புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 28, 2024 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
5 Posts - 3%
prajai
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
2 Posts - 1%
Manimegala
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
2 Posts - 1%
சிவா
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
435 Posts - 47%
heezulia
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
30 Posts - 3%
prajai
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
5 Posts - 1%
sugumaran
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_m10இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!!


   
   
சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 04, 2010 10:02 pm

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-7-dr-priya-natarajan

    [கட்டுரை: 44]



சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear)
கனடா



கருந்துளை ஒரு சேமிப்புக்
களஞ்சியம் !
விண்மீன்
தோன்றலாம் !
ஒளிமந்தைகள் பின்னிக் கொள்ளலாம் !
இருளுக்குள்
உறங்கும்
பெருங் கருந்துளையை எழுப்பாது
உருவத்தை மதிப்பிட்டார் !
உச்சப்
பெருங் கருந்துளைக்கு
வயிறு பெருத்த விதம்
தெரிந்து போயிற்று !
பிரியாவின்
அடிக் கோலால்
பெரிய கருந்துளையின்
உருவத்தைக் கணிக்க முடிந்தது
!
விண்மீன்களை விழுங்கியும்
கும்பி நிரம்பாது
பிண்டங்களைத்
தின்று
குண்டான உடம்பை
நிறுத்தும் உச்ச வரம்பு !
“பிரியா
வரம்பு”
கடவுளின்
கைத்திறம் காண்பது
மெய்த்திறம் ஆய்வது,
வையகத்தார்
மகத்துவம் !

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Limit-to-the-largest-blackhole1

“பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக் கொத்துக்களின்
(Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள்
குடியிருக்கும் ! நமது பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு
கருந்துளையை விட ஆயிரக் கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப்படுகிறது ! அசுரப்
பெரும் கருந்துளைகள் அண்டையில் இருக்கும் பிண்டங்களை விழுங்கி உச்ச நிறைக்கு மீறி
வளராமல் நிறுத்தம் அடைகின்றன. சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்தி
நிறுத்தமான கருந்துளைகளைக் காண முடிகிறது. உச்ச நிறை அடைந்த கருந்துளைகள் இப்போது
வயிறு நிரம்பி நிற்கவில்லை ! பிரபஞ்சத் தோற்றத்தின் ஆரம்ப காலத்திலே அவற்றின் நிறை
உச்ச வரம்பு நிலை அடைந்து விட்டது,”

“கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின்
பிரதானக் கொடைக் களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this
Space Opera).”

டாக்டர் பிரியா நடராஜன் (Professor, Dept of
Astronomy & Physics, Yale University, Connecticut, USA)


இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1a-yale-astronomer-discovery

“என்னுடைய ஆய்வுக் கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில்
கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம், வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனை
ஆராய்ச்சிகளில் ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங் பிரபஞ்சத்தின் புனைவு (Episode)
ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள் மணல் பற்றியும் (Granularity of Dark Matter) நான்
ஆராய்ச்சி செய்தேன்.”

டாக்டர் பிரியா நடராஜன்

“சமீபத்திய ஹப்பிள் தொலைநோக்கியின் கண்டுபிடிப்புகள்
வானியல் விஞ்ஞானிகளுக்கு மாபெரும் பிரபஞ்சச் சவாலாகி விட்டன ! காரணம் அது ஒவ்வொரு
காலாக்ஸியின் மையத்திலும் பூதகரமான கருந்துளை ஒன்று இருப்பதைத் திறந்து காட்டி
விட்டது !”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science
Editor)

“புதிய பொறிநுணுக்க முறை “விளைவுத் தொடுவானைத்” (Event
Horizon) தெளிவாகக் காட்டுகிறது. அதுவே கருந்துளை இருப்பை நேரிடைச் சான்றாக
நிரூபிக்கிறது.”

ஸ்டீவ் நாடிஸ், (Astronomy Science
Editor)


“கருந்துளைகள் மெய்யாகக் கருமை நிறம் கொண்டவை அல்ல !
அவை ஒளித்துகள் மினுக்கும் கனல் கதிர்களை (Quantum Glow of Thermal Radiation)
வீசுபவை.

ஸ்டீஃபென் ஹாக்கிங் (1970)

பிரபஞ்சத்திலே கண்ணில் புலப்படாத கருந்துளைகள்
அகிலத்தின் மர்மமான விசித்திரங்கள் ! அந்தக் கருந்துளைகள்தான் பிரபஞ்சத்தின் உப்பிய
வடிவில் 90% பொருளாக நிரம்பியுள்ளன ! எளிதாகச் சொன்னால், ஒரு சுயவொளி விண்மீன்
எரிசக்தி முழுவதும் தீர்ந்து போய் எஞ்சிய திணிவுப் பெருக்கால் எழும் பேரளவு
ஈர்ப்பாற்றலில் அடர்த்தியாகி “ஒற்றை முடத்துவ” (Singularity) நிலை அடைவதுதான்
கருந்துளை. அந்தச் சமயத்தில் கருந்துளையின் அழுத்தம், திணிவு கணக்கற்று
முடிவில்லாமல் மிகுந்து விடுகிறது. (At the point of Singularity, the Pressure
& Density of a Black Hole are Infinite) !

விண்வெளி விடைக் கைநூல் (The Handy Space
Answer Book)


இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1b-intermediate-mass-black-hole1

பேருருவக் கருந்துளைக்குப் பிரியாவின் உச்ச
நிறை வரம்பு


விண்வெளியில் கருந்துளைகள் கண்களுக்குத் தெரியாமல்
போயினும் அவற்றின் வடிவை விஞ்ஞானிகள் மறைமுகமாக மதிப்பீடு செய்ய முடிகிறது !
அணுவைப் போல் சிறிதாகவும் கருந்துளைகள் இருக்கலாம் ! அசுர வடிவத்திலே பல கோடிப்
பரிதிகளின் நிறையிலே கருந்துளைகள் குடியிருக்கலாம் ! அப்படி அவற்றின் நிறைகள்
குறைவதற்கும், கூடுவதற்கும் தூண்டுகோலானக் காரணங்கள் என்ன ? நிறைகள் கூடி வயிறு
பெருத்துக் கருந்துளைகள் பெரிதாகிப் பெரிதாகி வரையறை யின்றி பூத வடிவம்
பெறுகின்றனவா ? அல்லது அவை ஓரளவுக்கு மேல் மீறாமால் நிலைத்துவம் அடைந்து உச்ச
வரம்புடன் நின்று விடுகிறதா என்று ஆராய்ச்சி செய்த இந்தியப் பெண் விஞ்ஞானி டாக்டர்
பிரியம்வதா நடராஜன். பேருருவக் கருந்துளைகளின் நிறைக்கு முதன்முதல் “உச்ச நிறை
வரம்பை” (Mass Limit of Black holes) 2008 செப்டம்பரில் உலகுக்கு எடுத்துக்
கூறியவர் பிரியா நடராஜன். அவ்விதம் பெரும் பூதக் கருந்துளைக்கு அவர் கூறிய உச்ச
வரம்பு நிறை பரிதியைப் போல் 10 பில்லியன் மடங்கு ! அதற்குத் தமிழ் விஞ்ஞானத்தில்
நாம் “பிரியாவின் வரம்பு” (Priya’s Limit) என்று பெயர் வைப்போம்.

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1c-black-hole-mass1

பல ஆண்டுகளாக விஞ்ஞானிகளிக்கு ஓர் விண்வெளி
ஆராய்ச்சிச் சவாலாகப் பிரபஞ்சத்தின் தீராத பெரும் புதிராகக் கருந்துளைகள் இருந்து
வருகின்றன ! பல வல்லுநர்கள் இராப் பகலாக கருந்துளையின் இரகசியத்தை உளவு செய்து
வருகிறார். அந்த ஆய்வு முயற்சிகளில் யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிக பெண்
விஞ்ஞானி பிரியா நடராஜன் ஓர் அரிய கருத்தைச் சமீபத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதாவது வளரும் எந்தக் கருந்துளைக்கும் ஓர் உச்ச வரம்பு நிறை உள்ளது என்பதே !
பிரியாவின் அந்த அரிய அறிவிப்பு ராயல் வானியல் குழுவினரின் (Royal Astronomical
Society) மாத இதழிலும் வெளிவந்துள்ளது !

பிரபஞ்சக் கருந்துளை என்பது என்ன
?


1916 ஆம் ஆண்டில் ஐன்ஸ்டைனின் ஒப்பியல் நியதியின்
அடிப்படையில் ஜெர்மன் வானியல் விஞ்ஞானி கார்ல் சுவார்ஸ்சைல்டு (Karl
Schwarzschild), பிரபஞ்சத்தில் முதன்முதல் கருந்துளைகள் இருப்பதாக ஓரரிய
விளக்கவுரையை அறிவித்தார். ஆனால் கருந்துளைகளைப் பற்றிய கொள்கை, அவருக்கும்
முன்னால் 1780 ஆண்டுகளில் ஜான் மிச்செல், பியர் சைமன் லாப்பிளாஸ் (John Michell
& Pierre Simon Laplace) ஆகியோர் இருவரும் அசுர ஈர்ப்பாற்றல் கொண்ட “கரும்
விண்மீன்கள்” (Dark Stars) இருப்பதை எடுத்துரைத்தார்கள். அவற்றின் கவர்ச்சிப்
பேராற்றலிலிருந்து ஒளி கூடத் தப்பிச் செல்ல முடியாது என்றும் கண்டறிந்தார்கள் !
ஆயினும் கண்ணுக்குப் புலப்படாத கருந்துளைகள் மெய்யாக உள்ளன என்பதை விஞ்ஞானிகள்
ஏற்றுக் கொள்ள நூற்றிமுப்பது ஆண்டுகள் கடந்தன !

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1d-masses-of-black-holes

1970-1980 ஆண்டுகளில் பேராற்றல் படைத்த தொலைநோக்கிகள்
மூலமாக வானியல் விஞ்ஞானிகள் நூற்றுக் கணக்கான காலாக்ஸிகளை நோக்கியதில்,
கருந்துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்னும் கருத்து உறுதியானது. கருந்துளை
என்பது ஒரு காலவெளி அரங்கில் திரண்ட ஓர் திணிவான ஈர்ப்பாற்றல் தளம் (A Black Hole
is a Region of Space-time affected by such a Dense Gravitational Field that
nothing, not even Light, can escape it). பூமியின் விடுதலை வேகம் விநாடிக்கு 7
மைல் (11 கி.மீ./விநாடி). அதாவது ஓர் ஏவுகணை விநாடிக்கு 7 மைல் வீதத்தில்
கிளம்பினால், அது புவியீர்ப்பை மீறி விண்வெளியில் ஏறிவிடும்.. அதுபோல்
கருந்துளைக்கு விடுதலை வேகம் : ஒளிவேகம் (186000 மைல்/விநாடி). ஆனால்
ஒளிவேகத்துக்கு மிஞ்சிய வேகம் அகிலவெளியில் இல்லை யென்று ஐன்ஸ்டைனின் நியதி
எடுத்துக் கூறுகிறது. அதாவது அருகில் ஒளிக்கு ஒட்டிய வேகத்திலும் வரும் அண்டத்தையோ,
விண்மீன்களையோ கருந்துளைகள் கவ்வி இழுத்துக் கொண்டு விழுங்கிவிடும்.

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1e-mid-size-black-holes

எத்துணை அளவு நிறை வரைப் பெருக்கும்
கருந்துளைகள் ?


அணு வடிவில் சிறிதாயும் பூத உருவத்தில் பெரிதாகவும்
பெருத்து வளர்பவை கருந்துளைகள் ! சிறு நிறைக் கருந்துளை, பெருநிறைக் கருந்துளை
என்று பிரிவு பட்டாலும் இரண்டுக்கும் இடைப்பட்ட நிறையில் உள்ள கருந்துளைகளும்
விண்வெளியில் கருவிகள் மூலமாகக் காணப்படலாம் ! பொதுவாகக் கருந்துளைகள் அருகில்
அகப்படும் வாயுக்கள், தூசித் துகள்கள், ஒளிவீசும் விண்மீன்கள், ஒளியிழந்த செத்த
விண்மீன்கள் போன்றவற்றை அசுர ஈர்ப்பாற்றலில் இழுத்து விழுங்கி வயிறு புடைத்துப்
பெருக்கும் ! அப்போது கருந்துளையின் நிறை ஏறிக் கொண்டே போகிறது ! ஆனால் அந்த நிறைப்
பெருக்கத்துக்கும் ஓர் எல்லை உள்ளது என்று பிரியா நடராஜன் முத்திரை அடிக்கிறார்.
எந்தப் பீடத்தில் இருந்தாலும் இட அமைப்பு கருந்துளை நிறையின் உச்ச அளவு வரம்பை மீற
விடாது என்று அழுத்தமாகக் கூறுகிறார். பெரும் பூத வடிவுக் கருந்துளையின்
(Ultra-massive Black Hole) நிறை மதிப்பு பரிதியைப் போல் ஒரு பில்லியன் மடங்காக
அறியப் படுகிறது !

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-1f-supermassive-black-holes1

பிரியா நடராஜனும் அவரது விஞ்ஞானக் கூட்டாளர் டாக்டர்
எஸிகுயில் டிரைஸ்டர் (Dr. Ezequiel Treister, A Chandra/Einstein Post-Doctoral
Fellow at the Institute for Astronomy Hawaii) அவர்களும் விண்வெளி நோக்ககச் (Space
Observatory) சான்றுகளிலிருந்தும், கோட்பாடுத் தர்க்கங்கள் மூலமாகவும் கருந்துளை
உச்ச நிறை வரம்பு 10 பில்லியன் பரிதி அளவு என்று மதிப்பீடு செய்திருக்கிறார்.
“சந்திரா எக்ஸ்-ரே விண்ணோக்கியைப் பயன்படுத்திப் பெருக்காமல் நிறுத்தமான
கருந்துளைகளைக் காண முடிகிறது. பிரபஞ்சத்தில் மிகப் பெரும் காலாக்ஸிக்
கொத்துக்களின் (Galaxy Clusters) நீள்வட்ட காலாக்ஸிகளில் அத்தகைய வயிறு புடைத்த
பூதப் பெரு வடிவுக் கருந்துளைகள் குடியிருக்கும் என்று பிரியா கூறுகிறார் ! நமது
பால்வீதி காலாக்ஸியின் நடுவே உள்ள கருந்துளை பூதப் பெரு கருந்துளையை விட ஆயிரக்
கணக்கான மடங்கு சிறியது என்று கணிக்கப் படுகிறது ! உச்ச நிறை பெற்ற கருந்துளைகள்
இப்போது வயிறு நிரம்பியவை அல்ல ! பிரபஞ்சத் தோற்றத்தின் காலத்திலே அவற்றின் நிறை
உச்ச நிலை அடைந்து விட்டது,” என்று கூறுகிறார் பிரியா.



இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Huge-black-hole


இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Moz-screenshot-11

























கருந்துளை வளர்ச்சி எப்படி நிறுத்தம் அடைகிறது
?

“அருகில் அகப்படும் அண்ட பிண்டங்களை விழுங்கும் கருந்துளை, தான்
புறவெளியில் உறிஞ்சிய கதிர்ச்சக்திக்குச் சமமான அளவுக்குக் கதிர்ச்சக்தியை
வெளியேற்றும் போது மேலும் வாயுப் பிண்டத்தை இழுக்க வலுவற்று, வயிறு நிரம்பித்
தடைப்பட்டு ஓர் வரையறையைத் தொடுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு மகத்தானது ! ஏனெனில்
காலாக்ஸி மையத்தில் இருக்கும் கருந்துளை பிண்டங்களின் ஒரு சேமிப்புக் களஞ்சியமாய்
வீற்றிருந்து விண்மீன் பிறப்புக்கும் காலாக்ஸி அமைப்புக்கும் வழிவகுக்கிறது,” என்று
சொல்கிறார் பிரியா. “கருந்துளைகளே மெய்யாகப் பிரபஞ்ச இசை அரங்கின் பிரதானக் கொடைக்
களஞ்சியம், (Black Holes are the really Prima Donnas of this Space Opera).
பல்வேறு துறை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த போது, நான் எதிர்பாராத விதமாய்க்
கண்டுபிடித்த இந்த அரிய நிகழ்ச்சி எனக்குப் பூரிப்பளிக்கிறது” என்று சொல்கிறார்
பிரியா.

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-3-violent-black-holes1

விண்மீன் பிறப்புக்கும், கருந்துளை வளர்ச்சிக்கும்
அண்டவெளி வாயுப் பிண்டங்கள் தேவை. கருந்துளைகள் இரண்டு விதம். ஒன்று பசியின்றி
உயிருடன் இருக்கும் வயிறு நிரம்பியது ! இரண்டாவது பசியோடு முடங்கிய குறை வயிறுப்
பட்டினியானது ! அவை யாவுமே எக்ஸ்-ரே கதிர்கள் வீசுபவை ! கண்ணோக்கு அலைப் பட்டையில்
சுடரொளிக் குவஸாராகக் காணப்படுபவை (Optical Wave Band as a Bright Quasar) ! இதில்
விந்தையான கோட்பாடு என்ன வென்றால் கருந்துளைகள் யாவும் “சுய வளர்ச்சி பெறும்
அண்டங்கள்” (Self Regulating Growth Objects) என்பதே ! அதாவது உச்ச நிறை வரம்பு
எய்திடும் ஒரு சில பூதப் பெரும் கருந்துளைகள் உள்ளன என்பதே இப்போது மகத்தானதோர்
கண்டுபிடிப்பு,” என்று பெருமைப் படுகிறார் பிரியா நடராஜன் !

பெண் விஞ்ஞானி பிரியாவின் வாழ்க்கை வரலாறு


பிரியம்வதா என்னும் பிரியா ஓர் வானியல் பௌதிக
விஞ்ஞானி. அவர் டெல்லியில் பிறந்து டெல்லியில் வளர்ந்தவர். அவரது தந்தையார்
வெங்கடேச நடராஜன் ஓர் எஞ்சினியர். தாயார் லலிதா நடராஜன் ஒரு சமூகவியல் பட்டதாரி.
இரு சகோதரருடன் பிறந்த பிரியா எல்லாருக்கும் மூத்தவர். டெல்லியில் பௌதிகத்தில்
கீழ்நிலை விஞ்ஞானப் பட்டதாரியாகிப் பௌதிகம், கணிதத் துறைகளை மேலாக விரும்பி
மேற்படிப்புக்கு M.I.T (Massachusetts Institute of Technology, Cambridge, Mass,
USA) ஆராய்ச்சிப் பல்கலைக் கழகத்துக்கு வந்து சேர்ந்தார். பிறகு கோட்பாடு வானியல்
பௌதிகத்தில் (Ph.D. in Theoretical Astrophysics) டாக்டர் வெகுமதி பெற இங்கிலாந்து
கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், டிரினிடி கல்லூரியிலும் (1997 முதல் 2003 வரை)
பெரும் புகழ்பெற்ற விஞ்ஞானி டாக்டர் ஸர் மார்டின் ரீஸ் (Dr. Martin Rees)
மேற்பார்வையில் பயின்றார்.

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-4-dark-matter-dominated-universe

வானியல் பௌதிக விஞ்ஞானியான பிரியாவுக்கு விருப்பப்
பிரிவுகள் : பிரபஞ்சவியல், ஈர்ப்பாற்றல் ஒளிக்குவிப்பு, கருந்துளைப் பௌதிகம்
(Cosmology, Gravitational Lensing & Black Hole Physics). “என்னுடைய ஆய்வுக்
கட்டுரைக்கு (Thesis) பிரபஞ்சத்தில் கருமைப் பிண்டம், கருந்துளைகள் தோற்றம்,
வளர்ச்சி ஆகிய பல்வேறு பிரச்சனைகளில் ஆழ்ந்து ஈடுபட்டேன். ஸ்டீஃபென் ஹாக்கிங்
பிரபஞ்சத்தின் புனைவு (Episode) ஒன்றில் கருமைப் பிண்டத்தின் உள்மணல் (Granularity
of Dark Matter) பற்றி நான் ஆராய்ச்சி செய்தேன்.” என்று பிரியா நடராஜன் கூறுகிறார்.
Ph.D. ஆய்வுப் பயிற்சி முடிவதற்குள் டிரினிடி கல்லூரி ஐஸக் நியூட்டன் ஸ்டூடன்ஷிப்
ஆராய்ச்சி -வானியல் பௌதிக ·பெல்லோஷிப்பில் பங்கெடுத்து முதல் இந்தியப் பெண்
·பெல்லோஷிப் ஆய்வாராளாகத் தேர்ச்சி பெற்றார்.

இப்போது யேல் பல்கலைக் கழகத்தின் வானியல் பௌதிகப்
பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். அங்கு வருவதற்கு முன்பு டொரான்டோ கனடாவில்
(Canadian Institute for Theoretical Astrophysics, Toronto) சில மாதங்கள் டாக்டர்
முன்னோடிப் பயிற்சிக்கு விஜயம் (Postdoctoral Fellow Visits) செய்தார். ஓராண்டு
யேல் பல்கலைக் கழக விடுமுறை எடுத்து 2008-2009 தவணை ஆண்டுப் பங்கெடுப்பில்
ஹார்வேர்டு ராட்கிளி·ப் மேம்பாட்டுக் கல்விக் கூடத்தில் (Radcliffe Institute for
Advanced Study at Harvard) ஓர் ஆராய்ச்சி ஃபெல்லோஷிப்பில் ஈடுபட்டுள்ளார். மேலும்
பிரியா “கருமை அகிலவியல் மையத்தின்” இணைப்பாளராய் டென்மார்க் நீல்ஸ் போஹ்ர் கருமை
அகிலவியல் மையத்தில் (Associate of the Dark Cosmology Centre, Niels Bohr
Institute, University of Copenhagen, Denmark) இருந்து வருகிறார்.

இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-5-nasa-picture

பிரியா நடராஜன் தனது வானியல் பௌதிகத் துறை ஆய்வுகளை
ஆராய்ச்சி இதழ்களில் அடிக்கடி எழுதியும், மேடைகளில் உரையாற்றியும், கருத்தருங்குகளை
ஏற்படுத்தி விவாதித்தும் பங்கெடுத்து வருகிறார். 2008 அக்டோபர் 25 ஆம் தேதி விஞ்ஞான
வெளியீட்டில் (Science News) அசுரப் பெருநிறை கருந்துளைகள் (Ultra-massive Black
Holes) பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை அட்டைக் கட்டுரையாய் வரப் போகிறது. அவற்றின்
அரிய உட்கருத்துக்கள் மேலும் ஏற்கனவே டிஸ்கவர் இதழ், இயற்கை, வெளிநாட்டு இந்தியா
வார இதழ், ஹானலூலூ டைம்ஸ், டச் பாப்புளர் சையன்ஸ், ஹார்டேர்டு காஸெட், யேல் தினத்
தகவல் (Discover Magazine, Nature, India Abroad, Honolulu Times, Dutch Popular
Science, Harvard Gezette, Yale Daily News) ஆகியவற்றிலும் வந்துள்ளன.



இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! Fig-6-mid-size-black-holes



விஞ்ஞானப் பெண்மணி பிரியம்வதா நடராஜன் நோபெல் பரிசு
பெற்ற ஸர் சி.வி. இராமன், சுப்ரமணியன் சந்திரசேகர், கணித மேதை இராமானுஜன் போன்ற
இந்திய விஞ்ஞான மேதைகளின் வரிசையில் ஓர் உன்னத ஆராய்ச்சியாளாராய் அடியெடுத்து
வைக்கிறார். நோபெல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகளான மேரி கியூரி, புதல்வி ஐரீன்
கியூரி, (Marie Curie, Irene Curie) அணுப்பிளவை விளக்கிய லிஸ் மெய்ட்னர் (Lise
Meitner) ஆகியோர் அணியில் பிரியா தடம் வைக்கிறார். அவர் முதன்முதல் கண்டுபிடித்து
உலக விஞ்ஞானிகளுக்கு அறிவித்த “கருந்துளைப் பெருநிறை வரம்பு” உலக அரங்கில்
பிரமிப்பை உண்டாக்கி உள்ளது ! “இராமன் விளைவு” (Raman Effect), “சந்திரசேகர்
வரையறை” (Chandrasekhar Limit) போன்று “பிரியா வரம்பும்” (Black Hole Ultra-Mass
Limit) விஞ்ஞான வரலாற்றில் சுடரொளி வீசும் மைல் கல்லாக விளங்கப் போகிறது. ஒளிமயமான
எதிர்காலத்தில் பிரியாவுக்கு வெகுமதியாக வானியல் பௌதிக விஞ்ஞானத்துக்கு நோபெல்
பரிசும் கிடைக்கவும் பெரியதோர் வாய்ப்புள்ளது.



++++++++++++++++++++++++++

தகவல்:


ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Fri Jun 04, 2010 10:50 pm

அரிய தொகுப்பு நன்றி சம்சு அண்ணா

சம்சுதீன்
சம்சுதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 8220
இணைந்தது : 03/01/2010
http://shams.eegarai.info/

Postசம்சுதீன் Fri Jun 04, 2010 11:10 pm

ப்ரியதர்ஷி wrote:அரிய தொகுப்பு நன்றி சம்ஸ் அண்ணா

நன்றி தங்கை இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! 154550 இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! 678642 இந்தியாவின் முதல் தமிழ்ப்பெண் விஞ்ஞானி!!! 678642

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக