ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.


உறவுகளின் வலைப்பூக்கள்

Latest topics
» கேரளாவில் கறுப்பு பூஞ்சை என்ற புதிய வைரஸ்
by T.N.Balasubramanian Today at 9:49 pm

» கேரள முதல்வராக 2-வது முறையாக பினராயி விஜயன்
by T.N.Balasubramanian Today at 9:45 pm

» மும்பையில் காண மழை
by T.N.Balasubramanian Today at 9:38 pm

» இணையத்தை கலக்கும் நகைச்சுவை மீம்ஸ்
by T.N.Balasubramanian Today at 9:23 pm

» மேற்கு வங்க கவர்னராக, ராஜாஜி பணியாற்றிய காலம்..
by Dr.S.Soundarapandian Today at 9:16 pm

» 5ஜியால் கரோனா பரவுவதாக வதந்தி!
by Dr.S.Soundarapandian Today at 9:12 pm

» பெரிய சைஸ் கிளாக் வாங்கினது வசதியா இருக்கு!
by Dr.S.Soundarapandian Today at 9:11 pm

» 2 அமைச்சர்கள் திடீர் கைது- முதல்வர் மம்தா அதிர்ச்சி!
by Dr.S.Soundarapandian Today at 9:09 pm

» இது ‘கரம்’ மசால் தோசை சார்!
by Dr.S.Soundarapandian Today at 9:07 pm

» 350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
by மஹி Today at 8:17 pm

» திருக்கழுக்குன்றம்:-அருள்மிகு ஓம் ஸ்ரீ அபிராமி நாயகி உடனுறைஅருள்மிகு ஒம் ஸ்ரீ ருத்ரகோட்டீஸ்வரர் ஸ்தல வரலாறு.
by velang Today at 7:13 pm

» வேலன்:-மினிடூல் வீடியோ கன்வர்ட்டர்-Mini Tool Video Converter.
by velang Today at 6:32 pm

» மாதராய் பிறப்பதற்கு...(சிறுகதை)
by ayyasamy ram Today at 6:20 pm

» குறை சொல்ல வேண்டாம்! - ஆன்மிக கதை
by ayyasamy ram Today at 6:19 pm

» ஐந்தெழுத்து மந்திரமே நமசிவாய!
by ayyasamy ram Today at 6:18 pm

» சியர் கேர்ள்ஸூடன் படையெடுப்பு!
by ayyasamy ram Today at 6:17 pm

» டைமிங் ஜோக்ஸ்!
by ayyasamy ram Today at 6:16 pm

» பெரியார் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்ச்சி…
by T.N.Balasubramanian Today at 5:06 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by Sur@123 Today at 3:57 pm

» Book vendum
by Sur@123 Today at 3:36 pm

» என்னையும் கைது செய்யுங்கள்…!
by Dr.S.Soundarapandian Today at 3:23 pm

» நீராவி பிடிப்பதால் மூச்சுக்குழாய் பாதிக்குமா?
by Dr.S.Soundarapandian Today at 3:22 pm

» காங்கிரஸ் சார்பில் 30 லட்சம் முகக்கவசங்கள்
by Dr.S.Soundarapandian Today at 3:20 pm

» காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்
by Dr.S.Soundarapandian Today at 3:19 pm

» மின்நூல் வாசகர்களுக்கான ஒரு செயலி
by T.N.Balasubramanian Today at 3:11 pm

» சன் டிவி சார்பில் 10 கோடி ரூபாய்.. முதலமைச்சரிடம் வழங்கினார் கலாநிதிமாறன்…
by ayyasamy ram Today at 3:05 pm

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 2:32 pm

» கொரோனா தடுப்பு பணிக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூ.50 லட்சம் நிதியுதவி
by சக்தி18 Today at 1:23 pm

» இதுக்கு மேல ஒன்னும் சொல்றதுக்கில்ல
by சக்தி18 Today at 1:16 pm

» பிறந்த நாள் - சினிமா கலைஞர்கள்
by heezulia Today at 1:12 pm

» காதல் வாக்குறுதி – தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:56 pm

» டபுள் ஷாட் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:55 pm

» இணைந்த கைகள் - தடாலடி கதை
by ayyasamy ram Today at 12:54 pm

» இயக்குநர் அருண்ராஜா காமராஜின் மனைவி கொரோனாவால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:33 pm

» நடிகர் நிதிஷ் வீரா கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு
by ayyasamy ram Today at 12:21 pm

» நீண்ட நேரம் வேலை பார்ப்பதால் அதிகரிக்கும் மரணங்கள்... உலக சுகாதார அமைப்பு ஆய்வு
by ayyasamy ram Today at 12:16 pm

» நெல் அறுவடை எந்திரத்தை இயக்கும் 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:14 pm

» இன்றைய ராசிபலன்
by ayyasamy ram Today at 11:29 am

» ஆக்சிஜன் செறிவூக்கிக் கருவிகளை நன்கொடையாக வழங்கிய தவான்
by ayyasamy ram Today at 11:14 am

» சக்கரவர்த்தி கீரை மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Today at 7:51 am

» மூன்று கண் ரகசியம்!
by ayyasamy ram Today at 7:50 am

» நிம்மதி – ஆபிரகாம் லிங்கன்
by ayyasamy ram Today at 7:44 am

» முக்தாகலாபம்
by ayyasamy ram Today at 7:41 am

» ஸ்வாமி நம்மாழ்வார் – பக்தி பாடல்
by ayyasamy ram Today at 7:41 am

» நமது செயல் – கவிதை
by ayyasamy ram Today at 7:33 am

» கூழாங்கல் - கவிதை
by ayyasamy ram Today at 7:31 am

» கமல் கட்சியில் இருந்து விலகியவர்களை சாடிய சனம் ஷெட்டி
by சக்தி18 Yesterday at 11:42 pm

» புல் சாப்பிட்ட கல் நந்தி
by Dr.S.Soundarapandian Yesterday at 9:00 pm

» கரோனா – பாதிப்பு & பலி
by Dr.S.Soundarapandian Yesterday at 8:57 pm

» கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு
by Dr.S.Soundarapandian Yesterday at 8:46 pm

Admins Online

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Page 1 of 2 1, 2  Next

Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:44 pm

உயிரினங்கள் வாழ்வதற்கு சுவாசம் இன்றியமையாதது. மனிதன் ஒரு பல்கல விலங்கு. எனவே மனிதனின் கலச்சுவாசத்துக்கு ஒட்சிசனை வழங்கவும் கழிவு வாயுக்களை வெளியேற்றவும் சுவாசத்தொகுதி விருத்தியடைந்துள்ளது. மூக்கில் ஆரம்பித்து சுவாசப்பையில் முடிவடையும் சுவாசத்தொகுதியானது வசதிகருதி இரு பகுதிகளாக பிரித்துப் பார்க்கப்படுகிறது. மூக்குக் குழி, மூக்குக்குழி சார்ந்த குடையங்கள் , மூக்குத் தொண்டை ஆகியன சுவாச மேல் வழியாகவும் குரற்பெட்டி வாதனாளி மற்றும் சுவாசச் சிற்றறைகள் என்பன சுவாசப் பாதையின் கீழ்ப்பகுதியாகவம் பிரிக்கப்பட்டுள்ளன.

மூக்கும் மூக்குக் குழியும்

சுவாசத்தை பொறுத்தவரை சுவாச வளியை கடத்தும் ஆரம்பபாதையாக மூக்கும் மூக்குக் குழியும் காணப்படுகின்றன. தவிர உட்செல்லும் வளியின் தூசு துணிக்கைகளை அகற்றல் வளி வெப்பநிலையை உடல் வெப்பநிலைக்கு சீராக்கல் நீரேற்றம் செய்தல் போன்ற நடவடிக்கைகளும் இங்கே மேற்கொள்ளப்படும். இதற்காகவே மூக்கு விசேட அமைப்புகளையும் மூக்கு மயிரையும் சீதப் படையையும் கொண்டுள்ளது. இது தவிர மணத்தை உணர்வதற்கு மண நுகரிகளையும் மூக்கு கொண்டுள்ளது. அத்துடன் மூக்குடன் சம்மந்தப்பட்டு காணப்படும் குடையங்கள் (சைனஸ்) தலையோட்டின் பாரத்தை குறைப்பதுடன் ஒலிப்பரிவுச் செயற்பாட்டையும் மேற்கொள்ளும்.


Last edited by சபீர் on Sun Apr 18, 2010 6:51 pm; edited 1 time in total
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:45 pm

கவனிப்பு
நோயாளிகளுக்கு ஒட்சிசன் வழங்கப்படும்போது ஈரலிப்பான ஒட்சிசனை வழங்குவதற்காக ஒட்சிசன் நீரினுள் குமிழிக்க செய்யப்படும்.

அடிக்கடி சுவாச மேற்பாதையில் தொற்று ஏற்படுபவர்களுக்கு குடைய அழற்சியும் ஏற்படலாம். (சைனசைட்டிஸ்)

சுவாச மேற்பாதையில் தொற்றுடையவர்களுக்கு மணநுகர்ச்சியில் பாதிப்பு ஏற்படலாம்.
குரற்பெட்டி (லறிங்ஸ்)

தொண்டை முடியும் இடத்தில் குரற்பெட்டி தொடங்குகிறது. தொண்டையானது சுவாசப் பாதைக்கும் உணவுக் கால்வாய்க்கும் பொதுவான இடமாக இருப்பதால் உணவுப் பொருட்கள் குரற்பெட்டியுள் போகாமல் தடுக்க மூச்சுக் குழல்வாய் மூடி காணப்படும். குரல் பெட்டியானது கசியிரையங்களால் சூழப்பட்டது. குரற்பெட்டியன் உள்ளே குரல் நாண்கள் காணப்படும். இந்தக் குரல் நாண்கள் அதிர்வடைவதால் குரல் ஆரம்பிக்கப்படுகிறது.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:46 pm

குறிப்பு
குரல் பெட்டியழற்சி (லறிஞ்சைட்டிஸ்) ஏற்பட்டவரது குரல் இயல்பு நிலையிலிருந்து மாறுபட்டு காணப்படும்.

வாதனாளித்தொகுதி.
குரற்பெடடியின் கீழே வாதனாளி தொடங்குகிறது. வாதனாளியானது ஆங்கில எழுத்தான சீ வடிவ கசியிழையங்களால் பாதுகாக்கப்பட்டுள்ளது. வாதனாளியின் உள்ளே சீத அகவணியில் சீதச்சுரப்பு கலங்களும் பிசிர்களும் காணப்படும். வாதனாளியானது நெஞ்சறையில் ஐந்தாம் முள்ளந்தண்டின் மேல் மட்டத்தில் வலது இடது பிரிவாகப் பிரியும். பின்னர் மீண்டும் பல பிரிவுகளாக பிரிந்து ஒரு மரக்கிளையமைப்பை உருவாக்கும். இறுதியாக சுவாசச் சிற்றறைகளில் புன்வாதனாளியாக நிறைவடையும்.

புரைக்கடித்தல்
தவறுதலாக பாரிய துணிக்கைகள் அல்லது உணவுப் பொருட்கள் வாதனாளியில் புகும்போது பிரிரடித்தல் செயற்பாடடுடன் கூடிய இருமல் மூலம் அத்துணிக்ககைள் வெளியேற்றப்படும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:46 pm

குறிப்பு
1. புரைக்கடித்தல் என்பது ஒரு பாதுகாப்புச் செயன்முறை. இப்பொறிமுறை பாதிக்கப்பட்டுள்ளபோது அல்லது சரியாக தொழிற்படாதபோது பிறபொருட்கள் உள்ளிழுக்கப்பட்டு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும். இது ஆங்கிலத்தில் அஸ்பிரேசன் நியுமோனியா எனப்படும்.

2.மயக்க மருந்து ஏற்றப்பட்டவர்களில் புரைக்கடித்தல் செயற்பாடு மற்றும் மூச்சுக் குழல்வாய் மூடியின் செயற்பாடு பாதிக்கப்பட்டிருக்கும்.எனவே இவர்களுக்கு வாதனாளி உள்ளே குழாயை செலுத்தி (என்டோ டிரக்கியல் ரியுப்) பிறபொருட்கள் உட்செல்லல் தடுக்கப்படும்.

3. வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் மதுபோதையில் உள்ளவர்களுக்கு உள்ளிழுத்தல் சுவாச அழற்சி ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகம்.
சுவாசப்பைகள்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:47 pm

சுவாசப்பைகள்


மனிதனின் நெஞ்சறைக்கூட்டில் வலது இடது என இரண்டு சுவாசச் சோணைகள் காணப்படுகின்றன. இவை சுவாசச் சுற்றுவிரியால் சூழப்பட்டிருக்கும். வலது சோணை மூன்று சிறுசோணைகளாகவும் இடது சோணை இரண்டு சிறு சோணைகளாகவும் பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றினிடையே சுற்றுவிரி செல்வதால் பிளவுபோன்ற அமைப்பால் சிறு சோணைகள் வேறுபடுத்தப்பட்டிருக்கும். தவிர இந்த சிறு சோணைகளுக்கான வாதனாளி மற்றும் குருதி விநியோகம் தனித்தனியே இருக்கும். இவ்வாறு வலது சுவாசச் சோணையில் மேற்சோணை நடுச் சோணை கீழ்ச்சோணை என மூன்று சோணைகளும் இடது பக்கத்தில் மேற்சோணை கீழ்ச்சோணை என இரண்டு சோணைகளும் காணப்படும்.

இவ்வாறு சோணைகள் பிரிக்கப்பட்டிருப்பதால் சத்திர சிகிச்சையின் போது பாதிக்கப்பட்ட சோணையை அகற்றுதல் இலகுவானது.

சுவாசச் சிற்றறையில் இருவகையான நுரையீரல் கல்ங்கள் காணப்படும். இதில் முதலாவது வகை சிற்றறையின் சுவரை உருவாக்கும். இரண்டாவது வகை நுரையீரல் கலங்கள் சுவாச மேற்பரப்பு சுரப்பை சுரக்கும். ( சேபக்ரண்ட்)
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:47 pm

குறிப்பு
குறைமாதத்தில் பிறக்கும் பிள்ளைகளிலும் நீரிழிவு நோயுள்ள தாய்மாருக்கு பிறக்கும் பிள்ளைகளிலும் நுரையீரலில் மேற்குறித்த சுரப்பு போதியளவில் காணப்படுவதில்லை. இதனால் இக்குழந்தைகள் மேற்பரப்பிழுவிசையை தாங்காமல் மூச்சுத்திணறலுக்கு உட்படலாம். இதனைத் தடுக்க சுவாச மேற்பரப்பு சுரப்பு செயற்கையாக வழங்கப்படும்.

சுவாசம்.
சுவாசமானது உட்சுவாசம் வெளிச்சுவாசம் என இருவகைப்படும். உட்சுவாசம் என்ப்படுவது நெஞ்சறை விரிவு காரணமாக ஏற்படும் எதிர் அமுக்கத்தினால் வளி உள்ளிழுக்கப்படுதலாகும். இதற்காக பளுவிடைத் தசைகளும் பிரிமென் தகடும் சுருங்குகின்றன. இதற்கு ஏ ரி பி சக்தி பாவிக்கப்படும். எனவே உயிர்ப்பான செயன்முறை.

வெளிச்சுவாசம் என்பது உயிர்ப்பற்ற செயன்முறை. இங்கே ஏ ரி பி சக்தி பாவிக்கப்படுவதில்லை. விரிந்த நெஞ்சறை மீண்டும் சுருங்கும்போது அதிக அமுக்கம் காரணமாக வளி வெளியேறும்.

இவ்வாறு வளி உள்ளெடுக்கப்பட்டு வெளியேறும்போது ஒட்சிசன் உள்ளெடுக்கப்பட்டு காபனீரொட்சைட்டு போன்ற கழிவு வாயுக்கள் வெளியேற்றப்படும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:49 pm

சுவாசத்தொகுதி குணங்குறிகள்

இருமல்

இருமல் என்பது எமது சுவாசத்தொகுதியின் ஒரு பாதுகாப்புச் செயற்பாடாகும். தூசு துணிக்கைகள் உள்ளே புகும் போது அவற்றை வெளியேற்ற அதிக வேகத்துடன் வளி விசிறப்பட இது உதவுகிறது. சாதாரணமாக வாதனாளியின் அகவணி தூண்டப்படும் போது அல்லது அருட்டப்படும்போது இது நிகழுகிறது. ஆழமான உட்சுவாசத்தை தொடர்ந்து மூடிய மூச்சுக்குழல்வாய் மூடி மூடப்பட்டு வெளிச்சுவாசத்தில் சடுதியாக வளி வெளியேற்றப்படும்போது அது இருமலாகிறது.

இருமல் சாதாரண வைரஸ் தொற்றின் பின்னர் வரலாம் அல்லது பக்ரீரியா தொற்றுடன் வரலாம். நீண்ட நாட்கள் இருமல் தொடர்ந்து இருப்பின் அது கவனிக்கப்படவேண்டும்.

இருமலுடன் பின்வுரும் குணங்குறிகள் இருந்தால் உடனடியாக வைத்தியரை அணுகவும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:50 pm

1. கடும் காய்ச்சல்.
2. மஞ்சள் நிறமான சளி போதல்
3. இருமலுடன் இரத்தம் போதல்

இருமலுடன் இரத்தம் போதல் என்பது கொஞ்சம் மோசமான நிலையாகும். இது சிலளைகளில் கடுமையான தொற்று காரணமாக அல்லது காச நோய் காரணமாக இருக்கலாம். எனவே வைத்தியரை அணுகுதல் அவசியமானது.

நெஞ்சுவலி

சுவாசிக்கும்போது அல்லது இருமும்போது நெஞ்சு வலி ஏற்கடலாம். மொட்டையான நோ என்பது சிலவேளைகளில் சுற்றுவிரியிலிருந்து வரலாம். ஆனால் நெஞ்சு வலி ஏற்படும்போது முதலில் இருதய நோய் இல்லையென்பதை முதலில் உறுதிப்படுத்த வேண்டும்.

மூச்சிழுத்தல் அல்லது மூச்சுத்திணறல்
அஸமா போன்ற நோய் உள்ளவர்களுக்கு அல்லது நீண்டகால மூச்சடைப்பு நோய் உள்ளவர்களுக்கு சடுதியாக மூச்சுத்திணறல் ஏற்படலாம். தவிர இருதய செயற்பாடு குன்றும் போதும் மூச்சிரைப்பு ஏற்படலாம்

சிறுவர்கள் சடுதியாக பிறபொருட்களை சுவாசப் பாதையில் இடும்போதும் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இது உடனடியாக கவனிக்கப்பட்டு பிறபொருள் அகற்றப்பட வேண்டும்.

அஸமா போன்ற நோயுள்ளவர்களின் வாதனாளி தொகுதியில் உள்ள அகவணி பல்வேறு காரணங்களால் வீக்கமடைவதால் வளி வெளியேறல் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். இவர்களுக்கு புகை முறையில் உடனடியாக மருந்து வழங்கப்பட வேண்டும். தவிர இவர்களுக்கு ஒட்சிசன் வழ்ங்கப்படவேண்டிய தேவையும் ஏற்படலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:51 pm

சுவாச சுற்றுவிரியில் நீர் தேங்கல்

பல்வேறு நோய் நிலைமைகளில் சுவாச சுற்றுவிரியில் நீர்தேங்குகிறது. கடுமையான நுரையீரல் அழற்சி. கசநோய் மற்றும் சில புற்றுநோய் பரவல்களில் இவ்வாறு நீர் தேங்கும் தன்மை ஏற்படுகிறது.

இவ்வாறு தேங்கும் நீர் அதிகளவில் இருக்கும்போது ஐ சீ குழாய் எனப்படும் குழாய் பளுவிடைவெளியினூடாக செலுத்தப்பட்டு இந்த நீர் அகற்றப்படும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:52 pm

சுவாசத்தொகுதி பரிசோதனைகள்

எக்ஸ் கதிர்ப்படம்
எக்ஸ் கதிர்களை செலுத்தி அதன் மூலம் பெறப்படும் படமே எக்ஸ் கதிர்ப்படம் எனப்படும். ரொஞ்சன் என்பவரால் கண்டறியப்பட்டதால் ரொஞ்சன் கதிர் என்றும் சிலவேளைகளில் இது சொல்லப்படும். மனித உடலினூடாக எக்ஸ் கதிர்கள் ஊடுபுகும் தன்மையை வைத்து எக்ஸ் கதிர்ப்படம் அமையும். என்பு போன்ற அடர்த்தியான பகுதிகள் எக்ஸ் கதிர்கள் ஊடு புகுவதை குறைக்கும். ஆனால் வளி நன்கு எக்ஸ் கதிர்களை நன்கு ஊடு போக விடும். எனவே எக்ஸ் கதிர்ப படத்தில் எலும்பு வெள்ளையாகவும் நுரையிரல் கறுப்பாகவும் தெரியும். அதே போல குருதியை கொண்டிருக்கும் இதயமும் வெள்ளை நிறமாக தெரியும். இடைப்பட்ட அளவில் ஊடுபுகவிடும் பகுதிகள் அவை ஊடு புகவிடும் தன்மைக்கு ஏற்றவாறு தெரியும்.

எக்ஸ் கதிர்ப்படம் தலையோட்டில் உடைய குடையங்களை (சைனஸ்) பார்க்க எடுக்கப்படும் போது சைனஸ் வியூ எனப்படும். இது குடைய அழற்சி உள்ளவர்களில் பயன்படும்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:53 pm

நெஞ்சறைக் கூட்டில் எக்ஸ் கதிர்களை பாவித்து நெஞ்சறை எக்ஸ் படங்கள் எடுக்கப்படும். இவை மூனறு வகையாக எடுக்கப்படலாம்.
1.கதிர்களை பின்புறமிருந்து செலுத்தி படத்தை முன்புறமாக எடுத்தல்.
2. முன்புறமாக கதிர்களை செலுத்தி முன்புறமாக படம் எடுத்தல்
3. பக்கவாட்டில் கதிர் செலுத்தி படம் பிடித்தல்.

நுரையீரல் அழற்சியால் சளி தேங்கியிருக்கும்போது (லோபர் நியுமோனியா) அந்தச் சோணை வெள்ளையாக தெரியும். தவிர வாதனாளி நுரையீரல் அழற்சி (புரொங்கியல் நியுமோனியா) இருந்தால் வாதனாளித்தொகுதி வழமையை விட வெள்ளையாக தெரியும். சுவாசச் சுற்றுவிரியில் நீர் தேங்கும் போது அது புளுரல் எபியூசன் எனப்படும். இதனை அறிய எக்ஸ் கதிர்ப்படம் எடுக்கும்போது நோயாளியை நின்ற நிலையில் வைத்து படம் எடுப்பது நன்று. அப்போது சுவாசச் சுற்றுவிரியி்ல் காணப்படும் திரவம் புவியீர்ப்பு காரணமாக நுரையீரல் கீழ் மூலைகளில் தேங்கி வெள்ளையாக தெரியும்.

திடீரென சுவாசச் சுற்றுவிரியி்ல் காற்று உள்ளே புகுந்தால் நுரையீரல் குலைந்து விடும். இது லங்ஸ் கொலாப்ஸ் என ஆங்கிலத்தில் சொல்லப்படும. இதன்போது நுரையீரல் இருக்கவேண்டிய பகுதி தனியே கறுப்பாக காணப்படும். சிலவேளைகளில் ஒரு புறத்தில் குருதி அல்லது வளி தேங்குவதால் அமுக்கம் அதிகரித்து நுரையீரல் மற்றப்பக்கம் தள்ளப் பட்டிருக்கும். இதுவும் எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம். காச நோய் உள்ளவர்களில் நுரையீரலில் குழிகள் காணப்படலாம். முற்றிய கசரோயில் அல்லது சிலவகையான புற்றுநோய்களில் நுரையீரல்களில் படிவுகள் ஏற்படலாம். இவையும் நெஞ்சறை எக்ஸ் கதிர்ப் படம் மூலம் அறியப்படலாம். நுரையீரல் திசுக்களிடையே திரவம் தேங்குதல் பள்மனெறி எடீமா எனப்படும். இதுவும் நெஞ்சறை எக்ஸ் படம் மூலம் அறியப்படலாம்.
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:54 pm

சுவாசத்தொகுதி பரிசோதனைகள்

என்டஸ்கோப்
என்டஸ்கோப் என்பது ஒரு குழாயினூடாக உள் அங்கங்களை நேரடியாக பார்ப்பதாகும். ஆரம்ப காலத்தில் சாதாரண உலோக குழாய்களை இதற்காக பயன்படுத்தினார்கள். இவை உலோகமாக இருந்ததால் வளைந்து நெளிந்து செல்லமுடியாதனவாக இருந்தன. ஆனால் தற்போது ஒளியிழைகள் மற்றும் புகைப்படக் கருவித் தொழினுட்பம் இணைந்து உருவாக்கப்பட்ட என்டஸ்கோப்கள் வளையக் கூடியவை. அதனால் உடலில் அதிக தூரத்திற்கு உள்ளே சென்று பார்க்கக் கூடிய வசதியுடன் கையாள இலகுவாகவும் உள்ளன். என்டஸ்கோப்புகள் களம் வயிறு சிறுகுடல் பெருற்குடல் கருப்பை வாதனாளித் தொகுதி போன்ற பல்வேறு பகுதிகளை பார்க்க உதவுகின்றன. வாதனதளியை பார்வையிட பயன்படும் எண்டஸ்கோப் புரோங்கஸ்கோப் எனப்படும். சாதைரணமாக ஒவ்வொரு புரொங்கஸ்கோப்பிலும் சிறியபுகைப்படக்கருவி ஒளிமூலம் மற்றும் திசுக்களை பெறுவதறகான அமைப்பு ஆகியன காணப்படும். இதனால் வாதனாளியை நேரடியாக பார்வையிட்டு சந்தேகத்திற்கு இடமான திசுக்களையும் ஆய்விற்காக பெறமுடியும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:55 pm

சுவாச தொழிற்பாட்டுப் பரிசோதனை
சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம் எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.

ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த் தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:58 pm

சுவாசத்தொகுதி பரிசோதனைகள்

சுவாச தொழிற்பாடு

சுவாச தொழிற்பாட்டை அறிய உதவும் சோதனை ஸ்பைரோமெட்றி எனப்படும். இது சுவாசம் நடைபெறும் பல்வேறு நிலைகளில் வெளியேறும் அல்லது உள்ளெடுக்கப்படும் வளியின் கனவளவை அளவிட்டு வரைபாக்கப்படும் பரிசோதனையாகும். இப்பரிசோதனை செய்வதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு பெரிதும் அவசியமானது. இதன் மூலம் சுவாச கனவளவு மூச்செடுத்தல் அளவு போன்ற பல்வேறு தகவல்களைப் பெறமுடியும். ஆனால் நோயாளியின் ஒத்துழைப்பு கிடைக்காத பட்சத்தில் பரிசோதனையில் வழு ஏற்படும் வாய்ப்புகள் மிக அதிகம்.எனவே மிவும் இன்றியமையாத சந்தர்ப்பங்களில் மட்டும் நோயாளியின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும் பட்சத்தில் இந்த பரிசோதனை செய்யப்படும்.

ஆனால் முதலாவது செக்கனில் மூச்சு வெளியே விடப்படும் உச்ச அளவை அறியும் கருவியான உச்ச பாய்வு மானி ( பீக் புளோ மீட்டர்) சாதாரணமாக பயன்படும் முறையாகும். முக்கியமாக அஸ்மா போன்ற நோயாளிகளில் அவர்களின் நோய்த்தீவிரத்தை தீர்மானிக்க இது பயன்படுகிறது
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by சபீர் Sun Apr 18, 2010 6:59 pm

நுரையீரல் சுற்றோட்டம்

நுரையீரலுக்கு நுரையீரல் நாடிகளாலும் வாதனாளி நாடிகளாலும் இரத்தம் கிடைக்கிறது. இதில் பெரும்பாலான குருதி நுரையீரல் நாடிகளிலிருந்து பெறப்படுகிறது. இதில் காண்ப்படும் ஒட்சிசன் குறைந்த காபனீரொட்சைட்டு கூடிய குருதியானது நுரையீரல் சிற்றறைகளில் ஒட்சிசன் ஏற்றப்பட்டு காபனீரொட்சைட்டு அகற்றப்பட்டு சுத்திகரிக்கப்படும். இவ்வாறு சுத்திகரிக்கப்பட்ட குருதி நுரையீரல் நாளங்கள் மூலம் இதயத்தை அடையும்
இந்த நுரையீரல் சுற்றோட்டத்தை அறிய சுற்றோட்ட ஸ்கான் பயன்படும்.


நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை

நுரையீரலில் வாயுப் பரிமாற வினைத்திறன் அதிகமாக இருக்கவேண்டுமானால் நுரையீரலக்கான காற்றோட்டமும் நுரையீரல் சிற்றறைகளில் குருதிச் சுற்றோட்டமும் சரியான விகிதத்தில் அமையவேண்டும். இதனை அளவிட நுரையீரல் காற்றோட்ட சுற்றோட்ட பரிசோதனை பயன்படும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
மதிப்பீடுகள் : 138

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம் Empty Re: சுவாசத்தொகுதி பற்றிய முழு விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum