புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:11 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:37 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
68 Posts - 41%
heezulia
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
48 Posts - 29%
Dr.S.Soundarapandian
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
31 Posts - 19%
T.N.Balasubramanian
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
7 Posts - 4%
ayyamperumal
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
2 Posts - 1%
Guna.D
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
2 Posts - 1%
prajai
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
1 Post - 1%
manikavi
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
319 Posts - 50%
heezulia
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
195 Posts - 31%
Dr.S.Soundarapandian
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
21 Posts - 3%
prajai
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_m10காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:35 am

சென்னை மயிலாப்பூர் 'லஸ்' முனையிலிருந்து ஆழ்வார் பேட்டை வரும் லஸ் சர்ச் சாலையின் வலப்புறத்தில் இருக்கிறது பிரகாச மாதா தேவாலயம். நகரின் பரபரப்பான பகுதியில் அமைந்திருந்தாலும் தேவாலயத்தின் உள்ளே நுழைந்துவிட்டால் ஓர் அலாதி அமைதி.

சுற்றிச் சூழ நிற்கும் பூ மரங்களின் பசுமையும் குளுமையும், முன்னால் விரிந்து பரந்து கிடக்கும் திறந்தவெளி மைதானமும் தேவாலயத்திற்கு மேலும் பொலிவு சேர்க்கின்றன.

காட்டுக்கோயில்

நடுவில் கம்பீரமாக நிற்கிறது பிரகாச மாதா தேவாலயம். இதை இப்படியே சொன்னால் பலருக்கும் புரியாது. பிரகாச மாதா தேவாலயத்தைப் பலரும் 'காட்டுக்கோயில்' என்றே அழைக்கின்றனர்.

காட்டுக்கோயில் சென்னையில் உள்ள மிகப் பழமையான மாதா கோயில். ஆங்கிலேயர்கள் தமிழ்நாட்டுக்கு வரும் முன்பிருந்தே இந்தக் கோயில் இங்கு இருந்து வருகிறது.

பிரான்சீஸ்கன் சபை

கோயிலின் முகப்பிலேயே கட்டிய ஆண்டு 1517 என்று பொறித்துள்ளனர்.1516 - ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய நாட்டில் உள்ள பிரான்சீஸ்கன் நகரில் அமைக்கப்பட்ட பிரான்சீஸ்கன் மிஷனரியினர், கிறிஸ்துவின் நற்செய்தியை எல்லோருக்கும் தெரிவிக்கும் ஆன்ம வேட்கை கொண்டு பல நாடுகளுக்கும் கடற் பிரயாணம் மேற்கொண்டனர். அவர்களில் சிலர் வங்கக் கடற்பகுதிக்கு வந்து திக்குத் திசை தெரியாமல் பல நாள்கள் தவித்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் இரவு மயிலைக் கடற்கரையில் தோன்றிய ஓர் ஒளி அவர்களின் கண்களில் பட்டு, கவனத்தைக் கவர்ந்தது. கப்பலை ஒளி தெரிந்த திசை நோக்கித் திருப்பினார்கள். அங்கேயே சென்று இறங்கவும் தீர்மானித்தார்கள்.

ஒளியின் திசையில் பயணித்துக் கரையை அடைந்தனர். கீழே இறங்கி. ஒளி வீசும் திசை நோக்கி நடந்தனர். அது உள் நோக்கிச் சென்று கொண்டேயிருந்தது. அவர்கள் பின் தொடர்ந்து சென்றனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு கூட மயிலாப்பூர் காடாகத்தான் இருந்தது என்கிறார்கள். 500 ஆண்டுகளுக்கு முன்பு என்றால் கேட்கவும் வேண்டுமா?

ஒளி காட்டிற்குள் வழிகாட்டிக் கொண்டே சென்றது. காட்டின் ஒரு அடர்ந்த பகுதிக்கு வந்ததும் ஒளி திடீரென மறைய அவர்கள் அங்கே தங்கி விட்டனர்.

ஒளியாக வந்து வழிகாட்டியது மாதாதான் என்பது அவர்கள் நம்பிக்கை. எனவே ஒளி மறைந்த அந்த இடத்திலேயே ஓர் தேவாலயத்தை எழுப்பினர். 'பிரகாச மாதா' என்று பெயரிட்டனர்.

காட்டுக்குள்ளேயே கோயில் அமைந்திருந்ததால் மக்கள் அதைக் 'காட்டுக்கோயில்' என்று அழைக்கத் தொடங்கினர். குடியேற்றம் அதிகரித்துக் காடு அழிந்து போய்ப் பரபரப்பான நகரின் முக்கிய பகுதியான பின்பும் 'காட்டுக்கோயில்' என்ற பெயர் மட்டும் மாறாமலிருக்கிறது.

இன்றும் திக்கற்று திகைக்கும் மக்களுக்குத் திசை காட்டும் ஒளிமாதாவாக வீற்றிருக்கிறாள் அன்னை. அதனையொட்டி பிரகாச மாதாவிற்கு என தனி வழிபாட்டு வாக்கியமே அமைத்துள்ளனர்.

'இறையருள் நிறை பெற்று மக்கள் இருள் போக்கும் பிரகாச மாதாவே,
தரணி வாழ் மக்களின் துயர் துடைக்கும் தூயவளே,
விண்ணவர் போற்றிடும் விமலியே,
உமது பரிந்துரைக்கும் ஆற்றலில், நம்பிக்கை கொண்டு
உம்மை நாடித் தேடி வரும் அடியோர்
எம்மைக் கடைக்கண் பாரும் அம்மா!
புயலில் சிக்கியவர்களுக்கு வழிகாட்டுகின்ற நட்சத்திரமே,
வாழ்க்கையில் பல துன்ப துயரங்களால் அலைக்கழிக்கப்பட்டு, அமைதியிழந்த நிலையில்
உம் திருமுன் நிற்கிறோம்.
எங்கள் துயரினைத் துடைத்து நாங்கள் வாழ்வில் வளம் பெற
அருள் புரியும் தாயே ஒளி நின்ற அன்னையே!
எங்கள் உள்ளத்திலும் இல்லத்திலும் நிலையான அமைதி நிலவச் செய்யும்.
உடைந்த உள்ளங்களுக்கு உவகையூட்டும்.
புத்திக்கு ஒளியையும் சிந்தைக்குத் தெளிவையும் தந்தருளும்.
எங்கள் அருள் வாழ்வுக்கும், பொருள் வாழ்வுக்கும் தேவையான வரங்களை
எங்கள் ஆண்டவரும் உம் திருமகனுமாகிய
இயேசு கிறிஸ்துவிடமிருந்து பெற்றுத் தாரும் தாயே - ஆமென்.'

என்று தினமும் தூய தமிழில் ஜெபம் நடக்கிறது. பங்குத் தந்தை டி.ஜே. ஜார்ஜ் ஜெபத்தை வாசிக்க மக்களும் உடன் சொல்லி ஆமென் என்கின்றனர்.

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 12:37 am

குழந்தை ஏசுவின் குமிழ்ச் சிரிப்பு

கோயிலின் முன் உள்ள திறந்த வெளியின் முகப்பில் சிலுவையில் நிற்கும் ஏசுவின் சிற்பத்தை அமைத்துள்ளனர். சிலுவையிலும் துக்கத்தை வெளிக்காட்டாத ஏசுவின் தெளிவான முகம். கருணை ததும்பும் காட்சி அற்புதமாக உள்ளது. சிலுவையில் நிற்கும் அவர் 'பாரம் சுமக்கிறவர்களே என்னிடம் வாருங்கள் இளைப்பாறுதல் தருவேன்' என்று அரவணைக்க அழைக்கும் அவர் நமக்காகத் துன்பம் சுமப்பதைப் பார்க்கும்போது கண்ணில் நீர் துளிர்க்காமலில்லை.

வலதுபுறம் அலங்கரிக்கப்பட்ட கல் குகையில் குழந்தை ஏசுவுடன் மாதா சிற்பம் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. அதன் அருகிலேயே தந்தை ஜோசப்பின் ஆளுயரச் சிலையும் உள்ளது. அதனைத் தாண்டிப் புராதன அமைப்புடன் பிரகாச மாதாவின் கோயில். மேல் மாடத்தில் அணைத்துக் கொள்ள இரு கைகளை நீட்டி நிற்கும் ஏசு சிலை. அதன் மேல் ஹீப்ரு மொழியில் ஒளி வீசும் பின்னணியுடன் கோயில் கட்டப்பட்ட ஆண்டு பொறிக்கப்பட்டுள்ளது ஒரு அரிய காட்சி.

உள்ளே மக்கள் அமர்ந்து ஜெபம் செய்யும் இடம். கடைசியிலும் அதி அற்புத பூ வேலைப்பாடுகளுடன் உள்ளது அன்னை பிரகாச மாதாவின் சன்னதி. மகனைக் கையில் ஏந்தி நிற்கிறாள். பெயருக்கு ஏற்றாற்போல் அன்னை முகம் பிரகாசமாக உள்ளது. பார்க்கும்போதே மனதில் நம்பிக்கை ஒளியை ஏற்றுவதாக அமைந்துள்ளது.

அன்னையின் புன்முறுவலும், அவள் கையில் உள்ள குழந்தை ஏசுவின் முகத்தில் தவழும் குமிழ்ச் சிரிப்பும் மனதில் ஆனந்தத்தையும் ஆறுதலையும் தருவதாக உள்ளன.

விதானத்தின் வேலைப்பாடுகள் கண்ணையும் கருத்தையும் கவருவதாக உள்ளது. வண்ண வண்ணப் பூ வேலைப்பாடும், தேவதைகளின் சிற்பங்களும் அதிஅற்புத அழகுடன் மிளிர்கின்றன.

போர்ச்சுகல், லத்தீன் மொழிக் கல்வெட்டுகள்

கருவறை மாடத்தின் முகப்பிலும் மாதா, பிதா சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. பழங்கோயில்களுக்கே உரிய கல்வெட்டுகள் பலவும் கோயிலின் பெருமைகளைப் பறைசாற்றுகின்றன.

போர்ச்சுகல், லத்தீன் மொழிக் கல்வெட்டுகள் இங்கு அதிகமாகக் காணப்படுகின்றன. சுவர்களில் காணப்படும் பளிங்குக்கல் சிற்பங்கள் தத்ரூபமாக உள்ளன. கோயிலின் உள்ளேயும் வெளியேயும் தரை மட்டத்திற்குக் கீழே நிறைய கல்லறைகள் உள்ளன. பிரான்சீஸ்கன் மிஷனரியைச் சேர்ந்த பாதிரியார்கள் கல்லறையாக அவையிருக்கலாம் எனக் கருத இடமுண்டு. அவற்றின் மேல் லத்தீன், போர்ச்சுகல் மொழியில் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. கல்வெட்டில் காணப்படும் சிற்பங்களின் சிறப்புகள் வரலாற்றின் பக்கங்களைப் புரட்டிக் காட்டுவதாக உள்ளன.

தாக்குதல்களுக்கு உள்ளான கோயில்

கால வெள்ளத்தில் இக்கோயில் பல தாக்குதல்களுக்கு உள்ளாகியும் கூட இன்றும் கம்பீரமாக நின்று அருளாட்சி நடத்தி வருகிறது. பலமுறை கோயில் பெருஞ்சேதமடைந்து மீண்டுள்ளது. 1662- இல் கோல்கொண்டா படையெடுப்பாலும், 1780-82-இல் ஹைதர் அலியின் முற்றுகையினாலும் கோயில் பெரிதும் நாசமடைந்துள்ளது. ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனி பல காலம் இக் கோயிலைத் தனதாக்கிக் கொண்டிருந்தது.

1516-ஆம் ஆண்டிலிருந்து 1847-ஆம் ஆண்டு வரை பிரான்சீஸ்கன் சபையாரே இக் கோயிலில் திருவழிபாடு நடத்தியும், பரிபாலித்தும் வந்துள்ளார்கள்.

1848-லிருந்து மேற்றிராசனக் குழுக்களின் மேற்பார்வையிலிருந்து வருகிறது. 1916-ஆம் ஆண்டில் கோயிலின் 4-ஆம் நூற்றாண்டு விழாவை மயிலை மேற்றிராசனம் வெகு விமரிசையாகக் கொண்டாடியது.

தற்போது பாதிரியார் டி.ஜே. ஜார்ஜ் நிர்வாகத்தில் கோயில் பணிகள் வெகு சிறப்பாக நடந்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தின் பிற்பகுதியில் கோயில் திருவிழா நடைபெற உள்ளது. வேண்டுவோருக்கு வேண்டுவதை அருளும் பிரகாச மாதா உங்களையும் அன்பொழுக அழைக்கிறாள்.

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Postkalaimoon70 Wed Mar 10, 2010 12:53 am

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Wed Mar 10, 2010 1:31 am

இப்படி ஒரு கோயிலா ... தகவலுக்கு நன்றி காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 .. போட்டோ இருந்த்தால் இன்னும் நன்றாக இருந்து இருக்கும்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 10, 2010 1:50 am

Luz Church-Our Lady of Light

The Church of Our Lady of Light, more popularly known as the Luz Church, is located in a corner of Mylapore and has given a distinct identity to the areas around it. The road that leads up to it is known as the Luz Church road.

It is also known as”Kaatu Kovil”, or the church located in a forest

Address:
Luz Church road,
Mylapore,Chennai-600004

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzchurch4_thumb%5B4%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzs_thumb%5B3%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luz_thumb%5B3%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzss_thumb%5B2%5D

நன்றி: http://theindiatour.blogspot.com

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Mar 22, 2010 9:33 pm

அருமையான விளக்கம் உங்கள் சிறந்த பதிவுக்கு நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Mar 22, 2010 9:38 pm

சிவா wrote:Luz Church-Our Lady of Light

The Church of Our Lady of Light, more popularly known as the Luz Church, is located in a corner of Mylapore and has given a distinct identity to the areas around it. The road that leads up to it is known as the Luz Church road.

It is also known as”Kaatu Kovil”, or the church located in a forest

Address:
Luz Church road,
Mylapore,Chennai-600004

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzchurch4_thumb%5B4%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzs_thumb%5B3%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luz_thumb%5B3%5D

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Luzss_thumb%5B2%5D

நன்றி: http://theindiatour.blogspot.com
காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642

தீதும் நன்றும் பிறர் தர வாரா காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 154550
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Tue Jul 06, 2010 7:15 pm

இப்படி ஒரு கோயிலா ... தகவலுக்கு நன்றி காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 678642

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Jul 06, 2010 11:00 pm

தகவலுக்கு நன்றி காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196 காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் 677196

காட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Aகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Aகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Tகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Hகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Iகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Rகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Aகாட்டுக்கோயில் - பிரகாச மாதா தேவாலயம் Empty
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக