புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
1 Post - 50%
வேல்முருகன் காசி
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
1 Post - 50%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
284 Posts - 45%
heezulia
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
237 Posts - 37%
mohamed nizamudeen
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
20 Posts - 3%
prajai
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_lcapஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_voting_barஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்ஷய திருதியை ! 29-04-2017


   
   

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat May 15, 2010 1:12 am

First topic message reminder :

அக்ஷய திருதியை  கொண்டாடுவது எப்படி என்பதை இங்கு காண்போம்.

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 JRMDCP3HQ6mBCVq4IWZp+sb1

சில வருடங்களாக தங்கம் வாங்கினால் நல்லது என்று சொல்லி சொல்லி தங்கம் விற்பனையை பெருக்கி விட்டனர். இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற
உலோகமான தங்கத்தை வாங்குவது சிறபென்று ஒரு ஐதிகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று கூறுவது பேதமை.

(மேலும் இரண்டு வருடங்களாக வெள்ளை நிற உலோகம் வாங்கினால் நல்லது என்று சொல்லி பிளாட்டினம் வாங்க சொல்லுகிறார்கள். ஏன் வெள்ளை என்றால் அலுமினியம் அல்லது வெள்ளி வாங்கினால் ஆகாதா? பொது மக்கள் சிந்திக்க வேண்டிய விஷயம்.)

ஆல மர இலை யில்  மிருதுஞ்சய மந்திரத்தை ஜபித்து வியாதி யச்தேர்கள் தலையணை அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும்.

குழந்தைகள் தலையணை அடியில் வைத்தால், கண் திருஷ்டி கழியும்.

இந்த நன்னாளில் நாம் செய்ய வேண்டிய முக்கய கடமை என்னவென்றால் அது பெரியோரயும் பித்ருகளையும் வணங்குவது தான்.

இந்த நாளில் மகாலட்சுமி பூஜை செய்வது மிக நல்லது.

சத்ரு சாந்தி பூஜிக்கும் இது சிறந்த நாளாக கருதப்படுகிறது.

மிருத sanjevini மந்த்ரம் தெரிந்தவர்கள் அதை நெறைய ஜபிக்கலாம்.  இதனால் வியாதிகளின்
வீரியம் குறையும்.

கீழுள்ள  விவரங்களை இன்று ( 17-4-2015) இணைத்துள்ளேன் புன்னகை

1. ஆலமர இலையில் மிருத்யுஞ்ஜய
மந்திரத்தை ஜபித்து வியாதிஸ்தர்களின்
தலையணையின் அடியில் வைத்தால் வியாதி விரைவில் குணமாகும். குழந்தைகளின் தலையணைக்கடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும.

2. இந்த நன்னாளில் நாம் செய்ய
வேண்டிய முக்கியக் கடமை பெரியோர்களை வணங்கி ஆசியைக் பெருதல் ஆகும்.

3. அன்றையதினம் மகாலட்சுமி பூஜை செய்வது நன்மை தரும்.

4. சத்ரு சாந்தி பூஜைக்கும் இந்நாள்
உகந்தது.

5. மிருத சஞ்ஜீவனி மந்திரம் தெரிந்தவர்கள், அட்சய திருதியதினத்தில் அதை நிறைய ஜபிக்கலாம். இதனால்
வியாதிகளின் வீரியம் குறையும்.

6. இந்த நாளில் குரு பகவானின் அருள் பெற்ற உலோகமான தங்கத்தை வாங்குவது சிறப்பென்று ஒரு ஐதீகம் உண்டு. அதற்காக தங்கத்தை வாங்குவது ஒன்றுதான் இந்த நாளின் மகத்துவம் என்று
கூறுவது பேதமை.

7. ஏழைகளுக்கு தம்மால் முடிந்ததைக் கொடுத்து உதவுங்கள். அதனால் அவர்கள் மனம் குளிர்ந்தால், தன்னாலேயே நம் செல்வம் பெருகும்.

எனவே, நம்மால் முடிந்தவரை ஏழைகளுக்கு
கொடுத்து உதவுங்கள்.அட்சய திருதியை கொண்டாடுங்கள் !!

இந்த நாந்நாளில் ஏழைகளுக்கு தானம் செய்வது மிக மிக சிறந்தது.

எனவே கண்டிப்பாக இதை செய்வோம், அவர்கள் வாழ்த்து நம்மை செலவசெழிப்போடு வாழவைக்கும்...... வியாபாரிகளின் வார்த்தைகளை நம்பி அதிக விலை கொடுத்து தங்கம் வாங்காதீர்கள் ! புன்னகை


பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 10:44 am

maniajith007 wrote:
பிஜிராமன் wrote:அக்ஷ்ய திருதி
எனக்கொரு கேள்வி......இந்த நாள் அன்று.....தங்கம் வாங்க வேண்டும் என்பது.....எப்போது இருந்து நடை முறையில் உள்ளது......என்று யாராவது......விளக்கினால்.....மகிழ்வேன்......
நன்றி கிருஷ்ணா

இங்கே சென்று பாருங்கள்
நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat May 07, 2011 10:50 am

நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....[/quote]

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை ராமன் அவர்கள் நம்பும் அவர்கள் கடவுள் அவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Sat May 07, 2011 11:00 am

maniajith007 wrote:
நன்றி மணி......மக்களின் நம்பிக்கை அபரி மிதமானது என்பதற்கு ஒரு சான்று...கஷ்ட காலம்.....

நம்பிக்கை இல்லையென்றால் வாழ்க்கை இல்லை ராமன் அவர்கள் நம்பும் அவர்கள் கடவுள் அவர்களை ஒரு போதும் கைவிடுவதில்லை [/quote]

உண்மை மணி.....நன்றி.... அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 1194657695



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Apr 16, 2015 11:01 pm

இந்த வருடம், ஏப்ரல் 21 ஆம் தேதி அட்சய திருதியை வருகிறது. எனவே இந்த திரியை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை..............மஹாலக்ஷ்மியை துதித்து, ஏழைகளுக்கு அன்ன தானம் செய்து மகிழ்வோம் !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
monikaa sri
monikaa sri
பண்பாளர்

பதிவுகள் : 235
இணைந்தது : 03/04/2015

Postmonikaa sri Fri Apr 17, 2015 3:27 am

நல்ல எச்சரிக்கை உணர்வை தரக்கூடிய பதிவு!தங்கத்தின் மீது மோகம் கொள்ள வைத்து தான ,தர்மத்தை மறக்கச்
செய்யும் வியாபாரிகளை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்!நன்றி!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 9:04 pm

அள்ள அள்ளக் குறையாது வழங்கும்

அக்ஷய திருதியை-21.4.2015

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 JDodJUGLSeqiAWPpOAax+2(1)

சித்திரை மாதம் பிறக்கிறது என்றவுடன் நம் அனைவரின் நினைவிற்கும் வருவது அக்ஷய திருதியை. அதுவும் கடந்த சில வருடங்களாக தீபாவளிக்கு இணையாகப் பெண்களால் பேசப்படும் பொன்னாள். நகைக்கடை அதிபர்களின் திருவிழா நாள் இது. ஏழை, பணக்காரன் என யாராக இருந்தாலும் சரி, தங்களால் இயன்ற குண்டுமணி தங்கமாவது வாங்கிவிட வேண்டும் என்ற கருத்து தற்போது வெகுவாகப் பரவியுள்ளது. அப்படி என்னதான் சிறப்பு இந்த அக்ஷய திருதியைக்கு?

பிரதி வருடம் சித்திரை மாதம் அமாவாசை கழிந்த மூன்றாவது நாள் இந்த அக்ஷய திருதியை நாள் வரும். ‘க்ஷயம்’ என்றால் குறைவு, ‘அக்ஷயம்’என்றால் குறைவில்லாத அல்லது என்றுமே குறையாத, என்று பொருள் கொள்ளலாம். ஒவ்வொரு யுகத்திலும் இந்த அக்ஷய திருதியை நாள் ஆனது மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. பிரம்மா தனது படைப்புத் தொழிலைத் துவங்கியது இந்த நாளில்தான். அக்ஷய திருதியை நாளில் தனது படைப்புத் தொழிலைத் துவங்கிய பிரம்மா எந்தவிதக் குறையும் இன்றி தொடர்ந்து தனது பணியைச் செய்துகொண்டிருக்கிறார்.

சந்திரன் தனது 27 மனைவிகளுள் ரோகிணியின் மீது மட்டும் தீராத காதல் கொண்டு மற்றவர்களை புறக்கணிக்கிறான் என்ற புகாரின் பேரில் அவனது மாமனார் ஆன தக்ஷனின் சாபத்திற்கு உள்ளாகி தேய்ந்து போகிறான். அந்த நிலையில் சந்திரன் சிவபெருமானை நோக்கித் தவமிருந்து சாப விமோசனம் பெற்ற நாள் இந்த அட்சய திருதியை. சந்திரனின் தவத்திற்கு மகிழ்ந்த சிவபெருமான் ‘அக்ஷய’ என்று வரம் அருளினார். தக்ஷனின் சாபத்தால் தேய்ந்து வந்தாலும் இறைவன் அருளிய அக்ஷய என்ற வரத்தால் மீண்டும் சந்திரன் வளரத் தொடங்குகிறான் என்பது புராண காலத்துக் கதை.

இக்ஷ்வாகு குல இளவரசன் பகீரதனின் விடாமுயற்சி யால் கங்கை நதி ஆகாயத்தி லிருந்து பூமிக்கு வந்தது இந்த அக்ஷய திருதியை நாளன்றுதான். அன்று முதல் இன்று வரை வற்றாத ஜீவ நதியாக கங்கை பிரவாகித்துக் கொண்டிருக்கிறது என்பதை நாம் நிஜத்தில் கண்டு வருகிறோம். அக்ஷய திருதியை நாள் அன்று நம் பாரத பூமிக்கு வந்ததால் இன்றளவும் குறைவில்லாமல் நீர்வளம் நிரம்பிய நாடாக நம் தேசத்தை கங்காதேவி காத்துக்கொண்டிருக்கிறாள்.

துரியோதனின் உத்தரவின் பேரில் திரௌபதியின் துகிலை துச்சாதனன் உரியும்போது ‘கண்ணா... நீயே எனக்கு கதி’ என்று தன்னைச் சரணடைந்த அந்த அபலையின் மானத்தைக் காக்க கண்ணன் ஓடோடி வருகிறான். அவன் அருளால் புடவையின் நீளம் குறையில்லாமல் வளர்ந்து கொண்டேயிருக்க, துகிலுரித்த துச்சாதனன் மயங்கி விழுந்ததுதான் மிச்சம். இவ்வாறு திரௌபதியின் மானம் காக்க கண்ணன் புடவையை அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்கிறது மகாபாரதம்.

திருமால் தனது பத்து அவதாரங்களில் ஒரே நேரத்தில் இரண்டு அவதாரமாக வாழ்ந்து காட்டியது துவாபரயுகத்தில். பலராமன் ஆகவும், கண்ணன் ஆகவும் யதுகுல சகோதரர்களாக, கோசம்ரக்ஷணை என்பது மிகவும் இன்றியமையாதது என்பதை இவ்வுலகிற்கு எடுத்துக் காட்டினர். பசுக்களை பராமரித்தால் குறையில்லாத செல்வம் நிறைந்திருக்கும் என்பதை உலகிற்கு உணர்த்திய பலராமன் பிறந்தது இந்த அக்ஷய திருதியை அன்றுதான்.

பாண்டவர்கள் வனவாசம் செய்த காலத்தில் காட்டினில் உணவு சமைக்க மிகவும் சிரமப்பட்டாள் திரௌபதி. பீமனுக்கு உணவு சமைக்க வேண்டும் என்பதற்காக அல்ல, தங்களை நாடி வரும் முனிவர்களுக்கும், ரிஷிகளுக்கும் குறையின்றி அமுது படைக்க இயலாது போகிறதே என்று மனம் வருந்தினாள். செய்வதறியாது திகைத்த திரௌபதி சூரிய பகவானை நினைத்து வழிபட்டாள். சித்திரை மாதத்தில் வரும் வளர்பிறை திருதியை நாளில் அள்ள அள்ளக் குறையாத அக்ஷய பாத்திரத்தை திரௌபதிக்கு வழங்கி ஆசீர்வதித்தார் சூரிய பகவான். குறையின்றி உணவினை வழங்க வல்லது என்பதால் அதற்கு அக்ஷய பாத்திரம் என்ற பெயர் வந்தது.




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Apr 17, 2015 9:04 pm

இதெல்லாம் சரி, தங்க நகை வாங்கி வைப்பதற்கும், இந்த அக்ஷய திருதியை நாளுக்கும் என்ன சம்பந்தம்? செல்வத்திற்கு அதிபதியான குபேரன் முதன்முதலில் மகாலக்ஷ்மியிடம் இருந்து செல்வத்தைப் பெற்ற நாள் இந்த அக்ஷய திருதியை நாள். செல்வத்தினை பாதுகாத்து, பெருக்கும் பொறுப்பினை மகாலக்ஷ்மி தாயாரிடம் அக்ஷய திருதியை நாளில் பெற்றுக் கொண்டதால் குபேரனின் கிடங்கினில் செல்வம் என்பது அள்ள அள்ளக் குறையாமல் வளர்ந்து கொண்டேயிருக்கிறது என்பது நமது நம்பிக்கை.

இது மட்டுமல்ல, வறுமையில் வாடிய குசேலர் தனது பால்ய சிநேகிதனும், துவாரகையின் அரசனுமான ஸ்ரீகிருஷ்ணனை சந்திக்கச் சென்றபோது தனது மனைவி கொடுத்து அனுப்பிய அவல் மூட்டையை கண்ணனிடம் கொடுக்காமல் தயங்கி நிற்க, புரிந்து கொண்ட கண்ணன் குசேலனின் கையில் இருந்த அவலை வாங்கி வாயில் போட்டு ‘அக்ஷய’ என்று வாய் திறந்து அருளினான். மறு கணமே சுதாமா என்கிற குசேலனின் குடிசை மாட மாளிகையாக மாறியதோடு மட்டுமல்லாமல் அவனது இல்லத்தில் செல்வமும் நிறைந்தது. இவ்வாறு கண்ணன் தனது வாய் திறந்து ‘அக்ஷய’ என்று அருளியது இந்த அக்ஷய திருதியை நாளில்.

இந்த கலியுகத்தில் எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதி சங்கரர் தனக்கு நெல்லிக்கனியை பிட்சையிட்ட ஏழைப் பெண்மணியின் துயர்துடைக்க கனகதாரா ஸ்தோத்ரம் படைத்து மகாலட்சுமியின் அருளினால் அந்தப் பெண்மணியின் இல்லத்தில் செல்வத்தை நிறையச் செய்தது இந்த அக்ஷய திருதியை நாளில். கனகம் என்றால் தங்கம் என்று பொருள். தாரை என்றால் விடாமல் பொழிவது. இவ்வாறு தங்கத்தை விடாமல் பொழியச் செய்யும் சக்தி படைத்த கனகதாரா ஸ்தோத்ரத்தை சங்கரர் இயற்றியது இந்த அக்ஷய திருதியை நாளில் என்பதால் இந்த நாளானது தங்கத்திற்கு முக்கியத்துவம் தரும் நாளாக அமைந்துவிட்டது.

அக்ஷய திருதியை என்றதும் தங்கத்தினை மட்டும் நினைவில் கொள்ளும் நாம் மேற்சொன்ன கதைகளில் இருந்து முக்கியமான ஒரு விஷயத்தை கற்றுக்கொள்ள மறந்துவிடுகிறோம். அக்ஷய திருதியை நாளில் செல்வம் சேரும் என்பதை மட்டும் புரிந்துகொள்ளும் நம்மால் இந்தக் கதைகளில் சொல்லப்பட்டுள்ள உட்கருத்தினை அறிந்துகொள்ள இயலவில்லை. தனது வீட்டினில் பிட்சையிடுவதற்கு எதுவும் இல்லாவிட்டாலும் ‘பவதி பிட்சாந்தேஹி’ என்று வாசலில் வந்து நிற்கும் சங்கரனுக்கு அந்த ஏழைப் பெண்மணி தன்னால் இயன்ற நெல்லிக்கனியை எவ்வித தயக்கமும் இன்றி பிட்சையிட்டாள்.

கண்ணனுக்கு கொடுப்பதற்கு எதுவும் இல்லையென்றாலும் தன்னால் இயன்ற அவலையும் வெல்லத்தையும் கலந்து தனது கணவனிடம் கொடுத்து அனுப்பினாள் ஏழை குசேலனின் மனைவி. வனவாசம் செய்யும்போது கூட அந்த கஷ்டமான சூழலிலும் தங்களை நாடி வரும் ரிஷிகளும், முனிவர்களும் வயிறார உண்ண வேண்டும்,

அவர்கள் பசியினைப் போக்க வேண்டும் என்பதற்காக சூரிய பகவானிடமிருந்து அக்ஷய பாத்திரத்தைப் பெற்றுக் கொண்டாள் திரௌபதி. ஆக, அக்ஷய திருதியை நாளில் அடுத்தவர்களுக்கு அன்னமிட வேண்டும் என்பதே இங்கு முக்கியத்துவம் பெறுகிறது. இறைக்கின்ற ஊற்றுதான் சுரக்கும். நாம் அள்ளி அள்ளி கொடுத்தால்தான் நம் வீட்டினில் அள்ள அள்ளக் குறையாத செல்வம் சேரும் என்பதே அக்ஷய திருதியை நாளில் நாம் கற்றுக் கொள்ள வேண்டியதாகும்.

ஜோதிடவியல் ரீதியாக ஆராய்ந் தால் நவகிரஹங்களில் நம் கண்களுக்குத் தெரிகின்ற சூரியனும், சந்திரனும் ஒரே நேரத்தில் உச்ச பலத்துடன் சஞ்சரிக்கும் காலமே அக்ஷய திருதியை நாள். அதாவது, சூரியன் தனது உச்ச ராசியான மேஷத்திலும், சந்திரன் தனது உச்ச ராசியான ரிஷபத்திலும் அமர்ந்திருக்கும் காலமே அக்ஷய திருதியை நாள் ஆகும். சூரியனும், சந்திரனும்தான் நமக்கு உணவினை அளிக்கும் கோள்கள். நீர் வளத்தினைத் தருவது சந்திரன்.

சூரியனின் அருளில்லாவிட்டால் பயிர்கள் விளையாது. சூரியன், சந்திரனின் ஆசியினால்தான் பயிர்கள் விளைகின்றன. குறைவின்றி வயிறு நிறைய சாப்பிடுகிறோம். அவர்கள் உச்ச வலிமையோடு சஞ்சரிக்கும் காலத்தில் அன்னதானத்தினைச் செய்தோமேயானால் அன்னத்திற்கு என்றுமே பஞ்சம் வராது. தங்கத்தை நம்மால் சாப்பிடமுடியாது. எவ்வளவு தான் தங்க நகைகளைச் சேர்த்து வைத்தாலும், தவித்த வாய்க்குத் தண்ணீர் வேண்டும். தாகத்தைத் தீர்த்து வைப்பவனிடம்தான் தங்கமும் சேரும்.

எல்லாவற்றிற்கும் மேலாக சிவபெருமான் பிட்சாடனர் ஆக அலைந்தபோது அவருக்கு பிச்சையிட, அன்னையானவள் அன்னபூரணியாக வடிவெடுத்து வந்ததும் இந்த அக்ஷய திருதியை நாளில் என்று சிவபுராணம் சொல்கிறது. மகத்துவம் வாய்ந்த இந்த நன்னாளில் நகைகள் வாங்கி சேர்த்து வைப்பது மட்டும் நம் நோக்கமாகிவிடக் கூடாது.. அக்ஷய திருதியை என்றால் அன்னதானம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். (குறிப்பாக நகைக்கடை அதிபர்கள் அக்ஷய திருதியை நாளில் அன்னதானம் செய்வதன் மூலம் மேன்மேலும் தங்கள் வியாபாரம் சிறக்கக் காண்பார்கள்.

நகை வாங்குவதற்கு வரும் வாடிக்கையாளர்களுக்குக் கூட தங்களால் இயன்ற உணவினை அளிக்கலாம். வியாபாரம் பெருகுவதோடு வயிறு நிறையும் வாடிக்கையாளர்களின் வாழ்த்துகளையும் பெறலாம்.) இந்த நாளில் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் அது காலமெல்லாம் தொடர்ந்து கொண்டிருக்கும்.

அக்ஷய திருதியையின் பெருமையைப் புரிந்து கொண்டு அந்த நாளில் ஆதரவற்ற முதியவர்கள், அநாதைக் குழந்தைகள், மாற்றுத் திறனாளிகள் ஆகியோர்க்கு நம்மால் இயன்ற அன்னதானத்தினையும், பொருளுதவியையும் செய்வோம். தங்கம் மாத்திரமல்ல, எல்லாவிதமான வளங்களும் அள்ள அள்ளக் குறையாத அளவிற்கு நம் வாழ்வினில் வந்து சேரும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.

நன்றி ஆன்மிகம்



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Sat Apr 18, 2015 11:50 am

அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 103459460 அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 3838410834 அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 1571444738



அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஅக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312அக்ஷய திருதியை ! 29-04-2017 - Page 4 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Apr 19, 2015 10:43 pm

நன்றி விமந்தனி புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Apr 20, 2015 1:09 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக