புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ayyasamy ram Today at 8:41 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
59 Posts - 58%
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
25 Posts - 25%
mohamed nizamudeen
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
3 Posts - 3%
Guna.D
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%
kavithasankar
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%
Sathiyarajan
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
54 Posts - 58%
heezulia
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
23 Posts - 25%
mohamed nizamudeen
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_m10வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:40 pm

திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட இத் திருத்தலம் 108 வைணவ திவ்ய ஷேத்திரங்களில் ஒன்றாகும். ஸ்ரீ தேசிகரால் தோத்திரம் செய்யப்பட்டது இந்தத் தலம்.

சென்னையிலிருந்து ஆற்காடு, ஆரணி, வேலூர், சித்தூர், குடியாத்தம், கிருஷ்ணகிரி செல்லும் பேருந்துகள் யாவும் பாலுச்செட்டி சத்திரம் என்னும் ஊரில் நிற்கும். அங்கு இறங்கி ஐந்து நிமிட நேரம் நடந்தால் இத் திருத்தலத்தை அடையலாம்.

ஸ்ரீ இராமானுஜரின் முதல் குருவான யாதவப் பிரகாசர் வாழ்ந்த இடம் இது. எம் பாரும் இங்குதான் யாதவரிடம் வேதாந்தம் பயின்றார்.

பதின்மூன்றாம் நூற்றாண்டில் சுந்தரபாண்டியனால் இதன் முன் மண்டபம் கட்டப்பட்டது என்பதை இங்குள்ள கல்வெட்டுக்கள் அறிவிக்கின்றன.

ஜடாயு போரிட்ட திருத்தலம்

ஜடாயு - ராவணன் இடையே நிகழ்ந்த போரில், இறக்கைகள் வெட்டப்பட்டு உயிரைக் கையில் பிடித்தபடி ராமனுக்காகக் காத்திருந்தார் ஜடாயு. ராமச்சந்திரமூர்த்தி அவ்விடம் வந்தபோது ஜடாயு அவரிடம் விவரமெல்லாம் தெரிவித்தார். பின் அவர் ஆண்டவனின் திருவடி சேர்ந்தார். தன் தந்தையையே ஜடாயுவின் உருவில் கண்ட ராமபிரான் அவருக்கு அந்திமக்கிரியைகளைச் செய்தார். வேறு தூய்மையான இடம் கிடைக்காததால் தனது வலது தொடை மீதே அவருக்கு இறுதிக்கடன் செய்தார். தன் வில்லின் நுனியில் பூமியைக் கீறி- அதில் பாய்ந்து வந்த நீரில் நீராடி ஜடாயுவுக்கு நீர்க்கடன் செய்தார்.

ராமபிரான் ஜடாயுவின் பிரார்த்தனைக்கேற்ப ஸ்ரீ விஜயராகவப் பெருமாளாக வீற்றிருந்து அருள்பாலிக்கும் திருத்தலம்தான் திருப்புட்குழி.

இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவி

மூலவர் வீற்றிருந்த திருக்கோலத்தில் கிழக்கு நோக்கிக் காட்சி தருகிறார். ஜடாயுவை வலது தொடை மீது தகனம் செய்ய வைத்துக் கொண்ட நிலை. பொதுவாகப் பெருமாளுக்கு திருமகள் எனப்படும் ஸ்ரீதேவி வலதுபுறமும், நிலமகள் எனப்படும் பூதேவி இடப்புறமும் எழுந்தருளியிருப்பர். ஆனால் இந்தத் தலத்தில் தீயின் வெப்பம் தாளாத நிலையில் இவர்கள் இடம் மாறி திருமகள் இடதுபுறமும், நிலமகள் வலதுபுறமும் மாறி எழுந்தருளியுள்ளனர். இங்கு எழுந்தருளியிருக்கும் தாயாரின் திருநாமம் மரகதவல்லி.

வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 10:41 pm

ஜடாயு புஷ்கரணி

இங்குள்ள திருக்குளத்தில் தினமும் நீராடி ஒரு ஞாயிறு முதல் அடுத்த ஞாயிறு வரை பிரார்த்தனை செய்தால் அவர்கள் நன் மக்களைப் பெறுவார்கள். இந்தக் குளக்கரையில் தானம் செய்தால் திருவருளால் ஆயிரம் மடங்கு பலன் பெறுவர். இத் திருக்குளத்தின் கிழக்குக் கரையில் பெரிய உடையாருக்குத் தனி சந்நிதி உள்ளது.

மக்கட்பேறு வேண்டி ஜடாயு புஷ்கரணியில் அமாவாசையன்று காலை நீராடிவிட்டு மரகதவல்லித் தாயார் சன்னதியில் வறுத்த பயிரை மடியில் கட்டிக் கொண்டு, அன்று முழுவதும் விரதமிருந்து மறுநாள் காலை அந்தப் பயிரை அப்படியே தாயார் சன்னதியில் சேர்க்க வேண்டும். மகப்பேறு என்னும் பாக்கியத்தை அன்னை அருளும் அந்த நாளில் விடியற்காலையில் அந்த வறுத்த பயிர் முளைக்கும் என்பது பலரது நம்பிக்கை.

கோயிலுக்கு வெகு அருகில் ஜடாயு புஷ்கரணியும் இதற்குக் கீழ்த் திசையில் ஜடாயு சன்னதியும் உள்ளது. நேராக சன்னதித் தெருவும், கடைசியில் கோயிலைப் பார்த்தவாறு மேற்கு நோக்கி சிறிய திருவடி கோயிலும் அமைந்துள்ளன. உற்சவக் காலங்களில் பெருமாள் கோயிலை விட்டுப் புறப்பட்டு ஜடாயுவுக்கு மரியாதைகள் செய்துவிட்டு வாகன மண்டபம் எழுந்தருளுவார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள் புஷ்கரணியில் கை கால்களைச் சுத்தம் செய்து கொண்டு தலையில் சிறிது நீர் தெளித்துக் கொண்டு எதிரில் உள்ள ஜடாயுவை வணங்கிவிட்டுக் கோபுர வாசலைத் தாண்டியவுடன், வடக்கு நோக்கிக் கீழே வீழ்ந்து வணங்கிய பின்பு பிரதட்சிணமாக வர வேண்டும்.

ராமானுஜருக்கே முதல் மரியாதை

இங்கு அமைந்துள்ள ஆண்டாள் சன்னதியில் ஒவ்வொரு மாதமும் பூர நட்சத்திர நாளில் சிறப்புப் பூஜைகள் உண்டு. பெருமாள் புறப்பாட்டின்போது ஒவ்வொரு முறையும் திரும்புகாலில் ஆண்டாளுக்கு சேவை சாதித்து அருளுகிறார். இந்த சன்னதியை ஒட்டினாற்போல உள்ளதுதான் ராமானுஜர் சிஷ்ய 'பாவத்துடன்' யாதவப் பிரகாசரின் முன்னாலிருப்பது போன்ற கல்வெட்டு.

இங்கு வலம் வர ஏற்றபடி ராமானுஜரின் சன்னதி தனிக் கோயிலாகவே அமைந்துள்ளது. இவர் சன்னதியை ஒரு முறை வலம் வந்தாலே பூவுலகம் முழுமையும் ஒரு முறை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது. இவரது திருநட்சத்திரம் சித்திரை மாதம் திருவாதிரையில் சாற்று முறையாகப் பத்து நாள்கள் உற்சவம் உண்டு. திருப்புட்குழியில் குருகுலவாசம் செய்தவர் ஸ்ரீராமானுஜர். புறப்பாடுகளில் முதல் மரியாதை ராமானுஜருக்கும், இரண்டாம் மரியாதை ஜடாயுவுக்கும் தரப்படுகிறது.

நிலமகளின் அவதாரமான கோதைப் பிராட்டி பெருமாளுக்கு வலப்புறமாக அமைந்துள்ளது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஸ்ரீ வேதாந்த தேசிகர் பெருமாளை நோக்கி சேவித்தவண்ணம் காட்சி தருகிறார்.

அமாவாசைப் பெருமாள் !

மரகதவல்லித் தாயாரின் சன்னதி பெருமாள் சன்னதிக்கு இடதுபுறம் அமைந்துள்ளது. தாயார் கிழக்கு நோக்கியபடி பத்மாசனத்தில் அமர்ந்து சேவை சாதிக்கிறார். பெருமாளுக்கு இடதுபுறம் தாயார் சன்னதி என்பது இன்னொரு சிறப்பம்சம். நவராத்திரி பத்து நாள்களும் தாயார் சன்னதியில் பெருமாள் சேர்த்தியில் சேவை சாதிக்கிறாள்.

தாயார் சன்னதியிலிருந்து பெருமாள் சன்னதிக்குத் தென்புறமுள்ள படிக்கட்டுக்களின் மூலமே வர வேண்டும். உற்சவ நேரம் இங்கு படி ஏற்ற சேவை உண்டு. பெருமாளுக்கு எதிரில் பெரிய திருவடி சன்னதி உண்டு. பெருமாள் ஆஜானுபாகுவாய்- சங்கு சக்கர தாரியாய் இடம் மாறிய ஸ்ரீதேவி - பூதேவிகளுடன் வீற்றிருந்த கோலத்தில் காட்சி தருகிறார். அமாவாசை அன்று பக்தர்கள் திரண்டு வந்து சேவிப்பதால் இவர் அமாவாசைப் பெருமாள் என்றும் பேர் பெற்றவர்.

வறுத்த பயிறும் முளைக்கும் திருப்புட்குழி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக