புதிய பதிவுகள்
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» 10 மில்லியன் டாலர் மதிப்பிலான சாமி சிலைகள் கடத்தல்: இந்தியாவிடம் ஒப்படைத்த அமெரிக்கா
by ayyasamy ram Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
3 Posts - 75%
ஆனந்திபழனியப்பன்
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
1 Post - 25%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
339 Posts - 79%
heezulia
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
8 Posts - 2%
prajai
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_m10‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க!


   
   
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Sat Jan 30, 2010 1:30 pm


‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க!




‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Apj_2a
இராக்
தலைநகர் பக்தாத். சூரியன் சற்று கீழிறங்கி வந்தது போல் வெயிலின் உக்கிரம்.
மலைப்பிரதேசத்தின் பள்ளத்தாக்கில் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்
அந்தச் சிறுவன்.ஒருநாள் அவனுக்கு அசரீரி கேட்கிறது. ‘நீ ஆடுகளை
மேய்ப்பதற்காக படைக்கப்பட்டவனல்ல’.

செய்தி சிந்தையில் விழுந்ததும்
அவனுடைய உள்ளம் தீவிரத்தேடலில் ஈடுபடத் துடித்தது. வேகமாக வீடு
திரும்புகிறான். மகனின் அவசரக் கோலத்தைக் கண்ட தாய் கேட்கிறார். என்ன
ஆச்சு? ஏன் இவ்வளவு சீக்கிரம் வீடு திரும்பி விட்டாய்? ஆடுகளை மேய்க்கும்
போது தான் கேட்ட செய்தியை தாயிடம் கூறுகிறான் அந்தத் தனயன். மகிழ்ந்தன இரு
உள்ளங்கள்.

சிறுகச் சிறுகத் தான் சேமித்து வைத்திருந்த பொற்காசுகளை
மகனிடம் கொடுக்கிறார். அவை தவறிவிடக் கூடாது என்பதற்காக அவருடைய சட்டையின்
அடிப்பகுதியோடு சேர்த்து அந்தக் காசுகள் அடங்கிய பையைத் தைத்து
விடுகிறார். அசரீரியாய் ஒலித்த குரலைக் கேட்டு உண்மையான அறிதலைத் தேடிப்
புறப்பட்டுகிறான் அந்தச் சிறுவன்.

மிக நீண்ட கடல் பயணம். அவன்
பயணிக்கும் கப்பலைக் கொள்ளையர்கள் சுற்றி வளைக்கிறார்கள். பயணிகளின்
உயிருக்கு அச்சுறுத்தல். சித்தம் கலங்கிய அவர்கள், சொத்துக்கள்
அனைத்தையும் கள்வர்களிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இறுதியாக,
அந்தக் கும்பலில் ஒருவன் கேட்கிறான். இன்னும் யாரிடமாவது பெறுமதி மிக்க
பொருட்கள் இருக்கின்றனவா? துணிச்சலுடன் ஒலிக்கிறது ஒரு பிஞ்சுக்குரல்.
பயணிகள் எல்லோரிடமும் கேட்டுக் கேட்டுப் பொருட்களை எடுத்துக் கொண்டீர்கள்.
என்னை மட்டும் ஏன் விட்டு விட்டீர்கள்? ஆனால், என்னிடம் 40 பொற்காசுகள்
உள்ளன என்றான். திருடர்களுக்கு தேள் கொட்டிய உணர்வு.

அந்தச்
சிறுவன் நம்மை ஏமாற்றவே இவ்வாறு பொய்யுரைக்கிறான் என்றான் கும்பலில்
இருந்த ஒருவன். இல்லை. நிச்சமாக இல்லை! என் சட்டையின் பின் பகுதியில் 40
பொற்காசுகள் தைத்து வைக்கப்பட்டுள்ளன என்றான் உறுதியாக. திருட
வந்தவர்களுக்கு ஒன்றும் விளங்கவில்லை. தீவிர ஆலோசனைக்குப் பிறகு அந்தச்
சிறுவனை தங்கள் தலைவரிடம் அழைத்துச் சென்றனர். ஏனப்பா இந்தச் சிறுவனை
அழைத்து வந்திருக்கிறீர்கள்? தலைவன் கோபமாகக் கேட்டான். தன்னிடம் 40
பொற்காசுகள் இருப்பதாக இவன் கூறுகிறான். எங்களுக்கு நம்பிக்கையில்லை.
நீங்களே சோதித்துப் பாருங்கள் என்று அவர்கள் கூறுகின்றனர்.

வியப்பு
மேலிட, அவர்கள் சொல்வது உண்மைதானா? என்று தலைவன், சிறுவனிடம் கேட்கிறான்.
அவனும் அதை ஆமோதிக்கிறான். அப்படியானால் அந்தப் பொற்காசுகளை எடுத்துத் தா
என்று அவன் கேட்க, அந்தச் சிறுவன் சற்றும் தாமதிக்காமல் அவற்றை கொள்ளைக்
கும்பல் தலைவனின் கையில் கொடுக்கிறான். சிறுவனின் நேர்மை, உண்மையின் மீது
அவன் கொண்ட நம்பிக்கை, தனக்குப் பாதகம் நேர்ந்தாலும் பரவாயில்லை,
எப்பொழுதும் உண்மையே பேச வேண்டும் என்ற அவனது உணர்வு. இவை அந்தக் கொள்ளைக்
கும்பல் தலைவனை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.

கேட்டவுடனேயே
உண்மையைச் சொல்லும் துணிச்சல் எங்கிருந்து வந்தது உனக்கு? தலைவன்
கேட்கிறான். என் அன்னையிடமிருந்து என்று பதில் சொன்ன அந்தச் சிறுவன்,
‘உண்மை’யின் பின்புலத்தை விவரிக்கிறான். அசரீரியின் குரல் கேட்டுத் தான்
மேற்கொள்ளூம் இந்தப் பயணம் உண்மையான அறிவைத்தேடும் முயற்சி. எந்தச்
சூழலிலும் உண்மையைப் பேசத் தயங்காதே என்று என் தாய் எனக்குப் போதித்து
அனுப்பினார். அந்த மந்திரச் சொல் தான் உண்மையைப் பேசும் தைரியத்தை
எனக்குத் தந்தது என்றான். சிறுவனுக்கு இருக்கும் ஞானம் தங்களுக்கு
இல்லாமல் போய் விட்டதே என்று திருடர்கள் தலைகுனிந்தனர். இப்படி ஒரு
மாற்றத்தை ஏற்படுத்திய பெருமைக்குரிய அந்தச் சிறுவன் யார் தெரியமா? ஜீலான்
நகரில் பிறந்து ஆன்ம ஞானத்தேடலில் ஆழமான சுவடு பதித்த ‘‘கெளதுல் அ:லம்”
அப்துல் காதிர் ஜீலானி(ரஹ்) அலைஹி தான்.

மறைந்தும் இறவாப் புகழுடன்
வாழும் அந்த இறைநேசருடைய வரலாற்றைப் பிஞ்சு உள்ளங்களில் பசுமரத்தாணி போல
பதியச் செய்தவர் இந்தியாவின் தலைமகன் நம் பெருமைக்குரிய APJ அப்துல் கலாம்.



‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Apj_3a
அண்மையில்
மூன்று நாள் அதிகாரத்துவ பயணமாக அவர் சிங்கப்பூர் வந்திருந்தார். அப்போது,
வெளிநாடு வாழ் இந்தியர்களின் கல்விக்காக இந்தியர்களால் நடத்தப்படும் ‘பவன்
அனைத்துலகப் பள்ளி’க்கு அவர் விஜயம் செய்தார். இந்தியாவில் இப்படி ஒரு
சுற்றுப்பயணத்தில் குடியரசுத்தலைவரை அருகே இருந்து பார்ப்பதென்பது
முயலிடம் கொம்பைத்தேடும் கதைதான். ஆனால் சிங்கப்பூரில் அப்படியல்ல.

காலை
10.30 மணிக்கு விழா தொடக்கம். குறித்த நேரத்தில் குறைந்த எண்ணிக்கையிலான
பாதுகாப்பு வீரர்கள் ‘பின்தொடர’ பீடுநடை போட்டு வந்தார் கலாம். பிஞ்சு
மலர்கள் கைகளில் பற்றியிருந்த மலர்க் கொத்துகளை அன்புடன் வாங்கிக் கொண்டு
அவர்களோடு சினேகத்துடன் உரையாடினார். அதன் பிறகு அவர் ஆற்றிய
சிறப்புரையில் தான் அப்துல் காதிர் ஜீலானியின் வாழ்க்கையை எளிமையாக
எடுத்துரைத்தார்.

புகழ்பெற்ற இந்திய விஞ்ஞானி சர் C.V.ராமன்,
காந்திஜி ஆகியோரின் பெற்றோர் அவர்களுக்கு வழங்கிய போதனைகளையும் மேற்கோள்
காட்டி வளரும் தலைமுறைக்குத் தேவையான வாழ்க்கைப் பாடத்தை அவர் நடத்தினார்.
உரை நிகழ்த்திய தருணத்தில் எங்கும் அவர் தன்னுடைய மேதமையை பறைசாற்றவில்லை.
அரங்கில் நிரம்பியிருந்த குழந்தைகள் அத்தனைபேரிடமும் தனித்தனியே
உரையாடுவது போன்று தனது பேச்சின் பாணியை அவர் வகுத்துக் கொண்டார்.

தொடக்கத்தில்
குழந்தைகளைப் பார்த்து அவர் கேட்டார். நான் பாடம் நடத்துவதில் உங்களுக்கு
விருப்பமா? அல்லது கதை சொல்வதில் ஆர்வமா?. அரங்கு முழுவதும் அமைதி.
ஆசிரியை ஒருவர் பாடம் நடத்துங்கள் என்றார். நீங்கள் ஆசிரியர்,
மாணவர்களுக்கு வழி விடுங்கள் என்று விரைந்து மறுமொழி கூறினார். பின்னர்
அவர் உரையாற்றிய விஷயங்கள் தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பச் செய்திகள்.
சுமார் 45 நிமிடம் அவருடைய சொற்பெருக்கு குழந்தைகளைக் குதூகலிக்க வைத்தது.
இறுதியில் 25 குழந்தைகள் அவரிடம் கேள்வி கேட்டு பதில் பெறக்காத்திருந்தனர்.

துடுக்கு
நிறந்த ஒரு மாணவன் கேட்டான். நீங்கள் ஏன் வாழ்க்கைத் துணையைத்
தேர்தெடுக்கவில்லை? சிரித்துக்கொண்டே கலாம் சொன்னார் உங்களுக்காவது நல்ல
துணை அமைய நான் பிரார்த்திக்கிறேன்.

உங்களில் எத்தனை பேர்
மருத்துவராக விருப்பம்? எத்தனை பேர் விஞ்ஞானியாகப் போகிறீர்கள்?
அரசியல்வாதியாகப் போவது எத்தனை பேர்? என்று தொடர்ச்சியாகக் கேட்டுக்
குழந்தைகளின் பதிலைப் பெற்றுக் கொண்டார்.அரசியல்வாதியாக விரும்பிய
குழந்தைகளிடம் அதற்கான காரணத்தைக் கேட்டார். நாட்டு முன்னேற்றத்தில்
எங்கள் பங்கைப் பதிவு செய்ய விரும்புகிறோம் என்று அவர்கள் கூற, வெரிகுட்
என்றார்.

இறுதியாக மூன்று விஷயங்களை வலியுறுத்தினார். உண்மையையே
பேசுங்கள், அதிலேயே நிலைத்து நில்லுங்கள், இதயத்திலுள்ள தயக்கங்களை வெளியே
தள்ளுங்கள். அவ்வாறு செய்தால் வெற்றி உங்களைத் தேடி வரும் என்றார்.

குடியரசுத்
தலைவராகப் பொறுப்பேற்பதற்கு முன்பு சென்னையில் நடந்த புத்தகக்
கண்காட்சியைத் தொடக்கி வைக்க கலாம் வந்திருந்தார். ஆனால் அங்கு
குழுமியிருந்தவர்களில் பெரும்பாலோர் நடுத்தர வயதினர். அவர்கள் மத்தியில்
உரையாற்றிய போதும் ‘உண்மையை’ அவர் முன்னிலைப் படுத்தினார். இப்போது இந்தப்
பிஞ்சு உள்ளங்களிலும் அதையே விதைத்துச் சென்றிருக்கிறார்.

எல்லாக்
குழந்தைகளின் கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதுதான் என்
விருப்பம். ஆனால் அதற்குரிய நேரம் இப்போது இல்லை. எனவே
www.presidentofindia.nic.in என்ற இணையப் பக்கத்தில் உங்கள் கேள்விகளைப்
பதிவு செய்யுங்கள். அடுத்த 24 மணி நேரத்துக்குள் உங்களுக்கான பதில் வந்து
சேரும் என்றார்.

விடைபெற்றுச் சென்றவுடன் மாணவர்களிடம் கேட்டேன்,
இந்த விழா எப்படி இருந்தது? ‘இந்திய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். இப்படி
ஒரு எளிமையான தலைவர் அவர்களுக்கு வாய்த்திருக்கிறார். நாங்கள்
எதிர்பார்த்தை விட மிக நெருக்கமாக எங்களை வசீகரிக்கும் விதத்தில் அவர்
பேச்சு இருந்தது. இனிமேல் எங்களுக்கான ‘ரோல்மாடல்’ உதாரண புருஷர் அப்துல்
கலாம் தான்’ என்றனர்.

சிங்கப்பூர் பயணத்தில், தன்னைப்போலவே இன்னும்
பலர் நாட்டுக்குத் தேவை என்ற எண்ணத்தை இளையோர் உள்ளங்களில் அழுத்தமாகப்
பதிவு செய்திருக்கிறார் அப்துல் கலாம்.

உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat Jan 30, 2010 1:33 pm

‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! 677196 ‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! 677196 ‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! 677196



‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! U‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! D‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! A‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! Y‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! A‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! S‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! U‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! D‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! H‘சாதிக்’ ‘கலாம்’ வாங்க! A
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Sat Jan 30, 2010 2:08 pm

இந்த வந்திட்டோம்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக