பெற்ற - முக்கிய படங்களில் ஒன்றான அற்புதமான படமான ''சம்ஸ்காரா''வில் சந்திரியும் பிர§ணுஷாச்சாரும் அனுமார் கோயில் அருகில் உடலுறவு கொள்ளும் காட்சி மிகவும் அதிகபட்சமானது. (ஒளிப்பதிவு - டாம்கோவன்)

''ஒரு சீன் ரொம்ப சூடானது. அது ஒண்ணுக்கே படத்தைப் பார்க்கலாம்'' என்று ஜனங்களில் பலர் பெங்களூரில் கொட்டகையில் பேசிக் கொண்டது உண்மை.

சத்யஜித்ராயும் மிர்னாள்சென்னும் தம் படங்களில் செக்ஸை தவிர்த்திருக்கிறார்கள். சத்யஜித்ராய் மிக ஜாக்கிரதையானவர் இதில். ''அரண்யர்தின்ராத்தே'' படத்தில் இளம் விதவை விரகதாபத்தோடு நகைகளையெல்லாம் பூட்டிக் கொண்டு செளமித்ராசட்டர்ஜிக்கு காத்திருப்பதும் அவர் அவளை தள்ளிவிட்டு வெளியேறுகையில் அவள் குமுறுவதும் ரேயின் அளவுக்கு போதுமானது. புத்த தேவ்தாஸ் குப்தா இயக்கிய ''ஆந்தி காலி'' யில் உடலுறவுக் காட்சி - அதுவே படத்தின் திருப்பு முனைக்கு அடிப்படையானது - அளவோடு காட்டப்பட்டதாக பதிலளிக்கப்பட்டது.

தமிழ் சினிமாவைப் பொறுத்தளவு நடிக நடிகையரின் உடை விவகாரம், பாடல்கள், வசனங்கள் பெருமளவுக்கு செக்ஸ் காரியத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

ஆரம்ப காலத் தமிழ்ப் படங்களில் பாட்டுக்களில் பாலுறவு உணர்வுமிக்க வார்த்தைகள் உண்டு.

பி.யு. சின்னப்பா நடித்த மனோன்மணி (டி.ஆர். சுந்தரம் இயக்கம்) குறிப்பிடத்தக்கது. மைகேலாஞ்சலோ வடித்த அற்புத சலவைக்கல் ஆளுயர சிற்பங்களில் நிர்வாண டேவிட் சிற்பம் உலகப் பிரசித்தி பெற்றது. ஓரினச் சேர்க்கையில் ஈடுபடும் பழக்கமுள்ள ஆண்கள் இந்த வனப்பு மிக்க முழு நிர்வாண டேவிட் சிற்பத்தை உற்று உற்றுப் பார்ப்பது தினசரி காட்சி. ஒருமுறை இளம்பெண்ணொருத்தி (குட்டைப் பாவாடையுடன்) இந்த டேவிட் சிலையை ரசாபாசமாய் அணைத்து முத்தமிட்ட காட்சி 60களில் பத்திரிகையில் வெளியானதோடு, அந்த இளம் பெண்ணுக்கு போலீஸ் எச்சரிக்கை விடுத்த செய்தியும் வெளிவந்திருக்கிறது.

ஆண்களை செக்ஸியாக தோன்றுமாறு திரைப்படங்களில் காட்டுவதும் பிரபஞ்ச ரிதீயானது. விக்டர் மச்சூர் (சாம்சன் அண்ட் டி லைலா) ஸ்டீவ் ரீவ்ஸ் (ஹெர்குலிஸ்) மார்லன் பிராண்டோ (ஆன் தி வாட்டர் ·ப்ரண்ட் மற்றும் A street car named Desire ஆகிய நடிகர்களையும் அடைப்புகளிலுள்ள அவர்களின் படங்களையும் சொல்லலாம். தமிழில் ஆணை செக்ஸியாகக் காட்டிய முதல் படமாய் மனோன்மணியைச் சொல்லலாம். பி.யு. சின்னப்பாவை படத்தின் ஆரம்பக் காட்சியிலேயே அவ்வாறு தோன்றச் செய்துள்ளனர். சிறுத்தைப் புலித்தோலாலான ஜட்டியையும், ஒரு கையில் இணைந்த முண்டா பனியனையுமணிந்து குஸ்தி போடும்பேச மன்னனாக கொக்கோவுக்கும் நமக்கும் நமது பெண்களுக்கும் அறிமுகமாகிறார் சின்னப்பா. அவைர அவ்விதமாய் தோன்ற வைத்த காட்சி குடும்பப் பெண்களைச் கூச வைத்த ஒன்றாகவும், அதில் அவர் காலில் ஸ்பிரிங் கட்டிக்கொண்டாற்போல குதிப்பதாகவும் கல்கியும் இடித்திருக்கிறார். அதன் பிறகு கமலஹாசனின் (மூன்றாம் பிறையில் சில்க்குடன் நடனம்) நிறையவே செய்து காட்டியிருக்கிறார்.சந்திரலேகாவில் ரஞ்சன் டி.ஆர். ராஜகுமாரியை பிடித்துக்க அவர் நழுவி விழுவதும்... தொடர்வதும் கூட வலிந்தே காட்டப்பட்ட செக்ஸ் அப்பீல் காட்சிகள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:39 am

16வயதினிலேயில் தண்ணீரில் நிற்கும் ஸ்ரீதேவியின் நிர்வாணத் தோற்றத்தை குறைந்தது கால்கள் முதல் தொடைகள் வரையிலாவது ரசிகர்களுக்குக் காட்ட முயற்சித்திருக்கும் பாங்கு பகுதி விரசமாயும் பகுதி நகைச்சுவைமிக்குமிருக்கிறது. இவ்வாறு வலிந்து செய்து காட்சி கும்பலும் காசும் சேர்க்கும் முயற்சி ஆண்டாண்டு காலமாய் தமிழிலிருப்பதை ஒரு பழைய படத்தைச் சொலலிப் போகலாம்.

பட்சிராஜாவின் ''ஜகதல பிரதாபன்''. பி.யு. சின்னப்பா, எம்.எஸ்.சரோஜினி முதலானோர் நடித்தது. சரோஜினி சசிரேகா எனும் தேவேந்திர சபையில் நடனமாடும் போது பூலோக தடாகத்தில் குளிக்க வந்தவர் சின்னப்பாவால் சேலை திருடப்பட்டு இங்கேயே தங்கிவிடுகிறார். சேலையில்லாமல் தேவலோகம் போகமுடியாது. இங்கே கிடைத்த பூலோகச் சேலையுடன் குளிக்கப் போகும் சரோஜினி தன் ஒவ்வொரு ஆடையாக உருவி புல் தரையில் எரியும் கோலத்தை காமிரா, ஆண்களைச் சுண்டி பார்த்தே காட்டுகிறது. கடைசியாக ஏராளமாய் டக்கு பிடித்த பட்டு உள்பாவாடை நழுவி விழுகிறது. கொலுசு அணிந்த - சிறிதே பூனை முடி படர்ந்த அழகான பெண் கால்கள் நடந்து நீரில் இறங்க - கட் !

அமெரிக்கர் எல்லிஸ் ஆர். டங்கன் வந்த பிறகு தமிழ்ப் படங்களில் செக்ஸ் காட்சிகள் மேலும் இறுக்கம் தளர்ந்தன. மாடர்ன் தியேட்டர்ஸாரின் 'அம்பிகாபதி. தியாகராஜ பாகவதரும் சந்தானலட்சுமியும் 'சந்திர சூரியர் போகும் கதி மாறினும்' - என்ற பாட்டைப் பாடிக் கொண்டு சரசமாடும் காதல் காட்சி. பாகவதர் சந்தானலட்சுமியை அதிசுதந்திரத்தோடு தழுவியும் அணைத்தும் அலாக்காகத் தூக்கி மஞ்சத்தில் கிடத்தி மெதுவாக முகம் நோக்கி நெருங்க - கட்!

இவ்வாறு அலாக்காகத் தூக்கும் காட்சியை எந்த ஆரம்பகால சினிமா விமர்சகனும் அவ்வளவாக ஆட்சேபிக்கவில்லை என்றே தெரிகிறது. ஆண்களும் பெண்களும் திரும்பத் திரும்ப படையெடுத்துச் சென்று கண்டு களித்த அம்பிகாபதியின் குறிப்பிட்ட காட்சிகள் விரசச் சுவை ததும்ப கல்லாப் பெட்டியைக் குறி வைத்தே வலிந்து எடுக்கப்பட்டவை என்று அன்றைக்கு பேச்சு தீவிரமாய் அடிப்பட்டது உண்மை. ஒரு குறிப்பிட்ட நடிகனுக்கும் நடிகைக்குமிடையிலான சகஜமாகிவிட்ட அரந்தரங்க உறவைப் பூதக் கண்ணாடியால் பார்த்து எழுதி வியாபாரம் செய்த இந்துநேசன் - தீரன் இத்யாதி மஞ்சள் பத்திரிகைகள் இது போன்ற சினிமா படுக்கையறைக் காட்சிகளால் உந்து சக்தியும் உத்வேகமும் பெற்று லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை போய் கலக்கும் கலக்கின.

ஹரிதாஸில் பாகவதரும் ராஜகுமாரியும் மேலும் நெருக்கம் காட்டி சுதந்திரம் பூண்டனர். ஹரிதாஸைப் பொறுத்தளவு, மன்மதலீலைய வென்றார் உண்டோ எனும் போது அசாதாரணமான கர்னாடக இசையிலமையந்த அருமையான பாடல் காரணமாயும் ஒருசில நகைச்சுவை பூசின சேஷ்டைகளாலும் காமச் சுவை சுருதியிறங்கித் தோன்றியது. இதே படத்தின் ஆரம்பக் காட்சியில் குதிரையில் வரும் பாகவதர் வாழ்விலோர் திருநாள் என்று பாடிக்கொண்டு சிறுமி பண்டரிபாயைத் துரத்தி அவர் மரத்தில் மறைய அவரது புடவையை இழுத்து உரிக்கிறார். பண்டரிபாய் வெட்கத்தால் கண்களை மூடிக்கொள்கிறார். ஊரறிந்த காமுகனால் நிர்வாணமாக்கப்படுவதை நாணம் தடுத்தாலும் ஏற்றுக்கொள்ளும் தர்மசங்கட நிலையைப் பார்க்கிறோம்.

மீண்டும் எல்லிசார் டங்கனின் இயக்கம். படம் மார்டன் தியேட்டர்சாரின் 'பொன்முடி' நரசிம்மபாரதியும் மாதுரிதேவியும் புரியும் காதல் கேளிக்கைகள் பத்திரிகைகளால் விரசம் என்று வெளிப்படையாக சொல்ல வைத்தன. 50களில் வெளிவந்த படம் நல்லகாலம். அளவுக்கு மீறி அலுக்க வைக்கும் சோகப்படம். எம்.கே. ராதாவும், ஸ்ரீரஞ்சனியும் சோகப் பிழம்புகள். டி.எஸ். பாலய்யா வில்லன். இவர் ஒரு பெண்ணைக் கற்பழித்து முடித்த கையோடு முகம் பூராவும் முத்து முத்தாய் வியர்வை அரும்பியிருக்க திருப்தியோடு ! சிகரெட் ஊதிப் புகைவிடுகிறார் (ஒளியும் இருளும் அருமையாய் கூடியிருக்க பெரிய குளோஸப் காட்சி). தலை விரிகோலமாய் குப்பைக் கூளமாய் கிடக்கும் புடவைக் குவியலிலிருந்து மீளும் பெண்ணைப் பார்த்துப் புன்முறுவலிக்கும் பாலய்யா. இந்தக் காட்சி விரசச் சுவை சொட்டுவதாய் விமர்சிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:39 am

நாற்பதுகளின் பிரபல படமான 'வனமோகினி'யின் பிரதான ஜனரஞ்சகம் எது? சிங்களக்குயில் தவமணிதேவியின் ''காட்டுவாசிப் பெண் உடை'' தான் முழுக்கால்களும், முக்கால் தொடைகளும், பகுதி வயிறும், ஒரு பக்கம் தோளும் பச்சை நிர்வாணம். இந்தப் படத்திற்குப் பின் தவமணி தேவி இப்படியெல்லாம் தோன்றவில்லைதான். ஆனால் அவரை நினைக்கும் போதெல்லாம் - என்பத்தேழு வயதில் காலமான போது வெளிவந்த பத்திரிகைச் செய்திகள்கூட நினைவுகூறும்போது, ''முதன் முதலில் அரைநிர்வாணமாக' - நடித்த கவர்ச்சி நடிகை - என்றுதான் குறிப்பிடுகின்றன.

தெலுங்கிலிருந்து தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்ட படம் 'ஸ்திரி சாகசம்' தலைப்பிலுள்ள இனக்கவர்ச்சி - மேற்படி - மேற்படி விஷயங்கள் படத்தில அவ்வளவாக கிடையாது. ஆனாலும் படம் வயது வந்தவர்களுக்கு மட்டும்'' என்று தணிக்கை சிபாரிசு பெற்றது. நாகேசுவரராவ் - அஞ்சலி தேவி நடிப்பு.

தமிழ் சினிமா எனும் போது - வணிகப் படங்களான ஜனரஞ்சகப் படங்கள்தான். இவற்றின் பிரதான அம்சங்கள் இரண்டு. மயிர்க் கூச்செறிய வைக்கும் வசனங்கள் இசை பாட்டுக்கள் தமிழ்ப் படங்களின் வசனங்களில் பாலுணர்வு ததும்பும் விதமாய் பேசப்பட்டவை நிறைய. இதுவும் இன்று நேற்று வந்த விஷயமன்று. 40களின் ''பர்மாராணி''யில் இதுவே சற்று வேறுவிதமாய் இருக்கிறது. பர்மாவை ஜப்பானிய ராணுவம் பிடித்திருக்கிறது. ஜப்பானிய ராணுவ அதிகாரி (டி.ஆர். சுந்தரம்) பர்மிய கல்வி அமைச்சரின் (கே.கே. பெருமாள்) அழகிய மகளின் (கே.எல்.வி. வசந்தா) நடனத்தைப் பார்த்தாக வேண்டும் என்று கட்டளையிடுகிறான். ஜப்பானிய அதிகாரியின் கடுமையான வேண்டுகோளை தம் மகளிடம் தெரிவிக்கும்போது மிகக் கோபமாக உடனே படபடவென்று கே.எல்.வி. வசந்தாவிடமிருந்து பதில் வசனம் வருகிறது.

''அதுக்கு வேறே யாராவது தேவடியா இருந்தா போய் கூப்பிடுங்க...''

தந்தையைப் பார்த்து மகள் பேசும் இவ்வசனம் கூட விரசம் எனும் வகையில் அன்று கண்டிக்கப்பட்டது. விரசம் என்பது பாலுணர்வு அடிப்படையில் வைத்து கணிக்கப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:41 am

40களில் ஸ்ரீவள்ளி. டி.ஆர். மகாலிங்கம், குமாரி ருக்குமணி இணைந்து நடித்தது. வேடனாய் வந்து வள்ளியைத் துரத்தும் முருகன் ஓரிடத்தில் எல்லையை மீற வேண்டி வருகிறது. வசனம் முருகனுக்கும் (வேடன்) வள்ளிக்குமாக பின்வருமாறு :

''இனி பொறுக்க முடியாது''

'என்றால்''

''காந்தர்வ விவாகம்...''

''நிஜமாகவா?''

''கட்டாய காந்தர்வ விவாகம்தான்''

''நில், என்னைத் தொட்டால், உன் உயிர் உன் உடலில் நிற்காது''

''உன்னைத் தொடாவிட்டாலும் என் உயிர் உன் உடலில் நிற்காது. அப்படித் தொடாமல் போகும் உயிர் தொட்டே போகட்டும் போ.''

எவ்வளவு அழகான - பூடகமான வசனம் ! இதில் விரசமிருக்கிறது. விரசத்துக்கான உடலிச்சை மேலிட்ட பாலுணர்வு இருக்கிறது.

60களுக்குப் பின் வெளிவந்த படங்களில் வசனங்களும் பாடல்களும் இருபொருள்பட, பல பொருள்பட அமைந்திருப்பதாய் அடிக்கடி பேசப்படும். இந்த இருபொருள்பட இருப்பது என்பது பாலுணர்வு - உடலுறவுக்கான கட்டியங்கூறும் வார்த்தைகளாகவே கருதப்பட்டு கொள்ளப்பட்டவை. அப்படிப்பட்ட வசனங்களாயும் பாடல்களாயும் சேஷ்டைகளாயும் ரசிகர்களே தேடியோடினர் என்றும் கூறலாம். உடலுறவு பாலுணர்வு தொடர்பாக எது கோடி காட்டப்பட்டாலும் பொது ஜனம் அலை மோதுவதாயிருக்கிறது. எதிர்பார்த்தது கிடைக்காத காரணத்தால் ஒரு சர்வதேச திரைப்பட விழாவின் போது சென்னையில் பிரபல திரையரங்கு ஒன்றின் கண்ணாடிகள் மிக மோசமாக அடித்து நொறுக்கப்பட்டன.

கரு உற்பத்தி, கர்ப்பநிலை, பிரசவம் என்பது முதல் தகாத உடலுடறவு, சோரம் முதலான சமூக சீரழிவுகள் வரை அவற்றின் விபரீத விளைவுகளையும் புகைப்படங்கள், டாக்குமண்டரி துண்டுப் படங்கள், இடையே கதையோட்டம் என்று தொகுக்கப்பட்ட படம் 'குப்த ஞான்' தமிழிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு 60களில் நாடெங்கும் வெளியானது. பாடம் கேட்கவோ அறிவுரை கேட்டுக்கொள்ளவோ இந்தப் படங்கள் ஓடின கொட்டகைகளை மக்கள் நிரப்பவில்லை. செக்ஸ் காட்சிகள் அங்கங்கே இருப்பதாக அறிந்தே போய் மொய்த்தனர். இவ்வகைப் படங்கள் தொடர்ந்த பலரால் பலவிதமாய் பல கோணங்களிலும் தயாரித்து வெளியிடப்பட்டு வெற்றிகரமாய் ஓட்டப்படடன.

ஜனரஞ்சகப் படங்களில் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக கற்பழிப்புக் காட்சிகள் இன்றியமையாதவையாக கருதப்பட்டன. படவிநியோகஸ்தர்களில் சிலர் இக்காட்சிகள் இடம் பெற்றிருத்தலை வேண்டினர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Jul 10, 2009 3:41 am

''நாலு ·பைட் சீன், ஒரு ரேப் சீன் இருக்கு... போதும்'' - என்று சொல்லுமளவுக்கு அவர்களின் தேவை. அவர்களின் தேவை - ஜனங்களின் தேவை. ஜனங்களின் தேவை - அவர்களின் தயாரிப்பு அளிப்பு what a logic! மக்கள் விரும்புகிறார்கள். நாங்கள் அதைக் கொடுக்கிறோம். மக்களுக்காக... மக்கள் படங்கள்.... என்றும் முழங்குகிறார்கள். Reach ஆகுது.... Reach ஆகுது என்று விடலை இயக்குனர்களும் ஆளாளுக்கு தொலைக்காட்சியில் பேட்டியளிக்கின்றனர். கற்பழிப்புக் காட்சி படத்தில் இடம் பெறுகையில் அதை ஒரு குற்றமாக - வன்முறைச் செயலாகப் பார்ப்பதைக் காட்டிலும் உடலுறவு நிகழ்வாகவே பார்க்கின்றனர். அதற்குத் தகுந்தாற் போல அச்செயல் நிகழும் காட்சியில் அவ்வுணர்வுக்குத் தீனி போடும் வகையில்தான் ஒளிப்பதிவும் உடைதினசுகள் போகும் விதமும், வெளித்தெரியும் அங்க லாவண்யங்களுமிருக்கின்றன.

சினிமா - தொலைகாட்சி என்பவை பார்வை சம்மந்தமாய் - பார்த்தலுக்குப்பின் மூளையை அடைந்து உடனுக்குடன் விளைவுகளை ஏற்படுத்த வல்லவை. மிகச் சக்தி வாய்ந்த சாதனங்கள். உடலுறவு - பாலுறவு - உணர்வுகள் அந்தரங்கம் வேண்டுபவை. வரம்பு வேண்டும். சமுதாயம் மனத்தளவில் வக்கிரித்துப் போய்விடலாகாது என்று 60களில் வெளியான படம் ஒன்று. அதீத பாலுறவு உணர்வு கொண்ட பெண்ணொருத்தி பயங்கர வேகத்தில் தன் நவீன மோட்டார் சைக்கிளில் நகரில் சுற்றி சுற்றி அதைத் தீர்த்துக் கொள்ளுவதோடு பயங்கர சாலை விபத்தில் மரணமுறுகிறாள். ஒரு கணத்தில் அவளுக்குத் தன் சவாரி செய்யும் மோட்டார் சைக்கிளே ஆண் ஒருவனின் உடலாகத் தோன்றுவதாய் எடுத்துக் கொண்டு அதனோடு ஒன்றி - ஒட்டிப் படுத்து உராய்ந்து கொள்ளுகிறாள். இதை இப்படியாக விளக்கிச் சொன்னலான்றி படம் பார்ப்பவர்களுக்கு எதுவும் புரியப் போவதில்லை Girl On the Motor Cycle Did Not Reach The Mass!

மூலம்:ஆறாம்தினை

avatar
Guest
Guest

PostGuest Fri Jul 10, 2009 7:41 am

தமிழ் சினிமா பற்றிய ஆய்வுகள் சூப்பர் மகிழ்ச்சி

thesa
thesa
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 817
இணைந்தது : 05/06/2009

Postthesa Fri Jul 10, 2009 1:37 pm

ஹி ஹி
எனக்கு மிகவும் உபயோகமான பதிவு

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக