புதிய பதிவுகள்
» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 7:40 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
94 Posts - 43%
ayyasamy ram
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
79 Posts - 36%
i6appar
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
4 Posts - 2%
Guna.D
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
2 Posts - 1%
prajai
நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_m10நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்!


   
   
தண்டாயுதபாணி
தண்டாயுதபாணி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1303
இணைந்தது : 24/10/2009

Postதண்டாயுதபாணி Sat Feb 06, 2010 3:07 pm





‘இன்றைய
கல்வி என்பது, ஒன்று, பணம் பண்ணும் இயந்திரமாக இருக்கிறது; அல்லது
செல்லரித்துப்போன அமைப்பாக இருக்கிறது. இவற்றை நாம் மாற்றவேண்டியதும்,
அனைவருக்கும் உயர்கல்வி கிடைக்கச் செய்யவேண்டியதும் அவசியம். கொள்ளை லாபம்
அடிப்பவர்களுக்கு உயர்கல்வியில் இடம் இருக்கக்கூடாது!’


நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Uni4- இப்படி இந்தியாவில் உயர்கல்வியின்
அவலநிலை பற்றி ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருப்பது, நமது மாண்புமிகு
மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்தான். சிதம்பரத்துக்கு பேச்சு
சாமர்த்தியம் கைவந்த கலை. அதனால்தான், ‘இந்த அவலநிலைக்குக் காரணம் அவரது
கட்சியான காங்கிரஸ்தான் என்பதையும், இடையில் சில ஆண்டுகளைத் தவிர எப்போதும்
மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ்காரர்கள்தான் சுதந்திர இந்தியாவில்
உயர்கல்வியை சீரழித்தார்கள் என்பதையும், அதிலும் குறிப்பாக கடந்த ஐந்து
ஆண்டுகளில்தான் தறிகெட்ட வேகத்தில் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு
அனுமதி தரப்பட்டன என்பதையும்’ சொல்லாமல் விட்டுவிட்டார்.

சரி... போகட்டும்! காலம் கடந்தாவது கபில்சிபல்
என்ற மத்திய அமைச்சரின் தயவில் நல்லகாலம் பிறந்திருக்கிறது. ஆனால் இதன்
விளைவுகள் விபரீதமாகிவிடாமல் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு நமக்கு
இருக்கிறது.


கொஞ்சம்
பின்னோக்கிப் போய் பார்த்தால், இந்தியா சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டே
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் என்ற ஐடியா இங்கு வந்துவிட்டது. 1948ல் இந்தியக்
கல்விநிலையை ஆராய ராதாகிருஷ்ணன் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்தியாவில்
உயர்கல்வி நிலையங்கள் குறைவாக இருந்த காலம் அது; இங்கிலாந்துக்குப் போய்ப்
படிப்பதே அப்போது கௌரவமாகவும் வழக்கமாகவும் இருந்தது. உடனடியாக அரசு நிறைய
பல்கலைக்கழகங்களை நிறுவுவது சாத்தியமில்லை என்பதால், சேவை உள்ளம் படைத்த
செல்வந்தர்களை நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் அமைக்கச் செய்யலாம் என
சிபாரிசு செய்தது ராதாகிருஷ்ணன் கமிஷன். 1956ம் ஆண்டு உருவாக்கப்பட்ட
பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தில் இதற்காக விதி உருவாக்கப்பட்டது.
செக்ஷன் 3 எனப்படும் இந்த சட்டவிதி கொஞ்சம் குழப்பமாகவே இருந்ததால், யாரும்
நிகர்நிலைப் பல்கலைக்கழகம் அமைக்க முன்வரவில்லை. அதோடு அனுமதி தரும்
விஷயத்திலும் மத்திய அரசு கெடுபிடியாகவே நடந்துகொண்டது. 1980வாக்கில்
இதற்கான விதிகள் கொஞ்சம் தளர்த்தப்பட்டதும், இந்தியாவில் 18 நிகர்நிலைப்
பல்கலைக்கழகங்கள் முளைத்தன.

ஆனால்
கடந்த 10 ஆண்டுகளில்தான் எப்போதும் இல்லாத மோசமான வளர்ச்சி! மருத்துவம்
மற்றும் பொறியியல் கல்லூரிகள் பணம்காய்ச்சி மரங்களாக ஆன அதே வேகத்தில்,
இவற்றின் கொள்ளை லாபத்துக்கு அணைபோட அரசுகள் முயன்றன.

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Univ-3தமிழகத்தையே உதாரணமாக
எடுத்துக்கொள்வோம்... தனியார் சுயநிதிக் கல்லூரிகள் தங்கள் இடங்களில் 65
சதவீதத்தை (சிறுபான்மை நிறுவனமாக இருந்தால் 50 சதவீதம்!) மாநில அரசுக்குக்
கொடுத்துவிட வேண்டும். அவற்றை ‘சிங்கிள் விண்டோ சிஸ்டத்தில்’ மாநில அரசு
கவுன்சிலிங் மூலம் நிரப்பிக்கொள்ளும். இவர்களுக்கான கட்டணத்தை மட்டுமின்றி,
நிர்வாக கோட்டாவில் சேரும் மாணவர்களுக்கான கல்விக்கட்டணத்தையும் அரசே
நிர்ணயித்தது. அதோடு ‘பணம் கொடுத்தால் யாரை வேண்டுமானாலும்
சேர்க்கிறார்கள்; மதிப்பெண்ணை கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை’ என்ற
குற்றச்சாட்டு எழவே, பிளஸ் 2வில் குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண்கள்
எடுப்பவர்களையே சேர்க்கவேண்டும் என விதி கொண்டுவரப்பட்டது. ஒவ்வொரு
கல்லூரியும் எத்தனை மாணவர்களை சேர்க்கவேண்டும் என்பதையும் மாநில அரசு
வரையறை செய்தது.

இந்தக்
கல்லூரிகளில் பெரும்பாலானவற்றை நடத்துபவர்கள் அரசியல்வாதிகள்தானே...
குறுக்குவழிப் பயணம் அவர்களுக்குத் தெரியாததா? இந்தக்
கட்டுத்தளைகளிலிருந்து விடுபடுவதற்கு வழி என்ன என்று அவர்கள் யோசித்தபோது,
குழப்பமான செக்ஷன் 3ஐ கண்டுபிடித்துவிட்டார்கள்.

இதன்படி ஒரு கல்லூரியை பல்கலைக்கழக மானியக்குழு
ஆய்வுசெய்து, அதற்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஆவதற்குரிய அந்தஸ்து
இருப்பதாக மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தால்போதும். மத்திய அரசு
கெஜட்டில் ஒரு அறிவிப்பு வெளியிட்டு, அந்தஸ்தை உறுதிசெய்துவிடும். என்னென்ன
கோர்ஸ் நடத்தலாம் என்பதை தாங்களே முடிவுசெய்துகொள்ளலாம். பாடத்திட்டத்தை
முடிவு செய்துகொள்ளலாம்; எப்படி பரீட்சை வைப்பது என்பதையும்
முடிவுசெய்யலாம்; மார்க்கையும் அவர்களே போட்டுக்கொள்ளலாம்; எத்தனை பேரையும்
சேர்க்கலாம்; தங்கள் பல்கலைக்கழகத்தின் பெயரிலேயே டிகிரி வழங்கலாம். அண்ணா
பல்கலைக்கழகத்தை போய் தொங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அதோடு
நிர்வாக விஷயத்திலும் சுயேச்சையான அதிகாரம் வழங்கப்படும் என்பதால், எவ்வளவு
வேண்டுமானாலும் கட்டணம் வாங்கலாம்; பார்டரில் பாஸ் ஆனவர்களையும்
சேர்த்துக்கொள்ளலாம். மொத்தத்தில், தமிழகத்தில் இருக்கும் ஒரு நிகர்நிலைப்
பல்கலைக்கழகத்தின் மீது மாநில அரசுக்கு எந்த நிர்வாகக் கட்டுப்பாடும்
கிடையாது. கிட்டத்தட்ட அந்த வளாகம், தமிழ்நாட்டிடமிருந்து சுதந்திரம்
வாங்கிய ஏரியா ஆகிவிடும்.

இவ்வளவு
வானளாவிய அதிகாரத்தைக் கொடுக்கும் பல்கலைக்கழக மானியக்குழு, ஒரே ஒரு
விஷயத்தை மட்டும் சிரமப்பட்டாவது செய்யச் சொல்கிறது. ‘வெறுமனே பாடம்
மட்டும் சொல்லிக் கொடுக்காதீர்கள்; உயர்கல்வி என்பது ஆராய்ச்சியும்
சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் கொஞ்சம் ஆராய்ச்சிகளையும் செய்யுங்கள்’ என்ற
வேண்டுகோள்தான் அது!

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Univ-2இந்த குறுக்குவழியில் அதன்பின்
பயங்கர டிராபிக் ஜாம். வெறும் 18 நி.பல்கலைக்கழகங்கள் இருந்த இந்தியாவில்,
கடந்த பத்தாண்டுகளில் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துவிட்டது. கல்லூரியாக
இருந்தபோது வெறும் 100 மாணவர்களைச் சேர்த்த கோர்ஸ்களில் எல்லாம் ஆயிரம்
மாணவர்களை சேர்க்க ஆரம்பித்தார்கள். அவர்களுக்கான ஆய்வுக்கூட வசதி
இருக்கிறதா; கல்லூரியில் இடம் இருக்கிறதா; சொல்லித்தர பேராசிரியர்கள்
இருக்கிறார்களா... எதையும் பார்க்கவில்லை. அதோடு அஞ்சல்வழிக் கல்வியையும்
ஆரம்பித்துவிட்டார்கள். பீச்சில் சுண்டல் விற்பவன் கிளைகளைத் திறந்து
வியாபாரத்தை விரிவுபடுத்துகிற மாதிரியான வேகத்தில் நாடுமுழுக்கவும், ஏமாளி
இந்தியர்கள் அதிகம் இருக்கும் வெளிநாடுகளிலும் படிப்பு மையங்களை திறந்து,
‘பட்டம்’ செய்து விற்றார்கள்.

இதனால் வெறுத்துப்போன விப்லால் யாதவ் என்ற டெல்லி வழக்கறிஞர் கடந்த
2006ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த பொதுநல வழக்குதான், இப்போது
எல்லோருக்கும் ஆப்பு வைத்திருக்கிறது. கபில்சிபல் மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆனதும், இந்த வழக்கு விவகாரத்தை சீரியஸாக
எடுத்துக்கொண்டு, பி.என்.தாண்டன் கமிட்டியை நியமித்தார். இந்தக் கமிட்டி
நாடுமுழுக்க இருக்கும் 126 நி.பல்கலைக்கழகங்களை ஆய்வுசெய்து நீதிமன்றத்தில்
அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. இதன்படி 38 நி.பல்கலைக்கழகங்கள் ஓ.கே; 44
நி.பல்கலைக்கழகங்களுக்கு, தங்களை திருத்திக்கொள்ள 3 ஆண்டு அவகாசம்
தரப்பட்டுள்ளது; மேலும் 44 நி.பல்கலைக்கழகங்கள் தகுதியற்றவை. இதற்கு
தாண்டன் கமிட்டி சொல்லும் காரணங்கள், கல்வியாளர்களால் நிர்வகிக்கப்படாமல்
குடும்பச் சொத்தாக நடத்தப்படுவது; அளவுக்கு அதிகமாக மாணவர்களை
சேர்த்திருப்பது; பாடத்திட்டத்தை இஷ்டத்துக்கு மாற்றுவது; அடிப்படை வசதிகள்
இல்லாதது; இன்னும் சில கல்வி நிலையங்களைப் பொறுத்தவரை கட்டிடங்களே
இல்லாமல் வெறும் ஏட்டளவில் இருப்பது!

இப்போது இந்த விஷயத்தை உச்ச நீதிமன்றம்தான்
முடிவு செய்ய வேண்டும் என்ற நிலை. ஆனாலும் ‘நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
என்பதே எதிர்காலத்தில் இருக்காது; இதற்கு வழிவகை செய்யும் பல்கலைக்கழக
மானியக்குழு சட்டத்தின் சட்டவிதியான செக்ஷன் 3 நீக்கப்படும்’ என்று
துணிச்சலோடு சொல்லியிருக்கிறார்.

வழக்கம்போல இந்த கல்வி வள்ளல்கள் ஒன்றுகூடி, ‘மாணவர்களின்
எதிர்காலம் வீணாகிவிடும்’ என்று கோரஸ் பாடுகிறார்கள். இதே பல்லவியை அவர்கள்
நீதிமன்றத்திலும் பாடக்கூடும். அதோடு, ‘தவறு இருந்தால், அதையெல்லாம்
திருத்திக்கொள்ள கால அவகாசம் தரவேண்டும்’ என்றும் கேட்டிருக்கிறார்கள்.
அதோடு தாண்டன் கமிட்டி அறிக்கையையே குறை சொல்லி இருக்கிறார்கள். ‘அதே
காலகட்டத்தில் பல்கலைக்கழக மானியக்குழு நிபுணர்கள் வந்து ஆய்வுசெய்து
எங்கள் தரத்தை பாராட்டிவிட்டுப் போனார்கள்’ என்று ஒரு விஷயத்தையும்
சொல்கிறார்கள். இவர்களுக்கு இந்த அந்தஸ்தைக் கொடுத்த தவறைச் செய்ததே
பல்கலைக்கழக மானியக்குழுதான்! அவர்களே வந்து பாராட்டிவிட்டுப் போவதை எந்தக்
கணக்கில் சேர்ப்பது? பொய்வழக்கு போட்ட போலீஸே, தாங்கள் பிடித்துவைத்த
குற்றவாளியை ‘ரொம்ப நல்லவன்’ என்று தீர்ப்பு சொல்லி வெளியில் விடுவதைப்
போன்ற அபத்தம் அல்லவா இது? வழக்கு தொடுக்கும் போலீசுக்கு தீர்ப்பு
கொடுக்கும் அதிகாரம் இல்லையே! நீதிமன்றத்துக்கு அல்லவா அந்த அதிகாரம்
இருக்கிறது!

தமிழகத்தில்
அந்தஸ்து பறிபோன 16 பல்கலைக்கழக மாணவர்களும் கொந்தளிப்பில் இருக்கிறார்கள்.
இப்போது குழப்பமான சில கேள்விகள் எழுகின்றன...

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! 7 இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள்
பழையபடி கல்லூரிகள் ஆக்கப்பட்டு, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்படும்
என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் மாணவர்கள் படித்த பாடத்திட்டம் வேறு;
அண்ணா பல்கலையின் பாடத்திட்டம் வேறு! எஞ்சியுள்ள ஆண்டுகளில் இவர்கள் எந்த
பாடத்தைப் படிக்க வேண்டும்? ஏற்கனவே படித்த பாடத்திட்டமா? அண்ணா பல்கலையின்
பாடத்திட்டமா? அல்லது இரண்டையும் கலந்துகட்டி புதுசாக ஏதாவது
உருவாக்கப்படுமா?

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! 7 பிளஸ்
2வில் 55 சதவீதத்துக்கு மேல் மார்க் எடுத்தவர்களையே சேர்க்கவேண்டும்
என்பது அண்ணா பல்கலைக்கழக விதி. இவர்கள் குறைவான மார்க் எடுத்தவர்களையும்
சேர்த்திருக்கிறார்கள். அவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகம் பட்டம் வழங்குமா?

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! 7 இந்த நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில்
அஞ்சல் வழியில் படித்தவர்கள் இந்திராகாந்தி திறந்த நிலை
பல்கலைக்கழகத்திலோ, அல்லது அந்தந்த மாநில திறந்தநிலை பல்கலைக்கழகங்களிலோ
சேர்ந்துகொள்ளலாம் என்கிறது அரசு. ஆனால், அங்கீகாரம் பெறாத, எந்த
பல்கலைக்கழகத்திலும் இல்லாத புதுமையான கோர்ஸ்களை ரூம் போட்டு யோசித்து
உருவாக்கி இருக்கிறார்கள் சில கல்வி வள்ளல்கள். உதாரணத்துக்கு தஞ்சாவூரில்
இருக்கும் பிரிஸ்ட் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் ஜர்னலிஸத்தில் எம்.பி.ஏ.
கோர்ஸ் வைத்திருக்கிறது; சேலம் விநாயகா மிஷன் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்
இன்னும் புதுமையாக ‘எம்.ஏ & டிஸ்டன்ஸ் எஜுகேஷன்’ என கோர்ஸ்
வைத்திருக்கிறது; எம்.பி.ஏ & டெலிகாம் மேனேஜ்மென்ட் என்று இன்னொரு
கோர்ஸ் வைத்திருக்கிறது. இன்னும் சில பேர் முழுக்க முழுக்க பிராக்டிகலையே
அடிப்படையாகக் கொண்ட எஞ்சினியரிங் படிப்புகளிலும் சில அஞ்சல்வழி கோர்ஸ்களை
நடத்துகிறார்கள். இவற்றில் எல்லாம் சேர்ந்து படித்தவர்கள், இனி என்ன
ஆவார்கள்?

‘அனைவருக்கும்
கல்வி’ என்ற கோஷத்தைக் காலம்காலமாகக் கேட்டு வருகிறோம்... ஆனால்
செயல்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது. பள்ளிக்குப் போகிற குழந்தைகளில்
வெறும் 40 சதவீதத்தினர் மட்டுமே இளைஞர்களாக வளர்ந்து கல்லூரிகளுக்குப்
போகிறார்கள் என்கிறது புள்ளிவிவரம். ஏதோ ஒரு பட்டம், டிப்ளமோ, ஐ.டி.ஐ.யில்
பட்டயப் படிப்பு என படிக்கிற இவர்களில் வெறும் 11.12 சதவீதத்தினர் மட்டுமே
அதற்கு மேல் பட்ட மேற்படிப்பு போன்ற உயர்கல்வியை நாடுகிறார்கள்.
தகுதியற்றவர்களின் பணமூட்டைகளை கதவைத் திறந்து வரவேற்கும் நிகர்நிலைப்
பல்கலைக்கழகங்கள், தகுதியுள்ள ஏழைகளுக்கு வாய்ப்பு தரும் விஷயத்தில் கதவை
மட்டுமில்லை; மனசையும் மூடிக்கொள்கின்றன.

நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Univ-1இன்னொருபக்கம், ஓரளவு பணம்
செலவழிக்கத் தயாராக இருக்கிறவர்களுக்கும் தரமான கல்வியை இதுபோன்ற
நிறுவனங்கள் வழங்குவதில்லை என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இதனால் தரமான
கல்வியைத் தேடிச் சென்று, ஆஸ்திரேலியாவிலும் பிரிட்டனிலும் இந்தியர்கள் உதை
வாங்குகிறார்கள்.

‘இந்தியாவில்
உயர்கல்வி நிலையங்கள் மிகக்குறைவு; நமது மக்கள்தொகையையும் பள்ளிகளையும்
கணக்கிட்டுப் பார்த்தால், நமக்குத் தேவை ஆயிரம் பல்கலைக்கழகங்கள். ஆனால்
பாதிகூட நம்மிடம் இல்லை’ என்கிறார் கபில்சிபல்.
சரி, இதற்கு என்ன மாற்று?

தரத்தில் சமரசம் காட்டாத பல்கலைக்கழகங்களை அரசே
உருவாக்குவதுதான் சரியான வழி! ஆனால் ஒன்றுக்கும் உதவாத ரஷ்யப் போர்க்கப்பலை
வாங்க ஆயிரக்கணக்கான கோடிகளை செலவழிக்கும் மத்திய அரசு, பல்கலைக்கழகங்களை
உருவாக்க நிதி இல்லை என்று கையை விரிக்கும். மாநில அரசுகளிடம் பொறுப்பை
தட்டிக்கழிக்கக்கூடும்.

இன்னொரு
விஷயமும் கூட நடக்கும் சாத்தியக்கூறு இருக்கிறது. அது, அந்நிய முதலீடு.
இந்தியாவில் லாபம் தரும் தொழில்களில் முதலீடு செய்ய அந்நிய நிறுவனங்கள்
தயாராக இருக்கின்றன. உயர்கல்வி என்பது லாபம் கொழிக்கும் ஏரியா என்பதை
இவர்கள் நிரூபித்திருக்கிறார்களே! அதனால் அந்நிய பல்கலைக்கழகங்கள் கூட்டு
முயற்சியில் கல்வி நிறுவனங்களைத் தொடங்க இங்கு வரக்கூடும். நல்ல
நிறுவனங்கள் வந்தால் பரவாயில்லை; அங்கேயே டுபாக்கூராக இருக்கும்
ஆசாமிகளுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுக்கும் அபாயமும் இதில்
இருக்கிறது. அதோடு பொதுவாகவே வெளிநாட்டு பல்கலைக்கழகங்களின் கட்டண விகிதம்
மிக மிக அதிகம். அது இங்கு ஏற்கனவே இருக்கும் கல்வி நிலையங்களுக்கு விபரீத
ஆசையை உருவாக்கினால், கல்வி இன்னும் காஸ்ட்லி ஆகிவிடும் அபாயம் இருக்கிறது!

நன்றி THENAALI.COM






நிகர்நிலையற்ற பல்‘கொலை’க்கழகங்கள்! Valluvar5
புகழைத் தேடாதே! குணமுள்ள பண்புள்ள மனதைத் தேடு!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக