புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 11:16

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 11:16

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 11:15

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 11:14

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 22:54

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 17:51

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 13:37

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 11:31

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 11:25

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 11:23

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 11:21

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun 3 Nov 2024 - 23:38

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:30

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:28

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:26

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:24

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:22

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:21

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:20

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:19

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:17

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:14

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:13

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:12

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:09

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:08

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:06

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:04

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 13:00

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:57

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:54

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun 3 Nov 2024 - 12:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat 2 Nov 2024 - 12:04

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:59

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:57

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:56

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:55

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:54

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:52

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:50

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:48

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:47

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:42

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 18:39

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri 1 Nov 2024 - 13:36

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Fri 1 Nov 2024 - 1:19

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu 31 Oct 2024 - 22:10

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu 31 Oct 2024 - 21:16

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu 31 Oct 2024 - 21:05

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
5 Posts - 56%
Barushree
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 11%
kavithasankar
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 11%
prajai
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 11%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
59 Posts - 81%
mohamed nizamudeen
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
4 Posts - 5%
Balaurushya
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
2 Posts - 3%
prajai
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
2 Posts - 3%
Shivanya
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 1%
Barushree
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கந்தர் அனுபூதி Poll_c10கந்தர் அனுபூதி Poll_m10கந்தர் அனுபூதி Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்தர் அனுபூதி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Apr 2010 - 14:43

கந்தர் அனுபூதி Kandar10
கந்தர் அனுபூதி Muruga10





காப்பு

நெஞ்சக் கனகல்லும் நெகிழ்ந்து உருகத்
தஞ்சத்து அருள் ஷண்முகனுக்கு இயல்சேர்
செஞ்சொல் புனைமாலை சிறந்திடவே
பஞ்சக்கர ஆனைபதம் பணிவாம்.

ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்
பாடும் பணியே பணியா அருள்வாய்;
தேடும் கயமா முகனைக்ச செருவில்
சாடும் தனியானைச் சகோதரனே 1

உல்லாச நிராகுல யோகவிதச்
சல்லாப வினோதனும் நீயலையோ?
எல்லாம் அற என்னை இழந்த நலம்
சொல்லாய்; முருகா! சுர பூபதியே 2

வானோ புனல்பார் கனல் மாருதமோ
ஞானோதயமோ நவில் நான்மறையோ
யானோ மனமோ எனை ஆண்டஇடம்தானோ
பொருளாவது ஷண்முகனே 3

வளைபட்ட கைம்மா தொடுமக்கள் எனும்
தளைபட்டு அழியத் தகுமோ? தகுமோ?
கிளைபட்டு எழுசூர் உரமும் கிரியும்
தொளைபட்டு உருவத்தொடு வேலவனே 4

மகமாயை களைந்திட வல்லபிரான்
முகமாறும் ஒழிந்தும் ஒழிந்திலனே;
அகமாடை மடந்தையர் என்று அயரும்
சகமாயையுள் நின்று தயங்குவதே 5

திணியான மனோசிலை மீது உனதாள்
அணியார் அரவிந்தம் அரும்பும் அதோ?
பணியா என வள்ளி பதம்பணியும்
தணியா அதிமோக தயாபரனே 6

கெடுவாய் மனனே! கதிகேள் கரவாது
இடுவாய்; வடிவேல் இறைதாள் நினைவாய்;
சுடுவாய் நெடுவேதனை தூள்படவே;
விடுவாய் விடுவாய் வினையாவையுமே 7

அமரும் பதிகேள் அகமாம் எனும் இப்
பிமரம்கெட மெய்ப்பொருள் பேசியவா!
குமரன்! கிரிராசகுமாரி மகன்
சமரம் பொரு தானவ நாசகனே 8

மட்டூர் குழல் மங்கையர் மையல் வலைப்
பட்டூசல் படும் படர் என்று ஒழிவேன்;
தட்டூடு அற வேல்சயிலத் தெறியும்
நிட்டூர! நிராகுல! நிர்ப்பயனே 9

கார்மா மிசை காலன் வரின் கலபத்
தேர்மாமிசை வந்து எதிரப் படுவாய்;
தார்மார்ப! வலார் இதலாரி எனும்
சூர்மா மடியத் தொடு வேலவனே 10

கூகா என என்கிளை கூடி அழப்
போகாவகை மெய்ப்பொருள் பேசியவா!
நாகாசல! வேலவ! நாலுகவித்
தியாகா! சுரலோக சிகாமணியே 11

செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்
சும்மா இருசொல்அற என்றலுமே
அம்மாபொருள் ஒன்றும் அறிந்திலனே 12

முருகன் தனிவேல் முனி நம் குரு என்று
அருள்கொண்டு அறியார் அறியும் தரமோ?
உருவன்று அருவன்று உளதன்று இலதன்று
இருளன்று ஒளியன்று என நின்றதுவே 13

கைவாய் கதிர்வேல் முருகன் கழல்பெற்று
உய்வாய் மனனே! ஒழிவாய்; ஒழிவாய்;
மெய் வாய் விழி நாசியொடும் செவியாம்
ஐவாய் வழிசெல்லும் அலாவினையே 14

முருகன் குமரன் குகன் என்று மொழிந்து
உருகும் செயல்தந்து உணர்வென்று அருள்வாய்;
பொருபும் கவரும் புவியும் பரவும்
குரு புங்கவ! எண்குண பஞ்சரனே 15



கந்தர் அனுபூதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Apr 2010 - 14:43

பேராசை எனும் பிணியில் பிணிபட்டு
ஓரா வினையேன் உழலத் தகுமோ?
வீரா! முதுசூர் படவேல் எறியும்
சூரா! சுரலோக துரந்தரனே 16

யாம் ஓதிய கல்வியும் எம்அறிவும்
தாமேபெற வேலவர் தந்ததனால்
பூமேல் மயல்போய் அறம் மெய்ப்புணர்வீர்!
நாமேல் நடவீர் நடவீர் இனியே 17

உதியா மரியா உணரா மறவா
விதிமால் அறியா விமலன் புதல்வா!
அதிகா! அனகா! அபயா! அமரா
விதிகாவல! சூர பயங்கரனே 18

வடிவும் தனமும் மனமும் குணமும்
குடியும் குலமும் குடி போகியவா;
அடியந்தமிலா அயில்வேல் அரசே!
மிடியென்று ஒருபாவி வெளிப்படினே 19

அரிதாகிய மெய்ப்பொருளுக்கு அடியேன்
உரிதா உபதேசம் உணர்த்தியவா;
விரிதாரண! விக்ரம! வேள்! இமையோர்
புரிதாரக! நாக புரந்தரனே 20

கருதா மறவா நெறிகாண எனக்கு
இருதாள் வனசந்தர என்று இசைவாய்;
வரதா! முருகா! மயில்வாகனனே!
விரதா! சுரசூர! விபாடணனே 21

காளைக் குமரேசன் எனக் கருதித்
தாளைப் பணியத் தவம் எய்தியவா;
பாளைக் குழல் வள்ளி பதம்பணியும்
வேளைச் சரபூபதி மேருவையே 22

அடியைக் குறியாது அறியாமையினால்
முடியக் கெடவோ? முறையோ முறையோ?
வடிவிக்ரம வேல்மகிபா! குறமின்
கொடியைப் புணரும் குண பூதரனே 23

கூர்வேல் விழி மங்கையர் கொங்கையிலே
சேர்வேன் அருள் சேரவும் எண்ணுமதோ?
சூர்வேரொடு குன்று தொளைத்த நெடும்
போர்வேல! புரந்தர பூபதியே 24

மெய்யே என வெவ்வினை வாழ்வை உகந்து
ஐயோ! அடியேன் அலையத் தகுமோ?
கையோ அயிலோ கழலோ முழுதும்
செய்யோய்! மயிலேறிய சேவகனே! 25

ஆதாரம் இலேன் அருளைப் பெறவே
நீதான் ஒரு சற்றும் நினைந்திலையே;
வேதாகம! ஞான வினோத! மனோ
தீதா! சுரலோக சிகாமணியே 26

மின்னே நிகர்வாழ்வை விரும்பிய யான்
என்னே விதியின் பயன் இங்கு இதுவோ?
பொன்னே! மணியே! பொருளே! அருளே!
மன்னே! மயிலேறிய வானவனே 27

ஆனா அமுதே! அயில்வேல் அரசே!
ஞானாகரனே! நவிலத் தகுமோ?
யானாகிய என்னை விழுங்கி வெறும்
தானாய் நிலைநின்றது தற்பரமே 28

இல்லேயெனும் மாயையில் இட்டனை; நீ
பொல்லேன் அறியாமை பொறுத்திலையோ;
மல்லேபுரி பன்னிரு வாகுவில் என்
சொல்லே புனையும் சுடர் வேலவனே 29

செவ்வான் உருவில் திகழ் வேலவன் அன்று
ஒவ்வாதது என உணர்வித்ததுதான்
அவ்வாறு அறிவார் அறிகின்றதலால்
எவ்வாறு ஒருவர்க்கு இசைவிப்பதுவே 30



கந்தர் அனுபூதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed 21 Apr 2010 - 14:44

பாழ்வாழ்வு எனும் இப்படு மாயையிலே
வீழ்வாய் என என்னை விதித்தனையே;
தாழ்வானவை செய்தன தாம் உளவோ?
வாழ்வாய் இனி நீ; மயில் வாகனனே 31

கலையே பதறிக் கதறித் தலையூடு
அலையே படுமாறு அதுவாய் விடவோ?
கொலையே புரி வேடர்குலப் பிடி தோய்
மலையே! மலை கூறிடு வாகையனே 32

சிந்தாகுல இல்லொடு செல்வம் எனும்
விந்தாடவி என்று விடப் பெறுவேன்;
மந்தாகினி தந்த வரோதயனே!
கந்தா! முருகா! கருணாகரனே! 33

சிங்கார மடந்தையர் தீநெறிபோய்
மங்காமல் எனக்கு வரம் தருவாய்;
சங்கராம சிகாவல! ஷண்முகனே!
கங்காநதி பால! க்ருபாகரனே 34

விதிகாணும் உடம்பை விடா வினையேன்
கதிகாண மலர்க்கழல் என்று அருள்வாய்;
மதிவாள் நுதல் வள்ளியை அல்லது பின்
துதியா விரதா! சுரபூபதியே 35

நாதா! குமரா! நம என்று அரனார்
ஓதாய் என ஓதியது எப்பொருள்தான்?
வேதா முதல் விண்ணவர் சூடு மலர்ப்
பாதா! குறமின் பதசேகரனே 36

கிரிவாய் விடுவிக்ரம வேல் இறையோன்
பரிவாரம் எனும் பதம் மேவலையே
புரிவாய்; மனனே! பொறையாம் அறிவால்
அரிவாய் அடியோடும் அகந்தையையே 37

ஆதாளியை ஒன்று அறியேனை அறத்
தீதாளியை ஆண்டது செப்புமதோ?
கூதாள! கிராதகுலிக்கு இறைவா!
வேதாளகணம் புகழ் வேலவனே 38

மாவேழ் சனனம் கெட மாயை விடா
மூவேடணை என்று முடிந்திடுமோ?
கோவே! குற மின்கொடி தோள் புணரும்
தேவே! சிவசங்கர தேசிகனே 39

வினையோட விடும் கதிர்வேல் மறவேன்
மனையோடு தியங்கி மயங்கிடவோ?
சுனையோடு அருவித் துறையோடு பசுந்
தினையோடு இதனோடு திரிந்தவனே 40

சாகாது எனையே சரணங்களிலே
காகா; நமனார் கலகம் செயுநாள்
வாகா! முருகா! மயில்வாகனனே!
யோகா! சிவஞானோப தேசிகனே 41

குறியைக் குறியாது குறித்தறியும்
நெறியைத் தனிவேலை நிகழ்த்திடலும்
செறிவற்று உலகோடு உரைசிந்தையும் அற்று
அறிவற்று அறியாமையும் அற்றதுவே 42

தூசா மணியும் துகிலும் புனைவாள்
நேசா! முருகா நினது அன்பு அருளால்
ஆசா நிகளம் துகள் ஆயினபின்
பேசா அனுபூதி பிறந்ததுவே 43

சாடும் தனிவேல் முருகன் சரணம்
சூடும்படி தந்தது சொல்லுமதோ?
வீடும் சுரர்மாமுடி வேதமும் வெங்
காடும் புனமும் கமழும் கழலே 44

கரவாகிய கல்வி உளார் கடைசென்று
இரவா வகை மெய்ப்பொருள் ஈகுவையோ?
குரவா! குமரா! குலிசாயுத! குஞ்
சரவா! சிவயோக! தயாபரனே 45

எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ;
சிந்தாகுலம் ஆனவை தீர்ந்து எனையாள்;
கந்தா! கதிர்வேலவனே! உமையாள்
மைந்தா! குமரா! மறை நாயகனே 46

ஆறாறையும் நீத்து அதன்மேல் நிலையைப்
பேறா அடியேன் பெறுமாறு உளதோ?
சீறா வருசூர் சிதைவித்து இமையோர்
கூறா உலகம் குளிர்வித்தவனே 47

அறிவொன்று அற நின்று அறிவார் அறிவில்
பிறிவொன்று அறநின்ற பிரானலையோ?
செறிவொன்று அறவந்து இருளே சிதைய
வெறிவென்று அவரோடு உறும் வேலவனே 48

தன்னம் தனிநின்று அதுதான் அறிய
இன்னம் ஒருவர்க்கு இசைவிப்பதுவோ?
மின்னும் கதிர்வேல் விகிர்தா! நினைவார்
கின்னம் களையும் கிருபை சூழ் சுடரே 49

மதிகெட்டு அறவாடி மயங்கி அறக்
கதிகெட்டு அவமே கெடவோ கடவேன்?
நதிபுத்திர! ஞானசுகாதிப! அத்
திதிபுத்திரர் வீறடு சேவகனே 50

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 51

கந்தர் அனுபூதி Secure10



கந்தர் அனுபூதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
dharshi
dharshi
பண்பாளர்

பதிவுகள் : 111
இணைந்தது : 01/04/2010
http://siththarkal.blogspot.com/

Postdharshi Wed 21 Apr 2010 - 19:41

இதை வாசிக்கும் போதே மனதில் அமைதிவருகிறது... நன்றி...

குருவாய் வருவாய் அருள்வாய் குகனே... நன்றி நன்றி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக