புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
5 Posts - 63%
Barushree
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
prajai
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
2 Posts - 3%
Shivanya
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Barushree
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்கள் பற்றி சில செய்திகள்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 11:59 pm

First topic message reminder :

தோடுடை யசெவி யன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடை யசுட லைப்பொடி பூயென்
னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடை யமல ரான்முயை நாட்பணிந்
தேத்த அருள்செய்த
பீடுடை யபிர மாபுர மேவிய
பெம்மா னிவ னன்றே.

-தேவாரம்.

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ வழிபாடு” செய்வார்கள். நம் முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ வழிபாடு”.

பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.

பெருங்கோயில் - மாடக் கோயில்

குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.

கரக்கோயில்

தேரைப் போன்ற அமைப்புள்ளது.

ஞாழற் கோயில்

நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.

இளங்கோயில்

பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.

மணிக்கோயில்

மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.

கொகுடிக் கோயில்

முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.

ஆலக்கோயில்

ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:42 pm

காஞ்சிபுரத்தில் பார்க்க வேண்டிய கோவில்கள்

1. அருள்மிகு காமாட்சியம்மன் ஆலயம்.
2. அருள்மிகு ஏகாம்பரநாதர் ஆலயம்.
3. அருள்மிகு வரதராஜப்பெருமாள் ஆலயம்.
4. அருள்மிகு வைகுந்த பெருமாள் ஆலயம்.
5. அருள்மிகு கைலாசநாதர் ஆலயம்.
6. குமரக்கோட்டம்.

”காஞ்சி பட்டு” உலகப் புகழ் வாய்ந்தது.

மகாபலிபுரம் எனும் மாமல்லபுரம்

ஒரு காலத்தில் பல்லவர் கால துறைமுகமாக இருந்தது. சென்னையில் இருந்தும், காஞ்சிபுரத்தில் இருந்தும் செல்லலாம்.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 11:46 pm

நீரின்றி அமையாது உலகு - இந்த வார்த்தையை நமது முன்னவர்கள் தௌ;ளத் தெளிவாக உணர்ந்துள்ளனர். பண்டைய நாகரிங்கள் அனைத்தும் நதிக்கரைகளில் தோன்றி, சீரும் சிறப்பும் ஆக திகழ்ந்தது. நதிக்கரைகளில் உள்ள தென்னை, வாழை, பாக்கு, வெற்றிலை ஆகியவற்றை கொண்டே நம் முன்னோர்கள் இறைவனை வழிபாடி உள்ளார்கள். பல வண்ண மலர்களை கண்ட அவர்களுக்கு, அதை கடவுளுக்கும் சூட்ட வேண்டும். என்ற எண்ணம் வந்திருக்க வேண்டும். கால, காலமாக செய்த இந்த வழிபாட்டு முறைகளை தான் நாமும் தற்சமயம் செய்து கொண்டு இருக்கிறோம்.

கோவில், கோட்டம் என்றால் மாளிகை என்று அர்த்தம். கடவுள் வாழும் அரண்மனை என்பதை தான் கோவில் என்ற வார்த்தை குறிப்பிடுகிறது. ஆலயம் என்ற வார்த்தைக்கும் கீழ்கண்டவாறு நாம் அர்த்தம் கொள்ளலாம். ஆன்மா லயிக்கும் இடம் ஆலயம்.

முதன் முதலில் மரத்திற்கு கீழே உருவத்தை வைத்து வழிபட்டு வந்திருக்கின்றார்கள், நம் முன்னவர்கள். இயற்கையில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள, தனக்கு கூரை அமைத்துக் கொண்ட மனிதன் தான் வழிபாடும் இறைவனுக்கும் கூரை அமைத்துள்ளான்.

முதலில் கர்ப்பக்கிரகம் என்ற மூலஸ்தானத்தை உருவாக்கி இருக்கிறார்கள். பின்னர், காலப்போக்கில் பல மன்னர்களின்

ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட கர்ப்பக்கிரகங்கள். அளவில் சிறியதாக இருந்த காரணத்தாலும். அனைவரையும் உள்ளே விடுவதற்கு தடை ஏற்பட்டு இருக்க வேண்டும். இதன் காரணமாகவே, இறைவன் திருவுருவை அர்த்த மண்டபத்தில் வழிபாட்டிற்காக வந்து நிற்கும் அனைவரும் தரிசனம் செய்யும் நோக்கில் தீப ஆராதனைகள் தோன்றியிருக்க வேண்டும்.

சங்ககாலம் முதல் நம் இந்தியாவை ஆண்டு வந்தவர்கள் இந்து மதத்தைச் சார்ந்த மன்னவர்கள். அவர்களுக்கிடையே நடக்கும் போர்காலங்களில் மக்கள் வசிக்கவும், பாதுகாப்பாக நீர், உணவு வகைகளை சேமித்து வைக்கவும் கோவில்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

அமைதி காலத்தில், கோவில்கள் மக்கள் கூடும் சமூக கூடங்களாக செயல்பட்டு வந்துள்ளன. கோவில்கள் மூலமாக பாட சாலைகளும், நோயாளிகளை குணப்படுத்தும் ஆதுரஞ்சாலைகளும் இயங்கி வந்துள்ளன.

கோவிலுக்கு வழங்கப்படும் காணிக்கை வகைகளுக்கும் மகத்துவம் உள்ளது. இவைகளை கொண்டு அந்த கோவில்களுக்கு விழா எடுக்கவும். அவ்விழா காலங்களில் வரும் யாத்ரீகர்களுக்கு உணவு வழங்குகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. தொலை தூரத்தில் இருந்து வரும் பயணிகளுக்காகதான் கோவில்களில் தெப்பக்குளங்கள் கட்டப்பட்டு வந்துள்ளன. இத்தெப்பக்குளங்களை யாரும் அசுத்தப்படுத்தவில்லை. அவைகள் ஒழுங்காகவும் பராமரிக்கப்பட்டுள்ளன.

சாதி வேறுபாடுகள் அந்த காலத்தில் இருந்து நம் வெள்ளையரிடம் இருந்து சுதந்திரம் வாங்கியது வரை இருந்தது. இதனால்கோவிலுக்குள் உள்ளே அனுமதிக்கப்படாமல் இருந்தவர்களும், இறைவனை வழிபட வேண்டும் என்று சில நல்லெண்ணம் தோன்றியதன் விளைவே, திருவிழாக்காலங்களில் இறைவனின் வீதிவுலாக்கள் . காலகட்டத்தில் இவற்றின் வளர்ச்சியே தேர்த்திருவிழாக்கள்.

ஆக மொத்தம் கோவில்கள் என்பது ஆன்மீகத்தோடு, இலக்கியம், பாதுகாப்பு, மனித நேயம் போன்ற பலவற்றோடு சம்பந்தப்பட்டது. மன்னர்கள் தங்கள் வெற்றி கொண்ட மன்னர்களின் செல்வத்தையும், பிடித்து வரப்படும் மாற்றரசர்களின் படை வீரர்களையும் கோவில் பணிக்காக பயன் படுத்தியுள்ளனர்.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 11:47 pm

திருக்கோவில்கள் பற்றிய சில செய்திகள்

* மதுரை அன்னை மீனாட்சி ஆலயம் கொடி கம்பத்தில் முன் மன்னர் திருமலை நாயக்கர், இரு மனைவியர் உருவங்கள் தரையில் செதுக்கப்பட்டுள்ளன. மீனாட்சியை தரிசிக்க செல்பவர்களின் திருவடிகள் தன் மீது படவேண்டும் என்ற உயரில் எண்ணமே இதற்கு காரணம்.

* 63 நாயன்மார்களில்ஒருவரான மூர்த்தினாயனார், தன் முழங்கைகளை தேய்த்துக் கொண்டதாக சொல்லப்படும் கல் மீனாட்சி சன்னதிக்கு முன் உள்ள மண்டபத்தின் வட கிழக்கு கோடியில் வைக்கப்பட்டுள்ளன. பள்ளியறை பூiஜக்காக வரும் சுவாமிகளை, இங்கே ஒரு நிமிடங்கள் தங்க செய்து அப்புனித கல்லிற்கும் தீபாரதனை காண்பிக்கப்படும்.

* நடராஜரின் நடன சபைகள்

திருவலங்காடு - இரத்தின சபை
சிதம்பரம் - பொற்சபை
மதுரை - வெள்ளி சபை
திருநெல்வேலி - தாமிர சபை
திருக்குற்றாலம் - சித்திரசபை

* பஞ்ச பூதத்தலங்கள்

சிதம்பரம் - வான்
காஞ்சி - நிலம்
காளஹஸ்தி - வாயு
திருவண்ணாமலை - நெருப்பு
திருவானைக்காவல் - நீர்

* பலி பீடத்திற்கும், கர்ப்பக்கிரகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இறைவனை தவிர யாரையும் வணங்குதல் கூடாது. பலி பீடத்திற்கு முன்புறமே கீழே விபந்து வணங்க வேண்டும். இறைவா, என்னையே நான் உனக்கு பலி கொடுக்கிறேன். என் பாவங்களை எல்லாம் மன்னிப்பாயாக என்பதே இதன் அர்த்தம்.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 12:26 am

சில கோவில் - சில செய்திகள்


1. நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாடல்களைத் தொகுத்தவர் ஆச்சார்ய நாதமுனி அவர்கள்.

2. நாதஸ்வரம் - பண்டை காலத்தில் பெருவங்கியம் என்று அழைக்கப்பட்டது.

* கோவில்கள் வெவ்வேறு பொழுதுகளில் இசைக்கப்படும் இராகங்கள் (நாதஸ்வரம் மூலமாக தான்).

* திருப்பள்ளியெழுச்சி - பூபாளராகம்.
* காலை வேளை ஆராதனை - பிலஹரி, தன்யாசி, மலயமாருதம்.
* உச்சி வேளை ஆராதனை - இதமான இராகங்களாக மத்யமாவதி, சுருட்டி, தேவகாந்தாரி.
* மாலைவேளை - பூர்வகல்யாணி, கேதார கௌலம், சங்கராபரணம்.
* இரவு - அடானா, ஆனந்த பைரவி, யதுகுலகாம்போதி, பைரவி, நீலாம்பரி.
* உள்பிரகார ஊர்வலத்தின் சமயம் மூர்த்தியை தூக்கி இறக்கும் பொழுது மஞ்சத்தில் அமர்த்தும் போதும் - மல்லாரி ராகம்.
* தோள்களில் பல்லாக்கை தூக்கி வரும் போது - நாட்டை, ஆரபி, ஸ்ரீராகம், வராளி.
* மூர்த்தியை பள்ளியறையில் வைக்கும் பொழுது - நீலாம்பரி


3. நாட்டிய சாஸ்திரம் நூலை பரதமுனிவர் கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் சமஸ்கிருத மொழியில் எழுதியுள்ளார்.

4. கி.பி. 1238 முதல் கி.பி. 1264 வரை ஒரிசாவை ஆட்சி செய்த நரசிம்மதேவன் காலத்தில் கட்டப்பட்டது கொனாரக் சூரியனார் கோவில் தேர்வடிவில் உள்ள இக்கோவில் அடிப்பகுதியில் 8 அடி உயரமுடைய 24 சக்கரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதயம், அஸ்தமனம் பொழுதில் கர்ப்பக்கிரகத்தில் சூரிய ஒளி விழும்.

5. மதுரை மீனாட்சி அம்மன் ஆலய பொற்றாமரைக் குளத்திற்கும், திருக்குறளுக்கும் சம்பந்தம் உண்டு. இக்குளத்தில்தான் சங்கப்பலகை, தன் மீது வைக்கப்பட்ட பிறநூல்களை தள்ளிவிட்டு. திருக்குறளை மட்டும் ஏற்றுக் கொண்டது.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 12:26 am

6. தஞ்சை பெரியக் கோவிலில் உள்ள முருகப் பெருமான் ஆலயம், பதினேழாம் நூற்றாண்டை சேர்ந்த தஞ்சை நாயக்கர் மன்னர்களின் பணி, பெரிய கோவிலின் பெரிய நந்தியும் இவர்களது படைப்பு.
7. திருவையாறு வடகைலாயம் கோயில் முதலாம் இராசராசனின் மனைவியான உலகமாதேவியாரால் கட்டப்பட்டது. (கல்கி அவர்கள் எழுதிய பொன்னியின் செல்வன் வானதி இவர்தானோ!

8. அருள்மிகு ரமணரின் சீடரான பால்பிரண்டன் என்ற அன்பர் எழுதிய நூல் A SEARCH IN SECRET INDIA ரமணர் எழுதிய நூல்களில் முக்கியமானது உபதேச வுந்தியா உள்ளது நாற்பது

9. அரியலூர் அருகேயுள்ள ஏலாக்குறிச்சி தேவாலயம் இத்தாலிய மதப்போதகரான வீரமாமுனிவரால் கட்டப்பட்டது.

10. வடலூரில் இருந்து சிதம்பரத்தின் நான்கு கோபுரங்களை தரிசனம் செய்யலாம்.

11. சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள புனிதமேரி தேவாலயம் 1680-ல் கட்டப்பட்டது. இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி வேரூன்ற காரணமாக இருந்த இராபர்ட் கிளைவ் மற்றும் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தை சேர்ந்த எலியூ யேல் அம்மையார் ஆகியோரது திருமணங்கள் இங்கு நடந்துள்ளன.

12. தமிழகத்தில் சுமார் 60,000 கோவில்கள் உள்ளன.

13. மகேந்திரவர்ம பல்லவர் சங்கீர்ண ஜாதி எனும் தளத்தை உண்டாக்கினார். இவர் இயற்றிய நூல் மத்தவிலாசம் பிரகசணம் எனும் நாடக நூல்.

14. அகத்தியர் எழுதிய அகத்தியம் என்ற நூலுக்கு உலகில் எங்கும் பதிப்பு கிடையாது. அந்த நூலுக்கு பிரதியும், தற்காலத்தில் காணப்படவில்லை.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 12:27 am

15. சீக்கியர்களின் புனித நூலான குருகிரந்தசாகிப் முதலில் குரு அர்ஜூனரால், 1601 ஆண்டு தொகுக்கப்பட்டது. பின்னர், பத்தாவது குரு கோவிந்த சிங் காலமான பின்னர் பாய்மானி சிங் என்பவர். குரு கிரந்த சாகிப்பைத் தொகுத்து ஒழுங்குப் படுத்தினார்.

16. பௌத்த மதத்தின் நான்கு புனிதத் தலங்கள்.

- புத்த மகான் அவதரித்த இடம் - நேபாளத்தில் உள்ள லும்பினி
- முதலில் உபதேசித்த ஊர் - வாரணாசி அருகே உள்ள சாரநாத்.
- ஞானம் பிறந்த தலம் - பீகாரில் உள்ள புத்தகயா.
- மறைந்த இடம் - கோரக்பூர் அருகில் உள்ள குஷி நகரம்.

17. தாஜ்மஹால் மாதிரி வரைபடத்தை தயாரித்தவர் உஸ்தாத் இசாகான் எப்பென்டி என்பவர். மேலே உள்ள குவிமாடத்தை வடிவமைத்தவர் கட்டிடக் கலைஞர் இசுமாயில்கான்.

18. உலகில் உள்ள பெரிய தொழுகை இடங்களில் ஒன்று டெல்லி, ஜிம்மா மசூதி.

19. காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி (குன்னக்குடி) திருத்தலத்தில் முருகர், வள்ளி, தெய்வானை ஆகிய மூவரும் மூன்று மயில்கள் மேல் அமர்ந்துள்ள திருக்கோலம் அரியது.

20. சிவாலயங்கள் கருவறைக்குப் பின்புற சுவரில், கி.பி. 871 முதல் 907 வரை சோழப் பேரரசனாக விளங்கிய முதலாம் ஆதித்த சோழர் காலத்தில் இருந்தே இலிங்கோற்பவ வடிவை அமைக்கும் மரபு பின்பற்றப்பட்டு வருகிறது.

21. திருத்தணிகை (திருத்தணி) வீரட்டானேசுவரர் திருக்கோவில் பல்லவ மன்னரில் கடைசி மன்னரான அபராஜிதவர்மன் (கி.பி. 875-893) காலத்தில் நம்பி அப்பி என்பவரால் கட்டப்பட்டது. பல்லவ பேரரசர்களின் கடைசிக் கோவில்.

22. வாடிகன் நகர, புனித பீட்டர் தேவாலயம், எழுப்பும் பொறுப்பு பிரபல கலைஞர் மைக்கல் ஏஞ்சலோவிடம் கொடுக்கப்பட்டது. 1506ல் தொடங்கப்பட்ட தேவாலயப் பணிகள் 120 ஆண்டுகள் தொடர்ந்து வேலை செய்யப்பட்டது. 1626ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பணி நிறைவெய்தியது.

23. கூபநூல் - இது மிகவும் பழமையான தமிழ் நூல். பாடல் வடிவில் உள்ள ஓலைச்சுவடி. இதில் நீர் நிலத்தில் இருக்கும் இடங்களை தெரிந்து கொள்ளலாம். இதை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் நூலாக பதிப்பித்துள்ளனர்.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 09, 2010 12:27 am

24. வடமொழியில் சங்கரர் திருச்செந்தூர் முருகன் மீது சுப்ரமணிய புஜங்க ஸ்தோத்திரம் என்ற நூலில் பாடல்கள் பாடியுள்ளார்.

25. சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தமிழக கோவில்கள் மதுரை அழகர்கோவில் திருவரங்கம் மற்றும் திருவேங்கடம்

26. கர்நாடகாவில் உள்ள சிரவண பெலகோலா கோமதேஸ்வரர் சிலை, முதல் தீர்த்தங்கரர் ஆன பூருதேவர் மகனான பாகுபலி என்ற புஜபலி அவர்களுக்காக 58 அடி உயரத்தில் எழுப்பப்பட்டுள்ளது. (பெலகோலா - வெள்ளைக்குளம்). கோமதேஸ்வரர் சிலை தென்கன்னடம் ஜில்லாவில் கர்க்கலா (45 அடி உயரம்), என்னூர் (35 அடி உயரம்) ஆகிய இடங்களிலும் காணப்படுகிறது.

27. மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள எல்லோராவை அடுத்துள்ள வேறுள் என்ற கிராமத்தில் இருக்கும் குஸ்ருனேஸ்வரர் கோவில் தஞ்சைப் பெரிய கோவிலை போன்றது. இரண்டுமே தக்ஷணமேரு விமானங்கள். இக்கோவிலின் முக்கிய விஷயம் இக்கோவில் சிகப்பு வர்ண கல்லால் கட்டப்பட்டுள்ளது. ஆவுடையாரும் குங்கும வர்ணத்திலே தான் உள்ளார்.

28. சாஞ்சி ஸ்தூபி 1912ல் புதை பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

29. குஜராத் சோமநாதபுரம் கோவிலை, சுதந்திரத்திற்கு பிறகு கடைசியாக கட்டியவர் சர்தார் வல்லபாய் படேல் கஜினிமுகமது படையெடுப்புக்கு பெரும் இன்னல்கள் அனுபவித்தது இக்கோவில்தான்.

30. தமிழகத்தில் உள்ள கிராம, நகர, பிரபலம், பிரபலமில்லாத அனைத்து இந்து கோவில்களில் ஓர் ஒற்றுமை உண்டு. அது கர்ப்பக்கிரகம் நுழைவாயின் மேல்புறம் கஜலெஷ்மி உருவம் காணப்படும்.

நமது கற்பனைக்காக திரிகூடராசப்ப கவிராயரின் திருக்குற்றாலக் குறவஞ்சியில் இருந்து ஒரு பகுதி.

வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்தி சிந்து கனிகளுக்கு வான்கவிகள் கொஞ்சும்
கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பார்
கமனசித்தர் வந்துவந்து காயசித்தி விளைப்பார்
தேனருவி திரை எழும்பி வானின் வழி ஒழுகும்
செஞ்கதிரோன் பரிக்காலும் தேர்காலும் வழுகும்
கூனலினம் பிறைமுடித்த வேணியலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே.




கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Mar 09, 2010 2:05 am

கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 677196

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 10:23 pm

சிலப்பதிகாரத்தில் கூறப்பட்டுள்ள சில கோயில்கள்.

அரசன், இறைவனுக்குரியது - கோயில்
திருமாலுக்குரியது - நியமம்
பலதேவர்க்குரியது - நகரம்
முருகவேளுக்குக்குரியது - கோட்டம்
அறவோர் இருப்பிடம் - பள்ளி

என கூறுப்பட்டுள்ளது.



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed May 05, 2010 10:24 pm

தேர்களை பற்றிய சில விபரங்கள்.

ஜகந்நாதர் தேர் - 16 சக்கரங்களை கொண்டது. இந்த தேரின் மொத்த உயரம் 14 மீட்டர்.

பலராமர் தேர் - 14 சக்கரங்களை கொண்ட இந்த தேரின் மொத்த உயரம் 14 மீட்டர்.

சுபத்ரை தேர் - 13 மீட்டர் உயரம் கொண்ட இந்த தேரின் மொத்த சக்கரங்கள் 12



கோவில்கள் பற்றி சில செய்திகள் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக