புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 7:14 pm

» தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஈகரை உறவு அன்பர்களுக்கு
by mruthun Thu Oct 31, 2024 5:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 5:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 1:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
5 Posts - 63%
Barushree
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 13%
kavithasankar
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 13%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
59 Posts - 82%
mohamed nizamudeen
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
4 Posts - 6%
Balaurushya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
prajai
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
2 Posts - 3%
Shivanya
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 1%
Barushree
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 1%
Karthikakulanthaivel
அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_m10அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா - Page 3 Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிஞர் அண்ணாவின் - ரங்கோன் ராதா


   
   

Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 12:51 am

First topic message reminder :

"ஜப்பானியனின் குண்டுகள் அங்கு விழாமலிருந்தால், அவளை நீ கண்டிருக்கவே முடியாது! திரைகடல் கடந்து சென்றே அந்தத் தேவியைத் தரிசிக்க வேண்டியிருந்திருக்கும். அது உன்னால்தான் முடியுமா, எனக்குத் தான் முடியுமா? அவளுடைய 'கெட்டகாலம்' அவளை இப்படியாக்கிவிட்டது!" - இது என் நண்பன், தன் அடுத்த வீட்டுக்குப் புதிதாக வந்து சேர்ந்த சிங்காரியைப் பற்றி என்னிடம் கூறியது.

என் நண்பன் நாகசுந்தரம் இதிலே தேறியவன். எங்கெங்கு எழிலுள்ள மங்கையர் உள்ளனர், அவர்களின் நிலைமை என்ன என்ற அட்டவணை அவனிடம் உண்டு. பிரதி தினமும் கோயிலுக்கு அவன் போய் வருவது, தேவ பூஜைக்கா? தேவிகளைத் தரிசிக்கவேதான்! அவன் தான் எனக்கு ரங்கோன் ராதா விஷயமாக முதலிலே கூறினான். வந்து பார்த்தால்தான் என் மனம் திருப்தியாகும் என்று என்னை வற்புறுத்தினான்.

"நான் அவளைக் காண்பதால் உனக்கென்னப்பா திருப்தி?" என்று நான் சிரித்துக் கொண்டே கேட்டேன். "இது பெரிய பிரச்சனையாகி விட்டதோ உனக்கு? சங்கீத வித்வான் 'சபாஷ்' என்ற மொழியைச் சபையிலே எதிர்பார்க்கிறாரே, அது ஏன்? அவருடைய கீதத்தை ரசித்தவர்கள் இருப்பது தெரிந்தால் அவருக்கு ஆனந்தம்! அது போலத்தான் எனக்கும், நான் கண்டுபிடித்த அந்த சுகுமாரியை நீ ஒருமுறை பார்த்து 'பேஷ்' என்று பிரேமையும் பெருமூச்சும் கலந்து கூறினால், என் திறமைக்கு அத்தாட்சி" என்றான் நாகசுந்தரம். நகைச்சுவையுடன் பேசுவான் என் நண்பன். "அடுத்து வீட்டு அரம்பை எப்படிப் பட்டவள்? கூறு, கேட்போம், பிறகு பார்ப்போம்" என்று நான் கேட்டேன். "கூறுவதா? கவியா நான், அவளை உனக்குக் கருத்தோவியந் தீட்டிக் காட்ட. ரங்கோன் ராதா, ரசவல்லி, ரம்பை, மின்னற்கொடி" என்று அடுக்கு மொழிகளை ஆரம்பித்தான். "போதும்! போதும்! கம்பா! அங்கமங்கமாக வருணிக்கத் தொடங்கிவிடாதேயப்பா! இங்கு சடையர் இல்லை, உனக்குச் சொர்ணாபிஷேகம் செய்ய. நாளை மாலை, உன் வீட்டு மாடியிலே உலவ வருகிறேன். அந்த உல்லாசியைக் காண்போம்" என்று நான் வாக்களித்தேன். நண்பன் வேறு விஷயம் பேசிக் கொண்டிருந்துவிட்டு சென்றுவிட்டான். என் மனதிலே அவன் தூவிய எண்ணம், அன்றிரவு, முளைவிட்டு, செடியாகிக் கொடியாகிக் காதற்பூவும் பூத்துவிட்டது. கண்டதும் காதல் என்றனர் கவிகள்! நானோ அவளைக் காணவுமில்லை, கேட்டேன் அவளைப் பற்றிய வர்ணனையை. உடனே எனக்கோர் விதமான 'ஆசை' பிறந்தது! என்ன சித்தம்! வாலிப சித்தத்தை அடக்கக் கடிவாளம் ஏது? மனம்போன போக்கை மாற்றிக் கொள்ளும் திறமைதான் ஏது? ரங்கோன் ராதா! ராதா என்ற பெயரே ரசமாகத் தோன்றிற்று! ரங்கோன், ரசமான இடமாமே! அன்றிரவு அடிக்கடி விழித்துக் கொண்டேன், ராதாவை எண்ணி எண்ணி. என் நண்பனே என்னைக் கேலி செய்வான். அத்தகைய திடீர்க் கொந்தளிப்பு என் மனதில்! பாவம்! அவள் யாரோ! குண்டுகளுக்குப் பயந்து, இங்கு வருகிறாள்; அவள் மீது பாணம் பூட்ட நான் கிளம்புவதா? சீச்சீ! கெட்ட நினைப்பு நமக்கு ஏன்? என்றும் எண்ணினேன். கெட்ட நினைப்பு என்று இதை எப்படிக் கூற முடியும்? பெண்ணிடம் பிரேமை கொள்ளுவது ஆணின் இயற்கை. இதை நான் மாற்ற முடியுமா? நான் என்ன, கிடைக்கும் தையலைத் தூக்கித் தலைமீது வைத்துக் கொண்டு, தாண்டவமாடப் போகிறேனா சிவனார் போல்! ராதையும் என்னைக் கண்டு 'மோகித்தால்' நானென்ன மகாவிஷ்ணுபோல், அலைகடலில் ஆலிலைமேல் படுத்துக் கொண்டு அந்த ஆபத்தான இடத்துக்கா பிரியவதியை அழைப்பேன். இரண்டடுக்கு மாடி என் வீடு! இந்த ஆண்டு மட்டும் என் தகப்பனார் வியாபாரத்தில் 70 ஆயிரம் சம்பாதித்தார். இளைஞன் நான்! எழில் ஒன்றும் மட்டல்ல! என்ன குறை ராதாவுக்கு! என்றும் எண்ணினேன்.

ராதையே நீ என்னை நேசிப்பதாலுன்னை - என்ற கீதம் ராதையின் மோகன கோபாலா என்ற பாடல் - ராதாரமணா என்ற பஜனை - ராதா ருக்மணி சமேதா என்ற பாகவத மொழி - ராதாபாய் என்ற நடிகையின் பெயர் - என் மனதிலே ராதா, ராதா என்று பலப்பல விதத்திலே எண்ணம் கூத்தாடிற்று.

காலை மலர்ந்தது. அதற்கு என் கஷ்டம் தெரிகிறதா! கணக்குப் புத்தகமும் கையுமாகக் கடையிலே உட்கார்ந்து கொண்டிருந்தேன். மாலை வழக்கப்படி உலாவச் சென்றேன் - வழக்கமான இடத்துக்கு அல்ல! நாகசுந்தரனின் வீட்டுக்கு.

"விளையாட்டுக்குச் சொன்னாய் என்று எண்ணினேன். நிஜமாகவே வந்துவிட்டாயே" என்று நாகசுந்தரம் கூறினான். கேலி செய்தது போலிருந்தது அவன் பேச்சு. என்ன இருந்தாலும் 'பிகு'வை விட்டுவிடலாமா? "சேச்சே! நான் அதை மறந்தே விட்டேனப்பா! வழக்கப்படி உலவப் புறப்பட்டேன். உன்னையும் அழைத்துப் போகலாமென்றுதான் இங்கு வந்தேன்" என்று சமாதானங் கூறினேன். முதுகைத் தட்டிக் கொடுத்து, "எவ்வளவு பாசாங்கு பேசுகிறாயடா பரந்தாமா!" என்று கூறி என்னைக் கேலி செய்து மாடிக்கு அழைத்துச் சென்று, அந்த மங்கையைக் காட்டுவான் என்று நான் கருதினேன். ஆனால், நாகசுந்தரம், "சரி போவோமா! கோயிலுக்கா, ஆற்றோரமா?" என்று கேட்டுக் கொண்டே, தெருவில் இறங்கி விட்டான். நான் அடைந்த ஏமாற்றத்தை என்னென்பது. என் நண்பனின் திடீர் மாறுதலின் காரணம் எனக்குப் புரியவில்லை. அவனைக் கேட்கவோ மனம் வரவில்லை. 'சரி! ரங்கோன் ராதாவை நான் பார்க்கக்கூடாது என்று இவன் கருதுகிறான். அவளிடம் இவன் எண்ணம் வைத்துவிட்டான் போலிருக்கிறது' என்று எண்ணினேன். கோபந்தான் எனக்கு. எனவே, மனிதனின் சுயநலம், கபடம், மாதரால் உண்டாகும் மயக்கம் ஆகியவற்றைக் காரசாரமாகப் பேசினேன். என் கோபத்தைத் தீர்த்துக் கொள்ள வேறு வழியில்லை, என் செய்வது. ராதாவைக் காணாததால் என் மனதிலே மூண்ட ஆவல் மேலும் அதிகரித்தது. அன்றிரவும் வேதனையை அனுபவித்தேன். அநாவசியமாக அவளைப்பற்றிக் கூறுவானேன். என் உள்ளத்திலே ஏதேதோ நினைப்பு வருமாறு செய்வானேன். பிறகு இவ்விதம் என்னை வாட்டுவானேன். உண்மை நண்பனின் காரியம் இப்படியா இருப்பது! என்று சலித்துக் கொண்டேன். ராதா எப்படி இருப்பாளோ, என்ற எண்ணம் வேறு, எரிமலையிலிருந்து கிளம்பும் நெருப்பெனக் கிளம்பி என்னைத் தகித்தது.

ராதாவுக்கு இதெல்லாம் எப்படித் தெரியும்? அவள் மணமானவளாகக் கூட இருப்பாள் ஒரு சமயம். அவன் தான் "அழகான ஒரு பெண் ஆபத்தான நேரத்தில், பர்மாவிலிருந்து வந்துவிட்டாள்" என்று மட்டுந்தானே என்னிடம் சொன்னான். வேறு தகவல் தெரியாதே. அவனை விசாரிக்கவும் முடியாது போய்விட்டது. அவன், திடீரென மாறியே விட்டான். என்னிடம் பேசுவதைக்கூடக் குறைத்துக் கொண்டான். வீட்டிலேயும் அதிகம் தங்குவதில்லை. பிறகு நானே ராதாவைப்பற்றி அவனைக் கேட்க வேண்டி நேரிட்டது. "ஒரு நாளில் கூற முடியாது அப்பா, அந்தக் கதையை! பல நாளாகும். அதிலும், நீ யாரிடமும் அதைக் கூறுவதில்லை என்று உறுதிமொழி தந்தால்தான் சொல்வேன்" என்றான். "சரி! சொல். இப்போது ராதா எங்கே? அடுத்த வீட்டில் தானே?" என்று அவசரமாகக் கேட்டேன். என் நண்பன் என்னை ஏற இறங்கப் பார்த்து விட்டு, "நீ அவளைக் காதலிக்கிறாயா?" என்று கேட்கவே, நான் சிரித்துவிட்டு "என்ன பித்தம் பிடித்தவன் போலப் பேசுகிறாய். அவளை நான் கண்டதுமில்லை! காதலாம் காதல்" என்று கூறிக் கேலி செய்தேன். என் நண்பனின் முகமோ மிகக் கவலையுடன் இருந்தது. சில விநாடி மௌனமாக இருந்துவிட்டு அவன் என்னை உற்று நோக்கியபடி, "நண்பா! நீ ராதாவிடம், தூய்மையான முறையில் நடந்துகொள்வதாக வாக்குத்தர வேண்டும். பிறகு ராதாவிடம் நீ பழகலாம்" என்றான் சோகக் குரலில்.

என் நண்பனின் போக்கு எனக்கு ஆச்சரியமூட்டியது. எவ்வளவு துன்பத்தையும் சகித்துக் கொள்பவன், எவ்வளவு துயரச் செய்தியைக் கூறினாலும், 'சகஜம்' என்று கூறுபவன். அப்படிப்பட்டவன், ராதா யார்? எங்கே இருக்கிறாள்? என்ற சர்வசாதாரண விஷயத்தைப்பற்றி, ஏன் இப்படிக் கவலையும் கலக்கமும் கொண்டவனாகப் பேசுகிறான் என்பது புரியவில்லை. "என்னடா இது, விளையாடுகிறாயா? ராதா, கலியாணமானவளா? எதையோ மறைக்கிறாயே! என்னிடம் கூடச் சொல்லக்கூடாத பிரமாதமான இரகசியம் என்னடாப்பா அது?" என்று நான் கேட்டேன், கொஞ்சம் கோபமாகத்தான்.

நாகசுந்தரம், இதுபோல் நான் எப்போதாவது கொஞ்சம் கோபித்துக் கொண்டால், சிரித்துகொண்டே என் முதுகில் தட்டுவது வழக்கம். அன்று, பின்புறமாகக் கையைக் கட்டிக்கொண்டு, மௌனமாகவே நடந்தான், என் கோபப் பேச்சைக் கேட்ட பிறகும். "சரி, அவ்வளவுதான் உன் சினேகிதத்தின் யோக்யதை. யாரோ ஒரு பெண், ரங்கோன்காரி, அவள் விஷயத்திலே உனக்கு இவ்வளவு..." என்று நான் மேலும் கொஞ்சம் சூடாகப் பேசலானேன். நாகசுந்தரம் என்னைக் கெஞ்சுபவன் போலப் பார்த்து, "ராதா விஷயமாகக் கோபத்திலே கண்டபடி பேசிவிடாதே அப்பா. ராதா என் தங்கை" என்றான். எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. "உனக்குத் தங்கை ஏது?" என்று நான் கேட்டேன், திகைப்புடன். நண்பன் பதில் கூறவில்லை. என்னுடைய வற்புறுத்தல், அவனுக்கு வேதனையை உண்டாக்குவதை அவனுடைய முகம் நன்றாகக் காட்டிற்று. அவன் அந்த மர்மத்தை விளக்கிக் கூறாவிட்டாலோ, என் வேதனை குறையாது என்று எனக்குத் தோன்றிற்று. எனவே நான் வாஞ்சையுடன் நாகசுந்தரத்தை அணைத்துக் கொண்டு, "நாகு! என்னடா இது, விடுகதை பேசுகிறாய்! உனக்குத் தங்கை கிடையாதே. ராதா என்பவள் ரங்கோனிலிருந்து வந்த பெண் என்று கூறினாயே. இப்போது 'ராதா என் தங்கை' என்று கூறுகிறாய். இது என்ன வேடிக்கை! விபரீதமாகவும் இருக்கிறதே! என்னிடம் கூடவா நீ மறைத்துப் பேச வேண்டும்" என்று கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:07 am

பேயைக் கண்டவர்கள் கிடையாது. ஆனால் அதன் குணங்களைத் தெரிந்து கொண்டவர்களைப்போல ஜனங்கள் பேசிக் கொள்கிறார்கள். பேயின் உருவம் தெரியாது என்றும், அது மனிதர்களைப் பிடித்துக் கொண்டால், அவர்கள் செய்யும் சேஷ்டைகளின் மூலம், பேயின் போக்குத் தெரிந்து கொள்ள முடியுமென்றும் பேசுகிறார்கள். இந்தப் பைத்தியக்காரத்தனமான எண்ணம் எவ்வளவு விபரீதமான நடவடிக்கைகளுக்கு இடம் தருகிறது. என்னைக் கொட்டி வேதனை கொடுத்த தேளை அடிக்க நான் என் அப்பாவின் தடியை எடுத்தேன். எனக்குப் பேய் பிடித்திருப்பதாக நம்பியதால், நான் தடியை எடுத்ததும், தங்களுக்கு ஆபத்து வரும் என்று பயந்து, என் தகப்பனாரும், புருஷனும் ஓடினார்கள். என்னால் சிரிப்பைத் தாங்க முடியவில்லை. மகா சூரர்கள், வீரர்கள் இந்த ஆண்பிள்ளைகள்! எதிலே! பெண்களை மிரட்டுகிற விஷயத்திலே! நான் என்ன சின்னப் பிள்ளையா? எனக்கென்ன பயம் என்று பெருமையாகப் பேசுவார்கள். பெண் என்றால் பயங்காளி, ஆண்களேதான் தைரியசாலிகள் என்று எப்படியோ ஒரு தப்பான எண்ணத்தை நாட்டிலே பரப்பி விட்டார்கள். இரண்டு ஆடவர்கள் ஓடினார்கள், நான் கையிலே தடியை எடுத்ததும்! அவ்வளவு பயம்! பேய் என்ன செய்துவிடுமோ, என்ற பயம்.

தேளை அடித்துவிட்டு வெளியே வந்து அப்பாவைக் கூப்பிட்டேன். அவர் என் வார்த்தையிலே நம்பிக்கை வைத்து உள்ளே வர நெடுநேரம் பிடித்தது. இதற்குள் வீட்டு வாசற்படி அருகே ஒரு சிறு கூட்டம். வழக்கப்படி என் கணவருக்கு உபசார மொழிகள்; அவரும், வழக்கமான நடிப்பைச் செய்தார். தேளைக் காட்டினேன், அப்பாவுக்கு. அப்போதுதான் நம்பினார், உண்மையில் என்னைத் தேள் கொட்டியதனால்தான் அலறினேன் என்று. ஏதோ மருந்து தடவினார்கள். அன்றைய பொழுதை ஒருவாறு கழித்தேன். மறுதினம் நான் என்ன சொல்லியும் கேட்காமல், என் தகப்பனார் நிர்ப்பந்தப்படுத்தி, என்னை ஒரு கிராமத்துக்கு அழைத்துச் சென்றார். பேய் ஓட்டும் இடமாம் அது. அங்கு போய், ஒரு பெரிய குடிசையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, நானும் என் அப்பாவும் எங்களுக்கு உதவியாக வந்த வேலைக்காரியுடன் தங்கினோம்; கிராமம் சிறிய அளவு; ஆனால் பச்சைப் பசேல் என்று இருக்கும். எந்தப் பக்கம் திரும்பிப் பார்த்தாலும் அழகான தோப்புகள். சுற்றிப் பார்க்குமிடங்களிலெல்லாம், விதவிதமான பட்சிகள். இந்தக் கிராமத்திலே தங்கியிருந்த ஒரு பக்கிரி, பேயோட்டுவதில் நிபுணன் என்று அந்தப் பக்கத்து வதந்தி. அதனால், என் தகப்பனார் என்னை அங்கு அழைத்து வந்தார். எனக்கு ஒரு துளியும் விருப்பம் கிடையாது, அங்கு போக. என் கணவரிடம், நான் புறப்படுவதற்கு முன்பு, தனியாகச் சந்தித்து, என் மனதைத் திறந்து பேசினேன். "எப்படியோ நமது இன்ப வாழ்வு கெட்டுவிட்டது. என் சகவாசம் உங்களுக்குப் பிடிக்கவில்லை. கல்லென்றாலும் கணவன் தான், புல்லென்றாலும் புருஷன் தான். ஆனால் நீங்கள் என் தலைக்குப் பாறையாக இருக்கிறீர்! ஆகையால், என் மனமும் முறிந்துவிட்டது. தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளுங்கள், நான் தடை செய்யவில்லை என்று உம்மிடம் கூறினேனே, அன்று இரவு, அதோடு என் அல்லல் தீர்ந்துவிட்டது என்றுதான் நான் மனமார நம்பினேன். அன்று இரவு, நீங்களும் என் துக்கத்தை எல்லாம் துடைத்து விடுவதுபோலவே நடந்து கொண்டீர். ஆனந்தமாகக் கழிந்தது அந்த இரவு; என் கடைசி இன்ப இரவு அதுதான். இனி அத்தகைய இரவு கிடையாது. மறுதினமே உங்கள் மனம் மாறிவிட்டது. இனி நானும், நம்பிக்கையை இழந்துவிட்டேன். கட்டின தாலி ஒன்றுதான் இனி நாம் கணவன் மனைவி என்பதைக் காட்டும் அறிகுறியாக இருக்கும். உம்மை நான் இழந்துவிட்டேன். இனி மறுபடியும் பெற முடியாது. பெறவும் முயலமாட்டேன். உம்மை நான் வேண்டிக் கொள்வதெல்லாம் ஒரே ஒரு விஷயமாகத்தான். உங்கள் காலில் விழுந்து கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என்னை அந்தப் பேயோட்டும் இடத்துக்கு அனுப்பாதீர்கள். அங்கே எத்தனை புண்யகோடி இருப்பார்களோ? என்னென்ன பழி பிறக்குமோ, என்ற பயம் என்னைக் கொல்கிறது. என்ன காரணமோ தெரியவில்லை, ரங்கத்தை அவள் புருஷன் கைவிட்டார் என்று மட்டும் உலகம் கூறட்டும்; வேண்டுமானால் ரங்கத்தைப் பேய் பிடித்துக் கொண்டதால், அவள் கணவன், இரண்டாம் கலியாணம் செய்து கொண்டான், ரங்கம் மாட்டுக் கொட்டகையிலே கிடக்கிறாள் என்று பேசட்டும்; ரங்கம் கெட்டு விட்டாள் என்று பேசுவதற்கு மட்டும் இடம் தரவேண்டாம். குடிவெறியிலே உளறினான் அந்தக் கோணல் சேட்டைக்காரன், பூஜாரி, புண்யகோடி. அதற்கு எனக்கு விபசாரிப் பட்டம் சூட்டினீர். இப்போது என்னை வேறோர் பேயோட்டியிடம் போகச் செய்கிறீர் சிகிச்சை பெற. இங்கு போவதால், என் மீது அபவாதம் ஏற்பட்டால் என் கதி என்ன ஆவது? விபசாரி என்று உலகம் தூற்றுவதற்குமா நான் இடமளிக்கவேண்டும்? என்னைப் பிடித்த பேய் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். அதை ஓட்டுவதற்கு முயற்சி எடுப்பதாகக் கூறி என் மானத்தை ஓட்டி விடாதீர். தயவு செய்யுங்கள். என்னிடம், இனி நீர் பேச வேண்டாம்; அன்பு காட்ட வேண்டாம்; தோட்டத்திலேயே கிடக்கிறேன். நான் ஏதேனும் தொல்லை தருவேன் என்று பயம் ஏற்பட்டால், என்னைக் கட்டிப் போடுங்கள். ஆனால், விபசாரி என்ற பழி பிறக்கும்படியான மார்க்கத்திலே என்னைத் துரத்தாதீர். பாவி புண்யகோடி, நான் மயக்கமுற்றுக் கிடந்த நேரத்தில், என் மச்சம் முதலிய அடையாளத்தைக்கூடக் கண்டு கொள்ளவும், கேவலமாகப் பிறகு பேசவும் துணிந்தான். இப்போது நீங்களும் வரமுடியாது என்று கூறுகிறீர். என்னை என் தகப்பனாருடன் அனுப்பி வைக்கிறீர். அங்கே என்னென்ன பழி பிறக்குமோ என்றே நான் பயப்படுகிறேன். வேண்டாம். நாம் சில காலமாக இருந்து வந்த இன்பத்தின் பேரால் உம்மைக் கேட்கிறேன். என்னை இங்கேயே இருக்கவிடுங்கள்" என்று நான் கண்ணீரும் கம்பலையுமாக இருந்துகொண்டு கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:08 am

உன் அப்பாவின் மனம் இளகவில்லை. போக முடியாது என்று பிடிவாதம் செய்து பார்த்தேன். பிடிவாதம் செய்யச் செய்ய பேயின் சேஷ்டை அதிகமாகிவிட்டது என்றே என் அப்பாவும் ஊராரும் நம்பினார்கள். ஆகவே, பலாத்காரமாக என்னை அழைத்துக் கொண்டு போனார்கள் அந்தக் கிராமத்துக்கு. என் முயற்சிகள் தோற்றுவிட்டன. என்ன செய்வது இனி, எப்படியாவது நான் தொலைய வேண்டும் என்பதுதான் உன் அப்பாவின் எண்ணம். நானும் தற்கொலை செய்து கொள்வது என்று ஏதேதோ யோசித்தேன் மகனே! எனக்கு மனம் வரவில்லை சாக. என்னை அவரே கொல்லட்டுமே, நானாக ஏன் சாகவேண்டும் என்று எண்ணினேன். ஆடுகூடத் தானாக வெட்டுபவனிடம் போய் நிற்பதில்லையே! அதனுடைய சக்திக்குத் தகுந்தபடி, தப்பித்துக் கொள்ளக் கொஞ்சம் போராடித்தானே பார்க்கிறது. என்னைக் கொட்டிய தேள், சுலபத்திலே கொல்லப்படுவதற்கு இடந்தரவில்லையே. ஒளியவும், நழுவவும் எவ்வளவு முயற்சி செய்ய வேண்டுமோ அவ்வளவும் செய்து பார்த்துவிட்டதே. கொடுமைக்கு ஆளான நான் மட்டும் ஏன் அவருக்கு வாழ்க்கைப் பாதை அமைத்துக் கொடுப்பதற்காகச் சாகவேண்டும். பேராசைக்காரர், கொடிய சுபாவக்காரர், வஞ்சகர் உன் அப்பா, ஏன் அவர் இன்னும் ஒருபடி முன்னேறி, கொலைகாரராகக்கூடாது! என்னைக் கொல்லட்டும். நானாகச் சாகக்கூடாது. நான் வாழத்தான் வேண்டும். அது வேதனை நிரம்பிய வாழ்க்கையாக இருந்தாலும் பரவாயில்லை. நான் உயிரோடு உலாவுவதே அவருக்கும் அந்த ஆள் விழுங்கித் தங்கத்துக்கும் வேதனை தரும் அல்லவா! அது போதும்! என்று எண்ணினேன். எனக்குச் சாகத் துணிவு இல்லை என்பதல்ல, இஷ்டம் இல்லை. உயிரோடு இருந்து போராட வேண்டும் என்று தோன்றிவிட்டது. இனி அவர் என் கணவரல்ல, என்னை வஞ்சித்து வாழ விரும்புவர். இனி அவருடைய வஞ்சனையுடன் போராடி, ஒரு பெண்ணை அவ்வளவு எளிதாகத் தோற்கடிக்க முடியாது என்பதைக் காட்ட வேண்டும் என்று உறுதி பிறந்தது. ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமே எனக்குப் பயம். அதாவது, என் மீது பழி ஏதும் ஏற்படாமலிருக்க வேண்டுமே என்பதுதான். தவறி நடந்து விட்டாள், வழுக்கிவிட்டாள் என்ற வதந்தியைப் போல, பெண்களை நாசமாக்கக்கூடிய கருவி வேறு இல்லையே. ஊர் முழுதுமல்லவா, எதிரியாகிவிடும் அப்போது. அந்த ஒரு பழி மட்டுமே வராதபடி பாதுகாத்துக் கொண்டு, உன் தகப்பனாரை நேருக்கு நேர் தைரியமாக நின்று சந்தித்து, "உன்னுடைய அதிகாரத்துக்கும் அளவு உண்டு. உன் கொடுமையைச் சகித்துக் கொண்டு இருந்தாக வேண்டும் என்று ஒன்றும் இல்லை" என்று கூற வேண்டும் என்று தோன்றிற்று. என் மீது விபச்சாரிப் பட்டம் சூட்டிவிட்டால் எனக்கு அந்தத் தைரியம் வராது. நெஞ்சிலே களங்கமில்லாததால் ஒரு வேளை தைரியம் வந்தாலும், ஊரார் என்னையே தூற்றுவார்கள். பெண், விபசாரியாகிவிட்டாள் என்ற பேச்சைக் கேட்ட மாத்திரத்திலே ஆண்கள் ஆளுக்கொரு கல்லைக் கையிலே தூக்கிக்கொள்வார்கள். அந்தப் பெண்ணின் வீட்டு மக்கள், உற்றார் உறவினர் இவர்கள் மட்டுமா, வழியில் வருகிறவன் போகிறவன் கூட அல்லவா வசை புராணம் பாடுவான் தைரியமாக. எல்லோரும் சேர்ந்து அந்தப் பெண்ணின் உயிரை வாங்குவார்களே தவிர, அவளுடைய விபசாரம் சாத்யமானது ஒரு ஆணினால்தானே என்று யோசிக்கமாட்டார்கள். யோசித்தாலும் அவனிடம் கொஞ்சம் அச்சத்தோடுதான் பேசுகிறார்கள். அவனே கூட என்ன சொல்கிறான். "என்னை என்னடா மிரட்டுகிறீர்கள்; போய் அவளைக் கேளுங்கள். உங்கள் வீட்டிலே உள்ளவளை அடக்கி வைக்காமல் என்னிடம் வம்பு செய்தால் என்ன அர்த்தம்? அவள் இஷ்டப்பட்டாள். நான் என்ன சன்யாசியா? போடா போ" என்று கூறிவிடுகிறான். ஆகையால் விபசாரி என்ற பழிமட்டும் என்மீது தாக்காதபடி பாதுகாப்பு ஏற்பட்டுவிட்டால் போதும் என்பதிலே நான் அவ்வளவு கவலைப்பட்டேன். அன்புக்கு அன்பு திரும்பக் கிடைக்கும் என்று காத்திருந்து பார்த்தேன். உன் அப்பா என்னை மிருகமாக்கினார். அவர் மீது வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினேன். நான் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! ஊரார் என்னையா கோபிப்பார்கள்! பேயைத்தானே திட்டுவார்கள். சாதாரணமான மற்ற பெண்கள் பெற முடியாத உரிமை எனக்குப் "பேய்" மூலமாகக் கிடைக்கிறது. ஏன் நான் அந்த உரிமையைப் பயன்படுத்திக் கொள்ளக்கூடாது? நான் விரும்பினால் திடீரென்று பாய்ந்து சென்று உன் அப்பாவின் தலைமீது தண்ணீர்ச் செம்பை வீச முடியும். அவர், 'ஐயோ! ஐயோ!' என்று அலறும் சங்கீதத்துக்கு ஏற்றபடி ஆனந்தத் தாண்டவமாட முடியும்! என்ன செய்வார் அவர்? குய்யோ முறையோ என்று கூவுவார். மக்கள் கூடுவர், வாயில் வந்தபடி அவர்களையும் ஏசலாம், யார் என்ன செய்ய முடியும்! நான் தான் பேய் பிடித்தவளாயிற்றே! திடீரென்று தங்கத்தின் காதைக் கடிக்கலாம்; உன் அப்பாவின் காலை ஒடிக்கலாம்; செய்து வைத்திருக்கும் சாப்பாட்டைக் குப்பையிலே எடுத்து வீசலாம். குப்பைமேட்டின் மீது வீட்டுச் சாமானை எறியலாம்; கதவுகளை உடைக்கலாம்; துணிகளைக் கொளுத்தலாம்; நடு இரவில் நல்ல தூக்கத்திலே உன் அப்பா இருக்கும் போது பயங்கரமாக கூச்சலிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம். என் வாழ்வைப் பாழ்படுத்திய உன் அப்பாவின் வாழ்விலே ஒரு நிமிஷ நேரம் கூட நிம்மதி இல்லாதபடி செய்யலாம்.

என்ன செய்தாலும், ஊரார் என்னைத் தூற்றமாட்டார்கள். "ரங்கம் பாவம் படாதபாடு படுகிறாள்! எவ்வளவு நல்ல பெண். பாழாய்ப் போன பேய் பிடித்துக் கொண்டு அவளை ஆட்டிப் படைக்கிறது" என்று பேசுவார்களே தவிர, என்மீது கோபிக்கமாட்டார்கள். பேயைச் சாக்காக வைத்துக் கொண்டு உன் அப்பாவின் மீது படை எடுக்க முடியும். மிஞ்சிப் போனால், கைகாலைக் கட்டிப் போடுவார்கள். போடட்டுமே! இரண்டு நாட்கள் சும்மா இருப்பது. பிறகு தானாகக் கட்டுகளை அவிழ்த்துவிட்டுவிடுவார்கள். பிறகு ஆரம்பிக்கிறது பேயாட்டத்தை! இதுபோல எண்ணினேன்! எண்ணுவதிலேயே கூட இன்பம் பிறந்தது. சொத்துக்கு ஆசைப்பட்டு தங்கத்தைக் கலியாணம் செய்து கொள்ளத் தந்திரமான திட்டமிட்டு, அந்தத் திட்டத்தை நிறைவேற்றிக் கொள்ள, நான் ஒருத்தி தடையாக இருக்கிறேன் என்று அறிந்து, என்னைப் பேய் பிடித்துக் கொண்டதாகக் கூறினார், உன் அப்பா. அன்பினால் அவருடையை மனதை என் பக்கம் திருப்ப முயன்றேன், முடியவில்லை. இனி எந்தப் பேயின் பேரில் சாக்கிட்டு அந்தப் பேராசைக்காரர், என்னைக் கொடுமை செய்தாரோ அந்தப் பேயின் சாக்கை வைத்துக் கொண்டே, நான் அவருடைய வாழ்வைக் கொட்டிக் கொட்டி வேதனையை உண்டாக்குவது என்று தீர்மானித்தேன். மகனே, உன் தாய் எப்படி இவ்வளவு கல்நெஞ்சு கொண்டாள் என்று யோசிக்கிறாயா? அப்படி நான் எண்ணினது தவறு என்று கூறுகிறாயா? என் மீது தவறு இல்லையடா, கண்ணா!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:08 am

ஒருநாள் ரங்கோனில், நான் சமையற்கட்டில் இருந்தபோது, ராதா, 'ஆ!' என்று அலறும் சத்தம் கேட்டு, "என்னடி கண்ணு!" என்று கேட்டுக் கொண்டே கூடத்துக்கு வந்தேன். ராதா உதட்டிலே ரத்தம் இருக்கக் கண்டேன். "என்னடியம்மா?" என்று கேட்டேன். "அம்மா, வேடிக்கைக்காக எடுத்து விளையாடிக் கொண்டிருந்தேன் சீதாவை. அந்தத் துஷ்டை பாரம்மா, என் உதட்டைக் கடித்துவிட்டாள்" என்றாள் ராதா. சீதா, ஒரு பெண்ணல்ல, கிளி; ராதா அன்புடன் வளர்த்து வந்த கிளியை, அவள் ஏதோ கொஞ்சம் சீண்டிவிட்டாள்; அதற்குக் கிளி அவள் உதட்டைக் கடித்துத் தண்டனை தந்தது. வேடிக்கை கூட கொஞ்சம் வேதனையை உண்டாக்கினால் பச்சைக் கிளிக்கும் பதைபதைப்பு வருகிறது. என்னிடம் உன் அப்பா விளையாடவில்லை; என் வாழ்வைச் சிதைக்கும் விளையாட்டிலே ஈடுபட்டார். கொடுமை செய்தார், கேவலம், பணத்தாசை பிடித்து. எனக்குக் கோபமும், பழிவாங்க வேண்டுமென்ற உணர்ச்சியும் வராதா? யாருக்கும் ஏற்படக்கூடிய எண்ணம்தான் அது. ஆகவே, நான் கொண்ட எண்ணம் தவறு அல்ல, என்னை அவர் தவிக்கவிட்டுத், தான் சுகமாக வாழ்வதற்காக என்னைக் கேவலப் படுத்தத் துணிந்தார். ஏன் நான் அவருடைய சுகத்தைக் கெடுக்கக் கூடாது? அதிலும் எனக்குப் பேயின் தயவினால் கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் வேறு துணையாக இருக்கிறது. என் வாழ்வுக்கு ஆனந்தம் தர வேண்டிய கடமை அவருக்கு. அவரோ அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டார். பேய் கெட்டது என்பார்கள். அந்தப் பேய் செய்யக்கூடிய பெரிய உபகாரமும் இருப்பதை எண்ணிப்பார்த்தபோது நான் சந்தோஷப்பட்டேன்.

கிராமத்திலே சில நாட்கள் தங்குவது, பேயோட்டுவதாகச் சொல்லும் புரட்டனின் பூஜை முதலிய வீண் காரியங்களைக் கொஞ்ச நாட்களுக்குச் சகித்துக் கொள்வது, அவனாகப் பார்த்துப் பேய் நீங்கிவிட்டது என்று கூறும்படி ஒழுங்கான முறையிலே நடப்பது, பிறகு வீடு திரும்புவது. அங்கேயும் சில தினங்கள், நிம்மதியடைந்ததாகவே பாவனை செய்வது, பிறகு திடீரென்று உன் அப்பாவின் மீது பழி வாங்கும் காரியத்தைத் துவக்குவது என்று தீர்மானித்தேன். அதாவது, என்னை நீக்கி விட உன் அப்பா என் மீது ஏவிய 'பேய்' இருக்கிறதே, அதனை அவருடைய கொடிய குணத்துக்காக அவரைத் தண்டிக்கும்படி, அவர் மீது, நான் ஏவிவிடுவது என்று திட்டமிட்டேன். இந்த எண்ணத்தால் எனக்கோர் வகையான ஆனந்தம் உண்டாயிற்று. என் அப்பா, "ஒரே நாள் பூஜையிலே, பிரக்யாதிபெற்ற பக்கிரி, குழந்தையின் முகத்திலே, களை வரும்படி செய்துவிட்டான்" என்று கூறிக்கொண்டார், என் முகப் பொலிவைக் கண்டு. "பைத்தியக்கார அப்பா! உன் மகளைப் பேயும் பிடித்துக் கொள்ளவில்லை, பூதமும் தூக்கிக் கொண்டு போகவில்லை; உன் மருமகனின் வஞ்சகம், என்னை இந்தக் கதிக்கு ஆளாக்கிவிட்டது" என்று நான் சொன்னால் அவர் நம்புவாரா? அந்தப் புரட்டன் சொன்ன அத்தனை புளுகுகளையும் நம்பினார்.

பேயோட்டும் பக்கிரி, முதல் தரமான புரட்டன் என்பது அவனைப் பார்த்த முதல் நாளே எனக்கு விளங்கிவிட்டது. என்னைப்போலப் பேய் பிடித்த பல பெண்கள் அங்கே வந்திருந்தார்கள். அந்தக் கிராமத்திலேயே, அவனுடைய வீடுதான் மாடி வீடு, மற்றவை குடிசைகள். பக்கிரி, ஏழைகளுக்கு இலவசமாகப் பேயோட்டுவது, பணக்காரர்களிடம் கூட வற்புறுத்துவதில்லை. இஷ்டப்பட்ட காணிக்கை செலுத்தலாம் என்று கூறுவது, இந்த முறையிலே நடத்தி வந்தான், வியாபாரத்தை. இதிலே, அவன் கையாண்ட தந்திரம் என்னவென்றால், ஏழைகளுக்கு இரண்டொரு நாட்களிலே பேய் ஓடும்படி செய்துவிடுவான். அல்லது, இன்னும் இரண்டு வருஷம் கழித்துவந்தால்தான் இந்தப் பேயை ஓட்ட முடியும், என்று சொல்லி அனுப்பிவிடுவான். பணக்காரர்கள் பேயோட்டிக் கொள்ளச் சென்றாலோ, கொஞ்சத்திலே விடமாட்டான். நாற்பது நாள் முழுக்கு, முப்பது நாள் கோயிலைச் சுற்றுவது, பத்து நாள் பச்சிலைத் தைல ஸ்நானம்; பிறகு பூஜை. அதன் பிறகு விசேஷ பூஜை. இப்படி மாதக்கணக்கிலே கடத்திக் கொண்டே போவான். ஒரு வாரத்துக்கொரு முறை வெள்ளி, பொன் ரட்சைகள் தயாரித்துத் தந்தபடி இருப்பான். இதற்கெல்லாம் பிடிக்கும் செலவு தவிர, வேறு பணம் தானாகக் கேட்பதில்லை என்று கூறி இதன் மூலமாகவே, பத்து காணி நல்ல நஞ்சையும், ஊருக்குப் பக்கத்திலேயே ஒரு தோப்பும் வாங்கிவிட்டான். மாடி வீடு கட்டிக் கொண்டான். மூன்று பெண்களை நல்ல இடத்தில் கலியாணம் செய்து கொடுத்தான். அந்த மருமகப் பிள்ளைகளைப் பெரிய உத்தியோகஸ்தர்களின் தயவு தேடி நல்ல வேலையில் அமர்த்தி விட்டான். இவ்வளவும் 'பேயோட்டும்' புரட்டிலே சாதித்துக் கொண்டான். மகாராஜாக்களும் மிட்டாதாரர்களும் ஹைகோர்ட் ஜட்ஜுகளும் தந்த சர்டிபிகேட்டுகள் ஒரு கத்தை வைத்துக் கொண்டிருக்கிறான். பெயர்தான் பக்கிரியே தவிர, ஆள் ஜமீன்தாரரைப் போலத்தான். கையிலே காப்பு, காதுகளிலே கடுக்கன், கழுத்திலே தங்கத்தால் சங்கிலி, அதிலே ஏதோ ஒரு பெரிய ரட்சை, கல்லிழைத்தது, பூஜை அறையிலே வெள்ளிப் பாத்திரங்கள், இவ்வளவு வைபவம் இருந்தன. இரவு பன்னிரண்டு மணிக்கு அவனிடம் "பராசக்தி" பிரசன்னமாகிப் பேசுமாம். அந்தப் பக்கிரி, என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு, மரியாதையுடன் "உட்காரம்மா! உட்கார்!" என்றான், உட்கார்ந்தேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:08 am

"இதோ குழந்தை! இதை வாயில் போட்டுக்கொள்" என்று ஏதோ ஒரு சூரணத்தைக் கொடுத்தான். இனிப்பாகத்தான் இருந்தது. "கசப்பு அதிகமாம்மா?" என்று கேட்டான். "இல்லையே! தித்திப்பாகத்தான் இருந்தது" என்று நான் சொன்னேன். பிறகு அவன் அப்பாவைப் பார்த்து, "பயப்பட வேண்டாம். குழந்தைக்குப் பேய் முற்றிவிடவில்லை. சர்க்கரை எப்போது இனிக்கிறதோ, அதிலிருந்து நிலைமை மோசமில்லை என்று தெரிகிறது. சில பெண்களுக்குச் சர்க்கரை கூடக் கசப்பாகிவிடும். பேயின் சேஷ்டையால்" என்று சொன்னான். உன் அப்பாவையே சட்டை செய்யப் போவதில்லை இனிமேல் என்று தீர்மானித்துவிட்ட எனக்கு, இந்தப் புரட்டனிடம் என்ன பயம்? நான் பேசலானேன்.

"சர்க்கரை இனிப்பாகத்தானே ஐயா இருக்கும். அதற்கும் பேய்க்கும் என்ன சம்பந்தம்?"

"சர்க்கரை இனிப்பாகத்தான் இருக்கும் குழந்தே! ஆனால் அதுகூடக் கசப்பாகிவிடுவதுண்டு."

"ஆமாம்! அதற்குப் பேய் பிடிக்கவேண்டியதில்லையே. பல நாள் ஜுரம் அடித்தால் வாய் கசக்கிறது."

"ஜுரம் வேறு, பேய் பிடிப்பது வேறு."

"ஆமாம்! அதை யார் இப்போது மறுத்தார்கள். பேய் பிடித்திருக்கிறதா இல்லையா என்று தெரிந்துகொள்வதற்குச் சர்க்கரை இனிப்பா, கசப்பா என்று பார்ப்பது ஒரு பரீட்சையா? வேடிக்கையாக இருக்கிறதே!"

"குழந்தே! நீ இப்படியே சந்தோஷமாக இருந்தால் போதுமம்மா."

"அது கிடக்கட்டும்; எத்தனை நாள் ஆகும் பேய் போக?"

"சீக்கிரத்திலேயே முடியும், கவலைப்படாதே."

"பேய் ஓடுமா, ஓட்டுவீர்களா?"

"ஓடும் பேயும் இருக்கிறது, ஓட்டவேண்டிய பேயும் இருக்கிறது."

"ஓட்டினாலும் ஓடாத பேய் கிடையாதோ?"

"பக்கிரி ஓட்டினால் ஓடாத பேய் கிடையாதம்மா. பக்கிரியா ஓட்டுகிறான், பராசக்தியல்லவா ஓட்டுகிறாள்."

"பராசக்தி, உனக்கு அருளைத் தந்தது ஏன்?"

"என் பூஜா பலன்."

"என்னைப் பேய் பிடித்துக் கொண்டது ஏன்?"

"உன் வினை!"

"என் வினையை, உன் பூஜை பலன் தீர்த்துவிடுமா?"

இப்படிப் பேச்சு முற்றிக் கொண்டே போயிற்று, எங்கள் இருவருக்கும். பதில் கூற முடியாமல் திணறினான், பக்கிரி.

ஆனால், அந்தத் திணறலை மறைக்க, அடிக்கடி 'பராசக்தி, பராசக்தி' என்று உரக்கக் கூவிக்கொண்டிருந்தான். பேயோட்டும் பக்கிரியின் வாயை அடைத்துவிட்டோ ம் என்று ஒரு மகிழ்ச்சி எனக்கு. ஆனால், அந்தப் புரட்டன் சாமான்யமான பேர்வழியல்ல. கொஞ்சநேரம் கண்களை மூடிக்கொண்டிருந்துவிட்டு, பிறகு என் தகப்பனாரைப் பார்த்து, "ஐயா உன் மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், இன்னது என்று பராசக்தி கூறிவிட்டாள். மற்றப் பேய்களை ஓட்டுவதற்கும் இதற்கும் அதிக வித்தியாசமுண்டு. மற்றப் பேய்கள் முரட்டுத்தனம் செய்யும். இந்தப் பேய் முரட்டுத்தனம் செய்யாது. எப்போதுமே, முரட்டுத்தனம் செய்கிற பேயைச் சுலபத்தில் ஓட்டிவிடலாம். இது அவ்வளவு சுலபமல்ல" என்றான்.

"தங்களாலே முடியாது போகுமா?" என்று தயவு கலந்த குரலிலே கேட்டார் அப்பா.

"முடியும்! ஆனால் கொஞ்ச நாளாகும்" என்றான் அவன்.

"என்ன விதமான பேய்?" என்று கேட்டார் அப்பா.

"அதைத்தான் கண்டுபிடிக்கக் குழந்தையிடம் பேசிப் பார்த்தேன். எப்படிப் பேசிற்று பார்த்தீர்களா? மளமளவென்று பேச்சு இருந்தது. கேள்விமேல் கேள்வி போட்டுவிட்டது" என்றான் பக்கிரி.

"ஆமாம்!" என்றார் என் அப்பா.

"அது குழந்தையின் பேச்சா? பேசுமா அப்படி?" என்று கேட்டான் புரட்டன்.

"சாதாரணமாக சங்கோசப்படுகிற குழந்தைதான். இங்கே தான் கொஞ்சம் தாராளமாகப் பேசிற்று. ஆனால் துஷ்டப் பேச்சு இல்லையே?" என்றார் என் அப்பா.

"துஷ்டப் பேச்சுப் பேசாது. முரட்டுப் பேய்களல்லவா கெட்ட வார்த்தை பேசும். அப்படிப்பட்ட பேய்களை ஒரு மண்டல காலத்திலேயே ஓட்டிவிடலாம். இது சாதுப் பேய்!" என்றான் புரட்டன்.

"சாதுப் பேய் என்று சாமான்யமாகச் சொல்கிறீர். வீட்டிலே நாங்கள் பட்ட கஷ்டம் எவ்வளவு தெரியுமா?" என்று சோகத்துடன் சொன்னார் அப்பா.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:09 am

"பழமொழியே இருக்கிறதல்லவா, சாது மிரண்டால் காடு கொள்ளாது என்று, அதுபோல நடந்திருக்கும்" என்று விளக்கம் கூறினான், அந்தப் பூஜாரி.

"சாதுப் பேய், கொஞ்ச நாளிலே போகாதா?" என்று கேட்டார் அப்பா. "ஆமாம்" என்றான் பக்கிரி. "அது ஏன்?" என்றார் அப்பா. "முரட்டுப் பேயாக இருந்தால், போக முடியாது, நீ என்ன செய்யமுடியும் என்று கொக்கரிக்கும். உடனே அதற்குத் தரவேண்டிய தண்டனையைத் தந்து, துரத்திவிடலாம் சுலபத்தில். ஆனால், இந்தச் சாதுப் பேய்க்கு ஆயிரம் விதமான சமாதானம் சொல்லி, காரணம் காட்டி, இது கேட்கிற கேள்விகளுக்குப் பதில் கூறி முடிய, நாள் அதிகம் பிடிக்கும் ஐயா! உமது மகளைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய், சாது மட்டுமல்ல, சாமர்த்தியமாகப் பேசக் கூடியது. பேய்களிலே பலரகம் உண்டு. கொலைகாரப் பேய், முரட்டுப் பேய், பொய் பேசும் பேய், வயிற்று வலிப் பேய், அழுகிற பேய் என்று இதிலே ஆயிரத்துக்கு மேலே 'ரகம்' இருக்கிறது" என்றான் புரட்டன்.

"பேயிலே மட்டுந்தானா? மனிதர்களிலும் நீ சொன்ன அவ்வளவும் இல்லையா?" என்று நான் கேட்டேன்.

"இல்லை என்று யார் சொன்னார்கள்? மனிதர்களில் பல ரகம்; அதுபோலத்தான் பேய்களிலும். மனிதர்கள் இறந்து போய், பேய் உருவடைந்தார்கள் என்பதுதான் எங்கள் சித்தாந்தம். பேய் உருவிலே இருக்கும்போதும், மனிதராக இருக்கும்போது இருந்த சுபாவம் இருக்கும். அதனாலேதான் பேய்களிலே பல ரகம் இருக்கிறது" என்றான் அந்த புரட்டன்.

"எந்தெந்த ரகமான பேய் பிடித்துக் கொள்கிறதோ அந்தந்த சுபாவம், பேய் பிடித்துக் கொண்ட ஆசாமியிடம் இருக்கும் என்று சொல்கிறீரா?" என்று நான் கேட்டேன்.

"அதேதான். போன வருஷம் இங்கே ஒரு பெண் வந்திருந்தாள், பேயோட்டிக்கொள்ள. சதா சர்வ காலமும் பாடிக் கொண்டே இருப்பாள்" என்றான் பூஜாரி.

"சங்கீதப் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று நான் கேலி செய்தேன்.

"உண்மையாகத்தானம்மா. அந்தப் பெண் இருந்த ஊரிலே, ஒரு பையன் அருமையான சங்கீதம் பாடுவான். அதிருஷ்டம் இல்லாததால் ஆதரிப்பவர் கிடைக்கவில்லை. கடைசியில் தூக்கிட்டுக்கொண்டு இறந்துவிட்டான். பேயானான்; பெண்ணைப் பிடித்துக் கொண்டான்" என்று பேயின் சரித்திரமே கூறலானான்.

"அப்படியானால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேய்..." என்று நான் கேட்டேன்.

"எழுத்துக்கு எழுத்து பொருள் கேட்டு, வாதாடிப் பேசவும், எதிரியின் வாயை அடக்கிப் பேசவும், வக்கீலால்தானே முடியும்" என்றான் அவன்.

"அப்படியானால், என்னை வக்கீல் பேய் பிடித்துக் கொண்டதோ?" என்று சிரித்துக் கொண்டே கேட்டேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:09 am

மனிதர்களிலே பலவகை இருப்பது போலவே பேய்களிலும் உண்டு என்றும், எந்தெந்தச் சுபாவமுள்ள பேய் பிடித்துக் கொள்கிறதோ, அதற்குத் தக்கபடி பேய்ப் பிடித்துக் கொண்டவர்கள் நடந்து கொள்வார்களென்றும், பூஜாரி சொன்னதுடன், நான் வாதாடவும், காரணம் கேட்கவும் தொடங்கியது கண்டு, என்னை ஒரு வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்தது கண்டு, நான் சிரித்தேன். ஆனால், அந்தப் புரட்டனின் பேச்சை மெய்யென நம்பினவர்கள், அவன் சொன்னதிலே சூட்சமம் இருக்கிறதென்று கூறினார்கள். என்ன சூட்சமத்தைக் கண்டார்களோ நானறியேன். ஒவ்வொருவர் ஒவ்வொரு கதை கூறி, பூஜாரியின் பேச்சைப் பலப்படுத்தினர். இந்தப் புரட்டனின் பேச்சைத் தட்டிப் பேச முயல்வது வெட்டி வேலை என்று எனக்குத் திட்டமாகத் தெரிந்துவிட்டது. ஆகவே, நான் அவன் வார்த்தையை ஏற்றுக் கொண்டவளாகவே நடித்து வரலானேன். அதனாலே, எனக்கு நஷ்டமும் இல்லை; கஷ்டமும் கிடையாது.

பேயோட்டும் பக்கிரி, பணக்காரன், ஏழை என்ற இரு வகையினருக்காக இரண்டு தனித்தனி முறை வைத்துக் கொண்டிருந்தான் என்று கூறினேனல்லவா? அது போலவே முரட்டுப் பேய்களை விரட்ட ஒரு முறையும், சாதுப் பேய்களை ஓட்ட மற்றோர் விதமும் கையாண்டு வந்தான். வக்கீல் பேய் பிடித்துக் கொண்டது என்று தீர்மானித்து விட்டதால் என்னை ஓட்டுவதற்குக் கையாண்ட முறை, அதிக உபத்திரவமற்றதாகவே இருந்தது. சூடிடுவது, நாளைக்குப் பத்து வேளை குளத்தில் மூழ்கச் செய்வது போன்ற கடுமையான முறைகள் கிடையாது. காலையிலே எலுமிச்சம் பழம் தேய்த்து ஸ்நானம்; கொஞ்ச நேரம் சூரிய நமஸ்காரம்; பிறகு, ஒரு மைல் அளவுக்கு வேப்ப மரங்கள் நிறைந்திருக்கும் சாலையிலே உலாவுவது; பகலில், யாராவது ஏதாவது கதை படிப்பது, நான் கேட்டுக் கொண்டிருப்பது, மாலையிலே பூஜையில் உட்காருவது, இரவு படுக்கப்போகும் முன்பு, அவன் தரும் 'மந்தரித்த' விபூதியைப் பூசிக் கொள்வது என்ற இந்த விதமாக அமைந்திருந்தது, பேயோட்டும் முறை. பெரிய இடம், ஏதோ குமுறல் நேரிட்டுவிட்டது, கொஞ்ச நாளைக்கு மன அமைதியுடன் இருந்து வந்தால், பழையபடி சுபாவமாக இருக்கும் என்று அவன் யூகித்துக் கொண்டான். அதனாலேதான், என் விஷயத்திலே, ஒரு நல்ல வைத்திய சிகிச்சை போன்ற பேயோட்டும் முறையைக் கைக்கொண்டான். என்னிடம் பணம் இருக்கவே, அவன் 'பேயின் முறையில் நடந்து கொள்ளாமல் மனிதத் தனத்துடன்' நடந்துகொண்டான். பாவி, சிலரை இம்சையே செய்துவிட்டான். ஏழைகளுக்கு இரும்புக் கோலால் சூடு, பணக்காரர்களுக்கு மெல்லிய மிருதுவான 'பிரம்பி'னால் தடவிக் கொடுப்பது. ஏழைகளைப் பிடித்திருக்கும் பிசாசு முரட்டுக்குணம் படைத்தது; பணக்காரர்களைப் பிடித்திருப்பதோ, நாசூக்கான சாதுவான பிசாசு! இப்படி அந்தப் புரட்டன் பிசாசுகளிலே கூட இரண்டு வர்க்கங்களைப் பிரித்து வைத்தான்.

கிராம வாழ்க்கை, நல்ல காற்று, குளிர்ந்த நீரில் குளித்தல், காலை மாலை உலவுதல், பகலில் சந்தோஷமாகப் பொழுது போக்குவது ஆகியவற்றால் எனக்கு ஆரோக்கியம் அதிகரித்தது; அழகும் அதிகரித்தது. அப்பா பார்த்து பார்த்து ஆனந்தப்படுவார். "முகத்திலே இப்போதுதானே பழைய களை இருக்கிறது" என்பார். பேயோட்டியும் தன்னுடைய பூஜை வெற்றிபெற்று வருவதாகக் கூறினான். "ஆனால் முதலியார்! அம்மாவைவிட்டு அந்தப் பேய் அடியோடு போய்விடவில்லை. மறுபடியும் மறுபடியும் வருகிறது. அதனாலேதான், சந்தோஷமாக இருந்து கொண்டே வருகிறார்கள்; திடீரென்று என்றைக்கேனும் ஓர் நாளைக்கு முகத்தைச் சுளித்துக் கொண்டு, யாரிடமும் பேசாமல் இருக்கிறார்கள்" என்றான். அவன் அறியான் காரணத்தை! எனக்கு உன் அப்பாவின் தொல்லையின்றி, வேடிக்கையாகக் கிராமத்திலே வாழ்வது மன நிம்மதியைக் கொடுத்தது என்ற போதிலும், ஒவ்வோர் நாள், எனக்கு உன் அப்பாவும் தங்கமும் ஊரிலே... என்ற கவனம் வரும்; உடனே முகம் சுருங்கும், ஒருவரிடமும் பேசமாட்டேன்; சாப்பாடும் பிடிக்காது. தூக்கமும் வராது; படுக்கையில் புரள்வேன். இதைத்தான், சோகம், பேயின் சேஷ்டை என்று பேயோட்டி கூறுவது. அந்தச் சோகத்தை அவனுடைய பன்னீர் கலந்த விபூதி போக்கிவிடுவதாக அவன் எண்ணிக் கொள்வான். உண்மையில், என் மனக் கஷ்டத்தைப் போக்கியது அவன் தந்த விபூதியல்ல. துளசியின் தயவால் ஓரளவு என் துக்கம் குறையும்; துளசி அவனுடைய இரண்டம் தாரம். கொஞ்சம் படித்தவள், ஏழை வீட்டுப் பெண்; அவனிடம் பணம் இருக்கவே, வயது ஏறுமாறாக இருந்தும், வாழ்க்கைப்பட்டவள். அதனாலே, அவள் குறைபட்ட மனதுடன் இருப்பதாக யாருக்கும் காட்டிக் கொண்டதில்லை; என்னிடம் கூட! நான் உண்மையைக் கண்டுபிடிக்கவே பத்து நாளாயிற்று. மனதிலே இருந்த குறையை மறைத்துக் கொண்டு, முகத்தை மலரச் செய்து கொண்டு துளசி வாழ்ந்து வந்தாள். பெரும்பாலும் பகலிலே எனக்குக் கதை படிப்பவள் அவள் தான். அந்தக் கதைகளில் இடையிடையேதான் அவள் தன்னுடைய சுயசரித்திரத்தையும் எனக்குத் தெரிவித்தாள்; அழுது கொண்டல்ல, சிரித்துக் கொண்டே. அந்தச் சிரிப்பு சந்தோஷம் மேலிட்டு வந்ததல்ல; உலகிலே நடக்கும் அக்ரமங்களைக் கண்டு கேலி செய்யும் சிரிப்பு அது! துளசிதான் என் சோகத்தைப் போக்குவாள், பல கதைகள் கூறி.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:10 am

"அக்கா! உங்களுக்கெல்லாம் நூறு பேய் பிடித்துக் கொண்டாலும் பயமில்லை; என் புருஷர் ஓட்டிவிடுவார். ஆனால் என்னைப் பிடித்துக் கொண்டிருக்கும் பேயை ஓட்டவே முடியாது" என்பாள் துளசி. "அது என்னடி துளசி! அப்படிப்பட்ட பிரமாதமான பேய்? ஜெகம் புகழும் உன் புருஷனால் கூட ஓட்ட முடியாத பேயும் உண்டா?" என்று நான் கேட்பேன்.

"அவர் எல்லாப் பேயையும் ஓட்டுவார் அக்கா! ஒரே ஒரு பேயை மட்டும் அவரால் ஓட்டமுடியாது" என்று துளசி பெருமூச்சுடன் கூறுவாள். "அது என்ன பேய்?" என்று நான் கேட்பேன். "அதுவா? இதோ பார் அக்கா! அந்தப் பேய் என்னைப் பிடித்துக் கொண்டதற்குச் சாட்சி" என்று கூறிக்கொண்டே தன் தாலியை எடுத்துக் காட்டிவிட்டுச் சிரிப்பாள். மிகக் கஷ்டமான நிலைமையை மிகச் சாமர்த்தியமாகத் துளசி சமாளித்துக் கொண்டு வந்தாள். மனதுக்குத் துளியும் பிடிக்காத கணவனிடம், ஒரு துளியும் அதிருப்தியை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல் நடந்து கொள்வது சாமான்யமான காரியமா? துளசியின் துணை எனக்கு மிகுந்த நன்மை செய்தது. என் மனதிலே தோன்றும் எண்ணங்களை அவளிடம் கொட்டுவேன். அவள் தன் குறைகளை என்னிடம் கூறுவாள். பத்து நிமிஷம் படிப்பாள்; அரைமணி நேரம் அதை ஒட்டிப் பேசுவாள். இப்படி, ஒவ்வோர் தினமும் நிம்மதியாக இரண்டு மணி நேரம் இருப்போம். "அக்கா என் மூத்த மகள் வருகிறாள் வியாழக்கிழமை" என்று ஒரு சேதியுடன் வருவாள். "உன் மூத்த மகளா போடி போ! உன் வயிற்றிலேதான் இன்னமும் ஒரு பூச்சி புழுகூட..." என்று நான் கேலி செய்வேன். மகனே! நான் கொஞ்சம் பெருமையுடனும் கொஞ்சம் கர்வத்துடனும் அதைச் சொல்வேன். ஏன் தெரியுமா? அந்தச் சமயம்தானடா கண்ணே, நீ என் கருவில் உதித்தது! நான் 'தலை முழுகி' இரண்டு மாதமாகி விட்டது. இன்னும் எட்டே மாதம் இருக்கிறது கட்டித் தங்கத்தைப் பெற! அந்த சந்தோஷத்திலே நான் இருந்ததால், துளசியைக் கேலி செய்வேன். "உனக்கு ஏதடி குழந்தை?" என்று. துளசி சொல்வாள், "ஒன்றுக்கு மூன்று, நமக்கு ஒரு துளி உபத்திரவமும் இல்லாதபடிக்கு அந்த உத்தமி பெற்று வைத்துவிட்டுப் போய்விட்டாள்" என்பாள். அதாவது பேயோட்டும் பக்கிரியின் முதல் தாரத்துக்கு மூன்று பெண்கள். அதைக் குறிப்பிடுவாள் துளசி, வேடிக்கையாக.

இரண்டு மாதம் நான் தலைமுழுகவில்லை! மகனே! அந்த வார்த்தையின் முழுப்பொருளும் அந்தப் பொருள் தரும் களிப்பும் ஆண்களுக்குத் தெரியாது. அவர்களால் அந்தப் பொருளை முழுதும் புரிந்துகொள்ளவோ ரசிக்கவோ முடியாது. அது பெண்களின் வாழ்க்கையில் மகத்தானதோர் வெற்றி! அந்த வெற்றிதான், அவர்கள் வாழ்க்கையோடு போராடிப் போராடிப் பெறுவது. வேறு எதைக் கண்டார்கள்? பல வெற்றிகள் இருந்தால் மகிழ்ச்சி பங்கிட்டுவிட வேண்டிவரும். அது ஆண்களுக்கு! ஒரு புதிய தோட்டம் வாங்கினோம், புது வீடு கட்டினோம், புது வியாபாரம் செய்தோம் என்று எத்தனையோ வகை வகையான வெற்றிகள் ஆண்களுக்குக் கிடைக்க வழி இருக்கிறது. பெண்களுக்கு அது இல்லை! அவர்கள் அடையக்கூடிய ஒரே வெற்றி, குழந்தை! தலை முழுகவில்லை என்றால், அந்த வெற்றிக்கு அருகதையாகிவிட்டார்கள் என்று பொருள். இன்ப வாழ்க்கையின் 'பலனைக்' காணப் போகிறார்கள்! பெண், மனைவியானாள்! மனைவி தாய் ஆனாள்! பூத்துக் காய்த்துக் கனி குலுங்கிற்று என்பதுபோல. அத்தகைய வெற்றி எனக்குக் கிடைக்க இருந்தது. மாதம் இரண்டு; வாயிலே லேசான கசப்பு! மாலை வேளைகளில் கொஞ்சம் தலைசுற்றும். கைகளிலே ஒருவிதமான ஓய்ச்சல்! ஆமாம்! துளசிக்கு அது தெரிந்துவிட்டது. ஆணா பெண்ணா என்று தர்க்கிப்பாள், என்னிடம். நான் பிடிவாதமாகப் பெண் என்பேன். அவள், வேடிக்கையாக என் வயிற்றண்டை தன் காதை வைத்துக்கொண்டிருந்துவிட்டு, "அக்கா! நிச்சயமாகப் பெண்ணல்ல! ஆண்" என்று கூறுவாள். "உன்னிடம் பேசினானா?" என்று நான் கேட்பேன். "ஆமாம்" என்பாள் துளசி. "எனக்கு ஒரு பெண் கொடு மாமி! என்று கேட்டிருப்பான்" என்று நான் அவளைக் கேலி செய்வேன். அவள் சளைக்கமாட்டாள். "அது போலத்தான் கேட்டான், ஆகட்டுமடா கண்ணா! நீ வளர்ந்து பெரியவனாகி, தாத்தாவாகிறபோது வந்து கேள், பெண் தருகிறேன் என்று நான் சொன்னேன்" என்பாள். அதாவது தன்னைக் கிழவனுக்கு மண முடித்தார்கள் என்பதைப்பற்றி வேடிக்கையாகக் குறிப்பிடுவாள். இப்படி நாங்கள் பொழுது போக்கி வந்தோம். அப்பாவுக்கோ இந்தச் சேதி மனக்குழப்பத்தை உண்டாக்கிவிட்டது; அந்தக் குழப்பத்தை பேயோட்டுபவன் அதிகப்படுத்தி விட்டான். பேய் பிடித்திருக்கும் சமயத்திலே, கருத்தரித்தால் நல்லதா கெட்டதா என்று அப்பா கேட்க, அவன் ஒரு விதத்திலே நல்லது, ஒரு விதத்திலே கெட்டது என்றான். எந்த விதத்திலே நல்லது, எந்த விதத்திலே கெட்டது என்று அப்பாவும் கேட்கவில்லை, அவனும் சொல்லவில்லை! "கெட்டதாக முடியாதபடி..." என்று பயந்து போய் அப்பா கூறினார். அவன் ஏதோ ஆண்டவனின் அபிப்பிராயத்தை நேரடியாகக் கண்டு அறிந்தவன்போல, "ஆண்டவன் ஒரு குறையும் செய்யமாட்டார்" என்று தைரியம் கூறிவிட்டு, "இருந்தாலும், எட்டாம் மாதம் வரையில் குழந்தை இங்கேயே இருக்கட்டும். அப்போதைக்கப்போது இருக்கும் நிலவரத்துக்குத் தக்கபடி பூஜைகள் செய்து வருகிறேன்" என்று சொல்லிவிட்டான். ஆகவே, நான் தங்கத்தின் எதிரே சென்று, "பைத்தியக்காரி! நான் தாயாகப் போகிறேன். என்னை இனிச் சாமான்யமாகக் கருதிவிடாதே! வாரிசு பிறக்கப்போகிறது, ஜாக்ரதை" என்று பேச்சினால் அல்ல, பார்வையாலேயே தெரிவித்துவிட வேண்டும் என்று ஆசை கொண்டதற்கு அணை போடப்பட்டுவிட்டது. இன்னும் ஆறு மாதங்களுக்கு இங்கே இருந்தாக வேண்டும்! துளசி இருக்கிறாள், பொழுதுபோக்குக்கு. ஆனால், தங்கம் அங்கே இருக்கிறாள் தலைகால் தெரியாமல் கர்வத்தோடு. நான் 'தலை முழுகாது' இருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்ததும், அவளுடைய 'கர்வம்' குலையும் அல்லவா? அதைப் பார்க்கவேண்டுமே என்ற ஆவல், என்னைத் தூண்டிற்று. "இருக்கட்டும், இருக்கட்டும், வருகிறேன் தங்கம்!" என்று துளசியைத் தங்கமாகக் கொண்டு பேசினேன்! அதிலே ஒரு சந்தோஷம் எனக்கு!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:10 am

"அவரிடமிருந்து கடிதம் வந்ததா?" இந்தக் கேள்வியை ஒவ்வோர் நாளும் கேட்பேன் அப்பாவிடம். ஏன் கேட்கிறேன் என்பதைத் தெரிந்துகொள்ளாமலேயே, அவர் "வந்தது - இல்லை" என்று இரண்டிலோர் பதில் கூறுவார். "நான் தலை முழுகாமல் இருப்பதுபற்றி அவருக்கு எழுதினீர்களா? அவர் என்ன பதில் எழுதினார்?" என்று நானாக அப்பாவை எப்படிக் கேட்பது. துளசிதான் இதற்கும் யோசனை சொன்னாள்.

"அக்கா! நீயேதான் அவருக்குக் கடிதம் போடுவதுதானே" என்றாள்.

"போடி, போ! எப்படி? வெட்கமாக இல்லையா எழுத?"

"எழுத வெட்கப்பட்டுப் பலன்?"

"நான் மாட்டேன் போடி, எப்படி இதை எழுதுவது?" இப்படி கொஞ்ச நேரம் வாதாடினேன் துளசியிடம். (என்னைத் தான் வக்கீல் பேய் பிடித்துக் கொண்டிருக்கிறதே!) பிறகு அவள் ஒரு யோசனை சொன்னாள். அதாவது "சாப்பாடு சரியாகப் பிடிக்கவில்லை, வாய் கசப்பாகவும் இருக்கிறது, யாராவது லேடி டாக்டரைக் கேட்டு, கர்ப்பவதிகளுக்கு வலிவு தரும் டானிக் வாங்கி அனுப்பி வைக்கவேண்டும் என்று ஒரு கடிதம் எழுதிப் போடு; அதிலிருந்து அவர் தெரிந்து கொள்கிறார்" என்றாள். சாமர்த்தியமல்லவா அவள் யோசனை. அதன்படியே கடிதம் போட்டேன். நாலாம் நாள் பதில் வந்தது. கவர்! நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். துளசி கவரைக் காட்டினாள். அவருடைய கையெழுத்துதான். என் முகம் மலர்ந்தது. பதில் கிடைத்துவிட்டது, நாலே நாளில். கடிதம் போட்டோ ம்; உடனே பதில் கடிதம் அனுப்பி இருக்கிறார். என் மீது அவருக்கு கோபம் இல்லை; அன்பு ஏற்பட்டுவிட்டது. ஆமாம், தாய் ஆகப் போகிறேன். இனியுமா என்னிடம் வெறுப்பாக நடந்து கொள்வார். அவசரமாகச் சாப்பிட்டுவிட்டு வந்து கடிதத்தைப் படித்தாகவேண்டும் என்ற ஆவல். அவசரமாகச் சாப்பிட்டாலோ துளசி கேலி செய்வாள். ஆகவே, கடிதத்தைப் படிக்கவேண்டுமென்பதிலே அவசரம் கொள்ளாதவள் போல, மெள்ளச் சாப்பிடவேண்டியிருந்தது. சாப்பாடு முடிந்து கூடக் கொஞ்சம் காலதாமதம் செய்தேன்; இல்லையானால் அவள் கேலி பேசுவாள்.

"துளசி! என்ன எழுதி இருக்கிறார் கடிதத்தில் என்று பார்க்கலாம், கொடு" என்று கேட்டேன்; கொடுத்தாள். கடிதமல்லடா கண்ணே! கடுவிஷம் இருந்தது அதிலே!

"தலைமுழுகிவிட்டேன்." இவ்வளவே, அவர் அனுப்பிய கடிதத்தில் இருந்தது!

மலர்க்கூடையை ஆவலாக எடுக்கும்போது, அதனுள்ளிருந்து கருநாகம் சீறிக் கிளம்புவதுபோல, உன் அப்பா அனுப்பிய கடிதத்தைப் பிரித்ததும் தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகம் தோன்றக் கண்டேன். அவசரமாகக் கடிதத்தைத் திருப்பி மறுபக்கம் பார்த்தேன். ஒரு எழுத்தும் இல்லை. மறுபடியும் ஒரு முறை கடிதத்திலே தீட்டப்பட்டிருந்த வாசகத்தைக் கண்டேன். மெள்ள அதனை உச்சரித்தேன். உள்ளம் வெந்தது. துளசி வெடுக்கெனக் கடிதத்தை எடுத்துக் கொஞ்சம் தெளிவாக படித்தாள், தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை. என் செவியிலே அந்தச் சொற்கள் விழுந்த உடனே கண்ணீர் கன்னத்திலே விழலாயிற்று. தலைமுழுகிவிட்டேன்! யாருடைய வார்த்தை அது? என் கணவரின் வார்த்தை. என்னைத் தலைமுழுகிவிட்டாராம் என் கணவர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 17, 2010 1:11 am

இதைவிட வேறு வேதனை தரும் சொல் பெண்ணுக்கு ஏதடா மகனே! நான் தாயாகப் போகிறேன் என்பதைப் பெருமையுடன் அவருக்கு நான் தெரிவிக்க, அவர் என்னைத் தலைமுழுகி விட்டதாகக் கடிதம் எழுதுகிறார். நான் அனுப்பியது பழம்! அவர் எனக்கு விஷம் அனுப்பினார்! என்னைத் தலைமுழுகிவிட்டாராம்; நான் தலை முழுகாமலிருக்கிறேன் என்ற செய்தியைத் தெரிவித்ததும், எனக்குக் கிடைத்த பதில் இது மகனே! எதற்கும், எப்போதும் வேடிக்கையாகவே பேசிவிடும் துளசிகூடத் திடுக்கிட்டுப்போய் நின்றாள், அந்தக் கடிதத்தைக் கண்டு. "என்ன அக்கா இது?" என்று கேட்டுக்கொண்டே என்னை அணைத்துக் கொண்டாள். "துளசி! நான் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறேன். என் கணவன் என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானிக்கிறார். அலட்சியப்படுத்தினார், இம்சை செய்தார். இப்போது அடியோடு என்னைக் கைவிட்டுவிடத் தீர்மானித்து விட்டார். தலைமுழுகிவிட்டேன் என்றல்லவா எழுதி இருக்கிறார், துளசி! அது என் மானத்துக்கு மரண தண்டனையடி! நான் கர்ப்பவதியாக இருக்கிறேன். இது, நான் குற்றம் செய்தவள் என்பதற்கு அத்தாட்சி என்று கூறுகிறார். ஐயோ! துளசி! நான் என்ன செய்வேன். அவருடைய வாசகம் என்னைப் படுகுழியில் தள்ளும் பயங்கர ஏற்பாடு. நான் அவருக்குத் துரோகம் செய்துவிட்டேன், நான் ஓர் தூர்த்தை என்று தூற்றுகிறார். உன்னை நான் நேசிக்க முடியாது, குடும்பத்திலே உன்னோடு சேர்ந்து வாழமுடியாது, காப்பாற்றவும் முடியாது, நீ எக்கேடோ கெட்டுப் போ! என்று கூறுவது கொடுமை என்பார்கள் துளசி! அவர் கூறுவது அதனினும் கொடுமையானது. விபசாரி! என்று கூசாமல் பழி சுமத்தி என் மானத்தைப் பறித்து உலகம் என்னை இழிவாகப் பேசும் நிலையை உண்டாக்குகிறார்.

"அவளை நான் மனைவியாக இனிக் கொள்ளமுடியாது. அவள் ஓர் விபசாரி" என்று என் கணவர் உலகுக்கு உரைக்கிறார்" என்று நான் கூறி விம்மி விம்மி அழுதேன். "அழாதே அக்கா! அழுது அழுது முகமும் சிவந்துவிட்டதே! இப்படி அழுதால் உடம்புக்கு நல்லதா? அத்தான் ஏதோ வெறியிலே வீணாக எதையோ எழுதிவிட்டார். அதற்காக நீ இப்படிப் பதைக்கலாமா? ஆண்களின் சுபாவம் இப்படித்தான். பெண்ணின் மனம் புண்ணாகுமே என்பது குறித்து எண்ணியும் பார்ப்பதில்லை. அத்தானுடைய அக்ரமமான வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதாக நினைத்துக் கொண்டு நீ வருத்தப்படாதே. உலகிலே, புத்தியுள்ளவர்களும் சில பேர் இருக்கிறார்கள். இப்படி வெறி பிடித்து, உளறுவதை உண்மை என்று எல்லோருமே ஏற்றுக் கொள்வார்களா?" என்று துளசி என்னென்னவோ சமாதானம் கூறிப் பார்த்தாள்; வழக்கமாக அவள் பேச்சிலே காணப்படும் விறுவிறுப்பு அன்று இல்லை. அவள் எனக்குச் சமாதானம் கூறினாளேயொழிய அவளாலேயே தலைமுழுகிவிட்டேன் என்ற வாசகத்தை சகித்துக் கொள்ள முடியவில்லை. 'பாவிகள்! பழிகாரர்கள்! கொலைகாரர்கள்! பெண்ணை மண்ணாக எண்ணிக் கொள்ளும் முட்டாள்கள்! இருதயமற்றவர்கள்' என்று பொதுவாக ஆண்களைத் திட்டிக் கொண்டிருந்தாள். ஆனால் அவ்வளவும் என் கணவருக்காகவே வீசப்பட்டவை. எனக்கோ உலகமே இருள்மயமானது போலாகிவிட்டது. கடலிலே விழுந்து, அலைகளால் தாக்கப்பட்டு, கை கால்கள் சோர்ந்து போய் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதை ஒருவாறு தெரிந்து கொள்ளக் கூடிய அளவு மட்டும் உயிர் இருக்கும் நிலைமை எனக்கு. நான் சின்னவளாக இருக்கும்போது, பல்லியிடம் சிக்கிக் கொண்ட பூச்சியைப் பார்த்திருக்கிறேன். உடலில் ஒரு பாகம் பல்லியின் வாயிலே சிக்கி விடும். பூச்சிக்கு அது தெரிந்துவிடும். மரணத்தின் பிடியிலே இருப்பதுதான் தெரியுமே தவிர அதிலிருந்து மீண்டு கொள்ளும் வலிவு இராது. அந்த நிலையிலே தன்னால் தப்பித்துக் கொள்ள முடியுமா, அதற்குத் தகுந்த சக்தி இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எண்ணிக்கொண்டிருக்க முடியுமா? எப்படியாவது சாவின் பிடியிலிருந்து விடுபடவேண்டும் என்பதற்காகத் துடிக்கும், நெளியும், தலையைத் தூக்கும். பல்லியின் வாயிலிருந்து வெளிப்படுவதற்காகத் தன் பலத்தை முழுவதும் உபயோகித்துப் பார்க்கும். ஒவ்வொரு துடிப்பும் பூச்சியின் வலியை நாசமாக்கவும் உயிரைப் போக்கவும் பயன்படுமேயொழிய விடுதலைக்கு வழியாக முடியாது. பல்லிக்குப் பூச்சியைக் கொல்லும் வேலையும் மிச்சமாகும். தன் பிடியை இறுக்கிக் கொண்டு பல்லி அசைவற்று இருக்கவேண்டியதுதான். பூச்சி போராடுவதாகக் கருதிக் கொண்டு சுவரிலே மோதுண்டு, தானாகச் சாகும். பிறகு பல்லி அதனைத் தின்றுவிடும். அது போன்ற நிலையிலே நான் இருந்தேன். என் கணவரின் கிராதகம் என்ற பிடியிலே சிக்கிக் கொண்ட நான் என் நிலைமையைச் சரிப்படுத்திக் கொள்ள எடுத்துக் கொண்ட ஒவ்வொரு முயற்சியும் என் வேதனையை வளர்க்கப் பயன்பட்டதேயொழிய, என் துயர் நீக்கும் துணையாகவில்லை. நான் என்ன செய்வேன்! கணவனே விபசாரி என்று தூற்றத் துணிந்த பிறகு பேதைப் பெண்ணால் என்ன செய்ய முடியும்? ஆழமான கிணறு தேடுவதன்றி வேறு வேலைதான் என்ன இருக்கிறது?



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Feb 19, 2010 3:02 am

மகனே! தங்கத்தை அவர் கலியாணம் செய்து கொள்ளக் கூடாது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று முயன்றேன். அதன் பயன், பேய் பிடித்தவள் என்று ஊராரே கூறும்படியானதுதான். சரி! இனித் தடுத்துப் பயனில்லை. ஆண்களின் மனம் வானம் போன்றதுதான். அதிலே பல நட்சத்திரங்கள் இருந்தே தீரும். ஒளிவிடும் மதி இருந்தாலும், மின்மினியும் இருக்கும், கருமேகமும் இருக்கத்தான் செய்யும். ஆகவே, ரங்கம் இருக்கும்போது தங்கம் ஏன் என்று கேட்டுப் பயன் இல்லை. அவர் தாராளமாகத் தங்கத்தையும் கலியாணம் செய்துகொள்ளட்டும் என்று எண்ணி, என் மனதைத் திடப்படுத்திக் கொண்டேன். அதன் விளைவுதான் மின்னல்போல் தோன்றி மறைந்த, அவருடைய அன்பு! அந்த அன்பு, அன்று இரவு மட்டுமே நிலைத்திருக்க முடிந்தது. அந்த இன்ப இரவு, உன்னையும், உலகிலே எந்தப் பெண்ணும் கேட்டுச் சகித்துக் கொள்ள முடியாத பழியையும், எனக்குத் தந்தது. பாழ் மனமே! ஏன் நீ, அன்று அவரிடம் தஞ்சம் புகுந்தாய்? கெஞ்சி அவருடைய கொஞ்சு மொழியைப் பெற்றாய், களித்தாய்! இதோ தருகிறாரே நஞ்சு, அது உயிரைப் போக்கினாலும் பரவாயில்லையே, மானத்தை அல்லவா மாய்க்கிறது' என்று மெள்ளக் கூறிக் கொண்டே குமுறினேன். விசாரத்தை விநாடியில் துடைத்துவிடும் துளசியும், என் நிலையைக் கண்டு, அழுதுகொண்டே தன் முந்தானையால் என் கண்களைத் துடைக்க முடிந்ததே தவிர, எனக்குச் சமாதானம் கூற முடியவில்லை. எப்படி முடியும்?

'விபசாரி!' என்ற பழி சுமத்தப்பட்ட பிறகு, பெண் எப்படி உலகை ஏறிட்டுப் பார்க்க முடியும்? உலகிலே, எத்தனையோ விதமான அக்ரமத்தைச் செய்து வயிறு வளர்ப்பவன் கூட, ஒரு பெண் விபசாரி என்றாகிவிட்டால், கேவலப்படுத்துவான்; கண்டிப்பான். எவ்வளவு கொடூர சுபாவம் இருந்தால் அவர் அப்படிச் சொல்ல மனம் துணிவார் என்பதை நீ இப்போது எண்ணிப் பார். ஏதோ தாய் தன் மகனிடம் கூறுகிறாள் என்று எண்ணவேண்டாம். துர்ப்பாக்கியவதி ஒருத்தி கருணையும் நீதியும் தெரிந்த ஒரு உத்தமனிடம் முறையிடுகிறாள் என்று எண்ணிப் பதில் சொல்லு. வேண்டாமடா மகனே! நீ பேச வேண்டாம். உன் கண்ணீர் போதும், எனக்கு அந்தப் பாஷை தெரியும். இம்சைக்கு ஆளான எனக்கு கடைசிக் காலத்திலேனும், அந்தக் கண்ணீர் ஆதரவு தருகிறது என்று ஆறுதல் கிடைத்ததே அதுவே போதும்.

என் கலியாணம் நடந்த போது, இரவு காலட்சேபம் வைத்தார்கள். நான் பெண்களுடன் உட்கார்ந்து கொண்டு இருந்தேன். ஆனால் அவருடைய முகத்தையும் அடிக்கடி பார்த்துக் கொண்டே இருந்தேன். காலட்சேபக்காரர், சீதா கலியாணக் கதையைக் கூறினார். அப்போது அவர் பெண்களைப் பற்றிப் பேசிய பெருமையை, நாளெல்லாம் கேட்கலாமா என்று தோன்றிற்று. அவ்வளவு விளக்கி விளக்கிப் பேசினார், விடிய விடிய. உன் அப்பாவோ அந்தக் காலட்சேபக்காரரின் பேச்சைக் கேட்டு அப்படியே சொக்கிவிட்டார். இராகத்தோடு காலட்சேபக்காரர், 'பெண்ணுக்கு வேண்டியது என்ன? பூஷணமா? போதாது, சம்பத்தா? போதாது. அழகான பங்களாவும் தோட்டமும் இருந்தால் போதுமா? போதாது. வைரமாலையும், பச்சை வளையலும், கல்லிழைத்த ஒட்டியாணமும் கிடைத்தால் போதுமா? போதாது! காசி கொரநாடு சேலை வாங்கிக் கொடுத்தால் போதுமா? போதாது! வேறே என்ன வேண்டும்? தொட்டுத் தாலிகட்டிய புருஷனின் மட்டற்ற அன்பு வேண்டும். அந்த அன்புதான் அவளுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது" என்று கூறி முடித்தார். சபையிலே, மனைவியை அடிக்காவிட்டால் கை மரத்துப் போய்விடும் என்று எண்ணிக் கொண்டவர்கள்போல வாழ்ந்து வந்த புருஷர்கள் கூட, கரகோஷம் செய்தார்கள். காலட்சேபக்காரர் கூறியது நியாயமான பேச்சு என்பதை ஆமோதிப்பதற்காக உன் அப்பா கரகோஷம் செய்யவில்லை. அவருடைய கண்கள், என் கண்களைச் சந்தித்தன! அவருடைய புன்னகை காலட்சேபக்காரர் சொன்னது சரி என்று மட்டுமல்ல, "இதோ பார்! எந்த அன்பு தான் பெண்களுக்கு அஷ்ட ஐஸ்வரியத்தைவிட மேலானது என்று காலட்சேபக்காரர் கூறுகிறாரோ, அந்த அன்பை நான் இதோ தருகிறேன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக