புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:28 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:54 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 6:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Yesterday at 5:49 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:47 pm

» கருத்துப்படம் 22/06/2024
by mohamed nizamudeen Yesterday at 5:41 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Yesterday at 4:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Fri Jun 21, 2024 8:54 pm

» ரயில் – விமர்சனம்
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:55 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by Dr.S.Soundarapandian Fri Jun 21, 2024 12:54 pm

» இன்றைய நாள் 23/05/2024
by T.N.Balasubramanian Fri Jun 21, 2024 12:16 pm

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Fri Jun 21, 2024 8:05 am

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 7:19 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Thu Jun 20, 2024 3:16 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:44 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:09 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Thu Jun 20, 2024 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Thu Jun 20, 2024 12:57 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Thu Jun 20, 2024 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
89 Posts - 38%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
83 Posts - 36%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
36 Posts - 15%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
6 Posts - 3%
ayyamperumal
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
3 Posts - 1%
manikavi
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
Guna.D
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
2 Posts - 1%
rajuselvam
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
340 Posts - 48%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
230 Posts - 33%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
66 Posts - 9%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
24 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
6 Posts - 1%
Srinivasan23
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
3 Posts - 0%
manikavi
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 7 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ


   
   

Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:32 am

இரேசனி _ சிவதை : ஞாழல் : நேர்வாள வித்து.
இரேசன் _ அரசன் : வருணன் : திருமால் : வெள்ளைப்பூண்டு.
இரேசிதம் _ நாட்டியவகை : குதிரை வட்டமாய் ஓடுதல் :குதிரை நடையுள் ஒன்று.
இரேசுதல் _ செரியாமை.
இரேணு _ பூந்துகள் : துகள் : அணு :அழகு : புல்வகை.



இரேணுகை _ பரசுராமன் தாய் : காட்டு மிளகு : தவிடு.
இரேபன் _ நிந்திக்கத்தக்கவன் :கொடியவன்.
இரேயம் _ சாராயம் : கள்.
இரேவடம் _ மூங்கில் : வலம் புரிச் சங்கு : சூறைக்காற்று.
இரேவதி _ ஒரு நட்சத்திரம் : பல ராமன் மனைவி.




இரேவற்சின்னி _ நாட்டு மஞ்சட் சீனக் கிழங்கு: மரவகை.
இரேவு _ ஆயத்துறை : இறங்குந்துறை.
இரேவை _ அவுரி : நருமதை ஆறு .
இரேழி _ இடைகழி.
இரை _ ஒலி : பறவை : விலங்கு முதலியவற்றின் உணவு : நாக்குப் பூச்சி :பூமி: நீர் :கள் : வாக்கு.



இரைக்குடல் _ இரைப்பை.
இரைக்குழல் _ உணவு செல்லும் குழல்.
இரைசல் _ மாணிக்கக் குற்றவகை.
இரைச்சல் _ ஆரவாரம் :ஒலி.
இரைதல் _ ஒலித்தல் : கூச்சலிடுதல்.



இரைதேர்தல் _ உணவு தேடுதல்.
இரைதேறுதல் _ உணவு செரியாமல் தங்குதல்.
இரைத்தல் _ ஒலித்தல் : சீறுதல் :மூச்சு வாங்குதல் : வீங்குதல்.
இரைத்து _ இரண்டு : புலி தொடக்கி.
இரைப்பு _ இரைச்சல் : மூச்சு வாங்குகை : இரைப்பு நோய் : மோகம் : கரப்பான் பூச்சி: சுவாச காச நோய்.



இரைப்பு மாந்தம் _ மாந்த நோய் வகை.
இரைப்பூச்சி _ நாக்குப் பூச்சி.
இரைப்பெலி _ இழுப்பை உண்டாக்கும் எலி.
இரைப்பை _ இரைக்குடல்.
இரை மீட்டல் _ அசை போடுதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:32 am

இரையெடுத்தல் _ பறவை, பாம்பு முதலியன உணவு கொள்ளுதல் : அசை போடுதல்.
இரெளத்திரம் _ பெருஞ்சினம் : ஒன்பான் சுவையுள் ஒன்று.
இரெளத்திரி _ ஒரு தமிழ் வருடம்: சிவ சித்திகளுள் ஒன்று.
இரெளரவம் _ ஒரு நரகம் : சிவாகமங்களுள் ஒன்று.
இல _ இன்மை குறிப்பது : இலவு : இலவ மரம்.



இலகடம் _ யானை மேல் உள்ள இருக்கை : அம்பாரி.
இலகம் _ ஊமத்தை.
இலகரி _ கத்தூரி : மது : பெருந்திரை : வெறி :மகிழ்ச்சி.
இலகல் _ அகில் : நொய்மை : எழுத்து.
இலகான் _ கடிவாளம்.



இலகிமா _ எண் வகைச் சித்திகளுள் ஒன்று : நொய்ம்மைய தாக்குதல்.
இலகிரி _ மயக்க மூட்டும் பொருள் :அபின் : கஞ்சா : சாதிக்காய் :சாதிபத்திரி.
இலகு _ எளிது : சிறுமை : தணிவு :குற்றெழுத்து :ஒரு மரம் :நுண்மை.
இலகுசம் _ ஈரப்பலா மரம்.
இலகுதல் _ மிகுதல் : ஒளி செய்தல் : விளங்குதல்.



இலகு நட்சத்திரம் _ நுட்பமான நட்சத்திரம் : அசுவினி : பூசம் : அஸ்தம் என்னும் நட்சத்திரங்கள்.
இலகுளீசன் _ சிவபிரான் கூறான குரு மூர்த்தங்களுள் ஒன்று.
இலக்கணம் _ இயல்பு : சிறப்பியல்பு : அடையாளம் : ஒழுங்கு : அழகு : இலக்கியத்தின் அமைதி.
இலக்கணக்கருமம் _ அங்க இலக்கண நூல் : சாமுத்திரிகம்.
இலக்கணச் சுழி _ குதிரைகளுக்குச் சொல்லப்படும் நல்ல சுழி.



இலக்கணப் போலி _ இலக்கணம் உடையது போன்று தொன்று தொட்டு வழங்கம் சொல்.
இலக்கணவழு _ இலக்கணக் குற்றம்.
இலக்கணி _ இலக்கணம் அறிந்தவன் : அழகன்.
இலக்கணை _ ஒரு பொருளுக்குரிய சொல்லை மற்றொரு பொருளைக் குறிப்பது போல் உரைப்பது.
இலக்கம் _ விளக்கம் : எண்: நூறாயிரம் : குறிப்பொருள் : இலக்கு : காணுதல்.



இலக்க மிடுதல் _ எண் குறித்தல் : கணக்கிடுதல்.
இலக்கர் _ நூறாயிரவர் : ஆடை : சீலை : கந்தர் .
இலக்கல் _ விளக்குதல்.
இலக்காந்தரம் _ இடையிலக்கம்.
இலக்காரம் _ ஆடை : சீலை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:33 am

இலக்கிதம் _குறிக்கப்பட்டது.
இலக்கித்தல் _ உரு வரைதல் : எழுதுதல்.
இலக்கியம் _ இலக்கணம் அமையப்பெற்ற பொருள்.
இலக்கியார்த்தம் _ இலக்கணையால் அறியும் பொருள்.
இலக்கினம் _ இராசியின் உதயம் : நல்ல வேளை.



இலக்கினாபதி _ இலக்கினத்திற்குரியவன்.
இலக்கு _ குறிப்பொருள் : நாடிய பொருள் அம்பெய்யும் குறி : சமயம் : எதிரி : அளவு.
இலக்குதல் _ விளங்கச் செய்தல்: அடையாளம் இடுதல்.
இலக்குமி _ செல்வம் : திருமால் தேவி : மஞ்சள் : முத்து : அழகு.
இலக்கை _ ஆடை : மாதச் சம்பளம் : பாதுகாவல்.



இலங்கடை _ இல்லாத போது.
இலங்கணம் _ பட்டினி கிடக்கை : தடை.
இலங்கம் _ கூடுகை : எறும்பு : களரி :மூடம் : கூட்டம்.
இலங்கர் _ நங்கூரம்.
இலங்கல் _ விளக்குதல்.



இலங்காபுரி _ இராவணன் ஆட்சி புரிந்த தலை நகரம்.
இலங்கிகன் _ துறவி.
இலங்கித்தல் _ கடத்தல் : குதித்தல் .
இலங்கிழை _ பெண்.
இலங்கு _ குளம் : ஒளி செய்.



இலங்குதல் _ விளங்குதல்.
இலங்கு பொழுது _ சூரியன் மறையும் வேளை.
இலங்கேசன் _ இராவணன் : இலங்கையின் தலைவன்.
இலங்கை _ ஆற்றிடைக்குறை : ஈழமண்டலம் : இராவணன் தலைநகர் : தொண்டை நாட்டின் ஓர் ஊரான மாவிலங்கை.
இலங்கோடு _ கீழுடை : சல்லடம் : சன்னியாசிகளுடைய உடை .




இலசுனம் _ வெள்ளைப்பூண்டு : மாணிக்கக் குணத்துள் ஒன்று.
இலசுனி _ மாணிக்கக் குணத்துள் ஒன்று.
இலச்சித்தல் _ நாணுதல் .
இலச்சினை _ அடையாளம் :முத்திரை.
இலச்சை _ நாணம் : கூச்சம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:33 am

இலச்சை கெட்ட மரம் _ சுண்டி மரம் : கல்தேக்கு மரம்.
இலச்சைப் படுதல் _ நாணுதல் .
இலஞ்சம் _ கைக்கூலி.
இலஞ்சி _ குளம் : ஏரி : குணம் : கொம்பூழ் : மகிழ மரம் : புன்கு மரம் : மாமரம் : மடு :சாரைப் பாம்பு : ஆடை வகை : மதில்.
இலஞ்சியம் _ கீழா நெல்லி.


இலஞ்சிலி _ ஏலம்.
இலட்சணம் _ இலக்கணம் : அழகு .
இலட்சம் _ நூறாயிரம்.
இலட்சயம் _ எண்ணத்தக்கது.
இலட்சிதம் _ இலக்கணம் அமைக்கப்பட்டது : குறியினால் விளக்கப்பட்டது.


இலட்சியம் _ மதிப்பு : குறிக்கோள் :நோக்கம் .
இலட்சுமணம் _ மரவகை : தாளிப் பூண்டு.
இலட்சுமி _ இலக்குமி :திருமகள் .
இலட்சுமி வண்டு _ கரப்பான் பூச்சி.
இலட்டு _ இனிப்புப் பணியார வகை.


இலட்டுகம் _ இனிப்புப் பணியார வகை.
இலட்டை _ அப்பம்.
இலண்டம் _ இலத்தி : குதிரை , யானை முதலியவற்றின் கழிவு.
இலதை _ படர் கொடி : வள்ளிக் கொடி : வால் மிளகுக் கொடி :இலந்தை: படர் கொடி : இலந்தை : முள் மரவகை : மரக் கொம்பு :நூற்கும் நூல் :ஒரு வகை ஒலி.
இலத்தி _ யானை , குதிரை முதலியவற்றின் கழிவு.



இலந்தை _ முள் மரவகை: ஒரு பழ மரம் : நீர் நிலை.
இலபனம் _ வாய்.
இலபிதம் _ நேர்வது : உண்பது : பேசப்பட்டது: விதி : பேறு .
இலபித்தல் _ வாய்த்தல் : கை கூடுதல் : சித்தியடைதல்.
இலமலர் _ இலவ மலர்.



இலம் _ வறுமை : இல்லாமை : வறியோம் : இல்லறம் : இல்லம்.
இலம்பகம் _ அத்தியாயம் : தலைக்கோலம் என்னும் நுதலணி.
இலம்படுதல் _ வறுமையடைதல்.
இலம்படை _ வறுமை : இடுக்கண்.
இலம்பமானம் _ கழுத்தில் தொங்கும் தாழ் வடம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:33 am

இலம்பம் _ தொங்கல் : மாலை : நிறு திட்டம் :ஒருபாகை அளவு : உயர்வு : அகலம் : கைக்கூலி.
இலம்பனம் _ இலம்பம்.
இலம்பாடி _ வறியவன் : ஒரு சாதி.
இலம்பாடு _ வறுமை : துன்பம்.
இலம்பிகை _ உள் நாக்கு.




இலம்பிலி _ மரவகை.
இலம்பு _ தொங்குகை.
இலம்பை _ வறுமை : இடுக்கண் : அவல நிலை.
இலம்போதரன் _ விநாயகக் கடவுள் : பெரு வயிறன்.
இலயகாலம் _ ஊழிக்காலம்.




இலயஞானம் _ சுருதி ஒப்புமை காணும் அறிவு : கீதஞானம்.
இலய தத்துவம் _ ஊழிக்காலத்தில் தன் தொழில்கள் யாவும் ஒடுங்கிக் காரணவகையால் நிற்கும் இறைவன் நிலை.
இலயத்தானம் _ ஒடுங்கும் இடம்.
இலயமாதல் _ அழிதல் : ஒன்றாதல் .
இலயமுத்தி _ பரம்பொருளோடு இரண்டறக் கலத்தலாகிய முத்தி.


இலயம் _ இரண்டறக் கலத்தல் : சுருதிலயம்.
இலயித்தல் _ இரண்டு பொருள் வேற்றுமையறக் கலத்தல் : ஒன்றாதல் :அழிதல் :ஒடுங்குதல்.
இலயை _ தாளப் பிரமாணம் பத்தனுள் ஒன்று.
இலலாடம் _ நெற்றி.
இலலாடலிபி _ தலையெழுத்து.



இலலாடிகை _ நெற்றியில் அணியும் சுட்டி: சந்தனம் முதலிய வற்றால் நெற்றியிலிடும் பொட்டு.
இலலாமம் _ வால் : அடையாளம் : அரசச் சின்னம் : அழகு : அணிகலன் : இரேகை : குதிரை :கொடி : கொம்பு : நெற்றியணி : நெற்றிக்குறி :பிடரி மயிர் : பெருமை.
இலலித பஞ்சமி _ ஒரு பண் வகை.
இலலிதம் _ அழகு : அபிநயம் : உபசாரம் : காமக்குறி : ஏளனம் : மகளிர் விளையாட்டு : இனிமை.
இலலிதை _ 32 பண்களுள் ஒன்று : பார்வதி : பெண் : மான்மதம்.



இலவங்கப்பட்டை _ கருவாப்பட்டை :தாளிச பத்திரி.
இலவங்கப் பத்திரி _ ஒரு மருந்து இலை.
இலவங்கப்பூ _ கிராம்பு : காதணி வகை.
இலவசம் _ விலையில்லாத பொருள்.
இலவணம் _ உப்பு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:33 am

இலவண வித்தை _ மாய வித்தைகளுள் ஒன்று.
இலவந்தி _ நீராழி.
இலவந்திகை _ இயந்திர வாவி: வாவியைச் சூழ்ந்த வசந்த சோலை.
இலவந்தீவு _ ஏழு தீவுகளுள் ஒன்று.
இலவம் _ இலவந்தீவு :அற்பம் : காலவகை : பூசை : இலவங்கம்: கிராம்பு : சாதிக்காய் :பசு, ஆடு முதலியவற்றின் மயிர்.



இலவம் பஞ்சு _ இலவ மரத்துப் பஞ்சு.
இலவலேசம் _ மிகச்சிறியது.
இலவித்திரம் _ அரிவாள் :கூர்வாள்.
இலவு _ இலவ மரம் : தேற்றா மரம்.
இலவுகிகம் _ உலகியல் மரபு: உலகப் போக்கை உணர்ந்து நடத்தல்.



இலளிதம் _ அழகியது : ஒரு பொருளின் தெளிவு : இச்சை : ஒரு பண் : சிவாகமங்களுள் ஒன்று : விரும்பப்பட்டது.
இலளிதை _ பார்வதி : கத்தூரி : முத்தாரம் : ஒரு பண்.
இலாகன் _ மீன் வகை .
இலாகிரி _ மதுக்களிப்பு : மதர்ப்பு .
இலாகுளம் _ சைவப் பிரிவுகளுள் ஒன்று.



இலாகை _ விதம்.
இலாக்கா _ ஆட்சிப் பிரிவு .
இலாக்கிரி _ செம் மெழுகு.
இலாக்கை _ செம் பஞ்சு : அரக்கு .
இலாங்கலம் _ பூ வகை : பூனை :கலப்பை :கொடுங்கை.


இலாங்கலி _ பாம்பு : கலப்பை : தென்னை : செங்காந்தள் : செங்கரந்தைப் பூண்டு: வெண் தோன்றிப் பூண்டு : பலராமன்.
இலாங்கூலம் _ விலங்கின் வால்: ஆடவர் மறைவுத்தானம்.
இலாங் கூலி _ குரங்கு.
இலாசடி _ வருத்தம் : தொல்லை .
இலாசம் _ பொரி.




இலாசவோமம் _ திருமணத்தில் பொரியால் செய்யப்படும் ஓமம்.
இலாசிகை _ கூத்தாடுபவள்.
இலாசியம் _ கூத்து.
இலாச்சம் _ தானிய அளவு வகை: ஒரு நில அளவை.
இலாச்சி _ செருகு பெட்டியின் அறை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:34 am

இலாஞ்சனை _ அடையாளம் : முத்திரை :அச்சுக்கட்டின படம் : மதிப்பு : கூச்சம்.
இலாஞ்சி _ ஏலம்.
இலாஞ்சினைப் பேறு _ பழைய காலத்தில் இருந்த ஒரு வரி வகை.
இலாட சங்கிலி _ கழற்றுவதற்கு அரிய ஒரு வகைச் சங்கிலி.
இலாடம் _ இந்தியாவில் உள்ள ஒரு பகுதி : வங்காளப் பகுதி: நெற்றி : புளிய மரம் : சேலை :எருது : குதிரைகளுக்குக் காலில் அடிக்கப்படுவது : ஒரு மொழி.



இலாடவி _ அகில் மரம் : காக துண்டம்.
இலாடன் _ இலாட நாட்டினன் : பைராகி.
இலாட்சை _ செவ்வரக்கு .
இலாபகரம் _ ஊதியம் தருவது.
இலாபத்தானம் _ இலக்கினத்திற்குப் 11 - ஆம் இடம்.



இலாபம் _ தானிய அளவையின் முதல் எண்ணுக்கு வழங்கும் சொல் : ஊதியம் : பயன் ஆதாயம்.
இலாமச்சை _ ஒரு வகை மணம் உள்ள வேர்.
இலாமிச்சை _ ஒரு வகை மணம் உள்ள வேர்.
இலாயம் _ ஏல அரிசி : குதிரைப்பந்தி.
இலாலனம் _ அன்பு பாராட்டுதல்: இனியவை செய்தல் : செல்லம் கொடுத்தல்.


இலாலி _ இச்சக வார்த்தை :பெருங்காமம் உள்ளவன் : ஏமாற்றுபவன்: தீமைக்கு உட்படுத்துபவன்: ஒரு வகை வாழ்த்து : மங்கலப் பாடல்.
இலாவகம் _ திறமை : ஆற்றல் : உடல் நலம் : எளிமை : நிந்தனை : விரைவு: சுருக்கம் .
இலாவணம் _ போர் வீரர்களின் பட்டி: பெயர்ப் பதிவு : வீடு தோறும் இனவாரி வழங்கும் அரிசி , பணம் முதலியன : உரையாடல்.
இலாவணியம் _ அழகு.
இலாளன் _ இல்லாதவன் : வறியவன்.



இலாளிதம் _ அழகு.
இலி _ இன்மை : இல்லாதது : இல்லாதவன்.
இலிகம் _ எழுதுதல்.
இலிகி _ எழுத்து : எழுத்துவகை.
இலிகிதம் _ கடிதம் : எழுதப்பட்டது.



இலிகிதன் _ எழுத்தாளன்.
இலிகுசம் _ எலுமிச்சை மரம்.
இலிங்கக் கட்டு _ சாதி லிங்கக் கட்டு.
இலிங்கக்கல் _ வளைவுக் கட்டத்தின் நடுக்கல்.
இலிங்கக் கவசம் _ சிவலிங்கத்திற்குச் சாத்தப்படும் மேலாடை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:34 am

இலிங்கக்கட்டி _ இலிங்க மூர்த்தியைக் கழுத்தில் கட்டியிருப்பவன்: வீரசைவன்.
இலிங்க சரீரம் _ நுண்ணுடல்.
இலிங்க சுத்தி _ தூய்மை செய்யும் ஐந்து வகையுள் ஒன்று.
இலிங்க சூலை _ ஒருவகை நோய்.
இலிங்கதாரி _ சிவலிங்க மூர்த்தியைக் கழுத்தில் கட்டி அணிந்துள்ளபவன்.



இலிங்கப்புற்று _ ஒரு வகை மேகநோய்.
இலிங்க பற்பம் _ நீற்று மருந்துவகை.
இலிங்கப் பொருத்தம் _ மணப் பொருத்தங்களுள் ஒன்று.
இலிங்கம் _ அடையாளம் : சிவலிங்கம் : சாதிலிங்கம் : இலிங்க புராணம் : பிரகிருதி : 32 உபநிடதங்களுள் ஒன்று: கருவிழியின் நடுவில் உள்ள பாவை : கறை : ஆடவர் மறைவுத்தானம் : நோய்க்குறி.
இலிங்க முத்திரை _ பூசை செய்யும் போது காட்டப்படும் முத்திரை வகை.



இலிங்கரோகம் _ ஒரு வகை நோய்.
இலிங்கவட்டம் _ கிணறு இடியாமல் வைக்கும் மரச்சுவர்.
இலிங்க விருத்தி _ வெளிவேடம் : போட்டுப்பிழைப்பவன்.
இலிங்காயதர் _ இலிங்கங்கட்டி.
இலிங்கி _ சிவலிங்க பூசை செய்பவன் : இருடி : துறவி : கபட சன்னியாசி : யானை.



இலிங்கு _ மாவிலிங்கை மரம்.
இலிங்கோற்பவர் _ சிவ மூர்தங்களுள் ஒன்று.
இலிந்தகம் _ கருங்குவளை.
இலிபி _ இலக்கம் : எழுத்து : விதி : மெழுகுதல்.
இலிபித்தல் _ எழுதுதல் : அனுகூலமாதல் : நியமித்தலை விதித்தல்.



இலிர்த்தல் _ சிலிர்த்தல் : தளிர்த்தல் : பொடித்தல்.
இலிற்றுதல் _ சுரத்தல் : துளித்தல் : சொரிதல்.
இலீக்கை _ ஒரு நீட்டலளவை.
இலீலாவதி _ அழகிய பெண்: காமச் சேட்டையுடையவள்:துர்க்கை.
இலீலை _ சரசம் : மகளிர் மோகவிளையாட்டு: தெய்வத் திருவிளையாடல்.



இலீனம் _ அடக்கம் : அழிவு.
இலுதை _ அணில்.
இலுப்பை _ இருப்பை : மரவகை .
இலுப்பைக்கட்டி _ இலுப்பைப் பிண்ணாக்கு.
இலுப்பை நெய் _ இலுப்பை எண்ணெய்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:34 am

இலுப்பைப் பூச்சம்பா _ நெல் வகை.
இலேககன் _ எழுதுவோன் : சித்திரம் வரைபவன்.
இலேகர் _ தேவர்.
இலேகனம் _ எழுத்து பனையோலை.
இலேகனி _ எழுத்தாணி : எழுதுகோல்.



இலேகித்தல் _ எழுதுதல் : சித்தரித்தல்.
இலேகியம் _ பாகாக் கிண்டிய மருந்துவகை.
இலேகை _ ஓரம் : எழுத்து :பூமி: தழும்பு : சித்திரம்.
இலேசம் _ மிகை : அற்பம் : ஓர் அலங்காரம் :ஒரு கால அளவு : நொய்மை.
இலேசு _ நொய்ம்மை : எளிது : அற்பம்.




இலேசுணம் _ அரிதாரம் : ஒரு வகைச் சுண்ணாம்புப் பொடி.
இலேஞ்சி _ சவுக்கம்.
இலேபகன் _ சாந்து பூசுகிறவன்.
இலேபம் _ வால் மிளகுக் கொடி : பூச்சு : கறை :சாந்து :மெழுகுதல்: உணவு : தீநெறி.
இலேலிகம் _ பாம்பு.



இலேவாதேவி _ பண்ட மாற்றல் : கொடுக்கல் : வாங்கல்.
இலை _ மரம் செடி கொடிகளின் இலை : வெற்றிலை :படலை மாலை : பச்சிலை : சக்கரத்தின் ஆரம் : பூவிதழ்.
இலைக்கறி _ கீரை.
இலைக்குரம்பை _ பன்ன சாலை: தழைக்குடில்.
இலைச்சித்தல் _ முத்திரையிடுதல்.




இலைச்சுமடன் _ வெற்றிலை விற்போன் : மூடன்.
இலைச்சுமி _ பதுமராக மணியின் குற்றங்களுள் ஒன்று.
இலைச்சை _ நிறம்.
இலை ஞெமல் _ இலைச்சருகு.
இலைத்தல் _ சோர்தல் : சுவை குறைதல் : சாரமின்மை :தன்மை குன்றுதல் : பச்சை நிறமாதல்.




இலைப் பாசி _ பாசிவகை :ஒரு பூண்டு.
இலைப்பி _ இலைச் சாம்பல்.
இலைப் பொல்லம் _ இலை தைக்கை :வாழையிலைத்துண்டு.
இலை மறை காய் _ மறை பொருள்.
இலையடை _ அப்ப வருக்கம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:35 am

இலையமுது _ வெற்றிலை.
இலையான் _ ஈ என்னும் பறவை.
இலெளகிகம் _ உலக நடை: உலகிற்கு உரியது.
இல் _ வீடு : இல்லறம் : மனைவி : இடம் : குடி : இன்மை :சாவு : தேற்றா மரம் :இராசி எதிர் மறை : இடைநிலை : வேற்றுமை உருபு .
இல் பொருள் _ அசத்து : இல்லாத பொருள் .



இல்லகம் _ வீடு.
இல்லக் கிழத்தி _ மனைவி.
இல்லடை _ அடைக்கலம் : ஒட்டடை : பண்ட சாலை.
இல்லது _ இல்லாதது : மனையில் உள்ளது :பிரகிருதி.
இல்லத்துப் பிள்ளை _ ஈழவர் பட்டப் பெயர்.




இல்லம் _ வீடு : இல் வாழ்க்கை : மனைவி : தேற்றா மரம்.
இல்லல் _ நடக்கை : போகுதல் : கடத்தல் .
இல்லவள் _ மனைவி : வறியவள்.
இல்லவன் _ கணவன் : தலைவன் : வறியவன்.
இல்லவை _ இல்லாதவை : மனையில் உள்ளவை.


இல்லறம் _ இல் வாழ்க்கை : இல் வாழ்வார் கடமை.
இல்லாக் குடி _ வறுமையுடைய குடும்பம்.
இல்லாக் குற்றம் _ வறுமை :அபாண்டம் : பொய்க் குற்றச்சாட்டு.
இல்லாண் முல்லை _ பாசறைத் தலைவனை இல்லாள் நினைக்கும் புறத்துறை : தலைவி கணவனை வாழ்த்தி விருந்தோம்பும் புறத்துறை.


இல்லாண்மை _ குடும்பத்தை ஆளும் தன்மை.
இல்லாத்தனம் _ வறுமை.
இல்லாதவன் _ வறுமையுடையவன்.
இல்லாமை _ வறுமை : இன்மை.
இல்லாள் _ மனைவி : மருத, முல்லை நிலங்களின் தலைவியர்: வறுமையுடையவள்.


இல்லாளன் _ கணவன் : இல்லறத்தான்.
இல்லி _ சில்லி :பொள்ளல் :ஓட்டை : தேற்றா மரத்தின் இலை :வால்மிளகு :ஒரு வகைப்புழு.
இல்லிக்காது _ சிறிய துளையுடைய காது.
இல்லிக்குடம் _ ஓட்டைக் குடம்.
இல்லிடம் _ வீடு : ஊர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 7 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக