புதிய பதிவுகள்
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
107 Posts - 49%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
30 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
9 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
7 Posts - 3%
prajai
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
3 Posts - 1%
Barushree
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
234 Posts - 52%
heezulia
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
30 Posts - 7%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
18 Posts - 4%
prajai
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
5 Posts - 1%
Barushree
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 0%
JGNANASEHAR
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - இ - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - இ


   
   

Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:08 am

First topic message reminder :

இ - தமிழ் நெடுங்கணக்கில் மூன்றாம் உயிரெழுத்து; ஒரு சுட்டெழுத்து (எ.கா - இவன், இவ்வீடு); ஏவல்; வியங்கோள் ஒருமை வினைமுற்று விகுதி (எ.கா - செல்லுதி, வருதி); வினையெச்ச விகுதி (எ.கா - நாடிச் சென்றான்); பெண்பால் பெயர் விகுதி (எ.கா - மனைவி); தொழிற்பெயர் விகுதி (எ.கா - வெகுளி); பறவைகளுள் ஆந்தையைக் குறிப்பது; அண்மைச்சுட்டு.
இஃது - இது; அஃறிணை ஒருமைச்சுட்டு:அண்மைச்சுட்டு
இக்கட்டு - துன்பம்; நெருக்கடி; நிலை; இடுக்கண்; தடை; இடையூறு; வெல்லக்கட்டி
இக்கு - கரும்பு; சாராயபானம்; இடை: கரும்பு: .இடுக்கி: கள்: தேன்: சீலையை இறுக்கிக் கட்டும் முடிச்சு.
இக - தாண்டிச் செல்; கடந்து செல்; பிரிந்து செல்; நீங்கு; போ [இகத்தல்]

இகபரம் - இம்மையும் மறுமையும்
இகம் - இம்மை; இவ்வுலகம்
இகல் - பகை; விரோதம்; போர்; வலிமை; சிக்கல்; புலவி: அளவு
இகழ் - அவமதித்தல் செய்; மற; கவனக் குறைவகு [இகழ்தல், இகழ்ச்சி]; நிந்தை செய்
இகழ்வு - நிந்தை

இகுளை - தோழி; சுற்றம்; நட்பு; உறவு
இங்கண் - இவ்விடம்
இங்கிதம் - இனிய மன உணர்ச்சி; கருத்து; நோக்கம்; இனிய நடத்தை; இனிமை: சமயோசித நடை: குறிப்பு.
இங்கு - இவ்விடம்; இவ்விடத்தில்
இங்குலிகம் - (பாதரச -கந்தகக் கூட்டுப் பொருளான) சாதிலிங்கம்

இங்கே - இங்கு; இவ்விடத்தில்
இங்ஙன், இங்ஙனம் - இங்கு; இவ்வாறு
இச்சகம் - முகத்துதி; முகமன்: நேரில் புகழ்ந்துரைப்பது: பெறக் கருதிய தொகை.
இச்சாசத்தி (இச்சாசக்தி) - (சிவனின் ஐந்து சக்திகளில் ஒன்றான) நினைப்பு மாத்திரையால் பிறக்கும் சக்தி; விருப்பாற்றல்
இச்சை - விருப்பம்; ஆசை; தொண்டு; வினா: அறியாமை

இசி - ஒடித்தல்; உரித்தல்; சிரிப்பு; உரிக்கை: ஒடிக்கை
இசிப்பு - இழுத்தல்; நரம்பு; வலிப்பு; சிரிப்பு; இழுப்பு.
இசின் - செய்யுளில் வரும் ஓர் அசை நிலை; ஓர் இறந்தகால இடைநிலை; ஓர் அசைச் சொல்.
இசும்பு - ஏற்ற இறக்கங்கள் மிகுந்த கரடு முரடான வழி; செங்குத்துச் சரிவு
இசை - ஓசை; ஒலி; பாட்டு; புகழ்; சொல்; பொருத்தம்; இசைவு; இலாபம்; ஒலி செய்; பாட்டு பாடு; இசைக் கருவியை வாசி; சொல்லு; பேசு; பொருந்து; கிடைக்கப்பெறு; சக்திக்கு உட்பட்டிரு; உண்டுபண்ணு; போன்றிரு; தாராளமாக வழங்கு [இசைதல், இசைத்தல்]; பொன்: ஊதியம்: நரம்பில் பிறக்கும் ஓசை:இனிமை: இணக்கம்: பண்கூடி நிற்பது.

இசைகேடு - ஸ்வரத்தில் பிழை; அபகீர்த்தி; சீர்கேடான நிலை; இகழ்வு: பழியுண்டாதல்: இசை பாடுவதில் தவறு உண்டாதல்.
இசைத் தமிழ் - (முத்தமிழுள் ஒன்றான) பாடுவதற்கு ஏற்ற தமிழ்ப்பாட்டு
இசைவாணர் - பாடகர்; இசை வல்லோர்
இசைவு - பொருத்தம்; தகுதி; உடன்பாடு; பெருந்துகை; ஏற்றது
இஞ்சி - இஞ்சி என்ற மருந்துப் பூடு; கோட்டையின் மதில்; இஞ்சிக்கிழங்கு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:22 am

இத்தனை _ இவ்வளவு : சில.
இத்தி _ கல்லாலமரம் : பூனை .
இத்தி நடையம் _ நத்தை.
இத்துணை _ இவ்வளவு.
இத்துமம் _ வசந்தம் : விறகு : காமம் : ஒரு வகைச்சுள்ளி.




இத்து , இத்துரா _ ஒரு வகைப் புல்: காமாட்சிப்பல்.
இத்துவரம் _ எருது.
இத்துவரன் _ கயவன் : தீயோன் : வறியன்.
இத்தை _ இதனை : முன்னிலை அசைச் சொல்.
இந்த _ அண்மைப் பொருளைச் சுட்டும் பொருள்.




இந்தப்படிக்கு _ இப்படிக்கு.
இந்தம் _ புளிய மரம்: விறகு.
இந்தளங் குறிஞ்சி _ ஒரு பண்.
இந்தளம் _ மருத யாழ்த் திற வகை:தூபமுட்டி: கும்மட்டிச் சட்டி.
இந்தனம் _ விறகு : புகை.




இந்தனோடை _ மேலாடை.
இந்தா _ இதனைப் பெற்றுக் கொள் என்னும் குறிப்பு மொழி: இதோ, இங்கே வா என்னும் குறிப்பு மொழி.
இந்தி _ பூனை: திருமகள்: இந்தியத் தேசிய மொழி.
இந்தியம் _ இந்திரியம்.
இந்தியன் _ இந்திய நாட்டைச் சேர்ந்தவன்.




இந்தியா _ பரத கண்டம்: பாரத நாடு.
இந்திரகணம் - செய்யுட் கணத்துள் ஒன்று: முதற் செய்யுளின் முதற் சீரினைத் தேமாங்காய் என்னும் வாய் பாடாகக் கொண்டு பாடுவது.
இந்திரகம் _ சபா மண்டபம்.
இந்திரகாளியம் _ ஓர் இசைத்தமிழ் நூல்.
இந்திர கோடணை _ இந்திரவிழா.




இந்திரகோபம் _ தம்பலப்பூச்சி.
இந்திர சாபம் _ இந்திரனுடைய வில் வானவில்.
இந்திர சாலம் _ மாய வித்தை: அற்புதங்களைக்காட்டும் கண்கட்டு வித்தை: ஏய்ப்பு.
இந்திரசாலி _ அழிஞ்சில் : இந்திரசாலை வித்தை செய்பவன்.
இந்திர சித்து _ இந்திரனை வென்றவன் : இராவணன் மகன்: கருடன் : கிருட்டிணன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:23 am

இந்தர சுகந்தம் _ நன்னாரி.
இந்திர சேனை _ துரோபதை.
இந்திர ஞாலம் _ சூரபதுமனின் தேர்.
இந்திர தரு _ மருது.
இந்திர திசை _ கிழக்குத்திக்கு.



இந்திர திருவன் _ இந்திரனைப்போன்று செல்வமுடையவன்.
இந்திர நகரி _ தேவலோகம்: திருத்தணிகை.
இந்திர நாள் _ கேட்டை நாள்.
இந்திர நீலம் _ சிறந்த நீலமணி.
இந்திரப் பிரியம் _ பொதியமலைச் சந்தனம்.



இந்திரபம் _ வெட்பாலை.
இந்திர புட்பம் _ வெண்தோன்றி.
இந்திர புரி _ இந்திரன் தலைநகராகிய அமராவதி.
இந்திர புரோகிதன் _ தேவகுரு வாகிய வியாழன்.
இந்திரம் _ மேன்மையானது : இந்திரியம் : இந்திர பதவி : ஆத்துமா : கடப்ப மரம்.



இந்திரர் _ தேவர்.
இந்திர லோகம் _ சுவர்க்கம் : துறக்கம்.
இந்திரவணி _ சங்க நிதி : பதும நிதி.
இந்திர வதி _ ஓர் ஆறு.
இந்திரவல்லி _ பிரண்டை : முடக்கொற்றான்.



இந்திரவாருணி _ பேய்க் கொம்மட்டி.
இந்திரவிகாரம் _ காவிரி பூம் பட்டணத்தில் இருந்த ஒரு பெளத்த பள்ளி.
இந்திரவில் _ வானவில்.
இந்திரவிழா _ இந்திரனுக்குச் சிறப்பு செய்யும் திருநாள்.
இந்திரன் மைந்தன் _ சயந்தன் : வாலி : அருச்சுணன்.



இந்திரன் நாள் _ கேட்டை.
இந்திரா _ திருமகள்.
இந்திராக்கம் _ குதிரைக்காதின் அடியில் காணப்படும் சுழி வகை.
இந்திராணம் _ நொச்சி.
இந்துமரம் _ கடம்பு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:23 am

இந்து ரத்தினம் _ முத்து்.
இந்துரம் _ எலி : பெருச்சாளி.
இந்து ரவி கூட்டம் _ சந்திர சூரியர் ஒருங்கிணையும் நாள்: அமாசை.
இந்து ரேகை _ சந்திர கலை.
இந்து லோகம் _ வெள்ளி.


இந்துளம் _ நெல்லி மரம்: கடப்ப மரம்.
இந்துள்ளி _ இலந்தை.
இந்துஸ்தானம் _ நருமதை நதிக்கு வட பாலுள்ள இந்தியப்பகுதி : வட இந்தியா.
இந்தோளம் _ ஊசல் :மாலைப்பண் வகை: ஓர் ராகம்.
இபங்கம் _ புளி மா.


இபம் _ மரக் கொம்பு: யானை.
இபாரி _ சிங்கம்.
இபுதார் _ நோன்புக்குப் பின் செய்யும் பாரணை.
இபுனு _ வழித்தோன்றல்.
இப்படிக்கு _ இங்ஙனம்.



இப்பந்தி _ பேடி: கலப்புச்சாதி : சங்கடம் : மூடன் : பேதை : வகை தெரியாதவன்.
இப்பர் _ இடையர் : வைசியர் : வணிகர் : கோவைசியர் : வேளாளர்.
இப்பாடு _ இவ்விடம்.
இப்பி _ கிளிஞ்சல் : சங்கு: சிப்பி.
இப்பியை _ பெண் யானை : வெள்ளைக் குங்கிலியம்.



இப்பிவெள்ளி _ கிளிஞ்சலை வெள்ளி என்று எண்ணும் மயக்க உணர்வு.
இப்புறம் _ இவ்விடம்.
இப்பை _ இருப்பை : இலுப்பை.
இப்பொழுது , இப்போது _ இந் நேரம்.
இமகரன் , இமகிரணன் _ குளிர்ந்த கதிர்களை உடையவனான சந்திரன்.



இமகிரி _ இமயமலை.
இமசலம் _ பனிநீர்.
இமசானு _ இமய மலை: இமய மலை மேற்பரப்பு.
இமம் _ சந்தனம் : சீதளம் : பனி.
இமயம். _ இமயமலை : மந்தர மலை: மேருமலை: பொன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:24 am

இமய வதி _ இமவான் மகள் : பார்வதி.
இமயவரம்பன் _ இமய மலை எல்லை வரை வெற்றி கொண்டு அரசாண்ட ஒரு சேர மன்னன்.
இமயவல்லி _ பார்வதி.
இமய வில் _ மேருமலையாகிய வில்.
இமய வில்லி _ மேரு மலையை வில்லாக உடையவன்: சிவ பிரான்.



இமலம் _ மரமஞ்சள்.
இமவந்தம் _ இமயமலை.
இமாசலை _ பார்வதி.
இமாம் _ பள்ளி வாசலில் தொழுகை நடத்துபவர்.
இமாலயம் _ இமய மலை.



இமிர்தல் _ ஒலித்தல்: ஊதுதல் : மொய்த்தல்.
இமிலை _ ஓர் இசைக்கருவி.
இமில் _ கொண்டை : எருத்தின்திமில்.
இமிழ _ மிக.
இமிழிலை _ இய மரம் : ஒரு வகைப்பறவை.



இமைகொட்டல் _ இமைத்தல்.
இமைபொருந்துதல் _ உறங்குதல்.
இமைப்பொழுது _ கண்ணிமைக்கும் நேரம் : கணப்பொழுது.
இமையிலி _ கருடன்.
இம்பரர் _ இவ்வுலகத்தவர்.



இம்பரும்பர் _ இவ்வுலகத்தில் தேவராக மதிக்கப்படுபவர் பூசுரர்.
இம்பர் _ இவ்விடம் : இவ்வுலகம் : பின்.
இம்பல் _ பலகைச் சுருக்கத்தால் தோன்றும் இடைவெளி.
இம்பி _ கருந்தினை.
இம்பில் _ பண்டைக்காலத்து விளையாட்டு வகை.



இம்பூறல் _ சாயவேர்.
இம்மடி _ யானை.
இம்மட்டும் _ இதுவரையும்.
இம்மி _ மத்தங்காய்ப் புல்லரிசி: அணு: ஒரு சிற்றெண் : ஒரு சிறு நிறை: பொய்மை : புலன் : பத்து லட்சத்து எழுபத்தையாயிரத்து இரு நூற்றில் ஒரு பங்கு.
இம்மிக்கணக்கு _ கீழ் வாய் இலக்கக் கணக்க.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:24 am

இம்மியளவு _ அற்பம் குறிக்கும் ஓர் அளவு வகை.
இம்மெனல் _ விரைவுக்குறிப்பு.
இம்மை _ இவ்வுலக வாழ்வு: இப்பிறப்பு :இகபோகம்.
இயக்கம் _ இயங்குகை : குறிப்பு : வழி: சுருதி : இசைப்பாட்டு வகை : பெருமை: வடதிசை : ஒலி : மிகுதி.
இயக்கர் வேந்தன் _ குபேரன்.



இயக்கன் _ இயக்க கணத்தாள்: குபேரன் : தலைமையாக இருந்து நடத்துபவன்.
இயக்கி _ யட்சப் பெண் : கந்தருவப்பெண் : குபேரன் மனைவி : தருமதேவதை.
இயக்கினி _ கண்டங்கத்திரி.
இயக்குதல் _ தொழிற்படுத்துதல் : பழக்குதல் : செலுத்துதல்.
இயங்காத்திணை _ தனாக இடம் விட்டுப் பெயர இயலாத நிலைத்திணைப்பொருள்.



இயங்கியற் பொருள் _ இடம் விட்டு இடம் செல்லும் உயிர்ப்பொருள் : சரப்பொருள்.
இயங்குதல் _ அசைதல் : போதல் : உலாவுதல்.
இயங்குதிசை _ மூச்சு இயங்கும் மூக்குத்துளை.
இயங்குநர் _ வழிப்போவோர்.
இயங்குபடையரவம் _ பகையரணை முற்றுகை இடும் படையால் உண்டாகும் ஆரவாரம்.



இயத்தல் _ நிகழ்தல் : கடத்தல் : நடத்தல்.
இயந்தா _ யானைப்பாகன் : சாரதி.
இயந்திரமயில் _ மயிற்பொறி.
இயந்திரி _ இத்திமரம்.
இயந்தை _ மருத யாழ்த்திறம் : செவ்வழி யாழ்த்திறவகை.



இயபரம் _ இம்மை மறுமை: இகபரம்.
இயமகணம் _ யமனின் தூதர் : யமங்கிரர்.
இயமகம் _ ஓரெழுத்து முதல் பத்தெழுத்தீறாய் ஓரடிபோல் நான்கு அடியும் வரப்பாடுவது: யமகம்.
இயமங்கியர் _ பரசுராமர்.
இயமதூதி _ பாம்பின் நச்சுப் பற்களுள் ஒன்றான இயம தூதன்.



இயமபடர் _ யமதுதர்.
இயமம் _ யோகத்திற்குரிய எட்டு உறுப்புக்களுள் ஒன்று : கொலை களவு முதலியவற்றை நீக்கிப் புலன் அடக்குதல்.
இயமரம் _ பறைவகை.
இயமன் ஊர்தி _ எருமைக்கடா.
இயமானன் _ வேள்வித் தலைவன் : குடும்பத் தலைவன்: இந்திரன் : ஆன்மா : உயிர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:24 am

இயம் _ சொல்: ஒலி: வாத்தியம் :ஈ : மிருதாரசிங்கி எனும் மூலிகை.
இயம்பல் _ சொல் : பழமொழி.
இயம்புதல் _ ஒலித்தல் : சொல்லுதல் : துதித்தல் .
இயர் _ வியங்கோள் விகுதி.
இயலசை _ நேரசை: நிரையசை.



இயலடி _ இயற்சீரால் அமைந்து வரும் பாடலடி.
இயலணி _ இயற்கை அழகு.
இயலறிவு _ சொற்களின் பயிற்சி.
இயலாசிரியன் _ நாட்டிய நூல் கற்பிப்பவன்.
இயலாமை _ கூடாமை.



இயலுதல் _ கூடியதாதல் : உடன் படுதல் : நேர்தல் : பொருந்துதல் : தங்குதல் : செய்யப்படுதல் : அசைதல் : நடத்தல் : உலாவுதல்.
இயலொழுக்கம் _ நல்லொழுக்கம்.
இயல்பு வழக்கு _ எப்பொருளுக்கு எப்பெயர் இயல்பில் அமைந்ததோ அப்பெயரிலேயே அப்பொருளைக்கூறுகை.
இயல்பளவை _ சொல்லின் பொருளைச் சந்தர்ப்பத்தால் துணிந்து உணர்கை.
இயல்பூதி _ வில்வம் : நாய் வேளை.




இயல்வாகை _ பெருங்கொன்றை.
இயல்வாணர் _ புலவர்.
இயல்வு _ இயல்பு.
இயவம் _ வாற்கோதுமை : நெல் .
இயவணன் _ யவனன் : ஓவியன் : கம்மாளன்.




இயவன் _ கீழ்மகன் : தோற்கருவியாளன்.
இயவாகு _ கஞ்சி.
இயவு _ ஊர் : காடு : வழி: செலவு: புகழ்: சோர்தல்.
இயவுள் _ தலைமை : எப்பொருட்கும் இறைவன் : வழி : தெய்வம் : புகழாளன்: பிள்ளை.
இயவை _ துவரை : வழி : காடு: மூங்கிலரிசி: மலை நெல்வகை.



இயறல் _ முத்தி : போதல்.
இயற்காட்சி _ நற்கட்சி : நல்ல நம்பிக்கை.
இயற்கை அறிவு _ இயல்பாக அமைந்த அறிவு.
இயற்கைப்புணர்ச்சி _ தலைமகனும் தலைமகளும் தெய்வ சங்கல்பத்தால் கூடும் முதல்சந்திப்பு.
இயற்கையளபெடை _ இசை, விளி, பண்ட மாற்று முதலிய இடங்களில் நிகழும் அளபெடை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:24 am

இயற்கையின்பம் _ இயற்கை தரும் இன்பம் : இயற்கைப்புணர்ச்சியால் நேரும் இன்பம்.
இயற்கை உணர்வினனாதல் _ இறைவன் எண் குணங்களுள் ஒன்று.
இயற்சீர் _ அகவல் : உரிச்சீர்.
இயற்சீர் வெண்டளை _ மாமுன் நிரையும் விளமுன் நேரும் வரும் தளை.
இயற்பட மொழிதல் _ இயல்பு பொருந்தச் சொல்லுதல் : தலைவன் குணங்களைத் தலைவி புகழ்ந்து கூறும் அகத்துறை.



இயற்பலகை _ சங்கப்பலகை.
இயற்பழித்தல் _ தலைவன் குணங்களைத் தோழி இகழ்ந்து கூறும் அகத்துறை.
இயற்பா _ இயல்பான ஓசையுடைய பாட்டு : வெண்பா : நாலாயிர திவ்வியப்பிரபந்தத்துள் ஒரு பகுதி.
இயற்றி _ முயற்சி : ஆற்றல் : திறமை.
இயற்றியவர் _ செய்தவர்.



இயற்றும் வினை _ தன்வினை.
இயனம் _ மரமேறிகளின் கருவியுறை.
இயனெறி _ நல்லொழுக்கம்.
இயன்மகள் _ கலைமகள்.
இயன் மணம் _ இயற்கையான மணம்.



இயற்றும் வினை _ தன்வினை.
இயனம் _ மரமேறிகளின் கருவியுறை.
இயனெறி _ நல்லொழுக்கம்.
இயன்மகள் _ கலைமகள்.
இயன் மணம் _ இயற்கையான மணம்.



இயன் மொழி வாழ்த்து _ தலைவன் குலத்தோர் செய்திகளை அவன் மேல் ஏற்றி வாழ்த்தும் புறத்துறை.
இயாகம் _ கொன்றை : பாண்டம் : வேள்வி.
இயேசு _ கிறித்து நாதரின் பெயர்.
இயைதல் _ ஒத்தல் : பொருந்துதல் : இணங்கதல்.
இயைபுத் தொடை _ ஈற்றெழுத்து ஒன்றி வரத் தொடுப்பது.



இயைபு வண்ணம் _ இடையெழுத்துக்கள் மிகுந்து வரும் சந்தம்.
இயைபு வனப்பு _ இடையின ஒற்றுகளும் மெல்லினத்தில் ங தவிர ஏனைய பதினோரு ஒற்றுகளும் ஈற்றில் கொண்டு முடியும் நெடும் பாடல்.
இயைமே _ வாழைமரம்.
இயைவது _ தக்கது.
இயைவு _ இணக்கம் : பொருத்தம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:25 am

இர _ இரத்தல் : இரவு.
இரகசியம் _ மறைபொருள் : அந்தரங்கம் .
இரகு _ சூரியவமிசத்து அரசருள் புகழ் பெற்ற ஓர் அரசன்.
இரகுவமிசம் _ ஒரு நூல்.
இரக்கம் _ அருள் : மனவருத்தம் : ஒலி: துன்பம் : ஐயம்.



இரங்கல் _ அழுகை : உள்ளம் கசிந்து உருகுதல்.
இரங்கொலி _ முறையீடு.
இரசக்கட்டு _ இறுகச்செய்த பாதரசம்.
இரசக்களிம்பு _ புண் ஆற்றும் மருந்துவகை.
இரசக்குடுக்கை _ பாதரசம் அடைக்கும் குப்பி.



இரசக்குழி _ பாதரசம் எடுக்கும் சுரங்கம்.
இரசகம் _ பீர்க்கு.
இரசகருப்பூரம் _ பூச்சி மருந்து: ஒரு வகை மருந்துச்சரக்கு.
இரசகன் _ வண்ணான்.
இரசகி _ வண்ணாத்தி.


இரசகுண்டு _ அலங்காரமாகத்தொங்க விடும் இரசம் பூசிய கண்ணாடிஉருண்டை.
இரச குளிகை _ இரசத்தினால் செய்த மாத்திரை : சித்தர் குளிகை.
இரசச் சுண்ணம் _ பூச்சி மருந்து வகை.
இரச சுத்தி _ ஈயம்.
இரசதகிரி _ வெள்ளி மலையாகத்தோற்றம் பெறும் கயிலாயம்.



இரசதசபை _ வெள்ளியம்பலம் : மதுரையில் உள்ள நடராசர் சபை.
இரசதம் _ வெள்ளி : பாதரசம் : நட்சத்திரம் : யானைத்தந்தம் : வெள்ளை : முத்துமாலை : வெண்மாலை: பொன்.
இரசதாது _ பாதரசம்.
இரசதாளி _ ஒரு வகை வாழை: ரஸ்தாளி.
இரசபலம் _ இனிய நீரைக்கொண்ட காய்களையுடையது : தென்னை.



இரசபுட்பம் _ இரச கருப்பூரம்.
இரசப்பிடிப்பு _ முடக்குவாதம்.
இரசப்புகை _ பாதரசத்தின் ஆவி.
இரச மணி _ பாதரசம் கட்டிய மணி.
இரசமுறித்தல் _ பாதரசம் செய்தல் : உடம்பிலிருந்து பாதரச நஞ்சை நீக்குதல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:25 am

இரசம் _ சுவை: செய்யுட் சுவை: சாறு : பாதரசம் : மிளகு நீர்: வாயூறு நீர் : வாழை வகை : மா மரம் : இன்பம்.
இரசலிங்கம் _ சாதிலிங்ம் : சிவலிங்க வகை.
இரசவாதம் _ தாழ்ந்த உலோகங்களை உயர்ந்த உலோகமாக்கும் வித்தை.
இரசவாதி _ ஓர் உலோகத்தைப் பிரிதொன்றாக மாற்றுபவன்.


இரச வாழை _ பேயன் வாழை.
இரச வைப்பு _ இரசத்தால் ஆகிய மருந்து.
இரசனம் _ பொன் : வெள்ளி: நஞ்சு : பிசின் : பழம் : கழாயம் : இலைச்சாறு : ஒலி : உணவு : நேயம் : பல்.
இரசனா _ அரத்தை வகை.
இரசனி _ மஞ்சள் : அவுரி: செம் பஞ்சு : இரவு.


இரசனி முகம் _ மாலை நேரத்தில் நேரும் பிரதோஷ காலம்: சூரியன் மறைவிற்கு முன்னும் பின்னும் உள்ள மூன்றே முக்கால் நாழிகை.
இரசனை _ சுவை : படையின் அணிவகை: பதினாறு கோவையுள்ள அரைப்பட்டிகையான காஞ்சி.
இரசாதலம் _ கீழ் ஏழு உலங்களுள் ஒன்று.
இரசாபாசம் _ சுவைக்கேடு : சீர் கேடு.
இரசாயனம் _ நஞ்சு : இரசவாதம் : வேதியியல் : காயசித்தி மருந்து: மோர்.


இரசாலம் _ மாமரம் : கரும்பு : பலா : கோதுமை.
இரசாலை _ அறுகு : நா : வெள்ளீறில் என்னும் மர வகை.
இரசிகம் _ குதிரை : கயமைத்தனம் : யானை.
இரசிகன்_ காமுகன் : சுவைஞன்.
இரசிகை _ நா : காமுகி : மாதர் இடையணி.




இரசிதநாள் _ வெள்ளிக்கிழமை.
இரசிதம் _ வெள்ளி: பொன்னின் பூச்சு : முழக்கம் : ஒலி.
இரசித்தல் _ சுவைத்தல் : விரும்புதல்.
இரசுவம் _ குறுகிய அளவு : குற்றெழுத்து.
இரசேந்திரியம் _ சுவையுணர் : உறுப்பு : நாக்கு.


இரசை _ பங்கம் பாளை : பூமி : ஆனை வணங்கி :தினை : நா.
இரசோகுணம் _முக்குணத்துள் ஒன்று : மத்திமமான அறிவு.
இரசோபலம் _ இருள் : முத்து: இரசமணி.
இரசோனகம் _ வெள்ளுள்ளி.
இரச்சு _ கயிறு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Feb 02, 2010 1:25 am

இரச்சுப்பொறுத்தம் _ பத்துவகைக் கலியாணப் பொருத்தங்களுள் ஒன்று.
இரச்சுலம் _ கவண் : கல்லெறி கயிறு.
இரச்சுவம் _ குற்றெழுத்து.
இரஞ்சகம் _ துப்பாக்கியின் பற்று வாய் மருந்து : துப்பாகிக் காது :மகிழ்ச்சி தருவது.
இரஞ்சகன் _ இயக்குகிறவன்: சாயமூட்டுகிறவன் : விருப்பம் வரச்செய்கிறவன்.


இரஞ்சணம் _ மகிழ்ச்சி தருவது : செஞ்சாந்து.
இரஞ்சனி _ அவுரி : கவுள்.
இரஞ்சிதம் _ இன்பமானது : சித்தரிக்கப்பட்டது.
இரட்சகம் _ இரட்சிப்பு : மீட்பு : காத்தல்.
இரட்சகன் _ உய்விப்பவன் : காப்பாற்றுபவன்.


இரட்சணியம் _ காப்பு : மீட்பு.
இரட்சாபந்தனம் _ காப்புக் கட்டுதல்.
இரட்சாபோகம் _ பாதுகாவல் வரி.
இரட்சித்தல் _ காத்தல் : உய்வித்தல்.
இரட்சை _ காப்பாக இடுவது : திருநீறு : மந்தி ராட்சர யந்திரக்காப்பு.


இரட்டகத்துத்தி _ கத்தூரி வெண்டை.
இரட்டர் _ இராட்டிர கூட அரசர்.
இரட்டல் _ இரண்டாதல் : அசைத்தல் : மாறி மாறி ஒலித்தல் : யாழ்நரம்போசை.
இரட்டாங்காலி _ இரட்டையாகக் கிளைக்கும் மரம்.
இரட்டி _ இரு மடங்கு : இணைக்கை.


இரட்டிதல் _ இருமடங்காக்குதல் : திரும்பச் செய்தல் : இகழ்தல்: மாறுபடுதல்.
இரட்டிப்பு _ இருமடங்கு.
இரட்டு _ ஒலி : முருட்டுத் துணி: இரட்டையாய் இருத்தல்.
இரட்டுதல் _ இரட்டித்தல் : மாறியொலித்தல் : ஒலித்தல் : அசைதல் : வீசுதல் : கொட்டுதல் .
இரட்டுமி _ பறை வகை.


இரட்டுறக்காண்டல் _ ஐயக் காட்சி: ஒன்றை இரு வேறு பொருளாகப் பார்க்கை.
இரட்டுற மொழிதல் _ இரு பொருள் படப் பேசுதல்: ஓர் உத்தி.
இரட்டுறல் _ சிலேடை : இரு பொருள் படுகை.
இரட்டுறுதல் _ இரு பொருள் படுதல் : ஐயுறுதல் மாறுபடுதல்.
இரட்டை _ இணை : கணவன் மனைவியர் : இரட்டைப்பிள்ளைகள் : இரட்டை எண் : மிதுனராசி : ஆனிமாதம் : வேதம் ஓதும் வகைகளுள் ஒன்று , முத்து வகை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக