புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 70%
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 20%
viyasan
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
213 Posts - 42%
heezulia
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
21 Posts - 4%
prajai
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
Guna.D
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
7 Posts - 1%
mruthun
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_m10சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:20 am

First topic message reminder :

மகிழ்ச்சி பறிபோனது

ஒர் ஊரில் அடுத்தடுத்து செல்வன் ஒருவனும் எழை ஒருவனும் குடியிருந்தார்கள். செல்வனின் வீடு பெரிதாக இருந்தது. எழையின் வீடோ குடிசை வீடு.

எழைக்கு சொந்தமாக நிலம் ஏதும் கிடையாது. யார் வயலிலாவது உழைத்து கிடைக்கின்ற சிறிதளவு கூலிவுடன் வீடு திரும்புவான் அவன், எந்தக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் இருந்தான்.

அவன் வீட்டு கதவு எப்பொழுதும் திறந்தே இருக்கம் படுத்தவுடன் தூங்கி விடவான் அவன்.

ஆனால் செல்வனோ எப்பொழுதும் பரபரப்புடனம் கவலையுடனும் காட்சி அளித்தான். தன் வீட்டு ஜன்னர்களையும் கதவுகளையும் மூடியே வைத்திருந்தான் அவன் திருடர்கள் வீட்டினுள் நுழைந்து விலை உயர்ந்த பொருள்களை திருடிச் சென்று விடுவார்களோ என்று அஞ்சினான். ஆதனால் அவன் இரவில் தூங்குவதே இல்லை.

ஏழை எப்பொழுதும் மகிழ்ச்சியுடன் இருப்பதைக் கவனித்தான் அவன் இவ்வாறு செல்வம் இருந்தும் தன்னால் அவனைப் போல் மகிழ்ச்சியாக இருக்க முடியவில.;லையே என்று வருந்தினான்.

ஏழையிடம் செல்வம் இருந்தால் என்ன நடக்கும் என்பதை அறிய விரும்பினான் அவன்.

ஏழையை அழைத்த அவன் நண்பனே உன்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன், நீ வறுமையில் வாடிக் கொண்டிருக்கிறாய் உனக்கு உதவி செய்ய நினைக்கிறேன் என்னிடம் செல்வம் உள்ளது அதிலிருந்து உனக்கு 100 பொற்காசுகள் தருகிறேன் நீ மகிழ்ச்சியுடன் வாழ்க்கை நடத்து என்றான்.

அவனிடம் நூறு பொற்காசுகள் பெற்றுக் கொண்ட எழை மகிழ்ச்சியுடன் வீட்டிற்கு வந்தான்.

இரவு வந்தது. திருடர்கள் பொற்காசுகளைத் திருடிச் சென்று விடுவார்களோ என்ற அச்சத்தால் கதவை மூடித் தாழ்ப்பாள் போட்டான்.

தூங்கும்போது திருடர்கள் வந்தால் என்ன செய்வது என்ற கவலையில் இரவு முழுவதும் அவன் தூங்கவில்லை. சிறு ஒசை கேட்டாலும் அஞ்சி நடுங்கினான் அவன்.

தன் மகிழ்ச்சி பறிபோனதற்கு காரணம் பொற்காசுகள் தான் என்ற உண்மையை உணர்ந்தான் அவன்.

பொழுது விடிந்தது பொற்காசுப் பையை எடுத்துக் கொண்டு செல்வனின் வீட்டிற்கு வந்தான். ஐயா நான் ஏழைதான். உங்கள் பொற்காசுகள் என் அமைதிளையும் மகிழ்ச்சியையும் குலைத்துவிட்டன எனக்கு வேண்டாம் இந்தப் பொற்காசுகள் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என்று அவனிடம் தந்துவிட்டு மகிழச்சியுடன் புறப்பட்டான் அவன்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 8:58 pm

மரணமும் வாழ்க்கையும்

கப்பலில் முதன் முதலாகப் பயணம் செய்தார் ஒருவர். பரந்து கிடக்கும் கடலில் எப்பொழுது வேண்டுமானாலும் கப்பல் மூழ்கி விடலாம். பயணம் வெற்றியாக அமைந்து ஊர் போய்ச் சேர்வோம் என்ற உறுதி யாருக்கும் இல்லை. கப்பலிலேயே எப்பொழுதும் பணிபுரிகின்ற மாலுமிகளின் நிலை இதை விட மோசம் என்று திகைத்தார் அவர்.

அங்கிருந்த மாலுமி ஒருவனை அழைத்த அவர் உன் தந்தையார் என்ன பணிபுரிந்தார் ? என்று கேட்டார்.

என் தந்தையாரும் என்னைப்போல் கப்பலின் மாலுமியாகப் பணிபுரிந்தார். ஒரு நாள் அவர் பயணம் செய்த கப்பல் புயலில் சிக்கி மூழ்கியதால் அவர் இறந்து விட்டார் என்றான்.

சரி உன் தந்தையாரின் தந்தையார் என்ன செய்தார் ? என்று கேட்டார் அவர்.

அவரும் மாலுமியாகத்தான் பணிபுரிந்தார். அவரும் கப்பரோடு மூழ்கி இறந்து போய் விட்டார். என்று பதில் சொன்னான் மாலுமி.

என்ன ? உன் தந்தையாரும் அவர் தந்தையாரும் கப்பலில் பயணம் செய்யும் போது இறந்து விட்டார்கள என்கிறாய். நீயும், மாலுமியாக இருக்கிறாய். கடலில் மூழ்கி இறந்து விடுவோம் என்ற அச்சம் உனக்கு இல்லையா ? என்று கேட்டார்.

உங்கள் தந்தையார் எப்படி இறந்தார் ? என்று கேட்டான் மாலுமி.

படுக்கையில் படுத்திருக்கும் போது.

அவருடைய தந்தையார் எப்படி இறந்தார்?

அவரும் படுக்கையில் படுத்திருக்கும் போது தான் இறந்தார் என்றார்.

உங்கள் தந்தையாரும் அவர் தந்தையாரும் படுக்கையில் படுத்திருக்கும்போது தான் இறந்து இருக்கிறார்கள். நீங்கள் எப்படி அச்சமில்லாமல் படுக்கையில் படுத்து உறங்குகிறீர்கள் ? என்று கேட்டான் மாலுமி.

அப்பொழுதுதான் அவருக்கு உண்மை புரிந்தது. உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு நீங்கியே தீரும். நமக்குரிய கடமைகளை செய்து கொண்டு அச்சமின்றி வாழ்வதே மேலான வாழ்க்கை என்பதை அவர் உணர்ந்து கொண்டார்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 10, 2009 11:45 pm

கிழவனும் மரமும்

இலையுதிர் காலம், அந்த மரம் மொட்டையாய் நின்றது. கிழவன் ஒருவன் அதனருகே சென்றான். விறகுக்காக சில கிளைகளைத் தறித்து எடுத்தான். ‘எனது வீட்டிற்கு முன்னாலே இத்தகைய மரம் இன்கின்றபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும்? என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.

மரங்கள் தளிர்த்துப் பழங்கள் சுமந்த வேளை. கிழவன் வீட்டு மரம் நிறைய இலை தெரியாமல் பழங்கள். பழங்களைப் பறித்தான் கிழவன். ‘இனிமேல் இந்தப் பழமரத்தில் பழங்கள் பறிக்கமாட்டேன்.

மீண்டும் இலையுதிர் காலம் அதே மரத்தில் மீண்டும் பழங்கள். இனி ஒரு போதும் கிளைகளை வெட்டக்கூடாது.

இலையுதிர் காலம், மீண்டும் கிளைகளை வெட்டினான் கிழவன்

வசந்தம் வந்தபோது கிழவன் மரத்தைப் பார்த்தான்.

மரம் நின்றது மொட்டையாக.

-சீனக் கதை

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Sep 11, 2009 12:01 am

"உயிரை எப்பொழுதும் காப்பாற்றி வைக்க முடியாது. அது நம் உடலை விட்டு
நீங்கியே தீரும். நமக்குரிய கடமைகளை செய்து கொண்டு அச்சமின்றி வாழ்வதே
மேலான வாழ்க்கை"

அருமையான கருத்து

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 2:24 pm

என்ன தண்டனையோ!

அரசனின் படுக்கையறையைப் பெருக்கிக் கொண்டிருந்தான் வேலைக்காரன். பட்டு மெத்தை, இனிய சூழல், அரசன் வர நேரமாகுமென்ற எண்ணம் ஆகியவை அவனைப் படுக்கையில் படுக்கத் தூண்டின. ஆர்வத்தை அடக்க முடியாத அவன் படுக்கையில் படுத்து நன்றாகத் தூங்கி விட்டான்.

அறைக்கு வந்த அரசன் தன் படுக்கையில் வேலைக்காரன். உறங்குவதைக் கண்டு கோபம் கொண்டான். யாரங்கே என்று வீரர்களைப் பார்த்துக் கத்தினான். வீரர்கள் ஓடி வந்தனர். அரசனின் கூச்சல் கேட்டு வேலைக்காரனும் எழுந்தான்.

என் படுக்கையில் படுத்த இவனுக்கு என் கண் எதிரிலேயே நூறு சவுக்கடி கொடுங்கள் என்று கட்டளை இட்டான் அரசன்.

தண்டனை நிறைவேற்றப்பட்டது. வேலைக்காரன் எல்லா அடிகளையும் பொறுமையாகத் தாங்கிக் கொண்டான்.

வேலைக்காரனைப் பார்த்து அரசன் படுக்கையில் படுத்ததற்கு உனக்குச் சரியான தண்டனை கிடைத்தது. இனியேனும் ஒழுங்காக நடந்து கொள் என்றான்.

இதுவரை பொறுமையாக இருந்த வேலைக்காரன் இப்பொழுது தேம்பித் தேம்பி அழத் தொடங்கினான்.

வியப்பை அடக்க முடியாத அரசன் இப்பொழுது எதற்காக இப்படி அழுகிறாய்? என்று கேட்டான்.

அதற்க அவன் நான் ஒரே முறையாக இந்தப் படுக்கையில் படுத்ததற்கே எனக்கு இந்த தண்டனை கிடைத்தது. நீங்கள் நாள்தோறும் இதில் படுக்கின்றீர்களே உங்களுக்கு என்ன தண்டனை காத்திருக்கிறதோ என்று நினைத்தேன். உடனே அழுகை வந்து விட்டது என்று பதில் சொன்னான்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 7:53 pm

யார் மன்னர்

ஆள் நடமாட்டம் இல்லாத அந்தச் சாலை ஓரத்தில் பெரிய ஆலமரம் ஒன்று இருந்தது. அதன் நிழலில் கண் பார்வை அற்ற துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.

அந்த வழியாக வந்த ஒருவன். ஏ கிழவா! இந்த வழியாக யாராவது போனார்களா? என்று அதிகாரத்துடன் கேட்டான்.

இதற்கு முன் யாரும் இந்த வழியாக போன ஓசை எனக்கு கேட்கவில்லை என்றார் அவர்.

சிறிது நேரம் சென்றது. அங்கு வந்த இன்னொருவன், ஐயா! இதற்கு முன் இந்த வழியாக யாராவது போனார்களா? என்று கேட்டான்.

சற்றுமுன் இந்த வழியாக ஒருவன் சென்றான். அவனும் நீங்கள் கேட்ட இதே

கேள்வியை என்னிடம் கேட்டுவிட்டுச் சென்றான் என்றார் அவர்.

மேலும் சிறிது நேரம் சென்றது. இன்னொருவன் அங்கு வந்தான். துறவியாரே! என் பணிவான வணக்கங்கள். இதற்கு முன் இந்த வழியாக யாராவது செல்லும் ஓசை தங்களுக்கு கேட்டதா? தெரிந்தால் சொல்லுங்கள் என்று பணிவுடன் கேட்டான்.

அரசர் பெருமானே! இந்த வழியாக முதலில் வீரன் ஒருவன் சென்றான். அடுத்து சிறிது நேரத்தில் அமைச்சர் ஒருவர் வந்தார். இருவருமே நீங்கள் கேட்ட இதே கேள்வியை என்னிடம் கேட்டு விட்டுச் சென்றார்கள் என்றார் அவர்.

வியப்பு அடைந்த அரசன். துறவியாரே! தங்களுக்குப் பார்வை தெரியாது.

அப்படி இருக்கும் போது நான் அரசன் என்றும் முன்னால் சென்றவர்கள்

அமைச்சன், வீரன் என்றும் எப்படி அறிந்தீர்கள? என்று கேட்டான்.

அரசே! இதற்க கண் பார்வை தெரிய வேண்டுமா! அவரவர் பேச்சை வைத்தே அவர் யார் என்று அறிந்து கொள்ள முடியாதா? முதலில் வந்தவர் சிறிதும் மரியாதை இன்றி பேசினார். அடுத்தவர். அடுத்தவர் பேச்சில் அதிகாரம் இருந்தது. நீங்களோ மிகவும் பணிவாக பேசினீர்கள் என்று விளக்கம் தந்தார் அவர்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 8:23 pm

தனியாக வா

வியாச முனிவருடைய திருமகனார் சுக முனிவர் அவரை சுகப் பிரும்ம மகரிஷி என்றே எல்லோரும் அழைத்தார்கள்.

தன் தந்தையாரை பார்த்து அவர் பிருமம் ஞானம் பெற எனக்கு வழி சொல்லுங்கள் என்று கேட்டார்.

மகனே! நீ மதிலைக்கு செல்! அரசர் கனகரே உனக்கு பிருமம் ஞானம் வழங்கத் தகுந்தவர் என்றார் வியாசர்.

முதிலை அரண்மனையை அடைந்த சுகமுனிவர் அங்கிருந்த காவலர்களிடம், உங்கள் அரசரிடம் சுகப் பிரும்ம மகரிஷி வந்திருக்கிறார் என்று சொல்லுங்கள் என்றார்

அரசரிடம் சென்ற காவலர்கள் சுகப் பிரும்ம மகரிஷி வந்திருப்பதாகச் சொன்னார்கள்.

அதற்கு அரசர் அவருடன் வந்திருக்கும் நான்கைந்து பேரை விட்டு விட்டு் அவரை மட்டும் வரச் சொல்லுங்கள் என்றார்.

குறுக்கிட்ட காவலாளி ஒருவன். அரசே! அவர் மட்டும் தனியே தான் வந்திருக்கிறார் என்றான்.

நான் சொன்னதை அப்படியே அவரிடம் தெரிவி என்றார் அரசர்.

திரும்பி வந்த காவலர்கள் உங்களுடன் வந்திருக்கும் நான்கைந்து பேரை விட்டு விட்டு உங்களை மட்டும் தனியே வரச் சொன்னார் அரசர் என்றார்கள்.

இதைக்கேட்டு சிந்தனையில் ஆழ்ந்தார் சுக. முனிவர். தன் பெயருக்குப் பின்னால் பிரும்ம மகரிஷி அவர்கள் என்று குறிப்பிட்டதைத்தான் அரசர் நான்கைந்து பேர் என்று சொல்லி இருக்கிறார் என்பது அவருக்குப் புரிந்து விட்டது.

சுகப் பரும்மம் வந்திருப்பதாக உங்கள் அரசரிடம் சொல்லுங்கள் என்றார் அவர்.

காவலர்கள் சென்று அப்படியே அரசனிடம் சொன்னார்கள்.

அதற்கு அவர் தனியேதானே அவரை வரச் சொன்னேன். துணைக்க ஒருவரை வைத்துக் கொண்டிருக்கிறாரே. அவரையும் விட்டுவிட்டு வரச் சொல்லுங்கள் என்றார்.

காவலர்கள் சென்று சுகமுனிவரிடம் அப்படியே சொன்னார்கள்.

உங்கள் அரசனிடம் சுகன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் என்றார்.

அவரை உள்ளே அனுப்புங்கள் என்றார் அரசன்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Tue Mar 09, 2010 8:24 pm

சிவா wrote:
கிழவனும் மரமும்

இலையுதிர் காலம், அந்த மரம் மொட்டையாய் நின்றது. கிழவன் ஒருவன் அதனருகே சென்றான். விறகுக்காக சில கிளைகளைத் தறித்து எடுத்தான். ‘எனது வீட்டிற்கு முன்னாலே இத்தகைய மரம் இன்கின்றபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும்? என்று தன்னுள் சொல்லிக் கொண்டான்.

மரங்கள் தளிர்த்துப் பழங்கள் சுமந்த வேளை. கிழவன் வீட்டு மரம் நிறைய இலை தெரியாமல் பழங்கள். பழங்களைப் பறித்தான் கிழவன். ‘இனிமேல் இந்தப் பழமரத்தில் பழங்கள் பறிக்கமாட்டேன்.

மீண்டும் இலையுதிர் காலம் அதே மரத்தில் மீண்டும் பழங்கள். இனி ஒரு போதும் கிளைகளை வெட்டக்கூடாது.

இலையுதிர் காலம், மீண்டும் கிளைகளை வெட்டினான் கிழவன்

வசந்தம் வந்தபோது கிழவன் மரத்தைப் பார்த்தான்.

மரம் நின்றது மொட்டையாக.

-சீனக் கதை
சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 677196 சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 677196 சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 677196 சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 677196
சிறப்பான கதை!இதுக்க எழுதிகிறேன் ஒரு கவிதை!

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 8:27 pm

நிலைத்து நிற்க முடியுமா?

முன்னொரு காலத்தில் விதர்ப்ப நாட்டை சிந்துவன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவனுக்கு முஞ்சன் என்ற தம்பி இருந்தான்.

அரசனுக்கு ஒரு மகன் பிறந்தான. மகனுக்கு போசன் என்று பெயர் இட்டான் அவன். பிறந்த நாளைக் கணித்த சோதிடர்கள் பிற்காலத்தில் போசனே இந்த நாட்டை சீரும் சிறப்புமாக ஆள்வான். ஆவன் புகழ் உலகெங்கும் பரவும் என்றார்கள். இதைக் கேட்ட அரசன் மகிழந்தான்.

போசனுக்கு பன்னிரண்டு வயது நடந்து கொண்டிருந்தது. திடீரென்று நோய் வாய்ப்பட்ட சிந்துவன் இறந்துவிட்டான். முஞ்சனே அரியணை ஏறினான்.

சோதிடர்கள் சொல்லியதை நினைத்தான் அவன். போசனை ஒழித்தால்தான் தன் ஆட்சி நிலைக்கும். அதற்கு என்ன செய்வது என்று யோசித்தான்.

கொலைஞர்கள் சிலரை அழைத்த அவன். நீங்கள் போசனைக் காட்டிற்கு அழைத்துச் சென்று அங்கேயே அவனைக் கொன்று விடுங்கள் என்ற கட்டளை இட்டான்.

அதன்படியே கொலைஞர்கள் போசனை காட்டிற்குள் இழுத்து சென்றார்கள்.

தான் தப்பிக்க முடியாது என்று உணர்ந்தான் போசன். கொஞைர்களைப் பார்த்து நான் சொல்லும் ஒரு செய்தியை அரசரிடம் சொல்லி விட்டு வாருங்கள். அதன் பிறகு என்னைக் கொல்லுங்கள். நானும் மகிழ்ச்சியுடன் சாகிறேன், என்றான்.

என்ன செய்தி? உடனே சொல் என்று கேட்டான் கொலைஞர் தலைவன்.

மனுமுதல் எத்தனையோ கோடி அரசர்கள் இந்த உலகில் தோன்றி மண்ணோடு மண்ணாகி விட்டார்கள். இந்த உலகில் நிலைத்து வாழ்பவர் யாரும் இல்லை. என் சிறிய தந்தையார் மட்டும் நிலையாக இருப்பாரா என்ற கேட்டு வந்தது சொல்லுங்கள் என்றான் போசன்.

கொலைஞர் தலைவன் மட்டும் அரசரிடம் சென்றான். போசன் சொன்னதை அப்படியே சொன்னான்.

இதைக் கேட்ட முஞ்சன் நல்லறிவு பெற்றான். நிலையில்லாத இந்த வாழ்வுக்காக மகனையே கொல்லத் துணிந்தேனே என்று வருந்தினான்.

காட்டிற்கு ஓடி வந்த அவன் போசனை கட்டித் தழுவிக் கொண்டான். மகனே!

எப்படிப்பட்ட பாவம் செய்ய இருந்தேன். உன்னால் திருந்தினேன். இனி நீயே அரியணையில் அமர்ந்து இந்த நாட்டை ஆள்க! என்றான்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 8:28 pm

நியாயமான கட்டணம்!

சூஃபி அறிஞரான சூனூன் ஒரு கல்வி நிலையம் நடத்தி வந்தார்.

தம்மிடம் புதிதாக மாணவனாகச் சேரவரும் ஒவ்வொருவரையும் பார்த்து இதற்கு முன் நீ எந்த ஆசிரியரிடமாவது கல்வி கற்றிருக்கிறாயா? அல்லது முதல் முறையாக என்னிடம்தான் கல்வி கற்க வருகிறாயா? என்று கேட்பார்.

இங்குதான் முதன் முறையாக கல்வி கற்க வருகிறேன் என்றால் உரிய கட்டணம் வாங்குவார். ஏற்கனவே ஒரு ஆசிரியரிடம் கல்வி கற்றிருக்கிறேன் என்றார் இரட்டிப்பு கட்டணம் வாங்குவார்.

அவரின் விந்தையான இந்த நடவடிக்கையை கண்டு எல்லோரும் வியப்பு அடைந்தனர். நண்பர் ஒருவர் அவரிடம் ஏற்கனவே கல்வி கற்றவர்க்கு நீங்கள் கற்றுத் தர வேண்டியது அதிகம் இருக்காது. அவரிடம் அரைப் பங்கு கட்டணம் வாங்கினால் போதும். புதிதாக கற்க வருபவரிடம் முழுத்தொகையும் வாங்க வேண்டும்.

இதுதான் உலக வழக்கம். ஆனால் நீங்களோ புதிதாக கற்க வருபவரிடம் வாங்குவதைப் போல இரட்டிப்பு கட்டணம் ஏற்கனவே கல்வி கற்று வருபவர்களிடம் வாங்குகிறீர்களே அது ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அவர், நண்பரே! நான் கற்றுத்தரும் கல்வி மாறுபாடானது. என் விதிமுறைகள் வேறுபாடானவை. ஏற்கனவே கல்வி கற்றவர் என்னிடம் வந்தால் அவர் கற்றிருப்தை எல்லாம் மறக்க வைக்க நான் உழைத்தாக வேண்டும். புதிதாக வருபவர் நான் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்வார். அவருக்காக நான் அதிகம் உழைக்க வேண்டியது இருக்காது. அதனால்தான் இப்படிப்பட்ட கட்டணம் என்று விளக்கினார்.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 8:14 pm

பொறுத்துப் போகவேண்டும்?

ஓர் ஊரில் இளைஞன் ஒருவன் இருந்தான். அவன் தன் தாயின் மீது உயிரையே வைத்திருந்தான். தன் வீட்டில் அழகான பச்சைக்கிளி ஒன்றை வளர்த்து வந்தான் அவன். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் அதனுடன் கொஞ்சிப் பேசிக் கொண்டிருந்தான்.

திடீரென்று அவன் தாய் நோய் வாய்ப்பட்டாள். படுத்த படுக்கையாகக் கிடக்கும் தன் தாயின் நிலையைக் கண்டு வருந்தினான். அவன் அவளுடைய தேவைகளை எல்லாம் உடனுக்குடன் அன்புடன் கவனித்து வந்தான்.

வேலைகளை முடித்து விட்டு மாலை நேரம் வீடு திரும்பினான் அவன். கூண்டில் இருந்த கிளி கீக்கீ என்று உரத்த குரலில் கத்திக் கொண்டிருந்தது.

தன் தாய்க்கு இந்தக் கிளியின் கூச்சல் தொல்லை தரும் என்று நினைத்தான் அவன். கூண்டுடன் கிளியைத் தூக்கி சென்று தன் நண்பனின் வீட்டில் விட்டு வந்தான்.

மகனே இங்கிருந்த கிளி எங்கே? என்று மெல்லிய குரலில் கேட்டாள் தாய்.

அம்மா! அந்த கிளியை விட நீங்கள்தான் எனக்கு இன்றியமையாதவர். அது கீக்கீ என்று கத்தி உங்களுக்குத் தொல்லை தந்தது. என் நண்பனின் வீட்டில் விட்டு விட்டு வந்தேன. இனி நீங்கள் நன்றாகத் தூங்கலாம் என்றான்.

மகனே! ஒரு குடும்பம் என்றால் அதில் பல உறுப்பினர்கள் இருப்பார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையாக நடந்து கொள்வார்கள. நாம்தான் பொறுத்துப் போக வேண்டுமே தவிர அவர்களை விரட்டக் கூடாது. உன்னைப் போலவே அந்த கிளியிடம் அன்பு வைத்திருக்கிறேன். அது எனக்கு தொல்லை தருவதாக நான் நினைக்கவில்லை. போய் அதைக் கொண்டு வா என்றாள்.

சிறிது நேரத்தில் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் அவன் கையில் கிளி இருந்தது.

சிந்திக்க வைக்கும் குறுங்கதைகள் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக