புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:15 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Today at 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Today at 10:00 am

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Today at 9:30 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Today at 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Today at 8:51 am

» கள்ளச்சாராயம் - மீம்ஸ் -(ரசித்தவை)
by ayyasamy ram Today at 8:49 am

» கருத்துப்படம் 25/06/2024
by mohamed nizamudeen Today at 8:02 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:20 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:04 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:51 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:34 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:50 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:42 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:53 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:51 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Yesterday at 5:11 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Yesterday at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Yesterday at 1:34 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Yesterday at 11:43 am

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:53 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 9:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Sun Jun 23, 2024 2:33 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Sun Jun 23, 2024 1:14 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
20 Posts - 45%
ayyasamy ram
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
17 Posts - 39%
Dr.S.Soundarapandian
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
1 Post - 2%
Ammu Swarnalatha
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
1 Post - 2%
T.N.Balasubramanian
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
1 Post - 2%
prajai
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
383 Posts - 49%
heezulia
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
256 Posts - 32%
Dr.S.Soundarapandian
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
26 Posts - 3%
prajai
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
7 Posts - 1%
sugumaran
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_m10‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் !


   
   

Page 1 of 2 1, 2  Next

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:25 pm

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Nun2


இந்தியாவின் கிறித்தவப் பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் எண்ணிக்கையில் அறுபது சதவீதத்தை அளிக்கும் கேரளாவில் அண்மையில் வெளிவந்த ஒரு புத்தகம் கிறித்தவ உலகில் ஒரு பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கின்றது. ஆமென் ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறுஎன்ற அந்த நூல், 33 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக இருந்து பின்னர் சபையிலிருந்து விலகிய ஜெஸ்மி என்ற 53 வயது சகோதரியால் எழுதப்பட்டது.

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Glad_170609_amen1-198x300

காங்கரகேஷன் ஆஃப் மதர் ஆஃப் கார்மெல் எனும் கன்னியாஸ்திரி சபையில் சகோதரியாகப் பணியாற்றிய ஜெஸ்மி, ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று, கடைசியாக திருச்சூரில் இருக்கும் பிரபலமான விமலா கல்லூரியின் முதல்வராகப் பணியாற்றினார். 35 இலட்சம் உறுப்பினர்களுடன் இயங்கும் இந்தியாவின் மிகப்பெரிய, பணக்கார கத்தோலிக்க சர்ச்சான ஸிரோ மலபார் சர்ச்சால்தான் விமலா கல்லூரி நடத்தப்படுகின்றது. இச்சபையில் இருக்கும் முறைகேடுகளை எதிர்த்துக் குரல் கொடுத்ததால் ஜெஸ்மிக்கு பைத்தியகார பட்டம் சூட்டி தனிமைப்படுத்த நினைத்த தலைமைப் பாதிரியார்களின் சதியை முறியடிக்கும் வண்ணம் அவர் இந்த சுய வரலாற்று நூலை எழுதியிருக்கின்றார்.
இந்நூலில் சகோதரிகளிடம் நிலவும் ஒரினச்சேர்க்கை, முக்கியமாக தலைமைப் பொறுப்பிலிருக்கும் சகோதரிகள் புதிய இளைய சகோதரிகளைத் தமது ஓரினப் பாலியல் இச்சைக்கு மிரட்டிப் பணியவைப்பது, ஆண் பாதிரியார்களும் புதிய சகோதரிகளைத் தமது அதிகார வலிமையால் பாலியல் வன்முறை செய்வது, இவற்றை எதிர்த்து வரும் குரல்களை சர்ச்சின் கௌரவம்தான் முக்கியமானது என்று புறந்தள்ளுவது என அனைத்தையும், தன் சொந்த அனுவபங்களோடு ஜெஸ்மி பகிர்ந்து கொள்கிறார். மேலும் பண விசயங்களில் நடக்கும் முறைகேடுகளையும், ஊழல்களையும் சேர்த்தே அம்பலப்படுத்துகின்றார். பத்திரிகைகள் பலவும் இந்நூலில் உள்ள செக்ஸ் பிரச்சினைகளை மட்டும் செய்தியாக்கி இருக்கின்றன. வெளிவந்த ஒரே மாதத்தில் மூன்று பதிப்புக்களைக் கண்ட இந்நூல் கேரளத்தில் ஒரு பெரும் விவாதத்தைக் கிளப்பியிருக்கின்றது.

ஆனால் இந்த அதிர்ச்சி அலைக்கு முரணாக 2008 அக்டோபர் மாதம் கேரள கிறித்தவ உலகமே பெரும் கொண்டாட்டத்தில் மூழ்கியிருந்தது. காரணம் 1946ஆம் ஆண்டு மரணமடைந்திருந்த அல்போன்சா என்ற கேரள கன்னியாஸ்திரிக்கு போப்பாண்டவர் புனிதர் என்ற பட்டத்தைக் கொடுத்ததுதான். வாட்டிகனில் வழங்கப்பட்ட இந்த பட்டமளிப்பு விழாவில் கேரளாவிலிருந்து பேராயர்கள், ஆயர்கள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள், பக்தர்கள் எனப் பலரும் நூற்றுக்கணக்கில் கலந்து கொண்டனர். கேரள மார்க்சிஸ்டு அரசு தன்னை மதச்சார்பற்ற இடதுசாரி முன்னணி என அழைத்துக் கொள்ளும் அரசு இந்த விழாவிற்கென ஒரு அமைச்சரையே அனுப்பி வைத்ததென்றால் இதன் முக்கியத்துவத்தை அறியலாம். கேரளாவில் கிறித்தவ மக்களின் விகிதம் அதாவது ஓட்டு அதிகமென்பதுதான் மார்க்சிஸ்டுகளின் இந்த முற்போக்குநடவடிக்கை உணர்த்தும் செய்தி.
அல்போன்சாவின் கல்லறை இருக்கும் பரனங்கானம் என்ற ஊர் இன்று அகில இந்திய சுற்றுலாத்தலமாக மாறி விட்டது. கடவுளின் தேசமென்று அழைக்கப்படும் கேரளாவில் முதல் இந்தியக் கிறித்தவர் ஒருவருக்கு கிடைத்திருக்கும் புனிதர் பட்டம் கொண்டாடப்படுவது அதிசயமில்லை.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:26 pm

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! STALPHONSA-KERALA-237x300

அல்போன்சா எனும் அந்த எளிய பெண்மணி 1910இல் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்து கன்னியாஸ்திரியாக மாறி அதிகமும் கல்விப்பணி புரிந்து பின்னர் வெகுகாலம் நோய்வாய்ப்பட்டு 1946இல் இறக்கின்றார். 1953ஆம் ஆண்டு அல்போன்சாவை தேவனின் சேவகிஎன்று வாட்டிகன் ஏற்கின்றது. கேரளாவில் அவரைப் புனிதராக்கும் முயற்சிகள் தொடங்குகின்றன. புனிதர் பட்டம் பெற வேண்டுமென்றால் அந்த நபர் இரண்டு அற்புதங்களை செய்திருக்க வேண்டுமாம். அப்படி அற்புதங்கள் செய்ததாக 1984இல் போப் இரண்டாம் ஜான் பால் அறிவித்துவிட்டு 1986 ஆம் ஆண்டு கோட்டயத்திற்கு வந்தபோது அல்போன்சாவை ஆசிர்வதிக்கப்பட்டவர் என அறிவிக்கின்றார். இறுதியில் 2008இல் போப் பதினாறாம் பெனடிக்ட் அல்போன்சாவை புனிதர் என அறிவிக்கின்றார். இதுதான் ஒரு இந்தியர் முதன் முதலாகப் புனிதர் பட்டம் பெற்ற கதை.

இப்படி இந்தப் புனிதர் பட்டம் பெற வேண்டுமானால் சம்பந்தப்பட்ட சபையின் பிஷப், ஒரு கமிட்டி அமைத்து ஆய்வு செய்து பின்னர் மேல்கமிட்டி அதைப் புலனாய்வு செய்து அதன் பிறகு வாட்டிகன் சோதித்தறிந்து, இரண்டு அற்புதங்களைப் பற்றி ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உறுதி செய்து, இறுதியில் போப் முடிவெடுத்து அறிவிக்க வேண்டும். நமது நீதிமன்றங்களில் ஒரு சிவில் வழக்கு பத்தாண்டுகளாக இழுக்கப்படுவதற்கு ஒப்பானது இது என்றாலும், அந்த அளவுக்கு புனிதர் பட்டத்திற்கு மவுசு இருக்கிறது என்பதால்தான் இந்த ஜோடனைகள்.

புனிதர் பட்டம் பெற்ற அல்போன்சாவும், திருச்சபையின் பாலியல் உள்ளிட்ட முறைகேடுகளை அம்பலப்படுத்திய ஜெஸ்மியும் ஸிரோ மலபார் சர்ச்சைச் சேர்ந்தவர்கள்தான். சென்ற ஆண்டு மகிழ்ச்சியில் திளைத்த இந்த சர்ச் இந்த ஆண்டு மருண்டு போயிருக்கின்றது. திருச்சபையின் செய்தித் தொடர்பாளர் அருட்தந்தை பால் தேலக்காட் கூட இந்தியா டுடே பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் இந்தப் பாலியல் முறைகேடுகள் இருப்பதை ஒத்துக்கொண்டு, அதைச் சரிசெய்ய முடியுமெனவும் கூறியிருக்கிறார். இதிலிருந்து திருச்சபையே இதை மூடிமறைக்க முடியவில்லை என்பது தெளிவு. ஆனால் ஜெஸ்மியை மனநோயாளி என முத்திரை குத்த நடந்த முயற்சி குறித்து தேலக்காட் அலட்டிக் கொள்ளவில்லை. அது அவரது மன ஆரோக்கியம் குறித்த பிரச்சினை எனச் சமாளிக்கிறார்.

இதே தேலக்காட் இந்திய கத்தோலிக்க பிஷப் கவுன்சிலின் தலைவரான 82 வயது கார்டினல் வர்கி விதயாதிலின் சுயசரிதையை எழுதியிருக்கின்றார். அதில் திருச்சபையில் கன்னியாஸ்திரிகள் அச்சத்துடன் வாழ்வதாகவும், பலர் பாதிரியார்களின் எடுபிடி சேவகர்களாகக் காலம் கழிப்பதாகவும் விதயாதில் குறிப்பிட்டிருக்கிறார். அதே சமயம் திருச்சபையின் கவுரவத்தை விட்டுக்கொடுக்காமல், தப்பு செய்பவர்களின் முயற்சிக்கு சபை ஒருபோதும் உதவாது என்றும் தெரிவித்திருக்கிறார். எல்லாம் திருச்சபையின் முடைநாற்றம் முச்சந்திக்கு வந்தபின்பு தவிர்க்க இயலாமல் தெரிவிக்கப்படும் பாவ மன்னிப்புக்கள்.

தேவனை நம்பும் எளிய மக்கள் தமது தவறுகளை திரைத் தடுப்புக்கு அப்பால் உள்ள பாதிரியார்களிடம் கூறி மன்னிப்பைப் பெற்றுக் கொள்கின்றார்கள். இங்கே ஒரு மனிதனின் தவறு அவனது சுயவிமரிசனம் மற்றும் மற்றவர்களின் விமரிசனத்திற்கு உட்பட்டு திருத்தப்படுவதில்லை. அதற்கு மாறாக அவனது தவறுகள் பொதுவான காரணங்களினால் மன்னிக்கப்பட்டு, அதாவது தவறை தேவனின் பிரதிநிதியிடம் கூறியதற்காகவே குற்றவாளி என்ற நிலையிலிருந்து விடுவிக்கப்படுகின்றான். இம்மை, மறுமை, பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம், சாத்தான்கள், பரிசுத்த ஆவி என்று கற்பனையாகக் கட்டியமைக்கப்பட்ட மதிப்பீடுகள் நிகழ்காலத்தின் நெறிமுறையை மதத்தின் நம்பிக்கை என்ற பெயரால் வடிவமைக்கின்றன. இந்தக் கற்பனையான விடுவித்தலில் எளிய தவறுகள் செய்யும் சாதாரண மக்களுக்குப் பெரிய பிரச்சினை எதுவும் இல்லை.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:27 pm

ஆனால் வார்த்தைக்கு வார்த்தை கடவுள் அமெரிக்காவை ஆசிர்வதிப்பார் என்று பேசும் அமெரிக்க அதிபர்களுக்கு ஈராக்கிலும், ஆப்கானிலும் அப்பாவி மக்கள் அமெரிக்கத் துருப்புக்களால் கொல்லப்படுவது தெரியும். போபாலில் பல ஆயிரம் பேரைக் கொன்ற ஆண்டர்சனோ, பங்குதாரர்களை ஏமாற்றிய என்ரானின் தலைவரோ தேவாலயம் சென்று பாவமன்னிப்பு பெறுவார்களா என்ன? தொழில் வேறு மதம் வேறு என்பதோடு, அவர்களைப் பொறுத்தவரை மதம் என்பது மக்களை நயம்பட ஏமாற்றுவதற்கான தந்திரம்தான்.

பகுத்தறிவால் நாத்திகரானவர்களை அறிந்திருப்போம். ஆனால் பூசாரிகள் அத்தனைபேரும் நாத்திகர்கள்தான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? கருவறைக்குள்ளிருக்கும் சாமியின் உருவத்தைத் தாங்கியிருக்கும் கல் வெறுமனே கல்தான் என்பதை மற்றவர்களை விட பூசாரி நன்கறிவான். அதனால்தான் சபரிமலையின் தலைமைப் பூசாரி சுத்த பத்தமாக இருப்பதற்காக விலைமாதர்களிடம் செல்வதும், தில்லை வாழ் தீட்சிதர்கள் நள்ளிரவில் நடராசப் பெருமானின் சன்னிதியில் டாஸ்மார்க் பாரை நடத்துவதும் சாதரணமாகியிருக்கின்றது. இந்த விதி பாதிரியார்களுக்கும் பொருந்தும்.
‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Shanley_paul2-259x300

அமெரிக்காவில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிரியார்கள் சிறுவர்களிடம் பாலியல் முறைகேடுகள் செய்ததாக வழக்கு நடக்கின்றது. இதில் பாஸ்டனைச் சேர்ந்த பாதிரியார் ஒருவருக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டு எட்டாண்டு சிறைத் தண்டனையே கிடைத்திருக்கின்றது. இந்தப் பாலியல் முறைகேடுகளுக்காக மட்டும் அமெரிக்க திருச்சபை சுமார் பத்தாயிரம் கோடி ரூபாயை அபராதமாகவும், நிவாரணமாகவும் கட்டியிருக்கின்றது. அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போப் இதற்காகவே மன்னிப்பு கேட்டிருக்கிறார். அமெரிக்க கிறித்தவ சபைகளில் நிலவும் இந்த ஒழுக்கம்எல்லா நாடுகளிலும் நீக்கமற நிறைந்திருக்கின்றது என்பதைத் தனியாக விளக்கத் தேவையில்லை.

ஒரு மனிதனின் தவறு என்பது அவனது சமூகத்தாலும், சமூக நடவடிக்கைகளாலும்தான் திருத்த முடியும். ஒரு கணவனால் கொடுமைக்குள்ளாக்கப்படும் இசுலாமியப் பெண்ணொருத்தியின் தீர்வுக்கு குர்ஆனையும், ஹதீசையும் புரட்டுவதால் என்ன பயன்? பாதிக்கப்பட்ட அந்தப் பெண்ணின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டா மதத்தின் தீர்வுகள் முடிவு செய்யப்படுகின்றன?

எல்லா மதங்களும் மனித சமூகத்தின் தவறுகளைப் பாவம், புண்ணியம் என்ற மத நம்பிக்கையின் மூலம்தான் அணுகுகின்றன. 21ஆம் நூற்றாண்டின் மனிதகுலப் பிரச்சினைகளுக்கு மிகப் பழைய நூற்றாண்டின் புண்ணிய நூல்களில் தீர்வுகள் தேடப்படுகின்றன. உண்மையில் மதத்தை வைத்து ஆதாயம் தேடும் ஆளும் வர்க்கத்தின் பல பிரச்சினைகள் இத்தகைய மத நூல்கள் மூலம் கேள்வியின்றி தீர்க்கப்படுகின்றன.
ஜெஸ்மி தனது சுய வரலாற்றில் ஒரு பாதிரியார் எல்லா கன்னியாஸ்திரிகளையும் கட்டித்தழுவி முத்தம் கொடுப்பதைக் குறிப்பிட்டு, தான் மட்டும் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தாகவும் அதற்கு அந்தப் பாதிரியார் முத்தம் கொடுப்பதை நியாயப்படுத்தும் வாசகத்தை பைபிளிலிருந்து படித்துக் காண்பித்ததாகத் தெரிவிக்கின்றார். பச்சையான பாலியல் இச்சைகளையும், வன்முறைகளையும் கூட பைபிளின் பெயரால் நியாயப்படுத்த முடியும் என்றால் கன்யாஸ்திரிகளுக்கு விடுதலை என்பது எப்படி சாத்தியம்?


மற்றவர்களின் பாவங்களுக்கு தேவனின் பிரதிநிதியாய் இருந்து மன்னிப்பை வழங்கும் ஒரு பாதிரியார் தனது பாவம் என்பது தேவனால் அங்கீகரிக்கப்பட்டது என்று காட்ட முயல்வதன் மூலம் கடவுள் என்பவரே கற்பனையானவர் என்பதைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து கொள்கின்றார். ஏசுவின் மேல் நம்பிக்கை கொள்ளும் ஒரு ஏழை அல்ல; ஏசுவின் தரகர்களாக வலம் வந்து பாவ புண்ணியங்களைத் தீர்மானிக்கும் இந்தப் பாதிரியார்கள்தான் அபாயகரமானவர்கள். இந்த அபாயம் பக்தர்களின் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை தரும் துணிச்சலிலிருந்து எழுகின்றது.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:28 pm

எல்லா மதங்களும் தமக்கு வேண்டிய நம்பிக்கைகளைக் கண்டிப்பான கண்மூடித்தனமான முறையில்தான் ஒரு கட்டளையைப் போலவே பக்தர்களிடம் கோருகின்றன. எந்தக் காரணத்தைக் கொண்டும் ஒரு மத நம்பிக்கையில் ஐயமோ, சந்தேகமோ, நம்பிக்கையின்மையோ வரக்கூடாது என்பதால்தான் மதப் பூசாரிகளின் அட்டூழியங்கள் அதற்குரிய பொருளில் பார்க்கப்படுவதில்லை. நடிகைகளோடு கூடிக்குலாவியும், சங்கர ராமனை ஆள் வைத்துக் கொன்றவர் என்றாலும் ஜகத்குரு என உலாவரும் சங்கராச்சாரியை பெரும்பான்மையான பார்ப்பன மேல்சாதியினர் இன்னமும் புனிதவானாக நம்புகின்றார்கள் என்றால் இந்தப் பக்தர்களின் விமரிசனமற்ற நம்பிக்கைதான் நமது விமரிசனத்திற்குரியது.

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Carl-bloch-jesus-and-the-little-children-280x300

ரோமாபுரிப் பேரரசின் அடிமைகளை விடுதலை செய்வதற்கு முயன்ற ஏசுநாதரின் பெருமை அவர் செய்த அற்புதங்களின் பெயரால்தான் வியந்தோதப்படுகின்றது. இன்றும் தினகரன் முதல் பல நற்செய்தியாளர்களும், சாய்பாபா, கல்கி, பிரேமானந்தா முதலான இந்துச் சாமியார்களும் அற்புதங்கள் மூலம்தான் தமது ஆன்மீகச் சந்தையை உருவாக்குகின்றனர்.

ஏசுநாதர் முடவர்களை நடக்க வைத்து, குருடர்களைப் பார்க்க வைத்து, தொழுநோயாளிகளைக் குணப்படுத்தி, அப்பங்களைப் பல்லாயிரமாகப் பெருக வைத்து அற்புதங்களைச் செய்தார் என்பதுதான் இன்றும் கிறித்தவத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருக்கின்றது. உண்மையில் ஏசுநாதர் அவர் காலத்தில் இப்படி சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட பிரிவினரின் மேல் அன்பு காட்டினார் என்பதைத் தாண்டி அவர் எந்த அற்புதங்களும் செய்யவில்லை. அப்படி யாரும் செய்யவும் முடியாது. இன்றைக்கு கிறித்தவ நற்செய்திக் கூட்டங்களில் அந்த அற்புதங்களுக்கான சாட்சிகள் செட்டப் செய்யப்பட்டு மேடையேற்றப்படுகின்றனர்.

இப்படித்தான் மதத்தின் மூடநம்பிக்கை நசிந்து போகாமல் காப்பாற்றப்படுகின்றது. அந்த அற்புதங்கள் உண்மை என்றால் இன்று கிறித்தவ மிசினரிகள் நடத்தும் எண்ணிலடங்கா மருத்துவமனைகளுக்கு என்ன காரணம்? அதற்குப்பதில் தேவ செய்தியாளர்களை வைத்து எல்லா நோயாளிகளையும் சடுதியில் குணமாக்கி விடலாமே? மேலும் ஏகாதிபத்தியங்களின் ஆக்கிரமிப்புப் போரினால் உறுப்புக்களை இழக்கும் ஈராக், ஆப்கான் நாடுகளைச் சேர்ந்த அப்பாவிகளுக்கும் அந்த உறுப்புக்களை மீண்டும் தருவிக்கலாமே?

இப்படி கலப்படமில்லாத பொய்மையின் வலிமை கொண்டுதான் மதங்களின் சிறப்புக்கள் முழுமுதல் உண்மை போல இறைக்கப்படுகின்றன. இதையே நவீன இந்து சமய சாமியார்கள் யோகம், தியானம் என்று எல்லா வளங்களையும் தரும் உடனடி லாட்டரிகளைப் போல அள்ளித் தெளித்து தமது ஆன்மீக சாம்ராஜ்ஜியங்களை விரிவாக்குகின்றனர்.

அல்போன்சாவின் புனிதர் பட்டத்தின் கதையைக் கூட எடுத்துக் கொள்வோம். அவர் இறந்த பிறகு அவரது கல்லறையில் பிரார்த்தனை செய்த இரண்டு பேருக்கு அற்புதங்கள் நடந்திருக்கின்றதாம். அதில் ஒரு கேரள தம்பதியினர் பிறவியிலேயே ஊனமுற்ற தமது மகன் அல்போன்சாவின் அருளால் ஊனம் நீங்கி நடப்பதைத் தெரிவித்தார்களாம். இதை ஒரு மருத்துவர் குழு ஆராய்ந்து உண்மையென உறுதி செய்து வாட்டிகனுக்கு அறிக்கை அளிக்கப்பட்டு ஏற்கப்பட்டதாம். இந்த மருத்துவர் குழுவில் இருக்கும் மருத்துவர்களும் கேள்விக்கிடமற்ற நம்பிக்கை கொண்டு திருச்சபையை மதிக்கும் பக்தர்கள் என்பதுதான் உண்மை.

அன்னை தெரசாவுக்கும் இப்படித்தான் இரண்டு அற்புதங்கள் ஜோடிக்கப்பட்டு புனிதர் பட்டம் கொடுக்கப்பட்டது. கிறித்தவ மதத்திற்காகத் தொண்டூழியம் செய்பவர்களை அவர்கள் மட்டுமின்றி யாரும் ஏன் போப்பும் கூட செய்ய முடியாத அற்புதங்கள் எனும் மோசடி கொண்டுதான் அளவிட வேண்டுமா? அல்போன்சா தனது வாழ்வை ஆசிரியப் பணிக்கு அர்ப்பணித்து விட்டு வெகுநாட்கள் நோய்வாய்ப்பட்டு இளம் வயதிலேயே இறந்து விட்டார். இதைத் தவிர அந்த அப்பாவி கன்னியாஸ்திரியின் கல்லறைக்குச் சென்று பிரார்த்தித்தால் அற்புதங்கள் நிகழும் என்று ஜோடிக்க வேண்டிய அவசியமென்ன?

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:29 pm

‘புனிதமும்’ வக்கிரமும்: திருச்சபையின் இருமுகங்கள் ! Imagesbelieve-20inb-20god-20spray-242x300

மேற்குலகில் கிறித்தவத்தின் நம்பிக்கை வெகுவாக வடிந்திருக்கும் நிலையில் மூன்றாம் உலக நாடுகளிலிருக்கும் மந்தைகளைத்தான் தேவனின் செய்தியால் மாற்ற முடியும் என்ற ஒரே காரணத்தால்தான் அல்போன்சாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. டெண்டுல்கர் சதமடித்தாலோ, ரஜினி பஞ்ச் டயலாக் பேசினாலோ முழு நாடே கொண்டாடும் சூழலில் ஒரு முதல் இந்தியருக்கு அளிக்கப்பட்ட புனிதர் பட்டமும் அப்படித்தான் கொண்டாடப்படுகின்றது. மேலும் பாதிரியார்களையும், கன்னியாஸ்திரிகளையும் அள்ளி வழங்கும் கேரளத்தின் சேவையைக் கணக்கில் கொண்டும் இந்தப் புனித மோசடி கச்சிதமாக நடந்திருக்கின்றது.

இலட்சக்கணக்கான பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் வாழும் உலகில் இப்படி ஒரு சிலர் மட்டும்தான் அற்புதங்களைச் செய்ய முடியுமென்றால் மற்றவர்களெல்லாம் பாவிகளா இல்லை சாத்தானின் அவதாரங்களா? நோய்வாய்ப்பட்டு பலமாதங்கள் துயருற்ற அல்போன்சாவை அவர் காலத்திய பாதிரிகள் அற்புதம் செய்து குணமாக்கியிருக்கலாமே, என் அப்படி நடக்கவில்லை? ஆக மதநம்பிக்கையைப் பரப்புவதிலேயே இத்தகைய பச்சையான மோசடிகளும் ஊழலும் இருக்கும்போது, கன்னியாஸ்திரிகள் மீதான பாலியல் வன்முறையை மட்டும் தனிச்சிறப்பான மோசடி என்று எப்படிக் கூற முடியும்?

எனவேதான் திருச்சபையில் இருக்கும் ஆன்மீக ஊழல்களும், லவுதீக ஊழல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை வலியுறுத்திச் சொல்கின்றோம். அற்புதங்கள் என்பது எப்படியும் நிகழாத ஒன்று என உறுதியாகத் தெரிந்திருக்கும் ஒரு பாதிரி, சபையில் சேரும் இளம் கன்னியாஸ்திரியை பாலியல் வன்முறை செய்வது ஒன்றும் தெய்வக் குற்றமில்லை என ஏன் நினைக்க மாட்டான்? தெய்வமே இல்லை என்றாகும்போது தெய்வக்குற்றம் மட்டும் எப்படி இருக்க முடியும்?

பேசாத அம்மன் சிலையை வெறும் கல்லென்று தெரிந்து கொண்டு கைகளால் கழுவி அபிஷேகம் செய்யும் ஒரு பூசாரி கோவிலுக்கு வரும் ஒரு பெண்ணைப் பாலியல் வன்முறை செய்வது அவனுடைய தனிப்பட்ட தவறு மட்டுமில்லை, தவறையே தனது ஆன்மாவாகக் கொண்ட மதத்தின் தவறாகவும் இருக்கிறது. மதத்தின் ஆன்மாவே தவறுகளின் மேல் கட்டப்பட்டிருக்கின்றது என்பதை ஒத்துக்கொள்ளாத வரைக்கும் வாழ்க்கையில் நடக்கும் தவறுகளை மட்டும் வெட்டியெடுத்து திருத்திவிட முடியாது.

ஜெஸ்மி தனது முப்பது வருட கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டு, அதன் காரணங்களையும் வெளி உலகிற்கு தெரிவித்து விட்டார். இல்லையேல் அவர் ஒரு மனநோயாளி என ஒரு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பார். இப்போதும் கூட அவர் கிறித்தவ மதத்திலிருந்து வெளி@யறவில்லை. இவரது பிரச்சினை கிளப்பிய புயலில் அரண்டுபோன திருச்சபையும் இந்தப் பாலியல் முறைகேடுகளைச் சரி செய்யும் நுட்பத்தை அமல்படுத்தப் போவதாகப் பேசுகின்றது. ஏற்கனெவே சகோதரி அபயா கொலை வழக்கில் 2 பாதிரியார்களும் 1 கன்னியாஸ்திரியும் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். மூத்த கன்னியாஸ்திரிகளின் கொடுமை தாங்காமல் சகோதரி அனூப் மேரி தற்கொலை செய்து கொண்டார். இவையெல்லாம் கேரளாவில் அம்பலத்திற்கு வந்த திருச்சபையின் குற்றங்கள்.

மதம் மற்றும் திருச்சபையின் முறைப்படியே ஆண் பாதிரிகளுக்கு உரிய தகுதியும், பதவியும் பெண் கன்னியாஸ்திரிகளுக்கு கிடையாது. இப்படி வழக்கத்திலேயே ஆணாதிக்கம் கோலோச்சும் ஒரு நிறுவனத்தில் சேரும் இளம்பெண்ணுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? ஜெஸ்மி தன்மீது நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறை குறித்து ஒரு மதர் சுப்பீரியரிடம் முறையிட்ட போது அந்த தலைமைச் சகோதரி சொன்னாராம் இந்தக் குற்றச்சாட்டை விட சர்ச்சின் கவுரவம் முக்கியமானது என்பதால், இவற்றைக் கண்டுகொள்ளாமல் கர்த்தருக்கு பணியாற்றுவதுதான் முக்கியம்
புதிய கலாச்சாரம் பத்திரிகையை பல இளம் பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் தவறாமல் படிக்கிறார்கள் என்ற நல்ல விசயம் எங்களுக்குத் தெரியும் என்பதால், அவர்களிடம் ஒரு கேள்வியை உங்கள் மதத்தால் சாத்தானென்று கருதப்படுகிறோம் என்றாலும் கேட்க விரும்புகின்றோம். நீங்கள் எப்போது சபையை விட்டு வெளியேறி உண்மையான மக்கள் பணி ஆற்றப் போகின்றீர்கள்?”


சர்ச்சின் கவுரவம் பெரியதா, அல்லது உங்களின் மனச்சாட்சி பெரியதா? முடிவு செய்யுங்கள்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:38 pm

இது கிறிஸ்தவர்களுக்கு ஒரு சவாலான கேள்வி. இதை மறுக்க முடியாது கிறிஸ்தவ இனத்தவர்கள். பாதிரியார்கள் அமெரிக்காவில் மட்டுமல்ல இந்தியாவில் கூட எவ்வளவு குற்றங்களைச் செய்து வருகிறார்கள் தெரியுமா............ கடவுளின் பெயரைச் சொல்லி இந்த மாதிரி தப்பு பன்னுவதற்கு எப்படிதான் அவர்களுக்கு மனது வருகிறதோ தெரியவில்லை.

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:40 pm

எல்லாமே கள்ளச் சாமி மார் தான் மானிக்கன் இவங்கள் எல்லாம் ஏன் தான் கடவுள் பெயரை சொல்லி பிழைக்கிறார்களோ தொிய இல்லலை இவர்களை எல்லாம் நிக்க வைச்சு சுடவேணும்....

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:43 pm

என் பேரு மானிக்கன் இல்ல ஷெரின் அவர்களே. மானிக். பாதிரியார்களை தண்டிக்க மனிதர்களுக்கு சக்தி இருக்கிறதா என்ன

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Postசெரின் Wed Jul 01, 2009 4:45 pm

அவர்கள் ” ஊருக்கு தான் உபதேசம் தமக்கு அல்ல” நினைத்தால் முடியும் தண்டிக்க மானிக்.

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 01, 2009 4:47 pm

கண்டிப்பா ஒரு நாள் மக்கள் எல்லாரும் சேர்ந்து தண்டிப்பாங்க. அந்த நாள் கூடிய விரைவில் வரும்னு நினைக்கிறேன் . நீங்க கிறிஸ்டியன் தானே

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக