புதிய பதிவுகள்
» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat Sep 21, 2024 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat Sep 21, 2024 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat Sep 21, 2024 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat Sep 21, 2024 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
2 Posts - 50%
வேல்முருகன் காசி
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
1 Post - 25%
viyasan
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
199 Posts - 41%
ayyasamy ram
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
192 Posts - 39%
mohamed nizamudeen
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_m10இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இடஒதுக்கீட்டில் அரசியல்


   
   

Page 2 of 2 Previous  1, 2

sathyan
sathyan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1199
இணைந்தது : 09/02/2010

Postsathyan Fri Apr 16, 2010 3:00 pm

First topic message reminder :

இடஒதுக்கீட்டில் அரசியல்!

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு இப்போது அனைவராலும் பேசப்பட்டு வரும் முக்கிய விஷயமாகும். ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது.
அதேசமயம் மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளித்து ஆந்திர சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டம், அரசியலமைப்புச் சட்டத்துக்கு உள்பட்டதா என்பதை அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்கவும் நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் பொருளாதாரத்திலும், சமூக ரீதியிலும் பின்தங்கியுள்ள முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு அளித்து புதிய சட்டத்தை மாநில அரசு கொண்டுவந்தது. ஆந்திர மாநில பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டது.
இதை எதிர்த்து ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மதத்தின் பெயரில் இடஒதுக்கீடு அளித்தது செல்லாது என்று தீர்ப்பு வழங்கியதுடன் புதிய சட்டத்தையும் ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஆந்திர மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான நீதிபதிகள் ஜெ.எம். பன்ஸôல், பி.எஸ். சௌகான் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து, இடஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்த மாநில அரசுக்கு இடைக்கால அனுமதி வழங்கியுள்ளது. இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் மீண்டும் விசாரணைக்கு வருகிறது.
எனினும் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு விவகாரம் காங்கிரஸ் கட்சியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் தில்லியில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், இடஒதுக்கீட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இது சரியான நடவடிக்கையே என்ற விதத்திலும் அவர் பேசியுள்ளார். இதிலிருந்து முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்பது மறைமுகமாகத் தெளிவாகிறது.
அடுத்த சில மாதங்களில் முஸ்லிம்கள் எண்ணிக்கை கணிசமாக உள்ள மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்தக் கருத்து வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் இந்த ஆண்டு பிற்பகுதியிலும், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் 2011}லும், உத்தரப் பிரதேச மாநிலத்தில் 2012-லும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடைபெற உள்ளன.
முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை ஆதரிப்பதன் மூலம் சிறுபான்மையினரிடமிருந்து எந்த எதிர்ப்பும் வராமல் பார்த்துக்கொண்டு, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை எளிதில் நிறைவேற்றிவிடலாம் என்று காங்கிரஸ் நினைக்கிறது. முலாயம்சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் இடஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு கோரி வருகின்றனர். இது காங்கிரஸýக்கு சிக்கலை ஏற்படுத்தக்கூடும்.
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை எப்படியாவது நிறைவேற்றியே தீரவேண்டும் என்பதில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். இதைத் தனது கௌரவப் பிரச்னை போலவே கருதி அவர் செயல்பட்டு வருகிறார். ஆனால், அது அவ்வளவு எளிதான காரியமா என்பது தெரியவில்லை.
உத்தரப் பிரதேசத்தில் உயர்ஜாதியினரான பிராமணர்கள்,தலித்துகள் மற்றும் முஸ்லிம்கள் உள்பட அனைவரின் ஆதரவையும் பெற்றுவிட வேண்டும் என்பதில் காங்கிரஸ் முனைப்புக் காட்டி வருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டுவதில் பிராமணர்களும், சிறுபான்மையினரும் ஆர்வமாக உள்ளனர். இந்த நிலையில் இழந்துவிட்ட முஸ்லிம்களின் ஆதரவை மீண்டும் பெற்றுவிட்டால் அது பலவிதங்களில் நன்மை பயக்கும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
ராகுல் காந்தி, தலித்துகள் வீட்டுக்குச் சென்று தங்குவதிலும், அவர்களுடன் உணவு உண்பதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். உ.பி.யில் நல்ல திருப்புமுனை ஏற்படும் என்ற எதிர்பார்ப்பில் காங்கிரஸ் இருக்கிறது. 2014 பொதுத் தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு ராகுல் காந்தி, கட்சி வளர்ச்சிப் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்.உயர்ஜாதியினர், தலித்துகள், முஸ்லிம்கள் அல்லாமல் மகளிர் மற்றும் இளைஞர்களின் ஆதரவும் கிடைத்தால் உ.பி.யிலும் மத்தியிலும் கணிசமான இடங்களை வெல்லமுடியும் என்பது காங்கிரஸ் போடும் கணக்கு.
கடந்த சில ஆண்டுகளாக காங்கிரûஸ எதிர்த்து வந்த முஸ்லிம்கள் இப்போது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவுக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் முஸ்லிம்களை ஒருங்கிணைத்து அவர்களின் ஆதரவைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.
இதர பிற்பட்ட வகுப்பினருக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டில் ஒரு குறிப்பிட்ட சதவிகிதத்தை முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு ஒதுக்கலாம் என்ற திட்டத்தின்படியே ஆந்திரம் சட்டம் கொண்டுவந்துள்ளது. இதே திட்டத்தை மத்திய அரசு நாடு முழுவதும் பின்பற்ற நடவடிக்கை எடுக்கக்கூடும். ஆனால், பிற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டால் அதிக பயன் அடைந்துவரும் யாதவர்கள், குர்மீக்களுக்கு இது அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும்.
முஸ்லிம்களில் பிற்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க நடவடிக்கை எடுத்தால் அது உயர்ஜாதியினருக்கும், இதர பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் உருவாகும். ஆனால், முஸ்லிம்களில் பிற்பட்ட வகுப்பினரின் ஆதரவை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்று காங்கிரஸ் நினைக்கிறது.
முஸ்லிம்களை தனி வகுப்பாகக் கருதி இடஒதுக்கீடு அளிக்கலாம் என்று நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் அறிக்கை யோசனை தெரிவித்துள்ளது. சிறுபான்மையினருக்கு 15 சதவிகித இடஒதுக்கீடும், முஸ்லிம்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடும், மற்றவர்களுக்கு 5 சதவிகித இடஒதுக்கீடும் அளிக்கலாம் என்றால் சட்டப்படி அது செல்லுமா என்பது தெரியவில்லை. ஏனெனில் மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டுக்கு நமது அரசியலமைப்புச் சட்டத்தில் வழியில்லை.
தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திர மாநிலங்களில் உள்ளது போல் 27 சதவிகித இடஒதுக்கீட்டில் 4 முதல் 6 சதவிகித உள் ஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு அளிக்கலாம் என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் கருதுகின்றனர்.
கேரளம்தான் முஸ்லிம்களுக்கு முதன் முதலாக இடஒதுக்கீடு சட்டத்தை கொண்டுவந்தது. இன்று அங்கு முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் 12 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது. கர்நாடக மாநிலம் நீண்டகாலமாக முஸ்லிம்களுக்கு 4 சதவிகித இடஒதுக்கீடு அளித்து வருகிறது. தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவிகித இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
ஹிந்துக்களில் பிற்பட்ட வகுப்பினர் இருப்பது போலவே முஸ்லிம்களிலும் பிற்பட்ட வகுப்பினர் உள்ளனர் என்று காங்கிரஸ் அடிக்கடி பேசி வருகிறது. சில மாநிலங்களில் முஸ்லிம்கள் இடஒதுக்கீட்டின் பலனை அனுபவித்து வந்தாலும், முஸ்லிம்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இடஒதுக்கீட்டின் அளவு குறைவு என்ற கருத்து உள்ளது. ஹிந்துக்களில் பிற்பட்ட வகுப்பினரான யாதவர்களும், குர்மீக்களும்தான் இடஒதுக்கீட்டின் முழுப்பலனை அனுபவித்து வருகின்றனர் என்ற கருத்து முஸ்லிம்களிடம் உள்ளது. இடஒதுக்கீடு என்றால் அது ஹிந்துக்களுக்கு மட்டும்தான் என்ற நிலைகூடாது என்பதுதான் முஸ்லிம்களின் வாதமாகும்.
மதத்தின் அடிப்படையிலான இடஒதுக்கீட்டை அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. ஆனால், சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற அடிப்படையில் யாதவர்கள், குர்மீக்கள், லோதிகள் 27 சதவிகித இடஒதுக்கீட்டை அனுபவித்து வருகின்றனர். எனவே எங்களிலும் பிற்பட்ட வகுப்பினரை, மதத்தின் கண்ணோட்டத்தில் பார்க்காமல் அவர்களும் சமூக, பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்கள் என்ற கணக்கில் பார்த்து இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது முஸ்லிம்களின் வாதமாகும்.
முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்தால் தனியாக வாக்காளர்களை ஏற்படுத்தி வகுப்பு ரீதியாக நாட்டைப் பிளவுபடுத்தும் முயற்சியாக இது அமைந்துவிடுமோ என்ற கருத்தும் பலரிடம் உள்ளது.
முஸ்லிம்களுக்குத் தனி இடஒதுக்கீடு அளிக்கும்பட்சத்தில் அது மறைமுகமாக ஹிந்துக்களை ஒன்றுபடுத்தி விடுமோ என்ற அச்சமும் உள்ளது. மத அடிப்படையில் கட்சிகள் ஒன்று சேர்ந்ததால்தான் 90}களில் காங்கிரஸ் கட்சி செல்வாக்கை இழந்து மத்தியில் கூட்டணி அரசு ஏற்பட வழிவகுத்தது. இதை காங்கிரஸ் நினைத்துப் பார்க்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால், இதற்கான வாய்ப்பை எதிர்பார்த்து பாஜக காத்திருக்கிறது என்பது மட்டும் நிச்சயம்


நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Fri Apr 16, 2010 5:51 pm

இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Icon_eek இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Icon_eek இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 Icon_eek



தீதும் நன்றும் பிறர் தர வாரா இடஒதுக்கீட்டில் அரசியல் - Page 2 154550

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக