புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
69 Posts - 38%
T.N.Balasubramanian
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
9 Posts - 5%
Dr.S.Soundarapandian
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
5 Posts - 3%
Balaurushya
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
2 Posts - 1%
prajai
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
2 Posts - 1%
Manimegala
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
2 Posts - 1%
Saravananj
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
435 Posts - 47%
heezulia
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
320 Posts - 35%
Dr.S.Soundarapandian
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
77 Posts - 8%
T.N.Balasubramanian
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
38 Posts - 4%
mohamed nizamudeen
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
30 Posts - 3%
prajai
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
5 Posts - 1%
sugumaran
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_m10வார பலன் (22-29 ஜூன் 2009) Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வார பலன் (22-29 ஜூன் 2009)


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:28 pm

மேஷம்

வெள்ளையுள்ளமும், வெளிப்படையான பேச்சும் உடைய நீங்கள், எதிரியையும் நண்பராக்கிக் கொள்வதில் வல்லவர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். பணப்புழக்கம் இருபுறம் இருந்தாலும் செலவுகளும் தொடரும். தடைபட்ட காரியங்களில் வெற்றியுண்டு. குடும்பத்தில் குதூகலம் பிறக்கும். கணவன் -மனைவிக்குள் அனுசரித்துப் போங்கள். பிள்ளைகளின் நடவடிக்கையைக் கண்டு மகிழ்வீர்கள். பெண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். தாய்வழி உறவினர்களிடையே நிலவி வந்த கசப்புணர்வுகள் நீங்கும். அரசு காரியங்களில் வெற்றி உண்டு. புண்ணிய‌த் தலங்கல் சென்று வருவீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம் - பக்கம் வீட்டாருடன் அளவாகப் பழகுவீர்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். வரவேண்டிய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. வேலையாட்களின் ஆதரவு கிட்டும். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். தேங்கிக் கிடந்த பணிகளை இனி முழுமையாக முடிப்பீர்கள். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் கற்பனைத்திறனுக்கு நல்ல வரவேற்பு உண்டு. எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 25, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிரே அதி‌ர்ஷ்ட திசை : வடமேற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:28 pm

வார பலன் (22-29 ஜூன் 2009) Sign_taurus ரிஷபம்

எங்கும் எதிலும் புதுமையும், புரட்சியும் செய்யும் நீங்கள், சுற்றியிருப்பவர்களை அனுசரித்துப் போகும் குணமுடையவர்கள். இந்த வாரத்தில் புதிய முடிவுகள் எடுப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப்பேசுவீர்கள். அலைச்சல் குறையும். கனிவான பேச்சால் காரியங்கள் கைகூடும். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். பொண்ணுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. அரசுக் காரியங்களில் அனுகூலமான நிலை காணப்படும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சியுண்டு. அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். தனிநபர்விமர்சனத்தை தவிர்க்கப் பாருங்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வாகனத்தை சீர்செய்வீர்கள். அக்கம்- பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுவது நல்லது. வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. பழைய பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். வேலையாட்களின் ஆதரவு உண்டு. உத்யோகத்தில் மேலதிகாயிடம் இருந்து வந்த மனஸ்தாபங்கள் விலகும். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வேலைசுமை குறையும். கலைஞர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 23, 24, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்மேற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:28 pm

வார பலன் (22-29 ஜூன் 2009) Sign_gemini மிதுனம்

விடாப்பிடியான செயல்திறனும், சொன்ன சொல்லைக் காப்பாற்றும் குணமும் உடைய நீங்கள், எப்பொழுதும் நல்லதையே நினைப்பீர்கள். குடும்பத்தில் வழக்கமான மகிழ்ச்சி உண்டு. கணவன் -மனைவிக்குள் விட்டு’கொடுத்து போவது நல்லது. பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப் பேச்சுவார்த்தை முன்னேற்றம் தரும். முன்கோபம் அதிகரிக்கும். பணப் பற்றாக்குறை நிலை மாறும். சில வேலைகளை போராடி முடிக்க வேண்டியது வரும். சகோதர, சகோதரிகளிடையே எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப் படுவீர்கள். முன்கோபம் விலகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்கள் உறுதுணையாக இருப்பார்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். ஆடம்பரச் செலவுகளை குறைக்கப் பாருங்கள். வாரத்தின் பிற்பகுதி திருப்திகரமாக இருக்கும். வேற்று மதத்தினரால், மொழிலியினரால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்கப் பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சம்பளப் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். சக ஊழியர்களின் அன்பை பெறுவீர்கள். கலைஞர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். மனநிறைவுடன் காணப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 24, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 2, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, ப்ரௌன் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:28 pm

கடகம்
விருப்பு, வெறுப்பின்றி எல்லோரிடமும் சகஜமாக பேசும் குணமுடைய நீங்கள், நல்லது கெட்டது நான்கையும் அறிந்து வைத்திருப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணப் பற்றாக்குறை வந்துபோகும். கணவன் -மனைவிக்குள் சிறுசிறு மனஸ்தாபங்கள் வந்துபோகும். பிரபலங்களின் உதவி கிடைக்கும். தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். புது நண்பர்கள் அறிமுகமாவார்கள். பிள்ளைகளின் உடல்நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பிரியமானவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்து விலகும். பெற்றோரின் ஒத்துழைப்பு உண்டு. வியாபாரத்தில் மனநிம்மதியுண்டு. பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப் பாருங்கள். வேலையாட்களால் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வந்துபோகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மேலதிகாரியின் ஆதரவு உண்டு. சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போங்கள். கணினி துறையினர்களுக்கு வேலைபளு அதிகரிக்கும். கலைத் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். சம்பளபாக்கி கைக்கு வந்துசேரும். சகிப்புத்தன்மை தேவைப்படும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 6 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:29 pm

சிம்மம்
தளர்ந்து வருபவர்களுக்கு சுமைதாங்கிகளாக தோல்கொடுக்கும் நீங்கள், எல்லோரிடமும் சுமுகமான நட்புறவை கொள்வீர்கள். உங்களின் திறமைகள் வெளிப்படும். மனக் குழப்பம் நீங்கும். பணவரவால் தொல்லை தந்த கடனை பைசல் செய்வீர்கள். புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உடல் ஆரோக்யம் திருப்திகரமாக இருக்கும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். முன்கோபதால் இருந்துவந்த சிக்கல்கல் நீங்கும். தாயாரின் உடல் நிலையில் அக்கறை காட்டுங்கள். வாகனச் செலவுகளும் வந்துபோகும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நல்லவர்களின் நட்பு கிட்டும். ஆன்மீகவாதிகளின் சந்திப்பு நிகழும். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். ஆடை, ஆபரணம் சேரும். மனதிலிருந்து வந்த குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்களின் தொந்தரவு விலகும். வாடிக்கையாளர்களை கவர புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனையை மேலதிகாரி ஏற்பார். சக ஊழியர்களின் ஆதரவு பெறுகும். வேலைபளு குறையும். தனியார் துறையினர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் பரபரப்புடன் காணப்படுவார்கள். சம்பளப் பாக்கி கைக்கு வரும். சவால்களில் வெற்றியடையும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 25, 26 அதி‌ர்ஷ்ட எண்கள் : 4, 5 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : சில்வர்கிரே, பிச்தாபச்சை அதி‌ர்ஷ்ட திசை : வடகிழக்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:29 pm

கன்னி

தப்பு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கும் குணமுடைய நீங்கள், பொதுநல சிந்தனையுடையவர்கள். பணவரவு சீராக இருக்கும். கணவன் -மனைவிக்குள் பனிப்போர் நீங்கும். முன்கோபம், வீண் அலைச்சல் விலகும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உடன் பிறந்தவர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் வந்து போகும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்பு அதிகரிக்கும். கன்னிப் பெண்கள் உற்சாகாத்துடன் காணப்படுவார்கள். உறவினர்களிடையே வீண் வாக்குவாதங்கள் வெடிக்கும். வி. ஐ. பி களின் சந்திப்பு கிட்டும். அரசியல்வாதிகள் அவசர முடிவுகளை தவிர்ப்பது நல்லது. மற்றவர்களை குறை சொல்ல வேண்டாம். வழக்குகளில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். கனவுத்தொல்லை, கண் எரிச்சல் நீங்கும். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெறுகும். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களிடம் அனுசரித்துப் போவது நல்லது. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களின் தொந்தரவு விலகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கலைத் துறையினர்களின் விருப்பங்கள் நிறைவேறும். ஏமாற்றங்கள், எதிர்ப்புகளுக்கிளிடையே முன்னேறும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 24, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 5, 7 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெள்ளை, வெளிர்சிவப்பு அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:29 pm

துலாம்

திறமையால் எந்த ஒரு காரியத்தையும் செய்து முடிக்கும் குணமுடைய நீங்கள், எப்பொழுதும் பரபரப்புடன், சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். 22-ந் தேதி மதியம் 2 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் கொஞ்சம் மந்தமாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். கையில் காசு பணம் தேவையான அளவு இருக்கும். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். கணவன் -மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகளின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. உடல் நிலை சீராகும். மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகள் பரபரப்புடன் காணப்படுவார்கள். பிரபலங்களின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். வேலையாட்களின் ஆதரவு கிட்டும். கடையை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உத்யோகத்தில் பணிகளிலிருந்த தேக்க நிலை மாறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கணினி துறையிலிருப்பவர்களுக்கு புது வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். தன்னைச் சுற்றி இருப்பவர்களில் உண்மையானவர்கள் யாரென்பதை உணரும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 24, 25, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 8 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், மயில்நீலம் அதி‌ர்ஷ்ட திசை : மேற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:30 pm

விருச்சிகம்

நம்பிவந்தவர்களுக்கு எப்பொழுதுமே நல்லதை செய்யும் குணமுடைய நீங்கள், சமூக நல அக்கறையுள்ளவர்கள். இந்த வாரத்தில் தடைகள் விலகும். குடும்பத்தில் அனுசரித்துப் போவீர்கள். பிள்ளைகளின் உடல் ஆரோக்‌கியம் திருப்தி தரும். கணவன் -மனைவிக்குள் சின்ன சின்ன மனஸ்தாபங்கள் வந்துபோகும். சகோதரவகையில் உதவிகள் கிடைக்கும். பால்ய நண்பர்களின் சுபகாரியங்களில் கலந்துக் கொள்வீர்கள். 22-ந் தேதி மதியம் 2 மணி முதல் 23, 24-ந் தேதி மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் அவ்வப்போது மனதில் சிறுசிறு குழப்பங்கள் வந்துபோகும். சொந்தம்- பந்தங்களுக்கு மத்தியில் விட்டுக் கொடுத்து போவது நல்லது. விரும்பியப் பொருட்களை வாங்கி கையிருப்பைக் கரைப்பீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களுக்கு கனவுத்தொல்லை, தூக்கமின்மை வந்துபோகும். அரசியல்வாதிகளின் பரபரப்புடன் காணப்படுவார்கள். தலைமைக்கு ஆலோசனை செய்யும் அளவிற்கு நெருக்கமாவார்கள். வேலையில்லாமல் அலைந்து திரிந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். ஆன்மிகவாதிகளின் சந்திப்பு நிகழும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் குறையும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். உத்யோகத்தில் மேலதிகாரியின் பாராட்டை பெறுவீர்கள். கணினி துறையினர்களுக்கு புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைஞர்களின் திறமைகள் வெளிப்படும். நீண்ட நாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். பொறுத்திருந்து சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 26, 27, 28 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், ஊதா அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:30 pm

தனுசு

தோல்விகளைக் கண்டு துவளாமல் விசையுறு பந்தைப் போல் மீண்டும் எழும் நீங்கள், கடின உழைத்து முன்னேறக் கூடியவர்கள். குடும்பத்தினருடன் அனுசரித்துப் போவது நல்லது. கணவன் -மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவது நல்லது. பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்யத்தில் கூடுதல் கவனம் தேவை. பழைய கடனை பைசல் செய்வீர்கள். பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அவர்களின் படிப்புகாக அதிகம் செலவு செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் வந்துபோகும். தாய்வழி உறவினர்களால் நன்மையுண்டு. நண்பர்களிடையே எதிர்பார்த்த உதவிகள் கொஞ்சம் கிடைக்கும். 24-ந் தேதி மாலை 4 மணி முதல் 25, 26-ந் தேதி மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் வீண் அலைச்சலும், காரியத்தடைகளும் வந்துபோகு. அரசு காரியங்களில் கொஞ்சம் நிதானம் தேவை. வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வீட்டை விரிவுபடுத்துவதற்காக அதிகம் செலவு செய்வீர்கள். வேற்று மதத்தினரால் நன்மையுண்டு. அரசியல்வாதிகளின் நீண்ட நாள் கோரிக்கைகள் நிறைவேறும். சகாக்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் பாக்கிகளை விரைந்து வசூலிப்பீர்கள். கூட்டுத்தொழிலில் மகிழ்ச்சி தங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியின் ஆதரவு கிட்டும். சக ஊழியர்களிடம் அனுசரித்துப் போவீர்கள். தனியார் துறையினர்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். கலைஞர்களுக்கு அதிரடி மாற்றங்கள் உண்டு. சுற்றத்தாரை அனுசரித்துப் போகும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 23, 27 அதி‌ர்ஷ்ட எண்கள் : 6, 9 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : பிங்க், வெள்ளை அதி‌ர்ஷ்ட திசை : தென்கிழக்கு

avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Postஇளவரசன் Tue Jun 23, 2009 3:30 pm

மகரம்

செயலில் வேகத்தையும், பேச்சில் தூய்மையையும் கொண்ட நீங்கள், திட்டங்களை வகுத்து செயல்படுவதில் வல்லவர்கள். இந்த வாரத்தில் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும். பணப் பற்றாக்குறை விலகும். பிள்ளைகளின் அடிமனதில் என்ன இருக்கிறது தெரிந்து அவற்றை நிறைவேற்றுவீர்கள். பொண்ணின் திருமணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். முன்கோபத்தைக் குறையுங்கள். எதிர்பாராத இடத்திலிருந்து பண உதவியுண்டு. வி. ஐ. பிகளின் சந்திப்பு நிகழும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுவீர்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். அவ்வப்போது வருங்காலத்தை பற்றிய யோசனைகளில் மூழ்குவீர்கள். 26-ந் தேதி மாலை 6. 30 மணி முதல் 27, 28-ந் தேதி வரை சந்திராஷ்டமம் நடப்பதால் எதிலும் நிதானம் தேவை. ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகள் மற்றவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் மறைமுக‌ப் போட்டிகளை சமாளிப்பீர்கள். பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிப்பது நல்லது. உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களிடம் அனுசரித்து போவீர்கள். சம்பள பாக்கி கைக்கு வந்துசேரும். கலைத் துறையினர்கள் சிந்தித்து செயல்படுவதன் மூலம் மகிழ்ச்சி கிட்டும். தன்னம்பிக்கையால் சாதிக்கும் வாரமிது. அதி‌ர்ஷ்ட தேதிகள் : 22, 23, 25 அதி‌ர்ஷ்ட எண்கள் : 3, 4 அதி‌ர்ஷ்ட நிறங்கள் : வெளிர்நீலம், மஞ்சள் அதி‌ர்ஷ்ட திசை : தெற்கு

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக