புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
63 Posts - 40%
Dr.S.Soundarapandian
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
4 Posts - 3%
Karthikakulanthaivel
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
2 Posts - 1%
prajai
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
2 Posts - 1%
Manimegala
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
2 Posts - 1%
சிவா
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
429 Posts - 48%
heezulia
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
29 Posts - 3%
prajai
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
5 Posts - 1%
sugumaran
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_m10திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருகோணமலைத் தமிழ் மந்திரமாலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:47 pm

பதினேழாம் நூற்றாண்டுத் தொடக்ககாலம் ஈழத்துத் தமிழர்களுக்கு அழிவின்மேல் அழிவு ஏற்பட்டுக் கொண்டிருந்த காலம். கி.பி.1621 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலி சிறை பிடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டதும், இலங்கையிலே தமிழ் அரசு என்று ஒன்று இல்லாது ஒழிந்தது. கி.பி.1622 ஆம் ஆண்டு திருகோணமலையிலிருந்த பிரசித்திபெற்ற சைவாலயமான கோணேஸ்வரம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது. இந்த அழிவுகளைச் செய்தவர்கள் போர்த்துக்கேயர்கள். இந்த அழிவுகளோடு ஈழத்தமிழர் பெருமை ;பொய்யாய்க் கனவாய்ப் பழங்கதையாய்ப் போகாமற் காப்பாற்றியமையிலும். போர்த்துக்கேய வரலாற்றறிஞர் டி குவெய்றோஸ்(de Queyroz) என்பவருக்கு ஒரு முக்கிய பங்குண்டு.

குவெய்றோஸ் எடுத்துக்காட்டும் கோணேஸ்வரக் கோவிலின் பெருமை இக்காலத்தவர் எவரையும் வியப்பில் ஆழ்த்த வல்லது. வடஇந்தியா, தென்னிந்தியா முழுவதிலுமுள்ள முக்கியமான இந்துக்கோயில்களைக் குறிப்பிடும் குவெய்றோஸ், அவை யாவற்றிலும் பார்க்க, கோணேஸ்வரம் கூடிய அளவு யாத்திரிகர்களைக் கவர்ந்ததென்று கூறியுள்ளார். கத்தோலிக்கர்களிடையே உரோமாபுரி பெற்றிருந்த உயர்தனிச் சிறப்பை, இந்துக்களிடையே திருகோணமலை பெற்றிருந்ததென்றும் அவர் கூறியுள்ளார்.

கோணேஸ்வரத்தின் பெருமையை விரித்துரைக்கும் தமிழ்நூல்கள் சில உள. திருக்கோணாசலபுராணம், தட்சிணகைலாயபுராணம், கோணேசர்கல்வெட்டு என்பனவே அவை. இவற்றுள் முதல் இரண்டும் தலபுராணம் என்ற இலக்கிய வகையைச் சேர்ந்தவை. இலங்கையிலே தோன்றிய தலபுராணங்களுள் இவையே மிகவும் பழையவை. பதின்மூன்றாம் நூற்றாண்டிலே, தமிழ்நாட்டிலே தோன்றத்தொடங்கிய இந்த இலக்கியவகை நாயக்கர்காலத்திலும் ஐரோப்பியர்காலத்திலும் நூற்றுக்கணக்கான தலபுராணங்கன் தமிழ்நாடெங்கும் தோன்ற வழிவகுத்தது. தலபுராணங்கள் பாடப்பட்டுள்ளமை கோணேஸ்வரத்துக்குத் தனிச்சிறப்பைத் தருகின்ற போதிலும், அந்நூல்களிற் கையாளப்பட்டுள்ள பௌராணிக நடை ஒரே மாதிரியான கட்டுக்கதைகளையும் கற்பனையையும் பெரும்பாலும் கையாள்வதால், வரலாற்று மூலாதாரங்களென்று அவை இக்கால அறிஞர்களாலே பெரிதும் போற்றப்படுவதில்லை.

திருக்கோணாசலபுராணம் என்பது திருகோணமலையின் புராணமென விரியும். கோணாசலமென்பது கோணமலையென்பதன் வடமொழிவடிவம். தட்சிணகைலாயபுராணம் என்ற பெயர் நுணுகி நோக்கத்தக்கது. சிவபெருமான் நிரந்தரமாக உறைந்து அருளாட்சி செய்யுமிடம் கைலாயமென்பது சைவர்களின் பொதுவான நம்பிக்கை. இமயமலையின் சிகரங்களுள் ஒன்றாகத் திபெத்து நாட்டிலே அமைந்து, இன்று மக்கள்சீனத்திலே கைலாயம் காணப்படுகிறது. பாரதத்தின் வடஎல்லைக்கு அப்புறம் இந்தக் கைலாயம் அமைந்திருப்பதனால். இது வடகைலாயமாயிற்று. சிவபெருமான் பிரியமுடன் உறைந்து பேரருளாளனாக விளங்கும் தென்திசைக்குன்றைத் தென்கைலாயமாகப் போற்றும் மரபு தோன்றியிருக்கிறது. திருகோணமலையைத தென்கைலாயமாகப் போற்றும் தட்சிணகைலாயபுராணம் தோன்ற முன்பே, இரண்டு இடங்கள் தென்கைலாயமெனப் பெயர் பெற்றுவிட்டன. பௌராணிகர் வழக்கம் போல, ஒரு புனைகதை கூறியிருக்கின்றனர். முதலிலே தென்கைலாயமெனப் பெயர்பெற்றது காளத்திமலை போலவே தெரியவருகிறது. தமிழ்நாட்டின் வடஎல்லையாகக் கொள்ளப்பட்ட வேங்கடம் திருமாலுக்குரிய திருப்பதியானதால், சற்றுத் தெற்கிலுள்ளதும் கண்ணப்பர் புராணத்தாற் புனிதமடைந்ததுமான காளத்தி தென்னாட்டுக் கைலாயம் என்ற பொருளிலே தென்கைலாயமாகியது. தமிழ்நாட்டுச் சைவத்தின் வளர்ப்புப் பண்ணையாகிய காவிரிக்கரைக்கு அண்மையில் அமைந்ததும் பாண்டிநாட்டின் வடஎல்லைக்குக்கிட்ட உள்ளதுமான திருச்சிராப்பள்ளிக்குன்று, ஆங்கு கோயில் கொண்டுள்ள சிவபிரான் தாயுமானவரென்பதை விளக்கப் பல கதைகளையுங் கொண்டு, இரண்டாவது தென்கைலாயமாகியது. திருகோணமலை தமிழ்ச் சைவர்களின் மூன்றாவது தட்சிண கைலாயமாக மாறி, முதற்பெருங்கோயிலென்று சிலர் கொள்ளத் தக்கதாக உருப்பெற்ற வரலாறு இதுவரை தெளிவுபடவில்லை.

கோணேஸ்வரம்பற்றிய நூல்களிலே, கோணேசர் கல்வெட்டு தனித்துவமானது. மூன்று நூல்களும் யாழ்ப்பாணத்துத் தமிழரசர்களான ஆரியச்சக்கரவர்த்திகள் காலத்தவை என்பது பொதுவான நம்பிக்கை. ஏனையவை எவ்வாறாயினும், கோணேசர் கல்வெட்டு திருகோணமலைக் கோணேசர் கோவில் அழிந்து தம்பலகாமம் கோணேசர் கோவில் உருப்பெற்ற காலத்திலே இயற்றப்பட்டதாகல் வேண்டுமென்பதை முன்பு ஒரு கட்டுரையில் விளக்கியுள்ளோம். இந்த நூல் ஒரு கால ஏடு (chronicle) அமைப்பையுடையது. கல்வெட்டு என்ற பெயரை முதன்முதலிலே நூற்பெயராகப் பயன்படுத்திய இலக்கியம் இதுவாகவே இருக்கக் கூடும். கோணேஸ்வரர் கோவிலிலே கல்வெட்டுகளும் பிற ஆவணங்களும் பெருந்தொகையானவை இருந்து அழிந்திருக்க வேண்டும். தப்பிப் பிழைத்த ஆவணங்களையும் கோவிலோடு தொடர்புடையோரினது நினைவாற்றலினையும் துணைக்கொண்டே கோணேசர் கல்வெட்டைக் கவிராசர் உருவாக்கினார் என்று கொள்ளவேண்டும். கோணேஸ்வரத்தைப் பிரமாண்டமான சைவநிறுவனமாகக் கோணேசர்கல்வெட்டுச் சித்திரிப்பது, ‘உண்மை வெறும் புகழ்ச்சி இல்லை’, என்பது குவெய்றோஸின் வருணனையிலிருந்து தெளிவாகிறது.

தமிழ்நாட்டிலுள்ள சைவக்கோவில்களைப்பற்றிய தொடக்ககாலக் குறிப்புகள் பெரும்பாலும் சைவசமய குரவர் இயற்றிய பாடல்களிலேயே இடம்பெறுகின்றன. ஈழத்துச் சிவத்தலங்களாகிய திருகோணமலை, திருக்கேதீச்சரம் என்பனபற்றிய குறிப்புகள் அதே சைவத்திருமுறைகளில் இடம்பெற்றுள்ளன. கி.பி. ஏழாம்நூற்றாண்டில் வாழ்ந்த திருஞானசம்பந்தமூர்த்திநாயனார் இவ்விரு தலங்களையும் பாடியுள்ளார். திருகோணமலைபற்றி இன்று எமக்குக் கிடைக்கும் மிகப்பழைய தமிழ் இலக்கியச்சான்று சம்பந்தரது திருப்பதிகமேயாகும். கோணேஸ்வரத்தின் பிற்காலப்பெருமைக்குச் சம்பந்தர் பதிகத்திலே ~வித்து| இருக்கிறதா என்று பார்க்க வேண்டும். பப்பத்துப் பாடல்களைக் கொண்ட பதிகங்களைப் பாடிய பின்பு அப்பதிகம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு திருக்கடைக்காப்பு (முத்திரைக்கவி) பாடுவது சம்பந்தரதும் சுந்தரமூர்த்தி நாயனாரதும் தனித்தன்மை. பதிகத்தின் தனிச்சிறப்பு அம்முத்திரைக்கவிகளிலே விளங்கித்தோன்றும். பதிகத்தின் இயல்பு, பதிகத்தின் பயன் என்பன பற்றி அவ்வப்பதிகத்தை ஆக்கியோன் கொண்டுள்ள கருத்தை அவ்வம் முத்திரைக்கவிகளிலே காணலாம். திருகோணமலைத் திருப்பதிகத்தின் முக்கியத்துவத்தைச் சம்பந்தரின் முத்திரைக்கவியை நுணுகி நோக்குவதன்மூலம் இதுவரை எவரும் எடுத்துக்காட்டியதாகத் தெரியவில்லை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:47 pm

திருகோணமலைப் பதிகத்தின் இயல்பைச் சம்பந்தர் ‘செந்தமிழார் மாலை யீரைந்து’ என்று வருணித்துள்ளார். முத்திரைக்கவிகளிலே சம்பந்தர் தமிழோடு தம்மை நெருக்கமாகப் பிணித்துள்ளார் என்பது பொதுவான உண்மை. அவர் தமிழோடு தம்மைத் தொடர்புபடுத்துவதோடு மட்டுமல்லாமல் பதிகத்தோடும் தம்மைத் தொடர்புபடுத்துவதும் உண்டு. அவர் தம்முடைய பதிகங்களைக் குறிக்க, ‘செந்தமிழ்’, ‘தமிழ்மாலை’, ‘செந்தண்டமிழ்’, ‘செந்தமிழின் மாலை’, ‘செந்தமிழ் மாலை’, என்னுந்தொடர்களைப் பல இடங்களிலும் பயன்படுத்தியுள்ளபோதிலும், ‘செந்தமிழார் மாலை யீரைந்து’, என்ற தொடரைப் பயன்படுத்தவில்லை. ஆர்(தல்) – நிறை(தல்); என்று பொருள்படும். என்ன நிறைதல் என்பதற்கு (செந்தமிழ்) மொழி நிறைதல் என்றே பொருள்கொள்ள வேண்டும். நிறைமொழி மந்திர ஆற்றலுள்ள மெரழியாகும். பதிகத்திலுள்ள செய்யுள்கள் பத்தும் இணைந்து மாலையாக உருப்பெற்றுள்ளன. இவற்றை உற்று நோக்கும்போது, சம்பந்தரின் மேற்படி பதிகம் செந்தமிழில் ஆக்கப்பட்ட மந்திரம் என்றே கொள்ளத்தக்கது.

இந்தப் பதிகத்தின் பயனைச் சுட்ட வந்த சம்பந்தர், ‘உரைப்பவர் கேட்பவர் உயரந்தோர் சுற்றமுமாகித் தொல்வினை யடையார் தோன்றுவர் வானிடைப் பொலிந்தே,’ என்று பாடியுள்ளார். சம்பந்தர் பாடியனவாக 384 பதிகங்களும் சுந்தரர் பாடியனவாக 100 பதிகங்களும் இன்று கிடைத்துள்ள போதிலும் எந்த முத்திரைக்கவியிலும் இவ்வளவு சிறந்த பயன் கூறப்படவில்லை. அநேகமாக, எல்லா முத்திரைக்கவிகளிலும் அவ்வப்பதிகத்தை உரைப்பவருக்கு ஒரு பயன் கூறப்படுகிறது. மிகச்சில முத்திரைக்கவிகளலே இரண்டு பயன்கள் கூறப்படுகின்றன. சம்பந்தர் திருத்தருமபுரத்திலே பாடிய யாழ்மூரிப்பதிகத்தில்மட்டும், ‘ இந்நெடு நல்லுல கெய்துவர், எய்திய போகமும் உறுவர்கள், இடர் பிணி துய ரணைவிலரே,’ என்று மூன்று பயன்கள் கூறப்பட்டுள்ளன. பதிகத்தை உரைப்பவரோடு கேட்பவருக்கும் பயன் கிடைக்குமென்ற கூற்று முத்திரைக்கவியில் மிக அருமையாகவே இடம்பெறுகிறது. சம்பந்தரது திருஅம்பர்மாகாளத் திருப்பதிகத்தில்மட்டும் ‘தமிழ்மாலை கூறுவாரையுங் கேட்கவல்லாரையும் குற்றங்கள் குறுகாவே’, என்பது இடம்பெறுகிறது. இந்தப்பின்னணியில் வைத்துப்பார்க்கும்போது, திருகோணமலைப்பதிகத்தின் சிறப்பு விளங்கித் தோன்றுகிறது. மேற்படி பதிகத்தின் முத்திரைக்கவியிலே உரைப்பவருக்கும் கேட்பவருக்கும், ‘உயர்ந்தோர்’ ‘தொல்வினையடையார’, ‘தோன்றுவர் வானிடைப் பொலிந்தே’, என்று மூன்று பயன்களைக்

கூறும் சம்பந்தர் வேறு எங்கும் இல்லாத புதுமையாக உரைப்பவர் கேட்பவர் சுற்றத்தினரும் ஈற்றிலுள்ள இரண்டு பயன்களையும் பெறுவரெனக் குறிப்பிட்டுள்ளார். கைலாயம், சிதம்பரம், திருவாலவாய், திருவாரூர், இராமேசுவரம் முதலியனவாகப் பல தலங்கள்மீதும் பதிகங்கள் பாடியுள்ள சம்பந்தர், சம்பந்தப்பட்ட முத்திரைக்கவிகளிலே, திருகோணமலைப் பதிகத்தை உயரத்திய அளவு, வேறு எப் பதிகத்தையும் உயர்த்தவில்லை. சம்பந்தர் கண்களிலே, திருகோணமலை அளவு உயர்ந்த தலம் உலகிலேயே இல்லை: கைலாயம்கூட ஈடாகாது.

திருகோணமலையைச் சம்பந்தர் ஏன் இவ்வளவு சிறந்த தலமாகக் கருதினாரென்பதற்கு விளக்கம் தரவேண்டும். சைவ, வைணவ பக்தியியக்கங்களிலே, சமணர்களிடமிருந்தும் பௌத்தர்களிடமிருந்தும் தமிழர்களை மீட்பதற்கு சம்பந்தர் கடினமாக உழைத்ததற்கு அவருடைய திருப்பதிகங்களே அகச்சான்றுகளாக உள்ளன. சமணர்களுக்கு எதிராக அவர் உழைத்தமை பெரியபுராணத்திலே விரிவாகக் கூறப்பட்டுளளது. பௌத்தர்களுக்கு எதிராக அவர் உழைத்தமை ஒரு சிறிதே அங்கு கூறப்பட்டுள்ளது. இலங்கைப் பௌத்தமத குருமார் முழு இலங்கையையும் பௌத்த சிங்கள நாடாக ஆக்குவதற்கு கி.பி. ஐந்தாம் நூற்றாண்டளவிலே, மகாவம்மிசம் என்னும் வரலாற்றுப்புனைகதையை வரலாறு போல எழுதிச் சூழ்ச்சி செய்தனர். பௌத்தரல்லாத தழிழர்களுக்கு இலங்கையிலே அல்லது இலங்கையின் ஒரு பகுதியிலே இருந்த உரிமையைப் பலப்படுத்தவே கி.பி. ஏழாம் நூற்றாண்டிலே சம்பந்தர் இப்படிப் பாடியிருக்கலாம்போலத் தோன்றுகிறது. சம்பந்தர் காலத்திற்குமுன்பு, கோணேஸ்வரம் கூடகோபுரங்களைக்கொண்டு பெரிய நிறுவனமாக இருந்ததெனக் கொள்வது வரலாற்று விரோதமானது. சம்பந்தரும் இறைவனையும் இயற்கைச் சூழலையும் பாடியுள்ளாரே தவிர கோவில் நிறுவனத்தைப்பற்றி ஒரு செய்தியும் தரவில்லை. சம்பந்தர் காலத்திலே தமிழ்நாட்டிலே கற்கோவில்களே இருக்கவில்லை. பல்லவர்கால இறுதியிலேயே தமிழ்நாட்டிலே கற்கோவில்கள் தோன்றத் தொடங்கின. சோழப்பெருமன்னர் காலத்திலும் அதற்கு முன்னும்;பின்னுமாகவே தமிழ்நாட்டிலே பாடல்பெற்ற தலங்கள்பல கற்கோவில்களாக்கப்பட்டன. முதலாம் இராசராசசோழனும் முதலாம் இராசேந்திரசோழனும் கி.பி. பதினோராம் நூற்றாண்டிலே நம்பியாண்டார் நம்பியைக் கொண்டு சைவத்திருமுறைகளைத் தொகுத்து வெளியிட்டதன் பின்பே பாடல்பெற்ற தலங்களைக் கற்றளிகளாக மாற்றும் பணி உத்வேகம் பெற்றது. மேற்குறிப்பிட்ட மன்னர் இருவரும் முறையே கட்டி எழுப்பிய தஞ்சைப்பெருவுடையார் கோவிலும் கங்கை கொண்ட சோழீச்சரமும் முக்கியமான பிற கோவில்கள் பிரமாண்டமான கோவில்களாக எழ வழிகாட்டின.

கோணேசர்கல்வெட்டை இந்தப்பின்னணியிலே வைத்து நோக்கினாலே அங்குள்ள பெரிய புதிர் விடுபடும். கோணேஸ்வரத்தின் வளர்ச்சிக்குப் பணியாற்றிய பலரையும் அக்கல்வெட்டுக் குறிப்பிடும்போதிலும் குளக்கோட்டன் என்ற சோழ இளவரசனுக்கும் கயவாகு என்ற சிங்கள மன்னனுக்கும் அது அதீத முக்கியத்துவம் வழங்கியுள்ளது. சோழப் பேரரசின் ஆட்சியை இலங்கையிலிருந்து ஒழித்த முதலாம் விசயபாகுவின் பெயரனான, பன்னரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டாம் கயவாகு கோணேசர்கல்வெட்டுக் குறிப்பிடும் கயவாகுவாக இருக்க வேண்டுமென்பது இன்று பல்வேறு சான்றுகளால் உறுதிப்படுகிறது. கோணேசர்கல்வெட்டின் தன்னிகரில்லாத்தலைவன் குளக்கோட்டனே. குளக்கோட்டன் பிரமாண்டமானதாகக் கட்டி எழுப்பிய கோவிலைப் பெரிதாக்கியவனும் ஒழுங்குபடுத்தியவனுமே கயவாகு என்று தெளிவாகக் கல்வெட்டிலே கூறப்பட்டுள்ளது. எனவே, குளக்கோட்டன் இந்தக் கயவாகுவுக்கு முற்பட்டவனாக இருக்க வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:48 pm

குளக்கோட்டனைச் சரியாக இதுவரை அடையாளங்காண முடியாமையால், கோணேசர்கல்வெட்டின் வரலாற்றுப் பெறுமதியை உணரமுடியாதநிலை

இருந்துவந்திருக்கிறது. கந்தளாய், அல்லை முதலிய குளங்களையும் கட்டியவன் குளக்கோட்டனெனக் கோணேசர்கல்வெட்டுக் கூறுவதனாலும் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டிலே குளக்கோட்டன் இலங்கைக்கு வந்தானென யாழ்ப்பாணவைபவமாலை கூறுவதனாலும் மட்டக்களப்புமான்மியம் குளக்கோட்டனைப்பற்றியே பிரஸ்தாபிக்காமல், குளக்கோட்டன் இயற்றியதாகக் கூறப்படும் திருப்பணிகள் யாவற்றையும் மகாசேனன் என்ற சிங்கள மன்னனே இயற்றியதாகக் கூறியுள்ளது (மட்டக்களப்புமான்மியம் - கு.ஓ.ஊ. நடராசா பதிப்பு, 1962). அண்மைக்காலத்திலே வரலாற்றாசிரியர்கள் குளக்கோட்டனை அடையாளங்காண எடுத்த முயற்சிகளிலே இரண்டு சிறப்பாகக் குறிப்பிடத்தக்கன. கலாநிதி செல்லத்துரை குணசிங்கம் திருகோணமலைப் பிரதேசத் தொல்லியல் ஆய்விலும் வரலாற்றாய்விலும் சில ஆண்டுகள் தீவிர ஈடுபாடு காட்டிவந்தவர். கோணேஸ்வரம்(1973) என்ற அவருடைய நூலிலே குளக்கோட்டன் பதின்மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவன் என்ற தம்முடைய முடிபுக்கு ஆதரவாகப் பல சான்றுகளைத் தந்துள்ளார். தட்சிணகைலாய புராணத்திலே குளக்கோட்டன் சோழகங்கனெனக் குறிக்கப்பட்டுள்ளதை எடுத்துக்காட்டும் அவர் பதின்மூன்றாம் நூற்றாண்டு இலங்கை வரலாற்றிலே சோழகங்கன் என்னும் பெயருடையோர்; சிலர் திருகோணமலையோடு தொடர்புடையோராகவும், தொடர்பில்லாதவராகவும் இடம்பெறுமாற்றைச் சுட்டியுள்ளார்.

யாழ்ப்பாண அரசின் வரலாற்றை ஆராய்ந்து எழுதிய பேராசிரியர் பத்மநாதன் (The Kingdom of Jaffna: 1978) குளக்கோட்டனை அடையாளங்காண எடுத்த முயற்சி அடுத்துக் குறிப்பிடத்தக்கது. குணசிங்கத்தின் வாதத்தைப் பொதுவாக ஏற்றுக் கொள்ளும் பத்மநாதன,; குளக்கோட்டன் புதினோராம் நூற்றாண்டுக்கு முந்தியவனாக இருக்கமுடியாதென்றும் குளக்கோட்டனைப்பற்றிய கதைகளின் அடிப்படையிலே சோழ இலங்கேசுவரனின் பணிகளும் இடம்பெற்றிருப்பன போலத் தோன்றுகின்றன என்றும் புதிய கருத்துகளை முன்வைத்துள்ளார். ‘கோணேசர் கல்வெட்டுப் பற்றிய நுண்ணாய்வு’ (சிவத்தமிழ் ஆராய்ச்சிக் கட்டுரைகள், 1985) என்ற எம்முடைய கட்டுரையிலும் குணசிங்கத்தின் கருத்தை மறுக்க முடியாத நிலையிலே சோழப்பேரரசர் இலங்கையை ஆண்ட காலத்திலே செய்திருக்கக்கூடிய திருப்பணிகள் யாவும் கோணேசர்கல்வெட்டிலே குளக்கோட்டன் திருப்பணிகளுக்குள் அடக்கமாகிவிட்டன என்ற கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

சோழ இலங்கேசுவரனைப் பற்றிய அறிவு காலப்போக்கிலே வளர்ந்துவந்துள்ளது. சோழன் முதலாம் இராசாதிராசன் காலத்திலே(1018-54) இலங்கையர்க்கிறைவன் என்பான் நியமிக்கப்பட்டதாக, அவன் மெய்க்கீர்த்தி கூறுவதால், சோழ இலங்கேசுவரன் என்பான் அவனுடைய பிரதிநிதியாக இலங்கையை முடிசூடி ஆள்வதற்கு நியமிக்கப்பட்டவனென்ற கருத்து பேராசிரியர் இந்திரபாலாவினால் முன்வைக்கப்பட்டது (கந்தளாயிற் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சோழ இலங்கேஸ்வரன் காலத்துக் கல்வெட்டு – பாவலர் துரையப்பாபிள்ளை நூற்றாண்டுவிழாமலர், 1972). இதுவரை கிடைத்துள்ள சோழ இலங்கேசுவரனது கல்வெட்டுகள் இரண்டும் திருகோணமலை மாவட்டத்திலுள்ள கந்தளாயிலும் மானாங்காணியிலுமே கிடைத்துள்ளன. இவற்றை நுணுகி ஆராய்ந்த குணசிங்கம் சோழ இலங்கேசுவரனது கந்தளாய்ச் சாசனத்திற் குறிப்பிடப்பட்ட பத்தாவது ஆட்சியாண்டு கி.பி. 1047 ஆம் ஆண்டென்றும் சோழ இலங்கேசுவரன் முதலாம் இராசேந்திரன் (1012-1044); பேரரசனாக இருந்த காலத்திலேயே நியமனம் பெற்றிருக்க வேண்டுமென்றும் முடிவுகட்டினார்.(Two Inscriptions of Cola Ilankesvaradeva1974). தமிழ்நாட்டிலே அண்மையில் வெளிவந்த நூலொன்றிலே சோழ இலங்கேசுவரனை அடையாளங் காண்பதிலே புரட்சிகரமான முன்னேற்றம் காணப்படுகிறது. முதலாவது இராசேந்திரனுடைய நான்காவது மகனே சோழ இலங்கேசுவரனெனக் கொள்ளும் சேதுராமனென்னும் அறிஞர் அவன் சுமார் கால் நூற்றாண்டுக் காலம் இலங்கையை ஆண்டானெனவும் அதன்பின்பு தமிழகம் திரும்பி வீரராசேந்திரசோழன் என்ற பெயருடன் சோழப்பேரரசனானானெனவும் அடையாளங்கண்டுள்ளார் ( Chola Pandyan –Chola Gangan – Chola Lankesvaran – Chola Keralan, Place Name Society of India, 1986).

சேதுராமனது நிலைப்பாட்டிலிருந்து பார்க்கும்போது சோழ இலங்கேசுவரன் 1037-1063 ஆண்டுக்காலங்களிலே முதலிலே பேரரசனான தந்தையின் பிரதிநிதியாகவும் பின்பு பேரரசர்களானேரரும் தமையன்மானேரருமான முதலாம் இராசாதிராசன், இரண்டாம் இராசேந்திரன் ஆகியோரின் பிரதிநிதியுமாக இலங்கையை ஆண்டு, காலியாக இருந்த சோழப்பேரரசுச் சிம்மாசனத்தை நிரப்புவதற்காக 1063 ஆம் ஆண்டு சோழநாடு திரும்பியிருக்கிறான். வீரராசேந்திர சோழன் என்ற பெயர் சோழஇலங்கேசுவரன் சோழப்பேரரசனானபோது பெற்ற சிம்மாசனப் பெயராகவே இருக்கவேண்டும். இவனுடைய இயற்பெயர் தவறிவிட்டதென்றே கொள்ளவேண்டும். கால்நூற்றாண்டு காலம் இலங்கையில் ஆட்சிசெய்த இவன் சாதித்தது இதுவரை வெளிவரவில்லை. இவனுடைய சாசனங்கள் இரண்டும் திருகோணமலைப் பிரதேசத்திலேயே கிடைத்துள்ளன. சோழர்கள் திருகோணமலைப் பிரதேசத்துக்கு மிகவும் முக்கியத்துவம் வழஙகியுள்ளனரென்பது அவர்களுடய பெருந்தொகையான தமிழ்ச் சாசனங்கள் அங்கேயே காணப்படுவது அடையாளம். இவனுடைய தந்தையாகிய முதலாம் இராசேந்திரனும் பாட்டனாகிய முதலாம் இராசராசனும் சோழநாட்டிலே மாபெருங் கோயில்களைக் கட்டி, தங்களுடைய பேராற்றல்களைப் புலப்படுத்தியது, இவனுக்கு வழிகாட்டியிருக்க வேண்டும்.

குளக்கோட்டன் இயற்றியனவாகக் கோணேசர்கல்வெட்டு எடுத்துக்கூறும் திருகோணமலைப் பணிகளுட் சில வருமாறு:- சோழநாட்டிலிருந்து பல சமூகப்பிரிவு மக்களை வருவித்துத் திருகோணமலையிலே குடியேற்றியது, இந்தச் சமூகப்பிரிவு மக்களின் உரிமைகள் சலுகைகள்பற்றி விரிவான ஒழுங்குகள் செய்தது, கோணேசுவரர் கோயிலுக்குப் பெருந் தொகையான நிலதானங்கள் செய்தது, சோழசாட்டுக்குத் திரும்பிப்போகமுன்பு, கோணேசுவரத்தை மையமாகக் கொண்ட திருகோணமலைப்பிரதேசத்தை ஆட்சிசெய்ய வன்னிபத்தை ஏற்படுத்தியது முதலியன. திருகோணமலைக் கோவிலைப் பிரமாண்டமாகக் கட்டியதோடு மேற்படி பணிகளையும் செய்வதற்குப் பல ஆண்டுகள் பிடித்திருக்குமென்பது தெளிவு. குளக்கோட்டன் என்ற பெயர் பட்டப்பெயர் போன்றே தோன்றுகிறது. கோடு என்பது அணைக்கட்டு. கந்தளாய், அல்லைக்குளங்கள் இவனுடைய காலத்திற்குமுன்பே கட்டப்பட்டுவிட்டன என்று சிங்களவருயை மகாவம்மிசம் கூறுகிறது. இவன் அவற்றைப் புதிய அணைக்கட்டுக் கட்டித் திருத்தியவனாகலாம். திருகோணமலைப் பிரதேசத்தின் பொருளாதார அபிவிருத்திக்கு இவன் ஆற்றிய பணிகள் இவனுக்குக் குளக்கோட்டன் என்ற பட்டப்பெயரைப் பெற்றுத்தந்தனவாக வேண்டும்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jun 01, 2010 11:48 pm

இதுவரையிலே கூறப்பட்டுள்ளவற்றைத்தொகுத்து நோக்கும்போது கோணேசர்கல்வெட்டிலே கூறப்பட்டுள்ள குளக்கோட்டனும் சோழ இலங்கேசுவரனும் ஒருவனே என்று முடிவுகட்டலாம். புராணக்கதையிலுள்ள சோழகங்கனைத்தேடிக்கொண்டு பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குப் போகத் தேவையில்லை. கோணேசர்கல்வெட்டிலே குளக்கோட்டன் சோழகங்கன் என்று குறிப்பிடப்படவில்லை. தட்சிணகைலாயபுராணமே குழப்பத்தை ஏற்படுத்துகிறது. யாழ்ப்பாணவைபவமாலை காலக்குறிப்பிலே தவறு இழைத்திருக்கிறது. கோணேசர் கல்வெட்டிலே திருகோணமலைத் தலத்தின் மகத்துவத்தைக்கேட்டு, மனுநீதிகண்டசோழனின் மகனாகிய வரராமதேவனும் அவன் மகனாகிய குளக்கோட்டனும் தம்முடைய பணியாட்களுடனும் படைவீரர்களுடனும் திருகோணமலைக்கு வந்தனரெனக் கூறப்பட்டுள்ளது. திருகோணமலைப் பெருமையைப் பலவாறு கூறும் தலபுராணங்கள் காலத்தாற் பிந்தியன. திருஞானசம்பந்தர் பாடிய திருகோணமலைப்பதிகத் திருக்கடைக்காப்பிலே காணப்படும் அருள்மொழிகளே சோழப்பெருமன்னர்களை இலங்கைக்கு கொண்டுவந்தன என்பதை நாம் ஏற்காவிடினும், கோணேசுவரக் கோவிலைப் பிரமாண்டமான கோவிலாகக் கட்டுவதற்கு அவையே மந்திர மொழிகளாக ஊக்கின என்பதை ஏற்றுக்கொள்ளலாம்.

குளக்கோட்டனின் முன்னோர்கள் பற்றிக் கோணேசர்கல்வெட்டுக் கூறுவதை நோக்கும்போது, வரராமதேவன் என்று முதலாம் இராசேந்திரனுக்குப் பெயர் இருந்ததற்குச் சான்று கிடைக்கவில்லையே எனலாம். ஈழமண்டலம் முழுவதையும் தனதாக்கிய முதலாம் இராசேந்திரன் செயல் இலங்கையை வென்ற இதிகாச நாயகனாகிய இராமபிரானுடைய செயலை நினைவூட்டியதால், வரராமன் என்ற பட்டப்பெயர் அவனுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டுமென்று கொள்ளலாம். மனுநீதிகண்டசோழன் சோழர்குல மன்னவர்களின் முதல்வர்களுள் ஒருவன் என்ற புனைகதை நீண்ட காலமாக வழங்குகிறது. எனவே, மனுநீதிகண்டசோழன் மரபில் வந்த வரராமதேவன் என்று கூறியிருக்கவேண்டும். மரபினன் என்று கூறாமல் மகன் என்று கூறுவதனால், முதலாம் இராசராசசோழனுக்குரிய விருதுப்பெயரான திருமுறைகண்டசோழன் மனுநீதிகண்டசோழன் என்பனவற்றில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கவேண்டும். ஈழத்தைக் கைப்பற்றியதாகப் பெருமைப்படும் இந்த மன்னனுடைய மெய்க்கீர்த்தியுள்ள சாசனங்கள் திருகோணமலையிலும,; அண்மையிலுள்ள பதவியாவிலும், மாதோட்டத்திலுமே கிடைத்துள்ளன என்பதை இவ்விடத்திலே நினைவு கூர்தல் வேண்டும்.

குளக்கோட்டன் சோழநாடு திரும்பமுன் திருகோணமலை நிர்வாகத்தைக் கவனிக்க, மதுரையிலிருந்து தனியுண்ணாப்பூபாலனை அழைத்துவந்து வன்னிப ஆட்சியைத் தொடக்கி வைத்தான் என்று கோணேசர் கல்வெட்டுக் கூறுகின்றது. எனவே திருகோணமலைத் தமிழ் வன்னிபத்தின் தோற்றம் ஏறத்தாழ கி.பி.1063ஆம் ஆண்டெனலாம். திருகோணமலையை நிர்வகிப்பதிலே வன்னிப முறை சிறப்பாக இயங்கியமையே திருகோணமலைக்கு வடமேற்கிலுள்ள வன்னியிலும், தெற்கிலுள்ள மட்டக்களப்பிலும் தமிழ் வன்னிமைகள் தோன்ற வழிவகுத்திருக்கவேண்டும். தமிழ்வன்னிமைகள் தோன்றியபின்பே சிங்களவர் வாழ்ந்த வரண்டவலயத்திலும் மகாவன்னி, ஸ்ரீவன்னி என்பன தோன்றியிருக்க வேண்டும். வன்னிமைகளைப்பற்றி இன்று கிடைக்கும் செய்திகளைக் காலமுறையில் வைத்துப் பார்க்கும்போது, இந்த முடிவுக்கே வரவேண்டியிருக்கிறது.

கிழக்கு இலங்கையிற் பொதுவாகவும், திருகோணமலையிற் சிறப்பாகவும் இராவணன்பற்றிய பிரஸ்தாபம் பயின்று காணப்படுகிறது. வட இலங்கையிலே யாழ்ப்பாண இராச்சியம் உருவாகிச் சில நூற்றாண்டுகள் சிறப்பாக இயங்கியதால், அப்பகுதி மக்களுக்கு இராவணனை நினைவுகூர வேண்டிய தேவை இருக்கவில்லை. கிழக்கு இலங்கையிலே வன்னிமைச் சிற்றரசுகள்மட்டுமே ஆட்சிசெலுத்தி வந்திருப்பதனால், இதிகாசநாயகனான இராவணன் நிகழ்த்திய அருஞ்செயல்கள்பற்றிய பல கதைகள் பேணப்பட்டு வருகின்றன எனக் கொள்ளலாம் போலத் தோன்றுகிறது. சோழ இலங்கேஸ்வரன் என்ற வரலாற்றுப் பாத்திரம் மறக்கப்பட்ட நிலையிலே, இதிகாச இலங்கேஸ்வரனான இராவணன் அவனுடைய இடத்துக்கு உயர்த்தப்பட்டு விட்டானோ என்று எண்ணத் தோன்றுகிறது.

(1986ம் ஆண்டு யாழ். பல்கலைக்கழக வெளியீடாக வந்த இக்க(இக்கட்டுரையின் முந்திய வடிவம் இலங்கை கிழக்குப் பல்கலைக்கழகம் இந்துமாணவர்சங்க மலரான ’இந்துநதி’ (1987) பக்கம் 13-18 இல் வெளியானது. மலராசிரியர் இராசநந்தனன்).



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக