புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
25 Posts - 69%
heezulia
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
361 Posts - 78%
heezulia
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
8 Posts - 2%
prajai
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_m10கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும்


   
   

Page 1 of 2 1, 2  Next

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:17 pm

இஸ்லாம் ஒரு முழுமையான மார்க்கம்
இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம்.

மாறாக அன்று முதல்; இன்று வரை
இனிமேல் காலங்கள் உள்ளவரை
வாழ்ந்த- வாழ்கின்ற- இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்- எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்- வணக்க வழிபாடுகள் அனைத்துமே இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும் இறுதி நபி பெருமானார் (ஸல்) அவர்களால் சொல்லப் பட்டவைகளும் செய்து காட்டப் பட்டவைகளும் அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.

திரு மறையில் கூறப்படாதவைகளும் திரு நபி (ஸல்) அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும் கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
திரு மறை நிறைவு பெற்ற பிறகு - திரு நபி (ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு வேறு யாராவது புதிய வணக்க வழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி 'இவைகளும் இஸ்லாத்தில் உள்ளவை தான்' என்று கூறினால்-

அவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை. அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும் மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தாலும் சரியே.

அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ அதை மட்டுமே செய்ய வேண்டும்.
அதில் நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம். நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக் கொள்வதும் குற்றம்.
மேலும் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்றிக் கட்டளையிட்டு விட்டால் அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். (அல் குர்ஆன் 33 36) என்று திருமறை குர்ஆன் கூறுகிறது.

அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களே. சொல்லித் தராத அத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே.
இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப் பழக்கங்கள் மூட நம்பிக்கைகள் அநாச்சாரங்கள் பித்அத்துகள் நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டன.

அல்லாஹ்வுக்கும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம்.
ஏனெனில் அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள் அவை உங்கள் பார்வையில் முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்) ஆதாரம். புகாரி





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:18 pm

இடைக் காலத்தில் ஏற்பட்ட மடமைகள்

இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகள் வணக்க வழிபாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.


பல்வேறு கால கட்டங்களிலும் பல வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அணி திரண்டு வந்தார்கள்.
பல் வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது - ஏற்கனவே தாங்கள் கடைப் பிடித்து வந்த பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தங்களையும் அறியாமல் தங்களுடன் கொண்டுவந்து விட்டனர்.


பல்வேறு சமூகத்தினரிடையே பரவி வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தினரும் - பிற சமூக கலாச்சாரங்களை பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் - தங்களையும் அறியாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர்.
இப்படிச் சிறுகச் சிறுக முஸ்லிம்களுக்கு மத்தியில் நுழைந்து விட்ட மூடப் பழக்கங்கள் கண்மூடிப் பழக்கங்கள் நாளடைவில் வேர்விட்டு கிளை பரப்பி முழு அளவில் முஸ்லிம் சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
அம்பெய்து குறிபார்த்து அதற்கேற்ப நடந்தவர்கள் -
நிர்வாணமாக கஃபாவை வலம் சுற்றி வந்தவர்கள் -
மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடந்தவர்கள் -
பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்தவர்கள் - அறியாமைக் காலத்தின் அநாச்சாரங்களில் மூழ்கிக் கிடந்தவர்கள் - இவர்களெல்லாம் அண்ணல் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை ஏற்று- சத்திய இஸ்லாத்திற்கு வந்த போது முழுக்க முழுக்க அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு முழுமையான முஸ்லிம்களாக வந்தார்கள்.


அப்படிப்பட்ட நபித் தோழர்களின் சரித்திரங்களைச் சற்றேனும் சிந்தித்தால்.....
முன்னோர்கள் மூதாதையர் செய்த மூடப் பழக்கங்களிலிருந்தும் பிற சமூக மக்களின் கலாச்சாரங்களிலிருந்து நம்மையும் அறியாமல் நம்மிடையே தொற்றிக் கொண்டு விட்ட அநாச்சாரங்களிலிருந்தும் நாமும் விடுபட முடியும்.


அல்லாஹ்வும் அவனது திருத் தூதர் (ஸல்) அவர்களும் காட்டிய நேரியவழியில் நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள முடியும்.
'முன்னோர்கள் செய்தார்கள்' என்பதற்காகவும் காலங் காலமாகச் செய்யப் பட்டு வருகின்றன என்பதற்காகவும் பெரும் பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும் மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப் படுத்தக் கூடாது. செய்யும் காரியங்கள் குர்ஆனிலும் ஹதீஸிலும் அங்கீகரிக்கப் படாதவையாக இருப்பின் - தயக்கமின்றி அவற்றைத் தவிர்க்க முன் வர வேண்டும்.


'அல்லாஹ் இறக்கி அருளிய (வேதத்)தின் பாலும் இத் தூதரின் பாலும் வாருங்கள்' என அவர்களுக்குக் கூறப்பட்டால் எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்) ஒன்றும் அறியாதவர்களாகவம் நேர் வழியில் நடக்காதவர்களாக இருந்தாலுமா? (அவர்களைப் பின்பற்றுவார்கள்) (அல் குர்ஆன் 5 104)


பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின் பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத் தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்பனையிலேயே மூழ்கிக் கிடக்கிறார்கள்.(அல் குர்ஆன் 6 116)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:21 pm

காலமும் நேரமும்

நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின் பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல. அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்கு கைகொடுக்வில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து - முகூர்த்த நேரம் என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை முபாரக்கான நேரம் என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.


பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை.
ரயில் பயணங்கள் ராகு காலத்தில் ரத்து செய்யப் படுவதில்லை. எமகண்டம் பார்த்து எந்த விமானமும் காத்திருப்பதில்லை.


வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இது பிறந்த நேரம் சரியில்லை' என்னுசொல்வதும் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்த மருமகளைக் காரணம் காட்டி 'இவள் வந்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால் 'ஆரம்பித்த நேரம் சரியில்லை' என்று சொல்வதும் மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.


சிலர் நீண்ட காலமாக வறுமையிலும் - சிரமத்திலும் இருந்திருப்பார்கள் அதன் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு பொருளாதார வசதியை அதிகரித்திருப்பான். அந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி 'இது பிறந்த அதிர்ஷ்டம்' என்று சொல்வார்கள். இதுவும் தவறு தான்.
அல்லாஹ் வழங்கிய அருள் என்பதை மறந்து குழந்தையை அதிர்ஷ்டம் என்று நம்புவதும் தவறு. எல்லாக் குழந்தையையும் சமமாகக் கருதாமல் ஒரு குழந்தையை மட்டும் அதிர்ஷ்டக் குழந்தை என்று கருதுவதும் தவறு.
வாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தேல்வியும் - அல்லாஹ்வின் நாட்டப் படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி வேண்டும்.


நினைத்த காரியம் நடக்காமல் போவதும் தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும் இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மைக் காப்பதற்காகவோ இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும்.
அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில் இறைவன் கூறுகிறான். ' காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.' (ஹதீஸ் குத்ஸி)


இறை நம்பிக்கை நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய வேண்டும். அப்போது தான் கால நேரத்தின் மீதுள்ள நம்பிக்கை நம்மை விட்டு மறையும்.
ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமே! ஒவ்வொரு ஆண்டின் 365 நாட்களும் நல்ல நாட்களே! நமது பேச்சும் செயலும் நல்லவையாக இருக்க வேண்டும். இது தான் முக்கியம்.


'ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்' என்று (நபியே) நீர் கூறும். மூமின்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைப்பார்களாக! (அல் குர்ஆன்





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:22 pm

சகுனம் பார்ப்பது சரியானதல்ல

ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது 'எங்கே போகிறீர்கள்?' என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் -
நடந்து செல்லும்போது காலில் ஏதேனும் தடுக்கினால் சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் -
போகிற வழியில் பூனை குறுக்கிட்டால் போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் -
விதவைப் பெண்கள் எதிரில் வந்தால் அபசகுனம் என்று நினைப்பதும் வடிகட்டிய முட்டாள் தனம்.
நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. மூளை என்று ஒன்று இருந்தால் கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.


பேசிக் கொண்டிருக்கும் போது சுவர்க்கடிகாரம் மணி அடித்தாலோ பல்லி சப்தமிட்டாலோ சொல்வது உண்மை என்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் -
'பாலன்ஸ்' தவறி பல்லி விழுந்துவிட்டால் பதறித் துடித்து காலண்டரைத் திருப்பி 'பல்லி விழும் பலன்' பார்ப்பதும் மூட நம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.


தேதி பார்க்க காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும் ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும். பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடலாம்.


மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய - குர்ஆன் வசனங்களும் பெருமானார் (ஸல்) அவர்களின் பொன் மொழிகளும் அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன.
நல்ல சகுனம் கெட்ட சகுனம் எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.
நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது 'ஈமான்' என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும்.


அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது.


நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்.
நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம்.


நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது.
'மந்திரிக்கச் செல்லாமலும் சகுனம் பார்க்காமலும் தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்' என்று அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் (ரலி) ஆதாரம் புகாரி)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:23 pm

திரு மணத்தில் தீய பழக்கங்கள்

சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட 'சீர் திருத்தத் திருமணங்கள்' என்னும் பெயரில் இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி (ஸல்) அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர் இன்னமும் அநாச்சாரங்களிலும் மூடப் பழக்கங்களிலும் மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!


மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து மணப்பெண் கழுத்தில் 'தாலிகட்டும்' வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும் கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்-
திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும் அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும் மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும் பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும் ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும் எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் (ஸல்) அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும.
பெருமைக்காகவும்இ ஆடம்பரத்துக்காகவும் செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும்.
'குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.' என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா (ரலி) ஆதாரம் அஹ்மத்)


வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர்.


என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம்.
சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல் பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும்.
மஹர் தொகையை இப்பேர்து கொடுப்பதால் 'தலாக்' ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை.


அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
இன்னும் உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும் அவ்விதமே சாலிஹான உங்கள் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன். (அல் குர்ஆன் 24 32)





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:24 pm

வீடு கட்டுவதில் மூடப் பழக்கங்கள்

வாழ்க்கையில் சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்று ஆசை ஏற்படுவது அனைவருக்கும் இயல்பு. அப்படி வீடு கட்டும்போது மார்க்கத்திற்கு முரணில்லா வகையிலும் ஷிர்க் (இணை வைத்தல்) எந்த வகையிலும் ஏற்படா வண்ணமும் வீடு கட்டப்பட வேண்டும்.


வீடு கட்டுவதற்கு முன் வீட்டு மனையின் அளவையும் அமைப்பையும் பொறுத்து கட்டடப் பொறியாளரைக் கொண்டோ அல்லது அனுபவம் உள்ளவர்களைக் கொண்டோ நம் வசதிக்குத் தகுந்தபடி திட்டமிட்டுக் கட்டுவது நல்லது தான். அதற்காகச் சிலர் வாஸ்து சாஸ்திரம் - மனையடி சாஸ்திரம் என்னும் பெயரில் ஏமாற்றுச் சாஸ்திரங்களில் தங்கள் ஈமானை இழக்கின்றனர்.


மனையடி சாஸ்திரத்தில் ஒரு அளவைக் குறிப்பிட்டு இந்த அளவில் வீட்டின் நீள அகலம் இருந்தால் மரணம் ஏற்படும் என்று குறிப்பிடப் பட்டிருக்கும். அப்படியானால் அந்த அளவைத் தவிர்த்துக் கட்டப் படும் எந்த வீடுகளிலும் யாருமே மரணம் அடைவதில்லையா?
மனையடி சாஸ்திரம் மரணத்தைத் தடுக்காது. இரும்புக் கோட்டைக்குள் இருந்தாலும் ஒரு நாள் இறப்பது நிச்சயம்.
நாம் வசிக்க உருவாக்கும் வீட்டைஇ நம் வசதிக்கு ஏற்றபடியும் இடத்திற்குத் தக்கபடியும் நீள அகலங்களை நாம் தான் தீர்மானிக்க வேண்டுமே தவிர -
வாஸது சாஸ்திரம் பார்த்து வாசற்படிகளை மாற்றி அமைப்பது மனித வாழ்க்கையில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது.


எந்த சாஸ்திரமும் - சம்பிரதாயமும் இன்றி அரபு நாடுகளிலும் மேலை நாடுகளிலும் கட்டப் பட்ட வீடுகளில் வசிப்போர் - நல்ல வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர்.
இன்னமும் மூட சாஸ்திரங்களை முழுக்க முழுக்க நம்பிக் கொண்டிருப்பவர்கள் சிந்திக்க வேண்டாமா?
கட்டடத்தின் கட்டுமானப் பணிகள் - அநாச்சாரத்தில் ஆரம்பிக்கப் படுவதும்-
கட்டுகிற வீடு நமக்கு உரியது என்பதைக் கூட மறந்து கட்டுபவர்களின் கலாச்சாரப்படி அனைத்து வகை ஆச்சாரங்களையும் அனுமதிப்பதும் - அங்கீகரிப்பதும் -
கதவு நிலை வைப்பதற்குக் கூட காலமும் நேரமும் பார்த்து பூவும் பொட்டும் வைத்து பூஜை புனஸ்காரங்கள் செய்வதும் -
காங்கிரீட் போடும் போது ஆடும் கோழியும் அறுத்து பலியிடுவதும் -
கட்டிய வீட்டுக்குக் கண் பட்டுவிடும் என்று பூசனிக்காய் கட்டித் தொங்க வீடுவதும் -
புதிய வீடு கட்டி முடித்த பின் மூலைக்கு மூலை பாங்கு சொல்வதும் - முதல் வேலையாக பால் காய்ச்சுவதும் -
கூலிக்கு ஆள் பிடித்து குர்ஆனும் - மௌலூதும் ஓதுவதும் -
இவைகள் யாவுமே புனித இஸ்லாத்திற்கு அப்பாற்பட்டவை என்பதை உணர வேண்டும்.


குர்ஆன் ஓதுவது எப்படித் தவறாகும்? என்ற சந்தேகம் பலருக்கும் எழலாம். புதுமனை புகு விழாவுக்கு மட்டும் - அதுவும் கூலிக்கு ஆள் பிடித்து ஓதுவதற்கு அருளப்பட்டதல்ல குர்ஆன்.
குர்ஆன் எப்போதும் ஓதப்பட வேண்டும். குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஓத வேண்டும். சடங்காக்கப்படக் கூடாது. சொந்தமாக வீடு கட்டுவது என்பது சராசரி மனிதனுக்கு ஒரு சாதனை தான். எந்த வகையிலும் இந்த சாதனையில் அநாச்சாரம் நுழைந்து விடாமலும் ஷிர்க் ஏற்படாமலும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:25 pm

பிறந்தநாள்விழாவும்- பெயர் சூட்டு விழாவும்

பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி.
ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது. குழந்தை பிறந்த 40 ஆம் நாள் அன்று தடபுடலாக விருந்து வைத்துப் 'பெயர் சூட்டு விழா' என்று 'அசரத்தைக'; கூப்பிட்டு பெயர் சூட்டப் படுகிறது.
குழந்தை பிறந்தாலும் 40. திரு மணத்திலும் 40. இறந்தவர் வீட்டிலும் 40. சித்த மருத்துவத்தில் மருந்து சாப்பிட ஏற்பட்ட இந்த 'மண்டலக்' கணக்கிற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. பெயர் சூட்டுவதற்கு ஒரு விழா வைத்து அசரத்தைக் கூப்பிட்டுத் தான் பெயர் வைக்க வேண்டும் என்பதில்லை. விருப்பமான பெயரைத் தேர்வு செய்து குழந்தைக்கு அதிக உரிமையுள்ள தாயோ தந்தையோ கூப்பிட வேண்டியது தான். இதற்கென்று எந்தச் சடங்கும் மார்க்கத்தில் இல்லை.
சிலர் வருடந்தோறும் குழந்தையின் பிறந்த நாளைர் கொண்டாடுகின்றனர். லீப் வருடத்தில் பிப்ரவரி 29 அன்று பிறந்த குழந்தைக்கு வருடந்தோறும் எப்படிக் கொண்டாடுவார்களோ? தெரியவில்லை.


இன்னும் சிலர் அநாச்சாரத்தில் இன்னும் ஒரு படி மேலே சென்று குழந்தையின் வயதுக் கணக்குப்படி மெழுகுவர்த்தி ஏற்றிஇ கேக் வெட்டி 'ஹேப்பி பர்த் டே' கொண்டாடுகின்றனர். இது முழுக்க முழுக்க ஓர் அந்நியக் கலாச்சாரம். இதற்கு இஸ்லாமிய மார்க்கத்தில் அனுமதி இல்லை. 'யார் அந்நிய கலாச்சாரத்தை பின்பற்றுகிறார்களோ அவர்கள் நம்மைச் சேர்ந்தவர்கள் அல்ல.' என்பது நபி மொழி.


இஸ்லாமியப் பெற்றோருக்குப் பிறந்த குழந்தையைச் சிறு வயது முதலே இஸ்லாமியக் கலாச்சாரத்தின் படி வளர்க்க வேண்டும். குர்ஆன் ஓதக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஐவேளையும் தொழப் பழக்க வேண்டும். முழுக்க முழுக்க முஸ்லிம் குழந்தையாகப் பழக்கவும் வளர்க்கவும் வேண்டும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon May 03, 2010 6:26 pm

வெட்கங்கெட்ட விருத்தசேதன விழா

பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் 'சுன்னத்' ஆகும்.
நகம் வெட்டுவதும் தாடி வைப்பதும் தேவையற்ற முடிகளைக் களைவதும் பல் துலக்குவதும் இன்னும் இது போன்ற ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு 'கத்னா' என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு 'சுன்னத்' என்நு பெயர் வைத்து பத்திரிகை அடித்து ஊர் வலம் வைத்து விழா நடத்தி விருந்து போடுவதும் பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும் பரவலாகக் கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்.
நகம் வெட்டுவதற்கு ஒப்பான- இந்த சாதாரனச் செயலைச் சிலர் - தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்காக - வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


பணக்காரர்கள் செய்யும் இந்த பண்பாடற்றச் செயலைப் பார்த்து - எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர் இதற்கென ஆகும் செலவுகளுக்கு அஞ்சி தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள் விருத்த சேதன விழா நடத்தும் செலவில் - தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து - மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்) கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால் உண்மையான 'சுன்னத்'தை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். மிகப் பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும் கிடைக்கும்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
ஹனி
ஹனி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2571
இணைந்தது : 07/01/2010

Postஹனி Mon May 03, 2010 10:25 pm

நன்றி நன்றி நன்றி



கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Rsz2hani
புத்தியுள்ள மனிதரெல்லலாம் வெற்றி காண்பதில்லை
வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue May 04, 2010 8:58 am

சபீர் wrote:வெட்கங்கெட்ட விருத்தசேதன விழா

பெருமானார் (ஸல்) அவர்களின் வழிமுறையைப் பின் பற்றிச் செய்யப்படும் அனைத்துச் செயல்களும் 'சுன்னத்' ஆகும்.
நகம் வெட்டுவதும் தாடி வைப்பதும் தேவையற்ற முடிகளைக் களைவதும் பல் துலக்குவதும் இன்னும் இது போன்ற ஏராளமான சுன்னத்துகள் இருக்கின்றன. இதற்கெல்லாம் யாரும் விழா நடத்தி விருந்து வைப்பதில்லை.
ஆனால் ஆண் குழந்தைகளுக்கு 'கத்னா' என்னும் விருத்தசேதனம் செய்வதற்கு 'சுன்னத்' என்நு பெயர் வைத்து பத்திரிகை அடித்து ஊர் வலம் வைத்து விழா நடத்தி விருந்து போடுவதும் பெரும் பொருள் செலவு செய்து ஆடம்பரமாகக் கொண்டாடுவதும் பரவலாகக் கொண்டாடப் படுகிறது. இது மிகவும் கண்டிக்கப் படவேண்டிய தவறானப் பழக்கம்.
நகம் வெட்டுவதற்கு ஒப்பான- இந்த சாதாரனச் செயலைச் சிலர் - தம்மிடம் பணம் இருக்கின்றது என்ற காரணத்துக்காக - வெகு விமரிசையாகக் கொண்டாடுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.


பணக்காரர்கள் செய்யும் இந்த பண்பாடற்றச் செயலைப் பார்த்து - எத்தனையோ ஏழைக் குடும்பத்தினர் இதற்கென ஆகும் செலவுகளுக்கு அஞ்சி தம் குழந்தைகளுக்குப் பல வருடங்கள் வரை கத்னா செய்யாமல் காலம் கடத்துகின்றனர்.
வசதி படைத்தவர்கள் விருத்த சேதன விழா நடத்தும் செலவில் - தங்கள் பகுதியில் உள்ள ஏழைச் சிறுவர்களைத் தேர்ந்தெடுத்து - மருத்துவரிடம் அழைத்துச் சென்று (சுன்னத்) கத்னா செய்வதற்கு முயற்சி எடுத்தால் உண்மையான 'சுன்னத்'தை நிறைவேற்றிய நன்மையும் கிடைக்கும். மிகப் பெரும் அநாச்சாரத்தை தடுத்து நிறுத்திய புண்ணியமும் கிடைக்கும்.

மிகவும் சரியாகக் கூறியுள்ளீர்கள் சபீர்! கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் 677196 கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் 677196 கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் 677196



கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகட்டும் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக