புதிய பதிவுகள்
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Today at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Today at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Today at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Today at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Today at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Today at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Today at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Today at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Today at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Today at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
83 Posts - 56%
heezulia
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
22 Posts - 92%
T.N.Balasubramanian
தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_m10தமிழ் அகராதி - ஆ - Page 4 Poll_c10 
2 Posts - 8%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ் அகராதி - ஆ


   
   

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:46 pm

First topic message reminder :

ஆ - இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?); இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்); எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத); பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா); பசு; எருது; ஆன்மா; ஆச்சாமரம்; விதம் (ஆறு என்பதன் கடைக்குறை)
ஆக்கம் - சிருட்டி; உண்டாக்குதல்; அபிவிருத்தி; இன்பம்; செல்வம்; இலக்குமி; தங்கம்; வாழ்த்து
ஆக்கல் - படைத்தல்; சமைத்தல்
ஆக்கியோன் - படைத்தவன்; ஒரு நூல் செய்தவன்
ஆக்கிரமி - வலிமையைக் கைக் கொள் [ஆக்கிரமித்தல், ஆக்கிரமணம்]

ஆக்கினை - கட்டளை; உத்தரவு; தண்டனை
ஆக்கு - சிருட்டித்தல்; சிருட்டி; உண்டாக்கு; தயார் செய்; சமைத்தல் செய்; உய்ரர்த்து [ஆக்குதல், ஆக்கல்]
ஆக்கை - (யாக்கை) உடம்பு; நார்
ஆக - அவ்வாறு; மொத்தமாய்; நான்காம் வேற்றுமை உருபுடன் வரும் துணையுருபு (எ.கா - எனக்காகச் செய்)
ஆகட்டும் - ஆகுக; ஆம்

ஆகம் - உடம்பு; மார்பு; மனம் அல்லது இதயம்
ஆகமம் - வேத சாஸ்திரங்கள்; வருகை
ஆகமனம் - வந்து சேர்தல்
ஆகரம் - இரத்தினக் கற்கள் கிடைக்கும் சுரங்கம்; உறைவிடம் கூட்டம்
ஆகவே - ஆதலால்

ஆகா - வியப்பு, சம்மதம் போலவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஆகாத என்பதன் கடைக்குறை; ஆகாத ; ஆகமாட்டா
ஆகாசக்கோட்டை - (உண்மையில் இல்லாத) கற்பனை; மனோராஜ்யம்
ஆகாச கமனம், ஆகாய கமனம் - காற்றில் நடந்து செல்லும் வித்தை
ஆகாசத்தாமரை - கொட்டைப்பாசி; ஒருவகை நீர்த்தாவரம்; 'ஆகாயத்தில் தாமரை' என்பது போல் இல்லாத பொருள்
ஆகாசம், ஆகாயம் - ஐம்பூதங்களில் ஒன்றான 'வெளி' வானம்; வாயுமண்டலம்

ஆகாசவாணி, ஆகாயவாணி - அசரீரியான; வானொலி
ஆகாத்தியம் - பிடிவாதமும் பாசாங்கு
ஆகாதவன் - பகைவன்; பயற்றவன்
ஆகாமியம் - வரு பிறப்புக்களில் பலன் தரக்கூடிய இப்பிறப்பு நல்வினை தீவினைகள்
ஆகாயம் - ஆகாசம்

ஆகாரம் - உருவம்; வடிவம்; உடம்பு; உணவு; நெய்; வீடு
ஆகிய - பண்பை விளக்கும் மொழி
ஆகிருதி - உருவம்; வடிவம்
ஆகு - எலி; பெருச்சாளி
ஆகுதி - ஓமத் தீயில் இடும் நெய்; உணவு போன்ற பலி



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:54 pm

ஆரார் - பகைவர்.
ஆராவமுதம் - தெவிட்டாத அமுதம்.
ஆரவம் - ஒலி : சத்தம் : அரவம் : தொனி.
ஆராவுணர்வு - சிற்றறிவு.
ஆரி - அருமை : அழகு : மேன்மை : சோழன் : கதவு : ஆத்திமாலை : துர்க்கை :
தோல்வி : பார்ப்பனி.


ஆரித்தல் - ஒலித்தல்.
ஆரிடம் - பசு, எருதுகளின் முன்னிலையில் நீர் பெய்து கன்னிகையைக் கொடுக்கும் மணம் : முனிவர் அருளிய நூல் : வழக்கு நிலம்.
ஆரிடர் - மிகுந்த துன்பம் : முனிவர் : சமணர் : குருமார்.
ஆரிடலிங்கம் - முனிவர்களால் அமைக்கப்பெற்ற இலிங்கம்.
ஆரிடை - அரியவழி.


ஆரிப்படுவர் - அரிதாய் இழியும் வழி.
ஆரிய - சிறிய.
ஆரியக்குச்சரி - மருத யாழ்த்திறத்தொன்று.
ஆரியக்கூத்து - கழைக்கூத்து.
ஆரியநாடு - ஆரியாவர்த்தம் : ஒரு நாடு.


ஆரியப் பாவை - பாவைக் கூத்து வகை.
ஆரியப்பூமாலை - அடங்காப் பெண்.
ஆரியம் - இமயமலை, விந்திய மலைகளுக்கு இடையேயுள்ள நாடு : வடமொழி : கேழ்வரகு : அழகு : செல்வப் பொருள் : தேடப் பெறுவது : நற்குணமுடையது : பூசிக்கப் பெறுவது.
ஆரியர் - அறிவாளிகள் : ஆசிரியர் : மிலேச்சர் : தொம்பர் : உயர்குலத்தோர் : தலைவர் : ஐயனார் : கழைக்கூத்தர் : குரு : சிவன் : சூரியன் : நண்பர் : வியாழன் : மருத்துவன்.
ஆரியாங்கனை - சமணத் தவப்பெண்.


ஆரியை - காளி : பார்வதி.
ஆரீதம் - பச்சைப்புறா.
ஆருணி - அயோதன் : பிரிவினைக்காரன் : தாழ்ந்தோன் : உபநிடதம் முப்பத்திரண்டில் ஒன்று : பாஞ்சாலராசன் : உதயணனோடு போராடி மாண்டவன்.
ஆருத்திரை - திருவாதிரை.
ஆருயிர் மருந்து - உணவு.


ஆரூபம் - ஒல்லாமை : நீங்காமை.
அரூரன் - சுந்தரமூர்த்தியார்.
ஆரூர் - திருவாரூர்.
ஆரூர்க்கால் - ஒரு வகைக் கர்ப்பூரம்.
ஆரோகம் - மறையோதும் முறைகளுள் ஒன்று.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:54 pm

ஆரோக்கியம் - நோயின்மை.
ஆரோசை - ஏற்றிப் பாடும் இசை.
ஆரோபணம் - அணிதல் : உயர்த்துதல் : ஏற்றுதல் : ஒப்புக் கொடுத்தல் : நாட்டுதல்.
ஆரோபிதம் - ஏற்பட்டது : கற்பிக்கப்பட்ட குற்றம்.
ஆரோபித்தல் - ஆரோபம்.


ஆர்கை - தின்னுதல்.
ஆர்கோதம் - கொன்றை : சரக் கொன்றை.
ஆரக்கம் - இலாபம்.
ஆர்க்கு - இலைக்காம்பு.
ஆர்க்கை - கட்டு : துரும்பு : வரிச்சு : ஈர்க்கு.


ஆர்ச்சவம் - ஒத்த நோக்கம்.
அர்ச்சனம் - சமாபத்தியம்.
ஆர்தல் - அடைதல் : பெறுதல் : ஒத்தல் : அனுபவித்தல் : குடித்தல் : நிறைதல் : பொருந்துதல் : புசித்தல் : தங்குதல் : அணிதல் : கட்டல் : தொடுத்தல் : பரவுதல் : உண்ணுதல்.
ஆர்த்தர் - எளியர் : நோயுற்றோர் : பெரியோர்.
ஆர்த்தல் - ஒலித்தல் : கட்டல் : பொருதல் : ஆரவாரித்தல் : கட்டிக் கொள்ளுதல் : கொக்கரித்தல்.


ஆர்த்தவம் - புட்பம் : விரிமலர் : தாமம் : பூ.
ஆர்த்தன் - நோயுற்றோன் : துன்புறுவோன்.
ஆர்த்தார்க்கோன் - சோழன்.
ஆர்த்தி - துன்பம் : அனுபவம் : கழிவு : விருப்பம் : சிவன் ஐவகை வடிவில் ஒன்று : விற்குகை.
ஆர்த்திகை - துன்பம் : துயரம் : வருத்தம்.


ஆர்த்தியம் - காட்டுத்தேன்.
ஆர்த்திரகம் - இஞ்சி.
ஆர்த்துதல் - ஊட்டுதல் : நுகர்வித்தல் : நிறைவித்தல் : கொடுத்தல்.
ஆர்பதம் - நிழல் : வண்டு : உணவு.
ஆர்ப்பரவம் - ஆரவாரம்.


ஆர்ப்பரித்தல் - ஆரவாரஞ் செய்தல்.
ஆர்மதி - கடகராசி : நண்டு.
ஆர்மை - கூர்மை : மதில் : நுண்மை.
ஆர்வமொழி - அலங்கார வகைகளுள் ஒன்று.
ஆர்வலன் - அன்புடையவன் : பரிசிலன் : கணவன்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:54 pm

ஆர்வு - செல்வம் : நிறைவு : விருப்பம் : ஆராய்தல் : உண்ணல்.
ஆர்வை - கோரைப்பாய்.
ஆல - ஆரவாரித்து : அழைப்ப : ஆட.
ஆலகண்டன் - சிவன்.
ஆலகம் - நெல்லி மரம் : சோம்பு.


ஆலகாலி - காளி.
ஆலங்காடு - திருவாலங்காடு என்னும் ஊர்.
ஆலங்காட்டாண்டி - ஒருவகை வரிக்கூத்து.
ஆலச்சுவர் - சார்புச் சுவர்.
ஆலத்தரன் - சிவன்.


ஆலந்தை - ஒரு சிறு மரம்.
ஆலமர் கடவுள் - தென்முகக் கடவுள்.
ஆலமர் செலவன், ஆலமுண்டோன் - சிவபெருமான்.
ஆலமுற்றம் - புகாரில் சிவபிரான் எழுந்தருளியிருந்த கோயில்.
ஆலம்பம் - பற்றுக்கோடு : தூங்கல் : புகலிடம் : இலம்பகம்.


ஆலவன் - திருமால் : திங்கள்.
ஆலவனம் - திருவாலங்காடு.
ஆலவாய் - தென்மதுரை : பாம்பு.
ஆலவாலம் - மரத்தின் கீழ்ப்பாத்தி : விளை நிலம்.
ஆலவூணி - உமாதேவி.


ஆலா - கடற்பறவை.
ஆலாகலம் - நஞ்சு.
ஆலாசியம் - மதுரை.
ஆலாதலம் - நெருப்புக் கொள்ளி : தீக்கங்கு.
ஆலாத்து - கப்பலின் பெருங்கயிறு : ஒரு புள் : நீராஞ்சனம்.


ஆலாபனம் - இசைவிரித்துப் பாடுகை.
ஆலாபித்தல் - பன்னிப் பன்னிப் பாடுதல்.
ஆலாப்பறத்தல் - திண்டாடுதல்.
ஆலிகை - அகலிகை.
ஆலிடம் - தெருச்சிறகு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:55 pm

ஆலித்தல் - ஒலித்தல் : களித்தல் : செருக்குதல்.
ஆலிநாடன் - திருமங்கையாழ்வார்.
ஆலிப்பு - ஆரவாரம்.
ஆலியப்பறை - பறையரில் ஒரு வகுப்பார்.
ஆலீடம் - வில்வீரர் நிலைகளுள் ஒன்று.


ஆலுதல் - களித்தல் : ஒலித்தல் : தங்குதல் : ஆடுதல் : நிறைதல்.
ஆலூகம் -வில்வம்.
ஆலேகிணி - எழுத்தாணி : வரை கோல்.
ஆலைக்குழி - கரும்பாலையிற் சாறேற்கும் அடிக்குழி.
ஆலை பாய்தல் - மனஞ்சுழலுதல் : அலைவுறுதல் : ஆலையாட்டுதல்.


ஆலையம் - ஆலயம்.
ஆலோகம் - ஒளி : பார்வை.
ஆலோசித்தல் - எண்ணமிடுதல்.
ஆலோபம் - வருத்தம்.
ஆலோன் - திங்கள் : வருணன் : சிவன்.

ஆல்வாட்டுதல் - சிறிது காயச் செய்தல்.
ஆவ - ஓர் அபய இரக்கக் குறிப்புச் சொல்.
ஆவகன் - ஏழு மருத்துவர்களில் ஒருவன்.
ஆவசியகம் - இன்றியமையாதது.
ஆவசீவாளம் - முழுநிலைமை.


ஆவஞ்சி - ஒரு தோற்கருவி : இடக்கை.
ஆவடுதுறை - திருவாவடுதுறை என்னும் ஊர்.
ஆவட்டங்கொட்டுதல் - இல்லையென்று சொல்லித் திரிதல்.
ஆவட்டை - சோர்வு : ஒரு செடி.
ஆவணமாக்கள் - குடஓலை தேரும் மாக்கள் : பிரமாணம் வாங்குவோர்.


ஆவணவோலை - உரிமைப் பத்திரம்.
ஆவது - ஆகவேண்டியது.
ஆவத்து - ஆபத்து : இடர்.
ஆவநாழி, ஆவநாழிகை - அம்பறாத்தூணி.
ஆவம் - அம்பறாத் தூணி : குங்கும மரம் : நாணி : வேலுறை : ஆவேசம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:55 pm

ஆவயின் - அவ்விடம்.
ஆவரணம் - ஆணவமலம் : ஈட்டி : கேடகம் : தடை : புறவேலி : மதில் : மூடுதல் : ஆடை : சீலை : கோட்டை.
ஆவரணசத்தி - பசு, பதி, பாசம் மூன்றையும் பேதந்தெரியாமல் மறைக்கும் ஒரு சக்தி.
ஆவரணச் சுவர் - கோவில் திருமதில்.

ஆவரணீயம் - மறைப்பது.
ஆவரி - அம்பு.
ஆவரித்தல் - மறைத்தல்.
ஆவர்த்தனம் - மறுமணம் : ஆவர்த்தம் : உருக்குதல் : கடைதல் : கலக்குதல் :
சுழற்றுதல் : பழக்கம்.
ஆவர்த்தி - தடவை : முறைமை : எல்லை.


ஆவலங்கொட்டுதல் - ஆர்த்துவாய் கொட்டுதல்.
ஆவலர் - உற்றார்.
ஆவலித்தல் - அழுதல் : புலம்பல் : ஆசைப்படுதல் : கொட்டாவி விடுதல்.
ஆவலிப்பு - செருக்கு.
ஆவறி - அங்கலாய்ப்பு : அவா : பேராசை : பற்று.


ஆவற்காலம் - இறுதி நாள்.
ஆவா - [ஆஆ] இரக்கக் குறிப்பு : வியப்பு.
ஆவாகனம் - தெய்வத்தை மந்திர முறையால் அழைத்தல்.
ஆவாசம் - நகரம் : மருதநிலத்தூர்.
ஆவாசித்தல் - ஆவாகனம்.


ஆவாரகம், ஆவாரம் - மறைப்பு : தாரகம் : மயக்குவது.
ஆவாரைப்பஞ்சகம் - ஆவாரஞ் செடியின் இலை : பூ : வித்து : பட்டை : வேர் என்பன,
ஆவார் - வாழ்வார் : உயர்வார் : பிழைப்பார் : உதவுவார் : தக்கார்.
ஆவிகை - பற்றுக்கோடு.
ஆவிச்சேர்த்தல் - கட்டியணைத்தல்.


ஆவிடையார் - ஆவுடையார்.
ஆவித்தல் - வாய்விடுதல் : கொட்டாவி விடுதல் : பெருமூச்சு விடுதல் : அங்காத்தல்.
ஆவிநன்குடி - பழநி.
ஆவிபத்திரம் - புகையிலை.
ஆவிபறிதல் - நீராவி யெழும்புதல் : இறத்தல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:55 pm

ஆவிபிடித்தல் - நீராவியால் வேது கொள்ளுதல்.
ஆவியர்கோ - பேகன் என்னும் வள்ளல்.
ஆவிரம் - இடையரூர் : யாதவர் கிராமம் : பாடி : இடைச்சேரி.
ஆவிருத்தி - திரும்பத் திரும்ப வோதுகை.
ஆவிர்ப்பவித்தல் - வெளிப்படுத்தல்.

ஆவிர்ப்பாவம் - வெளிப்படுகை.
ஆவுடையார் கோவில் - திருப்பெருந்துறை.
ஆவுதல் - விரும்புதல்.
ஆவுதி - வேள்வி.
ஆவுரிஞ்சி - மந்தைக்கல் : ஆதீண்டு குற்றி.


ஆவெனல் - அழுதற் குறிப்பு : இரக்கக் குறிப்பு : வாய் திறத்தற் குறிப்பு.
ஆவேகி - ஆடுதின்னப் பாளை.
ஆவேச நீர் - கள்.
ஆவேசவாதி - கபாலி மதத்தான்.
ஆவேசனம் - அக்கசாலையார் தெரு.


ஆவேதனம் - அறிக்கை : எச்சரிக்கை : விளம்பரம்.
ஆவேலி - தொழுவம்.
ஆவேறு - இடபம்.
ஆழகம் - சுரைக்கொடி.
ஆழங்கால், ஆழாங்கு - பலகை தாங்கச் சுவரில் பதிக்குங்கட்டை : ஆழமில்லாத நீர்நிலை.


ஆழங்காற்படுதல் - அழுந்துதல்.
ஆழமுடைத்தாதல் - நூலழகு பத்தில் ஒன்று.
ஆழம்பார்த்தல் - ஆழத்தை யளந்தறிதல் : ஒருவன் அறிவு முதலியவற்றை ஆராய்ந்தறிதல்.
ஆழல் - ஆழமுடைத்தாதல் : ஆழுதல் : கறையான் : தாழ்தல் : அழுந்துதல் : மூழ்குதல் : பதிதல் : தளர்தல் : சோர்தல் : நெகிழ்தல் : அழல்.
ஆழாத்தல் - ஈடுபடுதல்.


ஆழாரம் - வட்டமான புதைகுழி.
ஆழிதிருத்துதல், ஆழியிழைத்தல் - கூடலிழைத்தல்.
ஆழிதொட்டான் - ஏனாதி மோதிரம் தரித்த படைத்தலைவன்.
ஆழித்தீ - வடவையனல்.
ஆழித்தேர் - வட்டக் காலாற் சிறந்த தேர்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:55 pm

ஆழிமால்வரை - சக்கரவாள கிரி.
ஆழிமுரசோன் - காமன்.
ஆழியளித்தோன் - சிவன்.
ஆழியான் - திருமால்.
ஆழிவித்து - முத்து.


ஆழும்பாழுமாய் - சீர்கேடாய் : வீணாக.
ஆழ்கடல் துயின்றோன் - திருமால்.
ஆழ்ச்சி - தாழ்ச்சி : பதிவு : அழுந்துகை : ஆழம்.
ஆழ்தல் - ஆழமாதல் : அழுந்துதல் : மூழ்குதல் : வருந்துதல் : சோம்புதல்.
ஆழ்த்துதல் - அமிழ்த்துதல்.


ஆழ்வார்கன்மி - திருமால் கோயில் அர்ச்சகர்.
ஆழ்வு - ஆழம் : பள்ளம் : படுகுழி : கிடங்கு : ஆழ்தல் : பதிவு.
ஆளடிமை - அடிமை.
ஆளமஞ்சி - கூலியின்றி வாங்கும் வேலை.
ஆளரி - ஆண்சிங்கம் : நரசிங்க மூர்த்தி.


ஆளல் - ஆளுதல் : ஒருவகை மீன்.
ஆளறுதி - தனிமை.
ஆளன் - ஆள்பவன் : கணவன்.
ஆளாபம் - ஆலாபனம்.
ஆளாழம் - ஓர் ஆள் ஆழம்.


ஆளானம் - யானை கட்டுந்தறி : தூண்.
ஆளியூர்தி - துர்க்கை.
ஆளுங்கணத்தார் - ஊர்ச்சபையதிகாரிகள்.
ஆளுடையபிள்ளையார் - திருஞான சம்பந்தர்.
ஆளுடையான் - அடிமை கொண்டவன்.

ஆளுதல் - உடையராதல் : பயன்படுத்தல் : அரசு செய்தல் : வழங்குதல் : கைக்கொள்ளல் : அடிமை கொள்ளுதல் : ஓம்பல்.
ஆளெனல் - நாயின் கதறற் குறிப்பு.
ஆளொட்டி - காவற்கூடு.
ஆளோட்டி - வேலை வாங்குவோன்.
ஆளோலை - அடிமைச் சீட்டு.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:55 pm

ஆள்கை - ஆளுதல்.
ஆள்வணங்கி - அரசமரம் : தொட்டால் வாடி.
ஆள்வரி - தலைவரி.
ஆள்வழக்கற்ற - மனிதர் நடமாட்டமில்லாத.
ஆள் வாரம் - பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு.


ஆள்வினை வேள்வி - விருந்து புறந்தருகை.
ஆள்வு - ஆளுதல்.
ஆற அமர - அமைதியாய்.
ஆறங்கம் - வேதாங்கம்.
ஆறப்போடுதல் - காலந்தாழ்த்தல்.


ஆறலைத்தல் - வழிப்பறித்தல்.
ஆறலைப்பார் - வழியில் நின்றும் பறிப்பவர்.
ஆறல் பீறல் - பயனற்றது.
ஆறன் பட்டம் - தாள வகை.
ஆறாடி - தெருத்தோறும் அலைந்து திரிவோன் : தூர்த்தன் : வஞ்சகன் : காமுகன் : நிலை கெட்டவன் : சமயத்திற்கேற்றபடி பேசுபவன் : உறுதியற்ற பேச்சுக்காரன்.


ஆறாட்டம் - நோயுற்றோர் படும் வேதனை.
ஆறாட்டாடு - தீர்த்தவாரி விழா.
ஆறாதாரம் - மூலாதாரம் : சுவாதிட்டானம் : மணிபூரகம் : அனாகதம் :
விசுத்தி : ஆஞ்ஞை.
ஆறாதூறு - அவதூறு.
ஆறாமீன் - கார்த்திகை.


ஆறாயிரப்படி - திருவாய்மொழி : முதல் விரிவுரை.
ஆறியகற்பு - அறக் கற்பு.
ஆறுகட்டி - சைவர் காதில் அணியும் உருத்திராக்க மணிவடம்.
ஆறுகாட்டி - வழிகாட்டி.
ஆறுகை - ஆறுதல்.


ஆறு சூடி - சிவன்.
ஆறுசெய்கையான் - பார்ப்பான்.
ஆறுதல் - மனவமைதி : தணிவு : சூடு குறைதல் : ஒழிதல்.
ஆறுமுகன் - முருகன்.
ஆறெறிதல் - வழிப்பறித்தல்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:56 pm

ஆறெறிபறை - வழிப்பறி செய்வோர் அடிக்கும் பறை.
ஆற்றமாட்டாமை - முடியாமை : தாங்க முடியாமை.
ஆற்றலரி - கோடைச் சவுக்கு : பூடு வகை : முதலைப் பூண்டு : சேங்கொட்டை மரம்.
ஆற்றலை - வலியை உடையை.
ஆற்றறுத்தல் - இடையிற் கைவிடுதல் : வலியுறுத்தல்.


ஆற்றார் - வலியரல்லாதவர் : வறுமையுடையவர் : பொறுக்க மாட்டாதவர்.
ஆற்றிடல் - செய்தல்.
ஆற்றுக் காலாட்டியர் - மருத நிலப் பெண்கள் : பயிர்த்தொழில் செய்வோர்.
ஆற்றுக்கால் - வாய்க்கால்.
ஆற்றுதல் - செய்தல் : பொறுத்தல் : உய்தல் : கூடியதாதல் : போதியதாதல் : வலியடைதல் : தேடுதல் : உதவுதல் : சுமத்தல் : தணித்தல் : உலர்த்தல் : நீக்குதல்.


ஆற்றுநர் - உதவி செய்வார் : வன்மை யுடையார் : கைம்மாறு செய்வார் : ஆற்றுவார்.
ஆற்றுநெட்டி - நீர்ச்சுண்டி.
ஆற்றுபவர் - ஆற்றலுடையவர்.
ஆற்றுப்படுத்தல் - வழிப்படுத்தல் : போக்குதல் : வழிச் செலுத்தல்.
ஆற்றுப்படை - பரிசில் பெற்றான் ஒருவன் அதுபெறக் கருதிய ஒருவனை
ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் நூல் வகை.



ஆற்றுப்பித்தல் - ஆற்றோரம்.
ஆற்றுவரி - இசைப்பா வகையுள் ஒன்று.
ஆற்றுவாய் முகம் - நதி சங்க முகம்.
ஆற்றுவைப்பு - ஆற்றின் ஒதுக்கத்தால் சாகுபடிக்குத் தகுதியாகும் நிலம்.
ஆற்றொழுக்கு - ஆற்றின் நீரோட்டம் : சூத்திர நிலையுள் ஒன்று.


ஆன - அந்த.
ஆனகதுந்துபி - முரசு வகை.
ஆனகம் - துந்துபி : படகம் : தேவதாரு.
ஆனஞ்சு - பஞ்சகவ்வியம்.
ஆனதம் - சைனர்களுடைய கற்பலோகங்களுள் ஒன்று.


ஆனது - ஆகியது : அன்னது : நிகழ்ந்தது : பொருந்தியது.
ஆனந்த - ஓர் ஆண்டு.
ஆனந்தக் கண்ணீர் - மகிழ்ச்சி மிகுதியால் வருங் கண்ணீர்.
ஆனந்தக் களிப்பு - மகிழ்ச்சி மிகுதியால் பாடும் ஒருவகைப் பாட்டு.
ஆனந்தத் தாண்டவம் - சிவபெருமான் இயற்றும் திருக்கூத்து : ஆனந்த நிருத்தம்.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Feb 01, 2010 11:56 pm

ஆனந்த தீர்த்தர் - மத்துவாச்சாரியார்.
ஆனந்தன் - சிவன் : அருகன்.
ஆனந்த நித்திரை - யோகநித்திரை.
ஆனந்த படம் - கூறைப்புடவை.
ஆனந்தப்பையுள் - கணவன் இறப்ப மனைவி மெலிந்து வருந்தும் அறத்துறை : பிரிந்த தலைவன் தலைவி ஆகியவர்களது துன்பமிகுதியைப் பாட்டுடைத் தலைவனது நாட்டுடனும் ஊருடனும் சார்த்திச் சொல்வதாகிய நூற்குற்றம்.


ஆனந்தமயம் - இன்பம் நிறைந்தது.
ஆனந்த மயன் - கடவுள் : தன் வசமற்றிருப்போன்.
ஆனந்தரியம் - இவை ஆராய்ந்த பின் இது கேட்கற்பாற்று என்னும் யாப்பு.
ஆனந்தவுவமை - மிகுந்த இழிந்த பொருளோடு ஒப்பிடுதலாகிய உவமைக் குற்றம்.
ஆனந்தை - உமை : குறிஞ்சி யாழ்த்திறன்.


ஆனமானவன் - சிறந்தவன் : பெருமையுடையவன்.
ஆனம் - எழுத்துச் சாரியை : கள் : தெப்பம் : மரக்கலம்.
ஆனல் - நீங்கல்.
ஆனவன் - நண்பன்.
ஆனவை - ஆகியவை.


ஆனனம் - முகம்.
ஆனன் - சிவன்.
ஆனாமை - அமையாமை : நீங்காமை : உத்திராடம் : கெடாமை : குறையாமை : பொருந்தாமை.
ஆனாயகலை - வலை போன்ற வேட்டி.
ஆனாயர் - சிவத்தொண்டர்களுள் ஒருவர்.


ஆனாயன் - மாட்டிடையன்.
ஆனியம் - நாள் : பகல் : பருவம் : பொழுது : மூலநாள்.
ஆனிரை - பசுக் கூட்டம்.
ஆனிலன் - வாயுமகன் : அநுமான் : வீமன்.
ஆனிலை - தொழுவம் : பசுமந்தை நிற்குமிடம் : கருவூர்ச் சிவாலயம்.


ஆனிலையுலகம் - ஆனுலகு : கோலோகம்.
ஆனீகன் - வசுதேவன் தம்பி.
ஆனீர் - கோமூத்திரம்.
ஆனு - இனிமை : நன்மை.
ஆனுகூலியம் - அனுகூலம் : உடைமை.



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக