புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
59 Posts - 55%
heezulia
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
31 Posts - 29%
mohamed nizamudeen
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
54 Posts - 55%
heezulia
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
29 Posts - 29%
mohamed nizamudeen
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
kavithasankar
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%
Guna.D
நொந்த இனம்.... Poll_c10நொந்த இனம்.... Poll_m10நொந்த இனம்.... Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நொந்த இனம்....


   
   
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 24, 2010 11:14 pm

உண்மைகள் என்றுமே உறங்குவதில்லை. உறங்கவும் கூடாது. உறங்க விடவும் கூடாது. அந்த வகையில் எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து என் மனதில் வடுவாக படிந்திருக்கும் சிலவற்றை உங்களோடு பகிர்த்து கொள்ளலாம் என்று நினைக்கின்றேன்.

அப்போது நான் ஆண்டு ஒன்று படித்துக்கொண்டிருந்த காலம் 1987 ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். ஒரு நாள் காலை வேளை வீட்டின் முற்றத்தில் நிற்கிறேன். திடீரென்று வீட்டிக்கு மேலாக பெரும் புகை மண்டலம். “ பெடியள் பஸ்சை கொளித்திப் போட்டாங்கள்” என்று சிலர் சொல்லிக்கொண்டே ஓடுவதை பார்கிறேன். எனது அப்பா சுதாரித்து கொள்கிறார். அவர் எங்களை தூரத்தில் இருக்கும் உறவினர் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். நாங்கள் அவ்வாறே சென்று விடுகிறோம். பெரும்பாலான வீடுகளில் ஆண்கள் வீடுகளில் தங்கிக் கொண்டு பெண்களையும் குழந்தைகளையும் வேறு ஊர்களுக்கு அனுப்பி விட்டு அவர்கள் தங்களது வீடுகளில் தங்கிக் கொள்கிறார்கள்.

சம்பவம் நடந்து சிறிது நேரத்தில் இந்திய இராணுவம் சம்பவ இடத்திற்கு வருகிறார்கள். அயலவர்கள் அனைவரையும் அருகில் இருக்கும் கோவில் ஒன்றுக்கு அழைத்து செல்கிறார்கள். கோவிலடியில் வைத்து ஆண்கள் அனைவருக்கும் பொல்லுகளால் அடித்து விடுகிறார்கள். அது மட்டுமல்ல எங்கள் வீடுக்கு முன்னால் இருந்த வேலியை கூட விட்டு வைக்கவில்லை, கொளுத்தி விடிகிறார்கள்.ஒரு சிலரை எரிந்து தங்களால் கொளுத்தப்பட வெலிகளிடையே தள்ளியும் விட்டிருக்கிறார்கள். அதிஸ்டவசமாக அவர்கள் எரி காயங்களுடன் தப்பி விடுகிறார்கள். இன்று கூட அன்று அடிவாங்கிய பலருக்கு அந்த நோவின் தாக்கம் இருக்கிறது என்றால் அந்த அடிகள் எவ்வளவு பலமானது என்று கற்பனை செய்து பார்த்துக்கொள்ளவும். அமைதிப்படை என்று வந்தவர்கள் இவ்வாறு அசுரர் படையாக இருந்து செய்த அட்டூழியங்கள் பெரும்பாலான தமிழர் மனதில் மாறாத வடுக்களாக இன்றும் இருக்கிறது. இந்த அசுரர் படை எய்தவனையும் நோகவில்லை, அம்பையும் நோகவில்லை, சும்மா இருந்த அப்பவிகளையல்லவா நோகவைத்தார்கள்.

நான் யாழ்ப்பாணக்கல்லூரியில் ஆரம்பப் பாடசாலையில் படிதுக்கொண்டிருந்தேன். அப்போது நடந்த வேறு ஒரு சம்பவத்தை பற்றி சொல்லாம் என்று நினைக்கிறேன்.ஆண்டு நான்கு என்று நினைக்கிறேன். ஒரு நாள் திடீரென வானில் இலங்கை விமானப்படை விமானங்கள் வட்டமிடுகின்றன. அவை வீசிய குண்டுகள் ஆரம்ப பாடசாலை கட்டட தொகுதியை சுக்கு நூறாக சிதைத்து விடுகின்றன. அதிஷ்டவசமாக குண்டு வீச்சு நடந்த தினம் ஒரு சனிக்கிழமை. அன்று பாடசாலையில் பிள்ளைகள் யாவரும் இருக்கவில்லை. அடுத்த திங்கட்கிழமை பாடசாலைக்கு வருகிறேன். எனது வகுப்பறை இருந்த இடமே மணல் மேடாக காட்சியளித்தது. அந்த சம்பவத்தில் பாடசாலைக்கு அருகில் வசிக்கும் இரண்டு அயலவர்கள் கொல்லப்பட்டதாக அறிந்தேன். இது என் கண் சாட்சியாக நடந்த சம்பவம்.என் கண்ணனுக்கு தெரியாமல் நடந்தது இன்னும் எத்தனை ???????

இந்த பாடசாலை குண்டு வீச்சு சம்பவம் நடந்து சிறிது நாட்களுக்குள் நடந்த இன்னொரு சம்பவம். பாடசாலைக்கு நண்பர்களுடன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கிறேன். சங்கரத்தை சந்தியை அண்மித்த வேளையில் மீண்டும் வானில் அந்த குண்டு வீச்சு விமானங்கள்.நாங்கள் சைக்கிளை வீதியோரமாக போட்டுவிட்டு, நெஞ்சை நிலத்தில் முட்டாத வகையில் கைகளையும் கால்களையும் உடம்புக்கு தாங்கல்களாக கொடுத்து நிலத்தில் படுத்துக்கொள்கிறோம்.நெஞ்சை உலுக்கும் வகையில் பாரிய வெடி சத்தங்கள் அடுத்து அடுத்து கேட்கிறது. ஆம் குண்டு விழுந்தது சங்கரத்தை சந்தியில். ஓரிருவர் கொல்லப்பட்டதாக அறிகிறோம். எங்களுடன் வழமையாக பாடசாலைக்கு வரும் ஒரு அண்ணா, எங்களின் பக்கத்தில் தான் படுத்திருந்தார். அவர் அன்றே துப்பாக்கிப் பயிற்சிக்கு போய் தன்னை இணைத்துக் கொண்டார் என்று அறிந்தோம். ஆம் அந்த அந்த இளம் உள்ளதை துப்பாக்கி தூக்க வைத்தது அன்று நடந்த கோரக் குண்டுத் தாக்குதல் சம்பவம். இது என் கண் சாட்சியாக நடந்த சம்பவம்.என் கண்ணனுக்கு தெரியாமல் நடந்தது இன்னும் எத்தனை ???????

அடுத்து நான் சொல்லப்போவது, பலரையும் கண்கலங்க வைத்த ஒரு கோர நிகழ்வு, முன்னேறிப் பாய்தல் என்னும் ஒரு இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கபடுகிறது. வலிகாமம் மேற்கின் முழு சனத்தொகையுமே வேறு இடங்களை நோக்கி நகர்கிறது. அவ்வாறு நகர்தவர்களில் ஒரு பகுதியினர் நவாலி சென் பீடேறேஸ் தேவாலயத்தில் தஞ்சமடைகிறார்கள். நண்பகல் பன்னிரண்டு மணியளவில் வானில் அந்த புக்காரா விமானங்கள். ஒரே தடவையில் பத்துக்கும் மேற்பட்ட குண்டுகளை கக்கி விட்டு செல்கிறது. அவை அனைத்தும் தேவலையத்திலும் தேவலையத்தை அண்டிய வீடுகளிலும் விழுந்து நூற்றி ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களை கொல்கிறது. அந்த சம்பவம் நடப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னர் நானும் அந்த தேவலையத்தின் அருகில் நின்றிருக்கிறேன். எனக்கு தெரிந்த இருபதிற்கும் மேற்பட்ட எனது உறவினர்கள் இங்கு கொல்லப்படிருக்கிறார்கள். இது என் கண் சாட்சியாக நடந்த சம்பவம்.என் கண்ணனுக்கு தெரியாமல் நடந்தது இன்னும் எத்தனை ???????

இங்கு நான் ஒரு வயோதிபரின் கதையையும் சொல்லியாகவேண்டும். சம்பந்தப்படவர்களை பாதிக்கும் என்பதால் யார் அந்த வயோதிபர் என்பதை இங்கு வெளிப்படையாக சொல்லமுடியாததற்கு வருந்துகிறேன். ஆனால் நான் சொல்லப்போவது ஒரு உண்மை சம்பவம். முன்னேறிப் பாய்தல் இராணுவ நடவடிக்கை தோல்வியில் முடிந்த கையோடு, யாழ்பாணத்தை கைப்பற்றும் பெரும் எடுப்பிலான இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. கோப்பாய் இராணுவத்தின் வசமானவுடன் புலிகளால் யாழ்ப்பாணத்தை விட்டு பின்வாங்குவது என்ற முடிவு எடுக்கப்படுகிறது. அதேவேளை அனைவரும் தென்மராட்சி நோக்கி இடம்பெயருமாறு ஒரு நாள் நண்பகல் வேளையில் கேட்கப்படுகிறார்கள். யுத்த பீதியின் நிமித்தமாக பெரும்பாலான மக்கள் தாமாகவே கையில் எடுத்த பொருட்களுடன் இடம்பெயர்கிறார்கள். தனது மகனின் குடும்பத்துடன் சேர்ந்து இடம்பெயர அந்த குறித்த வயோதிபர் மறுத்து விடுகிறார். “இது ஒரு தற்காலிக இடம்பெயர்வு தானே, நான் இங்கிருந்து சமாளித்து கொள்கிறேன். மீண்டும் விரைவில் சந்திக்கலாம்” என்று சொல்லி தனது உறவுகளை வழியனுப்பி வைக்கிறார். ஓரிரு நாட்களுக்கு பின்பு வயோதிபரின் மகன் ஊருக்கு சென்று தனது தகப்பனாரை மீண்டும் அழைத்து வருவதற்கு முயற்சி செய்கிறார். ஆனால் யுத்தம் உச்ச கட்டத்தை அடைந்து விடுகிறது. நாவற்குழி பாலம் போக்குவரத்து தடைப்படுகிறது. யாழ்பாணம் இராணுவத்தால் கைப்பற்றபட்ட பின்னர் மீண்டும் மக்கள் தங்கள் சொந்த இடங்களை நோக்கி போகிறார்கள். ஆம், அந்த வயோதிபரின் மகனின் குடும்பமும் அங்கே போகிறார்கள். ஆனால் வயோதிபரோ அங்கு இல்லை. இன்றுவரை அந்த வயோதிபர் எவ்வாறு இறந்தார், எங்கு இறந்தார் என்ற எந்த விதமான தகவலும் இல்லை.இது ஒரு வயோதிபரின் கதை. இதைப்போல் இன்னும் எத்தனை வயோதிபர்கள் ????????

அடுத்து நான் சொல்லப் போவது எங்கள் ஊரில் இருந்த ஒரு சங்கீத ஆசிரியை மற்றும் ஒரு 27 வயது வாலிபன் கொல்லபட்ட கதை.இது நடந்தது 2007 ஆம் ஆண்டில். அவர்கள் வழமை போல காலை வேளையில் தமது வேலைத்தளங்களை நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில், வீதியில் ஒரு கிளைமோர் குண்டுத்தாக்குதல். சம்பவ இடத்திலேயே அந்த இருவரும் மரிக்கிறார்கள். இது போல் இடையில் சிக்கி தமது வாழ்வை இழந்தோர் எத்தனை???????

நான் இங்கு சொல்லியவை அனைத்தும் என் வாழ்வோடு பிணிப் பிணைந்த சம்பவங்கள். வடக்கு கிழக்கில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் நெஞ்சங்கள் மத்தியிலும் இதுபோல் எதாவது ஒரு வடு கட்டாயம் இருக்கும். இது ஒரு தனி மனிதனின் காயங்கள் அல்ல. ஒரு இனத்தின் காயம்.பல மனிதர்களுக்கு தெரியாது எங்கள் காயங்கள். அவற்றை எடுத்து சொல்லவதில் கூட தப்பெதுமில்லை.ஆம் நமது இனம் நொந்த இனம்......

நன்றி
மூளாய் மைந்தன்

.



"ஒரு ஊடகம் அதன் மொழி கலை கலாச்சாரத்தை பாதுகாக்கும் கவசமாக இருத்தல் வேண்டும்"
நொந்த இனம்.... Logo16


என்றும் அன்புடன் ப்ரியாஅன்பு மலர்
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமீஸ்
ரமீஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6205
இணைந்தது : 28/02/2010

Postரமீஸ் Sat Apr 24, 2010 11:18 pm

அழுகை அழுகை ஆறுதல் ஆறுதல்



http://mhramees.blogspot.com
இறைவன் நம்மை படைத்திருப்பது அவனுக்கு அடிபணியவே
நீங்கள் நல்ல விடயங்களுக்கு பரஸ்பரம் உதவி செய்து கொள்ளுங்கள்,
மேலும் நீங்கள் தீயவற்றுக்கு பரஸ்பரம் உதவி செய்துகொள்ள வேண்டாம்.
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Apr 24, 2010 11:21 pm

பாதிக்கு மேல் என்னால் படிக்கவும் முடியவில்லை படிக்க விரும்பவும் இல்லை. நொந்த இனம்.... 440806

போராளிகள் பிறப்பதில்லை உருவாக்கப்படுகிறார்கள்.

ஈழ உறவுகளுக்கு நொந்த இனம்.... 572280



ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ப்ரியா
ப்ரியா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 3399
இணைந்தது : 25/02/2010

Postப்ரியா Sat Apr 24, 2010 11:25 pm

நண்பர்களே இது எனது ஒரு சகோதரன் எழுதிய ஆக்கம் , எழுத்துப் பிழைகள் காணப் படுகின்றன , தயவு செய்து மன்னிக்கவும் ,நான் திருத்திக் கொண்டு இருக்கின்றேன் ..

kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Sat Apr 24, 2010 11:28 pm

இந்த வாழ்க்கை நீங்கள் அறிந்த ஒன்று .அதன் வேதனை தெரியும் ,வலிகள் அறியும் இந்த கட்டுரை படிக்கும்போது,உங்கள் உணர்வு ,அறிய முடிகிறது...அறுதல் அறுதல் தான் சொல்லமுடிகிறது...
காலமும் கடவுளும் இதருக்கு நல் வழிக் காட்டுவார்கள் .



இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.




x_f92cb29
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக