புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:40 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தற்கால இலக்கியம் தலித் எழுத்தாளர்களையே பெரிதும் நம்பியுள்ளது:யாழன்ஆதி
Page 1 of 1 •
யாழன்ஆதி!. தாழ்த்தப்பட்ட, துன்ப படும் மனிதர்களின் வாழ்க்கையில் உள்ள வலியை கவிதை மூலம் உலகுக்கு தயங்காமல் வெளிப்படுத்தும் கவிஞன். யாருக்காகவும் தன் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாமல் சமூகத்தில் பாதிக்கப்படும் அப்பாவி மக்களுக்காக போராடுவதையே நோக்கமாக கொண்டு வாழ்பவர்.
வேலூர் மாவட்டம் ஆம்பூரில் தோல் தொழிற்சாலைகளில் கொத்தடிமைகளாக தங்களை பதிவு செய்துகொண்டு வயிற்றுக்காக வேலை தேடி ஓடும் முன்னாள் விவசாயிகள் நிறைந்து வாழும் பகுதியில் சாதிய முறையில் மேல்சாதியினால் வஞ்சிக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்தவர். பிரபு என்ற தன் இயற்பெயரை தமிழ் மீதான பற்றால் யாழன்ஆதி என மாற்றி வைத்துக்கொண்டார்.
ஆசிரியராக பணி செய்தாலும் இயற்கை மீது கொண்ட காதலால்.... மனிதன் தான் வாழ இயற்கையை அழிப்பதை பொறுக்க முடியாமலும், பாலாறு பாழனதை பொறுக்க முடியாமல் அதை எப்படி சரி செய்வது என தீவிர சுற்றுச்சூழல் ஆய்வில் ஈடுபட்டுகொண்டிருக்கிறார். சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இவரை நாம் நம் நந்தவனம் பகுதிக்காக சந்தித்து உரையாடிதில் இருந்து...
கேள்வி: உங்களுக்குள் இலக்கிய ஈடுபாடு வந்தது எப்படி ?
யாழன்: ஓன்பதாம் வகுப்பு ஆண்டுத்தேர்வு முடிந்த பிறகான விடுமுறையில் என்னுடைய அம்மா என்னை நூலகத்தில் சேர்த்தார்கள். அவர்கள் பத்தாம் வகுப்பு படித்து முடித்தபோது படித்த குறிஞ்சி மலர் என்னும் நாவல் குறித்து எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். தீபம் நா. பார்த்தசாரதி எழுதியது அது. அந்த நாவலை படித்துவிட்டு என் அம்மாவை ஆச்சரியத்தில் ஆழ்த்த வேண்டும் என்று நினைத்தேன்.
நூலகரிடம் சென்று அந்தப் புத்தகம் வேண்டுமென்று கேட்க அவர் என்னை மேலும் கீழும் பார்த்தார். பெரிய புத்தகம் படிக்க உன்னால் முடியுமா என்று அவர் கேட்டார். படிப்பேன் என்று கூறி அந்த நூலைப் படித்துமுடித்த போது வாழ்வின் ஏதோ புதிய பகுதியை அடைந்த உணர்வில் இருந்தேன். அம்மாவிடமும் இது பற்றி சொன்னேன். அதிலிருந்து வாசிப்பு எனக்கு வசப்பட்டது. அப்படியே பாரதி, பாரதிதாசன் என எல்லாரையும் வாசித்தேன். என்னுடைய தமிழாசிரியர் தீவிர தமிழ்ப்பற்றாளர் அவரும் எனக்கு பெரிய ஈர்ப்பாக இருந்தார்.
அப்போது கவிதைகள் எழுத ஆரம்பித்தேன். அதுதான் தொடக்கம். பதினோராம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிக்கையில் கவிதை எழுதுபவன் என்று அனைவராலும் அறியப்பட்டேன். கவியரங்குகளில் பங்கு பெறும் மிக இளையவனாக நானே இருந்தேன். அதனால் அனைவரும் பாராட்ட பாராட்ட இலக்கியம் நமக்கானது என்ற பூ என் வேர்களில் பூக்க ஆரம்பித்துவிட்டது.
இன்றுவரை தொடர்ந்து எழுதுவதற்கு அந்த அடித்தளமே காரணம்.
கேள்வி: உங்களை மனம் வெதும்ப வைத்த கவிதை?
யாழன்: நிறைய கவிதைகளை வாசித்திருக்கின்றேன். எல்லா கவிதைகளும் என்னை அலைக்கழிக்கவே செய்கின்றன. கவிதை தோன்றுகின்ற புள்ளி என்பது மனதின் அடித்தளம் என்னும் போது கவிதைகளின் ஆகிருதி என்பது மிக முக்கியமானது.
ஆகையால் இந்தக் கவிதை என்னை பாதிக்கின்றது என்று கூறமுடியாது. ஆனால் என்னை எப்போதும் ஒரு கவிதை மிரட்டிக்கொண்டே இருக்கின்றது.
இப்படி ஒரு கவிதையை உன்னால் எழுத முடியுமா என்று அது என்னை எப்போதும் கேட்டுக்கொண்டே இருக்கின்றது.
ஆதிக்க சமூகத்தினர் இடஒதுக்கீடு கொள்கைக்கு எதிராக நடத்திய போராட்டத்தினை முன்வைத்து ஆந்திரப் புரட்சிக்கவிஞர் வரவரராவ் எழுதிய கவிதை அது. எஸ்.வி.ஆர்.,வ.கீதா மொழிப்பெயர்ப்பில் தமிழில் வெளிவந்திருக்கும் மூன்றாம் உலகக் கவிதைகள் மண்ணும் சொல்லும் என்னும் தலைப்பில் வெளிவந்த தொகுப்பில் இருக்கும் பாக்கியசாலிகள் என்னும் அந்தக் கவிதை.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேள்வி: உங்களுடைய கவிதைகள் பெரும்பாலும் தலித் சமுக பிரச்சனைகளை சார்ந்தேயிருப்பது ஏன் ?
யாழன்: என்னுடைய இரண்டாவது தொகுப்பான செவிப்பறையில் இருக்கும் கவிதை ஒன்றை இதற்கு பதிலாக்கிவிடலாம்.
பெங்குவின் நிறுவனம் வெளியிட்டுள்ள ரேப்பிட்ஸ் ஆப் த கிரேட் ரிவர் என்னும் ஆங்கில நூலில் இக்கவிதை இடம் பெற்றுள்ளது. “என் சொற்களில் தேடாதீர் போதை தரும் எதையும்” எனத்தொடங்கும் அது என் முன்னோர்களுக்குக் கொடுத்த சாணிப்பாலைதான் கக்கிக் கொண்டிருக்கின்றேன் கவிதை என்று முடியும்.
ஆம். என் கவிதைகள் பெரும்பாலும் தலித்தியம் குறித்துதான் பேசுகின்றன. அது காதலானாலும் அரசியலானாலும் இந்தச் சமூகம் என் மேல் சுமத்திய பாரத்தின் வலியைத்தான் என்னால் எழுத முடிகிறது. ஒரு ஆக்கவாளி என்பவன் இந்த சமூகத்திலிருந்துதான் தனக்கான ஆக்க வெளிகளை உருவாக்குகின்றான். அவற்றை மீண்டும் சமூகத்திடமே கொண்டு சேர்க்கின்றான். அப்போது சமூகம் தன்னை கட்டுடைத்துக் கொள்ள வேண்டும். தனது மோசமான பழமைகளை விட்டுவிட்டு அது விடுதலைக்கான தன்னிலையை அடைய வேண்டும்.
ஆனால் கெடுவாய்ப்பாக இந்திய சமூகம் மானுட விடுதலைக்கு எதிரானதாகவே இருக்கின்றது. அதன் வேர் சாதியத்தில்தான் இருக்கின்றது. சாதி தகர்க்கப் படுகின்ற போதுதான் சமநிலைச் சமூகம் உருவாகும். ஆகவேதான் என்னுடைய ஆக்கங்களை நான் அப்படி உருவாக்குகின்றேன். தலித் பிரச்சனை என்று மட்டுமல்லாமல் விடுதலைக்கானப் போரில் எந்த சமூகம் இந்த நிலப்பரப்பின் மூலையில் போராடினாலும் அது குறித்து எழுதுவது என் வேலை.
கேள்வி: இலக்கிய உலகில் தலித் கவிஞர்களுடைய நிலை எப்படியுள்ளது?
யாழன்: தமிழ் இலக்கிய உலகில் என்று நான் இதை எடுத்துக்கொள்கிறேன். இன்றைக்கு தமிழ் இலக்கிய உலகில் கவிதைக்கு ஒரு தேக்க நிலையேதான் இருக்கின்றது. பெண் கவிஞர்களின் தீவிர எழுத்தைப் போல நுண்ணரசியலைப் பேசக்கூடிய பொதுநிலைக்கவிதைகள் அருகிக்கொண்டுதான் இருக்கின்றன.
தலித் கவிஞர்களைப் பொறுத்த வரையில் என்னால் மிக தைரியமாகச் சொல்லமுடியும் அவர்கள்தான் வாழ்வை எழுதுபவர்களாக இருக்கின்றனர். அவர்களுக்கு மட்டும் தான் எழுதுவதற்கான தேவையும் கருப்பொருளும் இருக்கின்றன.
வெறும் வார்த்தை விளையாட்டுகளைத் தாண்டி வாழ்வின் அவஸ்தைகளை அவர்கள் மட்டும்தான் பதிவு செய்ய முடியும்.
ஆனால் தற்காலத்தில் அத்தகைய திடகாத்திரமான ஆக்கங்கள் எதுவும் தலித் கவிஞர்களிடத்திலிருந்து வரவில்லை. காரணம் கூட எளிது. அவர்களுக்கு தற்போது கள அனுபவம் இல்லை. பழைய வரலாற்றின் கூறுகளை அறிய அவர்கள் பயணிக்க வேண்டிய தூரம் இன்னும் அதிகதிகமாக உள்ளது.
கேள்வி: கவிஞர்களுள் தலித் கவிஞர்கள் மட்டும் தங்களை சாதி ரீதியாக அடையாப்படுத்திக்கொள்வது ஏன்?
யாழன்: தலித் என்னும் சொல் சாதிய ரீதியானது இல்லை. அது மானுட விடுதலையை வென்றெடுக்கக் கூடியது. சாதியற்ற சமநிலையை உருவாக்க ஒரு கருவியாகப் பயன்படும் சொல் அது. இந்த மண்ணோடும் வேரோடும் இருக்கக் கூடிய மக்களை எது பிரித்திருந்தாலும் அவர்களை ஒன்றிணைக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தும் சொல் அது. அதைச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் தலித் என்பதை சாதியாக்கி வைத்திருப்பது யாரோ செய்த தவறு. ஆகவே அது சாதிய அடையாளம் இல்லை. விடுதலையின் குறியீடு.
இந்திய சுதந்திரத்திற்காகப் பாடியவர்களை தேசியக் கவிகள் என்று கூறுகின்றோமே அத்தகைய சொல்தான் தலித் கவிஞர்கள் என்னும் சொல்லும். தேசியக் கவிகள் மண் விடுதலைக்காகப் பாடினார்கள். தலித் கவிஞர்கள் மக்கள் விடுதலைக்காகப் பாடுகின்றோம். ஈழத்துக் கவிஞர்களையும் நாம் இத்தகைய தன்மையோடுதான் பார்க்க வேண்டும். அவர்களும் தமிழில்தான் எழுதுகிறார்கள். ஆனால் அவர்கள் ஈழத்துக் கவிஞர்கள் என்று சொல்லப்படுவதன் உட்பொருள் அவர்கள் ஈழத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அன்று. ..அவர்கள் விடுதலைக்குப் போராடுபவர்கள் என்பதுதான் வெளிப்படை.
கேள்வி: தலித் கவிஞர்களுக்கான வாய்ப்புகள் இலக்கிய உலகில் கிடைக்கிறதா?
யாழன்: வாய்ப்பு என்பதை எப்படி கணிப்பது? இதழ்களில் கவிதைகள் வெளிவருவதையா அல்லது பதிப்பகங்களில் தொகுப்புகள் வருவதையா என்பதை நோக்க வேண்டியிருக்கின்றது. கவிதை என்பது ஒரு சந்தை பொருள் அல்ல. பிற எழுத்து வகைமைகள்... அதாவது சிறுகதை, நாவல், கட்டுரை போன்றவற்றை சந்தைப்படுத்துதல் என்பது மிகவும் எளிது. இன்னும் தற்போதைய சூழலில் தன்னம்பிக்கை நூல்கள் அல்லது பணக்காரராவது எப்படி என்பன போன்ற நூல்கள் அதிகமாக விற்கின்றன.

ஆனால் கவிதை அப்படிப் பட்டதல்ல. அது ஒரு லாகிரி வஸ்துவும் இல்லை. கவிதை ஒருவரின் வலியை வாழ்வைப் பற்றிப் பேசக்கூடியது. புகழ் பெற்றவர்களின் தொகுப்புகள் அல்லது இயக்க சார்பு உள்ளவர்களின் தொகுப்புகள் வெளிவந்து நன்றாக பரவலாக்கப்படும்.
ஆனால் தலித் கவிஞர்களுக்கு அப்படியில்லை. அவர் புதிதாக எழுதவந்தவராயிருப்பின் இன்னும் மோசம். அவர்களே அவர்களின் தொகுப்பை சொந்த காசை செலவழித்துப் போட்டு வெளியீட்டு விழா நடத்தி கடைசியில் புத்தகமெல்லாம் விற்காமல் வீட்டிலேயே இருக்கும். ஆண்டுகள் போகப்போக அடுப்பெரிக்கப் பயன்படும். இப்படித்தான் இருக்கின்றது தலித் கவிஞர்களின் நிலை.
சில பதிப்பகங்கள் தலித் எழுத்துக்கு உள்ள வியாபார வாய்ப்புகளை மிகச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு புத்தகங்கள் போட்டு காசு பார்க்கின்றார்கள். ஆனால் அவர்கள் நடத்தும் இலக்கிய இதழ்களில் அத்தகைய தலித் கவிஞர்களின் படைப்புகளை வெளியிட பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர்.
கேள்வி: கவிஞர் லீணாமணிமேகலை உடல் உறுப்புகளை, உடல் உறவைப் பற்றி அவர் எழுதிய கவிதை புத்தகத்தை வெளியிட்டார். இப்புத்தகம் இலக்கிய உலகில் பல வித சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. உங்களது பார்வையில் இதை எப்படி பார்க்கிறீர்கள் ?
யாழன்: லீனாவின் கவிதைகள் மட்டுமல்ல. உடல்மொழியினை முன்வைத்து எழுதுகின்ற எல்லா பெண் கவிஞர்களுக்கும் இத்தகைய நிலைதான். முலைகள் தொகுப்பு வெளிவந்த நேரத்தில் குட்டி ரேவதி கொச்சைப்படுத்தப்பட்டார். சுகிர்தராணியின் கவிதைகள் இத்தகைய தாக்குதலுக்கு உள்ளாகின. மாலதி மைத்ரி, சல்மா போன்றோர்களும் தங்கள் எழுத்துக்களினால் பாதிப்படைந்துள்ளனர். இப்படி எழுதும் பெண் கவிஞர்களை நடத்தைக்கெட்டவர்களாகப் பார்க்கும் கோணமும் உள்ளது.
பெண்கள் பேசவந்திருக்கும் காலமிது. அவர்களுக்கான வாழ்வை அவர்களின் மொழியில் சுதந்திரமாக சொல்ல ஆயுதமாக அவர்கள் மொழியினை எடுத்துள்ளார்கள். எழுத்து என்பது சமூக மாற்றத்தினைக் கொண்டுவரும் ஆற்றல் படைத்தது. இதை நன்றாக உணர்ந்த ஆதிக்கவாதிகள் பெண்களை எழுதுவதிலிருந்து தடுத்திட வேண்டும் என்று அங்கலாய்க்கிறார்கள். இவற்றை
எதிர்க்கின்ற இந்துத்துவவாதிகள் கோயில்களில் இருக்கும் ஆபாச சிலைகள் பற்றியோ அல்லது புராணங்களில் இருக்கும் ஆபாசங்கள் குறித்தோ யாரிடம் முறையிடுவார்கள்?
கேள்வி: தலித் கவிஞர்கள் அதிகம் வெளியே வந்து பிரபலமடைவதில்லையே ஏன்?
யாழன்: அப்படி சொல்லமுடியாது. தற்கால இலக்கியம் தலித் எழுத்தாளர்களை பெரிதும் நம்பியுள்ளது என்பதுதான் உண்மை. பாமாவின் நாவல்கள் உலகப்புகழ் பெற்றவை. சிவகாமியின் நாவல்கள் புதிய வகைகளை உருவாக்கியவை. ரவிக்குமாரின் எழுத்துகளில் பொங்கும் கொதிப்புகள் அடங்காதவை. இமையத்தின் கதைகள் பெரிதும் போற்றுதலுக்கும் இலக்கிய ஆய்வுக்கும் உரியன. என்.டி.ராஜ்குமாரின் மாந்திரீகக் கவிதைகள் 3000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தமிழ்க்கவிதை உலகுக்குப் புதியன.
அழகிய பெரியவனின் எழுத்துக்கள் விருதுக்கானவை. சுகிர்தராணியின் கவிதைகள் தமிழின் உச்சபட்ச அழகியலைக் கொண்டிருப்பவை. புனிதபாண்டியனின் தலையங்கங்களும் அவரின் கேள்விகளும் பொதுச்சமூகத்தால் எதிர்கொள்ள முடியாதன.
ஸ்டாலின் ராஜாங்கத்தின் நுண்வரலாறுகள் ஆய்வுப்பூர்வமானவை. இப்படி பெரும் பட்டியல் உண்டு.
இயக்கரீதியாகப் பார்த்தால்கூட இன்றைக்கு அதிகமான புத்தகங்களை வெளியிடுபவை தலித் இயக்கங்கள்தான். ஆனால் என்ன முக்கியமான விஷயம் என்றால் இவர்களை பொது அடையாளத்தோடு இயங்குகின்ற இலக்கியவாதிகள், ஆய்வாளர்கள், இதழாசிரியர்கள் கண்டுகொள்வதில்லை. அதனால் பொது அரங்கில் தலித் எழுத்துக்கள் பெரிதும் சேரவில்லை.
கேள்வி: பலவித பெயர்களில் கவிதை எழுதுகிறார்கள். ஆனால் பல கவிதைகளை புரிந்து கொள்ள முடிவதில்லையே ஏன்?
யாழன்: கவிதைக்கானப் புரிதல் என்பது வாசிப்பு அனுபவத்தைப் பொறுத்தது. சங்க இலக்கியங்களையும், திருக்குறள் போன்ற அற இலக்கியங்களையும் எப்படி புரிந்துகொள்வது? கவிதை என்பது வாசிப்பவரின் மறுபடைப்பாக்கத்தினைப் பொறுத்தது. நேரிடையானக் கவிதைகல் எவ்விதமான தாக்கத்தினையும் ஏற்படுத்துவதில்லை.
ஆனால் இருண்மைக் கவிதைகள் அதாவது புரியவில்லை என்று சொல்லப்படும் கவிதைகள் அப்படியல்ல. அவை வாசிப்பாளரின் மறுவாசிப்பை கோருகின்றன. மறுவாசிப்பு என்பது அவரை யோசிக்கக் கூடியவராக மாற்றுகின்றது. அதுதான் இலக்கிய வாசிப்பின் பயனாக இருக்க முடியும். கவிதையினை ஓர் அளவுகோலை வைத்து அளக்க முடியாது. அது புரிந்தாலும் புரியாவிட்டாலும் கவிதை மனதுக்குள் நிகழ்த்துகின்ற மாற்றங்களே அதன் இயங்கியலாகஇருக்கமுடியும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கேள்வி: புத்தகத்தில் மட்டுமே கதை, கவிதைகளை படித்துக்கொண்டிருந்தார்கள் தற்போது, இணையம் வழியாக வாசிக்க ஆரம்பித்துவிட்டார்கள். இந்த வளர்ச்சி இலக்கிய உலகில் என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக எண்ணுகிறிர்கள்?
யாழன்: ஒரு கவிதைத் தொகுப்பு என்பது வெளியீடாகும் போது 500லிருந்து 1000 பிரதிகள் அச்சடிக்கப்படுகின்றன. ஒரு பிரதிக்கு 5 பேர் என்றாலும் அதிகபட்சமாக 5000 பேர் படித்திருக்க வாய்ப்புண்டு. வெகுசன இதழ்களில் வெளிவரும் கவிதைகள், ஆக்கங்கள் பெரும்பான்மை மக்களை அடைக்கின்றன. ஆனால் அதே நேரத்தில் இடைநிலை இதழ்கள், சிற்றிதழ்கள் ஆகியனவற்றில் வரும் படைப்புகள் குறைந்த அளவு வாசகப்பரப்பினையே கொண்டிருக்கின்றது.
தற்போது இணையத்தில் வாசித்தல் என்பது இன்னும் கொஞ்சம் வாசக எண்ணிக்கியைக் கூட்டியிருக்கின்றது. இணைய தமிழ் என்பது ஈழத்தமிழர்களின் ஈவு என்றுதான் சொல்லவேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்களை அயராத உழைப்பினால் இது வாய்த்திருக்கின்றது. நிறைய இணைய இதழ்கள் இப்போது நமக்கு கிடைக்கின்றன. அச்சு ஊடகத்தில் வரும் பல முக்கியமான இதழ்கள் எல்லாம் இப்போது இணையத்தில் கிடைக்கின்றன.
உலகம் முழுக்க வாசகர்கள் கிடைக்கிறார்கள். எழுத்துக்கு விமர்சனமும் எதிர்வினையும் உடனே கிடைக்கின்றன.
பிளாக்குகள் என்கின்ற வலைப்பக்கங்கள், சமுதாய வலையுறவுகள் இருப்பதால் எழுதுபவர்கள் அதிகமாகி இருக்கின்றார்கள்.
ஊடகத்தின் இன்னொரு வகையாக இணையம் உருவாகி வருவது மிகவும் நல்லதுதான்.
கேள்வி: பாரதியார், பாரதிதாசன் போன்ற பல கவிஞர்கள் மக்களிடத்தில் எழுச்சியை உண்டு பண்ணுவதற்காக கவிதைகளை எழுதினார்கள். ஆனால் இன்றைய கவிஞர்கள் பலர் காதல் கவிதைகளை மட்டுமே எழுதிக்கொண்டுயிருப்பது ஏன்? சமுதாய மாற்றத்துக்கான கவிதைகள் இன்றைய கவிஞர்களிடம் குறைந்தது ஏன்?
யாழன்: அமைகின்ற களத்தினையும் வாழ்வையும் பொறுத்ததுதானே கவிதை என்பது. பசியே அறியாத தற்கால கணிப்பொறி பெற்றோருக்குப் பிறந்த ஒருவர் எழுதவந்தால் பசியைப் பற்றி அவர் எப்படி எழுதமுடியும்? அப்படியே எழுதினாலும் அது உயிரற்றதாகத்தானே இருக்கும். பாரதிக்கும் தாசனுக்கும் களம் இருந்தது. அவர்கள் இயங்க வேண்டிய தத்துவம் அவர்களுக்கு இருந்தது. அரசியல் இருந்தது. வாழ்வு இருந்தது.
ஆனால் இப்போது எழுதுபவர்ளுக்கு அரசியல் உட்பட எதுவுமே இல்லை. அதனால் அவர்கள் அவர்களளவில் காதல் என்று எதைக் கருதுகிறார்களோ அதை எழுதுகிறார்கள். அது மட்டுமில்லை காட்சி ஊடகங்களில் எழுதுகிறவர்கள்தான் கவிஞர்கள் என்று தமிழன் தப்பர்த்தம் கொண்டுள்ளான். பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவனிடம் கேளுங்கள் உங்களுக்குத் தெரிந்த கவிஞர் யார் என்று? வைரமுத்துவும் வாலியும் என்று சொல்வார்கள்.
தற்போது எழுதும் சினிமாக் கவிஞர்களையும் அவர்களுக்குத் தெரிந்திருக்கும். கவிதைகளை அவர்கள் பாடலாசிரியர்களிடமிருந்துதான் பெறுகிறார்கள். அதனால் காதல் கவிதைகளை எழுதுகிறார்கள். கலாப்பிரியாவோ, ஆத்மாநாமோ, பிரமிளோ அவர்களுக்குத் தெரியாது. ஏன் பல தமிழாசிரியர்களுக்கே தெரியாது. ஆனால் ஒரு நன்மை இருக்கின்றது. எழுத்தின் ஆரம்பம் இப்படி ஆரம்பித்து தொடர்ந்து வாசிக்கையில் அவர்கள் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து விடுவார்கள்.
கேள்வி: உங்களுடைய வாசிப்பு எதை தேடுகிறது, வருகாலங்களில் உங்களுடைய படைப்புகள் எதை சார்ந்துயிருக்கும், எதற்கு முக்கியத்துவம் இருக்கும்?
யாழன்: என்னுடைய வாசிப்பு என்பது எனக்கான மொழியினை அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மானுட விடுதலை என்னும் மகத்துவத்தைப் பேசும் நுண்ணரசியலை மையமாகக் கொண்டுள்ளது. அழியும் உலகினை மீட்டெடுக்கும் சூழலியல் சார்ந்தது. நல்ல மாணாக்கர்களை உருவாக்கும் மாற்றுக் கல்வியினை நோக்கியது. விடுதலை செய்வது உறவை வளர்ப்பது என்று பவுலோ பிரையர் சொல்வதைப் போல விடுதலை மூலம் உலக மானுடத்தை ஒன்றாக்கும் இலக்குடையது.
பாதிக்கப்படும் மக்களுக்காகப் பேசும் குரலுடையது. வருங்காலங்களிலும் என்னுடைய ஆக்கங்கள் இவற்றையே சார்ந்திருக்கும். சாதி சமயமற்ற சமநிலைச் சமூகம் அமைவதற்கான அன்பும் அது சார்ந்த இயற்கை நேசிப்பும் என் ஆக்கங்களில் முக்கியத்துவம் பெறும்.
சந்திப்பு: ராஜ்ப்ரியன்.
நன்றி: நந்தவனம்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1