புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_m10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10 
5 Posts - 63%
heezulia
காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_m10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_m10காதலின் க(வி)தை - மழலை பாரதி Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

காதலின் க(வி)தை - மழலை பாரதி


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:24 am

இது ஒரு வாழ்க்கை வரலாறு.

காதலுக்கு உயிர் கொடுத்து அது கருவில் இருந்து மண்ணில் புதைந்தது வரை.

காதல் என்னும் கரு

நண்பர்கள் கூட்டம்
நையாண்டிப் பேச்சு
சில நேரம் படிப்பு
எங்கள் உலகம் இது தான்.

என் வீட்டு மொட்டை மாடி
எங்கள் தனி ராஜ்ஜியம்
எங்கள் நட்பு வளர்ந்ததும் இங்குதான்
எங்கள் படிப்பு தேய்ந்ததும் இங்குதான்.

வழக்கம் போல் அன்றும் அரட்டைக் கச்சேரி
எனக்கு முகம் தெரியாத அவர்கள் சினேகிதிகளுக்கு
புகழ்மாரி சூட்டினார்கள்
கற்பில் கண்ணகி என்றான் ஒருவன்
பண்பில் மாதவி என்றான் மற்றோன்

நண்பர்கள் முகம் காற்றில் மறைய
புத்தகம் திறந்தால் கற்பனை முகம்
காதில் நுழைந்தவள்
அறிவினை அழித்துவிட்டாள்

என் கிறுக்கல்களும் அழகாய்த் தெரிந்தன
தெரிந்தது எழுத்தல்ல காதல்

ஆம் கண்ணும் கண்ணும் கலக்காமல்
அறிமுகம் கூட இல்லமல்
புணர்ச்சி இன்றித் தோன்றிய கரு - காதல்



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:24 am

பிறப்பு

'கவிதா' கவிதைக்குப் பெயர்
உச்சரித்துப் பார்த்தேன்
நா இனித்தது

நண்பன் காட்டிய அந்த
ஒற்றை Photo
இல்லை இல்லை அது
டாவின்ஸியின் ஓவியம்

கனவிலும் நினைவிலும்
அதே முகம்

தூக்கத்தைத் தொலைத்துக்
கனவு வாங்கத் தொடங்கினேன்

மனத்தின் குழப்பம்
மெல்ல மெல்ல விலகியது

இத்தனை நாள் சுமந்த காதலின்
சுமை தாங்காமல்
மெல்ல மெல்ல பிரசவித்தேன்
கவிதையாய்

இந்தக் குழந்தையின்
அழு குரல்
நட்பு வட்டத்திற்கு
தன் வரவைப் பறை அறிவிக்க



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:24 am

ஊமைக் குழந்தையாய் காதல்

என் தொலைபேசியை எடுத்து
மனத்தில் பதிந்த எண்களைச் சுழற்ற

எதிர்முனையில் ஒரு 'Hello கவிதா here'

மின்சாரம் பாய்ந்திட
இணைப்பைத் துண்டித்தேன்

‘அவள் அதரங்கள்
உதிர்த்த முதல் கவிதை
அவள் பெயர்’

செவியோ
தேவதையின் குரல் அருந்திய
போதையில்!
பொறாமையில்
துடித்தன இதர புலன்கள்

மீண்டும் மின்னணுத்
தூதுவனை முத்தமிட்டேன்

மீண்டும் அவள் குரல்
'யாரது?'

குரல்வளை கிழித்து
வெளிவரத் துடித்தது
காதல் குழந்தை

தொண்டைக்குழியை அவள் அடைத்துவிட
எப்படி வரும் வார்த்தை .....



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:25 am

மழலையாய் காதல்

காற்றினும் கடுகிப் பறந்து
நிமிடம் கூட ஓய்வு எடுக்கா
என் மனம்
நிரந்தர ஓய்வு எடுக்கிறது
உன் நினைவைக் கலைக்கமாட்டாமல்

ஐந்து நாட்கள்
அவள் நினைவினில்
கரைந்துபோக

இன்று பேசிவிடுவது
என முடிவோடு
எண்களைச் சுழற்றி

'Hello கவிதா இருக்காங்களா?'
'Yes'
'நான் நான் ........... ஜீவன்!'
'................. யாரு?'
'இல்ல உங்க ·பிரெண்டா ஆகலாம்னு ....'
'ஹா ஹா ஹா ...............'

காதலின் மழலையில்
உளறிய வார்த்தைகள்
பரிசாய்க் கிடைத்தது
தேவதையின் சிரிப்பு

இரவு மொட்டை மாடி அரட்டையில்
என் சாதனையைப் பேசி
அசடு வழிந்து
நண்பனிடம் கெஞ்சி
கவிதாவின் அறிமுகம்

இம்முறையும் செவியே மகிழ்ந்திட
தொலைபேசியில் மழலையெனச் சிரித்தது
காதல்!



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:26 am

அடம் பிடிக்கும் சிறு பிள்ளையாய் காதல்

சின்னதாய் தொடங்கிய helloகள்
கதாகாலட்சேபங்கள் ஆயின.

காதல் குழந்தையை
நட்பு என்றே வளர்த்து
வந்தோம் நாங்கள்

முகம் காணாத
இந்த நட்பு
அகம் புகுந்து
குடைந்து கொண்டிருந்தது

என் காதலும் பக்தியும் ஒன்று
அது போய்ச் சேரும் இடம்
கண்டதில்லை நான்,
உணருகிறேன்

தேர்வு நேரம் அது

'டேய் அந்த notes இருந்தா தான் புரியும்' - இது நான்
'ஜீவா நான் எப்படா notes எடுத்தேன்?'
'டேய் மச்சி கவிதாட்ட இருக்கும்டா'
'தெரியும்டா நீ notes கேட்கும் போதே... டேய்....டேய்....'

கிண்டல் பேச்சும்
போலி ஏசல்களும் முடிந்து
கவிதா வீடு நோக்கிப் புறப்பட்டோம்
நான் வருவதைச் சொல்லாமல்

பதற்றத்துடன் calling bell அழுத்த
50 நாள் தவத்தின்
பலனாய் தேவதையின்
தரிசனம்

வரம் கேட்க நா எழவில்லை
பரவசத்தில்.......

நட்பு உரு கலைத்து
தன் உரு காட்ட
அடம்பிடித்தது காதல்!



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:26 am

இளமைத் துடிப்புடன் காதல்

என்னுள் உனைப் புகுத்தி
உன்னுடன் என் நினைவுகளைப் படரவிட்டு
எத்தனையோ சொல்லத் துடிக்கும்
நம் தவிப்பைக் கண்டு ரசிக்கிறது
காதல்!

சில வினாடிகள்
கண்கள் கலந்தன

எப்பொழுதும் சொற்களை
ஏவும் அவளோ
இன்று விழியினால்
கேள்விகளை ஏவினாள்

ஊமையாகிப் போன நானோ
உணர்ச்சி வேகம் தாளாமல்
அவளை என் கண்களில்
படமாக்கிக் கொண்டு
என்னை அவள் நிழலாய்
விட்டுவிட்டுத் திரும்பினேன்

காதலே நான் என்ன ஆப்கானிஸ்தானோ
எத்தனை எரி அம்புகள்
என்மீது பொழிகிறாய்
என்னைப் பாலைவனச் சோலையாக்க!

வீடு திரும்ப
என் கோவில் மணி,
தொலைபேசி ஒலித்தது
அள்ளி என் காதோடு
அணைத்தேன் அவள் நினைவுகளுடன்



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:28 am

குறும்பு செய்யும் காதல்

'தொலைபேசி'
காதலின் குரல்
தாங்கி வரும் தூதன்
அவன் மௌனம்
தண்டனைக்குரியது
கலைத்துவிடடி
அமைதியை மட்டும் அல்ல
உன் மனதில் மறைந்திருக்கும்
காதலையும்!

நினைத்ததும் அழைத்தான் தூதன்
'உடனே உன் பழைய ·போட்டோக்களுடன் வா'
என்றாள் என்னவள்

சில நேரத்துளிகளில்
அவளும் நானும்
என் குழந்தைப் பருவத்தை ரசிக்க
இந்த நெருக்கத்தில்
வெட்கப்பட்டு என்
·போட்டோ கூட சிவந்தது.......



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:28 am

துணை தேடும் தென்றலாய் காதல்

மலர் தொட்டுப்
புண்பட்ட என் நெஞ்சை
தென்றல் என
வருடுது காதல்

சின்னஞ்சிறு உதவிக்கும்
நன்றி உரைக்கும் அவளோ
'நமக்குள்ளே thanks எல்லாம் சொல்லாதே' என்றபோதும்

ஆயிரம் முறை அழைக்கும்
அவள் வீட்டுத் தொலைபேசி
என் அழைப்பை மட்டும்
பெயர் சொல்லி எடுக்கும் போதும்

பல மணி நேரம்
பேசிய பின்னும்
'அப்புறம்?' என வினவும் பொழுதும்

ஆட்டோகிரா·பில்
கையெழுத்து கேட்ட போது
'பிரிபவர்களுக்குத்'தான் இது
என சிரித்தபோதும்

நண்பர்களுக்கு விருந்து
அளிக்கும் போதும்
பந்திக்கு முன்
எனை வைத்த போதும்

கேட்டுவிடத் துணிந்தேன்
என்றுமே என் கை பிடித்து வருவாளோ என!

ஆணை விட பெண்ணுக்கே
உணர்ச்சிகள் அதிகமாம்
பின் ஏனோ அவள் கூறவில்லை?

சப்தம் செய்யாமல்
பேசும் நம் உதடுகள்

கலக்காமல் தரை நோக்கும்
தரையினிலும் நம் உருவே
காணும் நம் கண்கள்
உணர்வுகள் சொல்லிவிட்டதடி
இனி அந்த வார்த்தை வேண்டுமா?



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:30 am

காதலின் காதல் படலம்


"கொடிது கொடிது
இளமையில் வறுமை"
என்றாள் அவ்வை
ஊடலும் கூடலும் காதலும்
அறியாப் பேதை அவள்
அதனிலும் கொடிது
மனதினில் மறைத்து வைத்த காதல்
என எப்படி அறிவாள்?

வானவில்லாய் என்னவள்
என் வீட்டு மாடியை
அலங்கரித்த நேரம் அது

வெண்ணிலவு தன் தோழி விண்மீன்களுடன்
வானவீதியில் ஊர்வலம் வருகையில்
என்னவளைக் கண்டு வெட்கி
மேகத்தால் முகம் மறைத்துக்கொள்ள
நாங்கள் மட்டும்
உலகமே காண்பதுபோல் பிரமையில்

மௌனத்தைப் பரிமாறிக்கொண்டிருக்கையில்
அவள் விழியோ கவி பாடின
'சொல்லிவிடடா ஏன் எனைக் கொல்கிறாய்?'
என மன்றாடின

அவள் விழி வழி வந்த
கவிதைக்கு உயிர் கொடுத்தேன்
என் எழுத்துக்களில்
அப்பொழுது
அவளைத் தீண்ட வந்த தென்றல்
மழையை அழைத்து வருவதாய்
கூறிச் சென்றது

கவிதை காகிதமாயிற்றே
அதைக் காப்பாற்ற எழுந்தேன்

'எங்கே அதைக் குடு பார்க்கலாம்'
என என்னவள் கேட்க
என் வாழ்க்கைக்கு எழுதிய
விடைத்தாளைக் கொடுத்தேன்
என் கவிதைத் தோழர்கள்
கூற வேண்டுவன
கூறுவார்கள் என்ற நம்பிக்கையில்...



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 03, 2010 12:30 am

இளமை குன்றாக் காதலின் மறுபிறப்பு

"குரல் வளையில்
காதல் சிக்கிக் கொள்ள
விரல் வழி வழியும் வார்த்தை
கவிதை!"

என்னவள் கவிதை வாசிக்க
என் இதயம் சுவாசிக்க மறந்தது

"வெண்ணிலவு ரசித்து
உன்னை நினைத்துக் கிடக்க
நித்திரை தழுவ
பின்னிரவு பிடித்ததடி தோழி

பொழுதும் புலர்ந்ததடி தோழி
உறக்கம் கலையவில்லை
நிஜத்தைக் காணப் பயமோ
கனவில் உனை அழிக்க
மனம் இல்லையடி

கனவை நினைவில் சுமந்து
கண்விழித்துப் பார்த்தேனடி
கதிரவன் கண் சிவந்திருந்தான்
ஏனடா என்றேன்
உனைக் காணாமல் இரவெல்லாம்
கண்விழித்திருந்தானாம்

நான் பிழைப்பேனோ
நீ எனைப் பிரிந்தால் தோழி?"

கவிதா கவிதை முடிக்கையில்
மேகம் அட்சதை தூவ
அவள் மேல் விழுந்த
மழைத் துளி ரசித்த என்னை
அணைத்துக் கொண்டாள்
ஸ்பரிசம், பார்வை என்றும்
உண்மையின் வெளிப்பாடு

தன் வாழ்க்கையை
வெற்றிப் பயணமாய் முடித்த காதல்
அன்பையும் மோகத்தையும்
எங்களுக்குத் துணையாய் விட்டு விட்டு
அடுத்த பிறப்பிடம் தேடிப் புறப்பட்டது.

காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550 காதலின் க(வி)தை - மழலை பாரதி 154550



காதலின் க(வி)தை - மழலை பாரதி Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக