புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு


   
   

Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:30 pm

பிரச்சாரகர் முஸ்அப்


மறு ஆண்டு கி.பி. 621 ஹஜ்ஜுத் திருநாளின் போது முன்பு வந்த அறுவருடன் மற்றுமருவர் சேர்ந்து வந்தனர். இப்பன்னிருவரும் முன்புபோல் பெருமானாரை அகபாவில் சந்தித்து, புதிதாக அழைத்து வந்த அறுவரையும் இஸ்லாத்தைத் தழுவச் செய்தனர். இப்போது இவர்களைனவரும் அண்ணலாருக்குக் கீழ்க்காணும் உறுதிமொழியைச் செய்து கொடுத்தனர்.

1. இறைவனுக்கு இணை வைத்து எவ்வஸ்துவையும் வணங்குவதில்லை.

2. களவாடுவதோ, பிறர் பொருளைக் கவருவதோ இல்லை.

3. விபச்சாரம் செய்வதில்லை.

4. எவரையும் இழித்துரைப்பதோ, வீண் பழி சுமத்துவதோ இல்லை.

5. குழந்தைகளைக் கொல்லுவதில்லை.

6. நியாத விரோதமாக எக்காரியத்திலும் நடந்து கொள்வதில்லை.

இந்த உறுதிமொழிகளின் படி நடந்தால் அவர்களுக்குச் சுவனம் கிட்டுமென்றும், மீறினால் இறைவனின் முனிவுக்கும் தண்டனைக்கும் ஆளாக நேருமென்றும், மன்னிப்பதென்பது இறைவனைச் சார்ந்ததென்றும் நபிகள் கோமான் எச்சரித்தார்கள்.

இறைவணக்கம், மறு உலகை விரும்பல், இறையச்ச வாழ்க்கை, நீதி, அன்பு, சமத்துவம், தியாகம், மனத்தூய்மை, அனுதாப உணர்ச்சி முதலியன இந்தப் புத்துலக சமுதாயத்தின் சீரிய அம்சங்களாக அமைந்தன. புதிய மார்க்கத்தை யத்ரிப் மக்களுக்கு எடுத்து விளக்கி அவர்களை இஸ்லாத்தில் இணைப்பதற்குத் தங்களுடன் ஒரு போதகரை அனுப்புமாறு அப்பன்னிருவரும் பெருமானாரிடம் முறையிட்டனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று முஸ்அப் பின் உமைர் பின் ஹாஷிம் என்பவரையும் உடன் அனுப்பினார்கள்.

முஸ்அப், யத்ரிப் சென்று அஸ்அத் பின் ஜுராராவின் இல்லத்தில் தங்கியிருந்து, தினமும் வீடு வீடாகச் சென்று புதிய மார்க்கத்தினை எடுத்து விளக்கி மக்களை இஸ்லாத்தில் சேர்த்து வந்தார். இவரது இதமான பேச்சும், கவர்ச்சியான விளக்கமும், இஸ்லாத்திலிருந்த ஈடுபாடும் மக்களை வெகுவாகக் கவர்ந்தன. ஒரு சில குடும்பங்களைத் தவிர யத்ரிப் மக்களில் பெரும்பாலோர் முஸ்அபின் பிரச்சாரத்தால் இஸ்லாத்தில் இணைந்து விட்டனர் என்றே சொல்ல வேண்டும்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:30 pm

மந்திர சக்தி


அங்கு ஸஅத் இப்னு மஆத் அல் நுஃமான் என்பவர் அவ்ஸ் கோத்திரத்தில் பனூ அப்து அஷ்ஹல்களின் தலைவராக விளங்கினார். இவர் அஸ்அதுக்கு அத்தை மகன். சிலர் தாய்வழிச் சகோதரன் எனக்கூறுவர். ஸஅதுக்குச் சொந்தமான தோட்டம் ஒன்றும் அதில் "மறக்" என்ற கிணறும் இருந்தன. போதகர் முஸ்அபும் மற்ற முஸ்லிம்களும் தினமும் இக்கிணற்றண்டை கூடி இஸ்லாத்தைப் பற்றிய உபதேசங்கள், சர்ச்சைகளில் ஈடுபடுவது வழக்கம். இது சற்று ஸஅதுக்குப் பிடிக்கவில்லை. எனினும், அத்தை மகனிடம் அதை நேரில் சொல்லவும் துணிவில்லை. ஒருநாள், உஸைத் பின் ஹுளைர் என்பவரிடம் முஸ்அபையும் மற்றவர்களையும் தோட்டத்தை விட்டும் வெளியேற்றுமாறு கூறியனுப்பினார். இதை அறிவிக்கச் சென்ற உஸைத், முஸ்அபின் கனிவான வரவேற்பைத் தட்ட மாட்டாதவராய் அக் கூட்டத்தினருடன் அமர்ந்தார். பிரச்சாரகரின் அழகிய போதனைகளையும், திருக்குர்ஆனின் இனிய திருவசனங்களையும், உஸைத் காதாரக் கேட்டு ஆனந்தித்தார். கவர்ச்சியுற்றார். கட்டுண்டார். இஸ்லாத்தை ஏற்று கலிமாவை மொழிந்தார். போதகர் முஸ்அப் பணித்தபடி அவ்விடத்திலேயே ஒலூச் செய்து இரண்டு ரக்அத் தொழுது கொண்டார். பின் ஸஅதிடம் திரும்பிச் சென்றார்.

உஸைர் மனம் மாறி வருகிறார் என்பதை அவரின் முகம், நடை, தோற்றத்தால் ஸஅத் தெரிந்து கொண்டார். உஸைதின் வாய்மொழியைக் கேட்டு விட்டு ஸஅத் "நீர் ஏமாந்து போனீர். இதோ பாரும் நான் சென்று காரியத்தைத் திறமையாக முடித்து வருகிறேன்" எனக் கூறியவராய் ஆத்திரத்துடன் கிளம்பிக் கிணற்றடிக்குச் சென்றார். முஸ்அப் அவருக்கு முகமன் கூறி இருக்க வைத்து இஸ்லாத்தை எடுத்துரைத்து, திருக்குர்ஆனின் திருவசனங்கள் சிலவற்றை அவருக்கு ஓதிக் காண்பித்தார். அவ்வளவு தான்!. ஸஅத், இஸ்லாத்தின் மந்திர சக்தியால் வசீகரிக்கப்பெற்று அக்கணமே கலிமாவை மொழிந்து இஸ்லாத்தை ஏற்றார்.

அம்மட்டோடன்றி, தம் இனத்தவரிடம் சென்று, இறுதி நபி தோன்றி விட்டார் என்றும், அவர் போதிக்கும் இஸ்லாம் இணையற்ற மார்க்கமெனவும், கூறித்தம் கூட்டத்தார் அனைவரையும் அதை ஏற்குமாறு உபதேசித்தார். அந்தி சாய்வதற்குள் அப்து அஷ்ஹல் கூட்டத்தார் அனைவரும் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டனர். இவ்விதமாக யத்ரிபிலுள்ள அரபிகளும், யூதர்களும், கிறிஸ்தவர்களும் திரள் திரளாக இஸ்லாத்தில் சேர்ந்து கொண்டிருந்தனர்.

அபுஜஹ்ல் ஒரு சமயம் உத்பா பின் ரபீஆ அல் அப்பாஸ் முதலிய சில பிரமுகர்களுடன், மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்று விட்ட பனூ ஜஹ்ஷ் கோத்திரத்தாரின் மக்காவிலுள்ள ஆளில்லா வீடுகள் இருந்த வீதியொன்றில் நடந்து சென்ற போது, மிக்க வருத்தத்துடன், "நம் சகோதரர் பெருமானார் (ஸல்) என்ன ஆதாயத்தை அடைந்து விட்டார்? அவர் நம் சமூகத்தை பிளவுபடுத்தினார். ஒற்றுமையை அழித்தார்.

மார்க்கத்தை இருகூராக்கினார். இதைத் தவிர அவர் வேறு எதைச் சாதித்தார்? என அங்கலாய்த்துக் கொண்டான். ஆனால் மக்காவில் பிளவுக்கும் ஒற்றுமைக் கேட்டுக்கும் காரணமாகக் காணப்பட்ட அந்த இயக்கம் (இஸ்லாம்) மதீனாவாசிகளால் ஓர் ஒப்பற்ற ஒற்றுமைச் சக்தியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது என்பதை அவன் அறிந்தானில்லை.

"எண்ணங்களின்படியே காரியங்கள் உருவாகின்றன" என்ற நபிமொழி எவ்வளவு பொருத்தமுடையதென்பதைக் காணுவீர்!.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:31 pm

விண்ணுலக யாத்திரை

அற்புதம் என்பது இயற்கைக்கும் இயற்கையின் சட்டங்களுக்கும் புறம்பாக நடக்கும் நிகழ்ச்சிகளைக் குறிக்கும். இவற்றை நபித்துவத்தின் அடையாளங்கள் அல்லது சான்றுகள் அல்லது விளக்கங்கள் எனக்கூறலாம். இவற்றை இறைவன் தனது நபிமார்களின் சத்திய சன்மார்க்கத்தை விளக்கவும், நிரூபிக்கவும் தனது சாதாரண இயற்கைச் சட்டங்களை அகற்றி விட்டு – அவ்வஸ்துக்களின் இயக்கத்தை தடை செய்து நிறுத்தி வைத்து விட்டு தனது வல்லமையால் இந்த அற்புதங்களை அந்நபிமார்களின் வாயிலாக வெளியாக்கிக் காண்பிக்கின்றான். பொதுவாக எல்லா நபிமார்களும் அவரவர் காலத்தில் இருந்த மக்களுக்கு அற்புதங்களை நிகழ்த்திக் காண்பித்துள்ளனர். இவ்வற்புதங்களுக்கு ஆலத்தின் படைப்புகளும் கட்டுப்பட்டு அடங்கி இயக்கம் புரிந்துள்ளன.

ஆலம் என்பதில் கீழ்க்காணும் பிரிவுகளும் வஸ்துக்களும் அடங்கும்.

1) ஆலமே மஆனி - இது கலாம், இல்ம், நிறம், பணம் போன்றவற்றைக் குறிக்கும்.

2) ஆலமே மலாயிகா - இது ஒளியினால் படைக்கப்பட்ட மலக்குகள் என்னும் வானவர்களைக் குறிக்கும்.

3) ஆலமே ஜின் - இது நெருப்பினால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்தைக் குறிக்கும்.

4) ஆலமெ இன்ஸ் - இது மண்ணால் படைக்கப்பட்ட மனித வர்க்கத்தைக் குறிக்கும்.

5) ஆலமெ அலவி - இது சூரிய, சந்திர, வானம், நட்சத்திரம் போன்றவற்றைக் குறிக்கும்.

6) ஆலமெ பஸாயித் - இது பஞ்ச புதங்களான நெருப்பு, காற்று, நீர், மண், ஆகாயம் என்பனவற்றைக் குறிக்கும். இவற்றை அர்ப அனாஸிர் எனவும் கூறுவர்.

7) ஆலமெ முரக்கபாத் - இது ஜமாஅத் என்னும் தாதுப் பொருட்கள், நபாதத் என்னும் தாவரங்கள், ஹைவானாத் என்னும் மிருகாதிகள் ஆகியவற்றைக் குறிக்கும்.

இந்த ஆலம்கள் அனைத்திலும் நபிபெருமான் (ஸல்) அவர்கள் அற்புதங்கள் நிகழ்த்திக் காண்பித்துள்ளனர். இவற்றுள் பெருமானாரின் விரல் அசைப்பினால் சந்திரன் இரண்டாகப் பிளந்து கிழக்கும் மேற்குமாகச் சென்று பின்னர் ஒன்றாக இணைந்ததும், இறைவனின் அருட்கொடையால் அண்ணலார், அவனின் திருச்சந்நிதான மேகி, அவனைத் தரிசித்து உரையாடல் புரிந்து மீண்ட நிகழ்ச்சிகளும் குறிப்பிடத்தக்கனவாகும்.

நபித்துவம் 12ம் ஆண்டு கி.பி. 621 ஆண்டு பிப்ரவரி 22-23ல் ஹிஜ்ரத்துக்குச் சுமார் ஒன்றரை ஆண்டு முன்னதாக இணையற்ற இறைவனாம் அல்லாஹ் தன் திருத்தூதராம் நபிகள் கோமான் அவர்களுக்கு ஒப்பற்ற பெரும் பேறொன்றினை அருள்பாலித்தான். அவ்வாண்டு ரஜப் பிறை 26-27 திங்கள்கிழமை இரவு பெருமானார் கஃபாவிலுள்ள ஹிஜ்ர் என்னும் ஹதீமில் நித்திரை செய்து கொண்டிருந்தார்கள்.

அப்போது வானவர் ஜிப்ரீல் தோன்றி நபிகள் நாதரை எழுப்பி, இறைவன் தன் சந்நிதானத்திற்கு அவர்களை அழைத்திருப்பதாகக் கூறினார் அண்ணலார் அன்றிரவு தம் பெரிய தந்தை அபுதாலிபின் மகள் உம்முஹானி அம்மையார் இல்லத்தில் நித்திரை கொண்டிருந்த போது வானவர் ஜிப்ரீல் வந்து எழுப்பி கஃபாவுக்கு அழைத்துச் சென்றதாகவும், கஃபாவை ஏழு முறை இடம் வந்து தவாப் செய்து விட்டு அங்கிருந்து புறப்பட்டதாகவும் சில சரித்திர ஆசிரியர்கள் வரைந்துள்ளனர். பெருமானாருக்கு அப்போது வயது 49ம் நாலரை மாதமும் ஆகின்றது.

"தன் அடியாரை (பெருமானாரை) இரவின் போது மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து (கஃபா) தூரத்திலுள்ள நம்மால் ஆசீர்வதிக்கப் பெற்ற மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு (பைத்துல் முகத்தஸிலுள்ள பள்ளிவாயில்) தன்னுடைய அத்தாட்சிகளைக் காண்பிக்கும் பொருட்டு அழைத்துச் சென்ற அவன் (இறைவன்) மாட்சிமை பொருந்தியவனாகயிருக்கிறான் (17:1)



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:31 pm

வானவர் ஜிப்ரீல் நபிகள் நாகயம் அவர்களைக் கஃபாவின் முற்றத்தில் அப்போது தயாராக நின்றிருந்த "புராக்" இது மனிதத்தலையும் குதிரையின் உடலும் இறக்கைகளும் கொண்ட ஒளியினாலான வாகனம் எனக்கூறப்படுகிறது. அருகில் அழைத்துச் சென்று அதில் ஏறிக்கொள்ள செய்தார். புராக் மின்னல் வேகத்தில் ஆகாயத்தில் பறந்து சென்று பைத்துல் முகத்திஸ் பள்ளியை அடைந்தது. நபிகள் நாதர் அதனின்றும் இறங்கி ஒலுச் செய்து கொண்டு அப்பள்ளியில் அந்நேரத்தில் கூடியிருந்த நபிமார்களின் ஜமாஅத்துக்கு இமாமாக நின்று இறைவனை இரண்டு "ரக்அத்" தொழுதார்கள். பின் மீண்டும் புராக்கின் மீதே வானலோகஞ் சென்று இறைவன் திட்டப்படுத்தியிருந்த எல்லையை அடைந்தார்கள். இதனை ஆலிப்புலவர் நாலாம் வானம் இலங்கும் ஞானரத்ன மஃமூரில் வாலாய மாய்வீற்ற வான்பரியை கோலத்தூண் தான் துளைத்துக் கட்டியரோ தாஹாசென் றாரைத் தாம் வானகத்தின் உள்ளே மகிழ்ந்து எனத் தமது "மிஃராஜ் மாலை" யில் பாடுகிறார்.

பெருமானார் அங்கு இறைவனின் கிருபா கடாட்சத்தால் பல அற்புதங்களைக் கண்டு அவனுடன் உரையாடினார்கள். முஸ்லிம்களுக்கான தொழுகையைத் தினம் ஐங்காலத்ததாக இறைவன் நிர்ணயித்துத் தந்ததும் இவ்விண்ணேற்றத்தின் போதேயாம்!

சுவர்க்க நரகங்களின் நிலைகளையும் அவற்றில் நடப்பவற்றையும் பெருமானார் இது சமயந்தான் நேரில் கண்டு தெரிந்தார்கள். இறைவனின் சந்நிதானத்தில் அவர்கள் பார்க்க வேண்டியதைப் பார்த்து, கேட்க வேண்டியதைக் கேட்டு, பேச வேண்டியதைப் பேசி முடித்த பின் மீண்டும் புராக்கின் மீது அமர்ந்து பைத்துல் முகத்தஸ் வந்தடைந்தார்கள். பின் அங்கிருந்து அவ்வாகனத்திலேயே கஃபத்துல்லாஹ் வந்து சேர்ந்தார்கள். இது மிக சொற்ப நேரத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்ச்சியாகும்.

படுக்கையிலிருந்த தமது உடற்சூடு மாறுவதற்குள் இச்சம்பவம் நிகழ்ந்ததெனப் பெருமானார் வர்ணித்துள்ளார்கள். "என்னுடைய ரப்பை என் கண்களாலும், கல்பாலும் (இதயம்) அவனுடைய சிறந்த தோற்றத்தில் கண்டேன். பிறகு அல்லாஹ் எனது இரு தோள்பட்டைகளுக்கும் மத்தியில் தன் கரத்தை வைத'தான். அதன் தன்மை (இதம்) என் இதயத்தில் படுவதை நான் உணர்ந்தேன். வானங்கள் பூமண்டலங்கள் யாவினும் உள்ளவற்றின் ஞானமும் எனக்கு அருளப்பட்டன. நடந்தது, நடக்க விருப்பது யாவையும் நான் அறிந்து கொண்டேன். அண்ட பகிரண்டத்தையெல்லாம் மிகவும் சிறிய அளவினதாக அல்லாஹ_தஆலா என்முன் காட்டினான். ஒருவன் தன் உள்ளங்கையைப் பார்ப்பது போல் உலகமனைத்தையும் நான் வெகு தெளிவாகக் கண்டு கொண்டேன். நியாயத் தீர்ப்பு நாள்வரை என்னென்ன நடக்கும் என்பதையெல்லாம் நான் அறிந்துகொண்டேன்." என அண்ணலார் அருளியதாக 'திர்மிதி', 'மிஷ்காத்' இவற்றில் கூறப்படுகிறது. இதனையே திருக்குர் ஆன் இவ்வாறு எடுத்து இயம்புகின்றது:



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:31 pm

(நபியுடைய) இருதயம், தான் உண்மையில் கண்டதை பற்றி பொய் கூறவில்லை. அவர் கண்டதைப் பற்றி நீங்கள் (சந்தேகித்து) அவருடன் தர்க்கின்றீர்களா? நிச்சயமாக அவர், மற்றொரு முறையும் (ஜிப்ரயீல் ஆகிய அவர் மிஃராஜில்) இறங்கக் கண்டிருக்கிறார். "ஸித்ரத்துல் முந்தஹா" (என்னும் இலந்தை) மரத்தின் எல்லையில் அதன் சமீபமாகத்தான் (நல்லடியார்கள்) தங்கும் சுவனபதி இருக்கின்றது. அந்த மரத்தைச் சூழ வேண்டியது அதனை (முற்றிலும்) சூழ்ந்து கொண்டது. (அதிலிருந்து) அவருடைய பார்வை விலகவுமில்லை, கடக்கவுமில்லை, அவர் தன் இறைவனின் மிகப் பெரிய அத்தாட்சிகளை (எல்லாம்) மெய்யாகவே கண்டார்"

மறுநாள் காலையில் இந்நிகழ்ச்சி பற்றிய விபரங்கள் சிலவற்றை அண்ணலார் தம் தோழர்கள் சிலரிடம் சொல்லிக் காண்பித்தார்கள். இச்செய்தி குறைஷிகளின் காதுகளுக்கு எட்டியதும் அவர்கள் முஸ்லிம்களை நோக்கி,'முன்பெல்லாம் உங்கள் நபி தமக்கு இறைவனிடமிருந்து வேதம் வருவதாக ம்டடும் கூறிக்கொண்டிருந்தார்.

இப்போது இறைவனிடமே அவர் நேரில் சென்று உரையாடி விட்டு வந்ததாகக் கூறத் துணிந்துவிட்டாரே! பார்த்தீர்களா, அவரது பொய் பேசுந்திறமையை!" எனக் கேலியும் கிண்டலுமாகப் பேசத் துவங்கிவிட்டனர். வெளியூர் சென்றிருந்த அபூபக்கர் (ரலி) இப்போது மக்கா வந்து சேர்ந்தார். பெருமானாருக்குத் தம் மகள் ஆயிஷா நாயகியைத் திருமணம் செய்து கொடுத்ததின் காரணமாக அவரை அண்ணலாரும் மக்களும் 'அபூபக்கர்' கன்னியின் தந்தை என அன்புடன் அழைக்கலாயினர். வந்ததும் வராததுமாகக் குறைஷிகள் அபூபக்கர் (ரலி) யிடம் ஓடிச்டிசன்று பெருமானாரின் விண்ணேற்றம் பற்றிய விஷயத்தைச் சொல்லிக்காட்டி, 'இவ்அபாண்டத்தை நீர் நம்புகிறீரா?' எனக' கேட்டனர். உடனே அபூபக்கர் அவர்கள், 'இறைவனிடமிருந்து திருவசனங்களை ஜிப்ரீல் எத்தனையோ தடவைகளட புமிக்கு எடுத்துவந்தார் என்பதை நான் நம்பும்போது, விண்ணுலக யாத்திரை (மிஃராஜ்) சென்று வந்ததாக நபிகள் பிரான் கூறினார்களென்றால் அதை நான் தயக்கமின்றி ஒப்புக் கொள்கிறேன். இது இறைவனால் ஆகாத காரியமல்லவே!" எனக் கூறி அவர்களை வாயடைக்க செய்தார்கள். இதனை அறிந்த அண்ணலார் அதுமுதல் அபூபக்கர் அவர்களை 'சித்தீக்' – அமள்பித்தவர்- என்ற சிறப்புச் சொல்ல அணைத்து 'அபூபக்கர் சித்தீக்' என்ற அன்பு கனிய அழைத்து வந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:32 pm

அகபா உடன்படிக்கை

இந்நிலையில் நபித்துவம் 12ம் ஆண்டு இறுதியில் கிபி 622 அடுத்த ஹஜ்ஜூத் திருநாளும் வந்தது. யத்ரிப் வாசிகள் முஸ்அபுடன் கலந்து பேசி பெருமானாரைத் தங்கள் ஊரில் கொண்டு வந்து குடியேற்றம் நோக்கம் கொண்டனர். இதற்காக அவர் முற்கூட்டியே மக்கா சென்ற அண்ணல் நபிகளாரைக் கலந்து சில முன்னேற்பாடுகளைச் செய்து வைக்குமாறு அனுப்பி வைத்தனர். முஸ்அப் மக்கா வந்து நபிகள் பழரான் அவர்களைக் கண்டு, மதீனாவில் தாம் செய்து முடித்த சமயப் பணிகள் பற்றிய விபரங்களை விரிவாக எடுத்துக் கூறி யத்ரிப் மக்களின் உள்ளடக் கிடக்கையும் அண்ணலாருக்கு அறிவித்தார்.

கும்மிருட்டு, விண்மீன்கள் மட்டுமே மினுக்மினுக்கெனப் பளிச்சிட்டுக் கொண்டிருந்தன். நள்ளிரவு கடந்துவிட்டது. அகபா வெளியில் அயர்ந்த நித்திரையிலிருந்த அந்த எழுபத்தி ஐந்து யத்ரிப் வாசிகளும் திட்டப்படி ஒருவர், இரவராக விழித்தெழுந்து அருகிலிருந்த கணவாயில் ஒருவரின் வருகையை எதிர்பார்த்து நிற்பவர்களாகக் காணப்பட்டனர். சரித்திரப் பதிவேட்டில் இடம் பெற்றுள்ள புகழ்மிக்க இந்தச் சில வினாடிகள்தான், நன்மலர் மொட்டவிழ்த்து நறுமணம் பரப்புவது போல், இறைவனின் ஏகத்துவத்தைப் பறைஅறைந்து நிற்கும் இஸ்லாத்தை மாணிட வர்க்கத்திள் மத்தியில் சுடர்வீசிப் பிகாசிக்கத் துணைபுரிந்த பொன்னேரமாகும் எனக் கூறுதல் வேண்டும். அந்நேரத்தில் இரு உருவங்கள் அகபா வெளியில் அடிமேல் அடி எடுத்து வைத்தவாறு அப்பள்ளத்தாக்கை நோக்கி வந்தன் சமீபத்தில் வரும்போதுதான் அவ்வுருவங்கள் அண்ணல் நபிகளாரும் அவர்களின் சிறிய தந்தை அப்பாஸ_ம் என்பது அங்குக் கூடி நின்றோருக்குத் தெரிய வந்தது. அப்பாஸ் இன்னும் இஸ்லாத்தில் இணையவில்லை. எனினும் தம் அண்ணன் மகனுக்கு அரும்பாதுகாப்பாக இருந்து வந்தார்.

முதன்முதலாக, அப்பாஸ் யத்ரிப் வாசிகளை நோக்கி "அன்பர்களே! கண்ணின் மணியாம் என் அண்ணன் மகன் முஹம்மதுவை நாங்கள் கண்ணை இமை காப்பதுபோல் காத்து வருகிறோம் என்பதை நீங்கள் அறிவீர்கள். இப்பட்டணத்தில் அவரை ஆதரிப்பவரம் இருக்கின்றனர். எதிர்ப்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில், நீங்கள் அவரை உங்கள் ஊருக்கு வருமாறு அழைக்கிறீhகள். அவர் அங்கு வருவதானால் உங்களுக்கேற்படும் பெரும் பொறுப்பு, கடும் எதிர்ப்பு இவற்றை நீங்கள் சமாளிப்பீர்களா என்பதைச் சிந்தித்துக் கூறுவீர். முடியாதெனில், அவர் இங்கேயே தங்கி விடட்டும். வீணில் அவரைத் துன்பத்திற்கு ஆளாக்கி விடாதீர்கள்' என எடுத்துக்காட்டினார். யத்ரிப் வாசிகளின் சார்பில் அல்பராஅ என்னும் பெரியார் வாய்திறந்து 'துன்பம், துயரம், எதிர்ப்பு, இன்னல் இவையெல்லாம் ஏற்படுமென்பதை அறிந்தே நாங்கள் முடிவெடுத்து இங்கு வந்துள்ளோம். இது அவசரப்பட்ட முடிவல்ல.

ஆழ்ந்த சிந்தனைக்குப் பின் உருவானதாகும்' எனப் பதில் கூறினார். பின் அவர் பெருமானார் பக்கம் திரும்பி "நாயகமே! தங்களின் திருவுளக் கருத்தைத் தெரிவித்தால் அதுபோல் நடக்கச் சித்தமாயிருக்கிறோம்" என்றார். பெருமானார் தம் திருமுகத்தில் புன்முறுவல் தவழ, இறைவசனங்களில் சிலவற்றை ஓதியவர்களாய், "அன்பர்களே! உங்கள் மனைவி, மக்களைக் காப்பது போல் என்னைக் காத்து நிற்பதாக உறுதியளித்தால், யத்ரிபுக்கு வந்து உங்களோடு வசிக்கச் சம்மதிக்கிறேன்" எனத் திருவாய் மொழிந்தார்கள். அந்நிபந்தனையை அனைவரும் ஒப்புக்கொள்வதாக உறுதியளித்தனர்.

அவர்களில் அபுல்ஹைதம் இப்னு தீஹான் என்பார், "நாயகமே! உங்கள் பொருட்டு யூதர்களுக்கும் எங்களுக்கும் இடையிலுள்ள தொடர்பைத் துண்டித்துக் கொள்ள நேருகிறதே! இறைவனின் அருளால் நீங்கள் வெற்றி வீரராகத் திகழுங்காலை, எங்களைப் புறக்கணித்துவிட்டு மக்காவுக்குத் திரும்பிச் சென்று விடுவீர்களோ என்ற அச்சம் ஏற்படுகிறதே, இதுபற்றித் தங்களது உள்ளக்கிடக்கையை வெளியிட்டுக் காட்டுவீர்களா?" என வினவினார். அதனைச் செவிமடுத்த நபிகள் நாதர், உணர்ச்சியும் உறுதியுங்கலந்த வார்தைகளில் "நண்பரே! இனி நீங்கள் வேறு நான் வேறு என்பது கிடையாது. இன்பத்திலும் துன்பத்திலும் நான் உங்களுடனேயே பங்கு கொண்டு இருக்கப்போகிறேன். அதனால் உங்களின் பகைவர் எனக்கும் பகைவராவார். உங்களின் நேசர்கள் எனக்கும் நேசர்களாவர். இதை நீங்கள் உறுதியாக நம்பலாம்!" எனக் கூறினார்கள். பின் அந்த 75 பேர்களிலிருந்து 12 நகீப்களை சீடர்களைப் பிரச்சாரம் பணிக்கெனத் தேர்ந்தெடுத்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:33 pm


பன்னிரு நகீப்களின் நாமங்கள் :


1. அஸ்அத் பின் ஜுறாறா பனீ நஜ்ஜார் - கஸ்ரத்
2. ஸஅத் பின் ரபீ அ-பனீ மாலிக் - கஸ்ரத்
3. அப்துல்லாஹ் பின் ரவாஹா-பனீ உமர் – கஸ்ரத்
4. ராபிஅ பின் மாலிக் - பனீ ஜுரைக் - கஸ்ரத்
5. பராபின் மஃரூர் – பனீ ஸலமா – கஸ்ரத்
6. அப்துல்லாஹ் பின் அம்ரு – பனீ ஸலமா - கஸ்ரத்
7. உப்பாதா பின் ஸாமித் - பனீ ஸலமா – கஸ்ரத்
8. ஸஅத் பின் உப்பாதா – பனீ ஸலமா – கஸ்ரத்
9. முன்திர் பின் அம்ரு – பனீ ஸலமா – கஸ்ரத்
10.உஸைத் பின் ஹுலைர் – பனீ அப்து அஷ்ஹல் அவ்ஸ்
11.அபுல் ஹைதம் - பனீ அப்து அஷ்ஹல் அவ்ஸ்
12.ஸஅத் பின் கைதமா – பனீ கஅப் அஷ்ஹல் அவ்ஸ்


இச் சந்தர்ப்பத்தில் அவர்களில் அஸ்அத் பின் ஜுராறா தமீமி என்ற முதியவர் யத்ரிப் வாசிகளை நோக்கி, "அவ்ஸ், கஸ்ரஜ் குலத்தவரே! நீங்கள் மேற்கொள்ளவிருக்கும் பொறுப்பின் தன்மையையும் அதன் சுமையையும் உணர்ந்தீர்களா? உங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் தியாகம் செய்தாக வேண்டிய ஒரு மாபெரும் பணியை நீங்கள் இப்போது மேற்கொள்ளுகிறீர்கள்.

வாக்குத் தத்தம் செய்து அதை மீறி நடந்தால் இம்மை, மறுமை இரண்டிலும் தீமை வந்து சாடுமென்பதை நினைவில் கொண்டு முடிவு செய்யுங்கள்" என எச்சரித்தனர். அனைவரும் சற்று தயக்கமுடன் சிந்திக்கத் துவங்கினர். அதிலொருவர், "நாயகமே! நாங்கள் விசுவாசத்துடன் நடந்து கொண்டால் அதனால் அடையும் பிரதிபலன் என்ன?" என வினவினார். "சுவர்க்கம்" என ஒரே சொல்லில் ரத்தினச் சுருக்கமாகப் பதிலிறுத்தார்கள். நபிகள் கோமான், அவ்வளவோடு பேச்சு முடிந்தது. பின் 73 ஆண்களும் ஒவ்வொருவராக, பெருமானாரிடத்தும் இஸ்லாத்திற்காகவும் உண்மை விசுவாசத்துடனும், உறுதியுடனும் நடந்து கொள்வதாக அண்ணலாரின் திருக்கரத்தின் மீது தம் கரத்தை வைத்து பைஅத் உறுதிமொழி விசுவாசப் பிரமாணம் - செய்து கொடுத்தனர். முதலில் அபுல் ஹைதமைத் தொடர்ந்து அவ்ஸ்கள் 3 பேரும் கஸ்ரஜ்கள் 9 பேரும் ஆக 12 நகீப்களும், அதன்பின் மற்றவர்களும் பைஅத் செய்தனர். பெணிகளிருவரும் வாய்மொழி பைஅத் செய்ததே போது கையடித்துத் தர வேண்டியதில்லை எனக் கூறித் தவிர்த்து விட்டார்கள். இதுவே 'அகபா உடன்படிக்கை' அல்லது 'பைஅத்துல் ஹர்ப்' என அமைக்கப்படுகிறது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:33 pm

இவ்விரகசிய நிகழ்ச்சியை யாரோ ஒருவன் ஒளிந்திருந்து பார்த்துக் குறைஷிகளிடம் ஓடோடிச் சென்று கூறிவிட்டான். பொழுது புலர்ந்தவுடன் அவர்கள் ஆட்களை அனுப்பி யத்ரிப்வாசிகளை கண்டு உண்மையறிந்து வரச் சொன்னார்கள். இவ்வாட்கள் கண்டு கேட்ட முஸ்லிமல்லாத யத்ரிப் வாசிகள், உண்மையிலேயே உடன்படிக்கையைப் பற்றி அறியாதவர்கள். வந்தவர்களிடம் அவர்கள், இது வெறும் கட்டுக்கதை, அவ்வாறு ஏதும் திகழவில்லை" எனக் கூறியனுப்பினர். உடனே யத்ரிப்வாசிகளனைவரும் கூடிப்பேசி, இனி அகபாவிலிருப்பது ஆபத்தெனக் கண்டு, கூடாரங்களைச் சுருட்டிக் கொண்டு ஊருக்கு விரைந்தனர். எனினும் உடன்படிக்கை ஏற்பட்டது உண்மை என்பது குறைஷிகளுக்கு நிச்சயமாகிவிட்டது. இது துல்ஹஜ் பிறை 10ம் இரவில் நடந்த சம்பவமாகும்.

அகபா உடன்படிக்கைக்குப் பின் குறைஷிகளின் அதிகரித்த எதிர்ப்பு, இன்னல்களின் மத்தியில், முஸ்லிம்கள் உயிர் வாழ்வது மிக்க ஆபத்தாகிவிட்டது. இந்நிலையினைக் கண்ட பெருமானார் பெரிதும் வேதனையுற்றார்கள். அன்னாரது விருப்பத்திற்கும் ஆலோசனைக்கும் இணங்கச் சுமார் நூற்றி ஐம்பது குடும்பத்தினர் தங்கள் சொத்துப் பற்றுக்களை விற்றும் விற்காமலும் மூன்று மாத காலத்தில் சிறுகச் சிறுக மக்காவை விட்டு யத்ரிபுக்குக் குடிபெயர்ந்து சென்றனர். இவர்களுள் ஹலரத் உத்மான் இப்னு அஃப்பான் அவர்கள் மட்டுமே தங்கள் முழு ஆஸ்தியையும் உடன்கொண்டு செல்ல முடிந்தது. ஹலரத் உமர் ஒருவர் தாம் பட்டப்பகலில் பகிரங்கமாக யத்ரிபுக்குப் பிரயாணமானார். இப்போது மக்காவில் நபிகள் நாயகம் (ஸல்) அபூபக்கர் சித்தீக் ஆகிய இருவரும் அவர்களின் குடும்பங்களும் அலீ அவர்களுமே எஞ்சி இருந்து வந்தனர்.

மக்காவிலிருந்த முஸ்லிம்கள் அனைவரும் பத்திரமாக யத்ரிபு போய்ச் சேர்ந்த பின்னரும் தங்களின் பயணங் குறித்துப் பெருமானார் எதுவும் கூறாதிருப்பது அபூபக்கர் அவர்களுக்கு வியப்பை அளித்தது. எனவே, அவர் ஒருநாள் அண்ணலாரை அணுகி, "நாயகமே, முஸ்லிம்கள் அனைவரும் யத்ரிபுக்குக் குடிபெயர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த குறைஷிகள் குமுறிக் கொண்டிருக்கின்றனரே! நாமும் அங்கு செல்வது தலம் பயக்குமன்றோ! இதுபற்றித் தங்கள் கருத்தறிய ஆவலுறுகிறேன்" என்றனர். அபூபக்கர் அவர்களின் வார்த்தைகளைக் கேட்ட பெருமானார் அமைதியாக, "அவசரப்படாதீர், ஒரு வேளை நாம் இருவரும் சேர்ந்தே பிரயாணம் போக நேரிடலாம், இறைவனின் உத்தரவும் இன்னும் கிடைக்கவில்லை. அதை நான் எதிர்பார்த்தவனாக இருக்கிறேன்" எனச் சமாதானம் கூறினார்கள். அண்ணலாரின் கருத்திறிந்த அபூபக்கர் சித்தீக் அவர்கள், பயணம் எச்சமயத்திலும் திடீரென ஏற்படக் கூடுமென்பதை எண்ணியவராய்த் தம் பணியாள் ஆமிர் பின் புஹைராவிடம் வேகமாகச் செல்லக்கூடிய இருநல்ல ஒட்டகங்களை எண்ணூறு திர்ஹம்களுக்கு வாங்கிக் கொடுத்து கொழுமையாக வளர்த்து வருமாறு பணித்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:34 pm

கொலைத் திட்டம்

ஒருநாள் காலையில் மக்காவின் நகர மன்றமாகிய 'தாருன் நத்வா'வில் குறைஷிகளின் முக்கிய தலைவர்கள் கூடினார்கள். அவர்களுள் குறைஷிகளின் பத்துக் கோத்திரங்களான ஹாஷிம், உமய்யா, நௌபல், ஜுஹ்ரா, அஸத், தமீம், அதீ, மக்ஜூமி, ஜுமாஃ, சஹ்ம் ஆகியவற்றைச் சேர்ந்த உத்பா இப்னு ராபீஆ, ஷைபா இப்னு ராபீஆ, அபூ ஸுப்யான் இப்னு ஹர்ப், நுயைமா இப்னு அதீ, ஜுபைரிப்னுமுத்இம், ஹாரிஸிப்னு ஆமிர், அந்நளீ ரிப்னு ஹாரிஸ், அபுல் புக்தா ரிப்னு ஹிஷாம், ஜமாஃ இப்னுல் அஸ்வத், ஹக்கீ மிப்னு ஹிஷாம், அபூஜஹல் இப்னு ஹிஷாம், ஹஜ்ஜாஜின் இரு புதல்வர்களான நுபாயா, முனப்பஹ், உமையா இப்னு கலப் ஆகிய இரு பதினான்கு முக்கிய பிரமுகர்களும் வருகை தந்திருந்தனர். அன்று சபர் மாதம் 26ம் நாள் வியாழக்கிழமை அவர்கள், நாயகம் அவர்களின் புதிய மார்க்கம் கனவேகத்தில் பரவி வருவது குறித்தும், முஸ்லிம்கள் அனைவரும் மக்காவைக் காலி செய்து யத்ரிப் போய்ச் சேர்ந்துவிட்டது பற்றியும் பரிசீலிக்க ஆரம்பித்தனர். அது சமயம் சில உளவாளிகள் அங்கு வந்து, "முஹம்மது விரைவில் மக்காவைத் துறந்து வெளியேறி விடுவார்போல் தோன்றுகிறது" எனக் காதோடு காதாகக் கூறிச் சென்றனர். கூடியிருந்தவர்களுக்கிடையில் ஒருவிதப் பரப்பரப்பு ஏற்பட்டது. அனைவரும் தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டனர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதக் கருத்தை வெளியிட்டனர். "முஹம்மதுவைப் பிடித்து சிறை வைக்க வேண்டும்" என்றார் ஒருவர். "அவ்வாறு செய்தால் அவரைப் பின்பற்றுவோர் வந்து தம்மைத் தாக்கி மீட்டிச் சென்று விடுவர்" என மறுத்துரைத்தார் மற்றொருவர். "முஹம்மதுவை மக்காவைவிட்டு துரத்திவிடுவோம், அவர் எங்கேனும் தொலைந்து போகட்டும்" என்றார் இன்னொவர். "அவர் வாக்குவன்மை மிக்கவர், தமது பேச்சினால் மக்களை மயக்கிப் பெரும் ஆதரவு திரட்டிக் கொண்டு வந்து நம்மைத் தாக்கிச் சூறையாடிச் சென்று விடுவார்" என்றார் பிறிதொருவர். "எதற்கு இதெல்லாம், முஹம்மதைக் கொலை செய்துவிடுவதே மேல்" என்றார் வேறொருவர். "ஏன், பொதுக் காரியத்துக்காகக் கொலை செய்ய முன் வந்தவனைக் காட்டிக் கொடுத்து ஹாஷிம் குலத்தார் நம்மைப் பழிவாங்க அனுமதிக்க வேண்டும்?" எனக் கேட்டார் அடுத்திருந்தவர்.

கடைசியாக அபூஜஹல் எழுந்தான். "இது ஒருவரின் சொந்தக் காரியமல்லவே! அதனால் தனிப்பட்ட யாரும் எதுவும் செய்ய வேண்டியதில்லை. ஒவ்வொரு குடும்பத்தாரும் ஒரு வாலிபனை அனுப்பித் தரவேண்டும். எல்லா வாலிபர்களும் முஹம்மதுவின் வீட்டை முற்றுகையிட்டு இரவோடிரவாகக் காத்து நிற்க வேண்டும்.

அவர் எந்தச் சமயத்தில் வீட்டை விட்டு வெளியேறுகிறாரோ அக்கணமே அனைவரின் வாட்களும் ஒருமித்து அவர் மீது விழ வேண்டும். அவ்வாறு செய்தால் தான் ஹாஷிம் குலத்தவர் நம்மைப் பழிவாங்க இயலாது. காரியமும் 'சுமூகமாக' முடிந்துவிடும் எனக் கூறி முடித்தான். அபூஜஹலின் சாதுர்யமும் சாமர்த்தியமும் படுயோசனையுங்கொண்ட வார்த்தைகள் கூடியிருந்தோர் முகங்களில் ஒருவித வெற்றிக் களிப்பை வரவழைத்துக் கொடுத்தன. அவன் கருத்தை அனைவரும் வாயிளித்து வரவேற்றனர். விவாதத்தை முடித்துக் குறைஷிகள் 'தாருன் நத்வா'வை விட்டுக் கிளம்ப மாலைப் பொழுது சாய்ந்து மஞ்சள் வெய்யில் மங்க ஆரம்பித்துவிட்டது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:34 pm

ஹிஜ்ரத்

"அவர்கள் (குறைஷிக் காபிர்கள்) உம்மைச் சிறையிலடைத்துச் சித்திரவதை செய்யவோ அல்லது கொலை செய்யவோ அல்லது ஊரைவிட்டு வெளியேற்றவோ இரகசியத் திட்டம் தீட்டியபோது அல்லாஹ்வும் திட்டம் தீட்டினான். அவனது திட்டமே அனைத்திலும் சிரேஷ்ட மானதாகும்". (8:30) என்று குறைஷிகளின் கொலை திட்டத்தை வானவர் ஜிப்ரீல் வந்து அறிவித்து அன்றிரவே, அண்ணலார் யத்ரிப் புறப்பட வேண்டும் எனக் கூறிச் சென்றார். அப்பொழுதே அண்ணலார் அலீ அவர்களை அழைத்து விபரத்தைக் கூறி, அமானிதங்களை மறுநாள், உரியவர்களிடம் சேர்ப்பித்து விடுமாறு பணித்து, அன்றிரவே அவரைத் தம் படுக்கையில் படுத்துத் தம் ஹள்ர மௌத் பச்சைப் போர்வை கொண்டு போர்த்திக் கொள்ளுமாறு சொல்லி வைத்தார்கள். நபித்துவம் 13ம் ஆண்டு சபர் மாதம் 26-27ம் நாள் வெள்ளிக்கிழமை இரவு (கி.பி 622 செப்டம்பர் 9) நபிகள் பெருமானாரின் இல்லம் தாழிடப்பட்டது. உள்ளே அண்ணலாரும் அவர்களின் மனைவி சௌதா பிராட்டியாரும், அலீ அவர்களும் புதல்வியர் பாத்திமா, உம்மு குல்தூம் இருவரும் இருந்தனர். பொழுது அடைந்ததிலிருந்து குறைஷி வாலிபர்கள் தத்தம் வாட்களுடன் வந்து சேர்ந்து பெருமானாரின் வீட்டைச் சுற்றிலும் முற்றுகையிட்டு நின்றனர். இருட்டியதன் பின் அயலார் வீட்டினுள் பிரவேசிக்கக் கூடாதென்பது அரபிகளின் மரபாக இருந்து வந்தது.

நள்ளிரவு இரண்டாம் சாமம் கடந்துவிட்டது. நபிகள் பிரான் ஓசைப்படாது கதவைத் திறந்தார்கள். வாசலின் முன் குறைஷி வாலிபர்கள் உருவிய வாட்களுடன் நின்றிருந்தனர். குனிந்த வாசற்படியண்டை கிடந்த மண்ணில் சிறிது அள்ளி அதில் இறைவனின் திருநாமத்தை உச்சரித்து "யாஸீன்" அத்தியாயத்தில் முதல் ஒன்பது திருவசனங்களை நாம் அவர்களைத் திரையிட்டு விட்டோம். அவர்களால் பார்க்க முடியாதவாறு வரை ஓதி உதி வெளியில் சுற்றி நின்றவர்கள் மீது வீசி எறிந்து விட்டு வீட்டை விட்டுக் கிளம்பினார்கள். குறைஷி வாலிபர்களால் பெருமானார் வெளியில் சென்றதைக் கண்டு கொள்ள முடியாது போயிற்று.

இல்லம் துறந்த பெருமானார் நேரே அபுபக்கர் அவர்களின் வீடு நோக்கிச் சென்றார்கள். கதவைத் தட்டி உள்ளே சென்று, மக்காவை விட்டு வெளியேறுமாறு இறைவனின் கட்டளை வந்துள்ளதைத் தெரிவித்துத் தம்முடன் வருமாறு அழைத்தார்கள். அபுபக்கர் அவர்கள் மட்டில்லா ஆனந்தமுற்றவராய் துள்ளி எழுந்து, வீட்டில் சொல்ல வேண்டியவற்றைச் சொல்லி விட்டு, இருந்த ரொக்கப் பணத்தையும் கையிலெடுத்துக் கொண்டு பின் சன்னல் (வாசல்) வழியாக வெளியேறி அண்ணலாரைப் பின் தொடர்ந்தார்கள். நடந்து செல்கையில் கஃபத்துல்லாஹ் நபிகளாரின் கண்களில் படவே, உள்ளங்கசிந்தவாறு, "ஏ ஹரம் ஷரீபே! உலகிலுள்ள எல்லாப் பொருட்களைக் காட்டிலும் உன் மீதே நான் அதிகப் பிரியம் வைத்திருக்கிறேன். ஆனால் உன் மக்கள் என்னை இங்கு இருக்க விடுகின்றாரில்லையே!. என் செய்வேன்! எனக்கூறிக் கண்ணீர் சொரிந்தவர்களாய் தெற்கு நோக்கிச் சென்றார்கள். யத்ரிப் மக்காவுக்கு வடக்கேயுள்ளது.

இந்த நபியை "அமீன் "சாதிக்" என்று அழைத்துக் கொண்டே இந்த நகரம் நபியின் நபித்துவத்தை நிராகரித்தது. அவ்வாறு நிராகரித்தோர் அவரிடமே தங்கள் பொருள்களை அடைக்கலமாக ஒப்படைத்திருந்தார்கள். ஏனென்றால், பெரும் பண்புகளில் அவரைவிடச் சிறந்தோர் அங்கு வேறு ஒருவருமில்லை. இந்த நகரில் தான் அவர் நடக்கு பாதைகளில் முட்கள் விரிக்கப்பட்டன. கூரைகளிலிருந்து அவர்மீது சாம்பலும் மண்ணும், குப்பையும் கொட்டப்பட்டது.

தெற்கே மூன்று மைல் தொலைவிலுள்ள "தௌர்" என்னும் குன்றை அடைந்து அதிலுள்ள பொதும்பு ஒன்றில் போய்த்தங்கினார்கள். அபுபக்கர் அவர்கள் அங்கு கிடந்த கல் கரடுகளை அப்புறப்படுத்தி துப்புரவு செய்து அங்கிருந்த பொந்துகளைத் தம் அங்கவஸ்திரத்தைக் கிழித்து அத்துணிகளால் அடைத்தார்கள். காலில் செருப்பின்றிக் காலடித் தடங்களை எதிரிகள் கண்டு பின் தொடராதவாறு சந்து பொந்துகள் வழியே கரடு முரடான பாதைகளைக் கடந்து வந்ததால் நபிகள் நாதரின் கால்கள் வலியெடுத்தன. எதிரிகள் இனம் கண்டு விடக்கூடாது என்பதற்காக ஹலரத் அபுபக்கர், பெருமானாரின் பாதச்சுவடுகளின் மீதே கால் வைத்து நடந்து சென்றார்கள். எனவே, களைத்திருந்த திருத்தூதரவர்களை உயிர்த்தோழர் அபுபக்கர் அவர்கள் தம் மடி மீது தலை வைத்துப் படுக்கச் செய்து கண் விழித்திருந்தார்கள். பெருமானார் அயர்ந்த நித்திரையில் ஆழ்ந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 6 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 6 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக