புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
336 Posts - 79%
heezulia
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
8 Posts - 2%
prajai
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_m10மரம் போல் நிற்கின்றாய்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரம் போல் நிற்கின்றாய்..!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 19, 2010 10:46 am

"என்னடா... ஏதோ கோட்டையைப் பிடிக்கிறாப்புல யோசனையில இருக்கே? இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவு தானே? ஆட்டுக் குட்டி பட்டினியா இருக்கு. நம்ம தோப்புப் பக்கம் போயி அதுக்கு கொஞ்சம் தழை ஒடிச்சிட்டு வாடா'' என்று ராம்குமாரின் அம்மா கத்தினாள்.

அவன் சிந்தனை எல்லாம் நேற்று பள்ளி வகுப்பறையில் அறிவியல் ஆசிரியர் சொன்ன வார்த்தைகளைச் சுற்றியே இருந்தது. அப்படி என்னதான் அவர் சொல்லி விட்டார். ஒரு கேள்விக்குப் பதில் சொல்லாமல் நின்ற ராம்குமாரைப் பார்த்து, "ஏண்டா மரம் போல நிக்கிறே?'' என்று கேட்டு விட்டார். இதைக் கேட்ட மற்ற மாணவர்களும் "கொல்'லென சிரித்து விட்டார்கள். இது ராம்குமாரின் மனதை நோகச் செய்து விட்டது.

ராம்குமார் நன்றாகப் படிக்கின்ற மாணவன்தான். ஆசிரியரின் கேள்விகளுக்கு அவனே சரியாக, வேகமாக பதிலைச் சொல்வான். அதனால் அனைத்து ஆசிரியர்களும் அவன் மேல் நல்ல எண்ணம் வைத்திருப்பார்கள்.

அன்றுகூட அறிவியல் ஆசிரியர், எப்போதும் சரியான பதிலைச் சொல்கின்ற இவனுக்கு இன்று என்ன நேர்ந்தது என்ற எண்ணத்தில் தான் அப்படிக் கூறிவிட்டார். அவனுக்கும் திடீரென்று என்றுமில்லாமல் இன்று ஆசிரியர் இப்படிக் கூறி விட்டாரே என்று மனவருத்தம்.

முதல்நாள் அவன் தங்கை வினன்யாவிற்குக் காதணி விழா. விருந்தினர் கூட்டம் அவன் வீட்டில் இருந்தபடியால் அன்று அவனால் படிக்க முடியாமல் போய் விட்டது. அதனால் தான் அவனால் ஆசிரியரின் கேள்விக்கு அன்று பதில் சொல்ல முடியவில்லை.

இந்தச் சிந்தனையிலேயே வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்த அவனைப் பார்த்து அவன் அம்மா கத்தினாள். அப்போதும் அவன் எழவில்லை. மறுபடியும், "என்னடா, நான் சொன்னது உன் காதிலே விழவில்லையா? எழுந்திருச்சிப் போயி தழை ஒடிச்சிக்கிட்டு, அப்படியே நம்ம கிணத்துல மோட்டார் போட்டு குளிச்சிட்டு வாடா'' என்று கூறினாள்.

ராம்குமாரும் எழுந்து தோட்டத்தை நோக்கிப் புறப்பட்டான். போகின்ற வழியில் கார்த்தியும் அவனோடு சேர்ந்துக் கொண்டான். இருவரும் சேர்ந்து தான் காலையில் குளிக்கப் போவார்கள்.

"கார்த்தி, நீ கீழயே நில். நான் மரத்தில் ஏறி தழைகளை ஒடச்சிப் போடுறேன். அத நீ எடுத்து வை. நான் இறங்கி வந்ததும் ரெண்டு பேரும் சேர்ந்து குளிப்போம்'' என்று ராம்குமார் கூறிவிட்டு, மரம் ஏற மரத்தின் அருகே சென்றான்.

மரத்தின் அருகே சென்றவனுக்கு மரத்தைப் பார்த்ததும் நேற்று ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்து விட்டது. மரத்தையே பார்த்தபடி நின்றான்.

"ஏன் கீழயே நின்று விட்டாய்?' என்று ஒரு குரல் கேட்டது. ராம்குமார் திரும்பிப் பார்த்தான். கார்த்தியைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. இது கார்த்தியின் குரலும் அல்ல.

மறுபடியும் மரத்தைப் பார்த்தான். "என்ன ராம்குமார்? நான்தான் பேசினேன். ஏன் ஏறாமல் அப்படியே நின்று விட்டாய்' என்று குரல் கேட்டது. மரமா பேசுகிறது என்று அவனுக்கு வியப்பு. "ஆமா,நான்தான் பேசுகின்றேன். எதற்காக என்னை இப்படிப் பார்க்கின்றாய்?'' என்று மரம் கேட்டது.

"இல்லை. நேற்று என் வகுப்பில் என் ஆசிரியிர் என்னை ஏன் மரம் போல நிற்கின்றாய் என்று கேட்டார். அதுதான் இப்படி நின்று பார்க்கின்றேன்'' என்று ராம்குமார் கூறினான்.

அதற்கு மரம், "நாங்கள் எல்லாம் இப்படி நிற்பதனால்தான், நீங்கள் நடமாடுகின்றீர்கள். இன்றைக்கு உன் ஆட்டுக்குட்டிக்குப் பசிக்கிறது என்று என்னிடம்தானே வந்திருக்கிறாய். எந்த மனிதனிடமாவது சென்றாயா? புவி வெப்பமடைவதை குறைக்க எங்களைத் தானே கன்றுகளாக நட்டு வளர்க்கின்றீர்கள். மனிதர்களால் அதைத் தடுக்க முடியவில்லையே. மாறாக, நீங்கள் உங்கள் சுயலாபம், தேவைக்காக எங்களை வெட்டி அழித்து விட்டதன் காரணத்தால் அல்லவா இந்தக் கோடையில் இவ்வளவு வெப்பம். வெட்டாமல் விட்டிருந்தால் இவ்வளவு வெப்பம் இருக்குமா? அடிக்கின்ற கடுமையான வெயிலையும் நாங்களே தாங்கி, உங்களுக்கு குளிர்ச்சியை அல்லவா ஏற்படுத்தித் தருகின்றோம். உங்கள் வீடுகள் எல்லாம் பெரு மழையால் அடித்துச் செல்லாமல் இருக்க எங்கள் வேர்கள் அல்லவா பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதோ அந்த ஆலமரத்தைப் பார்த்தாயா? எத்தனைக் கிளைபரப்பி விழுதுகளை தரையில் இறக்கியுள்ளது. கிளைகளிலே எத்தனை விதவிதமான பறவைகள் அமர்ந்திருக்கின்றன பார்த்தாயா? அதன் கிளைகளுக்குக் கீழே இளைப்பாறும் ஆடு,மாடுகளைப் பார்! உழைத்துக் களைத்த மனிதர்களைப் பார். நாங்கள் நிற்பதால்தான் இவ்வளவும் நடைபெறுகின்றது. உங்களைப் போல் வேறுபாடு எங்களிடம் கிடையாது'' என்றது.

"ஓ..! அதுதான் ஆல்போல் தழைத்து அருகுபோல் வேரூன்ற வேண்டும் என்றார்களா?'' என அவன் கேட்டான்.

"ஆம்! நம் வளர்ச்சி பிறருக்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதுதான் இந்தப் பழமொழி கூறப்பட்டிருக்கின்றது. மனிதர்களில் எத்தனைப் பேர் எங்களைப் போல் தன்னலம் கருதாது பிறர்க்கு உதவுகின்றீர்கள். பெற்று வளர்த்த பெற்றோர்களைக் கூட முதியோர் இல்லத்தில் சேர்த்து விடுகின்றீர்களே! உன் தோப்பில காய்த்துக் குலுங்குகின்ற மாங்காய்களைப் பார். மரத்திலேயே கனியாக விட்டால் என்ன சுவை. அல்லது வைக்கோவில் வைத்தாவது கனிய வைக்கலாமே. உடனே இலாபம் பார்க்க வேண்டும் என்ற ஆசையில் உங்களுக்கே கேடு விளைவிக்கின்ற இரசாயனக்கல் வைத்து அல்லவா கனிய வைக்கின்றீர்கள்.

எப்போதோ நீங்கள் கொடுத்த கொஞசம் தண்ணீருக்காக காலமெல்லாம் உங்களுக்கு உதவிக் கொண்டிருக்கின்ற நாங்கள் எங்கே? உதவிக் கொண்டிருக்கின்ற எங்களையே வெட்டி உங்களுக்குக் கேட்டை நீங்களே விளைவித்துக் கொள்கின்ற மனிதன் எங்கே? ச்சே... ச்சே... போயும் போயும் சுயநலம் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்ட இன்றைய மனிதர்களையா எங்களுக்கு நிகராக ஒப்பிடுவது. இது அநியாயம் இல்லையா?'' என்று மரம் கூறியதைக் கேட்ட ராம்குமார் மனவருத்தத்தை விட்டு மகிழ்ச்சியடைந்தான்.

"இனிமேல் நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்'' என்று உறுதி எடுத்துக் கொண்டான்.


அ.சுப்ரமணியன்



மரம் போல் நிற்கின்றாய்..! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed May 19, 2010 12:39 pm

இனிமேல் நாமும் பிறருக்கு நன்மை செய்ய வேண்டும்
என்று உறுதி எடுத்துக் கொண்டான்.
மரம் போல் நிற்கின்றாய்..! 453187 மரம் போல் நிற்கின்றாய்..! 359383





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக