புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:16 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:30 pm
» கருத்துப்படம் 23/11/2024
by mohamed nizamudeen Today at 4:59 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 1:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm
» Vaandumama Bale Balu
by kaysudha Yesterday at 7:19 pm
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 7:05 pm
» மதன் எழுதிய மனிதனும் மர்மங்களும் புத்தகம் வேண்டும்?
by kaysudha Yesterday at 6:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:24 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:07 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 9:56 am
» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Yesterday at 7:47 am
» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Sat Nov 23, 2024 1:16 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Sat Nov 23, 2024 12:29 pm
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm
» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm
» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am
» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am
» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am
» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am
» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am
» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
kaysudha | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மரனத்திற்குள் சென்று வந்த மகான் - ரமண மகரிஷி!
Page 1 of 1 •
மரணத்துக்குப் பின்னால் என்ன நிகழும் என்பதை உயிரோடு இருந்து அனுபவித்துப் பார்த்தவர்கள் யாரேனும் உண்டா? என்ற கேள்வி எழுந்தால் உண்டு என்று பதில் கிடைக்கும்.
ஆம்! அப்படியும் ஒரு மகான் நம்மிடையே வாழ்ந்து மறைந்திருக்கிறார். அவர்தான் ரமண மகரிஷி.
'நான் யார்? ' என்பதை உணர அவர் செய்த முயற்சியின் முதல் கட்டத் திறவுகோலாக அது அமைந்தது.
திருச்சுழி.
ரமணரது இளமைப்பருவம் சாதாரணமாகத்தான் மற்ற சிறுவர்களைப் போலக் கழிந்தது. ஆனால் அவர் திண்டுக்கல்லில் படித்துக் கொண்டிருந்தபோது திருச்சுழியிலிருந்த அவரது அப்பா எதிர்பாராதவிதமாக மரணமடைந்த செய்தி கிடைத்தது.
12 வயதான சிறுவன் வெங்கட்ராமனுக்கு மரணம் என்றால் என்னவென்று தெளிவாகத் தெரியாத நிலை. தந்தையின் மரணச்செய்தி கேட்டுத் தன் சகோதரனுடன் ஊருக்குத் திரும்பி வந்தார்.
தரையில் கிடத்தியிருந்த தந்தையைக் கண்டவுடன் அவருக்கு வியப்பு மேலிட்டது. தந்தையோ அசைவற்றுக் கிடந்தார். தாயோ சிறு குழந்தையைப் போலப் பலர் எதிரிலும் விழுந்து புரண்டு கதறி அழுது கொண்டிருந்தாள். வீடே சோகமயமாகி இருந்தது. பக்தி, பரோபகாரம், விரதம் என்றிருந்த அம்மாவுக்குக் கடவுள் ஏன் இத்தனைத் துன்பங்களைக் கொடுத்தார். அப்பாவுக்கு ஏன் இந்த நிலை ஒன்றும் புரியாத குழப்பநிலை ஏற்பட்டது சிறுவன் வெங்கட்ராமனுக்கு.
அவன் அலை அடிக்கும் மனத்துடன் அடுத்த வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தான். அவனது பிஞ்சு உள்ளத்தில் அப்போதுதான் பெரிய பெரிய கேள்விகள் எழுந்தன.அப்பா ஏன் இப்படி ஆனார்? எது இருந்ததால் அவர் உயிரோடு உலாவினார்? எது போனதால் அவர் இப்படி சாய்ந்து கிடக்கிறார்?எது அவரை இயக்கியது? எது அவரை வீழ்த்தியது? அந்த அது எது? எங்கிருந்து வந்தது, இப்போது எங்கே போயிற்று?
அப்பாவின் சடங்குகள் முடிந்தன. பின்னர் மதுரையில் இருந்த சித்தப்பா சுப்பையர் வீட்டில் வெங்கட்ராமன் தங்கும்படி நேர்ந்தது. மதுரையில் அவர் ஸ்காட் இடைநிலைப்பள்ளியிலும், அமெரிக்கன் மிஷன் உயர்நிலைப் பள்ளியிலும் படித்தார். அக்காலத்தில் படிப்பை விட விளையாட்டிலேயே அவருக்கு அதிகமான ஆர்வமிருந்தது.
சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தைப் படித்து அதில் வரும் நாயன்மார்களைப் போல் பக்தி வசப்பட வேண்டுமென விருப்பம் உண்டாயிற்று. இளம் வயது விளையாட்டுகள் ஒருபுறமிருந்தாலும் மறுபுறம் அப்பா இறந்த போது எழுந்த கேள்விகளுக்கு விடை தேடும் ஆவலும் தொடர்ந்து கொண்டே இருந்தது. இடையே மோன நிலையும் தியான ஆர்வமும் மேலிட அவர் உட்கார்ந்த இடத்திலேயே அடிக்கடி சிலையாகிப் போனார்.
இதைக் கண்ட உற்றார், உறவினர்கள் அவரைக் கண்டிக்கத் தவறவில்லை. ஒருநாள் நான் யார்? என்ற கேள்வி அவருள் எழுந்தபோது தனக்குள் இருந்த பழைய கேள்விகளுக்கும் விடை காணும் முகமாக, தான் மரணிக்கப் போவதாக உணர்ந்தார்.
தரையில் படித்துக்கொண்டு மூச்சை அடக்கிக் கிடந்து மரணம் நிகழப் போகிறது... சாவு என்றால் என்ன? சாவது எது? இந்த உடல்தானே ! அப்படி என்றால் நான் என்ன ஆவேன்? என எண்ணி உடல் விரைக்க சவம் போல் கிடந்தார். சட்டென மின்னல் வெட்டுப் போல் அவருக்கு ஆன்ம ஞானமும் ஜீவன் முக்தியும் கிடைத்தது. பல நாள் கடுந்தவம் மேற்கொண்டவர்களுக்கும் கிடைக்காத அரிதான இவ் விஷயங்கள் சிறுவனான வெங்கட்ராமனுக்குச் சட்டென வாய்க்கப் பெற்றது.
அதன் பிறகு வெங்கட்ராமனின் நடவடிக்கைகள் அடியோடு மாறிப் போயின. ஒருநாள் உறவினர் ஒருவர் வீட்டுக்கு வந்தார். அவரிடம் 'நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?'என்றார் வெங்கட்ராமன். அவர் 'நான் அருணாசலத்திலிருந்து வருகிறேன்' என்றார்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அதைக் கேட்டதும் வெங்கட் ராமனுக்குள் ஏதோ மாற்றங்கள் ஏற்பட்டது. அதுவரை அவர் அப்படி ஒரு பெயரைக் கேள்விப்பட்டதில்லை என்றாலும் கேள்விப்பட்டவுடன் தான் அங்கு போக வேண்டுமென்ற எண்ணம் ஏனோ தோன்றியது.
அவரது நடவடிக்கைகளை அண்ணன் நாகசாமி பல முறை கண்டித்தார். இனி படிப்பதாகப் பாசாங்கு செய்வது வீண் என உணர்ந்த வெங்கட்ராமன் வீட்டை விட்டு வெளியேறி அருணாசலம் (திருவண்ணாமலை) செல்ல முடிவு செய்தார். ஆனால் அங்கு போவதற்கான வழி கூட அவருக்குத் தெரிந்திருக்கவில்லை.
1896 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி பள்ளியில் 'சிறப்பு வகுப்பு' இருப்பதாகக் கூறி விட்டுப் புறப்பட்டார். அப்போது அவரது மூத்த சகோதரர்அவரிடம் வந்து ஐந்து ரூபாயைக் கொடுத்துப், 'பள்ளிக்குப் போகும் வழியில் என் கல்லூரி சம்பளத்தைக் கட்டி விட்டுப் போ' என்றார்.
அண்ணன் போனவுடன் ஐந்து ரூபாயில் இரண்டு ரூபாயை மட்டும் எடுத்துக் கொண்டு மீதி மூன்று ரூபாயுடன் ஒரு கடிதத்தை எழுதி வைத்தார். ''நான் என் தகப்பனாரைத் தேடிக் கொண்டு அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுக் கிளம்பி விட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகையால் இந்தக் காரியத்திற்காக ஒருவரும் விசனப்பட வேண்டாம். உன் சம்பளத்தை நான் கல்லூரியில் இன்னும் செலுத்தவில்லை. இரண்டு ரூபாய் இதோடு இருக்கிறது" என்று எழுதி வைத்து விட்டுக் கிளம்பி விட்டார்.
கடிதத்தையும், மூன்று ரூபாயையும் வீட்டில் வைத்து விட்டுப் புறப்பட்ட வெங்கட்ராமன் மதுரை ரயில் நிலையத்துக்கு வந்து வழி தெரியாமல் திண்டிவனம் ரயில் ஏறி, பின்பு விழுப்புரம் சென்று அங்கு திருவண்ணாமலைக்கு ரயிலைப் பிடித்தார். காசு கரைந்து போனதில் மாம்பழப்பட்டு வரைதான் பயணச்சீட்டு வாங்க முடிந்தது. மாம்பழப்பட்டில் இறங்கி ரயில்பாதையில் 10 மைல் தூரம் நடந்து அறையணை நல்லூரை அடைந்து அங்குள்ள கோயில் மண்டபத்தில் அமர்ந்திருந்தபோது அருணாசல தீப தரிசனம் கிடைக்கப் பெற்று நிஷ்டையில் ஆழ்ந்தார்.
விழித்த பின்பு முக்கால் மைல் தூரம் நடந்து கீழூரை அடைந்தார். பசியும் களைப்பும் அவரை வாட்டி எடுத்தது. அவ்வூரிலுள்ள ஒருவரிடம் தனது காதில் போட்டிருந்த கடுக்கனைக் கழற்றிக் கொடுத்து, அதை வைத்துக் கொண்டு நான்கு ரூபாய் கேட்டுப் பெற்றார். கடுக்கனைப் பெற்றுக் கொண்டு பணம் கொடுத்தவர் தந்த அடையாளக் காகிதத்தைக் கிழித்தெறிந்து விட்டு ரயில் ஏறினார். செப்டம்பர் முதல் தேதி திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். கோயிலுக்குச் சென்று அருணாசலேஸ்வரர் சந்நிதியில் நின்றபோது வெங்கட்ராமனுக்குக் கண்ணீர் குமுறிப் பொங்கியது. தாரைதாரையாய் வழிந்த கண்ணீரைத் துடைக்கவும் மனமின்றி மனமுருகி நின்றார்.
பின்னர் கோயிலை விட்டு வெளியே வந்து தெருவில் நடக்கையில் எதிரே வந்த ஒருவர் 'முடி எடுக்கணுமா சாமி?' என்று யதார்த்தமாகக் கேட்க உடனே சம்மதித்தார். மொட்டை அடிக்கப்பட்டது. உடைகளைக் களைந்தார். ஒரு துண்டைக் கட்டிக் கொண்டு, உடைகளையும் கையில் மீதமிருந்த காசுகளையும் தூக்கி அருகிலிருந்த ஐயன் குளத்தில் வீசி ஏறிந்தார். குளியல் கூடத் தேவைப்படவில்லை என்று நடந்தபோது மழை வந்து அவரை நனைத்தது.
பின்னர் திருவண்ணாமலை கோயிலிலேயே தங்கி நிஷ்டையிலிருந்து தவ வாழ்வை மேற்கொண்டார். உள்ளூர்ச் சிறுவர்களால் தொந்தரவு ஏற்பட்டதால், கோயிலின் பாதாள லிங்க அறை, சுப்பிரமண்ய சுவாமி கல் மண்டபம், நந்தவனம், தோப்பு, வாகன மண்டபம் எனப் பல இடங்களிலும் அமர்ந்து நிஷ்டையில் மூழ்கிப் போனார்.அவரைக் கண்ட உள்ளூர் மக்கள் போற்றி வணங்கினர். அவரது புகழ் ஊரெங்கும் பரவத் தொடங்கியது. ஆனால் அப்போது அவரது பெயரைக் கூட மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆரம்ப நாட்களில் அவர் யாருடனும் பேசியதுமில்லை.

இடையே ஒரு முறை அண்ணன் வந்த போதும்கூட அவர் பேசவில்லை. அண்ணனை அடுத்து அம்மா அழகம்மையே நேரில் வந்த போதும் அவர் பேசவில்லை. பக்தர் ஒருவர் மிகவும் கேட்டுக் கொண்டதால் அம்மாவுக்குப் பதிலாக 'அவரவர் பிராப்த பிரகாரம், அதற்கானவன் அங்கங்காய் இருந்து ஆட்டுவிப்பான், என்றும் நடக்காதது என்ன முயற்சியாலும் நடக்காது ; நடப்பதை என்ன தடை செய்தாலும் நடந்தே தீரும் இதுவே திண்ணம். ஆகவே மவுனமாயிருத்தல் நன்று.' என்று எழுதிக் காட்டினார். இதைக் கண்டு மகனை அழைத்துச் செல்ல வந்த தாய் ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினார்.
இந்நாட்களில் ரமணரைத் தேடி வரும் பக்தர்கள் கூட்டம் பெருகியது. தன்னைத் தேடி வருவோரின் மனக் குறைகளைக் கேட்டு ஆறுதல் சொல்லி வந்தார். மலைக்குகைகளில் அங்குள்ள ஆசிரமங்களில் வாழ்ந்த ரமணர் இறுதிக் காலத்தில் தன்னுடன் வந்து சேர்ந்த தாயையும் பேணிக் காத்து வந்தார். ரமணரின் அண்ணன் நாகசாமியும் வந்து சேர்ந்து பின்னர் நிரஞ்சானந்தா என்ற பெயரோடு துறவியானார்.
1922 ஆம் ஆண்டில் ரமணரின் தாய் அழகம்மை மகனின் மடியிலேயே உயிர் துறந்தார். அம்மா சமாதி அருகேயே ரமணாஸ்ரமம் உருவானது. பின்னால் அம்மாவுக்காக அவரது சமாதியின் மேல் அழகிய கோயில் ஒன்றை எழுப்பினார் ரமணர். அதற்கு பூதேஸ்வரர் கோயில் என்று பெயர்.
ஆசிரமம் அமைந்த பின் பக்தர்களும், சீடர்களும் பெருகினர். ரமணர் பெரும்பாலும் மவுனமாகவே இருப்பார். சில சமயங்களில் பக்தர்களின் கேள்விக்குப் பதிலளிப்பார். ஆசிரமத்தில் இலை தைப்பது, காய்கறிகள் நறுக்குவது, அச்சகத்தில் பிழை திருத்துவது என்று எல்லா வேலைகளையும் ரமணர் செய்வார்.
உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மீதும் அவர் அன்பு கொண்டிருந்தார்.ஆசிரமத்திலுள்ள பிராணிகள் இறந்துவிட்டால் தகுந்த சடங்குகள் செய்து அவற்றைப் புதைப்பார். லட்சுமி என்ற பசு இறந்தபோது அதற்கு சமாதி அமைத்தார். தானே அப் பசுவின் மேல் ஒரு வெண்பா பாடி சமாதி மேல் அதனைப் பொறித்து வைத்துள்ளார்.
தோட்டத்து மரங்களில் உள்ள காய் கனிகளைக் கூட அடித்துப் பறிப்பதை அவர் ஒருபோதும் அனுமதித்ததில்லை. மனிதன் நடமாடும் மரம், மரம் நடமாடாத மனிதன் என்பது அவரது கருத்து.
ஒருமுறை கீரைப்பாட்டி என்ற பக்தை சிவபூசைக்காக ஆயிரத்து எட்டு பாதிரி மர இலைகளைத் தேடியும் கிடைக்காததால் ரமணரிடம் வருத்தப்பட்டபோது அவர் ''கிடைக்காவிட்டால் போகட்டும் விடு. இலைகளைக் கிள்ளி மரத்தைத் துன்புறுத்திப் பூசை செய்வதால் என்ன பலன் கிடைத்து விடப் போகிறது. இலையின்றியே பூசை செய்தால் போதும்" என்று அதற்கு பதில் கூறி விட்டார்.
ரமணர் ஆன்மத் தத்துவங்களை விளக்கும் அரிய பல நூல்களை எழுதியுள்ளார்.'உள்ளது நாற்பது', 'உபதேசாரம்', 'அருணாசலத் துதி பஞ்சகம்' என்பன அவற்றில் சில. ஆதி சங்கரரின் 'விவேக சூடாமணி', 'ஆத்மபோதம்' ஆகியவற்றைத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்.
ரமணரின் சித்தாந்தம் ஆன்ம ஞானத்தைக் குறிக்கோளாகக் கொண்டது. ஜடமான உடலை 'நான்' என்கிறோம். இது தவறானது ! உடல் தன்னைத் தானே 'நான்' என்று கூறிக்கொள்ளாது, உடல் ஒரு ஜடம்.
உடல் செத்துவிட்டால் உடலில் உள்ள உயிர் (ஆன்மா) அழிந்து விடுவதில்லை. 'நான்' என்பது உடலைக் கடந்த உணர்வு. இறக்கும் உடல் 'நான்' அல்ல. இவ்வுடல் வேறு , நான் வேறு.. சரீரத்தைக் கடந்த உணர்வை மரணம் தீண்டாது. 'நான்' யார் என்பதை அறிந்து கொள்ள கூர்மையான அறிவை விட , கூர்மையான சிந்தனையே தற்போது அவசியத் தேவை. ஒருமுகமான சிந்தனை மூலமே இந்த உண்மையை உணர முடியும்.

'நான் யார்' என்ற விசாரணை மனதின் தன்மையைப் புரிந்து கொள்வதற்கான, சிந்தனையின் முயற்சி என்று எண்ணக்கூடாது. மனம் முழுவதையும் அதன் பிறப்பிடத்தில் நிலைக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கம். 'நான்' என்ற அகந்தையோடு நினைக்கும்போது, 'நானில்லை' என்று தொடர்ந்து மடக்கினால் நான் என்ற எண்ணம் நம்மிடமிருந்து மறைந்து விடுகிறது.
'நம்மில் உள்ள நிரந்தர உண்மை அறிவையே பூரண இன்பமாக அடையப் பெறுவதே புருஷார்த்தம். தூங்கும்போது நாம் எதையும் அறிவதில்லை. ஆனால் விழிக்கும்போது எல்லாவற்றையும் உணர்கிறோம்' என்கிறார் ரமணர்.
ரமணரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவரைப் பின்பற்றி ஆன்ம ஞானம் அடையவும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஆசிரமம் அமைத்துச் செயல்படுகின்றனர்.
திருவண்ணாமலைக்குள் நுழைந்ததிலிருந்து சிவனடி சேரும் வரையிலும் ரமணர் அவ்வூரை விட்டு வெளியே சென்றதேயில்லை.1946 ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே வாழ்ந்த ரமணருக்கு 1947-ல் உடல் தளர்ந்தது. முழங்கையில் தோன்றிய ஒரு கட்டி பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் திரும்பத் திரும்பத் தோன்றியது. மருத்துவர்கள், 'அது சர்கோமா என்ற புற்றுநோய். எனவே கையையே வெட்டி எடுத்து விட வேண்டும்' என்றனர்.
ரமணரோ, 'உடம்பு என்பதே நோய்தானே. இயற்கை அது வழி நடக்கட்டும். அதை ஏன் தடுக்க வேண்டும் . காயமுள்ள இடத்தில் கட்டுப்போட்டால் போதுமானது' என்றார்.
1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று மாலை தன்னைக் காண வந்த பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மரணம் அவரை நெருங்கிவிட்டதை அறிந்த சீடர்கள் ரமணர் இயற்றிய 'அருணாசல சிவா' என்ற பல்லவியைப் பாடினார்.
தன்னைப் படுக்கையில் அமர வைக்கும்படி ரமணர் கூறினார். படுக்கையில் புன்னகையுடன் அவரின் விழியோரங்களில் பேரானந்தக் கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழிந்தபோது இரவு 8.47. அவரின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.
மனிதனாய்ப் பிறந்து மகானாய் வாழ்ந்து பகவானாய் உறைந்து விட்டவர் ரமணர். இன்றைக்கும் அமைதி இல்லாமல் செல்பவர்களுக்கு அமைதியையும், மனக்குறை உள்ளவர்களுக்கு திருப்தியையும் அளிக்கும் ஆலயமாக அவரது ஆசிரமம் அமைந்துள்ளது.
திருச்சுழியும், மதுரை சொக்கப்ப நாயக்கர் வீதியும், திருவண்ணாமலையும் ரமண பக்தர்களின் யாத்திரைத் தலங்களாக உள்ளன. திருவண்ணாமலை ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமணரின் சிலை உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. அது விழியாலேயே பேசி ஆறுதல் அளிக்கிறது.
விடை காண முடியாத கேள்விகளுக்கெல்லாம் ரமணரின் உபதேசங்கள் விடை அளிக்கும்.
'நம்மில் உள்ள நிரந்தர உண்மை அறிவையே பூரண இன்பமாக அடையப் பெறுவதே புருஷார்த்தம். தூங்கும்போது நாம் எதையும் அறிவதில்லை. ஆனால் விழிக்கும்போது எல்லாவற்றையும் உணர்கிறோம்' என்கிறார் ரமணர்.
ரமணரின் கருத்துகளை ஏற்றுக்கொண்டவர்கள் அவரைப் பின்பற்றி ஆன்ம ஞானம் அடையவும், அதனை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்லவும் ஆசிரமம் அமைத்துச் செயல்படுகின்றனர்.
திருவண்ணாமலைக்குள் நுழைந்ததிலிருந்து சிவனடி சேரும் வரையிலும் ரமணர் அவ்வூரை விட்டு வெளியே சென்றதேயில்லை.1946 ஆம் ஆண்டுடன் 50 ஆண்டுகள் திருவண்ணாமலையிலேயே வாழ்ந்த ரமணருக்கு 1947-ல் உடல் தளர்ந்தது. முழங்கையில் தோன்றிய ஒரு கட்டி பல அறுவை சிகிச்சைகளுக்குப் பின்னும் திரும்பத் திரும்பத் தோன்றியது. மருத்துவர்கள், 'அது சர்கோமா என்ற புற்றுநோய். எனவே கையையே வெட்டி எடுத்து விட வேண்டும்' என்றனர்.
ரமணரோ, 'உடம்பு என்பதே நோய்தானே. இயற்கை அது வழி நடக்கட்டும். அதை ஏன் தடுக்க வேண்டும் . காயமுள்ள இடத்தில் கட்டுப்போட்டால் போதுமானது' என்றார்.
1950 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி அன்று மாலை தன்னைக் காண வந்த பக்தர்களுக்கு தரிசனம் தந்தார். மரணம் அவரை நெருங்கிவிட்டதை அறிந்த சீடர்கள் ரமணர் இயற்றிய 'அருணாசல சிவா' என்ற பல்லவியைப் பாடினார்.
தன்னைப் படுக்கையில் அமர வைக்கும்படி ரமணர் கூறினார். படுக்கையில் புன்னகையுடன் அவரின் விழியோரங்களில் பேரானந்தக் கண்ணீர் திரண்டு கன்னத்தில் வழிந்தபோது இரவு 8.47. அவரின் ஆன்மா உடலை விட்டுப் பிரிந்தது.
மனிதனாய்ப் பிறந்து மகானாய் வாழ்ந்து பகவானாய் உறைந்து விட்டவர் ரமணர். இன்றைக்கும் அமைதி இல்லாமல் செல்பவர்களுக்கு அமைதியையும், மனக்குறை உள்ளவர்களுக்கு திருப்தியையும் அளிக்கும் ஆலயமாக அவரது ஆசிரமம் அமைந்துள்ளது.
திருச்சுழியும், மதுரை சொக்கப்ப நாயக்கர் வீதியும், திருவண்ணாமலையும் ரமண பக்தர்களின் யாத்திரைத் தலங்களாக உள்ளன. திருவண்ணாமலை ஆசிரமத்தில் அமைக்கப்பட்டுள்ள ரமணரின் சிலை உயிரோட்டம் உள்ளதாக அமைந்துள்ளது. அது விழியாலேயே பேசி ஆறுதல் அளிக்கிறது.
விடை காண முடியாத கேள்விகளுக்கெல்லாம் ரமணரின் உபதேசங்கள் விடை அளிக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1