புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிவழியில் நம் ஹஜ்


   
   

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 8:10 pm

First topic message reminder :

எல்லாப்புகழும் ஏக வல்லவனாகிய அல்லாஹ் ஒருவனுக்கே! அவனுடைய அன்பும் அருளும் உலகத்தாருக்கு அருட்கொடையாக அனுப்பப்பட்ட நம் உயிரிலும் மேலான அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீதும் அவர்களின் குடும்பத்தார், தோழர்கள், அவர்களைப் பின் தொடந்த தாபியீன்கள், நல்லடியார்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!

ஏற்றுக் கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலி சுவர்க்கத்தைத் தவிர வேறில்லைஎன நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். இன்ஷா அல்லாஹ் அத்தகைய பாக்கியவான்களாக நீங்களும் ஆகப்போகின்றவர்கள், ஹஜ்ஜு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இரண்டு நிபந்தனைகளை பரிபூரணப்படுத்தியே ஆக வேண்டும். முதலாவது இக்லாஸ் (அல்லாஹ்விற்காக ஹஜ்ஜை நிறைவேற்றுவது) இரண்டாவது நபி(ஸல்) அவர்கள் செய்ததைப் போன்றே ஹஜ்ஜை நிறைவேற்றுவது. ஹஜ்ஜைப்பற்றிய சரியான தெளிவு இல்லாததினால் இன்று பல ஹாஜிகள் ஹஜ் கிரியைகளை தவறான முறையில் செய்கின்றார்கள். நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜை சுருங்கச் சொல்லி விளங்கவைப்பதினால் இத்தவறுகளை நீக்கலாம் என்ற நன்னோக்கோடு இச்சிறு புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.

என்னிடமிருந்து உங்களின் ஹஜ் கடமைகளை எடுத்துக் கொள்ளுங்கள் சிலநேரம், இந்த வருடத்திற்கு பின் நான் உங்களை பார்க்காமல் இருக்கலாம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (சுனனுல் குப்ரா லில்பைஹகி) ஆகவே, இதைப்படித்து நபி(ஸல்) அவர்கள் செய்த ஹஜ்ஜைப் போன்றே நீங்களும் செய்யுங்கள். அல்லாஹ் நமது ஹஜ்ஜை ஏற்று அன்று பிறந்த பாலகனைபோன்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜின் கூலியாகிய சுவர்க்கத்தைப் பெற்றவர்களாகவும் நம் தாயகம் திரும்ப வாய்ப்பளிப்பானாக!





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 8:55 pm

2. தவாஃப் செய்யும் போது நிகழும் தவறுகள்
1. ஹஜருல் அஸ்வத் கல் பொருத்தப்பட்ட இடத்தைத் தாண்டி தவாஃபை ஆரம்பித்தல் தவறாகும். ஹஜருல் அஸ்வத் கல்லிருந்தே தவாஃபை ஆரம்பிக்க வேண்டும்.
2. மக்காவிற்கு வந்தவுடன் செய்யும் முதல் தவாஃபின் முதல் மூன்று சுற்றுக்களில் மாத்திரம் (ஆண்கள் மட்டும்) ரம்ல் செய்வது (தனது இரு தோள் புஜங்களையும் அசைத்துக் கொண்டு கால் எட்டுக்களை கிட்ட வைத்து வேகமாக நடப்பது) சுன்னத்தாகும். எல்லா சுற்றுக்களிலும் ரம்ல் செய்வது சுன்னத்தல்ல. சிலர் எல்லா சுற்றுக்களிலும் ரம்ல் செய்கின்றார்கள் இது தவறாகும்.
3. ரம்ல் செய்வதில் சில பெண்களும் ஈடுபடுகின்றார்கள், இது தவறான முறையாகும்.
4. ஹிஜ்ர் இஸ்மாயீல் என்று சொல்லப்படும் கஃபாவுடன் சேர்க்கப்பட்டிருக்கும் அரை வட்டத்திற்குள்ளால் தவாஃப் செய்தல் தவறாகும். அப்படிச் செய்பவரின் அந்த சுற்று ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. காரணம் அதுவும் கஃபத்துல்லாவின் எல்லையே. அதையும் சேர்த்து சுற்றுவதே சரியான முறையாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 8:56 pm

5. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதற்காக மற்றவர்களை நெருக்குவது அல்லது அவர்களுக்கு ஏசுவது அல்லது ஏதாவது தொந்தரவு கொடுப்பது தவறான செயலாகும். இதில் பெண்கள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு கொடுக்கும் கஷ்டமாகும். ஒரு முஸ்லிம் இன்னுமொரு முஸ்லிமுக்கு கஷ்டம் கொடுப்பது தடுக்கப்பட்டவையாகும்.

ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடாமலிருப்பதால் தவாஃபிற்கு எந்தக் குறையும் ஏற்படுவதில்லை. ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிட வாய்ப்பில்லாதவர் அக்கல்லுக்கு நேராக நின்று தன் வலது கையை உயர்த்தி தக்பீர் சொல்லிக் கொண்டால் போதும்.

6. நபி(ஸல்) அவர்களின் சுன்னாவை பின்பற்றுவதற்காகவே ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடுவதும், தொடுவதும் இருக்க வேண்டும். வேறு எந்த நோக்கமும் அதில் இருக்கக் கூடாது. கஃபாவில் நன்மை கருதி தொடுவதற்கு அனுமதிக்கப்பட்ட இடம் ஹஜருத் அஸ்வத் கல்லும் ருக்னுல் யமானியுமாகும். இது தவிரவுள்ள எந்த இடங்களையும் நன்மை கருதி தொடுவதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை. அது தவறான செயலாகும். சிலர் கஃபாவின் திரையையும்,
சுவரையும், மகாமு இப்றாஹிமையும் இன்னும் இது போன்ற கஃபாவிலுள்ள பல இடங்களையும் தொட்டு முத்தமிடுகின்றார்கள். இவைகள் அனைத்தும் தடுக்கப்பட வேண்டிய செயல்களாகும். ஏனென்றால் நபி(ஸல்) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லையும் ருக்னுல் யமானியையும் தவிரவுள்ள வேறு எந்த இடத்தையும் கஃபாவில் நன்மை கருதித் தொடவில்லை. உமர்(ரலி) அவர்கள் ஹஜருல் அஸ்வத் கல்லை முத்தமிடு முன் நீ ஒரு கல், எந்த பிரயோஜனத்தையும் தர முடியாது, எந்த ஆபத்தையும் நிகழ்த்திடவும் முடியாதுநபி(ஸல்) அவர்கள் உன்னை முத்தமிட்டதை நான் பார்க்கவில்லையென்றால் நான் உன்னை முத்தமிடமாட்டேன் எனக் கூறி அதை முத்தமிட்டார்கள். (முஸ்லிம்)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:15 pm

7. தவாஃபுடைய ஒவ்வொரு சுற்றிற்கும் தனிப்பட்ட துஆக்களை ஓதுவது சரியான முறையல்ல. இப்படி நபி(ஸல்) அவர்கள் கற்றுத்தரவில்லை. ஆனால் ருக்னுல் யமானியிலிருந்து ஹஜருல் அஸ்வத் கல் மூலை வரை ஒரு குறிப்பிட்ட துஆவை நபி(ஸல்) அவர்கள் ஓதியிருக்கின்றார்கள். அதாவது ரப்பனா ஆதினா ஃபித்துன்யா ஹஸனத்தன் வஃபில் ஆகிரதி ஹஸனதன் வகினா அதாபன்னார்இதைத்தவிர வேறு எந்த துஆவையும் ஒவ்வொரு சுற்றிற்கும் குறிப்பிட்டு ஓதுவது தவறாகும்.

8. தவாஃப் செய்பவர்களும் அல்லது தவாஃப் செய்ய வைப்பவர்களும் மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்கும் அளவிற்கு தங்களின் சத்தங்களை உயர்த்தக் கூடாது.

9. தவாஃபுடைய இரண்டு ரக்அத்தைத் தொழுவதற்காக மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் போதும் மகாமு இப்றாஹிமுக்குப் பின் ஒட்டி தொழுவது தவறாகும். இப்படிச் செய்வதால் தவாஃபு செய்யக்கூடிய மக்களுக்கு தொந்தரவு ஏற்படுகின்றது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் தூரமாகச் சென்று அவ்விரு ரக்அத்துக்களையும் தொழுவதே சரியான முறையாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:18 pm

3. ஸஃயி செய்யும் போது நிகழும் தவறுகள்
1. சில ஹாஜிகள் ஸஃபா மலையில் நின்று, தொழுகைக்கு தக்பீர் கூறும்போது இரு கைகளையும் உயர்த்துவது போன்று கஃபாவின் பக்கம் தன் இருகைகளையும் உயர்த்திகாட்டி விட்டு செல்கின்றார்கள். இது தவறான முறையாகும். அவ்விடத்தில் நின்று கஃபாவின் பக்கம் தன் முகத்தை திருப்பி, பிரார்த்திக்கும் போதே தன்னுடைய இரு கைகளையும் உயர்த்த வேண்டும்.

2. ஸஃபா, மர்வா மலைக்கிடையில் பச்சை நிற விளக்கினால் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திற்கு மத்தியில்தான் ஆண்கள் மட்டும் சற்று வேகமாக ஓட வேண்டும். மற்ற இடங்களில் சாதாரண நடையில் செல்ல வேண்டும். சிலர் ஸஃயி முழுவதிலும் ஓடியே ஸஃயி செய்கின்றார்கள் இது தவறாகும். பெண்கள் எல்லா இடங்களிலும் சாதாரண நடையில்தான் செல்ல வேண்டும். ஆனால், சில பெண்களும் பச்சை நிற விளக்கினால் அடையாளமிடப்பட்டிருக்கும் இடத்திற்கு மத்தியில் வேகமாக ஓடுகின்றார்கள். இவைகள் தவறான முறையாகும்.

3. ஸஃபாவிலிருந்து ஸஃபா வரை செல்வதை ஒரு சுற்றாக எண்ணுவது தவறு. ஸஃபாவிருந்து மர்வா வரைச் செல்வதே ஒரு சுற்றாகும்.

4. ஸஃயி செய்து முடிந்ததும் மர்வாவிலேயே முடிகளை கத்தரிப்பது தவறான முறையாகும். இது அல்லாஹ்வின் ஆலயத்தை அசிங்கப்படுத்துவதாக கருதப்படும். அதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் முடி திருத்தப்படுத்தும் இடங்களுக்குச் சென்று அதைச் செய்ய வேண்டும்.
5. ஆண்கள் தலையில் மூன்று இடங்களில் மாத்திரம் முடிகளை எடுப்பது நபி வழிக்கு மாற்றமான செயலாகும். ஆண்கள் முடி எடுப்பதில் இரண்டு முறைதான் சுன்னத்தாகும். ஒன்று தலைமுடியை முழுக்க வழிப்பது. இதுவே சிறந்த முறையாகும். அல்லது தலையிலுள்ள எல்லா முடிகளையும் கத்தரிப்பது. பெண்கள் அவர்களின் முடி நுனியில் விரல் நுனியளவு வெட்டுவதே சுன்னத்தாகும்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:19 pm

4. அரஃபாவில் நிகழும் தவறுகள்
1. அரஃபாவின் எல்லைக்கு வெளியே சூரியன் மறையும் வரை தங்கி இருப்பது மாபெரும் தவறாகும். ஆகவே, அரஃபாவின் எல்லையை உறுதிப்படுத்திய பின்பே அங்கு தங்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ஜு என்றால் அரஃபாவில் தங்குவதுதான்” (திர்மிதி, இப்னு மாஜா) அரஃபாவில் தங்கும் நேரம், துல்ஹஜ் பிறை ஒன்பதாம் நாள் லுஹர் நேரத்திலிருந்து மக்ரிப் நேரம் வரையாகும். இதற்குள் அரஃபாவில் தங்கமுடியாதவர் அந்த இரவிற்குள் தங்கியே ஆகவேண்டும். குறிப்பிட்ட நேரத்திற்குள் கொஞ்ச நேரமாவது அரஃபாவில் தங்குவது கடமையாகும். அப்படித் தங்காதவரின் ஹஜ்ஜு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

2. சூரியன் மறைவதற்கு முன் அரஃபாவிலிருந்து புறப்படுவது தவறாகும். நபி(ஸல்) அவர்கள் சூரியன் மறைந்த பின்பே முஸ்தலிபாவுக்குச் சென்றார்கள்.

3. அரஃபா மலையின் உச்சிக்குச் செல்வதற்காக தானும் பல சிரமங்களுக்கு உள்ளாகுவது மட்டுமல்லாமல் பிறருக்கும் பல துன்பங்களைக் கொடுப்பது தவறாகும். நபி(ஸல்) அவர்கள் அந்த மலை மீது ஏறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள், நான் இந்த இடத்தில்தான் நின்றேன், அரஃபாவிற்குள் எங்கும் தங்கலாம் என்றார்கள்.
ஆகவே, அரஃபா எல்லைக்குள் எங்கு நின்றாலும் போதுமானதாகும்.

4. துஆ கேட்கும் போது அரஃபா மலையை முன்னோக்கி கேட்பது சரியான முறையல்ல. நபி(ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கியே துஆக்கேட்டார்கள்.
5. துஆ கேட்கும் போது கூட்டமாகக் கேட்காமல் தனிமையாகக் கேட்பதே நபி வழியாகும். நபி(ஸல்) அவர்களும் தனிமையில்தான் துஆக்கேட்டார்கள்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:19 pm

5. முஸ்தலிஃபாவில் நிகழும் தவறுகள்
1. முஸ்தலிஃபா சென்றதும் தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன்பே ஜம்ராக்களுக்கு எறியும் கற்களைப் பொறுக்குவதும். கற்களை முஸ்தலிஃபாவிலிருந்துதான் பொறுக்க வேண்டுமென்று நம்புவதும் தவறாகும். நபி(ஸல்) அவர்கள் அப்படி கட்டளை இடவில்லை. நபி(ஸல்) அவர்கள் மினா செல்லும் வழியில்தான் அவர்களுக்கு கற்கள் பொறுக்கி கொடுக்கப்பட்டது. முஸ்தலிஃபா சென்றதும் மக்ரிபையும் இஷாவையும் தொழுதுவிட்டு ஃபஜ்ர் நேரம் வரை தூங்கிவிட வேண்டும்.

2. எல்லா நாட்களுக்குமுரிய கற்களை ஒரே நாளிலேயே பொறுக்கி வைக்க வேண்டுமென்று நினைப்பது தவறான முறையாகும். ஒவ்வொரு நாளுக்குரிய கற்களை அந்தந்த நாளிலேயே மினாவில் பொறுக்கிக் கொள்வதே சரியான முறையாகும்.

3. எறியும் கற்களை கழுவுவது தவறாகும். இது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அப்படி நபி(ஸல்) அவர்கள் கூறவுமில்லை, செய்யவுமில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:20 pm

6. கல்லெறியும் போது நிகழும் தவறுகள்

1. ஜம்ராக்களுக்கு கல் எறியும் போது ஷைய்த்தானுக்கு எறிவதாக நினைத்து மிகக் கோபத்துடனும் தவறான வார்த்தைகளைக் கூறி எறிவது தவறான ஒன்றாகும். கஃபாவை தவாஃப் செய்வதும், ஸஃபா மர்வாவிற்கு மத்தியில் ஸஃயி செய்வதும், ஜம்ராக்ககளுக்கு கல் எறிவதும் அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவே ஏற்படுத்தப் பட்டிருக்கின்றது என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்) ஆகவே கற்களை எறியும் போது அல்லாஹு அக்பர்என்று கூறிக் கொண்டு எறிய வேண்டும்.

2. பெரிய கற்களாலும் செருப்புக்களாலும் குடை மற்றும் தடி போன்றவைகளாலும் எறிவது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். நிலக்கடலை அளவாகவே எறியும் கற்களின் அளவு இருக்க வேண்டும்.

3. கல் எறியும் இடத்தில் மற்றவர்களை நெருக்கிக் கொண்டு செல்வது தவறாகும். மற்றவர்களுக்கு தொந்தரவு கொடுக்காமல் கற்களை எறிய வேண்டும். இதில் பெண்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டும்.

4. எல்லாக் கற்களையும் ஒரே தடவையில் எறிவது தவறாகும். இப்படி எறிந்தால் ஒரு கல் எறிந்ததாகவே கருதப்படும். ஒவ்வொரு கற்களாக எறிவதே நபி வழியாகும்.

5. கல் எறிவதற்கு தனக்கு சக்தி இருந்தும் பிறரிடம் ஒப்படைப்பது தவறான முறையாகும். ஜம்ராக்களுக்கு கல் எறிவது ஹஜ்ஜுடைய வாஜிபுகளில் (அவசியமான செயல்களில்) ஒன்றாகும் என்பதை தெரிந்து கொண்டால் இத்தவறு நடைபெற வாய்ப்பில்லை.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:20 pm

7. தவாஃபுல் வதா (பயணத் தவாஃபு) செய்யும் போது நிகழும் தவறுகள்
1. சிலர் 12 அல்லது 13ம் நாள் தவாஃபுல் வதா செய்து விட்டு மீண்டும் மினா சென்று மூன்று ஜம்ராக்களுக்கும் கற்களை எறிந்துவிட்டு தன் ஊருக்குச் சென்று விடுகின்றார்கள். இது பெரும் தவறாகும். ஹஜ்ஜின் கடைசி அமல், தவாஃபுல் வதாவாக இருக்க வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் இவர்களின் கடைசி அமல் கல் எறிதலாக இருக்கின்றது, இப்படிச் செய்தவர்கள் மீண்டும் ஒரு முறை மக்கா வந்து தவாஃபுல் வதா செய்து விட்டுத்தான் ஊர் செல்ல வேண்டும்.

2. தவாஃபுல் வதா செய்த பின் மக்காவில் தங்கியிருப்பது தவறாகும். எல்லா வேலைகளையும் முடித்த பின்பே தவாஃபுல் வதாவை செய்ய வேண்டும். தவாஃபுல் வதா முடிந்ததும் பிரயாணத்தை ஆரம்பித்து விட வேண்டும். பிரயாணத்திற்காக வாகனத்தை எதிர்ப் பார்த்திருப்பதில் தவறில்லை.

3. தவாஃபுல் வதாவை முடித்து விட்டு பின் பக்கமாகவே செல்வது தவறான முறையாகும். காரணம் இவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்யவில்லை. நபி(ஸல்) அவர்கள் செய்யாத ஒன்றைச் செய்வது பித்அத்தாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu May 06, 2010 9:21 pm

8. மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்லும் போது நிகழும் தவறுகள்
1. நபி(ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதெற்கென்று மதீனா செல்வது தவறாகும். மதீனா செல்லும் போது நபி(ஸல்) அவர்களின் பள்ளியை ஸியாரத் செய்வதற்காகப் போவதே சுன்னத்தாகும். (நன்மையைக் கருதி) மூன்று பள்ளிகளுக்கு மாத்திரமே பிரயாணம் மேற்கொள்ளப்பட வேண்டும், மஸ்ஜிதுல் ஹராம், என்னுடைய (ரசூல்(ஸல்) அவர்களின்) பள்ளி மற்றும் மஸ்ஜிதுல் அக்ஸா என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

2. மஸ்ஜிதுன் நபவியிலுள்ள சுவர்களை முத்தமிடுவதும் அதைத் தொட்டு முத்தமிடுவதும் தங்களின் நோக்கங்கள் நிறைவேற முடிச்சுக்கள் போடுவதும் தடுக்கப்பட வேண்டியதும், இணைவைக்கும் செயல்களுமாகும்.

3. நபி(ஸல்) அவர்களின் கப்ரையோ, அபூபக்ர் (ரலி) மற்றும் உமர் (ரலி) அவர்களின் கப்ரையோ, பகீய் மய்யவாடியில் அடங்கப்பட்டிருக்கும் நபித் தோழர்களின் கப்ருகளையோ, உஹத் போர்களத்தில் ஷஹீதாக்கப்பட்டவர்களின் கப்ருகளையோ ஸியாரத் செய்வதற்காக செல்லும் போது அவர்களிடம் பிரார்த்திப்பதற்கோ அல்லது அவர்கள் மூலம் பரக்கத் பெறுவதற்கோ அல்லது அங்குள்ள மண்களையோ கற்களையோ பரக்கத் நாடி எடுத்துச் செல்வதோ ஷிர்க் (அல்லாஹ்விற்கு இணைவைத்தல்) என்னும் மாபெரும் குற்றமாகும். நமது தேவைகளை நிறைவேற்றுபவனும் நமக்கு அருள்புரிபவனும் அல்லாஹ் மாத்திரமே.

4. வரலாற்றுச் சின்னங்களாகிய அகழ் யுத்தம், கிப்லத்தைன் பள்ளி போன்ற இடங்களை பரக்கத் நாடிச் செல்வதும் தவறாகும். இவைகள் வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மாத்திரமே, இதனால் நாமும் பல படிப்பினைகள் பெற வேண்டும் என்பதற்காகவே அங்கு செல்ல வேண்டும்.

5. மஸ்ஜிதுன் நபவி செல்வதை ஹஜ்ஜின் ஒரு கடமையாக எண்ணுவது அறியாமையாகும். அதாவது நாற்பது வக்த் (நேர) தொழுகைகளை நபி(ஸல்) அவர்களின் பள்ளியிலே ஜமாஅத்தாகத் தொழுவது கடமை போன்றும், அப்படிச் செய்யாதவர்களின் ஹஜ்ஜை குறைவான ஹஜ்ஜாகக் கருதுவது. அதே போல் யார் மஸ்ஜிதுன் நபவியில் நாற்பது நேரத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவருக்கு நரக விடுதலையும், நயவஞ்சகத் தனத்திலிருந்து விடுதலையும் கிடைக்கும் என நம்புவது. இவைகள் அனைத்தும் ஆதாரமற்றவைகளாகும். ஹஜ்ஜுக்கும் மஸ்ஜிதுன் நபவி செல்வதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதே உண்மை.

6. மஸ்ஜிதுன் நபவியில் தொழுவதை விட கஃபாவில் தொழுவது மிகச் சிறந்ததாகும். மஸ்ஜிதுன் நபவியில் தொழுதால் மற்றப் பள்ளிகளில் கிடைக்கும் நன்மைகளை விட 1000 மடங்கு அதிகம் கிடைக்கின்றது. கஃபாவில் தொழுதால் ஒரு இலட்சம் நன்மைகள் அதிகம் கிடைக்கின்றது. இதன் கருத்து மஸ்ஜிதுன் நபவிக்குச் செல்லக் கூடாது என்பதல்ல. மஸ்ஜிதுன் நபவிக்கு இவர்கள் கொடுக்கும் சிறப்புக்களை ஏன் கஃபாவிற்குக் கொடுப்பதில்லை என்பதை சுட்டிக் காட்டுவதே நோக்கமாகும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக