புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
157 Posts - 79%
heezulia
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
3 Posts - 2%
prajai
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
1 Post - 1%
Pampu
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
322 Posts - 78%
heezulia
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
8 Posts - 2%
prajai
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
3 Posts - 1%
Barushree
குண்டலினி Poll_c10குண்டலினி Poll_m10குண்டலினி Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குண்டலினி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 8:14 am

சூரியனாக பரிணமிப்பதற்கு எது மூலகாரணமோ அதுவே குண்டலினி என்பதாகும்.
குண்டலினி Mind10
அணுவாக இருப்பதற்கு எது காரணமோ அதுவே குண்டலினி என்பதாகும். நுண் அணுக்களாகிய எலக்ட்ரான், புரோட்டோன் என்பவைகளாக இருப்பதற்கு எதுமூலகாரணமோ அதுவே குண்டலினி என்பதாகும்.

தாவரத்தில் வெளிச்சசக்தி ஈர உணர்ச்சியோடு வளர்ந்து பருவத்தில் வித்தாக முடிவடைகிறது. அதுபோல் எல்லா சீவராசிகளிலும், அனேகவித நிறமுடைய ரத்தஉணர்ச்சியாக, வளர்ந்து முடிவில் விந்துவாகிறது. மனிதஉடம்பில் 13 முதல் 18 வயதிற்கு மேல் விந்து விளைகிறது. உடம்பில் இரத்தநாடிகள் இருக்கும் இடங்களில் எல்லாம் விந்து வியாபித்திருக்கின்றது. விந்துவின் உள்ளும், புறமும் இருக்கும் சக்தியே குண்டலினி~ என்பதாகும்.

குருவால், கருவால், ஒழுக்கத்தால், உயர்வால், பரம்பரை வாசனையின் அந்தஸ்த்தால், தன்னைத்தான் அறியவேண்டும் என்றோ, ஈசனை அடையவேண்டும் என்றோ எண்ணுகின்ற வீரனுக்கு குண்டலினிசக்தி மிகமிக பயன்படுகின்றது.

மரணமில்லா பெருவாழ்வு வாழ உள்ளுணர்வு மிகமிக அவசியம். உணர்விருந்தால் மரணபயமில்லை. மூலாதாரம், உந்தி, அடிமூலம், கீழ்மூலம், குடிலை என்று இதனை பலவிதமாக சொல்வர். இதில் அடங்கியிருக்கும் கருவின்நிலை ஒரு கூடையினால் மூடப்பட்ட விளக்கின் நிலையை ஒத்திருக்கிறது. இதை மேல்நோக்கி கொண்டுவர ஏக்கத்தோடு அறிவு காத்திருக்கிறது.

இந்த அரியபொக்கிஷமாகிய குண்டலினி சக்தியினை பழங்காலத்தில் மகிரிசிகளும், யோகிகளும் தியானித்து வாழ்வின் பெரும் நோக்கமாகிய வீடு பேற்றினை அடைந்தார்கள். இம்மாபெரும் யோகமுறையினை அவர்கள் பெரும் பொக்கிஷமாக மதித்து மிக மிக ரகசியமாக பாதுகாத்து வந்தனர். ஆதலினால் இந்த அரிய குண்டலினியோகமானது மனிதசமூகத்துக்கு தெரியாமல் மறைந்துவிட்டது. நமது ஜெகத் மகாகுரு தத்துவ தவஞானி ஞான வள்ளல் பரஞ்ஜோதி மகான் அவர்கள் இந்த குண்டலினியோகத்தினை மிக எளிமைப்படுத்தி மக்கள் அனைவரும் இந்த யோகத்தினை பயின்று, அவரவர் குடும்பம், நட்பு, தொழில் இவைகளுடனே வாழ்வாங்கு வாழ்ந்து வீடு பேறடையும் வண்ணம் போதித்தருளியுள்ளார்கள்.

பரஞ்ஜோதி ஞானஒளிபீடத்தில் இந்தராஜயோகத்தினை மிக எளியமுறையில் போதித்தருள்கிறார்கள். ஆண், பெண், சாதி, மதம், இனம், மொழி, ஏழை, தனவந்தர் போன்ற எவ்வித பாகுபாடுகளுமின்றி மனிதகுலம் அனைவரும் இவ்வுபதேசத்தினைப்பெற்று பேரானந்தமாக வாழ்வாங்கு வாழலாம்.

இந்த உபதேசம் பெற்றுத் தொடர்ச்சியாகப் பயின்றுவரும் சிஷ்யர்கள், தொல்லைகளெல்லாம் சிறிது சிறிதாக விலகி மறைவதை உணர்வதுடன், தேக ஆரோக்கியம் வலிமை பெறுவதையும், மனஅமைதியுடன் அறிவு தெளிவடைவதையும் உணரலாம். இத்தியானத்தினை அவரவர் தொழில், நட்பு, சுற்றம் இவைகளுடன் இல்லறத்தில் இருந்த வண்ணமே பயிலலாம்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 8:15 am

குண்டலினி தியானத்தினால் கிடைக்கும் பலன்கள்

1. வைராக்கியமும் வல்லமையும் ஒருங்கிணைந்த தைரியமான மனம்

2. பிணிகளில் இருந்து விடுபடல்

3. அதியற்புதமான ஆன்ம வலிமை

4. தன்னம்பிக்கை வளர்ச்சியும், அதீதமான தெளிந்த அறிவும்

5. உயர்ந்த ஞாபகசக்தி

6. சலனமற்ற தூக்கம்

7. உலகுடன் இசைந்துவாழும் இயல்பு

8. எதையும்தீர்க்கமாக உணர்ந்தறிதல்

9. புலன் வழிச் செல்லா நுண்ணறிவு.

10. தெளிந்தவிளக்கமுள்ள அறிவு

11. வெற்றிகரமான செழுமையான வாழ்வு

12. வெற்றிகரமாக பிரச்சனைகளை தீர்த்துக்கொள்ளும் ஆற்றல்

13. அறிவு விளக்கத்தினால் ஐயமற்ற அறிவின் விழிப்பு நிலை

14. சீரான ஒளிமயமான வாழ்வு

15. மன அமைதி

16. சுய ஆத்ம அறிவு

17. சுய ஆத்ம போதம்

18. பேரானந்தம்

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 8:40 am

தவநிலைகளும் பயன்களும்

ஆக்கினை:

SKY என்னும் எளிய முறை குண்டலினி யோகத்தில் (Simplified Kundalini Yoga) முதற்படி இது. மூலாதாரத்தில் உறங்கிய குண்டலினி சத்தியை ஆசான் தன் தவ வலிமையால் முதுகந்தண்டு வழியே தூக்கி நடத்தி வந்து நெற்றியில் புருவ மத்தியில் வைக்கிறார். இம்மாற்றமே ஆன்மீக உயர்வுக்குத் திருப்புமுனை. தனது உயிர் எப்படி இருக்கும் என்பதை ஐம்புலனில் ஒன்றான ஊறுணர்ச்சிக்கு எட்டச் செய்து அதன் மூலமாக மனத்திற்கு அகமுக திசை கொடுக்கப்படுகிறது இதுவரை மனம் வெளியில் பார்த்துக் கொண்டிருந்தது வெளிப்பொருட்களில் சிக்கிக் கொண்டு இருந்தது. இனி அது உள்ளே பார்க்கும் அதாவது தன்னையே பார்க்கும் உள்ளொளி பூரித்து உயிருக்கு மேனோக்கு வேகத்தைத் தரும்.

"இரு விழிகள் மூக்குமுனை குறிப்பாய் நிற்க
எண்ணத்தைப் புருவங்களிடைநி றுத்தி
ஒருமையுடன் குருநெறியில் பழகும் போது
உள்ளொளியே பூரித்து மூலமான
கருவுக்கு மேனோக்கு வேக மூட்டும்;
கருத்துக்கு இந்நிகழ்ச்சி உணர்வாய்த் தோன்றும்;
அருவ நிலை யாம்ஆதி உருவாய் வந்த
அத்துவித ரகசியமும் விளக்க மாகும்."
(உலக சமாதானம்-233)


ஏறுபடி என்று சொல்லப்படும் ஆக்கினைத் தவத்தினால் பொருள் கவர்ச்சி நீங்கும். தன்னிலை விளக்கம் கிடைக்க வழி திறக்கும். விரும்பிய நல்வழியில் நிற்கும் திறன் கிடைக்கும். ஆசை அளவோடு நிற்கும் பேராசையாக விரியாமல் தடுக்கப்படும். விளைவறிந்து செயல்படும் அயராவிழிப்புநிலை கிடைக்கும். புறமனத்திற்கு நுட்பமும் வேகமும் விருத்தியாகும். பொருள் அனுபோகத்திலேயே நாட்டம் செல்வது தவிர்க்கப்படும். புலன்களைக் கட்டுக்குள் வைத்திருக்க இயலும். Suppression முரட்டு வைராக்கியம். வெறுப்பை அடிப்படையாகக் கொண்ட கடுஞ்சத்தம் இவை ஏதும் இன்றி இயல்பாகவே புலன்கள் அடங்கிப் போகும்.

ஆக்கினையின் பெருமையை இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதன் மகிமையைப் பெரியோர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். நாசிநுனி என்றால் துவராரங்கள் இருக்கும் கீழ்நுனி அன்று மேல் நுனியாகும். "முத்து முகப்பு" என்று இதனைச் சித்தர்கள் அழகுற வர்ணித்துள்ளனர். புருவங்கள் இரண்டும் மூக்கும் கூடும் முச்சந்தி வீடு என்ற உவமை ஆகுபெயராக இதனை விளக்குவார்கள். ஐந்து ஆதாரங்களுக்கு மேலே ஆக்கினையானது ஆறாவதாக இருப்பதால் பஞ்சணை மேல் இருக்கை என்று உருவகப்படுத்துவார்கள்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 8:41 am

ஆக்கினையில் தவம் இயற்ற அங்கே ஆசான் உணர்த்திய உயிரின் அசைவையே அசையாமல் கவனிக்க வேண்டும். அப்போது புறமனமானது ஐந்து புலன்களில் நான்கை விட்டு விட்டு ஊறுணர்ச்சி என்ற ஒரே புலனாக மட்டும் நிற்கும். அப்போது நடுமனம் புறமனத்தின் இயக்கத்திற்கு ஒத்து நிற்க வேண்டும். அப்போது தான் ஓர்மை (Concentration) சித்தியாகும். இன்றேல் நடுமனம் தன் இயக்கத்ததை நிறுத்தவில்லை என்றால் பலவித எண்ணங்கள் குறுக்கிட்டுத் தவத்தைக் கலைக்கும். இந்த இடத்தில் ஆயாசத்துக்கு இடங்கொடுக்காமல் ஊக்கத்துடன் முயன்று நடுமனத்தின் இயக்கத்தைக் கட்டுப்படுத்தி அது புளமனத்தோடு ஓத்துப்போகச் செய்ய வேண்டும். போகப் போக எண்ணங்கள் குறுக்கிடாத அசைவிலா ஓர்மைநிலை சித்தியாகும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:28 am

சாந்தியோகம்:

இந்த மையம் முதுகந்தண்டின் (Spinal column) அடிப்பகுதியாகும். ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் மேலே உள்ள பால் உணர்வுச் சுரப்பியை (Sexual gland) குறிக்கும். எனவே மூலாதாரத்தில் நின்று தவம் இயற்றும் போது அந்த இடத்தில் அதாவது உடலின் உள்ளே (முன்புறமோ பின்புறமோ) நினைவைச் செலுத்தித் தவம் இயற்ற வேண்டும்.

இதற்குச் சாந்தியோகம் என்று பெயர் அதனைச் சரிவரப் புரிந்துகொள்ளவில்லையானால் அசுவனி முத்திரை ஒரு பத்து முறை செய்யவேண்டும். அப்படிச் செய்து கொண்டு முதுகந்தண்டின் அடிப்பகுதியில் ஆனால் ஆசன வாய்க்கு ஓர் அங்குலம் உயரே மனதைக் குவிக்க வேண்டும். அப்போது சாந்தியோகம் எளிதில் பிடிபடும். இது மிகவும் முக்கியமானது.

வேக வாகனத்தை இயக்கக் கற்றுக் கொடுக்கும்போது ஆக்ஸிலேட்டரை அழுத்தக் கற்றுத் தருபவர் கூடவே பிரேக்கையும் காட்டிக் கொடுத்து அதன் மதிப்பையும் உபயோகத்தையும் சொல்லித்தருவார். அதுபோல் உயிராற்றலை ஆக்கினைக்கும் அதற்கும் மேலேயும் தூக்கி நிறுத்திப் பழகுதல் தான் தன்னிலை விளக்கத்தையும் ஆன்மீக உயர்வையும் தரும் என்றாலும் தவக்கனல் பல காரணங்களால் கட்டு மீறும் போதும் வேறுசில சூழ்நிலைகளிலும் உயிராற்றலை அதனது பழைய இடத்திலேயே நிறுத்தியாக வேண்டும். இதுவே சாந்தியோகம்.

இந்தச் சாந்தியோகம் என்னும் மூலாதாரத் தவத்தை ஆரம்ப காலத்தினர் அறிந்திருக்கவில்லை. அதனால் முற்காலத்தில் தவமியற்றுதல் என்பது உயிருக்கே ஆபத்தான காரியமாக இருந்திருக்கிறது. பிரமை பைத்தியம் போன்ற கொடிய வியாதிகளும் நேர்ந்திருக்கின்றன. ஆனால் இப்போது அந்தப் பயம் சற்றும் கிடையாது. யோக சாதனையின் அதீதத்தின் (excess) காரணமாகவோ உணவின் காரணமாகவோ ஆராய்ச்சியின் காரணமாகவோ அல்லது கோள்களின் நிலை காரணமாகவோ தவக்கனல் மிகுந்தால் அதை உடனடியாக உணர்ந்து தணித்துக் கொள்ளவும் அந்தத் தவக்கனலின் அதீதத்தை (excess) உடல் நலனுக்கும் உள்ளத்தின் நலனுக்கும் பயனாக்கிக் கொள்ளவும் சாந்தியோகம் உதவுகிறது.

தவவேகம் உடல்பலத்தை மீறும்போது
தணித்திடவும் வழியுண்டாம் அதைக்காணாமல்.
சிவநிலையை அடைவதற்குத் தவமிருந்து
சித்தியடை யாமுன்னம் கனல்மி குந்து
சவநிலையை அடைந்தார்முன் னால் பல்லோர்
சற்றுமிப்போ தந்தபயம் இங்கே இல்லை;
நவயுகத்திற் கேற்றபடி வாழ்க்கை ஊடே
"நான்" என்னும் நிலையறியும் மார்க்கம் ஈதாம்.


Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:30 am

மூலதாரத்திலிருந்து உணர்வு மேலெழுப்பப் பெற்ற உணர்வாளர்களாகிய நம்முடைய உயிராற்றலானது சில சூழ்நிலைகளுக்கு உள்ளாகும்போது சிதைவையும் இழப்பையும் (damage) ஏற்க வேண்டி வரும். அவை மாதவிலக்கில் இருக்கும் பெண்களின் அருகாமை, நாயின் அருகாமை, பன்றியின் அருகாமை, மற்றும் பிணத்தின் அருகாமை.

தவிர்க்க முடியாத காரணத்தால் இந்தச் சூழ்நிலை ஏதேனும் ஒன்றில் இருந்தே ஆகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டால் அப்போது உடனே சாந்தியோகத்திற்கு இறங்கிவிட வேண்டும். அதாவது உணர்வை ஆக்கினையில் வைக்காது மூலாதாரத்திற்கு இறக்கிவிட வேண்டும். அப்போது நாம் எந்த இழப்புக்கும் உள்ளாக மாட்டோம். மாதவிலக்கில் இருக்கும் பெண்டிர் சமைத்த உணவை உண்ண வேண்டிய தவிர்க்க முடியாத கட்டாயம் நேர்ந்தால் அப்போதுகூட இறங்குபடியில் இருந்து கொண்டு உண்ண வேண்டும். அப்போதுதான் உயிராற்றலின் இழப்பிலிருந்து தப்பலாம்.

மேலே சென்று விட்ட நாம் கீழே இறங்கி நின்று தவம் இயற்றுவதால் சாந்தியோகத்திற்கு இறங்குபடி என்றும் ஒரு பெயர் உண்டு. தவக்கனலை இறக்கிச் சாந்தி தருவதால் சாந்தியோகம் என்று பெயர்.

நினைத்தவுடன் சட்டென்று மூலாதாரத்திற்கு இறங்கி விடும் திறன் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்தக் குண்டலினியோகப் பயிற்சியின் ஆரம்பக் காலத்தில் ஏழுநாட்கள் சாந்தியோகத்திலேயே இருக்க வேண்டும்.

தவிர ஆரம்பப் பயிற்சியாளர்கள் ஒவ்வொரு வேளை சாப்பாட்டிற்குப் பிறகும் மூன்று நிமிடம் இறங்குபடி கவனிக்க வேண்டும். இதற்கு உட்கார்ந்து தவம் செய்ய வேண்டும் என்பதில்லை. சாப்பிட்டு முடித்தபின் அடுத்த அடுத்த காரியங்களைப் பார்த்துக்கொண்டே நினைவை மட்டும் மூலாதாரத்தில் வைத்திருக்க வேண்டும்

ஆரம்பப் பயிற்சியாளரும் சரி முதிர்ந்த பயிற்சியாளரும் சரி வாரத்தில் மூன்று வேளை (வெள்ளி காலை, மாலை, சனி காலை) கட்டாயம் சாந்தியோகம் மட்டுமே பயில வேண்டும். அதே போல் மாதாந்திர உலக அமைதித் தற்சோதனை மௌனநோன்பு அன்று படுக்கபோகும் முன் இயற்றப்பெறும் கடைசிவேளைத் தவம் முழுக்க முழுக்க இறங்குபடித் தவமாகவே இயற்றவேண்டும். வாழ்த்துங்கூட இறங்குபடியில் நின்றே கூறவேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:31 am

பஞ்ச பூதத் தத்துவத்தில் மண் ஆகிய பிருதிவிக்கு உரிய ஸ்தானம் மூலாதாரம். இங்கு நின்று தவம் ஆற்றுவதால் பூகர்ப்ப ஆராய்ச்சி பற்றிய அறிவு விருத்தி ஆகும்.

ஒரு குண்டலினியோகி தவமியற்றிச் சேமித்து வைத்துள்ள தவசக்தியின் மிகுதியானது சாந்தி யோகத்தின் பயனாக உடல் சக்தியாக மாறுகிறது. அது உடல் நலனுக்கும் நோய் எதிர்ப்புக்கும் பயன்படும். உடல்வலி, ஜீரம், அஜீரணம் போன்ற சாதாரண நோய்கள் சாந்தியோகத்தால் நீங்கும். மலச்சிக்கல் விலகும். உடலில் உயிரின் இயக்கம் சீராகும்.

ஒரு நுட்பத்தைக் கவனியுங்கள்: முன்னர் மூலாதாரத்தில் குண்டலினி சக்தி இருப்பாக இருந்ததற்கும் இப்போது சாந்தியோகத்தில் நாம் அதே சக்தியை மூலாதாரத்தில் தேக்கித் தவமியற்றுதலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கின்றது. அவற்றை ஆராய்வோம்.

முன்னர் மயக்கநிலை இப்போது விழிப்பு நிலை. மூலாதாரத்தில் நின்றாலும் சாந்தியோகத்தின்போது மனம் விழிப்பில் தான் இருக்கிறது. எனவே மனத்தின் சக்தி குறைந்து விடுவதில்லை. ஆகவே சாந்தியோகத்தின்போது வாழ்த்துக் கூறுதலும் பொருத்தமானதுதான்.

முன்னர் மூலாதாரத்தில் உயிராற்றல் இருந்தது தெரியாது. இப்போது சாந்தியோகத்தில் அது இருப்பது தெரிகிறது. அதன் அசைவும் அழுத்தமும் மனத்திற்குப் புலப்படுகின்றன. அவற்றைக் கவனித்தல் மனத்திற்கு ஓர்மை நிலைப்பயிற்சியாகவும் (Concentration) அமைகிறது.

சாந்தியோகத்தின் காரணமாக தேவைக்கேற்ப உடல் சக்தியை மனோ சக்தியை உடல் சக்தியாகவும் மாற்றி மாற்றிப்பயன் துய்க்கிறோம். எனவே இதன் மதிப்பையும் உயர்வையும் போற்றி உரியவாறு இத்தவத்தைப் பயின்று வரவேண்டும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:33 am

துரியம்:

பிரம்மரந்திரம் என்றால் உச்சந்தலையைக் குறிக்கும். பிரம்மரந்திரம் என்றால் இறைநிலைக்கான வாயில் என்று பொருள். உச்சந்தலையில் உணர்வை நிறுத்தித் தவம் இயற்றுதல் பிரம்மரந்தரத்தவமாகும். இதற்குத் துரிய நிலைத்தவம் அல்லது துரியம் என்றும் பெயர்.

ஆக்கினைச் சக்கரத்தில் கையால் தொட்டு உணர்வு கொடுத்த ஆசான் தன் இருவிழி அருட்பாவை மூலம் துரிய தீட்சை கொடுக்கிறார். ஐம்புலனாக விரிந்தே பழகிய மனம் ஆக்கினையில் ஒரே புலனாகச் சுருங்கி நின்றது. இனித் துரிய தவத்திலோ அந்த ஒரு புலனும் மறைய மனமானது மனம் என்ற விரிந்த நிலை குன்றி அதன் மூல நிலையான உயிராகவே நிற்கிறது. உயிர் விரிந்தால்தான் அது மனமாக மாறுகிறது என்ற விளக்கம் உங்களுக்குத் தெரியும். எனவே உயிர் உயிராகவே நின்று தனது அடக்கத்தில் பிரம்மமாக அமைதி பெறுவதற்குத் துரியத்தில் தயாரிப்பு நடைபெறுகிறது.

நம் முன்னோர்கள் மூளையை ஆயிரம் பகுதியாகப் பிரித்தார்கள். அதனால் துரிய நிலைத் தவத்திற்கு சகஸ்ராதாரயோகம் என்றும் பெயர் உண்டு. சகஸ்ரம் என்றால் ஆயிரம். அதாவது நமது மூளையிலே ஆயிரக்கணக்கான regional valves உள்ளது. ஒவ்வொரு எண்ணம் தோன்றுவதற்கும் பல regional valves ஒன்றுசேர்ந்து இயங்கும். அப்படி அடிக்கடி கூடியும் சேர்ந்தும் இயங்குவதற்கு நமது மூளையிலே பல கோடிக்கணக்கான சிற்றறைகள் (valves) உள்ளன.

நாம் ஆக்கினையில் தவம் செய்து விட்டு துரிய நிலைத்தவம் செய்வதற்கு உச்சியில் நினைவைச் செலுத்தும்போது உயிர்ச்சக்தி மூளையிலுள்ள சிற்றறைகளிலெல்லாம் ஊடுருவி அசைந்து கொண்டுபோகும். அந்த ஓட்டம் இனிமையான ஓட்டமாக ஒவ்வொரு இடத்திலேயும் அது புதைந்து புதைந்து வருவதாக ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வாக இருக்கும்.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:45 am

நாம் சாதாரணமாக உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமது மூளையிலே கோடிக்கணக்கான சிற்றறைகள் இருந்தாலும் அவற்றில் அற்பமான ஒரு சிறுபகுதியே இயக்கத்தில் இருக்கும். மற்ற மிகப்பெரும்பாலான சிற்றறைகள் வெறுமையாக (dummy) உறக்கத்தில் இருக்கம். துரிய நிலைத்தவம் இயற்ற இயற்ற அவை ஒவ்வொன்றாக இயக்கத்துக்கும் வரும். அப்படி விழிப்பு நிலை ஏற்படும்போது பிரபஞ்ச காந்த சக்தியோடு தொடர்பு கொள்ளும் ஆற்றல் ஓங்கி உள்ளுணர்வு (Intuition) ஒளிரும்.

துரியநிலைத் தவம் பிட்யூட்டரி பினியல் என்ற இரண்டு சுரப்பிகளுக்கும் மையமாகம். உடலுக்கு master-gland என்று சொல்லக்கூடிய பிட்யூட்டரி சுரப்பியையும் மனதுக்கு master-gland என்ற சொல்லக்கூடிய பினியல் சுரப்பியையும் கட்டுப்படுத்தி நம் வசப்படுத்தி இயக்கக்கூடிய இடமாகத் துரிய தவம் அமையும்.

ஆன்மா தனது பழிச்செயல் பதிவுகளிலிருந்து தூய்மை பெற ஏற்றதோர் பயிற்சி துரிய நிலை யோகமாகும். துரிய நிலைத்தவம் நடுமனத்தில் நின்று ஆற்றப்படுவது. எனவே மனத்தின் விரியுந் தன்மை இத்தவத்தால் கூடுகிறது. நாம் எண்ணும் உயரிய எண்ணம் பலபேர் உள்ளத்தில் பரதிபலிக்கும். நாம் கொடுக்கும் சங்கற்பங்களும் வாழ்த்துக்களும் நன்கு செயலாகும். மனத்திற்கு வேகமும் நுட்பமும் எளிதில் உணர்ச்சி வயப்படா நிலையும் கிடைக்கும்

எண்ணத்தை ஆராயவும் அகத்தாய்வு (Introspection) செய்யவும் கவலைகளை ஆராய்ந்து ஒழிக்கவும் துரிய நிலைத் தவமே பெரிதும் துணையாக இருக்கும். நமது குண்டலினி யோகத்தில் துரியநிலைத் தவம் மிகவும் முக்கியமானது. துரியநிலைத் தவத்தால்தான் நடுமனம் புறமனத்தை முழுமையாக வெற்றி கொள்கிறது.

Admin
Admin
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 2975
இணைந்தது : 23/09/2008
http://www.eegarai.net

PostAdmin Sat Jan 24, 2009 9:46 am

துரியாதீத தவம்:

தியானம்-தவம் (Meditation) என்ற இரண்டுமே ஒன்று தான். அதாவது ஒன்றைப் பற்றியே நினைத்திருந்து அந்த ஒன்றாகவே மாறிப்போதல்.

நமது துரியநிலைத் தவத்தில் நாம் நம் உயிரைப் பற்றியே நினைத்திருந்து உயிராக மட்டுமே இருக்கிறோம். இங்கு மனம் என்பது செயல்படுவது இல்லை. ஆக்கினைத்தவத்தில் மனம் உயிரைக் கவனிக்கிறது. துரியத்தில் மனம் தன் இயக்கத்தை நிறுத்திக் கொள்கிறது. மன இயக்கம் நின்றால் உயிர் துரியத்தில் உயிர் உயிராகவே நிற்கிறது. தவத்தின் அடுத்த கட்டப் பயிற்சிக்கு இந்தத் துரிய நிலைப் பயிற்சியில் நல்ல தேர்ச்சியும் கால நீடிப்பும் அவசியம்.

சமாதி என்றால் ஆதிக்குச் சமமாதல் என்று பொருள் (சமம்+ஆதி) : ஆதியாகிய பிரம்மத்திற்குச் சமமான நிலைக்கு மனிதன் உயர்ந்து விடுதல் ஆகும். துரிய நிலைத் தவத்தில் மனம் ஒழிந்து தான் தானாகவே நின்ற உயிரானது இங்குத் தன் மூலத்தை அறிகின்றது. தன் மூலமாகவே ஆகிவிடுகிறது. பிரம்மமாகவே மாறி நிற்கிறது. இதைத்தான் நாம் துரியாதீத தவம் என்கிறோம்.

துரியாதீதமே ஜீவப் பிரம்ம ஐக்கிய முக்தி. துரியாதீதமே வீடுபேறு. மனிதன் எதை நினைக்கிறானோ அதுவாகவே மாறி விடுகிறான். அதாவது அவனது மனம் அந்த வடிவத்தை எடுத்துக் கொள்கிறது. இது மேல்நாட்டுத் தத்துவ ஞானிகளும் ஏற்றுக் கொண்ட ஒரு தத்துவம். அந்தத் தத்துவ அடிப்படையில்தான் பிரம்மத்தை நினைக்கும்மனமும் பிரம்மமாகவே - ஆதியாகவே - மாறிப் பிரம்மத்திற்குச் சமமான சமாதிநிலையை அடைகிறது. இதில் ஒரு சிறு சங்கடம் இருக்கிறது. அது என்னவென்றால் தனக்குத் தெரிந்த ஒன்றைத்தான் மனதால் நினைத்துப் பார்க்க முடியும். தெரியாத ஒன்றை எப்படி நினைப்பது? அதன் வடிவத்தை எப்படி எடுப்பது? பிரம்மத்தைப் பற்றித் தெரிந்திருந்தால் அல்லவா அதனை நினைக்க முடியும்? கடவுள் இருக்கிறார் அதாவது தனக்கு அப்பாற்பட்ட ஒரு மகத்தான சக்தி இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது. வேறு ஒன்றும் விவரம் தெரியவில்லை. கடவுளைப் பற்றி அறிந்தவர்கள் சொல்லும் விவரங்களும் மனத்துக்குப் பிடிப்படுவனவாக இல்லை.

அத்துடன் ஐம்புலனுக்கு எட்டும் ஒன்றைத் தான் நினைத்துப் பார்த்துப் பார்த்து மனத்துக்குப் பழக்கம் கடவுள்நிலை ஐம்புலனுக்கு எட்டியதன்று. எட்டவும் முடியாது. ஐம்புலனுக்கு எட்டாத ஒன்றை ஆறாவது அறிவைக் கொண்டு அறிய மனிதன் முயன்றான். சரி உண்மையான கடவுளை கடவுள் நிலையை எப்படி அறிவது?

கடவுள் எல்லாமாக இருக்கிறார். நானுமாக இருக்கிறார். எனவே எனக்கும் கடவுளுக்கும் ஒரு சங்கிலிப் பிணைப்பு இருக்கிறது. அதன் ஒரு முனை நான். இன்னொரு முனை அவர் என்னும்போது இந்தச் சங்கிலியைப் போட்டுவிட்டு அவரை எங்கே போய்த் தேடினால் கிடைப்பார்? எனவேதான்"உன்னையே நீ அறிவாயாக" என்று பல பெரியோர்கள் சொல்லி வைத்தார்கள். நானென்னும் போது நானென்று சொல்லிக்கொள்பவர் யார்? மனம் தான். எனவேதான் நாம் மனத்தைப் பிடித்துக் கொள்கிறோம்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக