புதிய பதிவுகள்
» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Today at 13:33

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Today at 13:26

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Today at 0:20

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 23:32

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 22:49

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 20:31

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 20:19

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 20:18

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 20:15

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 20:08

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 20:03

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 20:01

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 19:59

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 19:58

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 19:56

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 18:40

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:14

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 15:44

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:31

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 14:55

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 14:26

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:09

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 14:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 13:24

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:56

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:44

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:34

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:37

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:40

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:35

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:32

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 20:23

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 18:31

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 23 Sep 2024 - 14:20

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon 23 Sep 2024 - 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon 23 Sep 2024 - 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Mon 23 Sep 2024 - 0:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
57 Posts - 68%
heezulia
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
22 Posts - 26%
வேல்முருகன் காசி
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
2 Posts - 2%
viyasan
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
234 Posts - 42%
heezulia
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
217 Posts - 39%
mohamed nizamudeen
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
27 Posts - 5%
Dr.S.Soundarapandian
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
21 Posts - 4%
prajai
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
13 Posts - 2%
வேல்முருகன் காசி
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
11 Posts - 2%
Rathinavelu
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
7 Posts - 1%
Guna.D
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
7 Posts - 1%
mruthun
கணவனின் காதலி Poll_c10கணவனின் காதலி Poll_m10கணவனின் காதலி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணவனின் காதலி


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue 9 Feb 2010 - 6:14

கணவனின் காதலி St-hea10


கடந்த ஒரு வாரமாகவே சிந்துஜா கவனித்துக் கொண்டுதானிருக்கிறாள். வழக்கமாக அலுவலகம் செல்லும் நேரத்தை விட ஒரு மணி நேரம் முன்னதாகவே கிளம்பி மாலையிலும் நேரம் கழித்தே வீடு திரும்புகிறான், அவள் கணவன் திவாகர்.

கேட்டால் அலுவலகத்தில் `ஆடிட்' என்கிறான்.

அவனது பொய் இரண்டே நாளில் வெளுத்து விட்டது.

தன் கணவருடன் வேலை பார்க்கும் தனபாலை சிந்துஜா தற்செயலாக சந்தித்தபோது "ஆடிட்டா... அப்படியொன்றும் இல்லையே'' என்று உண்மையைக் கூறி விட்டார், அவர்.

தனக்கும் திவாகருக்கும் கல்யாணமாகி கடந்த ஓராண்டில் நுழையாத இந்த பொய் இப்போது எதற்கு? எதற்காக இந்த ஆடிட் நாடகம்?

போதாக் குறைக்கு சிந்துஜாவிடம் எதுவும் சொல்லாமலேயே இரண்டு நாள் முன்பு வங்கியிலிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் வேறு எடுத்திருந்தான், திவாகர்.

அவள் கேட்டதற்கு, நண்பன் ஒருவனுக்கு அவசரமாகப் பணம் தேவைப்பட்டது என்று ஏதேதோ கூறிச் சமாளித்து விட்டான்.

"ஒன்றன் பின் ஒன்றாக இது மற்றொரு பொய். ஆனால் ஏன்... எதற்கு?''

ஒன்றும் புரியாமல் சிந்துஜா குழம்பித் தவித்த வேளையில், அவளின் நெருங்கிய கல்லூரித் தோழி கல்பனா எதிர்பாராமல் அவளைத் தேடி வந்து சொன்ன ஒரு சேதி அவளை அதிரப் பண்ணி விடடது.

"அடையாறு காந்திநகர் ரோட்டிலே போய்க் கிட்டிருந்தேன் சிந்து. அப்ப உன் வீட்டுக் காரரும், நல்ல சிவப்பா அழகான ஒரு பொண் ணும் ஒரு வீட்டு முன்னால பைக்ல வந்து இறங்கினாங்க. அவங்க பேசிக்கிட்டதிலிருந்து அந்தப் பொண்ணு பேரு திவ்யான்னு தெரிஞ்சது. ஏதோ பேசிக்கிட்டே ரெண்டு பேரும் அந்த வீட்டுக்குள்ளே போயிட்டாங்க''.

சட்டென்று ஏதோ பொறி தட்டினாற் போலிருந்தது, சிந்துஜாவுக்கு. "அந்தப் பொண்ணோட பேர் என்ன சொன்னே?'' என்று கேட்டாள்.

"திவ்யா''

இப்போது கொஞ்சம் புரிய ஆரம்பித்தது. `ஒருவேளை அந்தப் பெண்தானோ இவள்?' ஒரு கணம் திகைத்தவள், அந்த திவ்யா வீட்டின் கதவு எண், அடையாளத்தைத் தோழியிடம் நன்கு கேட்டு தெரிந்து கொண்டாள்.

"இந்தக் காலத்தில் எந்த ஆம்பிளையையும் நம்ப முடியாது சிந்து. கொஞ்சம் கவனமாயிரு'' என்று எச்சரிப்பது போல் சொல்லிவிட்டு கிளம்பினாள், தோழி கல்பனா.

அவள் சென்று வெகு நேரமான பின்பும், வேறு எந்த சிந்தனையும் ஓடவில்லை, சிந்துஜாவுக்கு.

`அந்த திவ்யா சேலத்திலிருந்து சென்னைக்கு எப்போது வந்தாள்? அவளை என் கணவர், எங்கு எப்போது சந்தித்தார்? ஒருவேளை நேரத்தோடு இவர் ஆபீஸ் கிளம்பியது அவளை சந்திக்கத்தானா? அந்த பத்தாயிரம் ரூபாயைக் கூட அவளுக்குத்தான் இவர் கொடுத்திருப்பாரா?'

எல்லாமே சந்தேகத்தைத் தூண்டும் கேள்விகள் தான்! எனினும் தன் கணவர் தனக்குத் துரோகம் செய்து விடுவார் என்று சிந்துஜாவால் நினைக்க இயலவில்லை. அதேசமயம் திவ்யாவின் விஷயத்தில் எதையும் கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதும் சரியென்று தோன்றவில்லை.

அப்படியென்றால் இதில் என்ன முடிவு எடுப்பது? அவளுக்குள் குழப்பம்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை.

வழக்கமாக விடுமுறை தினமென்றால் வீட்டை விட்டு எங்கும் செல்லாத திவாகர் அன்று காலை பதினொரு மணிக்கெல்லாம் நண்பன் ஒருவனைப் பார்த்து வருவதாக வெளியே கிளம்பி விட்டான்.

சிந்துஜாவுக்கு சந்தேகம். `திவ்யாவைச் சந்திக்கத்தான் அவன் செல்கிறானா?'

கணவன் பைக்கில் கிளம்பிய சிறிது நேரத்தில் வீட்டைப் பூட்டி ஆட்டோ ஒன்றைப் பிடித்து நேராக அடையாறு காந்திநகர் போகச் சொன்னாள்.

அங்கே கல்பனா குறிப்பிட்ட அந்த வீட்டின் எதிரே இறங்கி முகவரி சரி பார்த்தவள், மெல்ல வாயிற்படியேறி கதவருகே சென்றாள்.

அப்போது உள்ளேயிருந்து ஒரு குரல். சந்தேகமேயில்லை. அது அவள் கணவன் திவாகரின் குரலே தான்!

"வேண்டாம் திவ்யா. ஆஸ்பத்திரியிலே நீ இருந்தப்ப சீக்கிரமா ஆபீசுக்கு கிளம்பி உன்னைப் பார்க்க வந்ததிலே ஏற்கனவே என் மனைவி சந்தேகத்தோட இருக்கா. அவ சந்தேகம் மேலும் அதிகரிக்கும்படியா நாம எதையும் இப்ப அவகிட்ட சொல்லக் கூடாது''.

"ஏங்க... எனக்கு ஒரு வேலை வாங்கித் தந்து எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கீங்க. உங்க குடும்பத்திலே என்னால குழப்பம் வரக்கூடாதுங்க. உங்க மனைவி கிட்ட உண்மையைச் சொல்லிட்டா அவங்க ஏன் சந்தேகப்படப் போறாங்க?''

இப்போது பேசியதுதான் திவ்யாவோ? பதிலுக்கு மீண்டும் திவாகரின் குரல்.

"இல்லே திவ்யா. நீயும், நானும் முந்தி காதலிச்ச விஷயம் ஏற்கனவே என் மனைவிக்குத் தெரியும். நானே அவகிட்ட சொல்லியிருக்கேன். நாம எதையாவது சொல்லி நீதான் திவ்யான்னு தெரிஞ்சா அவ்வளவுதான்... நம்ம பழைய காதல் மீண்டும் தொடருதுன்னு நிச்சயம் அவ நம்பிடுவா. பிறகு அவ என்ன முடிவு எடுப்பான்னு சொல்ல முடியாது. ஒண்ணு மட்டும் நிச்சயம். என் சிந்துவை விட்டு ஒருநாள் கூட என்னால வாழ முடியாது.''

கணவன் தன்மேல் வைத்திருக்கும் அன்பை நினைத்துப் பூரித்துப் போனாள், சிந்துஜா. அதற்கு மேலும் வெளியே நிற்காமல் கதவைத்தட்டி, "நான் உள்ளே வரலாமா?'' குரல் கொடுத்தாள். சற்றும் எதிர்பாராமல் அந்த இடத்தில் தன் மனைவியைக் கண்டு திகைத்துப் போனான் திவாகர். "வா சிந்து. நீ எப்படி இங்கே'' தடுமாறினான்.

இனி அவளிடம் அவன் எதை மறைக்க முடியும்?

"இந்த திவ்யாவுக்கும், எனக்குமிருந்த காதல் நிறைவேறாம இவ தாய்மாமன் ரங்கத் துரையை இவ கல்யாணம் செய்து கிட்டதை ஏற்கனவே உங்கிட்ட சொல்லியிருக்கேன் சிந்து. ஆனா அந்த ரங்கத்துரை ஒரு மோசடிக் குற்றத்திலே அரெஸ்ட்டாகி இப்ப ஜெயில்லே இருக்கான். அஞ்சு வருஷ சிறைவாசம்''.

திகைப்புடன் சிந்துஜா திவ்யாவைப் பார்க்க, "ஆமாங்க. என் கணவர் இப்ப ஜெயில்லேதான் இருக்கார். வேலூர் ஜெயில்லே'' என்றாள், திவ்யா சோகத்தை மூடி மறைத்து.

தொடர்ந்து அவளே பேசினாள்.

"அவர் ஜெயிலுக்குப் போன அவமானம் தாங்காம நானும் அம்மாவும் ஒரு மாசம் முந்தி இங்கே சென்னைக்கு வந்தோங்க. சேலத்தில் இருந்து வேலை மாறுதலாகி நீங்களும் இங்கே சென்னைக்கு வந்தது எனக்கும் தெரியாது. பொழப்புக்காக வேலை தேடி அலைஞ் சப்ப போனவாரம் தற்செயலா உங்க கணவர் என்னைப் பார்த்தார். ஜ×ரத்தோட அனிமிக்கா இருந்த என்னை நர்ஸிங் ஹோமில் சேர்த்து காலையும், சாயங்காலமும் வந்து பார்த்துக் கிட்டார். ஆஸ்பத்திரி பில் பத்தாயிரம் கட்டி சுகமான பின் ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்தார். சந்தர்ப்பம் பார்த்து இதையெல்லாம் உங்ககிட்ட சொல்லக் காத்திருந்தோம். அதுக்குள்ள சர்ப்ரைசா நீங்களே வந்து எல்லாத்தையும் தெரிஞ்சுக்கிட்டீங்க''.

திவ்யா நிறுத்த "எங்கே எங்க பழைய காதல் மீண்டும் தொடருதுன்னு நீ தப்பா புரிஞ்சுக்கிடுவியோன்னுதான் எங்களுக்குப் பயம் என்று தயங்கியபடியே சொன்னான், திவாகர்''.

"நீங்க முதல்லேயே உண்மையைச் சொல்லியிருந்தா நான் ஏங்க தப்பா நினைக்கப் போறேன்? உங்க பொய்தான் உங்க மேலே சந்தேகப்பட வச்சது'' என்றாள், சிந்துஜா.

"ஆமாங்க. நீங்க வந்ததும் ஒரு பிரளயமே வெடிக்கப் போகுதுன்னு நினைச்சேன். உங்களுக்குப் பெரிய மனசு'' திவ்யாவும் நெகிழ்ந்தாள்.

பைக்கில் அவர்கள் விடைபெற்று புறப்பட்டபோது கணவனின் இடுப்பை சற்று அழுத்தமாகவே பிடித்துக் கொண்டாள் சிந்துஜா.

***



கணவனின் காதலி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக