புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Today at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
90 Posts - 72%
heezulia
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
18 Posts - 14%
Dr.S.Soundarapandian
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
8 Posts - 6%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
5 Posts - 4%
Anthony raj
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
255 Posts - 75%
heezulia
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
45 Posts - 13%
mohamed nizamudeen
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
14 Posts - 4%
Dr.S.Soundarapandian
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
8 Posts - 2%
prajai
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
5 Posts - 1%
Balaurushya
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
3 Posts - 1%
Barushree
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_m10ஆன்ம தத்துவம் - Page 5 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆன்ம தத்துவம்

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 18, 2010 12:13 am

First topic message reminder :

ஆன்மஞானம்

ஆன்மாவும் அதன் ஆற்றலும் எண்ணிலா கோடி அண்டங்கள் பேரண்டங்கள் இப்பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூல காரணமாக விளங்குவது, அடிப்படையாக இருப்பது, ஒரு அணுசக்தி. அதையே சித்தர்கள் ஞானிகள் பரமாணு என்று சொல்கிறார்கள்.

பரமாணு

பரமாணு என்பது பிரிக்க முடியாத அணு என்பது பொருள். அந்தப் பரமாணுவே பரந்து விரிந்து கிடக்கின்ற அண்ட, பேரண்டங்களை இயக்கிக் கொண்டிருக்கின்றன. அதையே பரமாத்தமா என்றனர். அதே மூல அணுவின் ஆற்றலோ ஒவ்வொரு ஜீவராசிகளின் இயக்கங்களுக்கும் காரணமாக விளங்குவதால் ஜீவாத்மா என்றனர். ஆகவே ஆன்மா என்பது அளப்பறிய ஆற்றல் மிக்கது. அந்த ஆற்றல் நம்மிடம் உள்ளது, உருவமாற்றது, அதன் சக்தியை, ஆற்றலை, உணர்ந்தவர்கள் மட்டுமே பல்வேறு அற்புதங்கள் நிகழ்த்த முடியும்.

நம்மிடம் உள்ள மகத்துவம் வாய்ந்த ஆற்றல் மிக்க ஆன்மாவின் சக்தியை உணர்ந்து அதை நமக்காகப் பயன்படுத்திக் கொள்வதுதான் ஆன்மஞானமாகும். ஆனால் நம்மிடம் உள்ள ஆன்மாவின் ஆற்றலைப் புரிந்து கொள்ளாமல், நம்மிடம் உள்ள ஆற்றலை எப்படி வெளிக்கொணர்வதுடூ எப்படி இயக்குவதுடூ எனத்தெரிந்து கொள்ளாமல் வாழ்க்கையில் பலவித அல்லல்களுக்கு ஆளாகிறோம். இப்படிப்பட்ட அல்லல்களிலிருந்து விடுதலை பெற முயன்று வெற்றி கண்டவர்கள்தான் ஞானிகளும், சித்தர்களும்.

இறைவன் என்பவன் யார்?

எண்ணிலா கோடி அண்ட பேரண்டங்களின் இயக்கம், கோடான கோடி அணுக்கள், அணுக்கள் தொகுப்பான ஜீவராசிகள் அனைத்திலும் உள்ளும், புறமும், மேலும், வெளியும் அதுவதில் உயிர்சக்தியாக விளங்கும் பேராற்றலே இறைவன். இதை வள்ளலலார் பெருமான் சொல்லும்போது,

குலவு பேரண்டப்பகுதியோர் அனந்த
கோடி கோடிகளும் ஆங்காங்கே
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும்
நிகழ்ந்த பற்பல பொருள் திரளும்
விலகுறாது அகத்தும் புறத்தும் மேலிடத்தும்
மெய்யறி வானந்தம் விளங்க
அலகுறாது ஒழியாது அதுவதில் விளங்கும்
அருட் பொருஞ்சோதி என் அரசே.

இந்த மாபெரும் இயக்க சக்தியான இறைவன் மனம் என்னும் மாயக்கருவியால் பிறந்தது முதல் இறக்கின்ற வரை நமது உடம்பை இயக்கிக் கொண்டிருக்கிறார். இந்த இயக்க சக்தி நமது உடலில் எப்படிச் செயல்படுகிறது என அறிந்து அதே இயக்க சக்தியை நாம் உணர்ந்து அந்த சக்தியை நம்முடைய உடலையும், உயிரையும் பேணப்பயன்படுத்தும் வழிவகைகளை தெரிந்து கொள்வதே ஆன்மஞானம். ஆன்மஞானம் பெற்றால் நம்முடைய வாழ்க்கையில் துன்பங்கள் எல்லாவற்றையும் நிவர்த்தி செய்து கொண்டு, வெற்றி கண்டு நிம்மதியாக வாழலாம்.

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 9:43 am

ஞானம் பெறும் வழிமுறைகள்

பரிசுத்தமான இதயத்தைப் பெற்றிருப்பதே மனிதன். முதல் தகுதி ஞானம் பெறுவதற்கு அறம், தவம், ஜபம், தியானம், சிறந்த குருவிடம் சென்று முதலில் தன்னை அடிப்படையில் திருத்தி அவரிடம் நல்லாசி பெற்று மேற்கண்ட பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வரவேண்டும்.

வாழ்க்கையில் தினசரி நாம் நமது மனத்தை ஒரு முக்கியமான கருவியாகக் கொண்டு நல்லது, கெட்டது இரண்டுக்குமே உபயோகப்படுத்தி வருகிறோம். மனம் இயங்காமல் எதையும் செயல்படுத்த முடியாது. பலவிதமான சக்திகள் பிரபஞ்சத்தில் பரவிக்கிடக்கின்றன. அதில் ஆக்கபூர்வமான சக்திகளும், அழிவு சக்திகளும் ஆகாயத்தில் சுற்றிக் கொண்டே இருக்கின்றன. இதில் சக்திகள் மிகபலமாக இயங்கும், சில சக்திகள் பலவீனமாக இயங்கும். நல்ல சக்தி அலைகள் பலமாக இயங்கும்போது நாம் எடுத்த காரியம் வெற்றி பெறும். நமது வாழ்வில் வெற்றி தோல்விகள் இந்த நல்ல, கெட்ட, சக்திகளின் ஆக்கிரமிப்பினால்தான் நமக்கு நடைபெறுகிறது என்கிற உண்மையை உணர வேண்டும்.

இதில் சில நமது எண்ணங்களிலும், சில வெளியில் ஏற்படும் சக்திகளின் ஆதிக்கத்தாலும் நடைபெறும். நமக்கு அப்பாற்பட்ட சக்தியில் சிக்கிக்கொள்ளும்போது நாம் அதிலிருந்து மீளமுடியாது. இந்த தீய சக்தியிலிருந்து முழுமையாக விடுபட ஆன்மா அறிவு பெறவேண்டும். நீங்கள் எப்போம் எல்லோரையும் அன்புடன் நேசித்து சந்தோசத்துடன் மனம் விட்டுப்பேசி பழகவேண்டும். மனதால் கூட ஒருவருக்கும் தீங்கு செய்யக்கூடாது. நமது பரம எதிரிக்கும் கூட கெடுதல் ஏற்படக் கூடாது, நல்லதையே செய் எனவும், அவருக்கும் நல்ல எண்ணத்தைக் கொடு எனவும் இறைவனை நாம் வேண்டிக்கொள்ள வேண்டும். எந்தக்காலத்திலும், எந்த சமயத்திலும் யார் உங்களைக் காணவந்தாலும் நீங்கள் அவரை அன்புடன் வரவேற்று உபசரிக்க வேண்டும். அன்பாக பேசி அனுப்ப வேண்டும், எந்தக் காரணத்தைக் கொண்டும் யார் மீது கோபப்படுவதோ தகாத வார்த்தைகளால் வைதோ கூடாது. வேலைக்காரர்கள், பெரியவர்கள், நமக்கு கோபம் உண்டாக்கும்படி பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அன்புடன் பேசவேண்டும். மனதில் அவர்களுக்கு நல்ல எண்ணத்தைக் கொடுக்கும்படி இறைவனை பிரார்த்திக்க வேண்டும்.

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 9:43 am

ஆத்ம ஞானத்தை ஆண்-பெண் இருபாலரும் அடையாளம் அதில் எந்தத்தடையும் இல்லை. நமக்கு வேண்டியது எல்லாம், திடமான மனம், ஆழ்ந்த நம்பிக்கை, அகத்தீசன் மீது பரிபூரண நம்பிக்கை வைத்து அவனிடம் சரணடைய வேண்டும், நல்ல எண்ணங்கள், எல்லோரும் நன்றாக வாழவேண்டும் என்ற எண்ணம் வேண்டும். நாம் எப்போதும் நமது எண்ணத்தை பரிசுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பரிசுத்த மனம் வேண்டுமானால் நம் மனதின் செயல்பாடுகளை ஒழுங்கு படுத்த வேண்டும்.

மனம் இரண்டு வகைப்படுவது ஒன்று உள்மனம், இன்னொன்று புறமனம் (வெளிமனம்). வெளிமனமானது பலவித ஆசை, பாசங்களால் உட்பட்டது. அதனுடைய துணைவர்களான புலன்கள் மெய், வாய், கண், காது, மூக்கு, செவி ஆகிய ஐந்து புலன்கள் தான் நம்முடைய வெளிமனதை ஆட்டிப்படைக்கும். பலவிதமான சுகங்களை அனுபவிக்கத் தூண்டும். இதன் மூலம் பல இன்னல்கள் நேரும். ஸ்பரிச சுகம், தீண்டல் இன்பத்தைத் தோற்றுவிக்கும். தேகம் மனிதனைத் தவறான பாதையில் போகச்செய்யும். இதிலிருந்து விடுபட முயற்சிக்க வேண்டும். கண், வாய், இது மிகப்பொல்லாதது. மனிதனுக்கு மிகமிக முக்கியமானது. இந்த கண் பார்ப்பது எல்லாம் அனுபவிக்க வேண்டும் என்ற ஆசையைத் தூண்டுவதும், அறிவை வளர்க்க படிப்பதும் இக்கண்களே, ஆழ்மனதையும் பார்வையில் பார்த்து மனதில் பதியவைக்கும் மிகமுக்கியமான அவையமாகும். மூக்கு், வாசனைகளை அனுபவிப்பதுடன் மனகிளர்ச்சிகளையும் ஏற்படத்த இந்த உறுப்பு செயல்படும் .செவி, இது கேட்பதற்காக இன்னிசை மற்றும் பேச்சுக்கள், பல விவகாரங்களையும், நல்லது, கெட்டது கேட்கமுடியும். இப்படி ஐம்புலன்கள் வழியாக மனமானது அரசாட்சி செய்து மனிதனை நல்லது,கெட்டது, இன்பம், துன்பம் என்று ஆட்டிப் படைக்கும். ஆகவே இந்த வெறிமனம் அடங்கினால்தான் உள்மனம் திறக்கும். உள்மனமானது எதையும் செய்யக்கூடியது.

அதற்கு நல்லவை கெட்டவை தெரியாது. வெளிமனம் என்ன சொல்கிறதோ அதை அப்படியே செய்யும் அல்லது நிறைவேற்றிவிடும் சக்தி இதற்கு உண்டு. உள்மனதின் ஆற்றல் அபாரமானது. இதன் சக்திகளை எழுத்தால் அளவிட்டுக்கூற முடியாது. பலவிதமான ஆபாச, தீய எண்ணங்களை அகற்றி நமக்கு எது தேவையோ அதை உணர்வுப்பூர்வமாக உள் மனதுக்குத் தெரியப் படுத்தி விட்டால் உள்மனம் அதை அப்படியே நிறைவேற்றி விடும் ஆற்றல்படைத்தது. ஐம்புலன்களால் ஆட்டிப்படைக்கும் வெளிமனதை அடக்குவதற்குதான், மூச்சுபயிற்சி, தியானம், மந்திரங்கள், பாராயணங்கள் முதலியன செய்யவேண்டும். முதலில் வெளிமனதை ஒருநிலைப் படுத்த வேண்டும். இதில் வெற்றி பெற்றால் உள்மனதில் நமது வேண்டுகோளை சொல்வது மிகச்சுலபம். மனதிற்கும், சுவாதிற்கும், இடைவெளி இல்லாத தொடர்புண்டு. மனம் எந்த அளவு செயல்படுகிறதோ அந்த அளவு மூச்சுக் காற்றின் அளவும் செயல்படும்.

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 9:44 am

வெளிமனதை அடக்கச் சான்றோர்கள் இரண்டு உபாயத்தைக் கையாண்டார்கள். ஒன்று தத்துவ ரிதியாக இது இதனால் தீமையாகவே இதைத் தள்ளிவிட வேண்டும் என்று தன்னுடைய அறிவுப்பூர்வமான சிந்தனையில் ஒவ்வொரு தீய எண்ணங்களை ஒதுக்கி, மனதை தன்னுடைய அறிவின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். இன்னொன்று அடங்காத காளையை அடக்குவதற்கு செய்கின்ற உபயம் போல அடங்காத மனதை அடக்க மூச்சு பயிற்சி செய்து மூச்சுக்காற்றை அடக்கித் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்கள். ஆகவே மனமடங்கினால் மூச்சு அடங்கும். மூச்சடங்கினால் மனம் அடங்கும் என்பதாகும். மனிதன் சமுதாயம் என்கின்ற பிணைப்பில் அகப்பட்டுக் கொண்டுள்ளான். அவன் அன்றாடம் பல்வேறு விசயங்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக் கைதியாகி வாழுகிறான்.

ஆகவே அவனுக்கு சிந்தித்து மனதை அறிவுப்பூர்வமாகச் செலுத்தி மனமடங்கச் செய்வது எளிதான காரியமில்லை. காரணம் யோசிப்பதற்கு காலம் போதுவது இல்லை. ஆகவே தற்கால சூழ்நிலையில் மூச்ச பயிற்சியின் மூலம்தான் மனதை அடக்க வேண்டிய கட்டாய நிலையில் உள்ளான். சித்தர்கள் மனதை பரிபக்குவம் செய்வதன் மூலம் ஞானத்தைப் பெறமுடியும் என்று உணர்ந்து தெரிந்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று எட்ட வகையான பயிற்சிகளை வகுத்துக் கொடுத்துள்ளார்கள். ஒருவன் தங்க ஆபரணம் செய்ய வேண்டுமென்றால் உலையில் இட்டு காய்ச்சி தங்கத்தை, தகடுகளாக்கி, கம்பிகளாக்கி, பக்குவமாக செதுக்கி, ஆபரணம் செய்கின்றானே. அதுபோல மனதையும், உடலையும், யோகத்தின் மூலம் பக்குவப்படுத்தி ஞானம் பெற உகந்த வழிகளைக் கையாண்டார்கள் மக்களுக்கும் பல்வேறுவிதமான யோக நூல்கள் மூலமும் சொல்லியுள்ளார்கள். ஆகவே தகுந்த பயிற்சியின் மூலம் புலன்களை வெளி விவகாரங்களில் போகவிட்டு ஆதிக்கம் செலுத்தவிடாமல் புலன்களை வெல்வதற்குப் பயிற்சிகள் முறைகள் கண்டுபிடித்தார். அதன் மூலம் சுவாசம் தானாகக் கட்டுப்படும். சுவாசம் கட்டுப்படும்போது மனசும் கட்டுப்படும். மனம் கட்டுப்பாட்டில் இருக்கின்றவர்களே சிறந்த யோகிகள். அதை அகத்தியர் கூறும்போது,

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்,
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகுமே

மேற்கண்ட பாடல் மூலம் மனத்திறம் கொண்டவர்களுககு எதுவும் எந்த பயிற்சியும் தேவையில்லை என்று கூறுவதிலிருந்து மனதை செம்மையாக வைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். எதுவும் பழக்கமாகி பின்பு வழக்கமாகி மாறுகிறது. ஆகவே நல்ல வழக்கமாக வாழ முயலுவோம்.

தவயோகி தங்கராசன் அடிகளார்

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Tue Mar 23, 2010 9:56 am

மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்,
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகுமே

மேற்கண்ட பாடல் மூலம் மனத்திறம் கொண்டவர்களுககு எதுவும் எந்த பயிற்சியும் தேவையில்லை என்று கூறுவதிலிருந்து மனதை செம்மையாக வைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். எதுவும் பழக்கமாகி பின்பு வழக்கமாகி மாறுகிறது. ஆகவே நல்ல வழக்கமாக வாழ முயலுவோம்.
சியர்ஸ் சியர்ஸ் இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Mar 23, 2010 10:22 am

சபீர் wrote:மனமது செம்மையானால் மந்திரம் செபிக்கவேண்டாம்,
மனமது செம்மையானால் வாசியை நிறுத்த வேண்டாம்
மனமது செம்மையானால் வாசியை உயர்த்த வேண்டாம்
மனமது செம்மையானால் மந்திரம் செம்மையாகுமே

மேற்கண்ட பாடல் மூலம் மனத்திறம் கொண்டவர்களுககு எதுவும் எந்த பயிற்சியும் தேவையில்லை என்று கூறுவதிலிருந்து மனதை செம்மையாக வைத்து வாழ பழகிக்கொள்ள வேண்டும். எதுவும் பழக்கமாகி பின்பு வழக்கமாகி மாறுகிறது. ஆகவே நல்ல வழக்கமாக வாழ முயலுவோம்.
சியர்ஸ் சியர்ஸ் இதை நானும் ஏற்றுக்கொள்கிறேன் அண்ணா

ஆன்ம தத்துவம் - Page 5 154550 ஆன்ம தத்துவம் - Page 5 678642 ஆன்ம தத்துவம் - Page 5 154550

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Dec 03, 2013 4:59 pm

மேலே உள்ள பகுதியை மின்னூலாக தரவிறக்கம் செய்ய:

https://www.dropbox.com/s/ndxg5stxydwipkm/atma-thathuvam-eegarai-tamil-edition.pdf

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Oct 01, 2018 11:21 pm

சூப்பருங்க

ஆன்ம தத்துவம் - Page 5 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 5 of 5 Previous  1, 2, 3, 4, 5

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக