புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10 
5 Posts - 63%
heezulia
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_m10அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 1:53 am

First topic message reminder :

( டாக்டர். அண்ணா பரிமளம் )


அண்ணாவின் இளமைக் காலம்

அறிஞர் அண்ணா பிறந்தது பல்லவ நாட்டின் தலைநகரம் காஞ்சி. கி.மு. 5 ஆம் நூற்றாண்டில் புத்தர் காஞ்சிக்கு வந்து சமயத் தொண்டாற்றியிருக்கிறார். காஞ்சிபுரத்துக்கு யுவான் சுவாங் சீனயாத்ரிகன் அசோகன் மணிமேகலை ஆகியோர் வந்து சமயத் தொண்டாற்றிருக்கிறார்கள்.

மிகப்பெரிய வடமொழி பல்கலைக்கழகம் கி.பி. 4-ஆம் நூற்றாண்டு இருந்திருக்கிறது.

காஞ்சியில் இருந்து தர்ம பாலர் எனும் பேராசிரியர் நாளந்தா பல்கலைக் கழகத்திற்குச் சென்றிருக்கிறார்.

திருக்குறளுக்கு உரையெழுதிய பரிமேலழகர் பிறந்து காஞ்சியில் கல்வி வள்ளல் பச்சையப்பர் பிறந்த ஊர்.

இசைக் கலையில் சிறந்த நயனா பிள்ளை பிறந்த ஊர்.

கல்வி, கலை இவைகளில் சிறந்திருந்த காஞ்சி நெசவுத் தொழிலிலும் பெயர் பெற்று இருந்தது.

1909 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 15-ம் தேதி நடராசன் - பங்காரு இணையினருக்கு அண்ணா பிறந்தார்.

தொடக்கக்கல்வியும் உயர் நிலைக் கல்வியும் காஞ்சி பச்சையப்பர் கல்வி நிறவனங்களில் பயின்றார். தெய்வீக நம்பிக்கைக் கொண்டது அண்ணாவின் குடும்பம். ஆலய வழிபாட்டிற்கு அண்ணா கூட்டம் குறைவாக உள்ளக் கோயிலுக்கே செல்வார்.

பள்ளிக்குச் செல்லும் போது தானே மாட்டு வண்டி ஓட்டிச் செல்வார்.

அண்ணாவின் குடும்பம் மிகவும் எளிமையான குடும்பம். அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையார் அண்ணா அவர்களைத் தொத்தா என்றே அழைப்பார்கள். அண்ணாவை வளர்த்தவர் வழிகாட்டியாக அண்ணாவின் வாழ்க்கையை அமைத்துக் கொடுத்தவர், அவர்தான்.

உயர்நிலைப்பள்ளியில் படிக்கும்போதே அண்ணாவிடம் பொடி போடும் பழக்கம் தொற்றிக் கொண்டது. பத்தாம் வகுப்பு முடித்ததும், மேலே படிப்பைத் தொடர முடியாமல், குடும்ப சூழ்நிலைக் காரணமாக காஞ்சி நகராட்சியில் எழுத்தராகச் சேர்ந்து ஆறு மாதம் பணியாற்றினர்.

அண்ணா அவர்களை அவருடைய தாய் தந்தையர் அந்த நாளில் மதப்பற்றும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவராகவே வளர்த்தனர். அண்ணாவுக்கு அருந்துணையாக இருந்து ஆளாக்கி விட்ட அவருடைய சிற்றன்னையும்(தொத்தா) அதற்கு விதிவலக்காக இருக்கவில்லை.

இன்று பகுத்தறிவு இயக்கத்தின் தனிப் பெரும் சுடராய் ஒளிவிட்டுத் திகழும் அண்ணா, இளமைப் பருவத்தில் ஆலய வழிபாட்டைத் தவறவிடாத இளைஞராகத்தான் திகழ்ந்து கொண்டிருந்தார். ஆலய வழிபாட்டில் தவறாத அவர் அதிலும் ஒரு புதுமையைக் கையாண்டார். எந்த தோயிலில் கூட்டம் அதிகம் இருக்குமோ அங்கு செல்லாமல், கூட்டம் குறைவாக உள்ள கோயிலுக்குச் சென்று தெய்வ வழிபாடு செய்துகொண்டு வந்தார். கூட்டம் இல்லாத நேரத்தில் தனியாகக் கோயிலுக்குச் செல்வதில் அவர் பெரிதும் விருப்பம் உள்ளவராகவே விளங்கினார்.

எல்லா மக்களும் கூட்டமாகச் சென்று இடநெருக்கடியில் திண்டாடாமல், கூட்டம் குறைவாக உள்ள இடத்துக்குச் சென்று வழிபடுவோம் என்ற கொள்கையை இளமைப் பருவத்தில் அடாப்பிடியாகக் கைக்கொண்டிருந்தார். எல்லோரும் செல்லும் போயிலுக்கு அவரும் போவதுண்டு; ஆனாலும் கூட்டமே அங்கு இல்லாத நேரமாகப் பார்த்துத்தான் செல்வது வழக்கம்.

இளமையில் அண்ணாவுக்கு மிகவும் பிடித்தமான கடவுள் பிள்ளையார்தான்! பிள்ளையாருக்கு இளம் வயதில் பூஜைகளும் செய்வதுண்டு. பிள்ளைப் பருவத்தில் பிள்ளையார் பக்தராக அண்ணா விளங்கியிருந்தார் என்றால் பலருக் ஆச்சரியமாக இருக்கும். காஞ்சியிலுள்ள அதிகம்பேர் கவனத்தில் கவராத புண்ணிய கோடீசுவரர் கோயில் என்ற சிறிய கோயிலுக்குத்தான் அண்ணா அடிக்கடி சென்று வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.



நொண்டிச் சாக்கு

பிள்ளைப் பருவத்தில் அண்ணா விளாயாட்டில் ஆர்வம் உள்ளவராகவே இருந்தார். தன்னொத்த இளம்பருவத் தோழர்களுடன் கலந்து கேரம் விளையாடுவதில் அவருக்கு அளவு கடந்த ஆனந்தம். ஓய்வு கிடைக்கின்ற நேரங்களிலெல்லம் நண்பர்களுடன் சேர்ந்துகொண்டு கேரம் விளையாடியே பொழுதைக் கழிப்பார். அதைப்போலவே சீட்டாடுவதையும் பிற்காலத்தில் பொழுது போக்காகக் கொண்டிருந்தார்.

விளையாட்டில் ஆர்வம் உண்டென்றாலும் பள்ளியில் நடக்கும் டிரில் வகுப்புக்கு அதிகம் போவது கிடையாது. பொதுவாகவே அண்ணாவுக்கும் உடற் பயிற்சிக்கும் அதிகம் சம்பந்தமில்லை. அதிகத் தேகப் பயிற்சி பெற்றவருமல்ல அன்பதை அவரது உடலும் உயரமும் காட்டும். உடற்பயிற்சி வகுப்புக்கு, பள்ளி நாட்களில் அண்ணா போனது இல்லை. இவரது விருப்பத்துக்கு ஏற்ப இவரது குடும்பத்தினரும் இருந்தார்கள். டிரில் வகுப்புக்குப் போகாமல் இருக்க ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார்கள். டிரில் வகுப்புக்கு போகாமல் இருக்க வேண்டுமானால் காலில் கட்டு போட்டுக்கொள் என்பாராம் அண்ணாவின் தாத்தா. அதன்படி அண்ணாவும் காலில் சிவப்பு மையைக் கொட்டி, கட்டும் போட்டுக் கொள்வார். சுளுக்குபோல நொண்டிச் சென்று, கால் வலிக்கிறது சார் என்பாராம். டிரில் வாத்தியாரும் அண்ணாவை வீட்டுக்கு அனுப்பி விடுவாராம்.


மாமியார் அனுபவம்

அண்ணா பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, வீடு வெகு தூரத்தில் இருந்தது. ஆகவே அவர் வீட்டுக் வந்து சாப்பிட்டு விட்டு மீண்டும் பள்ளிக்குப் போவது கஷ்டமாக தோன்றிய காரணத்தால், அவரது பெற்றோர்கள் பள்ளிக்கு அருகிலேயே தங்கள் உறவினர் வீட்டில் பகல் உணவுக்கு எற்பாடு செய்திருந்தார்கள். அந்த வீட்டின் நிலையோ மிகவும் விசித்திரமாக இருந்ததை அண்ணா சொல்லிச் சொல்லிச் சிரிப்பார்.

அண்ணா சாப்பிட ஏற்பாடாகியிருந்த அந்த வீட்டுக்குரிய மாமியார், வீட்டில் உயர்ந்த பொருளாக இருந்தால் அதை அலமாரியில் வைத்துப் பூட்டி விடுவார்களாம். அண்ணா அவ்வீட்டுக்குச் சாப்பிடப் போனதும் வீட்டிற்குரிய மருமகள் அண்ணாவுக்கு சாதம் போட்டுவிட்டு, மாமியாரை அழைத்து, சாதம் போட்டுவிட்டேன், உருளைக் கிழங்கு வறுவல் வேண்டும் என்று சொன்னால், மாமியார் சாவியைச் கொடுத்து அனுப்பி அதை எடுத்துக்கொண்டு வந்து அண்ணாவுக்கு வைத்த விறகு, அதனை மீண்டும் அலமாரியில் வைத்து பூட்டிவிட்டு சென்றுவிடுவார்களாம் அந்த மாமியார்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:20 am

அண்ணாவும் தொழிற்சங்கமும்

அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் தொழிற்சங்க நடவடிக்கைகளில்தான் முதலில் ஈடுபட்டார். தொழிலாளர்களின் நிலை உயரவேண்டும். அவர்களிடையே ஒற்றுமை நிலவவேண்டும், தொழிற்சங்கம் வலுப்பெறவேண்டும் என்பதிலே தணியா ஆர்வங்கொண்டு 1934, 1935, 1936 ஆண்டுகளில் பாடுபட்டார்.

அறிஞர் அண்ணாவைத் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபடுத்த முக்கிய காரணமாக இருந்தவர் காலஞ்சென்ற தோழர் பாசுதேவ் ஆவார்கள். அண்ணா அவர்களின் வீட்டார், அண்ணாவை ஏதேனும் ஒரு அரசாங்க வேலையில் அமர்த்தவேண்டும் என்பதிலே ஆர்வங்காட்ட, அண்ணாவோ அரசியல் நடவடிக்கைகளிலேயே ஆர்வங்காட்டிவந்தார். தோழர்கள் பாசுதேவ், ஆர்பர்ட் ஜேசுதாசன் ஆகியர்களோடு சேர்ந்து தொழிற்சங்க பணிபுரிந்து வந்தார். தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலமாக அந்த நாட்களில், காங்கிரசிலே இருந்த தோழர் என்.வி.நடராசனுக்கும் அண்ணாவுக்கும் தொடர்பு உண்டு; ஆனால் அரசியலில் இருவரும் எதிர் எதிர் கட்சியினர்.

தோழர் ஜம்னாதாஸ் மேத்தா தலைமையில், லஷ்மணபுரியில் நடைபெற்ற இற்திய தொழிற்சங்க காங்கிரஸ் மாநாட்டிற்கு அண்ணா அவர்கள் தோழர் ஆர்பர்ட் ஜேசுதாசன் போன்றவர்களோடு, பிரதிநிதியாகச் சென்றிருந்தாராம். சென்னைத் தலைவர்கள், மாநாட்டில் அண்ணாவுக்கு உரிய இடம் அணிக்காமல், தங்கள் பின்னால் ஒடிவரக்கூடிய ஆட்டுக்குட்டி போல நடத்தினார்களாம். மாநாட்டுத் தலைவர்களிடம் அண்ணாவை அறிமுகம் செய்து வைப்பதையும் அவர்கள் ஒரு பொருட்டாகக் கருதவில்லையாம். மாநாட்டில் அண்ணா அவர்கள் ஒரு தீர்மானத்தின்மீது சிறிது நேரம் பேசவேண்டிய வாய்ப்பு கிடைத்ததாம். மாநாட்டினர் அண்ணா அவர்களின் பேச்சில் ஒன்றித் திளைத்து, மகிழ்ந்து, தணியாப் பற்றுக்கொண்டுவிட்டனராம். பிறகு மாநாடு முடியும் வரையில் தலைவர்கள் அண்ணாவைக் கண்டு பேசவிரும்புவதும், தொண்டர்கள் அண்ணாவின் பின் ஓடுவதும் ஆன காட்சிகள், மற்ற சென்னைத் தலைவர்களை இருந்த இடம் தெரியாமல் மறக்கடித்து விட்டனவாம். மாநாட்டின் விஷயாலோசனைக் குழுக்கூட்டத்தில் அண்ணா அவர்களின் கூற்றுக்கு நல்ல மதிப்பும், செல்வாக்கும் இருந்தனவாம். அந்த மாநாட்டில்தான் அண்ணா அவர்கள் அகில இந்திய தொழிற்சங்க காங்கிரசின் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தொழிற்சங்க காங்கிரசில் ஈடுபட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்களை நேரடி அரசியல் கட்சியில் ஈடுபடும்படி செய்தவர், தோழர் சண்டே அப்ஸர்வர் பி.பாலசுப்பிரமணியம் ஆவர்கள்.

(மன்றம் 01-05-1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:21 am

நான் எழுதி நடித்த பழனியப்பன் நாடகத்தை நூறு ரூபாய்க்கு வாங்கிக் கொண்டவர் திராவிட நடிகர் கழகம் என்ற பெயரால் ஒரு கலை மன்றத்தைத் துவக்கி, கழகப் பிரசார நாடகங்களை நடிப்பது என்ற தீர்மானத்துடன் என்னை அணுகினார். நானும் அதற்கு ஒப்புதல் அளித்து, முதல் முதலாக நாடகக் குழு விழுப்புரத்தில் முகாமிட்டது. என்னையும் அந்த மன்றத்தில் இணைந்து நடிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்கள். நான் எழுதும் நாடகத்தில் மட்டுமே நடிப்பது என்ற நிபந்தனையிடன் அதற்கு ஒப்புக்கொண்டேன்.

கருணா போய் வருகிறேன்

ஒரு நாள் நாடகத்திற்குத் தலைமை வகிக்கப் பெரியார் வந்திருந்தார். இன்னொரு நாள் அண்ணா வந்திருந்தார். அவரிடத்திலேயே நாடக மன்ற உரிமையாளர் பத்து ரூபாய் கடன் கேட்டு வாங்கிய நிகழ்ச்சியையும், அண்ணா புன்னகையோடு அந்தப் பத்து ரூவாயைக் கொடுத்த நிகழ்ச்சியையும், நாடகம் முடிந்து ஊருக்குப் போகுமுன், அண்ணா அவர்கள் என் முதுகில் தட்டி, கருணா, போய் வருகிறேன் என்று அன்பொழுகக் கூறியதையும் என்னால் மறக்கவே முடியாது. திராவிடம் திராவிடர் என்ற உத்வேகத்தை நாட்டில் எழுப்புவதற்காக திராவிட நாடு என்கிற கிழமை இதழை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் துவக்கினார்கள். அதனையொட்டித் திராவிடர்க் கழகம் என்ற பெயரால் ஒரு துணை மன்றம் போன்ற அமைப்பினை அண்ணா அவர்கள் காஞ்சிபுரத்தில் உருவாக்கினால். அந்தத் துளை அமைப்பு எதிர்காலத்தில் நாடு தழுவிய இயக்கமாக ஆகுமென்று அன்று யாரும் எதிர்பார்த்திட்டதில்லை.

நீதிக் கட்சியின் பொதுச் செயலாளராக அண்ணா அவர்கள் இருந்ததால் கட்சி வளர்ந்திடவும், புதிய வேகம் கொண்டிடவும், புதிய குறிகோள் பெற்றிடவும், வழிமுறை காணவேண்டுமென்று அண்ணா அவர்கள் துடித்தார்கள். நீதிக் கட்சியில் இருந்த பெரும் தலைவர்கள் மாட மாளிகை, மல்லிகை மஞ்சம், கூட கோபுரம் கொட்டு முழக்கு என்றெல்லாம் ஆடம்பரப் பிரியர்களாக இருந்தார்கள். குடிசைகளும், அங்கேயெழும் குரல்களும் அவர்கள் காதில் விழ வாய்ப்பில்லை. அத்தகையோர் பிடியிலிருந்த நீதிக் கட்சியை அண்ணா விடுவிக்க முயன்றார்.

1944-ஆம் ஆண்டில் ---------தில் நீதிக் கட்சி மாநாடு ந---------- அந்த மாநாட்டில் கட்சித் ------- பொறுப்பிலிருந்து பெரிய----- விட நீதிக்கட்சிச் --------------- கோமான்களும் முயன்றார். -------------- நடைபெற்று விடாமல் ------------- தலைமையைக் காப்பாற்ற --------- நாடெங்கும் சூறாவளிப் பயணம் செய்து, கட்சித் தொண்டர்கள் ஆதரவைப் பெருக்கினார்.
எதிர்ப்புகளை முறியடிக்கவும் ----- கட்சியை ஏழைகளின் இல்லத் ------- கொண்டுவர வேண்டுபென்ற -------- னுடைய எண்ணத்தை நிறை----------- கொள்ளவிடம, இந்திய விடுத -------- தனக்கிருந்த அழிக்க முடியாத -------றினை வெளிப்படுத்திக் கொள் -------- அண்ணா அவர்கள் சேலம் மாநா ---------- ஒரு தீர்மானத்தைக் கொண்டு ----- தார்கள். சரித்திரப்புகழ் படைத் --------- அந்தத் தீர்மானத்திற்கு அண்ணாதுரை --- தீர்மானம் என்று பெயர்.

அண்ணா ஏற்படுத்திய புதிய திருப்பம் நீதிக் கட்சி என்ற பெயரை மாற்றித் திராவிடர் கழகம் என்று பெயரிடப்படவேண்டுமென்றும், வெள்ளையன் ஆட்சியால் தரப்பட்ட சர், ராவ் பகதூர், திவான்பகதூர் போன்ற பட்டங்கள் துறக்கப்படவேண்டுமென்றும், கௌரவ நீதிபதி மற்றும் நியமனப் பதவி கொண்டவர்கள் அவைகளை இராஜினாமாச் செய்யவேண்டுமென்றும், தங்களுடைய பெயருக்குப் பின்னால் உள்ள சாதிப் பெயரை விட்டொழிக்க வேண்டுமென்றம் அண்ணாவின் தீர்மானம் முழக்கமிட்டது.

35-மணி நேர விவாதத்திற்கு அந்தத் தீர்மானம் உள்ளாகியது. கட்சியின் ஆய்புக் குழு அண்ணாவின் தீர்மானத்தை வன்மையாக அதிர்த்தது. பின்னர் பொது மாநாட்டினில் அண்ணாவின் தீர்மானத்தை ஆதரித்தும், அதிர்த்தும் கருத்ரைகள் வழங்கப்பட்டுப் பிறது இறுதியில் அண்ணா விளக்கவுரை வழங்கினார். அதனைக் கட்சித் தோழர்களும், பொதுமக்களும் தங்கள் ஆர்வமிகுந்த கையொலிகளால் வரவேற்றவாறு இருந்தனர்.



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:21 am

» காங்கிரஸ் கூட்டத்தில் பேசி முடிந்ததும் தலைவர்கள் காரில் பறந்துவிடுவார்கள். ரியால்டோ (திருவாரூரில் இருந்த சினிமா அரங்கம் ஆண்டு 1943) கூட்டம் முடிந்ததும் அண்ணா பார்வையாளராகிய நாங்கள் இருந்த பகுதிக்கு வந்தார். கூட்டம் என்றால் அதிகபட்சம் 300 வேர் இருந்திருப்பர். எங்களோடு அண்ணா உட்கார்ந்ததும் எளிமையான தோற்றத்துடன் அளவாளாவியதும், கருணாநிதியைப் பார்த்து நன்றாகப் படி என்று சொன்னதும், ஏதோ ஒரு நெருக்கத்தைக் காட்டியது. அண்ணாவை அருகே பார்க்க பார்க்க ஏதோ ஒரு மாவிரனை பார்க்கிற மன எழுச்சி உருவாயிற்று.
(இராம. அரங்கண்ணல் - நினைவுகள்)

» அய்யா அவர்கள் சூத்திரப் பட்டம் பற்றி பேசிக் கொண்டிருந்தது ஒரு பக்கம் இருக்க, இங்கர்சால் யார்? மாஜினி இத்தாலியில் எப்படி பாடுபட்டார் - அவரது சீடர் கரிபால்டி, எப்படி சீரழிந்த இத்தாலியைச் செப்பனிட்டார், பிரெஞ்சு புரட்சி என்றால் என்ன? அதற்கு தித்திட்ட வால்டேரும், ரூசோவும் வழங்கிய ஜனநாயக சிந்தனை என்ன? இப்படி ஒரு அறிவுப் புரட்சியை தமிழ்நாடு பெரிய அளவில் பெற்றது. இதற்கு அண்ணாவே மூலுகாரணமாவார்.
(இராம.அரங்கண்ணல்)

» திரு.டி.பி.எஸ். பொன்னப்ப அண்ணாவை வற்புறத்தி ஒரு நாடகம் எழுதச் சொல்லி, அந்த சந்திரோதயம் நாடகத்தை திராவிடநாடு குழுவினருடன் பல ஊர்களில் நடத்தவும் இவரே காரணமாயிருந்தார். அண்ணாவின் அரசியலில் ஆரம்ப காலத்தில் உற்ற துணையாக இருந்த பொன்னப்பா அண்ணாவுக்கு உறவினருமானார். அண்ணாவின் தாயாருக்கு உடன் விறந்த சகோதரிகள் இருவர். கழகத்தவர் எல்லோருக்கும் தொத்தா என்கிற இராசாமணி அம்மையார். இன்னொருவர் பட்டம்மாள். அவருக்கு இரண்டு பிள்ளைகள் இராசகோபால், இராசதுரை. இராசகோபால் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். இராசதுரை தன்னுடைய நாற்பதாவது வயதிலேயே இறந்துவிட்டார். அவருடைய ஒரே மகள் நாகரத்தினம். மச்சி என்று எல்லோராலும் அழைக்கப்பட்டவர். அதே போல் அண்ணாவின் சிற்றன்னை இராசாமணி அம்மையாருக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து சிறுவயதிலேயே இறந்துவிட்டன. அண்ணாவின் தாயார் பங்காரு அம்மையாருக்கு இரண்டு பிள்ளைகள். ஒருவர் அண்ணா, மற்றொருவர் குட்டி. அவரும் சிறுவயதிலேயே இறந்துவிட்டார். அண்ணாவின் ஒன்றுவிட்ட மூத்தசகோதரி நாகரத்தினம் அம்மையாருக்கு ஒரே மகள், பெயர் சௌந்தரி. அண்ணாவுக்கு முறைப் பெண் அவர்களை டி.பி.எஸ். பொன்னப்பா இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு நான்கு ஆண் பிள்ளைகள், ஒரு பெண் பிள்ளை சிறு வயதில் இறந்து விட்டது, பெயர் மணிமேகலை. பிள்ளைகள் பரிமளம், இளங்கோவன் கௌதமன், இஅராசேந்திரன். 1930-ம் ஆண்டு அண்ணா இராணி அம்மையாரை மணந்தார். அண்ணாவுக்கு குழந்தை இல்லை. 1940-ம் ஆண்டு பரிமளம் பிறந்ததும் அந்தப் பிள்ளையை தங்கள் பிள்ளையாக அண்ணாவும் இராணி அம்மையாரும் எடுத்து வளர்த்துக் கொண்டனர். 1940-ம் திராவிட இயக்கத் தலைவர் சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மறைந்தார். அவர் நினைவாக, அண்ணா தன் பிள்ளைக்கு பரிமளச் செல்வன் என்று பெயர் சூட்டி வளர்த்தார்.

» எங்களுடைய திராவிட மாணவர் கழகத்தை கும்பகோணத்தில் 01.12.1943 அன்று அண்ணா துவக்கி வைத்தார். 05.12.1943. திராவிடநாடு இதழில் திராவிடர் கழகம் என்ற தலைப்பில் ஒரு தலையங்கம் எழுதினார். நீதிக்கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றியமைக்க வேண்டும் என அண்ணா அப்போதே முனைந்துவிட்டார். இரண்டு நாள் இரவும் பகலும் - 1943 பிப்ரவரி 19, 20 குடந்தை வாணி விலாஸ் தியேட்டரில் மாநாடு தவமணி இராசனும், நானும் (கவிஞர் கருணாநந்தம்) அலைந்து திரிந்து வசூலித்தது 200 ரூபாள். அண்ணா 3 நாட்களும் எங்களோடு தங்கியிருந்தார்.

கும்பகோணம் அரசினர் கல்லூரியில் அண்ணா கூழநு ஆநுறு டுஐகுநு என்கின்ற தலைப்பில் 01.12.1943 மாலை 5 மணிக்குப் பேசினார். மாலை திராவிட மாணவர் கழக விழா தொடங்குவதற்கு முன் நாங்களெல்லாம் அண்ணாவுடன் சேர்ந்து புகைப் படம் எடுத்துக் கொள்ளத் தயாரானோம்.

அண்ணா என்னை அழைத்து தொலைவில் தெருவில் போய்க் கொண்டிருந்த இருவரை அழைத்து வரச்சொல்லி படம் எடுக்கச் செய்தார். அவர்கள் திருப்பூர் மொய்தீனும், மூவாலூர் இராமாமிருதம்மையாரும் ஆகும்.
(இராம.அரங்கண்ணல்)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:22 am

» அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் வழக்கம் போல காங்கிரஸ் மாணவர்களுக்கம் கழக மாணவர்களுக்கும் எற்பட்ட தகராறு இந்த முறை வரம்பு மீறிப்போய்விட்டது. பட்டமளிப்பு விழா நாளன்று கழக மாணவர்கள் கழகக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார்கள். இதனால் ஆத்திரமடைந்த காங்கிரஸ் மாணவர்கள் சிதம்பரம் காங்கிரஸ் பிரமுகர்கள் ஒத்துழைப்புடன் மாணவர் விடுதிக்குள் நுழைந்து கழக மாணவர் அறைகளுக்கெல்லாம் போய், உதை, உதையென்று உதைக்கிறார்கள். இதில் அதிகமான காயங்களுக்கு ஆளாகி உயிர் பிழைத்தால் போதும் என்கிற நிலைக்கு ஆளானவர் மறைந்த உத்தமர் நண்பர் கே.ஏ.மதியழகன் அவர்கள். கழக வரவாற்றில் இது ஒரு தியாகக்கூட்டம் என்றால் மிகையல்ல. அப்போது திரு அவிநாசிலிங்கம் செட்டியார் கல்வி அமைச்சராயிருந்தார். அவர் பச்சைக் கொடி காட்டியதின் பேரில் அடிபட்டு உதைப்பட்டு காங்களுக்கு ஆளான கழு மாணவர் மீது அதுவும் முக்கியமாக மதியழகன் மீது தூண்டினார் என வழக்கும் போட்டுவிட்டார்கள். இது பற்றி பேச பெரியார் அவர்களிடம் அழைத்துப்போனேன். அய்யாவுக்கு என்ன கோபமோ! ஒரு கோவணத்துணி போல உள்ள ஒன்றுக்காக இவ்வளவு பெரிய ரகளைச் செய்வது? என்று பொரிந்து தள்ளிவிட்டார். சோர்ந்து போன மதியழகனை அன்று மாலை பிரசிடென்சி கல்லூரியில் நடைபெற்ற ஒரு கூட்டத்துக்கும் அழைத்துக் கொண்டு போனேன். பிறகு ஐகோர்ட் நீதிபதியான நண்பர் மோகன் அவர்கள், மாணவராயிருந்து ஏற்பாடு செய்த கூட்டம் அது. அச்சம் என்கின்ற தலைப்பில் அண்ணா அவர்கள் பேசினார்கள். கூடடம் முடிந்து மதியைப் பார்த்த அண்ணா என்னோடு வா என்று கோவிந்தப்ப நாய்க்கன் தெருவிலுள்ள று.மு. தேவராசமுதலியார் வீட்டுக்கு ழைத்துகொண்டு போனார்கள். மாணவர்கள் வழக்கு நிதி எனும் பெயரில் திராவிடநாடு இதழ் மூலம் தானே கையொப்பமிட்டு வசூல் செய்து உதவினார்கள்.
(இராம.அரங்கண்ணல்)

» 1944-ல் கல்வியமைச்சராயிருந்த திரு.அவினாசிலிங்கம்(செட்டியார்) தலமையில் ஓர் எழுத்தாளர் மாநாடு நடைபெற்றது சென்னையில். அதில் அண்ணாவும் அழைக்கப்பட்டடு எழுத்தாளர்களைப் பற்றி, ஓர் அருமையான சொற்பொழிவு ஆற்றப்பட்டு, அதை எல்லோரும் பாராட்டினர். அந்த மாநாட்டில் அண்ணா பேசி முடித்ததும், திரு.அவினாசிலிங்கம்(செட்டியார்) தான் ஒரு காங்கிரஸ்காரர் என்பதையும் மறந்து கட்டி அணைத்துக்கொண்டார்.
புதுக்கோட்டையில் அச்சாகி வெளிவந்த திருமகள் என்கின்ற வார ஏட்டின் பிரதிநிதியாக, முதல் முறையாக முத்தய்யா என்கின்ற இளைஞர் வந்து கலந்து கொண்டு அண்ணாவின் பேச்சை அப்படியே வரிவிடாமல் எழுதி வெளியிட்டார். அவர்தான் பிற்காலத்தில் பெயர் பெற்ற கவிஞர் கண்ணதாசன்.
(இராம.அரங்கண்ணல்)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:22 am

சேதுப்பிள்ளை பட்ட பாடு

கம்பராமாயணம் ஆக்கநெறிக்கு ஆகும் நூலா - ஆகாத நூலா என்பது பற்றிய விவாதங்கள், தமிழ்நாடெங்களும் தலை தூக்கி நிற்கும் நிலை, 194244-ம் ஆண்டுகளில் ஏற்பட்டது.

கம்பராமாயணம் பொன்னேபோல் போற்றப்பட்டடுப் புவியுள்ள அளவும் காப்பாற்றப்படவேண்டிய நூலாகும் என்னும் கருத்துப்படத் தோழர்கள் ஆர்.பி.சேதுப்பிள்ளை, பண்டிதமணி கதிரேசச் செட்டியார், ச.சோமசுந்தர பாரதியார், டி.கே.சிதம்பரநாதனார் ஆகியோர் பேசிவந்தனர்.

கம்பராமயணம் ஆரிய மக்கள் தேவர்களெனவும், ராமன் முதலியோர் கடவுள்களாக வழிபடவேண்டியவர்களெனவும், அவர்களது செயலே சிறந்த செயலெனவும் தமிழர்களை எண்ணச் செய்ததோடல்லாமல், அதற்கு தூபதீப நைவேத்தியங்காட்டி வந்தனை வழிபாடு செய்தால் போகிற கதிக்கு நல்லகதி எற்படும் என்று நம்பச் செய்ததால், அதன் நோக்கத்தையும், விளைவையும் கண்டித்துப் பெரியார் ராமசாமியும், அறிஞர் அண்ணாவிம் நாடெங்கும் எடுத்துரைத்து வந்தனர்.

கம்பராமயணத்தைப்பற்றி அறிஞர் அண்ணா அவர்களுக்கு என்ன தெரியும், சிறந்த தமிழ்ப் புலவரோடு அவரை விவாதத்துக்கு விட்டால், அவர் உறுதியாத் தோற்றுப்போய்விடுவார். அப்படித் தோற்றுப் போய்விட்டால் கம்பராமாயண எதிப்புக் கிளர்ச்சி வீழ்ச்சியுற்றுப் போய்விடும் என்று கருதிக்கொண்டு சென்னைச் சட்டக் கல்லூரித் தமிழ்மன்றத்தினர் கம்பராமாயண விவாதக் கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்தனர். கூட்டம் 09.02.1943 செவ்வாயன்று மாலை 4,30 மணிக்குச் சென்னை சட்டக் கல்லூரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. போராசிரியர் ஆர்.பி.சேதுப்பிள்ளையோடு விவாதம் நடத்தும்படி அறிஞர் அண்ணா அழைக்கப்பட்டிருந்தார். விவாதக் கூட்டத்திற்குத் தலைமை வகிக்கும்படி இந்து அறநிலையப் பாதுகாப்புக் குழுத் தலைவர் தோழர் சி.எம்.இராசந்திரஞ் செட்டியார் கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தார்.

மண்டபம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் ஏராளமாகக் குழுமியிருந்தனர். தலைவர் கூட்டத்தைத் துவக்கி முதலில் அண்ணா அவர்களைப் பேசுவதற்கு அழைத்தார். அறிஞர் அண்ணா அவர்கள் கம்பனின் புலமைத் திறனைத் தாம் மறுக்கவில்லை, கம்பராமயணத்தின் சொல்லாழம், பொருள் செறிவு உவமை அழகு, அணி அழகு ஆகியவற்றை தாம் வெறுக்கவில்லை என்றும், ஆனால் கம்பராமாயணத்தின் நோக்கத்தையும், விளைவையும் வன்மையாத் தாம் எதிர்ப்பதாகவும் கூறி சுமார் ஒன்றரை மணி நேரம் பேசினார்கள்.

பிறது பேராசிரியார் ஆர்.பி.சேதுப்பிள்ளை அவர்கள் எழுந்து, அறிஞர் அண்ணாவின் ஆணித்தரமான வாதங்களுக்கு நேருக்கு நேர் விடையிறுக்கமாட்டாமல், பத்து நிமிடநேரம் ஏதோ சில பொருத்தமற்றவைகளைக் கூறி மற்றோர் முறை இவ்விஷயமாக அண்ணா அவர்கள் அழைப்பின், காஞ்சிபுரம் சென்று இது குறித்துப் பேசுவேன் என்று சொல்லிவிட்டு அமர்ந்துவிட்டார். தலைவர் அவர்கள் முடிவுரையில் விவாதம் மேலான முறையில் இருந்ததற்காக மகிழ்வதாகக் கூறித் தாம் ஏதொன்றும் கூறுவதற்கில்லை என்று சொல்வித் தம்பித்துக்கொண்டார்.

அதற்குப் பிறகு காஞ்சிபுர்ம் வரத் தயாரா என்று திராவிட நாடு இதழ் மூலம் கேட்டும், தோழர் சேதுப்பிள்ளை அவர்கள் விட்டால் போதும் என்ற முறையில் வாய்திறவாமல் வாளாயிருந்துவிட்டார். முதல் விவாத்தில் பட்டபாடு அவருக்கு போதுமென்றாகிவிட்டது போலும்.
(மன்றம், நாள் 01.09.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:23 am

கல்லூரியில் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரியில் படிக்கும்பொழுது பாடங்களையோ, நோட்சுகளையோ அப்படியே உருப்போட்டு, பரிட்சையில் பதில் எழுதும் வழக்கத்தை மேற்கொள்ளவில்லை. அவர் பாடங்களையும், அத்துடன் மேற்கோள் காட்டும் மற்ற நூல்களையும் விரிவாகப் படித்து, அவற்றின் கருத்துக்களை நன்கு மனதில் கொண்டுவிடுவார். பின் அவற்றை வைத்துப் பரிட்சையில் நமது தமதுநடையிலேயே எழுதிவிடுவது வழக்கம்.

அண்ணா அவர்கள் கல்லூரி இரண்டாவது வகுப்பில் படிக்கும்பொழுது, ஆங்கில வகுப்பை எடுத்த பேராசிரியர் ஒருவர், பாடஞ் சொல்லிக் கொடுப்பதில் சிறந்தவர் என்ற கருதப்பட்டவர். அவர் வகுப்பில் கொடுக்கும் கேள்வி பதில்களையும், குறிப்புகளையும், மாணவர்கள் உருப்போட்டு வைத்துவிட்டால் போதும், பரிட்சையில் பாஸ் செய்துவிடலாம் என்ற நம்பிக்கையிருந்தது. அண்ணா மட்டும், வகுப்பில் நோட்சுகளை எடுத்துக் கொள்வதில்லை. மற்ற மாணர்வகளெல்லாம் தான் சொல்வதை ஒன்று விடாமல் எழுதித் தள்ளிக் கொண்டிருக்கும்பொழுது, அண்ணா மாத்திரம் பேசாமல் உட்கார்ந்திருப்பதை பேராசிரியர் பார்த்துவிட்டார்.

அண்ணாதுரை! நீ ஏன் சும்மா உட்கார்ந்திருக்கிறாய் என்று ஆசிரியர் கேட்டார்.

நான் குறிப்பு எடுக்கவில்லை! என்று அண்ணா பதிலளித்தார்.

ஏன்? அவற்றை உருப்போட்டு அப்படியே ஒப்பிக்கவேண்டாமென்று நான் நினைத்தேன்

கர்வம் பிடித்தவன்! உட்கார்! என்று ஆசிரியர் சொல்லி உட்காரவைத்தார். அண்ணாவும் நோட்சுகளை எழுதவில்லை.

கடைசியில் கல்கலைக் கழக இண்டர் தேர்வு நடந்தது, பரிட்சை முடிவுகள் வெளிவந்ததும், அறிஞர் அண்ணா அவர்கள் ஆங்கிலப் பாடத்தில் முதலாவதாகத் தேறியிருந்தார். அதற்காக அவருக்கு ஒரு பரிசும் வழங்கப்பட்டது. பரிசு வழங்கும் விழாவில், பரிசுப் புத்தகங்களை வாங்கிக்கொண்டு அறிஞர் அண்ணா அவர்கள் வந்ததும் அவருடைய ஆங்கில ஆசிரியர் எதிர்ப்பட்டு வாழ்த்தினார்.

நன்றியைத் தெரிவித்துவிட்டு, சார்! உங்களுடைய நோட்சை நான் உருப்போட்டு ஒப்பித்திருந்தால், பாஸ் செய்திருப்பது நிச்சம்; ஆனால் இந்தப் பரிசைப் பெற்றிருக்க முடியாது என்று வேடிக்கையாக, அண்ணா சொன்னார்.

ஆசிரியர் சிரித்தபடி, நீ கெட்டிடக்காரன் என்று எனக்குத் தெரியுமே! என்று சமாளித்துக் கொண்டார்.
(மன்றம், நாள்: 15.09.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:23 am

முதல் நாடக முயற்சி

அறிஞர் அண்ணா அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு பொது வாழ்க்கையில் இறங்கிய பிறகும், நாடகத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆர்வம், அவரது உள்ளத்தில் கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.

கற்றறிவில்லாமல் கையில் சிக்கிப் பிற்போக்குத் தன்மையில் போய்க் கொண்டிருந்த நாடக உவகைக் கற்றறிவாளர் கைக்கு மாற்றி, நாட்டிற்கும் சமுதாயத்திற்கும் அதனால் பலன் ஏற்படும்படி செய்யவேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் ஆவல். அதற்காக வாய்ப்பும் வசதியும் அவர்களுக்கு நீண்ட நாட்கள் ஏற்படாமலேயிருந்தன.

காஞ்சீபுரத்தில் தம் சொந்த முயற்சியில் திராவிட நாடு வார இதழ் தொடங்கி நடத்திக்கொண்டு வரும்போது அறிஞர் அண்ணாவின் உள்ளத்தில் வேரூன்றி இருந்த கருத்து, செழித்து வளர்ந்து, பூத்துக், காய்த்துக், கனியத் தொடங்கிற்று. அதன் விளைவாக சந்திரோதயம் என்னும் நாடகம் உயிர்பெற்று எழுந்தது. அதில் அறிஞர் அண்ணாவும், இயக்கத் தோழர்களும், திராவிட நாடு அலுவலகத்தில் பணியாற்றி வந்தோரும் பங்கு ஏற்று நடிப்பது என்னும் முயற்சி உருப்பெற்றது. நாடகம் சரியாக இருக்குமா இருக்காதா என்ற ஐயப்பாடும், அதனை முதலில் எங்கு நடத்திக் காட்டுவது என்று அச்சமும் அண்ணாவுக்கு ஏற்பட்டன. ஐயப்பாட்டையும், அச்சத்தையும் போக்கிக் கொள்ள, வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த திருவத்திபுரத்தில், அந்த நாடகத்தை நடத்திப் பார்ப்பது என்னும் முடிவில், 1943-ம் ஆண்டில் முதல் வெள்ளோட்டம் பார்க்கப்பட்டது. நாடகம் யாவரும் போற்றிப் புகழும் வண்ணம் அமைந்ததோடு, அறிஞர் அண்ணா நடிப்பிலும் மிகச் சிறந்து விளங்குபவர் என்னும் உண்மையும் வெளிப்பட்டது. அண்ணா அவர்கள், ஆண்டி, அப்துல்லா, துரைராஜ், தொழிலாளி, மடாதிபதி, ஜமீன்தார் ஆகிய வேடங்களைத் தாங்கி, மிகத் திறம்பட நடித்து மக்களின் உள்ளத்தைக் கொள்ளைகொண்டார். பிறகு அந்த நாடகம் தமிழ் நாடெங்கும் நடித்துக் காட்டப்பட்டது.

சந்திரோதம் நாடக உலகில் ஒரு புரட்சியையும் மறுமலர்ச்சியையும் உண்டாக்கிற்று எனலாம். சந்திரோதயம் நாடகத்தைக் கண்ட பிறகு புதுப்புது சீர்திருத்த நாடகங்கள் தோன்றின; சீர்திருத்த நாடகாசிரியர்களும் சீர்திருத்த நடிகர்களும் கிளம்பினர். பெரும்பாலான நாடகக் கம்பெனிகள் புராண நாடகங்களைக் கைவிட்டுச் சீர்திருத்த நாடகங்களையே நடித்துக்காட்ட ஆரம்பித்தன. இதற்கெல்லாம் காரணம் சந்திரோதயம் என்றால் அது மிகையாகாது.
(மன்றம், நாள்: 01.10.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:24 am

அண்ணாவும் மாணவர் இயக்கமும்

அறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் அரசியல் உலகில் தோற்றங்கொள்வதற்கு முன்பு, தமிழத்தில், மாணவர் இயக்கம், காங்கிரஸ் கட்சி சார்பினதாகவும், கம்யூனிஸ்ட்டுக் கட்சி சார்பினதாகவுமே இருந்து வந்தது. நீதிக்கட்சியின் கொள்கைகளும், பகுத்தறிவியக்கத்தின் கருத்துக்களும் மாணவரிடையே பரவுவதற்கான வழியையும், வகையையும் வகுத்தவர் அறிஞர் அண்ணா அவர்களேயாவார்கள்.

அறிஞர் அண்ணா அவர்கள் பேச்சும் எழுத்தும் எடுத்துக் கூறும் பொருளும், விளக்கிக்காட்டும் தன்மையும் மாணவர் உலகைத் தம்பால் ஈர்க்கும் தன்மையனவாக இருந்தன. இப்பொழுது அண்ணாவைப் பின்பற்றி பள்ளிதோறும், கல்லூரிகள் தோறும் மாணவர் படைகள் திரண்ட வண்ணமிருக்கின்றன. திராவிட மாணவ இயக்கத்துக்குத் தூண்டுகோலாகவும் அடிப்படையாகவும், எடுத்துக் காட்டாகவும், எழுச்சி தருவனவாகவும் துவக்கதில் அமைந்தவை இரண்டு கல்லூரிகள், அவை அண்ணாமலைப் பல்கலைக்கழகமும் குடந்தை கல்லூரியுமாகும்.

1943-ம் ஆண்டில் அறிஞர் அண்ணா அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சொற்பொழிவாற்ற வந்திருந்த காலை, அங்குள்ள விருந்தினர் விடுதியில் மூன்று நாட்கள் தங்கியிருந்தார்கள். அப்பொழுது பல்கலைக் கழகத்தில் படித்துக் கொண்டிருந்த ஆர்வமிக்க மாணவர்கள் அண்ணா அவர்களைச் சூழ்ந்துகொண்டு, இரவு பகல் ஓயாமல் அடுக்கடுக்காக் கேள்விமேல் கேள்வியாகப் பொழிந்து கொண்டேயிருந்தார்கள். அண்ணா அவர்கள் அவற்றிற்கெல்லாம் பொறுமையுடன் விளக்கந் தந்தார்கள். நீதிக் கட்சி பணக்காரர் - பட்டம் பதவியாளர் - கொள்கையற்றோர் - குணக்கேடர் - உலுத்தர் - உல்லாசக்காரர் ஆகியோர் கையில் சிக்குண்டு இருப்பதைச் சுட்டி, அது மக்கள் கைக்கு மாற்றப்பட்டால் மாணவர்களின் ஒத்துழைப்பு இயக்கத்திற்கு நிரம்ப கிடைக்கும் என்ற கருத்தை மாணவர்கள் வலியுருத்திக் கூறினர். மாணவர்கள் தங்கள் படிப்புமுடிந்ததும் இயக்கப் பணியில், இறங்கித் தமக்கு ஒத்துழைப்புத் தந்தால், நீதிக்கட்சியிலுள்ள வீணர்களை விலக்கிவிட்டு, அதனை மக்கள் கட்சியாக ஆக்கிக் காட்ட தம்மால் இயலும் என்று அண்ணா அவர்கள் கூறினார்கள். அறிஞர் அண்ணா அவர்கள் அளித்த ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாணவர்கள் மிக்க ஆர்வங்கொண்டு பாடுபடத் தொடங்கினார்கள். அதன் விளைவாக முதல் திராவிட மாணவர் மாநாடு 1944-ல் குடந்தையில் நடைபெற்றது.

1944 மே திங்களில் அண்ணா அவர்கள் தலைமையில் ஈரோட்டில் திராவிட மாணவர் பயிற்சிக்கான முதல் மாநாடு நடைபெற்றது. மாநாடு முடிந்தவுடன் மாணவர்கள் தமிழகத்தின் பல பகுதிகளிலும் சென்று சொற்பொழிவாற்றிக் கொள்கை விளக்கம் செயயத் தலைப்பட்டனர்.
பின்னர் 1944 ஆகஸ்டு திங்களில் சேலத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில், அறிஞர் அண்ணா அவர்கள் கட்சியின் பெயரை திராவிடர் கழகம் என்று மாற்றியதோடு, நீதிக்கட்சியிலிருந்து வீணர்களையும் விரட்டியடித்துக் கட்சியை மககள் கட்சியாக்கினார்கள். மாணவர்களுக்குத் தாம் அளித்த வாக்குறுதியை அண்ணா அவர்கள் திறம்பட நிறைவேற்றிக் காட்டினார்கள்.

அறிஞர் அண்ணாவின் சுட்டுவிரல் காட்டிய வழியில் செல்ல திராவிட மாணவர் குழாம் நாளுக்குநாள் திரண்டு வரும் காட்சி கண்கூடாகும்!
(மன்றம், நாள்: 15.07.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:24 am

அண்ணாமலை பல்கலைக்கழக மாணவர்களின் முதல் முயற்சியும் தோல்வியும்

1942, 1943-ம் ஆண்டுகளில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், திராவிட இயக்கக் கருத்துடைய மாணவர்கள் மிகவாகப் புகாதிருந்த நிலை, அப்பொழுது காங்கிரஸ் கருத்துடைய மாணவர்களும், கம்யூனிஸ்டுக் கருத்துடைய மாணவர்களும் பல்வேறு துறை மாணவர் சங்கங்களிலும் ஆதிக்கம் செலுத்தி வந்தனர்.

தோழர்கள் சு.இராமையா(அன்பழகன்) இரெ.தண்டபாணி(இளம்வழுதி) இரா.நாராயணசாமி(நெடுஞ் செழியன்) மற்றம் முப்பது மாணவர்கள் தாம் நீதிக்கட்சி (திராவிட இயக்க)க் கருத்துக்களில் பற்றுக்கொண்டு திராவிட நாடு குடி அரசு இதழ்களை வாங்கிப் படித்துக் கொள்கைகளைப் பரப்பி வந்தனர்.

1942-ல் அறிஞர் அண்ணா அவர்களை வரவழைத்துப் பல்கலைக்கழகத்தில் பேச வைக்க வேண்டும் என்று இயக்க மாணவர்கள் ஆர்வங் கொண்டார்கள். அப்பொழுது பல்கலைக்கழகத் துணை வேந்தராக இருந்தவர் நீதிக்கட்சிப் பற்றுடையவரான சர்.கே.பி.ரெட்டி நாயுடு காரு ஆவார். தமிழ்ப் பேராசிரியராக விளங்கியவர் தோழர் கா.சுப்பிரமணியப்பிள்ளை எம்.ஏ.எம்.எல்., இருவருடைய அனுமதியும் கிடைக்கும் என்ற நம்பிக்கையின்பேரில், அறிஞர் அண்ணா அவர்களை வரவழைப்பதற்கான கடிதப் போக்குவரத்து நடத்தப்பட்டது. அறிஞர் அண்ணா அவர்களும் வருகை தர இசைந்தார்கள். பின்னர் சர்.கே.வி.ரெட்டியிடம் மாணவர்கள் அனுமதி கேட்கப் போயினர். அறிஞர் அண்ணா அவர்களுக்கு இடம் அளித்தால், பார்ப்பனப் பேராசிரியர்களும் பிறரும், தம்மைக் குற்றஞ்சாட்டி விடுவார்களோ என்று அஞ்சிய சர்.கே.வி.ரெட்டி நாயுடுகாரு அனுமதி தர மறுத்துவிட்டார். தமிழ்ப் பேராசிரியர் சிபார்சின் பேரிலாவது அனுமதி கிடைக்குமா என்று மாணவர்கள் முயன்றனர். அதுவும் தோல்வியில் முடிந்தது. ஏனெனில் அந்தக் காலத்தில்தான் தம்பு ராமாயண எதிர்ப்புக் கிளர்ச்சி நாடெங்கும் ஓங்கிநிற்கிறது. பழம்பண்டிதர்களின் கண்டனக் கணைகள் அறிஞர் அண்ணாவின் மீது போகுமிடத்திலெல்லாம் வீசப்படும் நேரம், அப்பொழுது அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இருந்த பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும், பிற பழம்பண்டிதர்களும் அறிஞர் அண்ணாவுக்கு எவ்வகையிலும் அனுமதி அளிக்கக்கூடாது என்று, பேராசிரியர் கா.சுப்பிரமணியப்பிள்ளை அவர்களிடம் வற்புறுத்திக் கூறிவிட்டனர். பேராசிரியர் கா.சு.பிள்ளை அண்ணாவை வரவழைப்பதில் வெறுப்புக் கொள்ளவில்லை என்றாலும், சுற்றுச் சூழ்நிலையின் காரணமாக, அனுமதியளிக்கவோ, உதவியளிக்கவோ மறுத்துவிட்டார்.

குறிப்பிட்ட நாளில் அண்ணா அவர்கள் சிதம்பரம் வந்து சேர்ந்தார்கள். ஆனால் பல்கலைக்கழகத்தில் பேசுவதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. அறிஞர் அண்ணா அவர்களைச் கொண்டு எப்படியேனும் கூட்டம் நடத்திவிடவேண்டும் என்ற ஆர்வத்தால் கிளர்ந்தெழுந்த மாணவர்கள் புலவர் நா.மு.மாணிக்கம் அவர்களின் ஒத்துழைப்பின் பேரில், கிதம்பரம் இராமசாமிச் செட்டியார் உயர்நிலைப்பள்ளி மண்டபத்தில், பொதுக்கூட்டம் ஒன்றினை ஏற்பாடு செய்தனர். தோழர் க.அன்பழகன் மிக ஊக்கத்தோடு பணியாற்றினார். அண்ணா அவர்களும் ஆக்கூட்டத்தில் கலந்து கொள்ள இசைந்தார்.

கூட்டத்திற்குப் புலவர் நா.மு.மாணிக்கம் அவர்கள் தலைமை தாங்கினார். அறிஞர் அண்ணா அவர்கள் இளம் உள்ளம் என்னும் பொருள் பற்றி அழகியதோர் கருத்துமிக்க சீரிய சொற்பொழிவாற்றினார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களின் முதல் முயற்சி தோல்வியுற்றது என்றாலும், மீண்டும் வருகிறேன் என்று அண்ணா அவர்கள் அளித்த ஆறுதல் பொழியின் காரணமாக, மாணவர்களின் உள்ளத்தே மூண்டெழுந்த கனல் அடங்காமல் சுடர்விட்டு எரிந்துகொண்டேயிருந்தது.
(மன்றம், நாள்: 15.10.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 29, 2010 2:25 am

சந்திரோதயம் நாடத்தில் அண்ணா

அறிஞர் அண்ணா அவர்கள் பொது வாழ்வில் ஈடுபட்ட பொழுதில், முதலில் சிறந்த பேச்சாளராக, எழுத்தாளராகப் பெயர் பெற்றார். பின்புதான், அவர் ஒரு சிறந்த நாடகாசிரியர் என்பதும், அத்துடன் நாடகங்களில் நடித்தபொழுது அவருடைய நடிப்புத் திறமையும் வெளிப்பட்டது. முன்பு புறம்பானதாகக் கருதப்பட்ட நாடகக்கலையில் அரசியல்காரர்களும், படித்தவர்களும் ஈடுபட்டு, அரசியலுக்கு நாடகத் துறையை சிறந்ததொரு பக்கத்துணையாக ஆக்கிய பெருமை அண்ணாவைச் சாரும்.

அறிஞர் அண்ணா முதலில் எழுதி, நடித்த நாடகம் சந்திரோதயம் ஆகும். அதில் முக்கிய பாகமான துரைராஜ் வேடத்தை அண்ணா அவர்கள் ஏற்று நடித்தார்கள். மற்றும் அதில் நடித்தோரில் பலர், அண்ணாவுக்குத் தெரிந்த நண்பர்கள், திராவிட நாடு அலுவலகத்தில் பணியாற்றியவர்கள். அதற்கு முன் நடித்துப் பழக்கமில்லாதவர்கள் ஆவார்கள். அவர்கள் எல்லோரையும் வைத்து, அண்ணாவின் சந்திரோதயம் வெற்றிகரமாக நடந்தேறியதுடன், கட்சிக்கொள்கைகளை நாடக அளவில் பரப்புவதற்கு வழிகாட்டியாக இருந்தது. சந்திரோதயத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாயிருந்தது, அண்ணாவின் எழுத்தும் நடிப்பும்தான்.

1943 இறுதியில் சிதம்பரம்ததில் அண்ணாவின் சந்திரோதயம் நடைபெற்றது. அண்ணா துரைராஜாக நடித்தார்.

நாடகத்தில் வரும் துரைராஜ், கடைசியில் விஷத்தைக் குடித்து இறக்கும் கட்டம் வந்தது. துரைராஜ் விஷக்கோப்பையைக் கையிலெடுத்து அருந்தப் போனான்.

திடீரென்று நிறுத்துங்கள் என்று கூச்சல் வந்தது. எங்கிருந்து என்று பார்த்தால், நாடக மேடையிலிருந்தல்ல. கீழிருந்து, நாடகத்திற்கு தலைமை வகித்தவர் எழுந்து நின்று அவ்வாறு சொன்னார். ஒருவருக்கும் ஒன்றும் புரியவில்லை. நாடகம் அப்படியே தடைபட்டது. துரைராஜ் விஷக் கோப்பையைக் கையில் பிடித்தபடி இருந்தார். தலைமை வகிப்பவர் மேடைமீது ஏறினார். இது கூடாது. அண்ணா அவர்கள் விஷங் குடிப்பது கூடாது, அவர் ஏன் செத்துப்போக வேண்டும்? அவர் இஷ்டப்பட்டால், இது போல ஜமீன்தாராக இருக்க முடியாமல், போய்விடாது. அண்ணா விஷங் குடிப்பதை நான் பார்த்துக் கொண்டிருக்க முடியாது! என்று உணர்ச்சிப் பெருக்குடன் பேசினார். மற்றவர்கள் அவரைச் சமாதானப் படுத்தி உட்கார வைத்தார்கள். அந்த அளவு அண்ணாவின் சோகப் பேச்சும் நடிப்பும் அதில் இருந்தது.
(மன்றம், நாள்: 15.11.1954)



அறிஞர் அண்ணாவின் வாழ்கை வரலாறு - Page 4 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக