ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
> #mpage-body-modern .forum-header-background { display: none; } >


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» நீங்க அவசியம் வீட்டுக்கு வரணும்!
by ayyasamy ram Today at 9:31

» அகப்படவனுக்கு அட்டமத்து சனி !
by ayyasamy ram Today at 8:46

» அரசியல்வாதிகள் போட்டியிட விரும்பாத பதவி!
by ayyasamy ram Today at 8:32

» காவியமா? நெஞ்சின் ஓவியமா?
by ayyasamy ram Today at 8:26

» முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டுபோலே!
by ayyasamy ram Today at 8:23

» ’துக்ளக் தர்பார்’ படத்தின் புதிய போஸ்டர்: பிறந்த நாள் ஸ்பெஷலா?
by ayyasamy ram Today at 6:51

» அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: 4 காளைகளை களமிறக்கிய திருநங்கை விஜி
by ayyasamy ram Today at 6:47

» கிளி ஜோசியம் பார்த்த அமைச்சர்!
by ayyasamy ram Today at 6:45

» மதுரை மக்களுடன் அமர்ந்து மதிய உணவை சாப்பிட்ட ராகுல் காந்தி!
by ayyasamy ram Today at 6:42

» நாவல் தேவை
by prajai Today at 0:03

» கமல் கட்சிக்கு மீண்டும் 'டார்ச் லைட்'.
by T.N.Balasubramanian Yesterday at 22:53

» மனம் விரும்புதே உன்னை உன்னை...
by ayyasamy ram Yesterday at 22:28

» யூடியூபில் ஆபாசக் காணொலி: சென்னை டாக் யூடியூப் முடக்கம்
by ayyasamy ram Yesterday at 20:58

» நடிகைகள் பட வாய்ப்புக்கு திருமணம் தடையல்ல – சுருதிஹாசன்
by T.N.Balasubramanian Yesterday at 20:24

» சாக்கடை என குறிப்பிட்டேனா?- குருமூர்த்தி விளக்கம்
by T.N.Balasubramanian Yesterday at 20:19

» ரசித்த பாடல்
by சக்தி18 Yesterday at 20:01

» வயலில் கரகாட்டம் ஆடியபடி நாற்று நட்ட மாற்றுத்திறனாளி மாணவி
by ayyasamy ram Yesterday at 17:33

» பிரிட்டன் பிரதமரின் அசத்தலான பொங்கல் வாழ்த்து; உற்சாகத்தில் தமிழர்கள்!
by Dr.S.Soundarapandian Yesterday at 16:52

» அடுத்தடுத்த ஓவர்களில் இரண்டு விக்கெட்! முதல் டெஸ்ட் போட்டியில் நடராஜன் அசத்தல்!
by Dr.S.Soundarapandian Yesterday at 16:51

» இணையத்தில் இன்று வெளியான படங்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:50

» தன்னை விமர்சித்தவருக்கு மாதவன் தெரிவித்துள்ள பக்குவமான பதில்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:48

» ஆச்சரியப்பட வைக்கும் செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 16:47

» பிறந்த நாள் கொண்டாட்டத்தால் உருவான சர்ச்சை: விஜய் சேதுபதி வருத்தம்
by T.N.Balasubramanian Yesterday at 16:22

» தமிழகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது: மதுரையில் முதல்வர் தொடங்கி வைத்தார்
by சக்தி18 Yesterday at 16:20

» பழமொழியை சரியாக புரிந்து கொள்ளுவோம்!
by T.N.Balasubramanian Yesterday at 16:16

» சித்தத்தினால் கொண்ட பித்தத்தினால்
by ayyasamy ram Yesterday at 15:48

» 'மணிகார்னிகா' இரண்டாம் பாகம் அறிவிப்பு: காப்புரிமை மீறல் என எழுத்தாளர் குற்றச்சாட்டு
by ayyasamy ram Yesterday at 15:13

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Yesterday at 14:35

» கீதை காட்டும் பாதை - யூட்யூப் தொடர்
by enganeshan Yesterday at 12:18

» வலையோசை- யுவகிருஷ்ணா
by ayyasamy ram Yesterday at 10:26

» ”மலர்க ஹக்கூ”
by ayyasamy ram Yesterday at 10:03

» கே.ஜே. யேசுதாஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:56

» 1 ரூபாய்க்கு சுவையான மதிய உணவு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:46

» உவர்நிலத்தை விளைநிலமாக்கும் ‘ஓர்பூடு’ செடி: வேளாண் பல்கலைக்கழக ஆய்வில் கண்டுபிடிப்பு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:36

» ஆஸி., அணி பேட்டிங்: இந்திய அணியில் இரு தமிழக வீரர்கள் அறிமுகம்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:22

» BF என்றால் என்ன? சினிமாவில் ஒரு காட்சி விளக்கம் தருகிறது..
by Dr.S.Soundarapandian Yesterday at 0:21

» நமீதாவை கிண்டல் செய்த பிரியா பவானி சங்கர்!
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 22:38

» உடல் சக்தியை அதிகரிக்க உதவும் எள் உருண்டை !!
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 22:35

» உமக்கு கடவுள் நம்பிக்கை உண்டா?
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 22:16

» தமாகா மூத்த தலைவர் ஞானதேசிகன் மரணம்: கட்சியினர் அஞ்சலி
by T.N.Balasubramanian Fri 15 Jan 2021 - 19:51

» மக்கள் என்ன பரிசோதனை எலிகளா? திருமா காட்டம்!!
by T.N.Balasubramanian Fri 15 Jan 2021 - 19:45

» அஃபன்டேசியா
by T.N.Balasubramanian Fri 15 Jan 2021 - 19:41

» , போலீஸ் ஸ்டேஷன்ல கடல் தண்ணீ வந்துடுச்சா?
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 18:31

» வெண்ணிற நினைவுகள்: உலகின் முதல் பாஸ்வேர்ட்
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 15:44

» இவங்க வேற மாதிரி அம்மா!
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 15:24

» டிரம்பை பதவி நீக்க சொந்தக்கட்சியினர் ஆதரவு: நிறைவேறியது கண்டன தீர்மானம்
by T.N.Balasubramanian Fri 15 Jan 2021 - 13:15

» எப்படிப்பட்ட உறவுநிலையிலும் பக்தி செலுத்தி கிருஷ்ணரை அடையலாம்.
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 11:33

» கடன் வழங்கும் செயலிகளை நீக்கியது கூகுள் நிறுவனம்
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 11:26

» ஆசிரியர் இறந்தார் மாணவன் அழுதான்…!!
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 10:48

» உலகின் ஒரே ஒரு யோக்கியக் கணவன்!
by ayyasamy ram Fri 15 Jan 2021 - 10:47

Admins Online

தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Reply to topic

Go down

best தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by BookzTamil on Tue 28 Jul 2020 - 20:37

1. இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன - ராஜ் சிவா PDF

ஒரு நாணயம், தனக்கென இரண்டு பக்கங்களைக் கொண்டிருப்பது போல, இது அறிவியலா? இல்லை மூட நம்பிக்கையா? என்று புரியாமல் மக்களைத் தவிக்க வைக்கும், 'மிஸ்டரி' (Mystery) என்று சொல்லப்படும் மர்மங்கள் உலகமெங்கும் நிறைந்திருக்கின்றன. சொல்லப் போனால், இந்த மர்மங்களே நம் வாழ்க்கையில் சுவாரஷ்யங்களையும் கூட்டுகின்றன.

இந்த மிஸ்டரி வகை மர்மங்கள் விடுவிக்கப்படாமல், 'இப்படியிருக்கலாம், அப்படியிருக்கலாம்' என்ற அனுமானங்களுடன் இருக்கும் போது, இவற்றின் உண்மையான தீர்வுகள் எங்கேயே புதைந்து போய் வெளிவராமல்தான் இருக்கின்றன. இந்த உண்மைகளை வெளியே கொண்டுவருவதற்குப் பலர் பலவிதமாகப் பாடுபட்டாலும், அதைச் சுலபமாக வெளிக்கொண்டுவரக் கூடிய அரசுகள் அவைபற்றி பெரிதாக நாட்டம் கொள்வதில்லை. நாட்டம் கொள்வதில்லையா? இல்லை நாட்டம் கொள்ள நினைப்பதில்லையா? எனத் தெரிவதில்லை. மிஸ்டரிகள் எப்போதும் மனித சக்திக்கு மாறான ஒரு அமானுஷ்யமான சக்திகளை அடிப்படையாகக் கொண்டே நம்மை மிரட்டுகின்றன. இந்த அமானுஷ்ய சக்திகள், மனித சக்தியை விட வலுவானவை, உயர்வானவை என்று நாம் நினைத்துக் கொள்கிறோம்.

இந்தச் சக்திகளைப் பற்றி அரசுகளே ஆராய முட்பட்டு, 'தற்செயலாக அவை இருக்கின்றன' என்னும் முடிவுகள் வருமானால், மனிதனை விட, அரசுகளை விட, அதிக சக்தியுள்ள ஒன்று நிஜமாகவே இருக்கிறது என்று மனிதன் எண்ணத் தொடங்குவான். அதனால் அரசுகளில் இருக்கும் நம்பிக்கை சாதாரண மக்களுக்கு இல்லாமலே போகலாம். இதனாலேயே இந்த மிஸ்டரிகளை முழுமையாக ஆராய்ந்து கண்டுபிடிப்பதற்கு அரசுகள் தயங்குகின்றன என்கிறார்கள்.

ஆனால் 'அரசுகள் இந்த மிஸ்டரிகளின் உண்மைகளைக் கண்டுபிடித்துவிட்டன. ஆனால் அவற்றை வெளியே சொல்லத் தயங்குகின்றன' என்றும் சிலர் சொல்கின்றனர். இந்த வகையில் பார்க்கும் போதுதான், பலமான ஒரு கேள்வி நமிடையே எழுகின்றது. அந்தக் கேள்வி இதுதான். 'இந்த உண்மைகள் ஏன் மறைக்கப்படுகின்றன?'.

இந்தக் கேள்வியின் அடிப்படையில் ஆராயப்பட்ட சில மர்மங்களை இந்தப் புத்தகம் விளக்குகிறது. இங்கிலாந்தில் உருவாக்கப்படும் 'கிராப் சர்க்கிள்' (Crop Circles) என்னும் பயிர் வட்டங்கள் யாரால், எப்படி, ஏன் உருவாக்கப்படுகின்றன என்னும் மர்மத்தில் ஆரம்பமாகி அயல்கிரகவாசிகளான 'ஏலியன்கள்' இருக்கின்றனரா? என்பது வரை இந்தப் புத்தகம் அராய்கிறது. ஒரு முழுமையான அறிவியல் தன்மையுடைய ஆராய்ச்சியை இந்தப் புத்தகம் கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன என்றும் அ​வை திட்டமிட்டு மறைக்கப்பட்டுவிட்டன என்றும் ​தெரிய வருகின்றது. இந்த மர்மங்களில் சிலவற்றை ஆராய்வ​தே இந்த நூலின் ​நோக்கம்.

டவுன்லோடு :- https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_4.html

2. வட்டியும் முதலும் - ராஜுமுருகன் PDF

பசியில் தொடங்கியதாலோ என்னவோ... ராஜுமுருகனின் ‘வட்டியும் முதலும்’ தொடரை வாசிக்க வாசிக்க பசி அடங்கவே இல்லை. இளைஞன் ஸ்தானம் கடக்காது வாழும் இந்த மனிதனுக்குள் இத்தனை கடல்களா? ஒவ்வொரு வாரமும் விகடனில் துளிகளாகத் தன் கடல்களை இறக்கிவைத்த இந்த இளைஞனுக்குள் கோபம், வாஞ்சை, பாசம், பரிதவிப்பு, நெருடல் என எத்தனை விதமான உணர்வுகள்! தன் வாழ்வியல் அனுபவங்களாக வாழ்க்கையின் பன்முகங்களையும் பந்தி வைத்திருக்கும் ராஜுமுருகன், தமிழ் எழுத்துலகின் நம்பிக்கை மிகுந்த அடையாளம். சிரித்து, அழுது, விளையாடி, தூங்கி பன்முகத்தனங்களையும் தன்னை அறியாமலே செய்யும் ஒரு குழந்தையைப்போல் வாழ்வின் அத்தனை விதமான உணர்வுகளையும் போகிறபோக்கில் நெஞ்சு தைக்கச் சொல்லி இருக்கிறார் ராஜுமுருகன். துயரங்களும் நம்பிக்கைகளும் கலந்து நகரும் இந்த உலகை சற்று தூரத்தில் நின்று கவனித்த கணக்காய் அத்தனை விதமான அனுபவங்களையும் இந்தப் புத்தகத்தில் காணலாம். புறந்தள்ளப்பட்டவர்களுக்காக அழலாம்; போராடுபவர்களுக்குக் கைகொடுக்கலாம்; இழந்தவர்களுக்குத் துணை நிற்கலாம்; வென்றவர்களுக்கு மலர்க்கொத்து நீட்டலாம்; கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டலாம். மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் நிச்சயம் இந்தப் புத்தகம் உங்களுக்குள் நிகழ்த்தும். குவிந்து கிடக்கும் பணத்தைப் பார்ப்பதும் பார்வையே... பணத்தின் நடு வட்டத்தில் யாரோ ஒருவன் தன் காதலைப் பிழைகளோடு சொல்லி இருப்பதைப் பார்த்துச் சிலிர்ப்பதும் பார்வையே. அந்தக் காதலன் தன் காதலியோடு சேர்ந்திருப்பானா என, எவனோ ஒருவனுக்காக ஏங்கித் தவிப்பது மூன்றாம் பார்வை. இந்தப் புத்தகத்தின் அற்புதம் இத்தகைய பெருங்குணமே! கடலுக்குள் கூடுகட்ட - கனவுக்குள் கடல் கட்ட மனப்பக்குவம் வார்க்கும் மயிலிறகுத் தீண்டலே இந்தப் புத்தகம்!.......

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf.html

3. கோபல்ல கிராமம் - கி ராஜநராயணன் PDF

பாளையப்பட்டுகளின் ஆட்சி முடிந்து, பிரிட்டிஷ் கம்பெனியாரின் ஆட்சி முழுமையாக அமலுக்குவராத காலகட்டத்தில் நாவலின் நிகழ்வுகள் புனையப்பட்டுள்ளன. ‘துலுக்க ராஜாவுக்கு அஞ்சி’த் தெற்கு நோக்கி ஓடி வந்த தெலுங்குக் குடும்பம் கோபல்ல கிராமம் என்னும் புதிய கிராமத்தை உருவாக்கி, பல குடும்பங்களாகப் பெருகியபின், அந்த மக்களின் பிரச்சினைகளைச் சித்திரிக்கும் நாவல் இது. கரிசல் காட்டுக் கிராம மக்களின் பேச்சு வழக்கையும் சொலவடைகளையும் சரளமாகக் கையாண்டு வாய்மொழிக் கதை மரபில், புதிய வடிவத்தில் இந்த நாவலை உருவாக்கியுள்ளார் கி. ராஜ நாராயணன்.

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_28.html

4. சிவப்பு சந்தை - ஸ்காட் கார்னி PDF

உலகளாவிய உடல் வணிகத்துக்குள் அதை இயங்கச் செய்யும் பொருளாதாரம் குறித்த ஆழ்ந்த புரிதலுடன் பரபரப்பூட்டும் ஒரு துணிச்சலான பயணம். மனித உடல் பகுதிகளுக்கான மாற்றுக்கு இருக்கும் தணிக்கும் முடியாத நமது தேவை, அவற்றை நாம் பெறுவதற்குப் பயன்படுத்தும் மர்மமான, பெரும்பாலும் மனஅமைதியைக் குலைக்கும் வழிகள் ஆகிய இரண்டையும் ஸ்காட் கார்னி புலனாய்வு செய்கிறார். -- கிறிஸ் ஆண்டர்சன், 'த லாங்டெய்ல்' நூலின் ஆசிரியர்

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_5.html

5. தனிமையின் நூறு ஆண்டுகள் - காப்ரியேல் கார்சியா மார்க்கெஸ் PDF

லத்தீன் அமெரிக்க எழுத்தாளர் காப்ரியேல் கார்சியஸ் மார்க்கேஸ் அவர்களின் புகழ்பெற்ற நாவலான One Hundred Years of Solitude தமிழில் 'தனிமையின் நூறு ஆண்டுகள்' என வெளிவந்துள்ளது. உலக இலக்கியத்தை ஆழமாகப் பாதித்த பெரும் படைப்புகளில் ஒன்று. ஏழு தலைமுறைகளின் வாழ்க்கையை விரிவாகச் சொல்லும் இந்நாவல் இதுவரை 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 1982-ல் நோபல் பரிசு பெற்ற இந்நாவல் இதுவரை இரண்டு கோடி பிரதிகளுக்குமேல் விற்பனையாகியுள்ளது. ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்லுகிறது இந்த நாவல்.

ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட இந்நாவல் இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக்கொண்டிருக்கும் காலத்தை மீறிய படைப்பு. எந்த மொழியில் பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானுடக் கதையாடல்.

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_47.html

6. சாயாவனம் - சா.கந்தசாமி PDF

சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன்.

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_45.html

7. சோழகுலவள்ளி - நெடுமாறன் PDF

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_61.html

8. தயா - லா ச ராமாமிருதம் PDF

https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_23.html

9. த்வனி - லா ச ராமாமிருதம் PDF

Tamil Books PDF:
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_97.html

10. பின் தொடரும் நிழலின் குரல் - ஜெயமோகன்

https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_73.html
avatar
BookzTamil
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by BookzTamil on Wed 29 Jul 2020 - 21:20

கண்ணா வருவாயா - ரம்யா ராஜன் PDF
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_67.html

சண்டக்கோழி - ரம்யா ராஜன் PDF
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_35.html

காத்திருப்பேனடி கண்ணம்மா - ரம்யா ராஜன் PDF
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_83.html

காதலின் தீபம் - ரம்யா ராஜன் PDF
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_15.html

உனக்கு என் உயிரே - ரம்யா ராஜன்
https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_30.html

வழியோரம் விழி வைக்கிறேன் - ரம்யா ராஜன் PDF
https://tamilbookspdff.blogspot.com/2020/07/pdf_29.html

பனி சிந்தும் சூரியன் - ரம்யா ராஜன்
https://tamilbookspdff.blogspot.com/2020/07/blog-post_29.html
avatar
BookzTamil
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by மாணிக்கம் நடேசன் on Thu 30 Jul 2020 - 15:10

மிக்க நன்றி, எல்லா மின்னூல்களையும் இறக்குமதி செய்துக் கொண்டேன்..
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

BookzTamil likes this post

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by krishnaamma on Thu 30 Jul 2020 - 22:26

நண்பரே உங்கள் தலைபைத் தமிழில் மாற்றுகிறேன்...நல்ல திரி...தொடருங்கள் உங்கள் சேவையை புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 63756
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12896

BookzTamil likes this post

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by மாணிக்கம் நடேசன் on Sat 1 Aug 2020 - 14:48

அடுத்த 2ழ10 எப்பொழுது ஏற்றுமதி செய்யப் போகிறீர்கள் ஐயா. நன்றியுடன் காத்திருக்கிறேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4534
இணைந்தது : 14/12/2009
மதிப்பீடுகள் : 1417

BookzTamil likes this post

Back to top Go down

best தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்

Post by BookzTamil on Tue 4 Aug 2020 - 15:51

தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 3 | 10 புத்தகங்கள்

1. மாயக்கண்ணாடி நூலாசிரியர் : உதயசங்கர் PDF


சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான விகடன் விருது 2016 பெற்ற புத்தகம் இது.

பத்து வயதுக்குட்பட்ட குழந்தையின் உளவியலில் நம்ப முடியாத கற்பனைகளும், அதிசயங்களும் அற்புதங்களும் இன்பத்தை ஏற்படுத்துகின்றன. கிளர்ச்சியடைய வைக்கின்றன. மனதில் திருப்தியை ஏற்படுத்துகின்றன. குழந்தைகளின் படைப்பூக்கத்தைத் (Creativity) தூண்டி விடுகின்றன. குழந்தைகளின் தனித்துவமான ஆளுமைக்கு அஸ்திவாரம் போடுகின்றன.

வண்ணங்களும், விசித்திரமான, கோமாளித்தனமான, நம்பமுடியாத, கதாபாத்திரங்களும் கதைகளும் குழந்தையின் உணர்வு உலகை விரிக்கின்றன. குழந்தைகள் யதார்த்தத்தில் போலச் செய்வதின் மூலம் தன் படைப்புணர்வை வெளிப்படுத்துகின்றன. அந்தக் கதைகளில் உள்ள கருத்துகளும், அறவிழுமியங்களும் குழந்தைகளின் ஆழ்மனதில் மறைமுகமான கல்வெட்டாய் பதிந்து விடுகின்றன.

மாயக்கண்ணாடி தொகுப்பிலுள்ள கதைகள் சிறுவர்களுக்கான கதைகள். அதிகாரத்தின் கோமாளித்தனங்களைப் பற்றிய கதைகள். அதிகாரம் பற்றிய நுண்ணுணர்வினை குழந்தைகளுக்குச் சொல்ல முயற்சிக்கிற கதைகள். அதன் மூலம் அதிகாரத்தின் மீதான விழிப்புணர்வை ஏற்படுத்த யத்தனிக்கும் கதைகள். அந்த விழிப்புணர்வே அன்பெனும் பெருநதியில் குழந்தைகள் எப்போதும் மூழ்கித் திளைக்க வைக்கும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட கதைகள்.

டவுன்லோடு

2. "அறுவடை" ஆர்.ஷண்முகசுந்தரம் PDF

எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான செவ்வியல் குறுநாவல். இத்துடன் அவரின் எழுத்து வாழ்க்கையையும் படைப்புகளையும் தொகுத்துத் தந்துள்ள "ஆர். ஷண்முகசுந்தரம் - வாழ்வும் படைப்பும்" என்கிற கட்டுரை இணைப்பு ஒரு விரிவான பார்வையை வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

"அறுவடை" ஒன்பது அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட இந்தக் குறுநாவல் 1960 இல் எழுதப்பட்டது. கல்யாண ஆசையில் பெண் தேடும் சின்னப்ப முதலியாரின் வயது எழுபது. பணத்துக்காகவே அலைந்துகொண்டிருக்கும் நாச்சிமுத்து, அவனுடைய செல்ல மகள் தேவானை, அவளுடைய காதலன் சுப்ரமணியன், சின்னப்ப முதலியாருக்கும் தன் மகனுக்குமாகச் சேர்த்து மணமகள்களைத் தேடும் கருப்பண முதலியார் என்று வெகு சில கதாபாத்திரங்கள்தான் இந்த குறுநாவலில் வருகின்றனர். நாவலின் வெற்றியே அதன் முடிவுதான்; யாருமே எதிர்பார்க்காத ஒரு காவிய முடிவு அது! சண்முகசுந்தரத்தின் எழுத்து வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது. .

ஆர். ஷண்முகசுந்தரம் (1917 - 1977) புதினத்துறையில் மட்டுமின்றி சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு தளங்களிலும் படைப்புகளைத் தந்துள்ளார். மொத்தம் 21 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை நாகம

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

3. ராபின்சன் குருசோ PDF

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

4. விலகும் திரைகள் - பிரேம் PDF

திராவிடக்கட்சி ஆளும் அமைப்பாக மாறிய பின் இனி அரசியல் பேசவேண்டிய தேவை திராவிடத் திரைக்கு இல்லாமல் போனதுடன் அரசியல் பேசுவது என்பதும் திட்டமிட்டு தடுக்கப்பட்டது. எம்.ஜி.ராமச்சத்திரன் தமிழக முதலமைச்சர் ஆனபின் தமிழ்த்திரையின் ‘பாவனை அரசியலின்’ தேவை முற்றுபெற்றது. அரசியல் சொல்லாடலின் துணைவடிவமாக இருந்த திரைப்படம் பண்பாட்டுப் பாலியலின் களமாகத் தன் முழு வடிவத்தை மாற்றிக்கொண்டது.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

5. வீடில்லாப் புத்தகங்கள் (தேசாந்திரி) - எஸ். ராமகிருஷ்ணன் PDF


பழையபுத்த கடைகளின் உலகையும் அங்கே கிடைத்த அரிய நூல்களையும் பற்றியும் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பே வீடில்லாப் புத்தகங்கள். தி இந்து தமிழ் நாளிதழில் தொடராக வெளியாகி பரந்த வாசகர்களின் பாராட்டுதலைப் பெற்றவை இக்கட்டுரைகள்.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

6. கடவுளும் சைத்தானும் - சாரு நிவேதிதா PDF


சாரு இந்த நூலில் விவாதிக்கும் பல பிரச்சினைகள் நமது கலாச்சார மதிப்பிடுகளோடும் நுண்ணுணர்வுகளோடும் தொடர்புடையவை.
குடி, கவிதை, பூங்கொத்துகள், உடல் குறைபாடுகள், கசப்புகள், பிரியங்கள் என
பல்வேறு தளங்களில் இவை கூர்மையான கேள்விகளை எழுப்புகின்றன.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

7. கம்பன் கலை - அ. ச. ஞானசம்பந்தன் PDF


சிலப்பதிகாரத்தை மக்கள் திரள் முன்பு ம.பொ.சி அறிமுகப்படுத்தியது போல கம்பராமாயண கதை மாந்தர்களை புலமைப்பீடத்திலிருந்து விடுவித்து நவீன இலக்கிய வெளியில் உலவ விட்ட பெருமை அ.ச.ஞா.வுக்கே உரியது. ‘கம்பன் கலை’ அதற்கு ஓர் சான்று.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

8. காமரூப கதைகள் - சாரு நிவேதிதா PDF


சாரு நிவேதிதாவின் புனைவுகள் அனைத்தும் திரும்பத் திரும்ப உறவுகளின் உறைபனியையே தொட முயல்கின்றன. ஆனால் உறைபனி நமக்குப் பழக்கமில்லாதது. அல்லது நாம் அவை நம்மீது இடையறாது பொழிகிறது என்பதை நம்ப விரும்புவதில்லை. பயத்திற்கும் நிச்சயமின்மைக்கும் இடையே நிகழும் வாழ்வின் நடனங்களை எதிர்கொள்கிறது இந்த நாவல். அது களியாட்டத்திற்கும் மரணத்திற்கும் இடையே காமத்தை சூழ்ச்சியும் வாதையும் போதமும் மிகுந்த மர்ம வெளியாக மாற்றுகிறது. இந்த மர்ம வெளியைக் கடந்து செல்பவர்கள் தங்கள் அடையாளம் என்று எதையும் நிறுவுவதில்லை. மாறாக தங்களது ஒடுக்கப்பட்ட கனவுகளை சோதித்துப் பார்க்கும் ஒரு சோதனைக் களமாக சிறிய சாகசங்களை நிகழ்த்திவிட்டு மீண்டும் தமது ராணுவ ஒழுங்குகளுக்குள் திரும்பிச் சென்றுவிடுகிறார்கள். ஒற்றர்கள், மறைந்து திரிபவர்கள், தண்டிக்கப்படுபவர்கள், தப்பிச் செல்பவர்கள் மட்டுமே நிறைந்த ஒரு காதல் கதையை எழுதுவதுதான் இந்த நாவலாசிரியனின் சாத்தியமாக இருக்கிறது.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

9. தேகம் - சாரு நிவேதிதா PDF


இன்றைய சினிமா, சிறார்களின் விடியோ விளையாட்டுகள், பத்திரிகைகள், செய்தித்தாள்கள், அன்றாட வாழ்க்கை என்று எதை எடுத்துக் கொண்டாலும் வன்முறைதான் அதன் அடியோட்டமாக இருக்கிறது. மொழி, நாகரிகம், பண்பாடு, கலாசாரம் என்று எத்தனையோ விழுமியங்களைக் கொண்டுள்ள மனித சமூகம் ஏன் வன்முறையைக் கொண்டாடுகிறது? ஒரு மனிதன் இன்னொரு மனிதனை வதைப்பதில் ஏன் இன்பம் காண்கிறான்? இதில் செயல்படும் அதிகாரம் எவ்வாறு உருவாகிறது? அந்த அதிகாரத்தின் அரசியல் என்ன? இது போன்ற பலவிதமான கேள்விகளை எழுப்பக் கூடியது தேகம்.
மனித வதை ஏன் நடக்கிறது என்பதை உளவியல்ரீதியாகப் புரிந்து கொள்ள முயற்சிப்பதே என் நோக்கம். 1947-இல் இந்தியாவிலிருந்து பாகிஸ்தானுக்கும் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கும் வந்த ரயில்களிலிருந்த ஆயிரமாயிரம் பிரேதங்கள் எந்த அடிப்படையில் கொல்லப்பட்டவை? ஒரு தேசத்திலிருந்த அத்தனை பேருமே – அவர்களில் கலைஞர்களும் கவிஞர்களும் புத்திஜீவிகளும் தத்துவவாதிகளும் அடக்கம் – முன்னின்று 90 லட்சம் யூதர்களைக் கொன்று குவித்தார்களே, அந்த இன அழித்தொழிப்பின் ஆதாரமாக இருந்தது எது?
(புத்தகத்திலிருந்து)

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

10. மந்திரங்கள் என்றால் என்ன? - அ. ச. ஞானசம்பந்தன் PDF


டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு
avatar
BookzTamil
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 4 | 10 புத்தகங்கள்

Post by BookzTamil on Wed 5 Aug 2020 - 18:31

தமிழ் புத்தகங்கள் இலவச பதிவிறக்கம் | பகுதி - 4 | 10 புத்தகங்கள்


1. அங்கும் இங்கும் கொலை உண்டு - அகதா கிறிஸ்டி

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

Tamil Books PDF:

2. அசுரகணம் - க.நா.சுப்ரமண்யம்மனித மனத்தில் எவ்வித பிரயாசைகளுமின்றி ஓயாது அலையடித்துக்கொண்டிருக்கும் எண்ணங்களின் பிரவாகத்தை அகப்படுத்தும் ஆற்றல் கொண்ட ஒரே கலை வடிவம் நாவல். ஒரு சாதனத்தின் தனித்துவமிக்க சிறப்பம்சத்தில் உயிர் கொள்ளும் படைப்புதான் அச்சாதனத்தின் உச்சங்களைத் தொடுகிறது. இவ்வகையில் தமிழின் மிகவும் குறிப்பிடத்தகுந்த நாவல்களில் ஒன்று அசுரகணம்.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

3. அசோகமரம் பூக்கவில்லை - லக்ஷ்மி


டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

4. அசோகமித்திரன்- குறுநாவல்கள்தாத்தாவிடம் ஒரு அன்பான சொல் பேசியது அவரைப் பார்த்ததேகூட கிடையாது. அவர் சொத்து மட்டும் வேண்டும்! இது என்ன சுரண்டல் எண்ணம்? இது என்ன ஒட்டுண்ணி வாழ்க்கை? காலம் காலமாக மனிதன் நீடித்து இருப்பதே இப்படிச் சுரண்டுவதற்கும் மாற்றான் முயற்சியின் பலன்கனைத் தான் பறித்துக்கொள்வதற்கும் தானா?..

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

5. அடுத்த கட்டம் - என்.சொக்கன்


டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

6. அஞ்சாங்கல் காலம் - உமா மகேஸ்வரிபெண்களின் உணர்வுகளை இந்த அளவிற்கு எளிமையாகவும், தெளிவாகவும் பதிந்த யதார்த்த நாவல் சமீபத்தில் இதுதான் என்றே தோன்றுகிறது. உமா மகேஸ்வரி ஒரு கவிஞர் என்ற முறையில் மொழியையும் பெண் என்ற வகையில் பாத்திரங்களின் உணர்வோட்டத்தையும் அற்புதமாகக் கையாண்டுள்ளார். எந்த விதமான குறியீடுகளோ, படிமச் சிக்கல்களோ இன்றி யாவரும் வாசிக்கும் நடையில் வந்திருக்கும் இப்புதினம் படைப்புலகத்தில் ஒரு நல்ல அறிகுறி.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

7. அஞ்சுவண்ணம் தெரு - தோப்பில் முஹம்மது மீரான்மரபான நாவல்களுக்குரிய வடிவமும் கருப்பொருளும் கொண்டது தோப்பில் முகமது மீரானின் அஞ்சுவண்ணம் தெரு . ஒரு தெருதான் கதைக்களம். அந்தத்தெருவில் வாழும் பலவகையான மனிதர்களின் வாழ்க்கைபற்றிய ஒன்றோடொன்று பொருந்தும் உதிரிச்சித்தரிப்புகள்தான் கதை. காலமாற்றத்தில் அந்தத்தெருவுக்கு என்ன ஆகிறது என்பதுதான் கரு. ஆனால் உயிரோட்டமுள்ள ஒரு இலக்கிய ஆக்கமாக இருக்கிறது இப்படைப்பு. உயிரோட்டம் என்னும்போதே நுட்பம், வளர்ந்துகொண்டே இருக்கும் இயல்பு இரண்டும் சுட்டப்பட்டுவிடுகின்றன. நல்ல கலைப்படைப்பின் இயல்பு அது. அஞ்சுவண்ணம் தெரு அதன் கதாபாத்திரங்களின் உறவுகளுக்குள் விடப்படும் மௌனங்களையும் காலமாற்றம் மூலம் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் கொள்ளும் வளர்சிதை மாற்றங்களையும் கணக்கில் கொள்ளும் வாசகர்களின் ரசனையில் சுருளவிழ்ந்துகொண்டே இருக்கும்.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

8. அடுக்கு மல்லி - பாலகுமாரன்


டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

9. அச்சுவை பெறினும் - அருண் நரசிம்மன்தத்தமது சதிபதிகளுடன் அமெரிக்கா பெங்களூர் என்று இல்லறம் பேணும் இருவர் மீண்டும் காதலர்களாய்த் தாங்கள் வளர்ந்த சிற்றூரில் இரு தினங்கள் சந்தித்துக்கொள்ள நேர்ந்தால்? இல்புறக் காதலின் அச்சுவையைப் பெறுவதற்கான விலையை இல்லற அன்பும் அறனும் பொறுக்க வல்லதா?

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு

10. அச்சுதம் கேசவம் - இரா.முருகன்அரசூர் வம்சம் தொடங்கி வைத்த ஒரு பிரம்மாண்டமான மாய யதார்த்த உலகம் இந்தப் புத்தகத்தில் மேலும் விரிவடைந்து நம்மை உள்ளிழுத்துக்கொள்கிறது. எது இயல்பு, எது அசாதாரணம்? இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டுவது அவ்வளவு சுலபமல்ல. வாழ்க்கையிலேயே இது சாத்திய-மில்லாதபோது ஒரு நாவலில் எதற்காக இந்த இரண்டையும் வேறுபடுத்திக் காட்டவேண்டும்? ஒரு மாறுதலுக்கு, நிஜத்தையும் அதைவிடவும் சுவையான கற்பனையையும் ஒன்றோடொன்று கலக்க-விட்டால் என்னாகும்? இரண்டும் ஒன்றையொன்று சந்தித்துக்கொள்ளும்போது என்ன நடக்கும்? இரா. முருகனின் இந்தப் புதிய நாவலில் கனவும் நனவும், நிஜமும் கற்பனையும், சாதாரணமும் அசாதாரணமும் பின்னிப் பிணைந்துள்ளன. பரவசமளிக்கும், பயமூட்டும் ஒரு புதிய அனு-பவத்தை அளிக்கும் அச்சுதம் கேசவம் நாவலைத் தனியொரு பாகமாகவும் அணுகலாம்; அரசூர் வம்சத்தின் தொடர்ச்சியாகவும் பொருத்திக்-கொள்ளலாம். தமிழ்ப் படைப்புலகம் இந்நாவலை நீண்டகாலத்துக்கு விவாதிக்கப்போகிறது. அதைவிடவும் நீண்ட காலத்துக்கு நம் நினைவுகளில் இது நிறைந்திருக்கப்போவது உறுதி.

டவுன்லோடு : டவுன்லோடு
Direct Link :- டவுன்லோடு
avatar
BookzTamil
பண்பாளர்


பதிவுகள் : 69
இணைந்தது : 20/08/2019
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

best Re: தமிழ் புத்தகங்கள் தரவிறக்கம் - முதல் பகுதி 1 | 10

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You can reply to topics in this forum