ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
ஈகரை தமிழ் களஞ்சியத்தில் தேடுக
உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சுதந்திர தின இனிய காலை வணக்கங்கள்
by T.N.Balasubramanian Today at 7:09 am

» ஈர நிலங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» தினம் ஒரு மூலிகை - செவ்வள்ளி
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» சினி செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:52 pm

» டெலிவிஷன் விருந்து
by ayyasamy ram Yesterday at 10:51 pm

» சுதந்திரத் திருநாள் – சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» சமையல் & வீட்டுக் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» கவுனி அரிசி லட்டு
by ayyasamy ram Yesterday at 10:20 pm

» கவுனி அரிசி இனிப்பு
by ayyasamy ram Yesterday at 10:19 pm

» கவுனி அரிசி அல்வா
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» அன்றாடம் தேயும் ஆண்டி….(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:16 pm

» உன்னை பூ மாதிரி பார்த்துக்க சொன்னார்…!!
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» கை வலிச்சா இதை தடவுங்க,..!
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» தில்லி செங்கோட்டையில் பறந்த முதல் தேசியக் கொடி
by ayyasamy ram Yesterday at 10:12 pm

» பாரத விடுதலையில் செங்கோலின் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» அமைதிக்கான காந்தியப் பண்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» குற்றத்தின் பின்னணி
by ayyasamy ram Yesterday at 10:05 pm

» பிரபாகரனின் வாழ்வியல் சினிமா
by ayyasamy ram Yesterday at 10:04 pm

» வடிவேலு செய்த செயல்
by ayyasamy ram Yesterday at 10:03 pm

» அச்சு அசலாக த்ரிஷாவின் குந்தவை லுக்கில் அசத்திய ஸ்ருதி
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» இனிய சுதந்திர தின வாழ்த்துகள்.
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» சுதந்திர தினம்.==குடியரசு தினம்.
by T.N.Balasubramanian Yesterday at 8:52 pm

» மூவர்ணக் கொடியைக் காட்டுவதற்கான விதிகள் என்ன?
by T.N.Balasubramanian Yesterday at 8:38 pm

» தமிழக அரசின் சட்ட திருத்த மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.
by T.N.Balasubramanian Yesterday at 8:31 pm

» பட்ட பகலில் சென்னை வங்கியில் கொள்ளை
by T.N.Balasubramanian Yesterday at 8:26 pm

» சீன உளவுக் கப்பல் ஆகஸ்ட் 16 அன்று இலங்கை துறைமுகத்தில் நிறுத்தப்பட உள்ளது - இந்தியா ஏன் உன்னிப்பாக கவனித்து வருகிறது
by sncivil57 Yesterday at 2:07 pm

» வருமான வரி சோதனையில் சிக்கிய 56 போடி ரூபாய்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:52 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 14/08/2022
by Dr.S.Soundarapandian Yesterday at 1:50 pm

» காணாமல் போன கிணற்றைக் கண்டுபிடித்துத் தாருங்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:48 pm

» பணம் தர மறுத்த வங்கி ஊழியர்களை துப்பாக்கியால் சிறைபிடித்தவர்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:56 pm

» தமிழ்நாடு உப்பு நிறுவனத்தின் 'நெய்தல் உப்பு!'
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:52 pm

» இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய தாய்லாந்துக்குச் சென்றார்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 11:47 pm

» ட்டீ.ராஜேந்தர் ஏன் 'இன்ஷா அல்லாஹ்' சொன்னார்?
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 6:07 pm

» துணை குடியரசுத் தலைவரின் அதிகாரங்கள்!
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 3:18 pm

» சத்ரபதி சிவாஜியின் பண்பு
by கண்ணன் Sat Aug 13, 2022 3:17 pm

» சர்ச்சை எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு கத்தி குத்து
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:16 pm

» வீட்டு வாடகைக்கு ஜி.எஸ்.டி., யார் யாருக்கு பொருந்தும்?
by Dr.S.Soundarapandian Sat Aug 13, 2022 1:14 pm

» மீண்டும் விக்ரம் பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா
by mohamed nizamudeen Sat Aug 13, 2022 9:00 am

» ரஜினியுடன் இணையும் தமன்னா
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:40 am

» கைலா என்னுள் வீசும் புயலா.. ரசிகர்களை கவரும் ஆர்யா பட பாடல்.
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:37 am

» இணையத்தை ஆக்கிரமிக்க வரும் விஜய் ஆண்டனி படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Sat Aug 13, 2022 6:33 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:46 pm

» ஹிஜ்ரி புத்தாண்டு வாழ்த்துகள் 1444
by Dr.S.Soundarapandian Fri Aug 12, 2022 11:44 pm

» காலில்லாப் பந்தல்….(விடுகதைகள்)
by ayyasamy ram Fri Aug 12, 2022 1:52 pm

» புத்தகம் தேவை
by lakshmi palani Fri Aug 12, 2022 1:20 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Aug 12, 2022 12:20 pm

» வெளிச்சம் உள்ள இடத்தில் தானே தேட வேண்டும்…!!
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:34 am

» சினிமாவில் கதாநாயகிகளுக்கு மதிப்பே கிடையாது! – தமன்னா
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:27 am

» சிறுவர் பாடல் – கறுப்புயானை
by ayyasamy ram Fri Aug 12, 2022 10:03 am

Top posting users this week
T.N.Balasubramanian
இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Vote_lcapஇறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Voting_barஇறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Vote_rcap 

நிகழ்நிலை நிர்வாகிகள்


இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

3 posters

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 1:48 pm

First topic message reminder :

அன்புள்ள வாசகர்களே! அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).


“இறைமறையில் அறிவியல் அற்புதங்கள்” என்ற தொடரின் மூலம்இ பல ஆண்டுகள் ஆய்வு செய்துஇ பல நூறு அறிவியல் அறிஞர்களின் கடுமையான உழைப்பிற்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை 15 நூற்றாண்டுகளுக்கு முன்புஇ அறிவியல் வாடையைக்கூட அறிந்திராத மக்களுக்கு முன்பு மிக எளிமையாக இறைவன் குர்ஆனில் கூறியிருக்கும் அறிவியல் அதிசயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள முன்வந்திருக்கிறேன்.
இறைவன் கூறியிருக்கும் விதம் அறிவியல் அறியாத மக்களும்இ அறிவியலின் உச்சானியில் இருக்கும் மக்களும் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் அமைப்பில் இருப்பது அதன் அதிசயங்களில் பேரதிசயமாகும். எந்த காலத்தில் வாழ்ந்த மக்களும் அவர்கள் புரிந்து கொண்ட அறிவியல் உண்மைகளுக்கு எதிராக குர்ஆனின் வசனங்கள் ஒரு போதும் இருந்ததில்லைஇ இனிமேலும் அவ்வாறு இருக்கப்போவதுமில்லை.


வெவ்வேறு காலங்களில் கண்டுபிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகளை அந்தந்த காலத்தில் வாழ்ந்த அறிவியல் அறிஞர்கள் புரிந்து கொள்ளும் விதத்தில் குர்ஆன் வசனங்கள் அமைந்திருப்பது அதன் தனிச்சிறப்பாகும்.
ஒரு காலத்தில் கண்டு பிடிக்கப்பட்ட அறிவியல் உண்மைகள் தவறு என நிரூபணம் செய்யப்படும் போதுஇ குர்ஆன் சொன்ன கருத்து தவறு என்று ஆகாதுஇ மாறாக அவர்கள் திருகுர்ஆனை விளங்கிக் கொண்ட விதம்இ குர்ஆனின் வசனத்திற்கு அவர்கள் கொடுத்த பொருள்தான் தவறு என்றாகும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down


இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:14 pm

செல் ஆய்வின் பின்னணியை புரிந்து கொண்ட நாம்இ 1665ம் ஆண்டுக்கு அதாவது 338 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்கள் செல் பற்றியும்இ அதில் அடங்கியுள்ள குரோமோசம்கள் பற்றியும் துளி கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை என்பது மட்டுமல்லஇ இதன் பெயர்களைக் கூட அவர்கள் கேட்டிருக்க மாட்டார்கள் எனும் போது 1423 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு மனிதர் இந்த செய்திகளை யெல்லாம் அறிந்திருந்தார் என்று சொன்னால் அதனை ஏற்க முடியுமா? நிச்சயமாக யாரும் இதனை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.


கருச்சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற இந்த அறிவியல் உண்மையும் 1953 ஆம் ஆண்டிற்குப் பிறகுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது டி.என்.ஏ. (னு.N.யு) என்ற துணுக்கினை கண்டறிந்தப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று. அதற்கு முன்பு வரை இந்த செய்தியினையும் யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.


ஆனாலும் 1423 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவரான முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் போதிக்கப்பட்ட இறைவேதமான குர்ஆனில் இந்தச் செய்தி தெளிவாகவே சொல்லப் பட்டிருக்கிறது. இந்தச் செய்தியை அவரால் சாதாரண மனிதர் என்ற அடிப்படையில் சொல்லியிருக்க முடியுமா? என்றால் நிச்சயம் முடியாது. இந்த டி.என்.ஏ. வையும்இ அது சார்ந்திருக்கும் குரோமோசோம்களையும் யார் படைத்தானோஇ அவனால் மட்டுமே எல்லாக் காலத்திலும் சொல்ல முடியும்.
சிசுவின் பாலினத்தை தீர்மானிப்பது எது? என்ற இந்தச் செய்தி குர்ஆனில் இடம் பெற்றிருப்பதுஇ முஸ்லிம்களின் வேத நூலான குர்ஆன்இ இறைவானல் இறக்கியருளப்பட்டதுதான் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் புனைந்து சொல்லப்பட்டதல்ல என்பதனை இன்றளவும் பறைச்சாற்றிக் கொண்டும் இருக்கிறது.

இந்த செய்தி திருமறையில் ஒரு இடத்தில் அல்லஇ பல இடங்களில் சொல்லப்பட்டிக்கிறது. எந்தெந்த வசனத்தில்இ எவ்வாறு இந்தக் கருத்து சொல்லப் பட்டுள்ளது என்பதை அடுத்த தொடரில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
இந்தச் செய்தியினை அறிவியல் வாடை கூட இல்லாத அறியாமைக் காலம் என வர்ணிக்கப்பட்ட 1430 ஆண்டுகளுக்கு முந்திய காலத்திலேயே எழுதப்படிக்கத் தெரியாத உம்மி நபியான முஹம்மது (ஸல்) அவர்களின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. இந்தச் செய்தியினை எவ்வாறு சொல்லப்பட்டுள்ளதுஇ அவ்வாறு சொல்லப்பட்டிருப்பது உண்மைதானா? என்பதை இந்தத் தொடரில் ஆதாரத்தின் அடிப்படையில் தெரிந்து கொள்வோம்.


முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக ஏற்றுஇ ஏக இறைவனை மட்டுமே வழிபட வேண்டும் என்பதை ஏற்க மறுத்துக் கொண்டிருந்த அறியாமை காலத்து மக்களிடம்இ அவர் ஒரு இறைத்தூதர்தான் என நிரூபனம் செய்தவற்கு முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்கு பல அற்புதங்களை அல்லாஹ் வழங்கி இருந்தான்.

அவ்வாறு அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களிலேயே மிகச்சிறந்த பேரற்புதமாக விளங்குவது அருள் மறை குர்ஆனாகும். இதனை ஒரு அரபுக் கவிஞர் எல்லா அற்புதங்களையும் மிகைத்துஇ நம்மோடு காலமெல்லாம் நிலைத்து நிற்கும் பேரற்புதம் அருள் மறைக் குர்ஆன் ஆகும் என்று குறிப்பிடுகிறார்.


இலக்கணமும்இ இலக்கியமும் செரிந்த கருத்தாழமிக்க அதன் வசன நடை கண்டு அன்றைய பிறவிக் கவிஞர்களும் அதிசயித்துப் போனார்கள். உம்மி நபியினால் சொல்லப்பட்டது போல் நாமும் ஏன் எழுத முடியாது? என்று போட்டிக்கு நின்றவர்கள் கூட அதன் சொற்பிரயோகத்தில் சொக்கிப் போனார்கள். குர்ஆனின் ஒரேயொரு வசனத்தைப் போன்ற மாற்று வசனம் ஒன்றை உருவாக்கிட நீங்கள்இ விரும்புவோரையெல்லாம் கூட்டுக்கு அழைத்துக் கொண்டு முயன்றுபாருங்கள் என 1430 ஆண்டுகளுக்கு முன்னால் உம்மி நபியின் மூலம் இந்த உலகிற்கு எடுத்து வைக்கப்பட்ட அந்த சவால் இது வரைக்கும் யாராலும் எதிர் கொள்ள முடியாத சவாலாகவே இருந்து கொண்டிருப்பது அந்த குர்ஆன் இறைவேதம் என்பதற்கான அழியாத அடையாளமாகும். உலக அழிவு வரை அந்த சவாலை யாரும் எதிர்க் கொள்ள முடியாது என்பது வேறு விஷயம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:15 pm

ஏகத்துவப் பிரச்சாரம் ஏற்புடையதல்ல என்று ஏட்டிக்குப் போட்டியாக பேசித் திரிந்தஇ அடங்காத அட்டூழியங்களை அப்பாவி முஸ்லிம்களின் மீது தகாத முறையில் ஏவி விட்டுஇ அதனால் அவர்கள் படும் அவஸ்தையை கண்டு அளவிலா ஆனந்தம் அடைந்து வந்தஇ அறியாமையின் பிறப்பிடம் எனும் அடை மொழிக்கு சொந்தக்காரன் அபுஜஹில் கூட இருள் சூழ்ந்த இரவு நேரங்களில் இருளடைந்த கனத்த இதயத்துடன் இறைவேதம் ஓதப்படும் ஓசை வரும் திசை நோக்கி மெல்ல சென்று யாரும் அறியாத வண்ணம் ஒட்டுக் கேட்கத் தூண்டியதே! அது எது? குர்ஆன் வசனங்கள்இ மனித படைப்பாற்றலுக்கு அப்பாற்பட்ட ஒரு சக்தியின் வெளிப்பாடு என்பதை அவன் உணர்ந்து கொண்டதல்லவா?


மாற்றுக் கருத்து கொண்டிருந்த உமர் (ரலி) அவர்களின் மனதில் உள்ள விடயங்களை மாற்றிய வசனம்தான் மறக்க முடிகிறதா? கேட்கக்கூடாதென காதில் பஞ்சடைத்து கால் கடுக்க மக்கா வீதியிலேயே நடந்து திரிந்த துஃபைல்(ரலி) அவர்களை துக்கம் துறந்திட துள்ளிக் குதித்து தூய நபியின் பக்கம் செல்ல வைத்த சிறப்பினை இன்றைக்கும் படித்துப் பார்க்கிறோம். துஃபைல்(ரலி) அவர்களின் காதுப் பஞ்சு பறந்ததுஇ அவரது செவிப்பறையில் அல்லாஹ் அருள் வசனம் புகுந்தது.

அதனால் அவரது உள்ளமோ ஆனந்த ஆகாயத்தில் சிறகடித்துப் பறந்தது. இந்த நிகழ்வுகளெல்லாம் குர்ஆன் இருளடைந்த மனித மனங்களில் ஏற்படுத்திய பேரொளிப் புரட்சிகளின் வெளிப்பாடுகளில் சிலவைகள்தான். இன்னும் இது போலஇ அல்லது இதை விட வியத்தகு ஆச்சரியங்கள் நிறைந்த வரலாறுகள் ஏராளம் உண்டு.


உதாரணத்திற்குச் சொல்லப்பட்ட இவர்களை குர்ஆன் இறைமறைதான் என ஏற்க வைத்ததுதான் எது? அந்தக் காலத்தில் அறிவியல் உண்மைகள் உணரப்பட்டிருந்தனவா? இல்லை அறவே இல்லை. ஏன்? அதன் வாடையைக் கூட அவர்கள் நுகரவில்லை என்பது உலகமறிந்த உண்மை. எனவேஇ குர்ஆனில் இடம் பெற்றிருக்கும் அறிவியல் கருத்தால் அவர்கள் ஈர்க்கப்பட்டார்கள் என்று சொல்லமுடியாது. என்றாலும் இலக்கணமும்இ இலக்கியமும் அரபிகளின் உள்ளங்களை ஆட்சி செய்து கொண்டிருந்தது என்று சொல்வதை விட ஆட்டிப்படைத்துக் கொண்டிருந்தது என்றால் அது மிகப் பொருத்தமாக இருக்கும். அதனால் இலக்கிய சுவையும்இ கருத்துக் கோர்வையும் உள்ள கவிதைகள் அவர்களின் உயிரினும் மேலாக மதித்து வந்த கஃபாவின் சுவர்களில் தங்களுக்கும் ஓர் இடம் பிடித்து தொங்கிக் கொண்டிருந்தன. அந்த காலகட்டத்தில்தான் அனைத்து இலக்கிய காவியங்களையும் மிகைத்து நிற்கும்இ அனைத்து அரபிக் கவிஞர்களுக்கும் சவாலாக விளங்கும் குர்ஆன் ஒரு உம்மியின் மீது இறக்கியருளப்பட்டது. அதனை இல்லாமல் ஆக்க எதிரிகள் வானத்திற்கும் பூமிக்கும் குதித்தார்கள்.


இறுதியில் தோற்றுப்போய்இ அதன் இலக்கியத்திற்கு முன் சரணடைந்து இஸ்லாத்தில் தஞ்சம் புகுந்து விட்டார்கள். அதனால் அழிவும்இ முடிவும் இல்லாத எல்லையில்லா ஆனந்தம் கரைபுரண்டோடும் சுவர்க்கத்தின் சுகத்தில் தஞ்சமானார்கள். அது அன்றைய சரித்திரம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:16 pm

அறிவியல் பார்வை:


இன்றோ இலக்கண-இலக்கிய உணர்வுகள் உறைந்து போய்இ அறிவியல் முதிர்ச்சியில் அலை மோதிக் கொண்டிருக்கும் மனித மனங்களைஇ குர்ஆன் தனது தீர்க்கமான அறிவியல் உண்மையால் வெற்றி கொண்டுள்ளது என்பதே சரியான உண்மையாகும். அதனால் குர்ஆனின் இலக்கியம் முக்கியத்துவம் இழந்து விட்டது என்று பொருளல்ல. மாறாக மக்களின் மனநிலை இலக்கியத்தில் திளைத்திருந்த காலம் மாறிஇ அறிவியல் பக்கம் பார்வை செலுத்தி அதற்கு அதி முக்கியத்துவம் வழங்கும் காலம் பிறந்துள்ளது.

அதன் வெளிப்பாடுதான் குர்ஆன் கூறும் பல அறிவியல் உண்மைகள் புரிந்து கொள்ளப்பட்டுஇ பல விஞ்ஞானிகளும்இ அறிவியல் வல்லுனர்களும் குர்ஆன் ஒர் இறைவேதம்தான் என்று உறுதியாக சான்று பகர்ந்து இஸ்லாத்தில் இணைந்துள்ளார்கள். இதற்கான எடுத்துக் காட்டுகள் சமீபத்திய வரலாறுகளில் ஏராளம்! ஏராளம்! எனினும் அவர்களின் வரலாறு கூற இது பொருத்தமான இடமில்லை என்பதால் தவிர்த்துக் கொண்டேன்.


இன்றைய அறிவியல் உண்மைகள் குர்ஆனில் ஏராளமாக இடம் பெற்றுள்ளது என்பதை விளக்கும் முயற்சியில் தான் ஈடுபட்டுள்ளோம். அந்த வகையில்இ கருவில் உருவாகும் சிசு ஆணாகஇ பெண்ணாக பிறப்பதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்பது குர்ஆனில் பல வசனங்களில் மறைமுகமாகவும்இ தெளிவாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதனை பல முறை நாம் படித்துள்ளோம்இ படித்துக் கொண்டும் இருக்கிறோம். ஆனால்இ ஆய்வுக் கண்ணோட்டத்தில் அந்த வசனங்களை படித்துப் பார்க்க வில்லை. எனவேஇ அந்த உண்மைகள் பலரின் கவனத்திற்கு வராமல் போய்விட்டது.
அவர்கள் குர்ஆனை ஆராய்ந்து படிக்க வேண்டாமா? அல்லது அவர்களது இதயங்களில் அதற்குரிய பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா? என்றும்இ இந்த குர்ஆனை சிந்தித்துப் படிப்போருக்கு அதில் பல அத்தாட்சிகள் உண்டு என்றும் குர்ஆனில் பல இடங்களில் சொல்லப்பட்டிருந்தும் இன்று முஸ்லிம்களான நாம் சிந்தித்துப் படிப்பதே இல்லை.

அதிலும் வேதனை என்னவென்றால்இ குர்ஆனின் அரபி எழுத்துக்களையே வாசிக்கத் தெரியாதவர்கள்தான் நம்மில் ஏராளம்இ ஏராளம். அவர்களால் அதன் பொருளைத்தான் புரிந்து கொள்ள முடியுமா? குர்ஆனை வாசிப்பதற்கே தெரியாத இவர்களால் அதனின் பொருளை அறிந்துஇ எப்படி ஆய்வுகள் செய்து அறிவியல் உண்மைகளை புரிந்து கொள்ள முடியும்?.
இன்று மாற்று மதச் சகோதரர்கள் குர்ஆனைப் படித்துஇ அதில் கூறப்படும் விவரங்களை புரிந்து ஆய்வுகள் நடத்துகிறார்கள். ஆனால் நமது நிலைபாடு என்ன? ஒருவர் வீட்டில் மரணம் விழுந்தால் மட்டுமே பலர் கூடி குர்ஆன் ஓதும் சம்பிரதாயம் நமது சமூகத்தில் வேரூன்றி நிற்கிறது. மற்ற காலங்களில் பட்டுத் துணியில்இ அல்லது வெல்வெட்டுத் துணியில் துயில் கொள்ளச் செய்துஇ தூக்கி ஓரம் கட்டி விடுகிறார்கள் நம்மில் பலர். இளவு வீடுகளில் உச்சரிக்கப்படும் மந்திரமாகவே நாம் பயன்படுத்திக் கொண்டு வருகிறோம்.

குர்ஆன் உயிருள்ளவர்களை எச்சரிப்பதற்காக அருளப்பட்டது என்ற உண்மையை மறந்துஇ இந்த இறைமறையையே மரணிக்கச்செய்யும் அவலம் நமது சமூக அமைப்பில் உள்ள வரை உயிரோட்டம் உள்ள சமுதாயமாக நாம் ஒரு போதும் திகழ முடியாது என்பது நிச்சயம். மேலும் வெண்ணையை கையில் வைத்துக் கொண்டு நெய் தேடி அலைந்த கதையைப் போலஇ அறிவியல் கருவூலத்தை கையில் வைத்துக் கொண்டுஇ அறிவியல் உண்மைகளை வேறெடங்களில் நாம் தேடி அலைவது வேடிக்கையானதும் வேதனை தரக் கூடியதுமாகும். அறிவியல் உலகில் கண்டுபிடிப்புகள் வெளிப்படும் போதெல்லாம் வாய்பிளந்து நிற்கிறோம்.

ஆனால் அந்த அறிவியல் உண்மை 1430 ஆண்டுகளுக்கு முன்பே நமது இறைவேதம் குர்ஆனில் சொல்லப்பட்டு விட்டது என்பதை மறந்து விடுகிறோம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:17 pm

எனவேஇ குர்ஆனை ஆய்வு செய்து படியுங்கள். அதில் படிப்பினைகள் பல உண்டு. அறிவியல் உண்மையோ அள்ள அள்ள குறையாமல் நிறைந்து கிடக்கிறது. குர்ஆன் ஒரு முடிவுறா அறிவியல் சுரங்கம். தோண்டத் தோண்ட புதிய புதிய கருத்துகள் புலப்பட்டுக் கொண்டே இருக்கும். எனவேஇ அன்பு வாசகர்களே! குர்ஆனை படிப்பதற்கென நமது நேரங்களில் கணிசமான அளவு அதற்காக செலவிட வேண்டும். அதில் ஆய்வுகள் பல நடத்த வேண்டும். ஆயுட்காலம் முழுவதும் அல்லாஹ்வின் அருளுக்கு அருகதையானவர்களாக நம்மை நாம் ஆக்கிக் கொள்ள வேண்டும்.


கர்பத்தில் உள்ள குழந்தை ஆணா? பெண்ணா? என்பதை தீர்மானிப்பது விந்தணுதான் என்ற உண்மையை குர்ஆனின் வசனங்களை படித்துப் பார்க்கும் யாரும் எளிதில் புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு எளிமையாக சொல்லப்பட்டிருப்பது குர்ஆனின் அறிவியல் அற்புதங்களில் ஒன்றாகும். இந்த அறிவியல் உண்மையை 1430 ஆண்டுகளுக்கு முன்னால் ஏன் சொல்ல வேண்டும்? அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்கள் அறிவியல் உண்மைகளைப் புரிந்து கொள்ளும் நிலையில் இருந்தார்களா? என்று வரலாற்றை படித்துப் பார்க்கும் போதுஇ வேறொரு பெரிய வாழ்வியல் உண்மை அந்த வசனங்களின் மூலம் உணர்த்தப்படுவது தெரியவரும். அறிவியல் வாடை கூட இல்லாத அம்மக்கள்இ இந்த உண்மையை புரிந்து கொள்வதற்காக மிக எளிமையாக ஆக்கப்பட்டுள்ள இந்த வசனங்கள்இ மனிதாபிமானமற்ற கொடுமையான பெண் சிசு வதைகளுக்கு முற்று புள்ளி வைப்பதற்காகத்தான் இந்த உண்மையை அப்போது சொல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டது.


ஆம்! பெண் குழந்தை பெற்றுத் தந்த தனது மனைவியினை அவள்தான் அதற்கு காரணம் என்று கருதி பல சித்திரவதைகள் செய்துஇ அவள் பெற்ற குழந்தையை புதை குழியில் புதைத்து வந்த அவர்களுக்குஇ குழந்தை பெண்ணாகப் பிறப்பதற்கு ஆண்மகனான நானேதான் காரணம்இ தன்னிலிருந்து வெளிப்பட்ட விந்தணுவின் மூலம்தான் பெண் குழந்தை படைக்கப்பட்டது என்பதை உணர்த்தும் போதுஇ அந்த குற்ற உணர்வு தன் பக்கம் திரும்பி இது போன்ற கொடுமைகள் நடக்காமல் தடுக்க முடியும். அதனைத் தான் இந்த வசனங்கள் சாதித்தன. வரலாற்று ஏடுகளில் பொன்னெழுத்துகளால் இது பதிவு செய்யப்பட்டுள்ளன.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:18 pm

இன்சான் என்றால் என்ன?


பாலினத்தை தீர்மானிப்பது விந்தணுதான் என்று கூறும் வசனங்களில் சிலவற்றை எடுத்துக் கூறிஇ அதில் அந்தக் கருத்து எவ்வாறு விவரிக்கப்பட்டுள்ளது என்பதை உங்களது சிந்தனைக்கு முன் வைக்கிறேன்.
خَلَقَ الْأِنْسَانَ مِنْ نُطْفَةٍ

விந்தணுவிலிருந்து மனிதனை (அல்லாஹ்) படைத்தான். அல் குர்ஆன்: 16:4
فَلْيَنْظُرِ الْأِنْسَانُ مِمَّ خُلِقَ . خُلِقَ مِنْ مَاءٍ دَافِقٍ
ஆகவேஇ மனிதன்இ (தான்) எதிலிருந்து படைக்கப் பட்டிருக்கிறான் என்பதை அவன் சிந்தித்துப் பார்க்கவும். குதித்து வெளியாகும் நீரிலிருந்து அவன் படைக்கப்பட்டான். அல் குர்ஆன்: 86:5-6.

முதல் வசனத்தில் நுத்ஃபாவிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும்இ இரண்டாவது வசனத்தில் குதித்து வெளியாகும் நீரிலிருந்து இன்சான் படைக்கப்பட்டதாகவும் கூறப் பட்டுள்ளது. நுத்ஃபா என்பதும்இ குதித்தும் வெளியாகும் நீர் என்பதும் முறையே ஆணின் விந்தணுஇ மற்றும் இந்திரியத்தைத்தான் குறிக்கிறது என்பதை முந்திய தொடர்களில் வலுவான ஆதாரத்தின் அடிப்படையில் தெளிவுபடுத்தியுள்ளேன். விந்தணுவிலிருந்துதான் இன்சான் படைக்கப்பட்டான் என்ற உண்மை இந்த இரு வசனத்தின் மூலம் தெளிவாக்கப்பட்டுள்ளது.


இங்கு இன்சான் என்ற அரபிச் சொல் எந்த பொருளில் பயன் படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதற்கு குர்ஆனின் பிரயோகமே நமக்கு பதிலாக அமைகிறது. தமிழில் மனிதன் என்ற வார்த்தையை ஆண்இ பெண் ஆகிய இரு பாலாரையும் குறிப்பதற்கு நாம் பயன்படுத்துவது போல அரபி மொழியில் இன்சான் என்று வார்த்தை குறிப்பிடப்படும். குர்ஆனில் சுமார் 59 முறை இன்சான் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுஇ அதன் தொடரில் இன்சான் செய்ய வேண்டிய சில கடமைகளும்இ வேறு சில செய்தித் துளிகளும் சொல்லப்பட்டுள்ளன.அந்தக் கடமைகள் ஆண்கள் மீது மட்டுமல்லஇ மாறாக பெண்கள் மீதும் விதியாக்கப்பட்டதாகும். மேலும் அந்த இன்சான் குறித்து சொல்லப்பட்ட செய்திகள் ஆண்கள் விஷயத்தில் எவ்வளவு பொருத்தமானதாக இருக்கிறதோஇ அதே போல பெண்களுக்கும் பொருந்தி வரும் செய்திகளாகவே உள்ளன என்பதற்கு பின் வரும் வசனம் சான்றாக இருப்பதைக் கவனியுங்கள்:


وَوَصَّيْنَا الْأِنْسَانَ بِوَالِدَيْهِ إِحْسَاناً حَمَلَتْهُ أُمُّهُ كُرْهاً وَوَضَعَتْهُ كُرْهاًوَحَمْلُهُ وَفِصَالُهُ ثَلاثُونَ شَهْراً
மேலும்இ தனது பெற்றோர்க்கு நன்மை செய்யுமாறு மனித(இன்சா)னுக்கு நாம் உபதேசம் செய்தோம்இ அவனுடைய தாய்இ சிரமத்துடன் அவ(இன்சா)னைச் சுமந்திருந்துஇ சிரமத்துடன் அவ(இன்சா)னைப் பிரசவிக்கின்றாள்இ (அவள்) கர்பத்தில் அவ(இன்சா)னைச் சுமப்பதும்இ அவ(இன்சா)னுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும்.
அல் குர்ஆன்: 46:15.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:19 pm

பெற்றோருக்கு நன்மை செய்யும் படி மனித(இன்சா)னுக்கு உபதேசம் செய்ததாக இறைவன் கூறுகிறான். இது ஆண்களுக்கு மட்டும் உரியதல்லஇ பெண்களும் தங்களது பெற்றோருக்கு நன்மைகள் செய்ய வேண்டும். அது போல் ஒரு தாய் குழந்தையை கர்பத்தில் சுமந்திருப்பதும்இ அதற்கு பால் குடி மறக்கச் செய்வதும் முப்பது மாதங்களாகும் என இந்த தொடரில் சொல்லப்பட்ட செய்தித் துளி ஆண்களுக்கு மட்டும் உரியதல்ல. பெண் குழந்தைக்கும் அதே கால அளவுதான். எனவேஇ இன்சான் என்ற வார்த்தை ஆண்இ பெண் ஆகிய இரு பாலாரையும் குறிக்கப் பயன்படுத்தப்படும் வார்த்தையாகும் என்பது இந்த வசனத்தின் மூலம் உறுதி செய்யப்படுகிறது.
இந்த உண்மையை தெரிந்து கொண்டதற்குப் பிறகு மேலே கூறப்பட்ட இறைவசனத்தை மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். ஆண்இ பெண் என படைக்கப்படுவதற்கு ஆணின் விந்தணுதான் காரணம் என்ற உண்மை மிக எளிதாக புரியவரும்.


وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجاً وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ
மேலும்இ அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான்இ பின்னர் விந்தணுவிலிருந்து – (ஆண்-பெண் கொண்ட) ஜோடிகளாக ஆக்கினான். எந்தப் பெண்ணும் கர்பமடைவதும்இ பிரசவிப்பதும் அல்லாஹ் அறியாமல் நடைபெறுவதில்லை. அல் குர்ஆன்: 35:11.


இந்த வசனத்தில் இன்னும் சற்று தெளிவாகவே இந்த உண்மை விவரிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். அதாவது உங்களை விந்தணுவிலிருந்துதான் படைத்தான்இ அந்த விந்தணுவின் மூலம்தான் ஆண்இ பெண் கொண்ட ஜோடிகளையும் உருவாக்கினான். இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள உங்களை என்ற அர்த்தத்திற்கு பயன் படுத்தப் பட்டுள்ள அரபி வார்த்தை ஆண்களை மட்டுமல்ல பெண்களையும் குறிக்கும் வார்த்தையாகும்.இந்த வசனத்தின் தொடரில் பெண்கள் கர்ப்பம் அடைவது பற்றிய செய்தியை குறிப்பதற்கு சுமத்தல் எனும் பொருளுடைய தஹ்மிலு என்ற வார்த்தை பிரயோகம் செய்யப்பட்டுள்ளது. அதிலும் ஒரு உண்மை ஒளிந்திருக்கிறது. அதாவது பெண் என்பவள் ஆணிடமிருந்து உற்பத்தியாகி வரும் சிசுஇ அது எதுவாக இருந்தாலும் அதை சுமப்பவள்தான். அவள் குழந்தையை உற்பத்தி செய்பவள் அல்ல என்ற உண்மையும் மறைந்திருக்கிறது.


وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى
அல்லாஹ்தான் (கர்பறையில்) செலுத்தப்படும் விந்தணுவிலிருந்து (உங்களை) ஆண் பெண் ஜோடிகளாகப் படைத்தான். அல் குர்ஆன்: 53:45இ46.
أَلَمْ يَكُ نُطْفَةً مِنْ مَنِيٍّ يُمْنَى . ثُمَّ كَانَ عَلَقَةً فَخَلَقَ فَسَوَّى . فَجَعَلَ مِنْهُ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى
(கர்பத்தில்) செலுத்தப்படும் இந்திரியத்தில் உள்ள ஒரு விந்தணுவாக அவன் இருக்கவில்லையா?

பின்னர் அவன் அலகத்தாக (இது குறித்து பின்னர் விவரிக்கப்படும்) இருந்தான். பின்னர் அவனைப் படைத்து செம்மையாக்கினான்.


பின்னர் இந்திரியத்திலிருந்து ஆண்இ பெண் என்ற ஜோடிகளைப் படைத்தான். அல் குர்ஆன்: 75:37இ38இ39.
இந்த இரு வசனமும் ஐயத்திற்கு இடமின்றிஇ ஆண்இ பெண் என்பது ஆணின் விந்தணுவிலிருந்துதான் படைக்கப்படுகிறது என்ற உண்மையை 1430 ஆண்டுகளாக இந்த உலகிற்கு மிகத் தெளிவாகவே அதே நேரத்தில் யாரும் எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறன்றன. இந்த உண்மையை அறிவியல் உலகம் மிகத்தாமதமாக தற்போதுதான் கண்டுபிடித்திருக்கிறது. குர்ஆன் விஞ்ஞானத்தையும் போதிக்கும் அற்புத வேதம் என்பதை இனிமேலாவது இந்த உலகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதே நமது ஆவல்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:20 pm

நபி மொழியில் முரண்பாடா?

பாலைத் தீர்மானிப்பது விந்தணுதான் என்பதை திருமறையில் இடம் பெற்ற பல வசனங்களின் மூலம் அறிந்து கொண்ட நாம், இது குறித்து வந்திருக்கும் ஒரு நபி மொழியினை படித்துப் பார்க்கும் சந்தர்பம் ஏற்படலாம். அப்போது அந்த நபி மொழி குர்ஆனுக்கு எதிரான மாற்று கருத்தினை வலியுறுத்துவது போன்று தோன்றலாம். எனவே, அந்த நபி மொழியையும், அதற்கு சரியான விளக்கம் என்ன என்பதையும் அடுத்த இதழில் இன்ஷா அல்லாஹ் பார்ப்போம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:21 pm

சின்ன வார்த்தையில் பெரிய அர்த்தங்கள்கடந்த தொடரில்இ கருக் குழந்தையின் பாலைத் தீர்மானிப்பது ஆண் விந்தணுதான் என்று இறைமறையில் சொல்லப்பட்டிருக்கும் அறிவியல் உண்மையை அதனுடைய ஆதாரத்துடன் பார்த்தோம். இந்த அறிவியல் உண்மை நபி மொழியிலும் இடம் பெற்றிருக்கிறது. அது எவ்வாறு இடம் பெற்றிருக்கிறது என்பதினை உங்கள் முன் தருவதில் பெருமிதம் அடைகிறேன்.


ஒரு குறிப்பட்ட காலத்தில் வாழந்திருந்த ஒரு மனிதரால் எல்லாக்காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்தில் பேசஇ எழுத முடியாதுஇ அவரது காலத்திலும்இ அதனைத் தொடர்ந்த சில காலங்களிலும் வாழ்ந்தவர்களால் மட்டும் புரிந்து கொள்ளும் விதத்தில்தான் அவரது பேச்சுகள்இ எழுத்துக்கள் அமைந்திருக்கும்.

குறிப்பிட்ட காலம் சென்றதும் அவரது பேச்சுக்கள்இ எழுத்துக்கள் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியாததாகஇ அல்லது வார்த்தைப் பிரயோகம் மாறிவிட்டதாக ஆகிவிடுகிறது. அதனைப் புரிந்து கொள்ள வேண்டுமானால்இ அதற்காக தனி விளக்கவுரை அவசியப்படுகிறது. இதற்கு எடுத்துக் காட்டுகள் நமது நடைமுறையில் ஏராளம் உண்டு. இடம் சுருக்கம் கருதி இங்கு எழுதுவதைத் தவிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


ஆனால் 1430 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பேசிய வார்த்தைகள்இ அவரது மொழி பேசும் இன்றுள்ள அனைவராலும் மிக எளிதில் புரிந்து கொள்ளும் படியாக அமைந்திருக்கிறது. இது அவர்களது வார்த்தைகளுக்கு இறைவன் வழங்கிய அற்புதமாகும். காரணம் அவர்களது அந்த வார்த்தைகள் வஹி அறிவிக்கப்படாத இன்னொரு குர்ஆனாக திகழ்கிறது. அஹ்மதுஇ மற்றும் அபூ தாவூத் ஆகிய நூட்களில் இடம் பெற்றுள்ள குர்ஆனும்இ அது போன்ற இன்னொன்றும் எனக்கு வழங்கப் பட்டிருக்கிறது என்ற நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறிய செய்தி இதனை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. குர்ஆன் எல்லோரும் புரிந்து கொள்ளும் பொருட்டு எளிமையாக்கப்பட்டுஇ இறைவனால் பாதுகாக்கப் பட்டுவருவது போலஇ நபியவர்களின் அர்த்தமுள்ள வார்த்தைகளும் அனைவரும் புரிந்து கொள்ளும் பொருட்டுஇ எளிமையாக்கப்பட்டுஇ இறைவனால் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இன்ஷா அல்லாஹ் அது இனிமேலும் தொடரும். மேலும் அவர்களது வார்த்தைகளிலிருக்கும் அர்த்தமுள்ள போதனைகள் அனைத்து நாட்டவருக்கும்இ அனைத்து காலத்தில் வாழ்பவர்களுக்கும் பொருந்தி வரக்கூடியதாகவே அமைந்துள்ளன.


குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சுக்கு சொந்தக்காரராகவும் அவர்கள் திகழ்ந்தார்கள்.
இதனையே அவர்கள் பின் வருமாறு சிலாகித்து கூறுவதைக் கேளுங்கள்.
عَنْ أَبِى هُرَيْرَةَ – رضى الله عنه – أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ بُعِثْتُ بِجَوَامِعِ الْكَلِمِ ، وَنُصِرْتُ بِالرُّعْبِ ، فَبَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِمَفَاتِيحِ خَزَائِنِ الأَرْضِ ، فَوُضِعَتْ فِى يَدِى . رواه البخاري
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:22 pm

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:


நான் ஒருங்கினைந்த (பொருள்களைத் தரும்) சொற்களுடன் அனுப்பட்டுள்ளேன். (எதிரிகளின் உள்ளத்தில் என்னைப் பற்றிய மதிப்பு கலந்த) அச்சம் ஏற்படுத்தப்பட்டு எனக்கு உதவப் பட்டுள்ளது. (ஒரு முறை) நான் உறங்கிக் கொண்டிருக்கையில் பூமியின் கருவூலங்கள் கொண்டுவரப்பட்டுஇ என் கையில் வைக்கப்பட்டன. நூல்: புஹாரி.


இந்த நபி மொழியில் ஒருங்கினைந்த பொருள்களைத் தரும் சொற்கள் என்பதற்கு பல அர்த்தம் கொள்ள முடியும். அதாவது குறிப்பிட்ட காலத்தில் காலாவதியாகிப் போகாமல் எல்லாக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும்படியான ஒருங்கினைத்த வார்த்தை என்றும் அதற்குப் பொருள் கொள்ளலாம். அதே போல்இ குறைந்த சொற்களால் நிறைந்த பொருள்கள் தரும் பேச்சு என்றும் அதனைப் புரிந்து கொள்ளலாம்.
அதே போல்இ சாதாரணப் அர்த்தத்தை பிரிதி பலிக்கும் அவர்களது வார்த்தையானது அறிவியல் உண்மையையும் உள்ளடக்கி இருக்கும் எனவும் விளங்கிக் கொள்ளலாம்.

ஏனெனில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பல அறிவியல் உண்மைகளையும் பேசியிருக்கிறார்கள். அவ்வாறு அவர்கள் பலஅறிவியல் உண்மைகளை 1430 ஆண்டுகளுக்கு முன்பே பேசியிருக்கிறார்கள் என்பது வியப்பிலும் மிகப் பெரும் வியப்பாக இருக்கிறது.


அவர்கள் பேசிய அந்த அறிவியல் உண்மைகள் அவர் ஒரு இறைத்தூதர்தான் என்பதை உறுதிப்படுத்தும் வலுவான ஆதாரங்களில் மிக முக்கிய ஒன்றாக இன்றும் திகழ்கிறது. அன்றைக்கும்இ இன்றைக்கும் நபிகளாரின் வார்த்தைகளில் உள்ள அந்த அறிவியல் உண்மையை அறிந்தவர்கள் பலரும் இஸ்லாத்தை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள் என்ற வரலாறு பொன்னெழுத்துக்களால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சுருங்கிச் சொல்லி நிறைய கருத்துகள் கூறும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்இ அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் அமைப்பில் பல அறிவியல் உண்மைகளை மிக எளிமையாகக் கூறியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் நாம் எழுதி வரும் கருயியல் அறிவியல் குறித்து அவர்கள் கூறியிருக்கும் ஒரு தகவல். இதோ! அதனை உங்களுக்கு முன் சமர்பிக்கிறேன்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:24 pm

عن ثوبان مولى رسول الله صلى الله عليه وسلم أنه قال كنت قائما عند رسول الله صلى الله عليه وسلم فجاء حبر من أحبار اليهود فقال السلام عليك يا محمد فدفعته دفعة كاد يصرع منها فقال لم تدفعني فقلت ألا تقول يا رسول الله فقال اليهودي إنما ندعوه باسمه الذي سماه به أهله فقال رسول الله صلى الله عليه وسلم إن اسمىمحمد الذي سماني به أهلي فقال اليهودي جئت أسألك فقال له رسول الله صلى الله عليه وسلم أينفعك شيء إن حدثتك قال أسمع بأذني فنكت رسول الله صلى الله عليه وسلم بعود معه فقال سل فقال اليهودي أين يكون الناس يوم تبدل الأرض غير الأرض والسماوات فقال رسول الله صلى الله عليه وسلم هم في الظلمة دون الجسر قال فمن أول الناس إجازة قال فقراء المهاجرين قال اليهودي فما تحفتهم حين يدخلون الجنة قال زيادة كبد النون قال فما غذاؤهم على أثرها قال ينحر لهم ثور الجنة الذي كان يأكل من أطرافها قال فما شرابهم عليه قال من عين فيها تسمى سلسبيلا قال صدقت قال وجئت أسألك عن شيء لا يعلمه أحد من أهل الأرض إلا نبي أو رجل أو رجلان قال ينفعك إن حدثتك قال أسمع بأذني قال جئت أسألك عن الولد قال ماء الرجل أبيض وماء المرأة أصفر فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله قال اليهودي لقد صدقت وإنك لنبي ثم انصرف فذهب فقال رسول الله صلى الله عليه وسلم لقد سألني هذا عن الذي سألني عنه ومالي علم بشيء منه حتى أتاني الله به رواه مسلم

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் அடிமையாயிருந்த ஃதவ்பான் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
நான் இறைத்தூதர் அருகில் நின்று கொண்டிருக்கும் போதுஇ யூத அறிஞர் ஒருவர் வந்து முஹம்மதே! அஸ்ஸலாமு அலைக்க (உன் மீது சாந்தி உண்டாகட்டும்) என்று (முகமன்) கூறினார். (அதனைக் கேட்டு ஆத்திரம் அடைந்த) நான் அவரைப் பிடித்து ஒரு தள்ளு தள்ளினேன். நிலை தடுமாறி விழப்போன அவர்இ ஏன் என்னைத் தள்ளுகிறாய்? என்று கேட்டார். அதற்கு நான்இ அல்லாஹ்வின் தூதரே என்று நீ சொல்லக் கூடாதா? (முஹம்மதே! என்று பெயர் கூறி அழைக்கிறாயே அதனால்தான் தள்ளினேன்) என்றேன். அதற்கு அந்த யூதர் அவருக்கு அவரின் குடும்பத்தினர் சூட்டிய பெயர் கொண்டுதான் நாங்கள் அழைப்போம் என்று கூறினார். (இதனைக் கண்டு கொண்டிருந்த) அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்இ ஆம்! எனது பெயர் முஹம்மத்-தான் இதுவே எனது குடும்பத்தினர் இட்ட பெயராகும் என்றார்கள்.பின்புஇ யூத அறிஞர் உங்களிடம் (சில விஷயங்கள் குறித்து) கேட்பதற்காகவே வந்தேன் என்று கூறினார்.


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் நான் கூறப் போகும் எந்த விஷயமும் உமக்கு பயனளிக்குமா? எனக் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்றார் வந்த யூதர். தன்னிடமிருந்த ஒரு குச்சியால் தரையைக் கீறிக் கொண்டே (ஆழ்ந்த சிந்தனையுடன்) கேளுங்கள் என்றார்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்கள்.


“இந்த பூமியும் வானங்களும் இப்போதுள்ள அமைப்பல்லாத வேறோர் மாற்றப்படும் (விசாரணை) நாளில் மக்கள் எங்கே இருப்பார்கள்?”இ என்று கேட்டார்.


அதற்கு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் (அஸ்ஸிராத் எனும்) பாலத்தின் அருகே இருளில் அவர்கள் இருப்பார்கள் என்று பதிலளித்தார்கள்.


மக்களிலேயே முதன் முதலில் (அப்பாலத்தைக்) கடப்பவர்கள் யார்? என்று அடுத்து வினவினார் அந்த யூதர். ஏழை முஹாஜிரீன்கள் (மக்காவைத் துறந்து மதீனா வந்து குடியேறிய அகதிகள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். அவர்கள் சுவனத்தில் நுழையும் போது வழங்கப்படும் வெகுமதி என்ன? என்று வினவினார். அதற்கு மீனின் ஈரலில் ஒட்டிக் கொண்டிருக்கும் தனித்துண்டு எனப் பதிலளித்தார்கள். அதன் பிறகு அவர்களுக்கு வழங்கப்படும் உணவு என்ன? என்று அவர் கேட்கஇ சுவனத்தின் ஓரங்களில் மேய்ந்து கொண்டிருக்கும் காளை மாடு அவர்களுக்காக அறு(க்கப்பட்டு விருந்தளி)க்கப் படும் என்று பதிலளித்தார்கள். அதற்குப் பின் அவர்கள் எதை அருந்துவார்கள் என்று அவர் வினவினார். அதற்கு அங்குள்ள ஸல்ஸபீல் என்றழைக்கப்படும் நீரூற்றிலிருந்து (அருந்துவார்கள்) என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்த போதுஇ நீர் கூறியது முற்றிலும் உண்மையே என்றார் அந்த யூதர்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:25 pm

பூமியில் வசிப்பவர்களில் ஒர் இறைத்தூதர் அல்லது ஓரிரண்டு மனிதர்களைத் தவிர வேறு யாரும் அறிந்திராத ஒரு (குறிப்பிட்ட) விஷயத்தைப் பற்றிக் கேட்கவே உம்மிடம் நான் வந்தேன். என்று கூறினார். நான் கூறப்போகும் விஷயம் உமக்குப் பயன் தருமா? என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கேட்டார்கள். செவி சாய்த்துக் கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறினார்.


குழந்தை(யின் பிறப்பு) குறித்து கேட்பதற்காக நாம் உம்மிடம் வந்தேன் என்றார். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் ஆணின் நீர் (விந்தணு) வெண்ணிறமுடையதும் பெண்ணின் (மதன) நீர் மஞ்சள் நிறமுடையதுமாகும். அவை இரண்டும் சேரும் போது ஆணின் நீர் (விந்தணு) பெண்ணின் நீரை (சினை முட்டையை) மிகைத்து விட்டால்இ அல்லாஹ்வின் நியதிப்படி ஆண் குழந்தை பிறக்கும்இ பெண்ணின் நீர் (சினை முட்டை) மிகைத்து விட்டால் அல்லாஹ்வின் நியதிப்படி பெண் குழந்தை பிறக்கும் என்று கூறினார்கள். அந்த யூத அறிஞர் நீர் சொன்னது உண்மைதான். நிச்சயமாக நீர் ஒர் இறைத்தூதர்(நபி)தாம் எனக் கூறி விட்டு திரும்பிச் சென்று விட்டார்.


அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள்இ இவர் எதைக் குறித்து என்னிடம் கேட்டாரோ அவற்றைக் குறித்து நான் ஏதும் அறியாதவனாகத்தான் இருந்தேன். அல்லாஹ்தான் அவற்றை எனக்கு அறிவித்துக் கொடுத்தான் என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்.

இந்த நபி மொழியினை சற்று ஆழ்ந்த சிந்தனையோடு மீண்டும் ஒரு முறை படித்துப் பாருங்கள். இன்றைய 21-ஆம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட பல அறிவியல் உண்மையைகளை மிக எளிமையாகவும்இ அதே நேரத்தில் அறியாமைக் காலத்து மக்களும் புரிந்து கொள்ளும் விதத்திலும் கூறப்பட்டிருப்பது தெரியவரும்.


மேலும்இ குழந்தை உருவாக்கத்திற்கு ஆண் விந்தணுவின் நிறமும்இ பெண்ணின் மதனநீரின் நிறமும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது குறித்து பதிநான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைத்தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். இன்னொரு நபி மொழியில் ஆணின் விந்தணு கெட்டியாகவும்இ வென்மை நிறமுடையதாகவும்இ பெண்ணின் மதன நீர் மெருதுவாகவும்இ மஞ்சள் நிறமுடையதாகவும் இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆரோக்கியமான குழந்தை உருவாக வேண்டுமானால் ஆணின் விந்து கெட்டியாகவும்இ வென்மையாகவும் இருக்க வேண்டும்.

காரணம் அதில்தான் வீரியமுள்ள உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகமாகக் காணப்படும்இ அதனால் குழந்தை தரிப்பதற்கான வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். பெண்ணின் விந்து மெருதுவாகவும்இ மஞ்சள் நிறத்திலும் இருக்க வேண்டும். அப்போது தோன்றும் கருமுட்டை முழு வளர்ச்சி அடைந்ததாக இருக்கும். அப்போது தன்னை நோக்கி வரும் உயிரணுவை முழு அளவில் ஏற்றுக் கொண்டு குழந்தை உருவாக காரணமாக அமைகிறது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by சபீர் Mon May 24, 2010 7:26 pm

ஆணின் விந்து கெட்டி குறைந்ததாகவோ அல்லது நிறமாறியதாகவோ இருக்குமானால் அவனது விந்துவில் உள்ள உயிரணுக்கள் வீரியம் குறைந்ததாகவும்இ எண்ணிக்கை குறைந்தாகவும் இருக்கும். அதனால் குழந்தை தரிக்க வைக்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும். அதுபோல்இ பெண்ணின் விந்துஇ அதன் தன்மையிலோஇ நிறத்திலோ மாறுபட்டிருக்குமானால் குழந்தை தரிப்பதில் தடங்கல்கள் பலவும் ஏற்படும் என்று இன்றைய மருத்துவ விஞ்ஞானம் கூறுகிறது.


அடுத்துஇ இந்த நபி மொழித் தொடரில்இ இரண்டும் கலந்து விடும் போது என்று நபியவர்கள் கூறியதன் மூலம்இ குழந்தை உருவாகுவதற்கு ஆண் பெண் ஆகிய இருவரின் விந்துவும் அவசியம் என்பதை எளிமையாக நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.


ஆனால்இ இந்த உண்மையை கடந்த 200 ஆண்டுகளுக்கு முன்புவரை இன்றைய அறிவியல் உலகில் யாருமே அறிந்திருக்க வில்லை. அதற்குப் பிறகுதான் இந்தச் செய்தியினை ஆய்வு செய்து அறிந்து கொள்ள முனைந்தார்கள்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம் - Page 5 Empty Re: இறைமறையில் அறிவியல் அற்புதங்கள் பற்றிய முழுவிளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை