புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
24 Posts - 53%
heezulia
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
14 Posts - 31%
Balaurushya
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
ஆனந்திபழனியப்பன்
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
Barushree
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
nahoor
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
kavithasankar
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
prajai
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
78 Posts - 73%
heezulia
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
4 Posts - 4%
prajai
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
3 Posts - 3%
kavithasankar
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
2 Posts - 2%
Balaurushya
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
2 Posts - 2%
Shivanya
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 1%
nahoor
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 1%
Barushree
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
பூச்சியம்மன் கதை Poll_c10பூச்சியம்மன் கதை Poll_m10பூச்சியம்மன் கதை Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூச்சியம்மன் கதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 04, 2010 12:54 am

வல்லநாடு என்னும் கிராமத்தில் தேவர் இனத்தைச் சேர்ந்த பூலுத்தேவன், அவன் மனைவி பேச்சியம்மாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். வல்லநாடு என்பது திருநெல்வேலி மாவட்டத்தில் - திருநெல்வேலி, தூத்துக்குடி சாலையில் உள்ளது. இருவரும் வளமாக வாழ்ந்தனர். எல்லா செல்வமும் இருந்த போதும் குழந்தைச் செல்வம் இல்லையே என்ற வருத்தம். மலடி என்று பலர் அரசல்புரசலாகப் பேசிக் கொள்வதைப் பேச்சியம்மாவால் தாங்க முடியவில்லை. தினமும் இரவு நேரத்தில் ஒரே ஒப்பாரிதான். பூலுத்தேவன் தன் மனைவியைத் தேற்றியும் அவள் தேறியபாடில்லை.

சங்கரன் கோயிலில் உள்ள சங்கர நாராயணனைத் தொழுதால் பிள்ளைப்பேறு கிடைக்கும் என்று எல்லோரும் சொல்ல உடனே பேச்சியம்மாள் சங்கரநாராயணனைத் தொழ சங்கரன்கோயில் கிளம்பினாள். நாகலிங்கத்திற்குப் பூசை செய்து நாராயணனைத் தொழுது வீடு திரும்பினாள். கொஞ்ச காலத்தில் பேச்சியம்மாள் கருவுற்று அழகான ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தாள். அந்தக் குழந்தைக்குப் பட்டபிரான் என்று பெயரிட்டு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்த்து வந்தனர்.

பட்டபிரான் 64 கலைகளையும் கற்றான். மலையாள தேசத்துக்குச் சென்று மந்திர தந்திரங்களையும் கற்றுத் தேர்ந்தான். அவன் தாய், தந்தையர் அவனுக்கு ஒரு தொழிலையும் ஏற்பாடு செய்து கொடுத்தனர். அதாவது, மாடுகளை ஓட்டிச் சென்று சந்தைகளில் விற்பது தான் அவன் தொழில். பாவூரில் சந்தை நடப்பதை அறிந்து பட்டபிரான் தொழில் நிமித்தமாக அந்த ஊருக்குக் கிளம்பினார்.

பாவூர் பள்ளர் இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழும் ஊர். அவ்வூரில் ஓயிலான் - உமையாள் தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஏழு ஆண்பிள்ளைகள்.

ஒரு பெண் குழந்தை இல்லையே என்று ஏறாத கோயில் இல்லை வேண்டாத தெய்வமில்லை. ஒருமுறை சங்கரன்கோயில் சென்று வர, அவர்கள் நினைத்தது போலவே உமையாள் கர்ப்பம் தரித்து ஒரு பெண்குழந்தையைப் பெற்றெடுக்கிறாள். ஏழு அண்ணன்களுக்குத் தங்கை என்பதால் மிகவும் செல்லமாக வளர்த்து வருகின்றனர்.ஒரு நாள் சோதிடரை அழைத்து அவளுக்குப் பொயிலாம் பூச்சியம்மாள் என்று பெயர் சூட்டுகின்றனர். அந்த பூச்சியம்மாளுக்கு ஜாதகம் கணிக்கும் படியும் அந்த சோதிடரிடம் வேண்டுகின்றனர்.

சோதிடர் பொயிலாம் பூச்சியம்மாள் பிறந்த நேரம், காலத்தை வைத்து 'இந்தப் பெண் நீண்ட நாட்களுக்கு இந்த உலகத்தில் வாழாது விரைவில் தேவலோகம் சென்றுவிடும்' என்று கூறுகிறார். அந்தப் பெண்ணின் அண்ணன்கள் ஏழு பேரும் சோதிடரை அடிக்க வருகின்றனர். தந்தையான ஒயிலான் தடுத்து சோதிடரை வழியனுப்பி வைக்கிறான். பொயிலாம் பூச்சியம்மனின் தாய் இதை நினைத்து தினமும் புலம்பி வருகிறாள். பொயிலாம் பூச்சியம்மாள் செல்லமாக வளர்ந்து பன்னிரண்டாம் வயதில் பெரிய பெண்ணாகிறாள் (பூப்படைதல்).

சந்தைக்கு மாடுகளை ஓட்டிவரும் பட்டபிரான், வழியில் தண்ணீர் எடுக்க வரும் பொயிலாம்பூச்சியம்மாளைக் காண்கிறான். அவள் அழகில் மயங்கிய அவன், அவளை எப்படியும் அடைந்தே தீர வேண்டும் என்று முடிவெடுக்கிறான். மாடுகளை அதே இடத்தில் விட்டுவிட்டு அவள் அருகில் சென்று, ''தண்ணீர் கொஞ்சம் ஊத்தும்மா'' என்று கேட்கிறான். அவள் தண்ணீர் ஊற்ற அதைக் கூட குடிக்காமல் அவள் அழகையே ரசித்துக் கொண்டிருந்தான். இதைக் கண்டு அவளுக்கு வெட்கம் வந்துவிடுகிறது. அவள் குடத்தைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய்விடுகிறாள். அவளைப் பின்தொடர்ந்து சென்று அவளின் வீட்டை அடையாளம் கண்டு திரும்பிவிடுகிறான் பட்டபிரான்.

மறுநாள் பொயிலாம்பூச்சியம்மாளின் வீட்டிற்குச் சென்று அவளின் தந்தை, தாய், அண்ணன் ஆகியோரோடு பேசி நட்பை உருவாக்கிக் கொண்டு தினமும் அவள் வீட்டிற்குச் செல்கிறான் பட்டபிரான். பொயிலாம்பூச்சிக்கும் அவன் மேல் காதல் ஏற்படுகிறது. ஒருநாள் பட்டபிரான் அவளை அழைத்துக் கொண்டு ஓடிவிடுவது என்று தீர்மானித்து விட்டு அதை பொயிலாம் பூச்சியிடம் சொல்கிறான். அவள் முதலில் பயந்தாலும் பிறகு ஒப்புக் கொள்ள இருவரும் உடன் போக்கில் ஈடுபடுகின்றனர். இவர்களுடன் பூச்சி என்ற அவர்களுடைய நாயும் வந்துவிடுகிறது.

இருவரும் வல்லநாடு கிராமத்திற்கு வடக்கே உடைமரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் தங்கினர். இவர்கள் ஊருக்குத் தெரியாமல் ஓடி வந்ததால் வெளிப்படையாக அருகில் உள்ள உழக்குடி ஊருக்குள் சென்று வேலை செய்து பொருள் தேட முடியவில்லை. இருவருக்குமே பசியைப் போக்க வழி தெரியவில்லை. தன் மனைவியான பொயிலாம்பூச்சி பசியுடன் இருப்பதைப் பட்டபிரானால் தாங்க முடியவில்லை. ''கொஞ்ச நேரம் இங்கேயே இரு'' என்று சொல்லிவிட்டு அந்தக் காட்டிற்குள் கொஞ்ச தூரம் நடந்தான். ஆடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. கொஞ்சம் யோசித்து, மேயும் ஆடுகளில் ஒன்றை சத்தம் போடாமல் தூக்கி வந்து தன் மனைவியிடம் கொடுத்தான். முதலில் ''இது என்ன திருட்டுவேலை, இதெல்லாம் வேண்டாம்'' என்று மறுத்தாள். பின்னர் வாட்டும் பசியை அவளால் தாங்க முடியாததால் அந்த ஆட்டை அடித்து இருவரும் சமைத்துத் தின்றார்கள்.

இந்த வேலை நாளொரு மேனியாகத் தொடர்ந்து நடந்து கொண்டு வந்தது. இரவு நேரத்திலோ, காலை நேரத்திலோ இவர்கள் சமைப்பதில்லை. நண்பகல் நேரத்திலேயே அடுப்பு மூட்டி சமைத்து வந்தனர். இரவு நேரத்தில் சமைத்தால் நெருப்பு தெளிவாகத் தெரிந்துவிடும். காலை நேரத்தில் அடுப்பு மூட்டினால் புகை காட்டிக் கொடுத்துவிடும். நல்ல வெயில் நேரம் என்றால் இரண்டுமே அவ்வளவாகத் தெரியாது என்பதால் நண்பகலில் அடுப்பு மூட்டினார்கள்.

இதற்கிடையில் பொயிலாம்பூச்சியைக் காணாத ஏழு அண்ணன்களும் அவளைத் தேடிக் கொண்டு உழக்குடியை வந்தடைந்தனர். இந்த ஊர் வல்லநாடு கிராமத்திற்கு வடக்கே உள்ளது. உழக்குடியில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து, ''வேற்றாள் இருவர் வரக் கண்டீர்களா?'' என்று கேட்டனர். ஆடு மேய்ப்பவர்கள் ''அப்படி யாரையும் நாங்க பாக்கலீங்க. ஆனா, கொஞ்ச நாளா ஒரு நாளப் போல ஒரு நாளு, ஒவ்வொரு ஆடா காணாமப் போகுதுங்க. உச்சி வெயில் நேரத்துல உடைமரக் காட்டுக்குள்ள ஒரு நூலப்போல புகை வருதுங்க'' என்று சொன்னார்கள்.

சரி என்று ஏழு அண்ணன்களும் உடைமரக்காட்டுக்குள் நுழைந்து தேடத் தொடங்கினர். பின்பு அக் காட்டில் உள்ள ஒரு குன்றின் மேலே ஏறி நின்று உடைமரக்காட்டை ஒரு நோட்டம் விட்டனர். அப்போது நூலைப் போல புகை வருவது தெரிந்தது. புகை வரும் இடத்தை நோக்கி ஏழு அண்ணன்களும் நகர்ந்து சென்றனர். மரத்தடியில் அடுப்பு எரிந்து கொண்டிருந்தது. தன் மனைவி பொயிலாம்பூச்சியின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டிருந்தான் பட்டபிரான். ஏழு அண்ணன்களும் அவர்களைச் சுற்றி வளைத்து நெருங்கி வந்தனர். பொயிலாம்பூச்சி அடுப்பு எரிவதையே பார்த்துக் கொண்டிருந்ததால், ஏழு அண்ணன்மார்களும் தங்களைச் சுற்றி வளைத்ததை கவனிக்கவில்லை. இருவரும் எதிர்பாராத நேரத்தில் நெருங்கி வந்து ஒருவன் பட்டபிரானை ஈட்டியால் குத்துகிறான். பின்னர் ஒருவர் பின் ஒருவராக மாறி மாறி ஈட்டியால் பட்டபிரானைக் குத்திக் கொன்றுவிடுகின்றனர். இதைக் கண்ட பொயிலாம்பூச்சி அதிர்ந்து போய் மரத்திற்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறாள்.

பூச்சிநாய் அவர்களை எதிர்த்துக் குரைக்கவும் அதையும் கொன்று விடுகின்றனர். பின்னர் தங்கள் தங்கையான பொயிலாம்பூச்சியைத் தங்களோடு வீட்டிற்கு வரும்படி அழைக்கின்றனர். அவள் வர மறுத்து தன்னையும் கொன்றுவிடும்படி அவர்கள் முன்னால் வந்து நிற்கிறாள். ஏழு அண்ணன்களுள் இளையவன் அவள் மேல் அதிக அன்பு கொண்டவன். அவளை ஒன்றும் செய்ய வேண்டாம் என்று ஆறு அண்ணன்களிடமும் வேண்டுகிறான். ஆனால் தங்கள் அழைப்பையும் மிறி நிற்கும் தங்கையின் மீது ஆறு அண்ணன்களுக்கும் கோபம் அதிகரிக்கிறது. அவளைப் பிடித்து இழுத்துத் தங்களோடு வரக் கோருகின்றனர். அவள் அடம் பிடித்து மறுக்கிறாள். கோபம் கொண்டு ஆறு பேரும் பொயிலாம்பூச்சியின் கழுத்தை வெட்டிக் கொன்று விடுகின்றனர்.

பிறகு பட்டபிரான், பொயிலாம்பூச்சி, பூச்சி நாய் ஆகிய மூன்று உடல்களையும் ஒன்றாகப் போட்டு தீ முட்டி எரித்துவிடுகின்றனர். எரித்து முடித்து அந்த உடல்களின் சாம்பலையும் எலும்புத்துண்டுகளையும் கொண்டுபோய் ஆற்றில் கரைத்துப் பாவூருக்குத் திரும்புகின்றனர். இளைய அண்ணன் துக்கம் தாள முடியாமல் தன் தங்கையை நினைத்துப் புலம்பிக் கொண்டே வருகிறான். வரும் வழியில் ஒவ்வொரு அண்ணனாக ரத்தம் கக்கி இறந்து போகின்றனர். பொயிலாம்பூச்சியை வெட்ட வேண்டாம் என்று சொன்ன இளைய அண்ணன் மட்டுமே சாகாமல் மிஞ்சுகிறான்.

வீட்டிற்குத் திரும்பிய இளையவன் நடந்த சேதியைத் தாய் தந்தையருக்குத் தெரிவிக்கிறான். பின்னர் தங்கைக்குக் கோயில் எழுப்பி வழிபடத் தொடங்குகிறான்.

காதலர் இருவரும் இருக்குமிடத்தை ஏழு அண்ணன்களுக்கும் தெரிவித்த ஆடு மேய்ப்பவர்களின் ஆடுகள் நாளாவட்டத்தில் ஒவ்வொன்றாக இறந்து கொண்டே வந்தன. இதற்குக் காரணம் என்னவென்று அறிந்து அதற்குப் பரிகாரமாக, பட்டபிரான், பொயிலாம்பூச்சி, பூச்சி நாய் மூவருக்கும் சிலை எழுப்பி தெய்வமாக்கி வழிபடலாயினர். இதற்குப் பிறகு அவர்களின் ஆடுகள் மடிந்து போவது குறைந்து போயிற்று.

இப்போதும் பூச்சியம்மன் கதை வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளாகக் கிராமங்களில் நடத்தப்படுகிறது.

பூச்சியம்மன் கதை Purple10




பூச்சியம்மன் கதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக