புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
24 Posts - 55%
heezulia
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
14 Posts - 32%
Barushree
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%
nahoor
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%
prajai
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
78 Posts - 73%
heezulia
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
4 Posts - 4%
prajai
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 1%
nahoor
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Barushree
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_m10இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 2:51 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 225px-Dr.Rajendra.Prasad
டாக்டர் ராஜேந்திர பிரசாத் (26 ஜனவரி 1950 - 13 மே 1962)

வடக்கு பீகாரில் ஓர் குக்கிராமத்தில் 1884-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி பிறந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் காந்தியக் கொள்கைகளின் முழுவடிவமாகத் திகழ்ந்தவர். பிரதமர் ஜவஹர்லால் நேரு அவரைப் பற்றி கூறுகையில் பாரதத்தின் அடையாளம் என்றே வர்ணித்தார்.

தமது பள்ளிக் கல்வியை பீகாரில் நிறைவு செய்த டாக்டர் பிரசாத் கொல்கத்தா பிரசிடன்சி கல்லூரியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய அவர் எம்.ஏ முதுகலை பட்டப்படிப்பில் முதலிடமும் முதுகலை சட்டப்படிப்பில் முதலிடமும் பெற்றார்.

1911-ல் தமது வழக்கறிஞர் பணியை கொல்கத்தாவில் துவக்கிய அவர் அகில இந்திய காங்கிரசில் உறுப்பினராக சேர்ந்தார். 1916-ல் பாட்னாவிற்கு இடம்பெயர்ந்த டாக்டர் பிரசாத் அங்கு அமைக்கப்பட்ட பீகார் மற்றும் ஒரிசா மாநிலங்களுக்கான உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.

1915-ல் கொல்கத்தாவில் முதன்முதலாக காந்தியடிகளை சந்தித்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1920-ல் விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். மும்பையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் மாநாட்டிற்கு தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1937-ல் காங்கிரஸ் அமைச்சரவைகள் பொறுப்பேற்ற போது சர்தார் வல்லபாய் படேல், ராஜேந்திர பிரசாத், மௌலான ஆசாத் ஆகியோரைக் கொண்ட நாடாளுமன்றக் குழு இந்த அமைச்சரவைகளுக்கு தேவையான வழிகாட்டுதலையும் அறிவுரைகளையும் வழங்கிவந்தது. 1939-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் காங்கிரஸ் தலைமைப் பொறுப்பில் இருந்து விலக நேரிட்டபோது ராஜேந்திர பிரசாத் அந்த நெருக்கடியை வெற்றிகரமாக சமாளித்தார்.

அரசியல் சாசன நிர்ணய சபையின் தலைவராகவும், உணவு மற்றும் வேளாண் அமைச்சராகவும் பணியாற்றி பெருமை சேர்த்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் இந்தியா குடியரசாக தம்மை அறிவித்துக் கொண்ட நாளில் நாட்டின் முதலாவது குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

சுதந்திர இந்தியாவின் இளம் பருவ நாட்களில் அதனை வழிநடத்திய பெருமை டாக்டர் பிரசாத்தையே சேரும். 1962-ம் ஆண்டு தமது குடியரசுத் தலைவர் பணியை நிறைவு செய்த டாக்டர் ராஜேந்திர பிரசாத் 1963-ம் ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி மறைந்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 2:54 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Srkris2

டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (13 மே 1962 - 13 மே 1967)

இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவராக பெருமை சேர்த்த டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1888-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி தமிழ்நாட்டில் உள்ள திருத்தணியில் பிறந்தார். மிகச் சிறந்த மாணவராக திகழ்ந்த அவர் இந்திய தத்துவஇயலின் அனைத்துத் துறைகளையும் கற்றறிந்து உலக புகழ்பெற்ற தத்துவஇயல் அறிஞராகப் பரிமளித்தார்.

திருப்பதியில் பள்ளிக் கல்வியையும், வேலூரிலும் பின்னர் சென்னை கிறிஸ்துவ கல்லூரியிலும் பயின்ற அவர் தத்துவஇயலில் பட்டம் பெற்றார். சென்னையிலும் மைசூர், கல்கத்தா, ஆந்திரா ஆகிய பல்கலைக் கழகங்களிலும் பேராசிரியராக பணியாற்றிய அவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் முதலாவது இந்திய பேராசிரியர் என்ற பெருமையையும் பெற்றார்.

பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும் பணியாற்றிய ராதாகிருஷ்ணன் ஐக்கிய நாடுகள் அவையின் யுனஸ்கோ அமைப்பில் இந்திய குழுவிற்கு தலைவராக பலமுறை பொறுப்பேற்று சென்றவர் ஆவார். உலகின் பல்வேறு பல்கலைக் கழகங்கள் அவரது புலமையைப் போற்றி டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்தன.

சோவியத் யூனியனில் சிறப்பு இந்திய தூதராக பணியாற்றிய டாக்டர் ராதாகிருஷ்ணன் இந்திய குடியரசின் குடியரசுத் துணைத் தலைவராக இருமுறை பணியாற்றியவர். 1962-ல் குடியரசுத் தலைவராக பொறுப்பேற்ற அவர் 1967 வரை தமது பொறுப்புகளை திறம்பட நிறைவேற்றினார்.

தத்துவஇயல் குறித்து டாக்டர் ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள், ஆற்றிய உரைகள் இன்று வரை உலகப் புகழ்பெற்று விளங்குகின்றன. டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் 1975-ம் ஆண்டு மறைந்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 2:57 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 1967_Zakir_Hussain

டாக்டர் ஜாகீர் ஹுசைன் (13 மே 1967 - 3 மே 1969)

ஹைதராபாத்தில் 1897-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி பிறந்த டாக்டர் ஜாகீர் ஹுசைன் உத்தரப் பிரதேசத்தில் உள்ள எட்டாவாவில் தமது பள்ளிக் கல்வியை முடித்தபின் அலிகரில் கல்லூரி கல்வி பயின்று முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் ஜெர்மனியில் உள்ள பெர்லின் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்ற அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்று தாயகம் திரும்பினார்.

புது தில்லியில் உள்ள ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றிய அவர் மிகச் சிறந்த கல்வியாளராக உருவெடுத்தார். 1938-ம் ஆண்டு செயல்படுத்தப்பட்ட தேசிய அடிப்படை கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்திய பெருமை டாக்டர் ஜாகீர் ஹுசைனையே சேரும்.

1948-ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பொறுப்பேற்ற அவர் உலக பல்கலைக் கழக சேவை அமைப்பின் அகில உலக தலைவராகவும் செயலாற்றினார். நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு நியமிக்கப்பட்ட அவர் யுனஸ்கோவின் நிர்வாகக் குழுவில் இந்தியப் பிரதிநிதியாக பணியாற்றினார்.

மத்திய உயர் நிலை கல்வி வாரியத்தின் தலைவர், பல்கலைக் கழக மானியக் குழுவின் உறுப்பினர் ஆகிய பொறுப்புகளை வகித்த டாக்டர் ஜாகீர் ஹுசைன் 1957-ல் பீகார் மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றினார். 1967-ம் ஆண்டு இந்திய குடியரசின் மூன்றாவது குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இப்பதவியிலிருக்கும் போது 1969-ம் ஆண்டு மே 3-ம் தேதி காலமானார்.

நாட்டின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது டாக்டர் ஜாகீர் ஹுசைனுக்கு 1963-ம் ஆண்டு வழங்கப்பட்டது.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:01 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 739_VV_Giri

வி. வி. கிரி (3 மே 1969 - 20 ஜூலை 1969) (24 ஆகஸ்ட் 1969 -24 ஆகஸ்ட் 1974)

வி. வி. கிரி என அழைக்கப்படும் வரஹ கிரி வெங்கட கிரி 1894-ம் ஆண்டு ஆகஸ்ட் 10-ம் தேதி தற்போது ஒரிசாவிலுள்ள பெர்ஹாம்பூரில் பிறந்தார். அவரது தந்தை புகழ்பெற்ற வழக்கறிஞராக திகழ்ந்ததோடு மோதிலால் நேரு, சித்தரஞ்சன் தாஸ் போன்ற தலைவர்களுடன் இணைந்து ஸ்வராஜ்ய கட்சியை துவக்கியவர் ஆவார்.

தமது ஆரம்ப கால கல்வியை இந்தியாவில் முடித்த வி வி கிரி பின்னர் அயர்லாந்து சென்று டப்ளின் பல்கலைக் கழகத்தில் உயர் கல்வி பயின்றார். முதல் உலகப் போரின் போது வழக்கறிஞர் தகுதி பெற்றிருந்த அவர் 1916-ம் ஆண்டு இந்தியா திரும்பினார். அயர்லாந்தில் பயின்ற போது அந்நாட்டு விடுதலைப் போராட்ட தலைவர்களால் வி வி கிரி பெரிதும் ஈர்க்கப்பட்டார்.

தாயகம் திரும்பிய வி வி கிரி தேசிய போராட்ட உணர்வு மிக்கவராக விளங்கியதோடு உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காக போராடும் தீவிர எண்ணம் பெற்று விளங்கினார். இந்திய தேசிய காங்கிரசில் சேர்ந்த அவர் காந்தியடிகளின் அழைப்பை ஏற்று தமது வழக்கறிஞர் பணியை துறந்து ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து சிறை சென்றார்.

1922-ம் ஆண்டிலிருந்து நாட்டின் தொழிற்சங்க இயக்கத்தில் தம்மை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட வி வி கிரி இருமுறை தொழிற்சங்க காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அயல் நாடுகளில் நடைபெற்ற பல்வேறு தொழிற்சங்க மாநாடுகளில் இந்திய பிரதிநிதியாக கலந்து கொண்ட பெருமை அவருக்கு உண்டு.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தொழிற்சங்கங்களை ஈடுபடுத்திய பெருமையும் வி வி கிரியையே சேரும். 1937-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் ராஜாஜி தலைமையில் அமைந்த காங்கிரஸ் அமைச்சரவையில் வி வி கிரி தொழிலாளர் நல அமைச்சராக பொறுப்பு வகித்தார். பின்னர் 1946-ல் டி பிரகாசம் தலைமையிலான அமைச்சரவையில் அதே பொறுப்பை வி வி கிரி மீண்டும் வகித்தார். அதன் பின்னர் இலங்கையின் இந்திய தூதராகவும் அவர் பணியாற்றினார்.

1952-ல் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வி வி கிரி மத்திய தொழிலாளர் நல அமைச்சராகவும் திறம்பட பணியாற்றினார். 1957-க்கு பின் உத்தரப் பிரதேசம், கேரளா, மைசூர் ஆகிய மாநிலங்களில் ஆளுநராக அவர் பணியாற்றினார். 1967-ல் குடியரசுத் துணைத் தலைவராக பொறுப்பேற்ற அவர் குடியரசுத் தலைவர் டாக்டர் ஜாகீர் ஹுசைன் காலமானதைத் தொடர்ந்து 1969 மே 3-ம் தேதி முதல் ஜூலை 20-ம் தேதி வரை குடியரசுத் தலைவராக பொறுப்பு வகித்தார். பின்னர் நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற அவர் நாட்டின் நான்காவது குடியரசுத் தலைவராக ஆகஸ்ட் 24-ம் தேதி பதவி ஏற்றார். 1974-ம் ஆண்டு வரை இப்பதவியில் இருந்த அவர் தொழிலாளர் நலன் குறித்து பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

சமத்துவ வாதியாகவும், நடைமுறை வாதியாகவும் விளங்கிய வி வி கிரி 1980-ம் ஆண்டு மறைந்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:13 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 842_Fakruddin_Ali_Ahme

டாக்டா பக்ருதின் அலி அகமது (24 ஆகஸ்ட் 1974 - 11 பிப்ரவரி 1977)

1905-ம் ஆண்டு மே 13-ம் தேதி தில்லியில் பிறந்த பக்ருதின் அலி அகமது புகழ் பெற்ற இஸ்லாமிய குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். உத்தரப் பிரதேசத்தில் தமது பள்ளிக் கல்வியை முடித்த அவர் தில்லி அரசு உயர் நிலை பள்ளியில் பயின்று பின்னர் பஞ்சாப் பல்கலைக் கழகத்தில் கல்வி கற்றார். உயர் கல்விக்காக 1922-ம் ஆண்டு இங்கிலாந்து சென்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்ட கல்வி பெற்று வழக்கறிஞர் தகுதி பெற்றார்.

1978-ம் ஆண்டு தாயகம் திரும்பிய அவர் லாகூர் உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை துவக்கினார். 1931-ம் ஆண்டு காங்கிரஸ் பேரியக்கத்தில் தம்மை இணைத்து கொண்ட அவர் ஜவஹர்லால் நேருவின் நெருங்கிய தோழராக திகழ்ந்தார். விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட பக்ருதின் அலி அகமது பலமுறை சிறை சென்றுள்ளார்.

1935-ம் ஆண்டு அசாம் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பக்ருதின் அலி அகமது கோபிநாத் பர்தோலி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக பணியாற்றினார். சுதந்திரத்திற்கு பின் இருமுறை அசாம் சட்டப் பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் 1952-ம் ஆண்டு மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் மாநில அரசின் தலைமை அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றிய பக்ருதின் அலி அகமது 1966-ல் நேருவின் அழைப்பை ஏற்று மத்திய அமைச்சரவையில் சேர்ந்தார். உணவு மற்றும் வேளாண்மை, கூட்டுறவு, கல்வி, தொழில் வளர்ச்சி ஆகிய பல்வேறு துறைகளில் மத்திய அமைச்சராக திறம்பட பணியாற்றிய பக்ருதின் அலி அகமது காங்கிரஸ் செயற்குழுவின் உறுப்பினராகவும் பல ஆண்டுகள் பணியாற்றினார்.

1974-ம் ஆண்டு ஆகஸ்ட் 29-ம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவராக பதவி ஏற்ற பக்ருதின் அலி அகமது 1977-ம் ஆண்டு பிப்ரவரி 11-ம் தேதி திடீர் மாரடைப்பால் காலமானார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:21 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! NSReddy_1121

நீலம் சஞ்சீவ ரெட்டி (25 ஜூலை 1977 - 25 ஜூலை 1982)

இந்தியாவின் ஆறாவது குடியரசுத் தலைவராக பணியாற்றிய நீலம் சஞ்சீவ ரெட்டி 1913-ம் ஆண்டு மே 18-ம் தேதி ஆந்திர பிரதேசத்தில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிறந்தார். சென்னையிலுள்ள தியாசிபிக்கல் உயர் நிலை பள்ளியில் பயின்ற அவர் பின்னர் அனந்தபூரில் கல்லூரியில் சேர்ந்தார். மாணவ பருவத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அவர் 1931-ம் ஆண்டு தமது கல்வியை துறந்தார்.

தமது 25-ம் வயதில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் பலமுறை சிறை சென்றவர் ஆவார். 1946-ம் ஆண்டு சஞ்சீவ ரெட்டி சென்னை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1947-ம் ஆண்டு இந்திய அரசியல் சாசன நிர்ணய சபை உறுப்பினராகவும் பணியாற்றிய அவர் சென்னை மாகாணத்தின் மதுவிலக்கு, வீட்டு வசதி மற்றும் வனத்துறை அமைச்சராக 1949 முதல் 1951 வரை பணியாற்றினார்.

1952-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட சஞ்சீவ ரெட்டி பின்னர் 1953-ம் ஆண்டு சென்னை மாகாணத்தின் டி பிரகாசம் தலைமையிலான அமைச்சரவையில் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

புதிதாக உருவான ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதலாவது முதலமைச்சராக பதவி வகித்த பெருமை சஞ்சீவ ரெட்டியையே சேரும். 1959-ம் ஆண்டு தமது முதல்வர் பதவியை துறந்து இந்திய தேசிய காங்கிரசின் தலைமை பொறுப்பை ஏற்றார். 1962 முதல் 1964 வரை மீண்டும் ஆந்திர பிரதேசத்தின் முதல்வராக அவர் பணியாற்றினார்.

1964-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் எஃகு மற்றும் சுரங்கத் துறை அமைச்சராக சஞ்சீவ ரெட்டி பதவி வகித்தார். திருமதி இந்திரா காந்தி தலைமையிலான மத்திய அமைச்சரவையிலும் போக்குவரத்து, சுற்றுலா, விமானத் துறை ஆகிய பொறுப்புகளை சஞ்சீவ ரெட்டி வகித்தார்.

1967-ம் ஆண்டு மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் மக்களவையின் தலைவராகவும் சிறப்புடன் பணியாற்றினார். 1969 ஜூலையில் அப்பதவியிலிருந்து விலகிய அவர் 1977-ம் ஆண்டு ஜனதா கட்சி உறுப்பினராக மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் மக்களவை தலைவர் பதவியை வகித்த சஞ்சீவ ரெட்டி 1977-ம் ஆண்டு ஜூலை 21-ம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வெங்கடேஸ்வரா பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்ட நீலம் சஞ்சீவ ரெட்டி 1996-ம் ஆண்டு ஜூன் முதல் தேதியன்று மறைந்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:25 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Singh,%20Zail

கியானி ஜெயில் சிங் (25 ஜூலை 1982 - 25 ஜூலை 1987)

எளிய குடும்பத்தில் 1916-ம் ஆண்டு மே 5-ம் தேதி பரித்கோட் மாவட்டத்தில் சிறு கிராமம் ஒன்றில் பிறந்த கியானி ஜெயில் சிங் பாமர மக்களின் உள்ளத் துடிப்பை உணர்ந்தவர் ஆவார். தமது இளமை பருவத்தில் குரான், பகவத் கீதை, ராமாயணம் உள்ளிட்ட பிறமத நூல்களையும், சீக்கிய இலக்கியங்களையும் கற்றறிந்த அவர் சீக்கிய மதஇயலில் வல்லுனராக தேர்ச்சி பெற்றார். இந்தி, உருது ஆகிய மொழிகளில் மிகுந்த தேர்ச்சி கொண்ட ஜெயில் சிங் தமது 16-வது வயதிலேயே பகத்சிங்கின் தியாகச் செயலால் ஈர்க்கப்பட்டு விடுதலைப் போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டார். பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்ட அவர் பலமுறை சிறை சென்றார். மகாத்மா காந்தியடிகளின் அறவழி போராட்டம் அவரை ஈர்த்தது.

பரித்கோட் மாநிலம் பாட்டியாலா மாநிலத்துடன் இணைந்தபின் ஜெயில் சிங் வருவாய் மற்றும் வேளாண் அமைச்சராக திறம்பட பணியாற்றி விவசாயத் தொழிலாளர்களின் துயர் துடைக்கும் பணிகளில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். பினாமி நிலங்களை கையகப்படுத்தவும், நிலமற்ற விவசாயிகளுக்கு அவற்றை வழங்கவும் ஜெயில் சிங் மேற்கொண்ட நடவடிக்கைகள் நாடெங்கிலும் போற்றப்பட்டன.

1956-ம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயில் சிங் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். 1962-ம் ஆண்டு பஞ்சாப் சட்டப் பேரவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் சிறிது காலம் பிரதாப் சிங் கைரோன் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக பணியாற்றினார். பின்னர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பணியாற்றிய அவர் 1972-ம் ஆண்டு பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். அம்மாநிலத்தில் பசுமைப் புரட்சியையும் தொழில் புரட்சியையும் ஒருங்கே அறிமுகப்படுத்திய பெருமை ஜெயில் சிங்கையே சேரும். அனைத்து மதத்தினரிடை¬யேயும் ஒற்றுமையை பேணி பாதுகாத்த அவர் மதச்சார்பின்மையின் போர்க் குரலாக திகழ்ந்தார்.

1980-ம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் திருமதி இந்திரா காந்தியின் அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக பணியாற்றினார். அசாம் மாநிலத்தில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்த போதும், நாட்டில் இனக்கலவரங்கள் மூண்ட போதும் அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.

1982-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி ஜெயில் சிங் நாட்டின் மிக உயர்ந்த பதவியான குடியரசுத் தலைவர் பொறுப்பை ஏற்றார். 1987-ம் ஆண்டு வரை அப்பொறுப்பில் இருந்த ஜெயில் சிங் 1994-ம் ஆண்டு மறைந்தார். ஜெயில் சிங்கின் நகைச்சுவை உணர்வும், செயலாற்றலும், பொறுப்புணர்வும் இந்திய வரலாற்றில் தனிஇடம் பெறுகின்றன.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:28 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 225px-R_Venkataraman

ஆர் வெங்கட்ராமன் (25 ஜூலை 1987 - 25 ஜூலை 1992)

தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் ராஜமடம் என்ற கிராமத்தில் 1910-ம் ஆண்டு டிசம்பர் 4-த் தேதி பிறந்த திரு வெங்கட்ராமன் சென்னை பல்கலைக் கழகத்தில் பொருளாதார இயலில் முதுகலை பட்டமும் சென்னை சட்ட கல்லூரியில் இளங்கலை பட்டமும் பெற்றவர் ஆவார்.

1935-ம் ஆண்டு சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியை துவக்கிய அவர் 1951-ம் ஆண்டு உச்சநீதி மன்றத்தில் வழக்கறிஞர் பணியை துவக்கினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட அவர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று இரண்டாண்டுகள் சிறை சென்றார்.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் ஜப்பானிய ஆக்கரமிப்பின் போது குற்றம் சாட்டப்பட்ட இந்தியர்களுக்காக வாதாட 1946-ம் ஆண்டு இந்திய அரசால் அனுப்பப்பட்ட வழக்கறிஞர் குழுவில் திரு வெங்கட்ராமன் இடம் பெற்றார். தொழிலாளர் நல சட்டங்களில் ஆர்வம் காட்டிய அவர் 1949-ம் ஆண்டு தொழிலாளர் சட்ட இதழை உருவாக்கினார். தொழிற்சங்க இயக்க நடவடிக்கைகளிலும் தீவிர ஆர்வம் காட்டிய அவர் விவசாயத் தொழிலாளர்களின் மேம்பாட்டில் கவனம் செலுத்தினார்.

1950-ல் இடைக்கால நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் முதலாவது நாடாளுமன்றத்தின் மக்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். 1957-ல் மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இப்பதவியை துறந்து சென்னை மாகாணத்தின் அமைச்சர் பொறுப்பை ஏற்றார். 1957 முதல் 1967 வரை திரு வெங்கட்ராமன் சென்னை மாநில அமைச்சரவையில் தொழில் துறை, தொழிலாளர் நலன், கூட்டுறவு, மின்சாரம், போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தார்.

1967-ம் ஆண்டு மத்திய திட்டக் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட திரு வெங்கட்ராமன் 1977-ம் ஆண்டு மீண்டும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பொது கணக்கு குழுவின் தலைவராக பணியாற்றினார். 1980-ம் ஆண்டு அமைந்த திருமதி இந்திரா காந்தி தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் பணியாற்றிய அவர் சர்வதேச நிதியம், உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி ஆகியவற்றின் கவர்னர் பொறுப்பையும் வகித்தார்.

பெருந் தலைவர் காமராஜரின் நெருங்கிய சகாவாக விளங்கிய திரு வெங்கட்ராமன் 1984-ம் ஆண்டு நாட்டின் குடியரசுத் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 1987-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் எட்டாவது குடியரசுத் தலைவராக திரு வெங்கட்ராமன் பதவி ஏற்று 1992-ம் ஆண்டு வரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த காலக்கட்டத்தில் இப்பொறுப்பை வகித்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:31 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 1961_Shankar_D_Sharma

டாக்டர் சங்கர் தயாள் சர்மா (25 ஜூலை 1992 - 25 ஜூலை 1997)

1918-ம் ஆண்டு பிறந்த டாக்டர் சங்கர் தயாள் சர்மா அலகாபாத் பல்கலைக் கழகத்திலும் லக்னோ பல்கலைக் கழகத்திலும் கல்வி பயின்று பின்னர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும், ஹார்வர்டு பல்கலைக் கழகத்திலும் சட்டத் துறையில் உயர் கல்வி பெற்றவர் ஆவார். ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் முதுகலை பட்டம் பெற்ற அவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் சட்டவியலில் டாக்டர் பட்டம் பெற்றவர் ஆவார்.

லக்னோ பல்கலைக் கழகத்திலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்திலும் சட்ட பேராசிரியராக பணியாற்றிய சங்கர் தயாள் சர்மா மத்திய பிரதேசத்தில் உள்ள சாகர் பல்கலைக் கழகத்தில் இணை வேந்தராகவும் பணியாற்றினார். ஆந்திர பிரதேசம், பஞ்சாப், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களின் ஆளுநராக பதவி வகித்த டாக்டர் சர்மா நாட்டின் 22 பல்கலைக் கழகங்களில் வேந்தராக பணியாற்றிய பெருமை பெற்றவர் ஆவார்.

1940-ல் லக்னோவில் வழக்கறிஞராக தமது பணியை துவக்கிய அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் ஈடுபட்டு சிறை சென்றார். போபால் மாநிலத்தின் முதலமைச்சராகவும் மத்திய அமைச்சரவையில் தொலைத் தொடர்புத் துறை அமைச்சராகவும் திறம்பட பணியாற்றிய அவர் நாட்டின் குடியரசுத் துணை தலைவராக 1987-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி நாட்டின் குடியரசுத் தலைவராக டாக்டர் சங்கர் தயாள் சர்மா பொறுப்பேற்றார்.

சர்வதேச இயலியலும், சட்ட இயலியலும், தத்துவ இயலியலும் பெரும் புலமை பெற்ற அவர் 1999-ம் ஆண்டு மறைந்தார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Apr 16, 2010 3:33 pm

இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! 2005111012320101

கே ஆர் நாராயணன் ( 25 ஜூலை 1997 - 25 ஜூலை 2002)

1920-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 27-ம் தேதி கேரளாவில் கோட்டயம் மாவட்டத்தில் உழவூர் என்ற கிராமத்தில் பிறந்த திரு கே ஆர் நாராயணன் திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்றார். பின்னர் லண்டன் பொருளியியல் பள்ளியில் பட்டம் பெற்ற அவர் அரசியல் துறையில் சிறப்பு தகுதி பெற்றார்.

திருவாங்கூர் பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக 1943-ம் ஆண்டு தமது பணியை துவக்கிய திரு கே ஆர் நாராயணன் பின்னர் தி இந்து நாளிதழில் பத்திரிகையாளராக பணியாற்றினார். டைம்ஸ் ஆப் இந்தியாவிலும் செய்தியாளராக பணியாற்றிய அவர் 1949-ம் ஆண்டு இந்திய அயல் துறை பணியில் அதிகாரியாக சேர்ந்தார். ரங்கூன், டோக்கியோ, லண்டன், கான்பரா உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் தூதரகப் பணியை திரு கே ஆர் நாராயணன் திறம்பட ஆற்றினார்.

1954-55-ம் ஆண்டுகளில் தில்லி பொருளியியல் பள்ளியில் பொருளாதார நிர்வாகம் குறித்து அவர் கற்பித்தார். தாய்லாந்து, துருக்கி, சீனா ஆகிய நாடுகளின் இந்திய தூதராகப் பணியாற்றிய திரு கே ஆர் நாராயணன் 1976-ம் ஆண்டு நாட்டின் வெளியுறவுச் செயலாளர் பொறுப்பையும் ஏற்றார்.

பணியில் இருந்து ஓய்வு பெற்றபின் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராக பணியாற்றிய அவர் 1980 முதல் 1984 வரை அமெரிக்காவிற்கான இந்திய தூதராகப் பணியாற்றினார்.

1984, 1989, 1991 நாடாளுமன்ற தேர்தல்களில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட திரு கே ஆர் நாராயணன் மத்திய அமைச்சரவையில் திட்ட அமைச்சராகவும், வெளியுறவு அமைச்சராகவும், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

1992 ஆகஸ்ட் முதல் நாட்டின் குடியரசுத் துணை தலைவராக பணியாற்றிய அவர் 1997-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றார்.

மிகச் சிறந்த எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும், ஆசிரியராகவும் பல்வேறு பரிணாமங்களில் புகழ் பெற்ற திரு கே ஆர் நாராயணன் சர்வதேச இயலிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஆழ்ந்த ஆர்வம் கொண்டவர் ஆவார்.



இந்தியக் குடியரசுத் தலைவர்கள்! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக