புதிய பதிவுகள்
» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» கருத்துப்படம் 19/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:44 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 7:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:33 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 10:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Jun 18, 2024 10:07 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:47 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Jun 18, 2024 9:36 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 9:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 9:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Jun 18, 2024 8:19 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Jun 18, 2024 7:13 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:03 pm

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:00 pm

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:57 pm

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:49 pm

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 4:48 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 1:23 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Jun 18, 2024 1:00 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:53 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Jun 18, 2024 12:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:21 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Tue Jun 18, 2024 12:04 pm

» திருப்பதி பெருமாளுக்கு கறிவேப்பிலையும் கனகாம்பரமும் ஆகாது ஏன்...?
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:46 am

» ஓவியத்தில் விந்தை --மாறியது புகைப்படமாக
by T.N.Balasubramanian Mon Jun 17, 2024 6:30 pm

» புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண்…
by Dr.S.Soundarapandian Mon Jun 17, 2024 2:28 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
53 Posts - 42%
heezulia
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
32 Posts - 25%
Dr.S.Soundarapandian
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
28 Posts - 22%
T.N.Balasubramanian
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
6 Posts - 5%
ayyamperumal
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
304 Posts - 50%
heezulia
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
179 Posts - 30%
Dr.S.Soundarapandian
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
58 Posts - 10%
T.N.Balasubramanian
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
21 Posts - 3%
prajai
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஆண்டாள் திருப்பாவை Poll_c10ஆண்டாள் திருப்பாவை Poll_m10ஆண்டாள் திருப்பாவை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆண்டாள் திருப்பாவை


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:39 am

அன்னவயற்புதுவையாண்டாளர ங்கற்குப்
பன்னுதிருப்பாவைப்பல் பதியம்- இன்னிசையால்
பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை பூமாலை
சூடிக்கொடுத்தாளைச் சொல்லு


சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே தொல்பாவை
பாடியருளவல்ல பல்வளையாய்- நாடி நீ
வேங்கடவற்கென்னவிதியென்ற விம்மாற்றம்
நாம்கடவா வண்ணமே நல்கு

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:39 am

மார்கழித்திங்கள் மதிநிறைந்த நன்னாளால்,
நீராடப்போதுவீர், போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வ சிறுமீர்காள்!
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏர் ஆர்ந்தகண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச்செங்கண், கதிர்மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோரெம்பாவாய்


"அழகிய ஆபரணங்களை அணிந்த சிறுபெண்களே! செல்வம் மிகுந்த ஆயர்பாடியில் தொண்டுசெய்யும் செல்வத்தையும் கன்னிப்பருவத்தையும் உடையவர்களே, மாதங்களில் சிறந்த மார்கழி மாதத்தில், பௌர்ணமி நன்னாளில், கூர்மையான வேலையுடையவனும் பகைவர்க்கு கொடுமை செய்பவனும் ஆகிய நந்தகோபனுடைய குமாரனும், அழகு நிறைந்த கண்களையுமுடைய யசோதைக்கு இளம் சிங்கக்குட்டி போன்றவனும், கரிய மேகம் போன்ற மேனியையும், செந்தாமரை போன்ற கண்களையும், சூரியனைப்போல பிரகாசமாயும் நிலவைப்போல குளிர்ந்த முகத்தையுமுடைய நாராயணன், நாம் விரும்பிய வரங்களைத்தந்து அருள் புரிவான். எனவே, இந்த நோன்பில் கலந்து கொண்டு நீராட விரும்புகின்றவர்கள், வாருங்கள்"

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:39 am

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம், பாலுண்ணோம், நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம், மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதனச் செய்யோம், தீக்குறளை சென்றோதோம்;
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரரெம்பாவாய்


"இப்பூமியில் வாழ்பவர்களே, திருப்பாற்கடலுள் அரிதுயில் செய்கின்ற பரமனின் திருவடிகளை அன்புடன்பாடி, நெய் உண்ணாது, பால் பருகாது, விடியற்காலை நீராடி, கண்களுக்கு மை இடாமல், தலையில் பூ சூடாமல், செய்யக்கூடாதவற்றைச்செய்யாமல், பொய் பேசாது, பெரியோர்களுக்கும், ஏழைகளுக்கும் தம்மால் இயன்ற அளவு வழங்கி, நாம் உய்யும் வகையை நாடி, மகிழ்ந்து, நாமும் நம் நோன்புக்கு மேற்கொள்ளும் செயல்களைக்கேளீர்!"

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:40 am

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்,
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து,
ஓங்கு பெருஞ்செல்நெல் ஊடுகயல் உகள,
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப,
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக்குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோரெம்பாவாய்


"வாமனாவதாரத்தில் மஹாபலி மூன்றடி மண்ணை தாரை வார்த்துக்கொடுத்தவுடன், ஆகாயம் அளவு வளர்ந்து, மூன்று உலகங்களையும் தன் திருப்பாதங்களால் அளந்த புருஷோத்தமனுடைய நாமத்தைப்போற்றி, நாங்கள் நம் பாவை நோன்புக்கு உரியவர்களாக, ஒரு குறிக்கோளை முன்னிட்டு நீராடினால், நாடு முழுவதும் தீங்கினால் நலிவுராமல் மும்மாரி மழை பெய்திடும். அதனால் செழித்து வளர்ந்த பயிர்களுக்கு நடுவே கெண்டை மீன்கள் துள்ளும். அங்குள்ள குவளை மலர்களில் புள்ளிகள் உள்ள வண்டுகள் உறங்கும். பசுக்கள் பாலை சிறிதளவும் தேக்கிக்கொள்ளாமல் குடம் நிறைய சுரக்கும். இங்கனம், நீங்காத செல்வம் நிறைந்து காணப்பெறும்."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:40 am

ஆழிமழைக்கண்ணா! ஒன்றும் நீ கைகரவேல்
ஆழியுள்புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கருத்து
பாழியந்தோளுடை பத்பநாபன் கையில்
ஆழிபோல்மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கமுழைத்த சரமழைபோல்
வாழஉலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழிநீராட மகிழ்ந்தேலோரெம்பாவாய்

"மழை பொழிவதற்கு காரணக்கடவுளான கண்ணா! உன் மழையாகிய குடையில் சிறிதும் தேக்கி வைத்துக்கொள்ளாதே! கடலில் புகுந்து நீரை முகந்துகொண்டு, கம்பீர முழக்கமிட்டு, ஆகாயம் முழுதும் பரவி, திருமாலின் கருமேனி போன்று நிறம்பெற்று, மூங்கில் போன்ற அழகிய தோள்களையும், திருமாலின் வலக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சுரதர்சன சக்கரம் போல் பிரகாச ஒளி வீசிக்கொண்டு, அவனது இடக்கரத்தில் ஏந்திக்கொண்டுள்ள சங்கின் சப்தம் போல் இடி இடித்து முழங்கி, அப்பரமன் கையிலுள்ள சார்ங்கம் என்னும் வில்லால் எய்தப்பட்ட அம்பு மழைபோல், உலகமக்கள் வாழும்படியாகவும் நாங்களும் மகிழ்ந்து மார்கழி நீராடவும், சரமாரியாக மழை பொழிய வேண்டுகிறோம்."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:40 am

மாயனை மன்னுவட மதுரை மைந்தனை
தூயப் பெருநீர் யமுனைத்துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித்தொழுது,
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்,
தீயினில் தூசாகும் செப்பேலோரெம்பாவாய்

"மாயனும் தெய்வத்தன்மை பொருந்திய வட மதுரையில் உதித்தவனும், சுத்தமான நீர் நிரம்பிய யமுனைக்கரையில் விளங்குபவனும், ஆயர் குலத்தில் தோன்றிய அழகிய விளக்கு போன்றவனும், தேவகியை பெருமைப்படுத்தியும், யசோதைக்கு சிறு மணிக்கயிற்றால் கட்டுண்ட வயிற்றைக் காட்டி சந்தோஷப்படுத்தியவனுமான கண்ணனை, உள்ளும் புறமும் பரிசுத்தமாய் வந்து, வாசனை மிக்க மலர்களால் அர்ச்சனை செய்து, உடலால் வணங்கி, வாயினால் பாடி, மனத்தினால் சிந்தித்தால், முற்பிறவிப்பாவங்களும், அறியாமல் வருகின்ற பாவங்களும், நெருப்பில் விழுந்த பஞ்சு போல் அழிந்து போகும். எனவே, அவன் திருநாமங்களை சதா ஓதிக்கொண்டிருத்தல் வேண்டும்."

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:41 am

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச்சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக்கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோரெம்பாவாய்

"உறங்கும் பெண்ணே! பறவைக் கூட்டங்கள் எழுப்பும் சப்தத்தை கேட்டாயோ? கருடனை வாஹனமாகக்கொண்ட விஷ்ணுவின் ஆலயத்தில் திருப்பள்ளியெழுச்சிக்கு அனைவரையும் அழைக்கும் சங்கின் பெரிய சப்தத்தை நீ கேட்கவில்லையோ? இளம் பெண்ணே! எழுந்திருப்பாயாக. பூதனா என்னும் அரக்கி, தாய் உருவம் கொண்டு, தனது முலைகளில் நஞ்சு தடவிக்கொண்டு, கண்ணனுக்குப் பால் ஊட்டுகையில், அதை அறிந்த கண்ணன், பாலையும் அவள் அளித்த விஷத்தையும் உண்டு, அந்த அரக்கியின் உயிரையும் குடித்தான். பின்னர், வஞ்சனையுடன் வண்டி உருவில் வந்து கண்ணன் மேல் சாய்ந்து கொல்ல முயன்ற சகடாகரன் என்னும் அரக்கனை, தன் சிறு கால்களால் உதைத்து, அவ்வண்டியைக்கவிழ்த்து, அவ்வசுரனைக்கொன்றவனும், திருப்பாற்கடலில் பாம்பின் மீது சயனம் கொண்டிருக்கும் விஷ்ணுவை முனிவர்களும் யோகிகளும் தங்கள் உள்ளத்தில் அவனை நினைத்துக்கொண்டு, 'ஹரி, ஹரி' என்று எழுப்பும் பேரொலி, எங்கள் உள்ளத்தில் புகுந்து, குளிர்ந்துள்ளது. அதனைக்கேட்க, நீயும் எழுந்திராய்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:41 am

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப்பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து
வாசநறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசைப்படுத்த தயிர்அரவம் கேட்டிலையோ!
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ!
தேசமுடையாய்! திறவேலோரெம்பாவாய்

"கீசு கீசு என்று, ஆனைச்சாத்தன் பறவைகள் எழுப்பும் பேரொலி உனக்கு கேட்கவில்லையா, பேதைப்பெண்ணே! வாசனை வீசும் கூந்தலையுடைய இடைச்சிமார்கள், தங்கள் தாலிகள் தள தள என்று ஒலிக்க, மத்தினால் கைகளை மாற்றி மாற்றி தயிர் கடையும் சப்தத்தை கேட்டிலையோ? நம் பெண்கள் கூட்டத்துக்கு தலைமையானவளே! நாராயணனின் திரு அவதாரமான (கேசவன் என்னும்) கண்ணன் திருப்புகழை நாங்கள் பாடிக்கொண்டிருக்க, நீ இன்னும் படுத்துறங்கலாகுமோ? முகத்தில் பிரகாசம் ஜொலிக்கும் பெண்ணே! எழுந்து கதவைத்திற!"

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:41 am

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு
மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போக்கின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்
கூவுவான் வந்துநின்றோம் கோதுகலமுடைய
பாவாய்! எழுந்திராய் பாடிப்பறைகொண்டு
மாவாய் பிளநதானை மல்லரைமாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்றாராய்ந் தருளேலோரெம்பாவாய்!


"பெருமகிழ்ச்சியுடன் விளங்கும் பெண்ணே! கீழ்த்திசையில் வானம் வெளுத்துள்ளது. எருமைகள் பனி படர்ந்த புல்வேலிகளில் மேய்வதைப்பார்! பாவை நோன்புக்கு கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி, உன்னையும் அழைத்துச்செல்ல உன் வாசலில் வந்து நின்றோம். இனியும் உறங்காது எழுவாய்! குதிரை வடிவு கொண்ட கேசி என்னும் அரக்கனின் வாயைப்பிளந்தவனும், கம்சனால் ஏவப்பட்ட (சாணூரன், முஷ்டிகன் என்னும்) மல்லர்களை மாளச்செய்தவனும், தேவாதி தேவர்களுக்கெனல்லாம் தலைவனான கண்ணனின் மகிமையைப்பாடி, அவனை நாம் வணங்கினால், நம் குறைகளை மன்னித்து, அருள் புரிவான். எனவே எழுந்திராய்!"

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Fri Oct 03, 2008 1:42 am

தூமணிமாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
தூபம் கமழ, துயிலணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ! உன் மகள் தான்
ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன், மாதவன், வைகுந்தன், என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏலோரெம்பாவாய்!


"மாசற்ற வைரங்கள் பொறுத்தப்பட்ட மாளிகையில் நான்கு புறமும் தீபங்கள் எரிய, நறுமணப்புகை எங்கும் வீச, மென்மையான படுக்கையில் துயிலுரும் மாமன் மகளே! மணிகள் பதித்த கதவினை திறப்பாயாக! மாமிமாரே! துயிலுரும் உங்கள் மகளை எழுப்ப மாட்டீர்களோ? தங்கள் மகள் ஊமையோ அல்லது செவிடோ? சோம்பிப் பெருந்தூக்கம் உடையவளோ? அல்லது, எழுந்திராதபடி காவலில் வைக்கப்படுள்ளாளோ? ஏதேனும் மந்திரத்தால் கட்டப்பட்டுள்ளாளோ? இப்பெண்ணை எழுப்புவதற்கு 'வியக்கத்தக்க விசேஷ குணங்களை உடையவனே, வைகுண்டத்தில் வாழ்பவனே, மஹாலக்ஷ்மியின் நாயகனே' என எம்பெருமானின் ஆயிரம் நாமங்களை சொல்வோம்."

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக