புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐயமும் தெளிவும் - நல்வாழ்க்கைத் தொடர்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 8:59 pm

1.
ஐயம் : வெங்காயம், பூண்டு இவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டால் மக்ரூஹ் என்று சொல்கிறார்கள். ஷரீஅத் சட்டம் இதுபற்றி என்ன சொல்கிறது? P.M. நாகூர் மீரான், பத்ராவதி.

தெளிவு : ஒருவர் நாற்றமடிக்கக் கூடிய இச் செடிகளிலிருந்து உற்பத்தியாகும் வெங்காயம், பூண்டு முதலியவற்றைச் சாப்பிட்டால் நமது பள்ளியை நெருங்க வேண்டாம். (ஏனெனில்) மனிதர்கள் எதனால் தொல்லையடைகிறார்களோ அதனால் மலக்குகளும் தொல்லையடைகின்றனர்.

அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : புகாரி, முஸ்லிம்
வெங்காயம், பூண்டு போன்றவற்றைப் பச்சையாகச் சாப்பிட்டு விட்டு சரியாக பல் துலக்காமல், வாயை சுத்தம் செய்யாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்று மேற்கண்ட ஹதீஸ் மூலம் தெளிவாகிறது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:03 pm

2.
ஐயம் : கணவரின் பெயரை மனைவி கூறுவது சரியா? தவறாகுமா? கூறத் தடை உண்டா?
A. முஹம்மத் ஷஹீத் U.A.E

தெளிவு : ஒருமுறை ரசூல்(ஸல்) அவர்கள் தம் மனைவி ஆயிஷா(ரழி) அவர்களிடம், ஆயிஷாவே நீ என் மீது சந்தோஷ உள்ளத்துடன் அல்லது சினமான உள்ளத்துடன் இருப்பதை நான் நன்கு அறிந்து கொள்வேன் என்றார்கள். அதற்கு ஆயிஷா (ரழி) அவர்கள் எப்படி அறிவீர்கள் என் வினவ, அதற்கு நபியவர்கள்,
ஆயிஷாவே நீ பேசும் பொழுது சில சமயம் “முஹம்மதின் ரப்பின் மீது சத்தியமாக” என்று கூறினால் அன்பு உள்ளத்துடன் நீ இருப்பதாகவும், “இப்றாஹீமீன் ரப்பின் மீது சத்தியமாக” என கூறினால் நீ நல்ல மன நிலையில் இல்லை என்றும் கணித்துக் கொள்வேன் என்றார்கள்.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் நபியவர்களைப் பார்த்து, “யா ரசூலுல்லாஹ், நான் இப்றாஹீமீன் ரப்பின் மீது ஆணையாக என்று கூறியது உங்கள் மீது சினங் கொண்ட மன நிலையில், தங்களின் பெயரைக் சொல்வதைத்தான் தவிர்த்துக் கொண்டேனேயன்றி, உங்களை வெறுக்கவில்லை” என்றார்கள்.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) ஆதாரநூல் : புகாரி _முஸ்லிம்.

அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் கணவரின் பெயரைக் கூறியிருக்கிறார்கள். நபியவர்களும் தடுக்கவில்லை. எனவே பெண்கள் பிறருக்குத் தகவல் தெரிவிக்கவோ, இன்னாருடைய மனைவி என்பதை விளக்கக் கணவரின் பெயரைக் கூறுவதோ தவறாகிவிடாது.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:05 pm

3.
ஐயம் : பள்ளிகளில் ஜும்ஆ தொழுகை முடிந்த பிறகு தான் வீட்டில் இருப்பவர்கள் லுஹர் தொழ வேண்டுமா? நிஸா – தொண்டி.

தெளிவு : அல்குர்ஆனில் ஜும்ஆ தினத்தன்று தொழுகைக்கு அழைப்பு விடுத்து பாங்கு சொல்லப்படுமானால், உங்கள் வியாபாரங்களை விட்டு விட்டு அல்லாஹ்வை தியானிக்க (பள்ளிக்கு) விரைந்து செல்லுங்கள். நீங்கள் (அதன் பலன்களை) புரிந்தவர்களாயிருப்பின் அதுவே உங்களுக்கு மேலானதாயிருக்கும். (62:9)
என்று அல்லாஹ் ஜும்ஆ தினத்தன்று பள்ளிக்கு வந்து தொழுவதை வலியுறுத்திச் சொல்லியிருக்கும் பொழுது ஒருவர் வீட்டிலே லுஹர் தொழுவதென்றால் உடல் நலக் குறைவு அல்லது அது போன்ற சரியான முகாந்திரமில்லாது ஆண்கள் லுஹர் தொழுவது கூடாது. அவ்வாறு முகாந்தரமிருந்து வீட்டில் தொழும் ஆண்களும், பொதுவாகப் பெண்களும் ஜும்ஆ முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை எதிர்பார்க்க வேண்டியதில்லை. அவ்வாறு எதிர்பார்த்துத் தொழ வேண்டும் என்று கூறுவதற்கு ஹதீஸ்களில் எதுவும் ஆதாரமிருப்பதாகத் தெரியவில்லை.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 9:06 pm

இஸ்லாமியத் தொடர் என்றிருந்தாலும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் இவை! தொடருங்கள் சார்! படித்துப் பயன் பெறுகிறோம்!



ஐயமும் தெளிவும் - நல்வாழ்க்கைத் தொடர் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:09 pm

4.

ஐயம் : மாதவிடாய் காலத்தில் விடுபடும் நோன்பை பின்னர் களா செய்ய வேண்டுமா?

தெளிவு : ஆம். களாச் செய்ய வேண்டும். மாத விடாய் காலம் போன்றே பேறு காலத்திலும் விடுபட்ட நோன்புகளைச் களாச் செய்தே தீர வேண்டும். அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி)
நாங்கள் நபி(ஸல்) அவர்களின் காலத்தில் மாதவிடாய் உள்ளவர்களாயிருந்தோம். அப்பொழுது நாங்கள் நோன்பைக் களாச் செய்ய வேண்டுமென்று எங்களுக்கு ஏவப்பட்டது. ஆனால் தொழுகையைச் களாச் செய்ய வேண்டுமென நாங்கள் ஏவப்படவில்லை.
அறிவிப்பவர் : அன்னை ஆயிஷா(ரழி) நூல் : புகாரி , முஸ்லிம்




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:10 pm

5.

ஐயம் : ரமழான் மாதத்திய மாதவிடாய் ஏற்படாமலிருக்க ஏதேனும் மாத்திரைகள் சாப்பிட்டுவிட்டு நோன்பு வைக்கலாமா? அபூ நஃபில் – தேங்காய்ப்பட்டினம்.

தெளிவு : படைத்த அல்லாஹ்வே பெண்கள் நிலையை அறிந்து அவர்களுக்கு மாதவிடாய் போன்ற காலங்களில் நோன்பை விடுவதற்கு சலுகை தந்திருக்கும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளாது மாத்திரை மருந்துகள் சாப்பிட்டு உடல் நலனைக்கெடுத்து, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியில் நோன்பு வைக்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது? பொதுவாகவே மாத்திரை மருந்துகளால் உடல் நலம் பாதிக்கப்படுவது உறுதி என்பதைத் தெளிவாக மக்கள் புரிந்து பாதுகாப்போடு செயல்படும் இக்காலத்தில், உங்கள் மிகவும் எளிதானது அதைச் சிரமமானதாக ஆக்கி விடாதீர்கள்” என்று கூறியிருக்கும் பொழுது இதெல்லாம் தேவைதானா? வல்லநாயன் “உங்கள் கைகளாலேயே உங்களை அழிவின் பக்கம் கொண்டு செல்லாதீர்கள், மேலும் நல்லவைகளைச் செய்யுங்கள், நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வொரை நேசிக்கிறான்” 2:195 என்று கூறியிருக்கும் போதனைகளை அடிப்படையாகக் கொண்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு உடல் நலத்தைக் கெடுக்க முற்படுவது சரியில்லை என்பதை உணரலாம்.




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:16 pm

6.

ஐயம் : கணவன் மரணமாகி விட்டால் மனைவி எத்தனை நாள் இத்தா இருக்க வேண்டும்? இத்தாவை இருட்டு அறையில் தான் கழிக்க வேண்டுமா? ஆண்களைப் பார்த்தல் கூடாதா? வசதி படைத்தோர் நீண்ட நாட்களும், வசதியற்றோர் 40 நாட்களும், இத்தாவில் இருப்பதை மார்க்கம் அனுமதிக்கிறதா? இப்படி ஏதும் விதி விலக்குகள் உண்டா? விளக்கம் வேண்டுகிறேன். அஷ்ரப் அலி – நிரவி.

தெளிவு : உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால், அம்மனைவியர் நான்கு மாதம், பத்து நாட்கள் இத்தா இருக்க வேண்டும். (பொறுத்திருக்க வேண்டும்) அவர்களின் இத்தவணை பூர்த்தியான பின்பு அவர்கள் (தங்கள் வசதிக்கேற்ப) அவர்கள் காரியத்தில் (பிறரை திருமணம் செய்து கொள்வது போன்ற) சிறந்த முறையில் எதுவும் செய்து கொள்வதில் உங்கள் மீது குற்றமில்லை. இறைவன் நீங்கள் செய்வதை நன்கறிந்தவனாகவே இருக்கின்றான். (2: 234)
“அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பும் எந்தப் பெண்ணும் தனது கணவர் நீங்கலாக வேறு எந்த இறப்புக்காகவும் மூன்று நாட்களுக்கு அதிகமாக துக்கம் அனுஷ்டிப்பது ஆகுமானதல்ல. ஆனால் தனது கணவரின் மரணத்திற்காக நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் அனுஷ்டித்தேயாக வேண்டும்.
உம்மு ஹபீபா(ரழி) ஜைனப் பின்து ஜஹ்ஷ்(ரழி) நூல் : புஹாரி, முஸ்லிம்

குர்ஆனின் , ஹதீஸின், இவ்விளக்கங்கள் கணவன் காலமான பெண்கள் நான்கு மாதம், 10 நாட்கள் இருக்க வேண்டியதைத் தெளிவாக வரையறுத்துக் கூறுகின்றன. இதில் வசதிபடைத்தவர், வசதியற்றவர், மேல் நாட்டவர், கீழ் நாட்டவர் என்ற பாகுபாடின்றி, ஷரீஅத்தின் சட்டத்தை அனைவரும் கடைபிடிக்க வேண்டியதுதான். இதில் எவருக்கும் விதிவிலக்கு இல்லை.

இத்தா கடுமையான முறையா?

இத்தா இருத்தலை இஸ்லாம் மார்க்கம் மிக எளிதாக ஆக்கியுள்ளது. இத்தாவில் இருக்கும் பெண் இருட்டறையில் முடங்கி இருத்தல் வேண்டும், ஆடவரைப் பார்த்தல் கூடாது; நல்ல உணவு உட்கொள்ளக் கூடாது என்ற தவறான தடைச் சட்டங்களை மனிதர்கள் உருவாக்கியிருப்பது வருந்ததற்குரியது. இதனாலேயே இத்தாவைச் சிலர் அனுஷ்டிக்கத் தவறுகின்றனர்.
எப்போதும் போலவே அந்நிய ஆண்களிடம் கோஷா முறையை பெண்கள், இத்தாவுடைய காலத்திலும் கடைப்பிடிக்க வேண்டும். மணம் முடிக்கக் கூடாதவர்களாக மஹ்ரமான ஆண்களிடம் பேசவோ, பழகவோ, பார்க்கவோ எவ்வித தடையுமில்லை. இத்தா காலத்திற்கென்று விசேஷ கோஷா முறை எதுவுமில்லை.

இத்தாவை அனுஷ்டிக்கும் பெண்கள் கவர்ச்சி தரும் ஆடைகளை, அணிகலன்களை அணிவதையும், வாசனைப் பொருட்களை பயன்படுத்துவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும். தேவையற்ற காரியங்களுக்காக வீட்டைவிடடு வெளியேறுவதையும் தவிர்ப்பது அவசியம். இவை பெண்களின் ஒழுக்கப் பாதுகாப்புக்கு உகந்ததாகும்.

இத்தா காலத்தில் வெளியில் செல்வது பற்றி

இத்தாவில் இருத்த பெண்ணொருத்தி, பேரீத்த மட்டைகளை வெட்ட முயன்று வெளியில் வந்த பொழுது, ஒருவர் இத்தாவிலிருக்கும் நீங்கள் வெளியில் வருவது கூடாது என்று கூறினார். இதற்குத் தெளிவு பெற எண்ணி, (இத்தாவில் இருந்த) அப்பெண், நபி(ஸல்) அவர்களை நாடி நடந்ததைக் கூற, அதற்கு நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

“பெண்மணியே நீர் சென்று உமது பேரீத்த மட்டையை வெட்டிக் கொள்ளும். அதை நீர் பிறருக்கு தர்மம் செய்யவோ அல்லது உமது சொந்த உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ உதவும்” என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர்(ரழி) நூல் : முஸ்லிம்.

ஆகவே தேவையின்…. அவசியத்தின் காரணமாக மட்டும் இத்தாவிலிருப்பவர்கள் வெளியில் செல்ல இஸ்லாம் அனுமதிக்கிறது என்பதை அறிகிறோம். கர்ப்பமுடைய பெண்களுக்கு “இத்தா” அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (65:4)




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Wed May 05, 2010 9:17 pm

நண்பர்கள் வாசித்தபின் மிகுதி தொடரும்..

ஐயமும் தெளிவும் - நல்வாழ்க்கைத் தொடர் 154550




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Wed May 05, 2010 11:29 pm

நல்ல ஹதீஸ் தொடர் நன்றி அண்ணா
அறியாதவர்கள் அறியட்டும். மகிழ்ச்சி மகிழ்ச்சி
ஹனி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹனி



ஐயமும் தெளிவும் - நல்வாழ்க்கைத் தொடர் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Postஅப்புகுட்டி Thu May 06, 2010 3:14 am

நன்றி நன்றி நன்றி அனைவரும் பயன் பெறக்கூடியவை நன்றி.



ஐயமும் தெளிவும் - நல்வாழ்க்கைத் தொடர் Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக