புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
32 Posts - 42%
heezulia
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
32 Posts - 42%
Dr.S.Soundarapandian
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 3%
prajai
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 3%
Manimegala
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
2 Posts - 3%
Saravananj
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
398 Posts - 49%
heezulia
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
26 Posts - 3%
prajai
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
5 Posts - 1%
sugumaran
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சுப்பிரமணிய சிவா Poll_c10சுப்பிரமணிய சிவா Poll_m10சுப்பிரமணிய சிவா Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்பிரமணிய சிவா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 02, 2010 12:05 am

நமது சுதந்திர போராட்ட வரலாறு இன்னமும் எழுதி முடிக்கப் படாத மகாகாவியமாகும். இதில் விடுபட்டுபோன பெயர்களும் நிகழ்ச்சிகளும் ஏராளம் எத்தனையோ வீரத் தியாகிகளின் பெயர்கள் ஒப்புக்கு இடம் பெற்றுள்ளதே தவிர முழுமையான தகவல்கள் வெளிச்சத்திற்கு வருவதில்லை.

சுப்பிரமணிய சிவா என்று அழைக்கப்பட்ட சுப்பிரமணிய சிவம் ராஜம் ஐயர் நாகலட்சுமி அம்மாள் தம்பதியர்க்கு 4-10-1884-ஆம் வருடம் மதுரை அருகே உள்ள வத்தலகுண்டு என்ற ஊரில் பிறந்தார் அவருக்கு ஞானாம்பாள், தைலாம்பாள் என்ற இரண்டு சகோதரிகளும், வைத்தியநாதன் என்ற சகோதரரும் உண்டு. இவருடைய இளமைப் பருவம் வறுமையில் கழிந்தது. 12-வது வயது வரை இவர் மதுரையில் படித்தார் பின்னர் திருவனந்தபுரம் சென்று அங்கே இலவச உணவு உண்டு படித்தார் பின்னர் கோயமுத்தூரில் ஒரு வருடம் பிரவேச தேர்வுக்காக படித்தார் இக்காலமே இவரின் தேச பக்தி அரும்பத் தொடங்கிய காலம். இக்காலத்தில் தென்னாப்பிரிக்காவில் நடந்து கொண்டிருந்த போயர் யுத்தத்தில் போயர்களின் வீரச்செயல்களை பாராட்டி ஆங்கிலத்தில் பல கவிதைகள் இயற்றியுள்ளார் ( அவற்றில் ஒன்றுகூட இப்போது நமக்கு கிடைக்கவில்லை ).

படிப்பு முடிந்தது குடும்பச் சுமை காரணமாக சிவகாசியில் போலீஸ் இலாகாவில் குமாஸ்தா வேலையில் சேர்ந்தார். சேர்ந்த மறுநாளே இந்த வேலையை விட்டு விலகிவிட்டார். இவர் பார்த்த முதலும் கடைசியுமான வேலை இதுவே. 1899-ல் இவருக்கும் மீனாட்சியம்மைக்கும் திருமணம் நடைபெற்றது. இல்லறத்தில் நுழைந்தாலும் தேச சேவை மறந்தாரில்லை.

1906-ஆம் ஆண்டு திருவனந்தபுரத்தில் ஆரிய சமாஜத்தை சேர்ந்த ஸ்ரீ தாகூர்க்கான் சந்திரவர்மா சொற்பொழிவாற்றினார் இதனை கேட்ட சுப்பிரமணிய சிவாவின் தேசபக்தி சுடர் அனலாய் எரியத் தொடங்கியது. இதன் நோக்கம் இளைஞர்களின் மனதில் தேசபக்தியை உருவாக்கி சுதந்திர உணர்வை தூண்டுவதே ஆகும். இதனை எதிர்த்த திருவாங்கூர் சமஸ்தானம் சிவாவை திருவாங்கூர் சமஸ்தானத்தில் இருந்து உடனே வெளியேற உத்தரவிட்டது. இதன் பின்னர் இவர் ஊர் ஊராகச் சென்று ஆங்கில அரசுக் கைதியாக பிரச்சாரம் செய்து வந்தார்.

சிவா மிகச் சிறந்த சொற்பொழிவாளர் இவரது பேச்சை கேட்ட பல இளைஞர்கள் தங்களை தேச சேவையில் இணைத்துக் கொண்டனர். சிவா தன்னுடைய திட்டங்களுக்கு இளைஞர்களும், தொழிலாளர்களுமே பக்க பலமாக இருப்பார்கள் என பலமாக நம்பினார் இவர்களுக்காக அயராது பாடுபட்டார். அப்போது தான் அவருக்கு வ.உ.சி.-யின் நட்பு கிடைத்தது. அதே காலத்தில் தான் நெல்லை வந்திருந்த மகாகவி பாரதியுடன் நட்பு கொண்டார். இம் மூவருடைய நட்பு தமிழக சுதந்திர போராட்ட வரலாற்றில் சிறப்பிடம் கொண்டது. இவர்கள் மூவரையும் தமிழகத்தின் தேசிய மூம்முர்த்தினர் என்றே குறிப்பிடலாம்.

வ.உ.சி. சிவா இணைந்து செயல்பட்டதால் நெல்லை மாவட்டம் விடுதலை போராட்டத்தின் உலைகளமாக திகழ்ந்தது. இதனை கண்டு பயந்த பிரிட்டிஷ் அரசு பல குற்றச்சாட்டுகளை சுமத்தி இருவரையும் சிறைக்கு அனுப்பி மகிழ்ந்தது. இது குறித்து வ.உ.சி தனது சுயசரிதையில்.

இவர் பிரசங்கம் செய்ததற்காகத்
தவம் புரியும்படிதச நல் வருடம்
தீவென் றியம்பினான் நீங்கிலேன் அதற்குக்
தாவில் உதவியை தந்ததற்காக
இருபது வருடமும் இயம்பிய நெல்லையில்
ஒரு பிரசங்கம் உரைத்ததற்காக
இருபது வருடம் தீருவனம்
கற்றோர் மனமும் கலங்கிடச் சொன்னான்
இறையும் கலங்கா தென்னும் கவர்ந்துள
இறையின் கொடையென ஏற்றேன்.

என்று குறிப்பிடுகிறார்.

பின்னால் செய்து கொண்ட மேல் முறையீட்டினால் இருவருக்கும் தண்டனை குறைக்கப்பட்டது. சிவாவுக்கு 10 வருட தண்டனை 6 வருடமாக குறைக்கப்பட்டது. சிவா 2-11-1912-ல் விடுதலை அடைந்தார். விடுதலைக்குப் பின் சென்னையில் குடியேறினார். சென்னையில் பிரபஞ்சமித்திரன் என்ற வாரபத்திரிகையையும், ஞானபானு என்ற மாத பத்திரிகையையும் தொடங்கினார். ஞானபானு-வில் பாராதியாரின் படைப்புகளை தொடர்ந்து வெளியிட்டார். பாண்டிச்சேரியில் இருந்த பாரதிக்கு ஞானபானு சுதந்திர போராட்ட ஆயுதமாக திகழ்ந்தது. பாரதி பல புனைப் பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதி தேசிய உணர்வு ஊட்டினார். குத்தலும், கேலியும், கிண்டலும் நிறைந்த அன்றைய ஜமீன்தார்களையும், அவர்களை அண்டிப் பிழைத்த புலவர் கூட்டத்தினையும் தோலுரித்து காட்டிய சின்ன சங்கரன் கதை ஞானபானு-வில் வெளிவந்த பாரதியின் படைப்புகளில் குறிப்பிட வேண்டிய ஒன்று. சுப்பிரமணிய சிவாவின் சென்னை வாழ்க்கை மிகுந்த நெருக்கடியில் தான் கழிந்தது. இந்நிலையில் அவருடைய மனைவி. மீனாட்சியம்மை உடல் நிலை மோசமாகி 15-5-1915-ல் சென்னையில் காலமானார். மனைவி இறந்தபின் சிவாவின் சுற்றுப் பயணங்கள் மேலும் அதிகப்பட்டன. ஊர் ஊராக சென்று மக்களுக்கு தேச உணர்வையூட்டினார். பொது கூட்டமாக நடத்தாமல் மக்கள் எங்கு கூட்டமாக இருக்கிறார்களோ அங்கே பேசினார்.

1919-ல் மீண்டும் இந்திய தேசாந்திரி என்ற பத்திரிகையை தொடங்கினார். ஆரம்பம் முதலே சுப்பிரமணிய சிவா தொழிலாளர்பால் மிகுந்த அன்புடையவர் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு சங்கம் வைத்து ஒவ்வொரு செயலிலும் ஒற்றுமையுடன் செயல் பட வேண்டும் என்ற கருத்துடையவர். குறிக்கோளை அடைய இருவழிகள் உள்ளன. ஒன்று இயந்திரங்களை சேதப்படுத்தி நஷ்டப்படுத்துவது, இரண்டு தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்வது. இதில் இரண்டாவது வழியையே பின்பற்ற வேண்டும் என்ற கருத்துடையவர் சிவா. இதன் அடிப்படையில் 1920-ல் சென்னையில் நடைபெற்ற ட்ராட் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின் போது தீவிர ஆர்வம் காட்டி தொழிலாளர்களுக்காக பகலிரவு பாராது உழைத்தார்.

1920-ஆம் வருடம் கல்கத்தாவில் லாலா லஜபதி ராயின் தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் சம்பந்தமாக நடைபெற்ற சிறப்பு. மாநாட்டில் கலந்து கொண்டு விபின் சந்திர பாலர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவாக நின்றார். சிவாவின் உள்ளத்தில் காந்தியின் தாக்கமும் படியத் தொடங்கியது. தமிழ் நாடு என்ற பத்திரிகையில் திலகர் - காந்தி தர்சனம் என்ற சிறு நாடகத்தையும் சிவா எழுதியுள்ளார். சிவா வாழ்ந்த காலங்களில் நடைபெற்ற மாநாடுகள், போராட்டங்கள் அனைத்திலும் சிவா தனது பங்கை முழுமையாக செலுத்தியுள்ளார். அவர் கலந்து கொள்ளாத மாநாடுகளோ, போராட்டங்களோ இல்லை என்றே சொல்லலாம். அவற்றிலெல்லாம் சிவாவின் எரிமலைப் பிரசங்கங்கள் இடம் பெற்றுள்ளன. சிவா மிகுந்த துனிச்சல் மிக்கவர். காந்தீயத்தின்பால் அவர் உள்ளம் சென்றாலும் அவரின் தீவிரவாதக் தன்மை என்றுமே அடங்கியதில்லை சிவாவின் பிரசங்கங்கள் மக்கள் மத்தியில் கிளர்ச்சியை ஏற்படுத்தியதால் அரசாங்கம் இவருக்கு பல வழிகளில் தொல்லையளித்தது. 1921-ம் வருடம் இரண்டரை வருடம் கடுங்காவல் தண்டனை வழங்கியது. பின்னர் உவாரங்களில் விடுதலை செய்து விட்டது. பின்னர் 27-11-1922-ல் ஒரு வருட சிறை தண்டனை அளித்தது. கொடுமையான சிறை வாழ்க்கை காரணமாக அவருக்கு தொழுநோய் ஏற்பட்டது. இன்றைய நிலை போல் இல்லை தொழு நோயாளியின் நிலைமை இதற்கு சுப்பிரமணிய சிவாவின் நிலைமையும் ஒரு சாட்சி, அவருடைய நோயை காரணம் காட்டி சிவாவை ரயிலில் பயணம் செய்யக் கூடாதென்று அரசு தடைவிதித்தது. இதனைக் கண்டு கலங்கவில்லை சிவா, கட்டை வண்டியிலும், கால் நடையாகவும் தன் பயணத்தை மேற்க்கொண்டு மக்களுக்கு அந்நிய ஆட்சியின் கொடுமைகளை விளக்கி பிரச்சாரம் செய்தார். பாரத தேசத்தை கடவுளாக கொண்ட சிவா பாரத மாதாவுக்கு கோவில் கட்ட தீர்மானித்தார். தருமபுரி அருகே உள்ள பாப்பாராபட்டியில் உள்ள தனது ஆசிரமத்தில் தேசபந்து சித்தரஞ்சன் தாலைக் கொண்டு 23-1-1923-ல் அடிக்கல் நாட்டினார். அந்த ஆலயத்தில் பல தேச பக்தர்களின் இலைகளை நிறுவ நினைத்திருந்தார். அவற்றுள் வ.உ.சி. சிலைக்கு முதல் நிலை கொடுக்கவும் திட்டமிட்டிருந்தார்.

நோயின் கொடுமையிலும் ஓயாத உழைப்பு நாடு அந்நியரின் ஆதிக்கப் பிடியிலிருந்து விடுவிக்கப் படவேண்டுமென்று அயராது பாடுபட்டார் இதனால் அவரது உடல் நலம் குன்றியது. இந்நிலையில் 1925-ல் கான்பூரில் நடைபெறவிருந்த கம்யூனிஸ்ட்கட்சினரின் முதலாவது மாநாட்டில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். உடல் நிலை தேறியவுடன் திருநெல்வேலி வழியாக மேற்கு கடற்கரை யோரமாக பம்பாய் சென்று அங்கிருந்து கான்பூரில் நடைபெறும் பொது கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டமிட்டிருந்தார். சிவாவின் உடல் நிலை நாட்பட நாட்பட மிகவும் மோசமடைந்து வந்ததினால் அவரால் திட்டமிட்டபடி கான்பூர் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. 22-7-1925-ல் தனது சீடர் சுந்தர பாரதியின் துணையுடன் பாப்பாரபட்டியில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்து சேர்ந்தார். சுப்பிரமணிய சிவாவிற்காக எதையும் செய்யத் துணிந்த வீரவாலிபர்களும், எதையும் தரத் தயாராக இருந்த செல்வந்தர்களும் பாப்பாராட்டியில் இருந்தனர். இவர்களிடையே வந்து சேர்ந்த மறுநாள் அதாவது 23-7-1925 வியாழக்கிழமை காலை 5 மணிக்கு சுப்பிரமணிய சிவா தனது 41-வது வயதில் தனது இவ்வுலக வாழ்வை நீந்தார். சிவா வாழ்ந்த 40 வயதிற்குள் 400 வருட சாதனைகளை செய்து முடித்துள்ளார். தமிழகத்தின் பல நகரங்களில் சிவாஜி நாடகம் மூலமாக தேச பக்தியை பரப்பினார் அவரும் நாடகத்தில் பங்கேற்று நடித்துள்ளார். ஸ்ரீ ராம கிருஷ்ணர் மீதும் விவேகானந்தர் மீதும் ஆழ்ந்த பற்று கொண்ட சிவா அவர்களின் நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கில் ஏகாதிபத்தியத்தை எதிர்த்து புரட்சி செய்த சுப்பிரமணிய சிவா பல கனவுகளுடன் மறைந்து விட்டார்.



சுப்பிரமணிய சிவா Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக