புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Yesterday at 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Yesterday at 9:39 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 9:27 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:21 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:54 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:49 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:30 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:11 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:56 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Yesterday at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:56 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Yesterday at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Yesterday at 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Yesterday at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Yesterday at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Mon Jun 24, 2024 12:16 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
32 Posts - 42%
heezulia
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
32 Posts - 42%
Balaurushya
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
2 Posts - 3%
Dr.S.Soundarapandian
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
2 Posts - 3%
prajai
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
2 Posts - 3%
Manimegala
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
2 Posts - 3%
Ammu Swarnalatha
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
1 Post - 1%
jothi64
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
398 Posts - 49%
heezulia
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
268 Posts - 33%
Dr.S.Soundarapandian
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
26 Posts - 3%
prajai
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
5 Posts - 1%
sugumaran
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
பத்து புத்தகங்கள் Poll_c10பத்து புத்தகங்கள் Poll_m10பத்து புத்தகங்கள் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பத்து புத்தகங்கள்


   
   
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 7:08 pm

ஒருவன் வீட்டில் இருந்தே ஆக வேண்டிய பத்து புத்தகங்களின் பட்டியலை உடனடியாகத் தயார் செய்யுங்கள். " என்று எனது நண்பர் ஒருவர் சொல்லியிருந்தார்.

மிக மிக யோசனைகள் செய்து இந்தப் பட்டியலை உருவாக்கினேன். நிச்சயமாக ஒரு வாசிப்பாளனாக இது அவரை மாற்றும் என்று சொல்வதற்கில்லை. என்னளவில் இவை என் வாழ்வில் மிக முக்கியப் புத்தகங்களாக நான் கருதுகிறேன்.

இதில் மாக்ஸிம் கார்க்கியின் புத்தகத்தைக் குறிப்பிட நினைத்தேன். பலபேர் படிக்கச் சொல்வதால். ஆனால் நான் இன்னும் படிக்காததால் குறிப்பிடவில்லை.

வாழ்க்கை, ஆன்மீகம், கவிதை, கட்டுரைகள், சினிமா என்று வாசிப்புத்தளம் விரிவடைய எல்லாத் துறைகளையும் தேர்ந்தெடுத்து குறிப்பிட்டிருக்கிறேன்.

இனி.. பட்டியல்....

1. ஒரு யோகியின் சுயசரிதம் – பரமஹம்ஸ யோகானந்தர்

ஆன்மிகம் என்பது ஒரு நெடிய பயணம். முடிவிலி. அந்தப் பயணத்தில் உங்களுக்கு இருக்கும் பல கேள்விகளுக்கு இதில் பல கோணங்களில் விடையிருக்கும்... நிச்சயமாக. அதுவும் இடைவெளி விட்டு ஒவ்வொரு முறை படிக்கும்போதும் வெவ்வேறாக உங்களுக்குள் கதவு திறக்கும்!

2. எல்லார்க்கும் அன்புடன் – கல்யாண்ஜி

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!

3. வனவாசம்,மனவாசம் – கவியரசு.கண்ணதாசனின் சுயசரிதை

கண்ணதாசனின் சுயசரிதை, வாலியின் சுயசரிதை (நானும் இந்த நூற்றாண்டும்) இரண்டுக்கும் நடந்த ரேஸில் சந்தேகத்துக்கிடமின்றி கவியரசர் வென்றுவிட்டார். காரணம் தமிழக அரசியல் குறித்தும், திரைப்படத் துறை குறித்தும் நீங்கள் கொஞ்சமேனும் தெரிந்து கொள்ள இது உதவும். இரண்டு பாகங்களையும் ஒன்றென குறிப்பிட்டு விட்டேன்!

4. கோணல் பக்கங்கள் 1,2,3 – சாருநிவேதிதா.

சாருவைப் பிடிக்காது என்று சொல்ல எல்லாருக்கும் உரிமை உண்டு. ஆனால் நிச்சயமாக படித்துவிட்டுத்தான் சொல்ல வேண்டும். அப்படி ஒரு தவிர்க்க முடியாத எழுத்து சாருவுடையது. அவரது கட்டுரைகளின் தொகுப்பு இந்தக் கோணல்பக்கங்கள். இதிலிருப்பது இப்போதைய சாரு அல்ல. அப்போது அவரது எழுத்தில் இருந்த குறும்பும், கோபமும் இப்போது வேறு வடிவம் கொண்டதன் விளைவே பல சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்! (நேரம்.. நானெல்லாம் சாருவை விமர்சிக்கிறேன். ஸாரி சாரு!!)

5. சத்தியசோதனை – மகாத்மா காந்தி

இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்பதை எழுதுவதை விட நீங்களாகப் படித்துத் தெரிந்து கொள்வது நலம். காரணம் நிச்சயம் நீங்கள் நூலகம் எல்லாம் வைத்து ஒரு வாசிப்பாளனாகக் காட்டிக் கொள்ளும்போது பல விவாதங்களில் காந்தி அடிபடுவார். (என்ன முரண்! அகிம்சைக்காரர் அடிபடுகிறார்!) படித்து விட்டு விமர்சித்தால் உங்களுக்கு சௌகரியம்... காந்திக்கும்!

6. கதாவிலாசம் – எஸ்.ராமகிருஷ்ணன்

முக்கியமாக எஸ்.ரா-வின் இந்தப் புத்தகத்தைக் குறிப்பிடக் காரணம், இது ஒன்றைப் படித்தால் இன்னும் 50 புத்தகங்கள் வாங்க அவரைத் தூண்டும். தமிழில் தவிர்க்கவே முடியாத ஆளுமை கொண்ட 50 எழுத்தாளர்களைக் குறித்து அதில் அவர் எழுதியிருக்கிறார். 50 இல்லையெனினும் 20 எழுத்தாளர்களைத் தேடி ஓடுவது உறுதி.

7. பொன்னியின் செல்வன் – கல்கி

வரலாற்று எழுத்து அதிலும் ஒரு க்ரைம் நாவலுக்குரிய ஸ்பீடு, சஸ்பென்ஸ், பாத்திரப் படைப்புகள்...! பொன்னியின் செல்வனைப் படித்து விட்டு, சிவகாமியின் சபதத்தை தேடிப் போகாமலா இருப்பீர்கள்?!?

8. வால்காவிலிருந்து கங்கை வரை – ராகுல் சாங்கிருத்தியன்

ரொம்ப போரடிக்கிற எழுத்து. ஆனால் நாகரிகங்களைப் பற்றி அறிந்து கொள்ள நிச்சயமாக படிக்க வேண்டிய ஒரு புத்தகம். கி.மு.6000த்திலிருந்து 20ம் நூற்றாண்டு வரை நாகரிகங்களில் என்னென்ன மாற்றம் நிகழ்ந்துள்ளன என அறிய இதிலுள்ள 20 கதைகள் உதவும்.

9. நீங்களும் முதல்வராகலாம் – ரா.கி.ரங்கராஜன்

அற்புதமான ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம். அலுவலகத்தில், வீட்டில், சமூகத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டால் முன்னுக்கு வரலாம் என்பது ரொம்பப் பிராக்டிகலாக எழுதப்பட்டிருக்கும். படித்தால் நிச்சயம் ‘ஓ.. அவன் முன்னேறினது இதே மாதிரிதான்ல’ என்று யாரையாவது ஒப்பிட்டுக் கொள்வீர்கள்.

10. உலகசினிமா 1,2 – செழியன்

வாசிப்பு என்று தளம் விரிவடையும்போது சினிமா குறித்த அறிவு தவிர்க்க முடியாதது. அதற்கு உலகசினிமாக்களைப் பார்க்க வேண்டியது அவசியம். இந்தப் புத்தகத்தைப் படித்து இவற்றிலுள்ளவற்றில் 30% படங்களைப் பார்த்தாலே ஓரளவு சினிமாவை ரசிக்க... அதாவது எப்படி ரசிக்க என்பதை அறிந்து கொள்வீர்கள்.

மிகுந்த வலியோடு சுஜாதாவின் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் இதில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன். காரணம் வாசிக்க ஆரம்பித்தால் நிச்சயம் சுஜாதாவைத் தொடாமல் இருக்க முடியாது.. அதை நானாகச் சொல்லி பத்தில் ஒரு எண்ணிகையைக் குறைத்துக் கொள்வானேன் என்பதால்.

மிக முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும்...

நிச்சயமாக ‘அட.. இத விட்டுட்டோமே’ என்று நினைக்கத்தான் போகிறேன்.. ஏதாவது ஒரு புத்தகத்தைப் பார்த்து. அதேபோல இதிலுள்ள எல்லாமே உங்கள் எல்லாருக்குமே பிடித்ததாய் இருக்காது. ஆனால் எல்லாருக்குமே பத்தில் ஏதோ ஒன்று தவிர்க்க முடியாததாக இருக்குமென்று நம்புகிறேன். நீங்கள் நினைக்கும் புத்தகம் வேறெதுவும் இருந்தால் பின்னூட்டத்தில் சொல்லுங்கள்.

இதைப் பதிவாக எழுதக் காரணம் எனக்கும் ஒன்றிரண்டு நண்பர்கள் ‘புதிதாகப் படிப்பதென்றால் என்ன புத்தகங்கள் வாங்க?’ என்று கேட்டு மின்னஞ்சல் அனுப்புகிறார்கள். ‘நானெல்லாம் அதைச் சொல்வதா’ என்ற காரணத்தால் பதிலளிக்காமலே இருந்திருக்கிறேன். என்னமோ நானெழுதுவதையும் எழுத்தென்று படிக்கும் சிலர் மீண்டும் மீண்டும் கேட்கும்போது சுட்டி கொடுக்க இந்தப் பதிவு எனக்கு உதவும்.

கா.ந.கல்யாணசுந்தரம்
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3793
இணைந்தது : 28/02/2009
http://kavithaivaasal.blogspot.in/

Postகா.ந.கல்யாணசுந்தரம் Sun Nov 08, 2009 7:51 pm

சிறந்த பத்து புத்தகங்களைப் பற்றி சொன்ன பாலா கார்த்திக் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

கா.ந.கல்யாணசுந்தரம்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sun Nov 08, 2009 7:57 pm

Kaa Na Kalyanasundaram wrote:சிறந்த பத்து புத்தகங்களைப் பற்றி சொன்ன பாலா கார்த்திக் அவர்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களும்!

கா.ந.கல்யாணசுந்தரம்.

சியர்ஸ் தாங்களும் தங்களுக்கு தெரிந்த புத்தகங்களை கூறினால் நானும் பயனுருவேன். நடனம்

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sun Nov 08, 2009 9:15 pm

கார்த்திக்..நன்றிகள்.. பத்து புத்தகங்கள் 677196



balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon May 17, 2010 3:28 pm

புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒரு அன்யோனியத்தை போன்றது . பொம்மையை இறுக்கி அணைத்து தூங்கும் குழந்தை போல புத்தகங்களோடு நான் நெருங்கி இருக்கின்றேன். புத்தகங்கள் எனக்கொரு உருவை, ஒரு தைரியத்தை, ஒரு தெளிவை தருகின்றன என்பதை நம்புபவன் நான். பின் வருபவை நான் மிக மிக நேசிக்கும் புத்தகங்களின் வரிசை. இதை விட மிக சிறந்த புத்தகங்கள் தமிழில் உள்ளன என்றாலும் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை மட்டும் இங்கே வரிசைபடுத்துகிறேன்.

10 . தண்ணீர் தேசம் - வைரமுத்து.

கடல் பற்றிய ஆச்சரியங்களை அழகான காதல் கலந்து சொன்ன படைப்பு. கவிதை நடையில் ஒரு நாவல். திகட்ட திகட்ட தமிழ் கடலில் மூழ்கி எழுந்த அனுபவம் இந்த புத்தக வாசிப்பில் கிடைக்கும். கவிதை மூலமாகவே ஒரு பரபரக்க வைக்கும் கதை சொல்ல முடியும் என்பதை வைரமுத்து அவர்கள் அழுத்தமாய் நிரூபித்த படைப்பு இது.

09 . பிருந்தாவனமும் நொந்த குமாரனும் - பி.கே.பி.

நம்புங்கள், இந்த புத்தகத்தை 5 வருடங்களுக்கு முன், பழைய புத்தககடையில் இரண்டு ரூபாய்க்கு வாங்கி படித்தேன். PKP அவர்கள் எத்தனையோ காதல் கதைகள், துப்பறியும் கதைகள் எழுதியிருந்தாலும், நகைச்சுவையில் அவருடைய மாஸ்டர் பீஸ் இது. ஆரம்ப வரிகளில் தொடங்கும் காமெடி கலாட்டா முற்றும் போடும் வரையிலும் பின்னி பெடலெடுக்கும். சேட்டை கோபி, நந்து என்கின்ற நந்த குமார் அவர்களுடைய பஞ்ச கல்யாணி எனப்படும் மோட்டார் சைக்கிள் (இந்த வண்டிக்கு திரவ வடிவத்தில் இருக்கும் எதை ஊற்றினாலும் ஓடும்), குழாங்கல்லில் இருந்து எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வில்லன் என ஒரு அட்டகாசமான காமெடி படம் பார்த்த திருப்தி இந்த புத்தகத்தை வாசித்தால் கிடைக்கும். சமீபத்திய புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை 150 ரூபாய் விலையில் பார்த்ததாக ஞாபகம்.

08 . நிலா நிழல். - சுஜாதா

சுஜாதா சாருடைய எழுத்துக்கள் எப்போதுமே ஒரு நண்பனை போல தோளில் கை போட்டு கதை சொல்லும். அந்த நடையில் கண்முன்னே ஒரு கிரிக்கெட் போட்டியே ஓட விட்டு அதில் காதலும் காமெடியும் கலந்த ஒரு யதார்த்தமான நாவல் இது. படித்து முடித்த பின்னும் உங்கள் மனதில் முகுந்தனின் முதல் முத்தமும், முதல் விக்கட்டும் ரீ - ப்ளே ஆகும். தவறவிட கூடாத படைப்பு.

7 . நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன்

நெடுங்குருதி.. யதார்த்தத்தின் மீதான ஒரு பிரம்மாண்டமான பயணம். இக்கதை மாந்தர்களோடு சேர்ந்து நாமும் ஆறு பருவ காலங்களை கடக்கிறோம் வேம்பலை என்னும் ஒரு கனவுலகத்தில் நம்மையும் அறியாமல் அமிழ்ந்து போய் எது நிஜம் எது பொய் என பிரித்தறிய முடியா ஒரு தாக்கத்தை இப்புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும். படித்து முடித்து பல நாட்கள் ஆகியும் அந்த சூழ்நிலையை விட்டு வெளி வர முடியாமல் தவிப்பதே இந்த புத்தகத்தின் வெற்றி.

6 . சொர்க்கம் என் பையில் - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
THE WORLD IN MY POCKET - 1959

வேகம், வேகம், கொலை வெறி பிடித்த வேகம், 50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையா இது? படிக்க ஆரம்பித்தவுடன் பற்றிகொள்ளும் பரபரப்பு படித்து முடிக்கும் வரையிலும் விடாமல் தொடரும்.... மில்லியன் கணக்கில் பணம் நிரம்பிய TRUCK. அதை கொள்ளையடிக்க முயலும் ஐவர். கற்பனைகெட்டா சாகசங்களும், திருப்பங்களும் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி இந்த புத்தகம்.


5.வந்தார்கள் வென்றார்கள்.. - மதன்.

மொகலாய வரலாற்றை இவ்வளவு சுவாரசியமாகவும், எளிமையாகவும், எதோ பக்கத்தில் இருந்து பார்த்ததை போன்ற அனுபவத்தை தரும் அட்டகாசமான புத்தகம் இது. முதல் அத்தியாயத்தில் தைமூர் பற்றி படிக்கும் போதே விளங்கிவிடும், இது ஒரு வேறு விதமான STORY TELLING என்று. முழு புத்தகத்தையும் உற்சாகத்துடன் படிக்க வைக்கும் ஒரு MAGIC இவரது எழுத்துக்களில் ஒளிந்துள்ளது.

4 . விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா

எங்கள் வாத்தியார் ஒரு தீர்க்க தரிசி என்பதை பறை சற்றும் ஒரு அற்புதமான சிறுகதை தொகுப்பு. 20 - 25 வருடங்களுக்கு முன் கற்பனையாய் எழுதிய விஷயங்கள் இப்போது நிஜத்திற்கு மிக அருகில். ஆங்கிலத்தில் மட்டுமே பழக்கப்பட்ட SCIENCE FICTION சமாச்சாரங்கள் முதன் முதலில் தமிழில், பிரமிக்க வைக்கும் எழுத்து நடையில் அமைந்த நூல் இது. இதில் வரும் "ஜில்லு" என்னும் சிறுகதை நிச்சயம் உங்களை தூங்க விடாது.

3 . ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் - சுஜாதா

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் ஒரு பொக்கிஷம். கதைகள் என்பதையும் தாண்டி ஒரு அழகான வாழ்வியல் அனுபவம். நமக்குள் ஒளிந்து கிடக்கும் நுண்ணிய உணர்வுகளை மயிலிறகு கொண்டு எழுப்புவதை போல சிநேகமான எழுத்துக்கள். படிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு சேர சிரிக்கவும் வைக்கும், அதே சமயத்தில் கண்ணீர் சிந்தவும் வைக்கும் ஆச்சர்யம் இது. காதல், நட்பு, கடவுள், அரசியல், கிரிக்கெட் என எல்லா இடங்களையும் தொட்டு செல்லும் எழுத்து நதி இந்த புத்தகம். சாரலாய் தூறும் மழையில் நனைந்த படி உங்கள் மனம் பிடித்தவரின் கைகள் கோர்த்து நடக்கும் போது உணர்வீர்களே ஒரு சந்தோஷத்தை.... இந்த புத்தகமும் அதே உணர்வினை கொடுக்கும்.

2 . காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா

ராஜா ராணி கதைகளை நான் அதிகம் படிப்பதில்லை . காரணம், "இளவரசி நடந்து வருகிறாள் " என்கின்ற ஒரு விஷயத்தையே 4 பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, எதுகை மோனை வர்ணனைகளுடன் கொட்டாவி விட வைக்கும் எழுத்து நடைதான். ஆனால் காந்தளூர் வசந்த குமாரன் முற்றிலும் வித்தியாசமானவன். உங்களை மெல்லிசாய் புன்னகைக்க வைத்துக்கொண்டே புயல் வேகத்தில் கடப்பவன். அவனுடைய காதல் குழந்தை தனமானது என்றாலும் அது ஜெயிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாமல் பிரார்த்திக்க வைக்கும். வரலாற்று பின்னணியில் சுஜாதா சார் எழுதிய ஒரு SWEET & CUTE LOVE STORY. இதிலும் கணேஷ் (கணேஷ பட்டர் ) வசந்த் (வசந்த குமாரன்) கதாபத்திரங்களை உள் நுழைத்து விளையாடியிருப்பார். மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் அருமையான படைப்பு.

1. எல்லார்க்கும் அன்புடன் – கல்யாண்ஜி

வண்ணதாசன் என்கிற கல்யாண்ஜி அவர்கள் நண்பர்களுக்கு எழுதிய கடிதங்களின் அற்புதத் தொகுப்பு. சோர்வுறும் போதெல்லாம் எனக்கு டானிக்கைப் போல இதன் வரிகள் இருக்கும். இந்தப் புத்தகத்தை சிபாரிசு செய்வதன் மூலம் இதைப் படித்ததும் கல்யாண்ஜியின் கவிதைத் தொகுப்புகளை நீங்கள் தேடிச் செல்வது நூறுசதம் நடக்கும்!

இது மேலே கூறிய புத்தகங்களின் விமர்சனம் அல்ல அதை படிக்கும்பொழுது எனக்கு ஏற்பட்ட உள்ளத்து உணர்வுகளே வார்த்தைகளாக விழுந்துள்ளது . நமக்கு பிடித்த ஒன்றை பார்கும்போழுதோ அல்லது படிக்கும்போழுதோ அந்த மகிழ்ச்சியை மற்றவரிடத்தில் பகிர்ந்துகொள்ள நினைப்பது போலதான் இதுவும் .

அன்புடன்
கார்த்திக்.



ஈகரை தமிழ் களஞ்சியம் பத்து புத்தகங்கள் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக