புதிய பதிவுகள்
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Today at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Today at 7:20 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Today at 7:18 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Today at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Today at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Today at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Today at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Today at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:37 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:01 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:34 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:23 pm

» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Yesterday at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Yesterday at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Yesterday at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
65 Posts - 44%
ayyasamy ram
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
56 Posts - 38%
சண்முகம்.ப
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
8 Posts - 5%
T.N.Balasubramanian
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
3 Posts - 2%
jairam
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
2 Posts - 1%
Poomagi
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
1 Post - 1%
சிவா
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
1 Post - 1%
Manimegala
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
195 Posts - 50%
ayyasamy ram
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
139 Posts - 36%
mohamed nizamudeen
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
16 Posts - 4%
prajai
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
9 Posts - 2%
சண்முகம்.ப
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
7 Posts - 2%
Jenila
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
4 Posts - 1%
jairam
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
4 Posts - 1%
Rutu
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10பாராட்டு விழா - தேவிபாலா Poll_m10பாராட்டு விழா - தேவிபாலா Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாராட்டு விழா - தேவிபாலா


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:49 am

பாராட்டு விழா
தேவிபாலா
--------------------------------------------------------------------------------

அது ஒரு விருது கமிட்டி
கடந்த மூன்று வருடங்களாக இயல், இசை, நாடகக் கலைஞர்கள் சின்னத்திரை மற்றும் பெரிய திரையின் சாதனையாளர்களை பாராட்டி வரும் கலைக்கூடம். அங்கு விருது பெறுவது என்பது அகாடமி விருதைப்போல

மிக உயர்ந்த கௌரவம். தேர்ந்த கலைஞர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அவர்களை மிகச் சிறப்பாக கௌரவிக்கும் சங்கம் அது. இந்த ஆண்டும் அதுபோல விருது பெறுபவர்களின் பட்டியல் வெளியாகி விட்டது. அதில் ஒரு சிறப்பு விருது உண்டு.

எல்லா விருதுகளுக்கும் மேம்பட்ட விருது அந்த விருதைப் பெறும் கலைஞர் யார் என்ற செய்தி மட்டும் இறுதி வரை ரகசியமாக காக்கப்படும் அந்தக் கலைஞருக்கு அந்த விருதை ரசிகர்களில் ஒருவர்தான் வழங்குவார்.

இந்த ஆண்டு அந்தப் பெயர் வெளியானதும் திரை உலகமே ஆச்சர்யத்தின் உச்சிக்குப் போனது. நடிகர் சஞ்சயன்

நடிகர் சஞ்சயன் திரை உலகில் ஏறத்தாழ பதினைந்து வருடங்களாக பணியாற்றி வருபவர். ஆரம்பத்தில் சண்டை காட்சிகளில் பெரிய கதாநாயக நடிகர்களுக்கு டூப்பாக அறிமுக மாகி, அதன் பிறகு சிறு சிறு வேஷங்களை மட்டுமே செய்து வந்தார். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் என்ற நிலையில்தான் பத்து வருடங்களாக இருந்தார். ஆனால் எல்லா படங்களிலும் அவரைப் பார்க்கலாம்.

அதன் பிறகு புது இயக்குநர்கள் வந்ததும் ஓரிரு படங்களில் குணச்சித்திர வேடங்களை சஞ்சயனுக்குத் தர, அந்த படங்கள் மெகா ஹிட்டானதும் பத்திரிகை விமர்சனங்களில் சஞ்சயனின் பெயர் அடிபட்டது. தொடர்ந்து வலுவான குணச்சித்திர பாத் திரங்களுக்கு சிபாரிசு செய்யப்பட்டார்.

ஒரு படத்தில் ஹீரோவையே இவரது காரெக்டர் தூக்கி சாப்பிட, அடுத்த படத்தில் கதாநாயக வேஷம் வந்தது. அந்தப்படம் வெள்ளிவிழா வரை போக, முன்னணி கதாநாயக வரிசையில் சஞ்சயன் ஜம்மென்று வந்து உட்கார்ந்து விட்டார்

அந்தத் தகுதியை எட்டியதும் சஞ்சயன் போட்ட நிபந்தனைகள் இரண்டு இளமையான வேடம் வேண்டாம் காரணம் வயது நாற்பத்தி ஐந்தைக் கடந்து விட்டது. என்னதான் மேக்கப் போட்டாலும், இளமை வந்து விடாது. அதனால கண்டிப்பா காதல் காட்சிகள் கூடாது. தமிழ்ப் படங்களின் சாபக் கேடே இளம் நாயகிகளுடன் டூயட் பாடும் ஹீரோக்களின் வயது நாற்பதுக்கு மேல் என்பது தான்

அடுத்த நிபந்தனை, கதையில்லாத வெறும் பொழுது போக்கு அம்சங்கள் மட்டுமே இருந்தால், என்னிடம் வராதீர்கள். இந்த நிபந்தனைகள் படவுலகினர் மத்தியில் ஒரு பரபரப்பை உண்டாக்கிவிட, புது இயக்குநர்கள் சிலர் சஞ்சயனின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு திரைக்கதை அமைக்க, வரிசையாக மூன்று படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட்

ஒரு ஹீரோவும் கிட்டே நெருங்க முடியவில்லை மூன்றும் வெள்ளி விழா... ஹாட்ரிக்

தமிழ்ப் படங்களின் தலையெழுத்தை மாற்றி, பிரம்மாண்டத்தைக் குறைத்து, பட்ஜெட்டில் ஜெயிக்க முடியும் என்ற பாதைக்கு சினிமாவை சஞ்சயன் திடீரெனத் திருப்பி விட, சினிமா உலகம் களை கட்டிவிட்டது.

நல்ல அழுத்தமான கதைகளைச் சொல்பவர்களுக்கு மரியாதை கூடிவிட, ட்ரெண்ட் செட்டராகி விட்டார் சஞ்யன். இந்த நிலையில் இந்தக் கலைக் கூடம் சஞ்சயனைத் தேர்ந்தெடுத் திருக்கிறது சிறப்பு விருது பெறும் கலைஞராக

சஞ்சயனின் படங்களில் குறிப்பாக மூத்தவர்களை மதிக்கும் பண்பாடு அதிகமாக இருக்கும். பெற்றோருக்கு பக்தி செலுத்தும் பண்பாடு பெண்களிடம் மரியாதை- குறிப்பாக மனைவிகளுக்கு தனி அந்தஸ்து.

இதனால் பெண் ரசிகைகள் சஞ்சயனுக்கு ஏராளம் பெரிய ஒரு அரங்கத்தில் இந்த விழாவை கலைக்கூடம் ஏற்பாடு செய் திருந்தது. அன்று சஞ்சயனுக்கு படப்பிடிப்பு நாள். ஆனாலும் மாலை ஏழு மணிக்குள் விருது வாங்க நேரில் வந்து விடுகிறேன் என்று சஞ்சயன் வாக்களித் திருந்தார். கூட்டம் அலை மோதியது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:49 am

போக்குவரத்து நெரிசலில் அந்தப் பகுதியே திணறிக் கொண்டிருந்தது. காவல்துறை தன் வேலையைச் செய்து கொண்டிருந்தது. ரசிகர், ரசிகைகள் அலைமோதிக் கொண்டி ருந்தார்கள். தன் பெயர், விலாசத்தை எழுதி வாசலில் இருக்கும் பெட்டியில் அவர்கள் போட்டு விட வேண்டும். பெட்டியில் உள்ளதைக் குலுக்கி, ஒருவர் தேர்ந்தெடுப்பார். அவர் தான் சஞ்சயனுக்கு விருது வழங்க வேண்டும் என்று முடிவு செய்யப் பட்டிருந்தது.

வாசலில் இருந்த பெட்டி நிரம்பி வழிந்தது. விழா தொடங்கி விட்டது. இன்னும் சஞ்சயன் மட்டும் வரவில்லை ஒரு பெரியவர் (70 வயது) அவருடன் அதில் பாதி வயதுள்ள ஒரு பெண்மணி இரு வரும் உள்ளே நுழைந்தார்கள். அந்தப் பெரியவரால் நடக்கக் கூட முடியவில்லை

நாங்க கலைக் கூடத்தோட செக்ரட்டரியைப் பாக்கணும்

அந்தப் பெண் சொன்னாள், இப்பப் பாக்க முடியாதும்மா அவர் பிஸியா இருக்கார்

அடுத்து அவள் சொன்ன வார்த்தையில் அந்த விழாக்குழு அமைப்பாளர் ஆடிவிட்டார்

என்ன பேசறீங்க?

செக்ரட்டரி கிட்ட கூட்டிட்டுப் போங்க. அவருக்குத் தெரியும்

அமைப்பாளர் தேடிப் பிடித்து செக்ரட்டரியை அழைத்து வந்தார்.

இவள் வணங்கினாள்.

செக்ரட்டரி முகத்தில் சன்னமான அதிர்ச்சி தெரிந்தது.

நீங்களா?

உள்ளே போய்ப் பேசலாமா? அவள் பெரியவரைத் தாங்கிப் பிடித்து அழைத்துப் போனாள். கதவு சாத்திக் கொண்டது.

விழா கோலாகலமாகத் தொடங்கி, மற்ற நடை முறைகள் ஓடிக் கொண்டிருக்க, திடீரென அரங்கத்தில் ஒரு சலசலப்பு உண்டானது. வாசலில் பட்டாசுகள் வெடிக்க, போலீஸ் பரபரக்க, சஞ்யனைச் சுமந்த அயல்நாட்டு படகுக் கார் வாசலில் வந்து நின்றது.

சஞ்சயன் பிரமாதமான உடையில் இறங்க, அவரது கமாண்டோக்கள் முன்னும் பின்னும் வளையம் அமைக்க, அவர் அரங்கத்தில் நுழைந்ததும் விசில் பறந்தது. மேடைக்கு வந்ததும் ஆரவாரம் அதிகமாகி விட்டது.

அவர் வந்து அமர்ந்ததும் கவனம் மொத்தமும் அவர் பக்கம் திரும்பிவிட்டது. அதன் பிறகு விழா களை கட்டி விட்டது. சஞ்சயனுக்கு பாராட்டு தொடங்கிவிட்டது.

பெரிய மாலை... பொன்னாடைகள்... செங்கோல் முடி... என ஒரு மன்னனுக்கு சூட்டப் படும் மரியாதைகள் சஞ்சயனைத் திக்கு முக்காட வைத்தன. ரசிகர் மன்ற ஆட்களின் ஆக்ரமிப்பு அடுத்த இருபது நிமிடங்களுக்குத் தொடர்ந்தது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu May 28, 2009 2:50 am

ஒருவாறு சபா செக்ரட்டரி அவர்களை நாசூக்காக விலக்கி, சஞ்சயனுக்கு இதமான வரவேற்புரை நிகழ்த்திய பிறகு, இனி பரிசளிப்பு விழா

இந்த முறை நடிகர் சஞ்சயன் அவர்களுக்கு பரிசளிக்கப் போவது யார்?

அரங்கமே இதயத்தைக் கையில் பிடித்தபடி காத்திருந்தது. அது நானாக இருக்கக் கூடாதா என்ற ஏக்கம் அவர்களை ஆக்ரமித்தது.

ஒரு இடைவெளி விட்டு, அந்த ரசிகர், ஒரு வயதான மனிதர். எழுபது வயது கடந்த அவர் நமது சஞ்சயன் அவர் களின் தீவிர ரசிகர்.

வயதானவர்களிடம் அன்பு செலுத்தி, அவர்களை நோகடிப்பது பாவம்... பெற்றவர்கள் தெய்வங்கள் என்ற வார்த்தையை நாடு முழுவதும் எதிரொலிக்கச் செய்யும் பெருமை பெற்ற திரு சஞ்சயன் அவர்களுக்கு ஒரு முதியவரே பரிசளிக்க வருவது இந்த ஆண்டின் பெருமை

திரு சிவலிங்கம் அவர்களை மேடைக்கு வரும்படி அழைக்கிறோம்

அந்தப் பெரியவரை, கையைப் பிடித்து அழைத்துக் கொண்டு அந்தப் பெண் மேடையேற, சஞ்சயன் பலத்த அதிர்ச்சிக்கு உள்ளானான்.

இ..வ..ரா...?

சஞ்சயனை அவர் நெருங்கிக் கொண்டிருந்தார்.

சஞ்சயனுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது கால்கள் குழைந்தது. வியர்வை ஆறாகப் பெருகியது. நிற்கக் கூட முடியவில்லை பெரியவர் நெருங்கி விட்டார்.

கலைக்கூடம் அவர் கையில் மாலையைத் தந்து, கேடயத்தைத் தர, பெரியவர் சஞ்சயனுக்கு மாலையிட்டார். கேட யத்தை கையில் கொடுத்தார்.

செக்ரட்டரியிடம், நான் நாலு வார்த்தைகள் பேசணும்

என்ன பேசப் போகிறார்? சஞ்சயனுக்கு மயக்கமே வந்து விட்டது.

அவர் மைக்கைப் பிடித்தார். விழுந்து விடாமல் இருக்க அந்தப் பெண் பின்னால் நின்றாள்.

எனக்கும் ஒரு மகன் உண்டு, நடிகர் சஞ்சயன் அவர்களோட வயசுல அவனை வளர்த்து, ஆளாக்க நான் படாத பாடு பட்டேன். மிக உயர்ந்த நிலைக்கு அவன் வந்ததும், முதல்ல உதறினது என்னைத் தான் அதை அவன் மனைவி- இதோ இந்தப் பெண் ஏற்கலை எனக்காகப் போராடிட்டு, தன் கணவனையே வேண்டாம்னு சொல்லிட்டு வந்தா போகட்டும் என் கதை இப்ப எதுக்கு?

ஏன் சொல்றேன்னா, அப்படிப்பட்ட நன்றி கெட்ட பிள்ளைகள் வாழற இந்த உலகத்துல, சஞ்சயன் மாதிரி பெரியவங்களை மதிக்கிற ஒரு சில உத்தமர்களும் இருக்கத்தான் செய்யறாங்க சஞ்சயனோட தீவிர ரசிகன் நான்

எனக்கு இந்த விருது வழங்கும் வாய்ப்பை தந்த கலைக் கூடத்துக்கு என் நன்றியை நான் தெரிவிச்சுக்கறேன். நான் உயிரோட இருந்தா, இது மாதிரி விழா மேடைகள்ல சஞ்சயனை சந்திப்பேன். நன்றி

அவர் கை கூப்பி விட்டு மருமகளோடு மேடையை விட்டு இறங்க, சஞ்சயன் பாதி மரித்திருந்தான்

அரிதாரம் பூசி, உலகம் மொத்தத்துக்கும் நீதி சொல்லும் சஞ்சயனுக்கு தன் தகப்பனை, மனைவியை ஆதரிக்க முடியவில்லை.

வேஷம் காமிராவுக்கு முன்னால் மட்டுமல்ல பின்னாலும் தான்.

சிவலிங்கத்தால் ஒரு நொடியில் சஞ்சயனை இதே மேடையில் வைத்து நாரடித்திருக்க முடியும். ஆனால், எதையும் காட்டிக் கொள்ளாமல், பாராட்டி விட்டு நகரும் அவரது பண்பு, சஞ்சயனுக்கு தரப்பட்ட ஆயுள் தண்டனை

செயலிழந்து சஞ்சயன் ஜடமாகியிருந்தான்.

manikandan.dp
manikandan.dp
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 566
இணைந்தது : 26/06/2013
http://manikandan89.wordpress.com/

Postmanikandan.dp Tue Jul 30, 2013 10:27 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 



மணிகண்டன் துரை
எதுவும் செய்யாமல் இருப்பதைவிட ஏதாவது செய்வதே நல்லது. அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை – விவேகானந்தர்

http://manikandan89.wordpress.com/
http://manikandandp.blogspot.ae/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக