புதிய பதிவுகள்
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:02 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 7:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 6:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 25, 2024 6:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:49 am

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Mon Jun 24, 2024 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Mon Jun 24, 2024 1:45 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
48 Posts - 43%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
46 Posts - 41%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
3 Posts - 3%
prajai
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Manimegala
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Dr.S.Soundarapandian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Karthikakulanthaivel
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
2 Posts - 2%
Saravananj
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
414 Posts - 49%
heezulia
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
282 Posts - 33%
Dr.S.Soundarapandian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
72 Posts - 8%
T.N.Balasubramanian
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
32 Posts - 4%
mohamed nizamudeen
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
28 Posts - 3%
prajai
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_m10நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு


   
   

Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Apr 24, 2010 12:58 pm

First topic message reminder :



மக்கா வாழ்க்கை


பரம்பரை

ஆசியாவிலுள்ள பல நாடுகளில், தென்வடலாக 1500 மைல் நீளமும் கிழமேலாக 800 மைல் அகலமுள்ள பாலைவனப் பிரதேசமான அரபு நாடும் ஒன்று. அந்த நாடு செழிப்பால் வறண்ட நாடு. ஆயினும் ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா ஆகிய மூன்று கண்டங்களும் ஒளிதில் தொடர்பு கொள்ளத்தக்க முக்கியமான ஓர் இடத்தில் அது அமைந்திருக்கிறது. எனவே தான் மக்கா பண்டைக்காலங்தொட்டு ஒரு முக்கிய வியாபார கேந்திரமாகத் திகழ்ந்து வந்துள்ளது.

இவ்வித நடு நாயகமான ஓர் இடத்தில் அரபு நாடு அமைந்திருந்த போதிலும், வளமில்லாத பாலைவனப் பிரதேசமாக இருக்கும் காரணத்தினால், சுற்றுப்புற நாடுகளை அரசாண்ட அரசர்கள் எவரும் அரபு நாட்டின் மீது ஆசையோ, அக்கறையோ கொண்டு ஆட்சி கொள்ளமுன் வரவில்லை. ஆனதால், அந்த நாட்டில் வாழ்ந்த மக்கள் தன்னிச்சையாகவும், சுதந்திரமாகவும் வாழ்ந்து வரலாயினர். இங்கு வாழ்ந்த வழுகின்ற மக்களை, நூஹ் நபியவர்களின் புத்திரர் ஷாம் என்பவரின் வழித்தோன்றல்களான ஆதிப் பழங்குடி அரபியர்கள், பாலைவன அராபியர்கள், குடியேறிகளான அந்நியர்கள் என மூன்று பெரும் பிரவுக்குள் அடக்கலாம்.

அரபுநாட்டில் குடியேறி வசித்த அந்நியர்களில் ஆபிரஹாம் தீர்க்கதரிசி என்னும் இப்ராஹீம் நபியும் அவரது மகன் இஸ்மாயீல் நபியும் சேருகின்றனர். இப்ராஹீம் நபி இராக்கிலுள்ள கல்தூனியா என்ற இராச்சியத்தைச் சேர்ந்தவர். இவருடைய சிறிய தந்தை ஆஸர் என்பவர் கோயில்களுக்கு உருவ வழிபாடு செய்வோருக்கும் விக்கிரகங்கள் செய்து கொடுத்து வந்தார். இப்ராஹீம் நபி விக்கிரக வணக்கத்தை கண்டித்து ஏக இறைவனை வணக்குமாறு மக்களிடையேப் பிரச்சாரம் செய்தார். இதனால் அவரின் சிறிய தந்தையும் அந்நாட்டு அரசன் நம்ரூது என்பானும், உற்றார் உறவினரும் இவரை வெறுத்து அந்நாட்டை விட்டும் வெளியேற்றிவிட்டனர்.

எனவே, அவர் பாலஸ்தீனம் சென்று அங்கு கன்ஆன் என்னும் இடத்தில் தங்கினார். பின் அங்கிருந்து வெளியாகி சிரியாவுக்கு வந்து வசித்த போது தமது சிறிய தந்தையின் மகளான சாரா என்ற பெண்மணியை மணம் செய்து கொண்டார். சில காலஞ்சென்று மீண்டும் சொந்த நாட்டுக்கு வந்து இறைவனின் மகத்துவத்தைப் பற்றியும், விக்கிரக வணக்கத்தைக் கண்டித்தும் பிரச்சாரம் செய்யலானார். அதனால் அரசன் நம்ரூது அவரை நெருப்புக் குண்டத்துள் எறியச் செய்தான். இறைவனின் ஆணைப்படி அந்நெருப்பு அவருக்கு குளிர்ந்த புங்காவாக மாறி விட்டது. பின்னர் சொந்த நாட்டைத் துறந்து மனைவி சாராவுடன் எகிப்து நாட்டுக்குச் சென்றார். எகிப்து அரசன் ரக்கிய்யூன் என்பான் இப்ராஹீம் நபியைக் கண்ணியப்படுத்தி பல வெகுமதிகளுடன் அரசகுமாரி ஹாஜரா என்ற மங்கையையும் பரிசிலாகக் கொடுத்தனுப்பினான்.

இப்ராஹீம் நபியவர்களுக்கும் வயதாகி வந்தது. ஆயினும் சாராவைக் கொண்டு மகப்பேறு கிட்டாதிருந்தது. எனவே ஹாஜராவையும் அவர் திருமணம் செய்து கொண்டார். சிறிது காலத்தில் ஹாஜராவுக்கு ஆண் மகவு ஒன்று பிறந்தது. அவ்வன்புக் குழந்தைக்கு இஸ்மாயீல் என அழகுத் திருப்பெயர் சூட்டி மிக்கப் பற்றுப் பாசத்துடன் வளர்த்தார்கள். இப்ராஹீம் நபியவர்களுக்கு அது சமயம் 86 வயதாக இருந்தது. அதன்பின் மூத்த மனைவி சாராவுக்கும் ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இதற்கு இஸ்ஹாக் எனப் பெயரிட்டார். அது போழ்து இப்ராஹீம் நபி 99 வயதை அடைந்திருந்தார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:25 pm

சமூகப் பிரஷ்டம்

ஹலரத் ஹம்ஸாவும், ஹலரத் உமரும் இஸ்லாத்தில் இணைந்துவிட்டதை எண்ணிக் குறைஷிகள் ஓரளவு அச்சங் கொண்டிருந்தாலும் இஸ்லாமியப் பிரச்சாரத்தால் அவர்களது சமயமும், பண்பாடும், பொருளாதாரமும், சமூகக் கட்டுக்கோப்பும் சிதைந்து வருவதைச் செவ்விதில் உணரலாயினர். செல்வத்திலும், செல்வாக்கிலும், அதிகாரத்திலும் புரண்டு வந்த குறைஷிப் பிரமுகர்களுக்கு இந்நிலை முன்னிலும் அதிகமாகப் பீதியை அளித்தது. இதை எவ்விதத்தாலும் தடுத்து நிறுத்த வழி காணுவதெனச் சங்கல்பம் பூண்டனர். இஸ்லாத்தை எதிர்த்துவந்த குறைஷிகள் அனைவரும் ஒன்று கூடினர்! ஒரு முடிவு கண்டனர். ஹாஷிம் குலத்தவரை பகிஷ்கரிப்பது – சமூகப் பிரஷ்டம் செய்வது என்பதுதான் அந்தக் கொடிய முடிவு. ஹாஷிம் என்பவர் பெருமானாரின் பாட்டனாரான அப்துல் முத்தலிபின் தந்தையாவார்.

இக்குலத்தாருடன் மற்றவர்கள் வாங்கல், கொடுக்கலை நிறுத்திவிடுவது, சம்பந்தம் சார்படி செய்வதில்லை. அவர்களுக்கு உணவு தண்ணீர் எதுவும் செல்ல அனுமதிப்பதில்லை. வேறு எந்விதத் தொடர்பும் அவர்களுடன் வைத்துக் கொள்வதில்லை. இவற்றைக் கடுமையாகக் கண்காணிப்பது ஆகியவை அம்முடிவின் ஷரத்துக்கள். இவற்றை பிசகின்றிப் பிரயோகித்தால் பனூ ஹாஷிம்களுக்குள்ளேயே பிளவேற்படும். அவர்களில் முஸ்லிம்கள் தனியாகவும் முஸ்லிமல்லாதார் பிரிந்து விடுவர். அதன் பயனாகப் பெருமானாருக்கு ஆதரவு குன்றி வலுக் குறைந்துவிடும்.

அதன்பின் முஸ்லிம்களை எளிதாகவும் விரைவாகவும் ஒழித்துக் கட்டிவிடலாம். இது விக்கிரகத் தொழும்பர்களின் தீர்க்கமான திட்டம்!

பகிஷ்கார நிபந்தனைகளை எழுத்தில் வடித்துச் சம்பந்தப்பட்ட தலைவர்களனைவரும் அதரில் கையெழுத்திட்டு அதற்குப் புனிதம் கற்பிக்கும் வகையில் கஃபாவில் அதைத் தொங்க விடுவதெனத் தீர்மானிக்கப்பட்டது. அவ்வாறே, இக்ரிமாவின் புதல்வன் மன்சூர் அல் ஆமிரிப்னு ஹிஷாம் என்பவனைக் கொண்டு அவ்வறிக்கையினை எழுதி, அதில் குறைஷித் தலைவர்கள் நாற்பது பேர் கையெழுத்திட்டு நபித்துவம் 7ம் ஆண்டு முஹர்ரம் மாதம் முதல் நாளன்று கி.பி. 616 இறுதி கஃபாவில் தொங்கவிட்டனர். பகிஷ்காரம் அமுலுக்கு வந்தது. ஒப்பந்தத்தை எழுதிய மன்சூரின் வலக்கரம் சின்னாட்களில் சூம்பிச் செயலற்று விட்டதாகக் கூறப்படுகிறது.

பகிஷ்காரம் விஷயம் அபூதாலிபுக்குத் தெரியவந்தது. ஹாஷிம் குலத்தார் மற்றும் அவர்களோடு நெருங்கிய உறவுள்ள குடும்பத்தார் அனைவரையும் ஒன்றுகூட்டி அவர்களிடம் தங்களின் குலப்பெருமையையும் குடும்பத்தின் கண்ணியத்தையும் எடுத்துரைத்து, குறைஷிகளின் இந்தப் பகிஷ்காரத்தை அனைவரும் ஒன்றுபட்டு நின்று முறியடிக்க வேண்டுமெனவும், தங்களின் குலக்கொழுந்தான முஹம்மதுவை எல்லாரும் காத்து நிற்க வேண்டுமெனவும், உருக்கத்துடன் எடுத்துச் சொன்னார். அபூலஹபையும், ஹாரிதின் மகன் அபூசுப்யானையும் தவிர்த்து, ஹாஷிம் குலத்தவரான முஸ்லிம், முஸ்லிமல்லாதார் அனைவரும் அபூதாலிபின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, அண்ணலாருக்காகத் தங்கள் சுக சவுகரியங்கள் அனைத்தையும் தியாகம் செய்ய முன்வந்தனர்.

எனவே, ஹாஷிம் குலத்தாரும், அவர்களைச் சேர்ந்தவர்களும் தங்களிடமிருந்த உணவுப் பொருள் மற்றும் தேவையான சாமான்களை எடுத்துக் கொண்டு கிழக்கே மக்காவுக்கு அருகிலுள்ள தங்களுக்குச் சொந்தமான “ஷிஃபு அபீதாலிப்” என்ற பள்ளத்தாக்கில் போய்த் தங்கினர்.

பள்ளத்தாக்குச் சென்ற சிறிது காலத்தில் கைவசம் வந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. வெளியில் சென்று வாங்கலாமென்றாலும் விற்பதற்கு எவரும் முன்வரவில்லை. துணியவில்லை, கண்காணிப்போ மிகமிக இறுக்கமாக இருந்தது. அதனிடையில், ஹிஷாம் பின் அம்ர் அல் ஆமிரி மக்ஜுமி என்னும் நல்ல மனங்கொண்ட ஒரு அநுதாபி கணவாயிலிருந்தவர்கள் மீது அனுதாபங்கொண்டு, தம் ஒட்டகை ஒன்றில் உணவுப் பொருட்களை ஏற்றி, அந்தி சாய்ந்த நேரங்களில் இருட்டோம் அதைக் கணவாயின் பக்கம் ஓட்டிவிடுவார். அது கணவாய்க்குள் சென்றதும் அங்குள்ளவர்கள் அதன் மீதுள்ள பொருட்களை இறக்கிக் கொண்டு அதைத் திரும்ப மக்காவின் பக்கம் ஓட்டிவிடுவர். இவ்வாறு சில காலம் நடந்து வந்தது. ஆயினும், குறைஷிகளின் தீவிரக் கண்காணிப்பின் காரணமாக ஹிராம் தம்முடைய உதவியை நீடித்துச் செய்துவர இயலவில்லை.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:26 pm

பள்ளத்தாக்கிலிருந்த மக்கள் உணவுக்காகப் பட்டபாடு சொல்லுந்தரமன்று. இலை, தழை, கிழங்கு, காய் முதலிய கிடைத்த வஸ்துக்களையெல்லாம் சாப்பிட்டு வந்தனர். முடியவில்லை, போதவில்லை, ஒரே தட்டுப்பாடும் பசியும் பட்டினியுந்தான். ஸ அத் இப்னு அபீவக்காஸ் என்னுமொருவர் தம் பசியைப் போக்குவதற்குத் தரையில் கிடந்த தோல் துண்டு ஒன்றை எடுத்து வந்து அதைச் சுட்டுக் கருக்கித் தண்ணீரில் கரைத்துக் குடித்தாரென்றால், ஹாஷிம் குலத்தார் நபிகள் நாதரின் பொருட்டு அனுபவிக்கக்கூடிய துன்பம், செய்ய வேண்டிய தியாகம் - இதற்கு மேல் வேறென்ன இருக்கிறது? தங்கள் கண்ணின் மணியான ஏந்தலின் பொருட்டாக இதுமட்டுமென்ன, இதற்கு மேல் உயிரையும் அர்ப்பணிக்க அவர்கள் திடசித்தங்கொண்டிருந்தனர். மழலைகள் பசியால் வீறிட்டழுவதைக் காணப்பெறாத பெற்றோர், பாலின்றி, பண்டமின்றிப் பதைபதைத்து நைந்து உருகினர். இந்தப் பகிஷ்காரம் சில நாள், சில மாதங்களல்ல, தொடர்ந்து மூன்றாண்டுகள் வரை நீடித்தது. அந்நீண்டகால பகிஷ்காரத்தின் காரணமாக அபூதாலிப், கதீஜா நாச்சியார் இருவரின் உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது.

யாத்திரை மாதங்களில் மட்டும் பெருமானார் மக்காவுக்குள் வந்து யாத்ரிகர்களைக் கண்டு இறைவனின் தூதை எடுத்துச் சொல்லுவார்கள். இதையுங்கூடச் செய்யவிடாது அக்கொடியவன் அபூலஹப் எங்கணும் நிழல்போல் தொடர்ந்து இடையூறு செய்து வருவான். கூட்டம் கலைப்பான். ஷவ்வால், துல்கஃதா மாதங்களில் மஜின்னா, துல்மஜாஸ் என்ற இடங்களில் சந்தை கூடி வியாபாரங்கள் கேளிக்கைகள் நடைபெறும் பொழுது அங்கும், துல்ஹஜ் மாதத்தில் யாத்திரிகர்கள் கூடும் இடங்களாகிய மினா, மௌக்கிப், அரபாத், முஸ்தலிபா ஆகிய இடங்களுக்கும் சென்று பெருமானார் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்து வந்தார்கள்.

இவ்வாறிருந்து வரும்போது, முன் கூறிய ஹிஷாம் மனந்தாளாதவராய் ஒருநாள், அபூதாலிபின் சகோதரி ஆத்திகாவின் மகன் ஸுஹைர் இப்னு அபீஉமையா என்பவரைக் கண்டு, “உம் தாய் வழி உறவின் முறையார் பள்ளத்தாக்கில் பசிக்கொடுமையால் வாடும்போது நீர்மட்டும் இங்கிருந்து கொண்டு உண்டு களிக்கின்றீரே! இது உமக்கு ஏற்குமா?” என இடித்துரைத்தார். அதற்கு ஸுஹைர், இது எனக்கு ஏற்புடையதல்ல என்பதை நன்கு அறிவேன். எனினும், நான் மட்டும் ஒண்டியாக என்ன செய்ய முடியும்? துணைக்கு யாருமற்றவனாய் நிற்கிறேனே! என உணர்ச்சி ததும்பக் கூறினார். “அவ்விதமாயின் இது விஷயத்தில் நான் உமக்குத் துணை நிற்கிறேன்” எனத் தைரியங் கூறினார் ஹிஷாம். இருவரும் கஃபாவை நோக்கிப் புறப்பட்டனர். போகும் வழியில் முத்யிம் பின் அதீ என்பவரையும் உடனழைத்துக் கொண்டனர். இவர்களுடன் அபுல் பக்தரி பின் ஹிஷாம், ஜமாஅ பின் அல் அஸ்வத்தும் சேர்ந்தனர். ஐவரும் மற்றும் சில அனுதாபிகளும் சேர்ந்தனர். மறுநாள் காலையில் அனைவருமாகக் கஃபா சென்றனர். ஸுஹைர், கஃபாவை ஏழுமுறை இடம் வந்து பகிஷ்கார உடன்படிக்கையை கிழத்தெறியப் போவதாக அங்கு கூடியிருந்தோரிடம் எடுத்துரைத்தார். அப்போது அங்கு நின்றிருந்த அபூஜஹல் அவ்வாறு செய்யக்கூடாதெனத் தடுத்தான். அவனது வார்த்தைகளைப் பொருட்படுத்தாது, தொங்கிக் கொண்டிருந்த உடன்படிக்கையை முத்யிம் தாவிப் பற்றி இழுத்தார். அதை விரித்துப் பார்த்தபோது, “பிஸ்மிக்க அல்லாஹும்ம” - இறைவா! உன் திருநாமத்தால் என்ற வார்த்தைகள் தவிர மற்ற வாசகங்களையெல்லாம் கரையான் அரித்திருப்பது கண்டு, அபுஜஹ்ல் உள்பட அனைவரும் ஆச்சரியத்துள் மூழ்கினர். இவ்வுண்மை பெருமானாருக்கு கனவில் அறிவிக்கப்பெற்று அபுதாலிப் இடம் கூற, அவர் அதனைக் குறைஷிகளுக்கு எட்டச் செய்து, அவர்கள் உடன்படிக்கை எடுத்துப் பிரித்து பார்த்து, உண்மையைக் கண்டு, கட்டுப்பாட்டை கைவிட்டதாக மற்றொரு தகவல் கூறுகிறது. எவ்வாறாயினும், குறைஷிகள் செய்து கொண்ட உடன்படிக்கை தானாகவே செத்து மடிந்ததென்பது உண்மையே!. ஹாஷிம் குலத்தவர் இப்போது பள்ளத்தாக்கை விட்டும் வெளியேறி மக்காவுக்குள் வந்து என்றும் போல் வசிக்கலாயினர். இது நுபுவ்வத் 10ம் ஆண்டு துவக்கத்தில் கி.பி. 619ல் நிகழ்ந்தது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:26 pm

அபுதாலிப், கதீஜா நாயகி மரணம்


சில மாதங்களாயின. இப்போது நபித்துவம் 10ம் ஆண்டு ஷஃபான் மாதம். முதுமை அடைந்து விட்ட அபுதாலிப் மீளா நோயுற்றார். தமக்கு மரணம் நெருங்குவதை உணர்ந்தார். தம் குடும்பத்தினரை அழைத்து அருகில் அமரச் சொன்னார். தமது (மதுர) வாய் திறந்து, “மரணம் என்னை நெருங்கி விட்டது. நீங்களனைவரும் முஹம்மதுவிடம் அன்பு புண்டு நடந்து கொள்ளுங்கள். அவர் நம் குடும்பத்தில் கண்ணியமிக்கவர், சத்திய வந்தர், அவர் கொண்டு வந்துள்ள மார்க்த்தை நல்லறிவும், நல்லெண்ணமும் கொண்ட யாரும் நிராகரக்க மாட்டார்” என்ற தம் இறுதி எண்ணத்தை – அபேட்சையை வெளியிட்டுக் காட்டினார். அருகிலிருந்த அண்ணலார், “பெரிய தந்தையே!. இத்தருணத்திலாகிலும் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்களேன்! “லாஇலாஹ இல்லல்லாஹு” என்ற கலிமாவை மட்டுமாவது உச்சரியுங்களேன்” என வேண்டினார்கள். அதற்கு அபுதாலிப், “எனதருமைத் தம்பி மகனே! உமது மார்க்கத்தை உண்மையென நான் மனதார ஒப்புக் கொண்ட போதிலும், இத்தருணத்தில் அதை வாய்விட்டுச் சொல்லி ஏற்றுக் கொள்வது உமக்கோ அல்லது எனக்கோ பெருமையளிக்காது. மரணத்தருவாயில் நான் அவ்விதம் செய்தால், நான் இறந்தபின், குறைஷிகள் என்னைப் பற்றி கேவலமாகப் பேசுவார்கள். அது நம் மூதாதையரின் நாணயத்தையும், கண்ணியத்தையும், குடும்ப கௌரவத்தையும் பாதித்து இழுக்கை ஏற்படுத்தும்” எனச் சமாதானம் கூறி விட்டார்.

அபுதாலிப் இஸ்லாத்தை ஏற்காது இறந்தது ஏந்தல் நபியவர்களுக்கு எப்போதும் மனப்புண்ணாகவே இருந்து வந்தது. அபுதாலிப் மரணமெய்திய போது அவருக்கு வயது 85 ஆக இருந்தது. பெருமானாருக்கு அப்போது 50 வயது. பெரிய தந்தையின் மரணத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி, வேதனையிலிருந்து மீளாதிருக்கும் நிலையில் பொறுமையின் குன்றாம் புமான் நபியவர்கள் மற்றுமொரு பேரிடிக்கு ஆளாக நேர்ந்தது. இமை கண்ணைக் காப்பது போல் இருபத்தாறு ஆண்டு காலம் தம்மை காத்து, கண்காணித்து, இணையற்ற வாழ்க்கைத் துணைவியாக இருந்த, தம் அபரிமிதமான செல்வமனைத்தையும், அக்கருணை வள்ளலின் காலடியில் காணிக்கை வைத்து, அன்னாரின் குற்றவேலுக்காக காத்து நின்று, அத்திருத்தூதர் கொண்டு வந்த தெய்வத் தூதை முதன் முதலில் ஒப்புக் கொண்டு, அவ்வேந்தலின் மனப்பாரம் குறைத்து, ஆறுதலும் தேறுதலும் கூறி, அன்பொழுக நடந்த ஆருயிர் நாயகி கதீஜா பிராட்டியாரைப் பெரிய தந்தை அபுதாலிப் மரணமாகி 35 நாட்கள் முற்றாகக் கழிவதற்குள் இழக்க நேரிட்டது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:26 pm

பெருமானாருக்கு அதிர்ச்சிக்கு மேல் பேரதிர்ச்சியாக ஆகி விட்டது. அவர்கள் ஆற்றொணாத் துக்கத்துள் ஆழ்ந்தனர். கதீஜா நாயகியின் பிரிவு அவர்களை நெடுகிலும் வாட்டிக் கொண்டிருந்தது என்பதை “பிர்அவ்னின் மனைவி ஆஸியாவும், ஈஸா நபியின் அன்னை மர்யமும் என் மனைவி கதீஜா நாச்சியாரும் எனது பாத்திமாவும் பெண்களின் பரிபுரணம் பெற்ற மாது சிரோண்மணிளாவர்” என அண்ணலார் அடிக்கடி கூறி வந்ததிலிருந்து தெரிந்து கொள்கிறோம். மரணத்தின் போது கதீஜா நாச்சியாரின் வயது 65 ஆக இருந்தது.

அன்புப் பெரிய தந்தையையும் அருமை மனைவியையும் இழந்த துக்கத்தில் அண்ணலார் சில நாட்கள் வரை சோர்வுற்றிருந்தனர். அண்ணலார் சில நாட்கள் வரை சோர்வுற்றிருந்தனர். வீடு வெறிச்சிட்டுக் காணப்பட்டது. அவ்விரு முக்கியஸ்தரின் மரணமும் அடுத்தடுத்து நேர்ந்துது குறைஷிகள் கும்மாளம் அடிப்பதற்கு ஏற்ற வாய்ப்பாக அமைந்தது. கதீஜா பெருமாட்டியார் மரணித்து இரண்டு வாரங்கள் கடப்பதற்குள் அவர்கள் நபிகள் கோமானை எள்ள நகையாடவும், எதிர்ப்பை வலுப்படுத்தவும் தொடங்கினர். சாதாரணமானவன் கூட நபிகளாரை அலட்சியமாகப் பாவிக்க ஆரம்பித்தான். ஆட்டின் குடல் போன்ற அசுத்தப் பொருட்களையும் அவர்கள் மீது அள்ளி வீசத் தயங்கவில்லை அக்கொடு மாக்களான குறைஷிகள்.

ஒருநாள், ஒரு சாதாரண மனிதன் மண்ணைத் தன் கைகளில் அள்ளிப் பெருமானார் அவ்வழியே வரும்போது அவர்களின் புனித சிரத்தின் மேல் கொட்டி விட்டான். அக்கோலத்துடன் வீடு வந்த அண்ணலாரை அன்பு மகள் பாத்திமா கண்டதும் ஓவென வாய்விட்டு கதறியழுது “தந்தையே!. தாங்கள் எவருக்கும் எப்பொழுதும் யாதோர் இன்னலும் செய்ததில்லையே!. அவ்வாறிருக்கஈ அக்கொடியோன் தங்களின் திருச்சிரசின் மீது மண்ணை வாரிக் கொட்டி விட்டானே! இதுவா நமக்கிட்ட கதி!? என ஆறாத் துயரத்தோடு அழுது புலம்பியது. அதற்குக் கருணைக் கடலான காத்தமுந்நபி, “அழாதே என் கண்மணியே! உன் தந்தையை ஆண்டவன் ஒருக்காலும் கைவிட மாட்டான். அவன் எப்போதும் பாதுகாப்பளிப்பான். அதைரியப்படாதே!” என ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:27 pm

கல்லால் அடித்தனர்

மக்காவுக்கு தென்கிழக்கே சுமார் 70 மைல் தொலைவில் தாயிப் என்னும் பட்டணமிருக்கிறது. அங்குள்ள மக்களும் குறைஷிகளைப் போல் விக்கிரகத் தொழும்பர்களேயாவர். சிறிய தந்தை அப்பாஸுக்கு அங்கு நில புலன்கள் உண்டு என்பது பெருமானாருக்குத் தெரியும். தாயிப் வாசிகளான தகீப் கோத்திரத்தாருக்கும் குறைஷிகளுக்குமிடையில் தெய்வங்களைக் கொண்டாடும் முறையிலும் வர்த்தகத் துறையிலும் நீண்ட காலப் போட்டியும் பகைமையும் இருந்து வருவதையும் அண்ணலார் அறிவார்கள். ஆகவே, தாயிப் சென்றாவது சில நாள் தங்கி அவ்வூர் மக்களிடம் இஸ்லாத்தைப் பற்றி எடுத்துச் சொல்லலாம். அவர்கள் ஆதரவு கிடைத்தால் குறைஷிகளின் இன்னல் இடையூறுகளிலிருந்தும் முஸ்லிம்களுக்கு ஓரளவு நிம்மதி கிடைக்குமே என எண்ணினார்கள். எனவே, தமது வளர்ப்பு மகன் ஜைதையும் உடனழைத்துக் கொண்டு நபித்துவம் 11ம் ஆண்டு ஜமாதில் ஆகிர் மாதத்தில் நடந்தே தாயிபுக்குப் புறப்பட்டுச் சென்றார்கள்.

அங்கு பனூதகீப் கோத்திரத்தைச் சேர்ந்த ஸாக்கிப் பிரிவினரின் தலைவர்களான அப்துயஃலீல், மஸ்ஊது, ஹபீப் என்ற மூன்று சகோதரர்கள் மிக்க செல்வாக்குடன் வாழ்ந்து வந்தனர். அண்ணலார் அன்னவர்களின் வீடு தேடிச் சென்று மூவரையுங் கண்டு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். எல்லாவற்றையும் மூவரும் காது கொடுத்து கேட்டனர். ஆனால் அவர்கள் முதல் தரமான பெருமானாரின் விளக்கத்திற்குப்பின் அச்சகோரர்களில் மூத்தவன்இ “உம்மைத் தூதராக அனுப்பிய இறைவனுக்கு நீர் சவாரி செய்ய உமக்கொரு கோவேறு கழுதையைக் கூடவா கொடுக்க இயலாது போயிற்று?” என ஏளனம் பேசினான். இரண்டாமவன், “திருத்தூதராய் அனுப்புவதற்கு உம்மைத் தவிர வேறு ஆள் இறைவனுக்குக் கிடைக்கவில்லை போலும்!” என இடிந்துரைத்தான். மூன்றாமவன், “உண்மையில் நீர் இறைவனின் தூதராக இருப்பின் உம்முடன் உரையாட நான் அருகதையில்லாதவன்: ஆனால், நீர் பொய்யராக அருப்பின் என்னுடன் பேச உமக்கு அருகதை இல்லை” எனச் சாதுர்யமொழி பேசினான். அக்குதர்க்கவாதிகளை விட்டகன்று வேறு பலரைக் கண்டு இஸ்லாத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். எவரும் செவி சாய்ப்பதாக இல்லை. இவ்வாறு பத்து தினங்கள் வரை தாயிபில் தங்கி ஓரிருரையாவது இஸ்லாத்தில் இணைத்துவிடலாம் எனப் பிரயத்தனப்பட்டார்கள். முழுத் தோல்வியே முடிவாகக் கண்ட பலன்.

மாறாக அம்மாக்கள் துஷ்டர்களையும், சிறுவர்களையும் ஏவிவிட்டுப் பெருமானார் தெருவில் செல்லும்போது, “பைத்தியம், பைத்தியம்” எனக் கைகொட்டி பரிகசிக்கச் செய்தனர். எண்ணி வந்தபடி தாயிபில் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்கு வாய்ப்பில்லை எனக் கண்டு பெருமானார் மக்கா திரும்ப எண்ணங் கொண்டார்கள். மூன்று சகோதரர்களும் மற்றவர்களும் முன்னேற்பாடாக நபிகள் கோமான் செல்லக்கூடிய வழி நெடுகிலும் சிறுவர்களையும், துஷ்டர்களையும் காத்து நின்று கல்லெறிய ஏற்பாடு செய்தனர். பதினோராம் நாள் காலையில் பெருமானரும் ஜைதும் தாயிபை விட்டுப் புறப்பட்டனர். அக்கொடுமாக்களின் ஏற்பாட்டின்படி பாதையின் இரு மருங்கிலும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தூர்த்தர்கள் விண்ணவரும் மண்ணவரும் போற்றும் அண்ணலம் பெருமானாரின் புனித மேனி மீது கல்மாரி பொழிந்த வண்ணம், “பைத்தியம் பைத்தியம்” எனக்கூச்சலிட்டனர். கல்லடியால் காத்த முன்ன நபியவர்களின் கவின்மிகு திருமேனி காயமுற்றது. மலர்ப்பாதங்களிரண்டும் குருதியில் தோய்ந்து காலணிகளை நனைத்தன. தாங்கொணா வேதனையால் சற்று தரிக்க முயன்றாலும் இருக்க விட்டார்களில்லை. கடந்து செல்வோ மென்றாலும் கல்லெறியை நிறுத்தினார்களில்லை. அவ்வென்னஞ்சர்கள். இச்சம்பவம் பற்றிப் பின்னெருகால் பெருமானார் (ஸல்) கூறும்பொழுது, “நான் தாயிபிலிருந்து மூன்று கல் தூரம் ஓடி வந்தேன். மிகவும் காயமுற்று மயக்கமடைந்தவனாக ஓடி வந்ததால், எங்கிருந்து வருகிறேன் எங்கு செல்கிறேன் என்று என்னால் எண்ணிப்பார்க்கவும் அறிந்து கொள்ளவும் முடியாதவனாக இருந்தேன்” எனக் குறிப்பிடுகிறார்கள்.

இவ்வித நிலையில் ஓடி வந்த ஏந்தல் நபி எதிர்ப்பட்ட தோட்டமென்றால் புகுந்தார்கள். இத்தோட்டம் மக்காவாசிகளான உத்பா பின் ரபீஆவுக்கும் அவரது சகோதரர் ஷைபாவுக்கும் சொந்தமானது. இவர்கள் முஸ்லிம்களல்லர். துரத்தி வந்த துஷ்டர்கள் அத்தோடு தாயிப் திரும்பி விட்டனர். நிகழ்ந்தவற்றையெல்லாம் சற்று தூரத்திலிருந்து நோக்கிய அச்சகோதரர்கள் அண்ணலார் மீது அனுதாபம் கொண்டார்கள். அவர்கள் அதிகம் களைப்புற்றிருப்பதைக் கண்டு திராட்சைக் குலை ஒன்றைத் தட்டில் வைத்து தோட்டக்காரனான தங்கள் கிறிஸ்தவ அடிமை அத்தாஸ் என்பவனிடம் கொடுத்தனுப்பினர். அவ்விருவரும் அத்தாஸ் திராட்கை; குலைத் தட்டுடன் அண்ணலார் அண்டை வந்த போது அவர்களது திருவதனத்திலும், மலர்ப்பாதங்களிலும் கல்லெறிபட்ட காயங்களில் வடிந்த இரத்தத்தை ஜைது துணியால் துடைத்துக் கொண்டிருந்தார்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:27 pm

தோட்டத்தின் உரிமையாளர் கொடுத்தனுப்பிய பழம் என்பதறிந்த ஏந்தல் நபி, முதலில் அவர்களுக்கு நன்றி ஷுக்ரிh கூறிவிட்டு குலையினின்று ஒரு பழத்தைப் பிய்ந்து, “பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்” எனக் கூறியவாறு தங்கள் திருவாயில் வைத்தார்கள். அதுகண்டு அத்தாஸ் வியப்புற்றவராக, “பெரியாரே, நீங்கள் இப்போது என்ன கூறினீர்கள்?” என வினவினார். “வேறொன்றுமில்லை, இறைவனின் திருப்பெயரை உச்சரித்துப் பழத்தை உண்டேன்” எனக் கூறிப் பெருமானார் அதற்கு விளக்கம் கொடுத்தார்கள். அப்போது அத்தாஸ் “நீங்கள் கூறும் விவரங்கள் இங்குள்ளவர்கள் அனுசரிக்கும் மார்க்கத்தைச் சார்ந்ததாயில்லாமல், எங்களுடைய கிறிஸ்தவ மார்க்கத்தைச் சார்ந்ததாயில்லாமல், எங்களுடைய கிறிஸ்தவ மார்க்கத்தை ஒட்டியதாகவன்றோ தோன்றுகிறது! அஃதெப்படி?” என வினவினார். அதற்குப் பெருமானார், உம்முடைய நினேவா நாட்டில் தோன்றிய யூனுஸ் நபியைப் போன்று நானும் ஒரு தீர்க்கதரிசியாவேன், இறைவன் தனித்தவன், இணை துணை இல்லாதவன், அவன் யாரையும் பெறவில்லை, அவனை யாரும் பெறவில்லை என்று அவன் எனக்கு அறிவித்துள்ளான். இயேசுவும் என்போன்ற ஒரு தீர்க்கதரிசி ஆவார். அவர் தேவனின் குமாரருமல்லர், தேவனின் அவதாரமுமல்லர், இவைதான் நீர் பின்பற்றும் மார்க்கத்திற்கும் எனக்கு அருளப்பெற்ற மார்க்கத்திற்குமுள்ள வேறுபாடுகள்” என எடுத்துரைத்தார்கள். இதைக்கேட்ட அத்தாஸ் அண்ணலாரின் கைகளையும் கால்களையும் தொட்டு முத்தமிட்டுக் கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்று முஸ்லிமானார்.


கருணை நபியவர்கள் கல்லடிக் காயங்களால் வேதனை அடைவதைக் கண்டு மனங்கசிந்து ஆத்திரமுற்ற ஜைது “நாயகமே! தங்களை இவ்வளவு கொடுமைப்படுத்திய வன்னெஞ்சர்கள் நாசமடைய இறைவனைப் பிரார்த்தியுங்களேன்” என வேண்டினார். அதற்குக் காருண்யக்கடலாம் காத்தமுந் நபியவர்கள், “நான் மக்களிடம் அன்பு பாராட்டவும், அவர்களுக்கு நல்லுபதேசம் புரிந்து நேர்மைப் படுத்தவும் அனுப்பப்பட்டேனேயன்றி அவர்கள் மீது வேதனையை வரவழைப்பதற்காக அனுப்பப்படவில்லை. ஜைதே! இன்று தாயிப் மக்கள் நெர்வழிப்படாவிடினும் சிறிது காலங்கடந்தாவது அவர்கள் நேர்வழிப்படக் கூடும். அல்லது, இத்தலைமுறையினர் இஸ்லாத்தில் இணையாவிடினும் இவர் தம் மக்கள், வழித்தோன்றல்களாயினும் இச்சன்மார்க்கத்தை ஏற்கவே செய்வர்” எனச் சமாதானங் கூறி ஜைதின் ஆத்திரத்தை ஆற்றினார்கள். இறைவனின் கட்டளைப்படி வானவர் ஜிப்ரீல் தோன்றி பெருமானாரின் உள்ளக் கிடக்கையைச் சோதிக்கும் பொருட்டு மேற்கண்டவாறு வேண்டினர் எனவும் கூறுவர். அதன்பின் இறைவனிடம் இருகரமேந்தி, “இறைவனே! என்னுடைய பலவீனத்தைப் பற்றியும் வறிய நிலையைப் பற்றியும் மக்களின் கண்களில் நான் இழிவாகக் காணப்படுவதைப் பற்றியும் உன்னிடம் முறையிடுகின்றேன். ஏனெனில் இரக்க சிந்தனையாளர்களிலெல்லாம் மிகவும் இரக்க சிந்தனையாளன் நீ திக்கற்றவர்களுக்குத் துணையளிப்பவனும் ஆதரவற்றவர்களுக்கு அபயமளிப்பவனும் நீ. நீயே எனது பாதுகாவலன். நீ எவரிடம் என்னை ஒப்படைக்க நாடியுள்ளாய்? நீ என் மீது சினமுறாதிருப்பின் அதுவே எனக்குப் போதுமானது” என்று தமது இயலாத் தன்மையை எடுத்துக் கூறி, அவனது கருணையையும், உதவியையும், பாதுகாப்பையும் இறைஞ்சி மனமுருகிக் கண்ணீர் வடித்துப் பிரார்த்தித்தார்கள்.

சற்று நேரம் இளைப்பாறி ஓய்வுகொண்ட பின்னர் அண்ணலார் அத்தோட்டத்தைவிட்டும் அகன்று சிரமத்தோடும் மக்காவை நோக்கிப் பயணமானார்கள்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:28 pm

தாயிபிலிருந்து மக்காவரும் வழியில் நக்லாவில் பெருமானார் (ஸல்) தஹஜ்ஜத் தொழுகையின் போது திருவசனங்கள் ஓதியதை நஸீபீனிலிருந்து வந்த ஏழு ஜின்கள் காது தாழ்த்திக் கேட்டுக் கலிமாச் செல்லி இஸ்லாத்தைத் தழுவிச் சென்று அதனைத் தம் ஜின் வர்க்கத்தாரிடம் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தில் சேர்த்து வந்தனர். வழியில் நக்லா என்ற சிற்றூரில் சில நாள் தங்கி மீண்டும் பயணத்தைத் தொடர்ந்த ஹிரா குன்றை வந்தடைந்தார்கள். அதில் முன்னர் தாம் தவமிருந்த குகையில் சென்று தங்கியவர்களாய், தாயிபில் தங்களுக்கு நடந்த அவக்கேடுகள் மக்காவுக்கு எப்படியிருக்குமோ என எண்ணினார்கள்.

எனவே, ஜைதை முதலில் மக்காவுக்கு அனுப்பி அங்குள்ள நிலவரத்தை அறிந்துவரச் செய்வதுடன் அங்கு சென்றால் தமக்கு ஆதரவு நல்குவார் எவருமுண்டோவெனத் தெரிந்துவரச் செய்யலாம் எனவும் கருதினார்கள். அதன்படி ஜைது மக்கா சென்று நிலவரத்தை அறிந்து கொண்டு பலரைக் கண்டுப் பேசிப் பார்த்ததில் அனைவரும் சொல்லி வைத்தாற்போல், nருமானாரைப் பொறுப்பேற்கவோ அல்லது அவர்களுக்கு ஆதரவு அளிக்கவோ சாத்தியப்படாதெனக் கைவிரித்தனர்.

இறுதியாக கஃபாவில் தொங்கவிடப்பட்டிருந்த பகிஷ்கார ஒப்பந்த முறிவைப் பிய்த்தெறிந்த முத்யிம் பின் அதீ என்பவர் அடைக்கலம் தர அன்பு கூர்ந்து முன் வந்தார். இவர் முஸ்லிமுமல்ல. நேரிய மனமும், இரக்க சிந்தனையும், அன்புள்ளமும்தான் அவரின் அரிய பண்புகள். பெருமானார் ஹிராவில் தங்கியுள்ளதை ஜைதிடமிருந்து அறிந்த முத்யிம் தம் இரு புதல்வர்களையும் ஆயுத பாணிகளாக்கித் தம்முடன் அழைத்துக் கொண்டு அங்கு சென்றார். அண்ணலாரைக் குகையிலிருந்து கீழே அழைத்து வந்து தம் ஒட்டகையின் மீது ஏற்றிக் கொண்டு நேரே கஃபாவுக்கு வந்தார். அங்கு உரத்த குரலில்”நான் முஹம்மதுவுக்கு அபயம் அளித்துள்ளேன்.

அவருக்கு இனி நானே பாதுகாவலன்” என அறிக்கை செய்தார். அதைக்கேட்ட குறைஷிகளின் நாவும் கைகளும் ஆற்றல் இழந்தன. நபிகள் கோமான் கஃபாவில் தொழுது கொண்டபின், அவர்களை முத்யிம் அழைத்துச் சென்று வீட்டில் விட்டார். அன்று முதல் முத்யிம் நாயகம் அவர்களுக்குப் பாதுகாப்பாகக் கூடவே திரிந்து வந்தார்.

முத்யிம் பாதுகாப்பளித்து வருவது குறைஷிகளுக்குப் பிடிக்கவில்லை. அவரை இழிந்துரைக்கவும் வசைபாடவும் தலைப்பட்டனர். அதைக் கண்டு மனந்தாளா அண்ணல் நபி குறைஷிகளை விளித்து, “சகோதரர்களே! இக்கணத்திலிருந்து, நான் இறைவனின் பாதுகாப்பைப் பெற்றுன்ளேன். அவன் பாதுகாப்பே எனக்குப் போதுமானது. இனி நீங்கள் முத்யிமை யாதொன்றுங் கறைகூற வேண்டாம்” எனக் கூறி அதினின்றும் சுழன்று கொண்டார்கள். அன்று முதன் முத்யிமைத் தங்களுடன் அழைத்துச் செல்வதை நிறுத்திக் கொண்டார்கள். தாயிப் பயணத்தின்போது அண்ணலாருக்கு ஏற்பட்ட இம்சையின் அனுபவம், மனமும் காயமும் கொடுமையைத் தாங்கும் மனிதனது சகிப்புத் தன்மையின் உச்சத்தை எட்டி முகடு முட்டி நின்றதெனவே கூற வேண்டும். இதற்கு ஆறுதல் அளிக்கும் வகையில்தான் பேரருளும் பேரன்புமுடைய இறைவன் தனது ஹபீபான (தோழரான) முஹம்மது (ஸல்) அவர்களைத் தன்னளவில் அழைத்துத் திருக்காட்சி வழங்கி உரையாடியுள்ளான் போலும்!



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:28 pm

பஞ்சடைத்த காது.


பெருமானாரின் பிரச்சாரம் றாளுக்கு நாள் வலுவடைந்தது, சந்தர்ப்பம் வாய்க்கும்போதெல்லாம் திருவிழா நடக்குமிடங்களுக்கும், சந்தை கூடுமிடங்களுக்கும் மக்கள் கூடும் தெரு முச்சந்திகளுக்கும் சென்று இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்து வந்தார்கள. குறைஷிகளும் எதிர்ப்பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அரபிகளுக்கு மட்டுமின்றி யூதர், கிறிஸ்தவர்களிடத்தும் சென்று இறைவனின் தூதை எடுத்தியம்பியப் பெருமானார் தயங்கவில்லை தவறவுமில்லை.

இவ்வாறு இருந்து வரும்போது, எமன் மாகாணத்திலிருந்து ஒரு கோத்திரத்தாரின் தலைவரான, செல்வமும் செல்வாக்குடைய துபைல் பின் அம்ரு அலி தவ்ஸி என்பவர் ஒரு நாள் மக்காவுக்கு வந்தார். இவர் நல்ல புலமை மிக்க அறிவாளி. குறைஷித் தலைவர்கள் அவரை ஆடம்பரத்துடன் வரவேற்று உபசரித்தனர். அங்கு ஒரு விருந்துக்குப் பின் நடந்த உடையாடலின் போது நாயகம் அவர்கள் கொண்டு வந்திருக்கும் புதிய மார்க்கம் பற்றிய பேச்சும் எழுந்தது. அவ்வமயம் குறைஷிகள் பொய்யும் புனைச் சுருட்டுமாக உண்மையைத் திரித்துக் கூறி துபைல் இஸ்லாத்தையும் பெருமானாரையும் வெறுக்குமாறு செய்தனர். சத்தியத் திருநபியைச் சந்திக்காத வகையிலும் அன்னாரின் வார்த்தைகளைக் காதில் வாங்கிக் கொள்ளாத முறையிலும் துபைல் நடந்து கொள்வதாக அவர்களிடம் உறுதி கூறியிருந்தார்.

பெருமானாரின் பேச்சோ அல்லது அவர்களது திருவாயினின்று வெளிப்படும் திருவசனங்களோ தம் காதில் நுழைந்துவிடாது காத்துக் கொள்ள கைவசம் சிறிது பஞ்சையும் அவர் எப்போது கொண்டு திரிந்தார். இவ்வாறு மூன்று தினங்கள் முற்றாகக் கழிந்தன. நான்காம் நாள் துபைல் ஹரம் ஷரீபுக்குச் சென்றபோது ஆங்கு கஃபாவின் ஓரத்தில் பெருமானார் தொழுகையில் ஈடுபட்டிருந்தார்கள். அவர்கள் இனிய சத்தத்துடன் ஓதிய இறைவசனங்களின் நாதன் காற்றில் மிதந்து வந்து தூரத்தில் வந்துகொண்டிருந்த துபைலின் செவிகளில் புகுந்தது. மகுடி, நாகத்தை ஈர்ப்பதுபோல் அவர் பெருமானாரின் அண்டையில் வந்து சேர்ந்தார். சட்டெனப் பஞ்சை எடுத்துக் காதில் வைக்க முயன்றார். ஆனால், அதற்குள் திருவசனங்களில் சொல்லழகும், கருத்தாழமும், இனிய நாதமும் துபைலின் செவிகளில் தெளிவாகப் பட்டு மூளைக்கேறி மனதிற்குள் வேலை செய்ய ஆரம்பித்து விட்டன. கை செயலற்றுவிட்டது. பஞ்சும் வேலையற்றுக் கையிலிருந்தும் நழுவி விழுந்தது. துபைல் கற்சிலை போல் அசைவற்று நின்று பெருமானாரின் ஓதுதலையும் வணக்க முறைகளையும் கூர்ந்து கவனித்தார். இறைவனின் திருவசனங்களைக் காது குளிர மனம் இனிக்க லயித்து நின்று கேட்டார்.

துபைல் அங்கு நிற்பதை அறியாமல் திருத்தூதரவர்கள் தொழுகையை முடித்துக் கொண்டு இல்லம் ஏகினார்கள். சில நொடிகளில் கதவு தட்டப்பட்டது. பெருமானார் வந்த கதவைத் திறந்தார்கள். துபைல் நிலையருகில் தேம்பி அழுதவாறு நின்று கொண்டிருந்தார். அண்ணலாரைக் கண்டதும் அவர்களின் கரங்களைப் பற்றியவாறு துபைல், “நான் உங்கள் அடிமைஈ உங்களின் சீடன், என்னை நீங்கள்தாம் காப்பாற்றிக் கடைத்தேற்ற வேண்டும்” என இரந்து நின்றார். நபிகள் பிரான் துபைலை வீட்டினுள் அழைத்து வந்து உட்கார்த்தி உபசரித்து இஸ்லாத்தை பற்றி எடுத்துரைத்தார்கள். உடனே அவர் கலிமாச் சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார். ஊர் திரும்பி துபைல் அண்ணலாரைப் பற்றியும் இஸ்லாத்தைப் பற்றியும் தம் கோத்திரத்தாரிடம் எடுத்துரைத்து அனைவரையும் இஸ்லாத்தில் இணையச் செய்தார்.

இறைவனின் திருத்தூதர் இராக்காலங்களில் தொழுகையில் இறை வசனங்களை இனிமையாக ஓதுவதை மறைந்திருந்து கேட்டானந்திக்க, அபுசுப்யான், அபுஜஹல், அல்அக்னஸ் ஆகிய மூவரும் ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் பெருமானாரின் வீட்டுச்சுவரோரங்களில் வந்து ஒட்டி நின்று காத்திருப்பர். அவ்வாறு அவர்கள் நின்றிருக்கும்போது சில சமயங்களில் பொழுதுகூடப் புலர்ந்துவிடும். அப்போது அவர்கள் எதிர்பாராது சந்தித்துக் கொள்ள நேர்ந்தால் ஒருவரையொருவர் குறைகூறிக் கண்டிப்பர். எனினும், இவ்வழக்கத்தை அம்மூவரும் கைவிடவில்லை. இஸ்லாத்தையும் ஏற்கவில்லை. உண்மையை உணர்ந்தும் அதை ஒப்புக்கொள்ள மறுப்பது ஒருவித வக்ரபுத்தியும் வறட்டுப் பிடிவாதமும் ஆகுமன்றோ! சிலர் இந்நிகழ்ச்சி ஹலரத் அபூபக்கர் (ரலி) இல்லத்தண்டை நடந்ததாகவும் கூறுகின்றனர்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:29 pm

திருமணமும் மறுமணமும்

கதீஜா பிராட்டியாரின் மரணத்தால் அண்ணலார் அளப்பரிய துயரத்தில் மூழ்கிக் கிடந்தனர். இல்லத்தின் சுடர் விளக்கு அணைந்துவிட்ட காரணத்தால் அங்கு நுழையும் போதெல்லாம் அது அவர்களுக்கு வெறிச்சிட்டுக் காணப்பட்டது. அழகிலும், உயர் குலத்திலும், பணத்திலும் சிறந்த பெண்மணிகள் பலர் பெருமானாரின் கைப்பிடித்து இல்லக்கிழத்தியர் ஆவதற்கு போட்டியிட்டுக் கொண்டு முன்வந்தனர். எனினும் அவற்றைக் காதில் வாங்காமல் இஸ்லாத்தைப் பரப்புவதிலேயே அவர்குள் கண்ணுங் கருத்துமாயிருந்து வந்தனர். அண்ணல் நபியவர்கள் அரும் பணியாற்றி அகம் செல்லுங்காலை அவர்கள் ஆறுதல் பெற அன்பு மனைவி இல்லையே என்ற கவலை அத்யந்தத் தோழர் அபூபக்கர் (ரலி)யைச் சில நாட்களாக வாட்டிக் கொண்டிருந்தது. அதற்கொரு வகை காண முயன்றார். ஆழ்ந்த யோசனைக்குப் பின் ஒருவிதத் தீர்மானத்திற்கு வந்தார். அழகும் புத்தி சாதுர்யமுமிக்க தம் அன்புப் புதல்வி ஆயிஷாவையே பெருமானாருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிடலாம் என்ற முடிவுக்கு வந்தார். தமது உள்ளக்கிடக்கையை வெளியிட்டுக் காண்பித்தார். அபூபக்கர் (ரலி)யின் கோரிக்கையை அண்ணலார் அட்டியின்றி அங்கீகரித்தார்கள். இறைவனின் திருவருளால் நபித்துவம் 11ம் ஆண்டு ஷவ்வால் மாதம் அண்ணல் நபியவர்களுக்கு ஆயிஷா நாச்சியாரை 500 திர்ஹம் மஹருக்கு அழகிய முறையில் திருமணம் செய்விக்கப்பெற்றது. அது சமயம் ஆயிஷா நாச்சியார் பத்து வயதுச் சிறுமியாக இருந்தார். ஆறு வயதெனவும் சிலர் கூறுவர். சிறு பெண்ணாக இருந்ததால் அவர் தம் பெற்றோர் வீட்டிலேயே வாழ்ந்து வந்தார். மதீனா சென்றபின்னர்தான் நாயகம் அவர்களுடன் இல்லறம் நடத்துவதற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆயிஷா நாயகி நுபுவ்வத் ஆண்டு பிறந்தவராகையால் மதீனாவில் அப்போது அவர் பதினான்கு வயதை எய்திய வராயிருந்தார்.

அபூபக்கர் (ரலி)யின் விருப்பத்திற்கிணங்க அண்ணலார் ஆயிஷா நாயகியைத் திருமணம் புரிந்து கொண்ட போதிலும் வீட்டையும் வீட்டுக் காரியாதிகளையும் கவனிப்பதற்கு வயது வந்த பெண்ணொருவர் அவசியம் தேவைப்பட்டது. அது சமயம் ஸெளதா பின்து ஜம்ஆ என்ற பெண்மணி விதவையாக இருந்தார். இவர்து ஆரம்ப நாட்களில் இஸ்லாத்தைத் தழுவியவர். ஸக்ரான் பின் அம்ரு என்பவருக்கு வாழ்க்கைப்பட்டிருந்து அவரையும் இஸ்லாத்தைத் தழுவுமாறு செய்தார். குறைஷிகளின் கொடுமைகளுக்கஞ்சி அபிஸீனியா சென்ற முஸ்லிம்களுடன் இத்தம்பதியரும் சென்றனர். அங்கு ஸெளதா தம் கணவரை இழந்து அப்துர்ரஹ்மான் என்ற கைக்குழந்தையுடன் மக்கா திரும்பினார். இவர் இஸ்லாத்தில் சேர்ந்ததனால் பெற்றோரும் உடன் பிறந்தாரும் ஆதரிக்க மறுத்து விட்டனர். நிராதரவாக நின்ற ஸெளதாவின் மீது பெருமானார் பரிவு காட்டி அவரை 400 திர்ஹம் மஹருக்கு மறுமணம் புரிந்து கொண்டார்கள். ஆயிஷா நாயகியின் திருமணத்தை அடுத்து அதே ஆண்டு அதே மாதம் தான் இம்மறுமணமும் நடந்தது. வீட்டைப் பற்றிய கவலையும் பெருமானாருக்கு ஒருவாறு நீங்கியது. இவ்விரு திருமணங்களையும் ஹாலா பின்து ஹகீம் என்ற பெண்மணி, முன் நின்று பேசி முடித்தார். அது சமயம் கதீஜா நாச்சியார் காலமாகி ஓராண்டு கழிந்திருந்தது.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Apr 26, 2010 4:29 pm

யத்ரிப் வாசிகள்

நபித்துவம் 10ம் ஆண்டு கி.பி. 620 மக்கா யாத்திரைக்கான ஹஜ் மாதம் நெருங்கிக் கொண்டிருந்தது. அரபு நாட்டின் எல்லாப் பாகங்களிலிருந்தும் ஹஜ்ஜுத்திருவிழாவுக்காக மக்கள் சாரிசாரியாக வந்து கூடினர். இவர்களில் மக்காவுக்கு வடக்கே சுமார் 270 மைல் தொலைவிலுள்ள யத்ரிப் என்னும் பட்டணத்திலிருந்து வந்த யாத்ரிகர்களும் இருந்தனர். யத்ரிப் ஒரு அரண் செய்யப்பெற்ற பட்டணமாகவும் பசுமையான தானிய வயல்களையும் பேரீச்சந் தோப்புக்களையும் பழத்தோட்டங்களையும் தெளிந்த நீரோடைகளையும் கொண்டும் விளங்கியது. கீழ்த்திசையினர் விரும்பும் சகல பாக்கியங்களையும் அது வழங்குவதாய்த் திகழ்ந்தது. யாத்திரைக்காக வெளியிலிருந்து வந்தவர்களனைவரும் மக்காவையொட்டி ஹிரா குன்றுக்கும் மினாவுக்கும் இடையிலுள்ள "அகபா" வெளியில் கூடாரங்களடித்துத் தங்கினர். பெருமானார் கூடாரந்தோறும் சென்று மக்களுக்கு இறைவனின் தூதை எடுத்தியம்பி இஸ்லாத்தின் பால் அழைத்தார்கள். யத்ரிபில் அரபியர் மட்டுமன்றி யூதர், கிறிஸ்தவர் மற்றும் பல இனத்தவர்களும் வசித்தனர். இவ்வாறு கலந்துறவாடிய முறையில் இறைவன், சமயம், தீர்க்கதரிசி, ஒழுக்கம் மற்ற விஷயங்களில் யத்ரிப் வாசிகள் மக்கா வாசிகளை விட அதிக விளக்கமுடையவர்களாக இருந்தனர்.

யத்ரிபில் அவ்ஸ், கஸ்ரஜ் என்ற இரு முக்கிய அரபுக் கோத்திரத்தார் வசித்து வந்தனர். இவர்களுக்கிடையில் அடிக்கடி பிணக்கும், புசலும், சண்டைகளும் ஏற்பட்டு வந்தன. இதன் காரணமாக அவர்கள் வலிமை குன்றி ஒரு நல்ல தலைவனோ அல்லது வழி காட்டியோ இல்லாது தத்தளித்துக் கொண்டிருந்தனர். யத்ரிபில் வசித்த யூத கோத்திரத்தர்களான அந்நுலைர், பனூ குறைலா ஆகிய இருவரும் அவ்ஸ் கோத்திரத்தாரையும் கைனுகா கோத்திரத்தார் கஸ்ரஜ் கோத்திரத்தாரையும் ஆதரித்து நின்று அவர்களைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நல்ல சுரண்டல் ஆதாயத்தை அடைந்து வந்தனர். தவிரவும், இந்த யூதர்கள் தங்களிடையே தீர்க்கதரிசி ஒருவர் அண்மையில் தோன்றவிருக்கிறார் எனவும் அவரின் உதவியால் அரபு நாடு முழுவதையும் வெற்றி கொண்டு தாங்கள் ஆளப் போவதாகவும் அச்சுறுத்தி புச்சாண்டி காட்டி வந்தனர். இதனால் யத்ரிப் வாசிகள் அரபு நாட்டில் ஒரு தீர்க்கதரிசி தோன்றவிருக்கிறார் என்னும் விஷயத்தை ஏற்கனவே ஒருவாறு அறிந்திருந்தனர்.

ஹிரா குன்றுக்கும் மினாவுக்கும் நடுவிலுள்ள "அகபா" பகுதியில் பெருமானார் சென்று கொண்டிருக்கையில் சற்று தூரத்தில் யத்ரிப் வாசிகள் அறுவர் வீற்றிருப்பதைக் கண்டார்கள். இவர்கள் கஸ்ரஜ் கோத்திரத்தாராவார். அண்ணலார் அவர்களை அண்மி, இஸ்லாத்தை எடுத்து விளக்கினார்கள். அவ்வறுவரும், " யூதர்கள் கூறி வரும் தீர்க்கதரிசி இவராகவே இருக்க வேண்டும். இவர் கூறுபவை அற்புதமானவையாயும் மிக்க நன்மை விளைவிப்பனவாயும் உள்ளன!. அனைவருக்கு முன்னர் நாம் இவரை ஏற்று நம்முடையவராக்கிக் கொள்ள வேண்டும்" எனக் கருதியவர்களாக அக்கணமே இஸ்லாத்தைத் தழுவினர். இவர்கள் அஸ்அத், அவ்பு, ரபீஆ, குத்பா, உக்பா, ஜாபிர் என்னும் பெயரினராகும். இவ்வறுவரும் யத்ரிப் திரும்பியதும் தாங்கள் ஏற்றிருக்கும் புதிய மார்க்கத்தைப் பற்றிப் பிறருக்கும் எடுத்துரைத்து இஸ்லாத்தில் இணைந்து வந்தனர். கஸ்ரஜ்களைப் பார்த்து அவ்ஸ்களும் இஸ்லாத்தை ஏற்க முன் வந்தனர்.



நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வரலாறு - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 5 of 7 Previous  1, 2, 3, 4, 5, 6, 7  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக