புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
14 Posts - 64%
heezulia
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
3 Posts - 14%
mohamed nizamudeen
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
2 Posts - 9%
prajai
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 5%
ஆனந்திபழனியப்பன்
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 5%
வேல்முருகன் காசி
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
140 Posts - 42%
ayyasamy ram
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
129 Posts - 38%
Dr.S.Soundarapandian
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
8 Posts - 2%
prajai
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
7 Posts - 2%
Guna.D
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
வேல்முருகன் காசி
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_m10கோவில்கள் பற்றி சில செய்திகள் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்கள் பற்றி சில செய்திகள்


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 14, 2009 11:59 pm

தோடுடை யசெவி யன்விடை யேறியோர்
தூவெண் மதிசூடிக்
காடுடை யசுட லைப்பொடி பூயென்
னுள்ளங் கவர்கள்வன்
ஏடுடை யமல ரான்முயை நாட்பணிந்
தேத்த அருள்செய்த
பீடுடை யபிர மாபுர மேவிய
பெம்மா னிவ னன்றே.

-தேவாரம்.

தமிழர்கள் பெரும்பாலோர் ”குலதெய்வ வழிபாடு” செய்வார்கள். நம் முன்னோர்களை வழிபடுவதே ”குலதெய்வ வழிபாடு”.

பண்டை காலத்தில் கோவில்கள் கீழ்காணும் வகையில் வகைப் படுத்தபட்டுள்ளன.

பெருங்கோயில் - மாடக் கோயில்

குன்றுகள் மேல் கட்டப்பட்டவை பெருங்கோயில்கள்.

கரக்கோயில்

தேரைப் போன்ற அமைப்புள்ளது.

ஞாழற் கோயில்

நறுஞ்சோலைகளின் நடுவே யமைந்தது ஞாழற்கோயில்.

இளங்கோயில்

பழமையான கோயில்களுக்கு மாறாகக் காலத்தால் பிற்பட்ட கோயில்கள் இளங்கோயில்கள்.

மணிக்கோயில்

மணிபோன்ற விமான அமைப்பைக் கொண்ட கோயில்.

கொகுடிக் கோயில்

முல்லைக் கொடிகள் படந்த சூழ்நிலையில் அமைந்தது.

ஆலக்கோயில்

ஆலமரத்தடியில் எழுந்த கோயில்கள் ஆலக்கோயில்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:00 am

கோவில்கள் கலையை கீழ்கண்டவாறு பார்க்கலாம்

இந்தியக் கட்டிக் கலை (கோவில்)

* நாகரக்கலை
* வேசரக்கலை
* திராவிடர்கலை


தமிழக கோவில்கள் பெரும்பாலும் திராவிடர் கலையை சேர்ந்தவை.

கோவில்களின் கலையை, மன்னர்களின் ஆட்சி முறை அடிப்படையில், பிரெஞ்சு அறிஞர் துப்ராய் கீழ் கண்டவாறு பிரித்துள்ளார்.

பல்லவர்கள் காலம் (கி.பி. 600-850) - குடைவரைகள்.

முதற் சோழர்கள் காலம் (கி.பி. 850-1100) - விமானங்களின் காலம்.

கடைசி சோழர்கள் காலம் (கி.பி. 1100-1350) - அழகிய கோபுரங்களின் காலம்.

விஜயநகர காலம் (கி.பி. 1350-1600) - அழகிய மண்டபங்களின் காலம்.

கி.பி. 1600-க்கு பிறகு - அழகிய பிரகாரங்களின் காலம்.

காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட பல்லவர்கள் காலத்தில் தான் தமிழகத்தில் கோயில்கள் கலைக்கு ஓர் மறுமலர்ச்சி ஏற்பட்டது. அதில் முக்கியமானவர் மகேந்திரவர்மர் (கி.பி. 610-630). இவர்சிம்ம விஷ்ணுவின் மகன் (கி.பி. 575-610). மகேந்திரவர்மா காலத்தில் தான் தமிழகத்தில் பல இடங்களில், பல குடைவரைக் கோயில்கள் தோன்றின.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:01 am

பல்லவர் கால கட்டிடக்கலை

* குடைவரைக் கோயில் (ஒற்றைக் கல் இரதங்கள்)

டி மகேந்திரன் மாமல்லன் பாணி

* கற்றளிகள்

டி இராஜசிம்மன் நந்திவர்மான் பாணி

மகேந்திரவர்மா காலத்து குடைவரைக் கோவில்கள்

1. மண்டகப்பட்டிலுள்ள இலச்சி தாயனக் குடைவரை.
2. பல்லாவரத்திலுள்ள பஞ்ச பாண்டவர் குடைவரை.
3. குரங்கணில் முத்தத்திலுள்ள கல் மண்டபம்.
4. வல்லத்திலுள்ள வசந்தேசுவரர் மண்டபம்.
5. மாமண்டூரிலுள்ள உருத்திர வால்சுவர மண்டபம்.
6. மகேந்திர வாடியிலுள்ள மகேந்திர விஷ்ணு கிரகம்.
7. தளவானூரிலுள்ள சத்துரு மல்லன் மண்டபம்.
8. சீய மங்கலத்திலுள்ள அவனி பாஜன பல்லவேசுவ கிரகம்.
9. திருச்சி மலை கோட்டையிலுள்ள லலிதாங்குரன் மண்டபம்.
10. பஞ்ச பாண்டவர் மண்டபம். இது விளாம்பாக்கத்திலுள்ளது.

இவர் வேளாண்மைக்காக மாமண்டூர் அருகில் சித்ரமேக தாடகம் என்ற குளத்தை வெட்டியுள்ளார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:06 am

“ யானைக்கு தும்பிக்கை,
மனிதனுக்கு நம்பிக்கை,
என உலகுக்கு
உணர்த்திய வித்தகனே,
உத்தமனே. சரணம், சரணம். “


யானையின் உடல் உறுப்பில் அதன் முக்கிய பலமாக கருதப்படுவது தும்பிக்கை. அது போல் மனிதன் கடவுள் மேல் நம்பிக்கையோடு இருந்தால், அதுவே அவனை கரை சேர்க்கும், புத்துணர்ச்சியை தரும் என்ற எளிய தத்துவத்தை உணர்த்துவதே விநாயகரின் உருவம்.

திருச்செங்காட்டங்குடி - தஞ்சையை தலைநகராக கொண்ட சோழநாட்டில், நன்னிலம் வட்டத்தில் உள்ளது. இங்கே உள்ள ஆலயம் கணபதீச்சுவரம். இக்கோவிலின் விநாயகர் வாதாபி கணபதி என்றும் அழைக்கப்படுகிறார். இதை இங்கே அமைத்தவர் பரஞ்சோதி எனும் சிறுத் தொண்டர். 63 நாயன்மார்களில் இவரும் ஒருவர். மாமல்லர் எனும் நரசிம்ம பல்லவர் ( கி.பி. 630 - 668 ) இரண்டாம் புலிகேசியை வெற்றி கொள்ள வாதாபியை நோக்கி படை எடுத்தார். அந்த போரில், மன்னருக்கு வெற்றியைத் தேடி தந்தவர் அவரின் படை தளபதியான பரஞ்சோதி. அவர்கள் வாதாபி கோட்டையை தகர்க்கும் முன், கோட்டை வாயிலில் இருந்த விநாயகர் உருவை தனியாக எடுத்து வைத்துவிட்டு, பின்னரே கோட்டையைத் தகர்த்தார். பின்னர் மன்னரின் அனுமதியோடு தனது ஊரான திருச் செங்காட்டாங்குடியில் எழில் மிகுந்த கோவில் அமைத்து வழிபட்டார் என்பது வரலாறு. தமிழகத்தில், கணபதி வழிபாடு துவங்கியது இந்நிகழ்ச்சிக்கு பிறகு தான் என்று பல வரலாற்று ஆசிரியர்கள் கூறியுள்ளனர்.

அமரர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்கள் கூட தனது வரலாற்று நாவலான சிவகாமியின் சபதத்தில் இந்த சம்பவத்தை உணர்ச்சி பூர்வமாக எழுதியுள்ளார்.

பிள்ளையார்பட்டி - மதுரை - காரைக்குடி பேருந்து வழி தடத்தில் திருப்பத்தூருக்கு அருகே உள்ள சிற்றூர். இங்கே உள்ள குடைவரைக் கோவிலில் கற்பக விநாயகர் என்ற திருநாமம் தாங்கி பக்தர்களுக்கு அருள் புரிகின்றார்.

இவ்வாலயத்தில் மருதங்குடி நாயனார் (மருதீபர்), வாடாமலர் மங்கை எனும் திருநாமத்தோடு உமா மகேஸ்வர் வீற்றிருக்கிறார்கள்.

பிள்ளையார் வீற்றிருக்கும் குடைவரைக் கோவில் மகேந்திர வர்ம பல்லவர் காலத்தை சேர்ந்தது என்று கருதப்படுகிறது.

தற்சமயம், நகரத்தார் அறக்கட்டளையின் கீழ் இயங்கி வரும் கோயில், நகரத்தார்கள் கோவில்களில் மிகவும் முக்கியமான ஒன்று. தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள மக்களும் இந்த கற்பக விநாயகரின் அருளை நாடி மிகவும் நம்பிக்கையுடன் வருகை புரிகின்றனர்.

திருச்சிராப்பள்ளிக்கு நடுவே கம்பலுமாக எழுந்தருளியுள்ள மலைக்கோட்டை விநாயகர் ஆலயம் கல்லணையை கட்டிய கரிகால் சோழன் திருப்பணி என்று கோவிலின் தல வரலாறு கூறுகிறது.

எழில் மிகுந்த தாயுமானவர் சன்னதி, மகேந்திர வர்மா காலத்து குடைவரைக் கோவில்கள், என பலவற்றை ஒருங்கே தரிசனம் செய்யலாம், இங்கு

நுழைவாயில் மாணிக்க விநாயகர் ஆலயம் 1936ல் உருவாக்கப்பட்டது.

இம்மலைக்கோட்டை ஆங்கிலேய - பிரெஞ்சு போர்களின் பொழுது (கர்நாடகப் போர்) வெடிமருந்து கிடங்காக பயன்படுத்தப் பட்டுள்ளது.

உச்சி பிள்ளையார் பற்றி புராணம் சொல்வதை பார்ப்போம்.

இராமரின் பட்டாபிஷேகம் முடிந்தவுடன், இலங்கை மன்னர் இராமர் வழிபட்டு வந்த இரங்க விமானத்தை பரிசாக கேட்கின்றார் தனக்கு. வழியில் எங்கும் கீழே வைத்து விடக் கூடாது என்பது கட்டளை. மாலை வேளை, காவிரிக்கரையை நெருங்கி கொண்டு இருக்கிறார் இலங்கை வேந்தன் வீபீடணன். மாலை வேளை பிரார்த்தனையை செய்ய வேண்டும் தேடுகிறார், யாராவது ஒருவரை இரங்க விமானத்தை கையில் வைத்துக் கொள்வதற்காக. வருகிறார் விநாயகர் (சிறுவன்) மனித உருவில். நான் மூன்று முறை அழைப்பேன் அதற்குள் வந்து பெற்றுக் கொள்ள வேண்டும், மீண்டும் ரங்க விமானத்தை தன்னிடம் இருந்து என்று நிபந்தனை விதிக்கிறார். வீபிடணன், சென்ற சிறிது நேரத்திற்குள் மூன்று முறை மெதுவாக, வேகமாக அழைத்து விட்டு வைத்து விடுகிறார் ரங்க விமானத்தை வீபிடணன் வந்து பார்த்து விட்டு, துரத்துகிறார் விநாயகரை. ஓடும் விநாயகர், மலை உச்சியில் வேகமாக ஏறி அமர்கின்றார். மலை உச்சியில் வேகமாக ஏறி அமர்கின்றார். விரட்டி வந்த வீபிடணன், உச்சந்தலையில் தன் பலம் அனைத்தையும் திரட்டி குட்டுகின்றார். குட்டு வாங்கிய சிறுவனோ, அழுவதற்கு பதில் சிரிக்கின்றான். வீபிடணனுக்கு தன் சுய உருவில் தரிசனம் தருகின்றார். முற்காலத்தில், காவேரியின் பிரார்த்தனை இணங்க பெருமாள் அங்கே சயனம் புரிய விரும்பியதால் தான், நான் இவ்வாறு செய்தேன் என்கின்றார். அனைத்து விபரங்களும் தெரிந்த வீபிடணன், விரைக்கின்றான் மனதெளிவோடு தன் இலங்கை மாநகரை நோக்கி. இது தான் புராணம் சொல்லும் வரலாறு.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:06 am

கழுகுமலை, வெட்டுவான் கோவில்

நெல்லையின் மல்லை என்று இக்கோவிலை நெல்லைக் குடைவரைக் கோவில்கள் எனும் தனது நூலில் ஆசிரியர் தி. இராசமாணிக்கம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் கோவில் பட்டியில் இருந்து சங்கரன் கோவிலுக்கு செல்லும் வழியில் கழுகுமலை உள்ளது. இதன் பழமையான பெயர் அரைமலை இங்கு கழுகாசலமூர்த்தி எனும் திருநாமத்தில் முருகன் அருள்புரிகின்றார். அவ்வாலயம் குடைவரைக் கோவில். இந்த வெட்டுவான் கோயில் முருகன் ஆலயத்தில் இருந்து, தற்போதைய கழுகுமலை பேருந்து நிலையம் தாண்டி மலையில் உள்ளது. இக்கோவில், கிணறு போன்று மலையை கடைந்து உருவாக்கப்பட்டது. எட்டுப் பட்டைகள் கொண்ட விமானம். தென்பகுதியில் பிரம்மாவும், வடபகுதியில் மிருதங்கம் வாசிப்பது போன்ற உருவில் தெட்சிணாமூர்த்தியும் உள்ளனர். இந்த தெட்சிணாமூர்த்தி வடிவம் அபூர்வமானது.


இதற்கு சற்று கிழக்கு புறத்தில் பல்வேறு வாத்தியங்களை வாசிப்பது போன்ற தோற்றத்தில் பூதங்கள் செதுக்கப்பட்டுள்ளது. கோவில் பணிகள் பாதி முடிவடையாமல் உள்ளது. தற்சமயம் அங்கே ஒரு விநாயகரை மூலவராக கொண்டு ஊர்மக்கள் வழிபட்டு வருகின்றனர். கோவிலில் உட்புற கூரையில் விரிசல்கள் காணப்படுகிறது. அருகில், மலை மேல் பல சமண உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. மலை உச்சியில் விநாயகர் ஆலயமும் உள்ளது.

லாடக் கோயில் மதுரைக்கு அருகே உள்ள ஆணைமலை யோக நரசிம்மா ஆலயத்திற்கு அருகே உள்ள முருகனுக்கான குடை வரைக் கோவில். அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப்பெற்றது.



திருவாதவூரில் தான் 63 நாயன்மார்களில் ஒருவரான மாணிக்க வாசகர் அவதரித்தார். திருவாசகம், திருவெம்பாவை எல்லாம் இவரால் இயற்றப்பட்டது. இத்தலை மதுரைக்கு அருகே, திருமோகூர் எனும் திருப்பதியை தாண்டி உள்ளது. மாணிக்க வாசகர் கட்டியது தான் ஆவுடையார் கோவில்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 15, 2009 12:10 am

மதுரைக்கு அருகில் உள்ள ஆணைமலை யோகநரசிம்மா குடைவரைக் கோவிலின் தோற்றம். மாறன்காரி எனும் பாண்டிய மண்டலத்தின் முதலமைச்சாரால் கி.பி. 770-ல் கட்டப்பட்டது. சாதாரண மருத்துவக் குடியில் பிறந்த இவர், பாண்டிய மன்னர் நெடுஞ்சடைய பாண்டியர் கீழ் பணிபுரிந்தார். மாறன்காரி தந்தையின் பெயர் மாறன் . இவரது இளைய சகோதரர் மாறன் எயினன் என்பவரால் இக்கோவிலின் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இக்கோவிலின் அருகில் இருக்கும் இலாடக்கோயில் எனும் முருகருக்கான குடைவரைக் கோயில் அருணகிரி நாதரால் திருப்புகழ் பாடப் பெற்றது என்றும் கூறுகின்றனர். iஜன மத திருவுருவங்களும் இம்மலையில் காணப்படுகிறது.


தென்னிந்தியாவின் ஷாஜஹான் என்று வரலாற்று ஆசிரியர்களால் புகழப்படும் மன்னர் திருமலை நாயக்கரின் (கி.பி. 1623 - 1659) திருவுருவத் தோற்றம் மதுரை, கன்னியாகுமரி, ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீரங்கம் போன்ற பல இடங்களில் கோவில் திருப்பணிகள் செய்துள்ளார். குமரகுருபரர் இவர் காலத்தவர். இராபர்ட்-டி- நொபிலி எனும் கிறிஸ்துவ பாதிரியார், தமது மதப்பணிகளை செய்வதற்கு அனுமதிக்கப்பட்டார்.


திருமலை நாயக்கர் மஹால் என அழைக்கப்படும் அவரது அரண்மனையின் தோற்றம். இது மதுரை மாநகரில் உள்ளது. இது ஒரு இத்தாலிய நாட்டுக் கட்டிட சிற்பியால் வடிவமைக்கப்பட்டது. இரங்க விலாசம் , சொக்கநாத விலாசம் என்று இரு பகுதிகள் கொண்ட இந்த அரண்மனையின் சில பகுதிகள் மட்டும் தற்சமயம் எஞ்சியுள்ளன இங்குள்ள ஒவ்வொரு தூணும் 13மீ உயரம் உடையது. மன்னர் திருமலை 1623 ஆம் ஆண்டு முதல் சுமார் பதினோராண்டுக்காலம் திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார். பின்னர் பல அரசியல் காரணங்களுக்காக மதுரைக்குத் தலைநகரை மாற்றினார்.

ஆங்கிலேயர் காலத்தில் சில நன்மைகளும், விளைந்துள்ளன நமக்கு. கர்சன் பிரபு (1899-1905) காலத்தில் இயற்றப்பட்ட தொல்பொருள் பாதுகாப்புச் சட்டம், 1904 மூலமாக பழம் பெருமை வாய்ந்த இந்தியச் சின்னங்கள், கோயில்கள் பாதுகாக்கப்பட்டன. மேலும், பல புதிய கண்டுபிடிப்பு அகழ்வாராய்ச்சிகளுக்கு தனித்துறை ஏற்படுத்தப்பட்டது. சர். ஜான் மார்ஷல் என்பவர் டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார் மொகஞ்சதரோ, ஸ்ரீரப்பா போன்ற இடங்களில் அகழ்வாராய்ச்சிகள் செய்ய வழி செய்யப்பட்டது.

புருசுபுட் (Bruce Foot) என்பார் மேற்கொண்ட ஆய்வின் பயனாக நெல்லை மாவட்டத்தில் கிடைத்த ஆதிச்சநல்லூர் பண்டை கால சின்னங்கள், சர். மோர்ட்டிமர் வீலர் நடத்திய அரிக்க மேடு ( பாண்டிச்சேரி ) அகழ் ஆய்வுகள் பல வரலாற்று உண்மைகளை வெளிச்சத்;திற்கு கொண்டு வந்தனர், பிற்காலத்தில் சில ஆங்கிலேய வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய சில நூற்களும் நமது பாரதத்தில் பெருமைகளை உலகுக்கு விளக்கின.

நமது கோவில்களில் உள்ள கல்வெட்டுக்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, ஆழ்வார்கள் மற்றும் நாயன்மார்கள் பாடிய தமிழ் இலக்கியங்களும் நமது வரலாற்றை தெரிவிக்கிறது.

பொறியியலில், விண்ணை தொடும் வியப்பை அளிக்கும் நமது கோயில்கள் முற்காலத்தில் செங்கல், சுண்ணாம்பு கொண்டே உருவாக்கப்பட்டன. காலத்தை, எதிர்த்து நிற்க இயலாத அக்கட்டுமானங்கள் அழிந்தன.

என்றும் அழிவில்லாது, நிலைத்து நிற்கும் பரம் பொருளுக்கு என்றென்றும் நிற்கும் ஆலயங்கள் தேவை, என்று நமது முன்னோர்கள் சிந்தித்த விளைவே கற்கோயில்கள் எனும் கற்றளிகள் .

முதன்முதலில், நம் பாரதத்தில் கற்களை கோயில்கள் கட்டுமானத்திற்கு உபயோகித்தவர்கள் குப்தர்கள். இவர்கள் 5 ஆம் நூற்றாண்டில் முதல் முதலாக கல்களைக் கொண்டு கோயில்களை அமைத்தனர். 11ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் வஜ்ராலயம் எனும் ஒட்டுப் பொருளை கொண்டு கற்களை ஒட்டும் வரை வளர்ந்தது.

தென்னிந்தியாவில் முதன்முதலில் பல்லவர்கள், சாளுக்கியர்கள் கோயில்களை அமைத்து உள்ளனர். பிரம்மாண்டமாக மற்றும் கலை நுணுக்கத்துடன்.

தமிழகத்தில் பல்லவர் மன்னர் மகேந்திர வர்மா ( கி.பி. 610-630 ) உருவாக்க ஆரம்பித்த மாமல்லபுரம் குகைகோயில்கள் மெதுவாக வளர்ச்சியடைந்து சோழர் காலத்திலும், நாயக்கர் மற்றும் விஜயனகர பேரரசு காலத்திலும் மிகவும் உன்னதமான நிலையை அடைந்தது.

கோவில் கலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள கோவில்கள் திராவிடக் கலையை அடிப்படையாக கொண்டது. மற்றும் நகாரக்கலை , வேசரக்கலையை அடிப்படையாக கொண்ட கோயில் கட்டுமானங்கள் வடஇந்திய பகுதிகளில் காணப்படுகின்றன.

இந்தியாவில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் இலக்கிய, வரலாற்று மற்றும் புராண சிறப்புகள் பல உடையது. இவற்றை பற்றி அறிய ஆராய்ச்சி செய்பவர்களுக்கு மேலும் மேலும் பல விந்தைகளை அளிக்கின்றன இந்த கோயில்கள்.

avatar
Guest
Guest

PostGuest Mon Jun 15, 2009 8:20 pm

ஆன்மிகச் செம்மல் சிவா சார் கட்டுரைன்னா கேக்கவா வேணும்.

அ௫மை மகிழ்ச்சி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 4:37 pm

* "நடராஜர்" திருவுருவில் மதுரையில் மட்டும் பார்க்க வேண்டிய, அம்சம் ஒன்று உண்டு. இங்கு மட்டும் தான் "நடராஜர்" இடக்காலை முயலகன் மீது அழுத்தி வைத்து, வலது காலை தூக்கிய நிலையில் உள்ளார்.

* மதுரை சொக்கர் சன்னதியின் அர்த்த மண்டப வெளிபுற சுவர்களில் இறைவனின் 63 திருவிளையாடல்களை விளக்கும் கதை சிற்பங்கள் உள்ளன.

* மதுரை கம்பத்தடி மண்டபம் சிற்பங்கள் மிகவும் கலை நோக்குடன் உருவாக்கப்பட்டவை. இந்த மண்டபத்தின் தெற்கு புறம் ஓர் தூணில் ஆஞ்சநேயர் உருவம் செதுக்கப்பட்டுள்ளது. அதற்கு நேர் எதிரே "இறைவன் புட்டுக்கு மண் சுமந்ததை" நினைவு படுத்தும் வகையில் ஒர் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது. தலையில் சுமையுடன் இறைவனும், அருகில் கம்பை ஓங்கிய நிலையில் ஓர் சிறிய உருவமும் செதுக்கப்பட்டுள்ளது.

* "நடராஜர்" திருவுருவம் இருக்கும் இடங்களில், பதஞ்சலி முனிவருக்கும், விக்ரபாதருக்கும் சிலை எழுப்பப் பட்டிருக்கும் இருவரும் கைகூப்பிய நிலையில், இறைவன் திருவுரு முன் நிற்பர் இதில் "பைநாகம்" தலையில் குடை பிடித்தாற் போல் இருக்கும் தோற்றம் பதஞ்சலி முனிவருடையது. மற்றொருவர் "விக்ரபாதர்".

பல்லவர்களின் தலைநகரான காஞ்சிபுரத்திற்கு, தமிழக தலைநகரான சென்னையில் இருந்து செல்லலாம். செல்லும் வழியில் உள்ள முக்கியமான இடம் திருபெரும்பூதூர். இது ஸ்ரீராமனுஜர் பிறந்த இடம்.



கோவில்கள் பற்றி சில செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 08, 2010 5:21 pm

“ யானைக்கு தும்பிக்கை,
மனிதனுக்கு நம்பிக்கை,
என உலகுக்கு
உணர்த்திய வித்தகனே,
உத்தமனே. சரணம், சரணம். “ கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196






சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 08, 2010 6:42 pm

சபீர் wrote:“ யானைக்கு தும்பிக்கை,
மனிதனுக்கு நம்பிக்கை,
என உலகுக்கு
உணர்த்திய வித்தகனே,
உத்தமனே. சரணம், சரணம். “ கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196 கோவில்கள் பற்றி சில செய்திகள் 677196

தமிழர்களின் சிறப்பே இதுபோன்று அனைவரையும், அனைத்து மதங்களையும் ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் தன்மையே! வாழ்க தமிழினம் என்றும் இதே ஒற்றுமையுடன்!!!

கோவில்கள் பற்றி சில செய்திகள் 678642



கோவில்கள் பற்றி சில செய்திகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக