புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
107 Posts - 49%
heezulia
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
54 Posts - 25%
Dr.S.Soundarapandian
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
30 Posts - 14%
T.N.Balasubramanian
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
mohamed nizamudeen
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
9 Posts - 4%
prajai
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 1%
Barushree
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
JGNANASEHAR
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
nsatheeshk1972
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
234 Posts - 52%
heezulia
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
137 Posts - 30%
Dr.S.Soundarapandian
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
30 Posts - 7%
T.N.Balasubramanian
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
20 Posts - 4%
mohamed nizamudeen
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
18 Posts - 4%
prajai
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_m10சாவிமாட்டிகள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாவிமாட்டிகள் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Aug 31, 2023 8:02 pm


கோவை அதிவேக வண்டியில் கூட்டமில்லை, திரைய ரங்குகளில் உட்கார்ந் திருப்பதைப் போல் பெட்டிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைந்து உட்கார்ந்திருந்தார்கள். சில பயணிகள் சாவகாசமாகக் கால்களை வெளியே நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தார்கள்.

சில நாள்கள் இப்படித்தான் வண்டிகளில் கூட்டம் வருவதில்லை, குறிப்பாகக் குழந்தைகளைப் பார்க்க முடிவதில்லை. பெட்டிகளிலிருக்கும் ஒன்றிரண்டு பொடிசுகளும் கைப்பேசியை நோண்டினார்கள்.

மல்லிகா பட்டன் போனை எடுத்து நேரம் பார்த்தாள். நேரம் அறிவதற்கு முன்பே புத்தி பதற்றமடைந்தது. புத்தி இப்போது மண்டைக்குள் இல்லை, அடிவயிற்றில் கசாயம் காய்ச்சின மாதிரி கொதித்தது. `ஒரு தடவ லேடி டாக்டர் கிட்ட போயி சொல்லேன்டி, மாசா மாசம் அடி வவுத்த பெசஞ்சினு சாவியா?' பல தடவை காணிக்கைமேரி சொல்லிவிட்டாள். பார்வை இல்லாத காணிக்கைமேரிக்கு இருக்கிற தெளிவுகூட தனக்கு இல்லையென்று ஒவ்வொரு தடவையும் யோசிப்பாள்.

வண்டி இருபது நிமிடங்கள் தாமதம். இருபது நிமிடங்கள் என்பது அவளுடைய அவதியை இருபது மணி நேரத்திற்கு இழுத்துப் போட்டு விடும். ஜோலார்பேட்டையில் இறங்கினால் லால்பாக் விரைவு வண்டியைப் பிடிக்க முடியாத தாமதம். பத்து நிமிடங்களென்றால் லால்பாக் கிடைத்துவிடும். கோவை ஐந்தாவது நடைமேடையில் நுழையும்போதே லால்பாக் நான்கில் நுழையும், இறங்கி ஓட்டமாய் ஓடிப் பிடித்துவிடுவாள். லால்பாக்கும் தாமதமாவதுண்டு, எல்லா நாளும் அப்படி அமையாது. அன்றாடம் ரயில் பிடிப்பவர்களுக்குத்தான் நிமிடங்களின் வலிமை புரியும்.

டி14 பெட்டிக்குள் ஆள் இல்லாத நான்காவது வரிசையில் உட்கார்ந்தாள் மல்லிகா. உட்கார்ந்து கொண்டே இருக்க வேண்டும் போலிருந்தது, கால்களை நீட்டிப் படுத்துக்கொள்ளவும் மனம் ஏங்கியது. கால்களை அழுத்தி விட்டாள். பரிசோதகர் பார்த்தால் வெளியே தள்ளி விடுவார். அமர்ந்து வருவதை ஏற்க மாட்டார்.

விதவிதமான சாவிமாட்டிகள் அடங்கிய கொத்துகளை இருக்கைக்கு மேலே, பெட்டிகள், பைகளென்று வைக்கும் சுமைதாங்கிக் கம்பியில் மாட்டினாள். திராட்சைக் கொத்துகளைப் போலத் தொங்கவிட்டாள். முதுகில் மாட்டியிருந்த பையைக் கழற்றி வைத்தாள். தோள் இறுக்கம் குறைந்தது, மூடியிருந்த ஜன்னலை ஏற்றினாள். வியர்வை பிசுபிசுத்த உடலுக்குச் சாளரத்திலிருந்து வீசியடித்த காற்று முகத்தில் தாக்கிக் கழுத்தில் நுழைந்து குளிர்ந்தது. செருப்பைக் கழற்றினாள். இரண்டு கால்களையும் சம்மணமிட்டு உட்கார்ந்தாள். காலுக்குள் நரம்புகள் துடித்தன. ஆசுவாசமாகப் பெருமூச்சுவிட்டாள்.

தேநீர் சுமந்து வந்த சரவணன் நின்றான்.

“ஏ மல்லி, ரொம்பதான் திமிரு. தனபால் டிடி பாத்தார்னா செத்த மவளே… பெரிய இவளாட்டும் சீட்ல சப்பாங்கால் போட்டுனு உக்கார்ந்துட்டவ, லைனுக்குப் போலையா?”

“சத்த நேரம்ண்ணா… நடந்து நடந்து ரெண்டு காலும் செத்துப்போச்சு, வேபாரம் ஆகல.”

“அப்படித்தான் இக்குது மல்லி, கோவையில ஆரம்பிச்சி நாலு தபா நடந்துட்டன். ஒரு கேனு காலி ஆகல.” ரயில் படம் போட்ட பேப்பர் கப்பில் தேநீர் ஊற்றி மல்லிகாவிடம் நீட்டினான்.

“வேணாண்ணா… ஏன் நஷ்டப்படற?”

“பேச்சப் பாரு… ஜோல்ரபேட்டயில மீந்த டீயக் காவாயிலதான் ஊத்தப்போறேன்… போயி கக்குசோரம் கீழ உக்காந்துக்க… நீட்டிகூட படுத்துக்க, இங்க சீட்ல வேணாம்…” நகர்ந்தான்.

களைப்புக்கும் பசிக்கும் தேநீர் கொஞ்சம் உற்சாகத்தைத் தந்தது. ஆனாலும் பயமாகத்தான் இருந்தது, தேநீர் குடிப்பதால் வீடு வரைக்கும் பொறுக்காமல் ஆகிவிடுமோ என்று. மாதா மாதம் ஐந்து ஐந்து நாள்கள் முந்திக்கொள்கிறது.

மாட்டி வைத்த சாவிக் கொத்துகள் அவள் மனதைப் போல பாரமாகத் தொங்கிக் கொண்டிருந்தன.

விநாயகர், சிலுவை, பிறை நட்சத்திரம், சோட்டா பீம், மோட்டு பட்லு, டோரா புஜ்ஜி, எமோஜிகள், இடுப்புப்பட்டியில் மாட்டும் மரக்கட்டையில் ஆங்கில எழுத்துகள், நகவெட்டி, பாக்கெட் கத்தி, பார்பி பெண், எகிறும் பொம்மைகள் ஒன்றன் கீழ் ஒன்றாக மாதிரியில் ஒரு கொத்து. வாழைத்தாறு மாதிரி மாட்டி வைத்திருப்பாள். முனையில் பெரிய கேள்விக்குறி வடிவ வளையம் ரயில் பெட்டிகளில் மாட்டுவதற்குத் தோதாக இருக்கும். இருக்கைகளுக்கு நடுவில் மாட்டி மாட்டி எடுத்துப் போவாள். பார்ப்பார்கள், விலை கேட்பார்கள், பேரம் பேசுவார்கள். படிந்தால் வியாபாரம்!

வியாபாரத்தை விடமுடியவில்லை. பழகிவிட்டது. திடீரென்று மழை பொழிகிற மாதிரி நல்ல வியாபாரமும் நடக்கும், அந்த வியாபாரம் ஆசைகளை வளர்த்துவிடும். இன்று போல் வியாபாரம் ஆகாத நாள்கள்தான் அதிகம், விட்டுவிடலாமென்று இரண்டு நாள்கள் வீட்டில் தங்குவாள், சித்தாள் வேலைக்குப் போவாள், அவளால் சிமிட்டிக் கலவையையும், செங்கல்லையும் தலையில் தூக்க முடியவில்லை, சித்தாள் வேலையை சுலபமாகச் செய்யும் பெண்களால் ரயிலில் வியாபாரம் செய்ய முடியாது.

மரத்தில் கூடுகட்டி வாழ்ந்த பறவைகள் உடைந்த கட்டடங்களில், மின்கம்பத்தில், ஒளி விளம்பரப் பலகைக்குப் பின்னால் வாழப் பழகிவிட்ட மாதிரி மல்லிகாவினால் சாவிச் சங்கிலிகள் வியாபாரத்தை விட முடியவில்லை, ஐஸ் வண்டிக்காரன் மனம் குளிர்காலத்தில் மாற்று வியாபாரத்தை நாடாததைப் போல்.

“வத்தி கம்பனிய விட்டுடு மல்லிகா, நமக்கு நாம்பளே மொதலாளியா வாழணும்… முடிஞ்சா போலாம், கேக்க ஆளில்ல… ஒரு நாளிக்கி ரெண்டு ரூட்டு, நாலு ரயிலு பார்த்தா போதும், ராணி மாதிரி உட்கார்ந்து தின்னலாம்” என்றான் கணவனாய் ஆவதற்கு முன்பு.

“ஏண்டி மல்லி! ரெண்டு பேரும் லவ்வு பண்ணிதான கலியாணம் பண்ணீங்க..?” காணிக்கைமேரி கேட்டதற்கு,

“வருமானம் இந்துச்சினா சாகறமுட்டும் லவ்வும் இக்கும். நான் சம்பாரிச்சி குடிக்கறதுக்கு துட்டு தந்தா செத்த பின்னாலயும் லவ்வு இக்கும், எக்கா! நாம சினிமால லவ்வ பாத்து ஏமாந்துர்றோம், அவுங்க துட்டுக்காக லவ் பண்ணுற மாரி ஆக்ட் பண்ணுறாங்க… இந்த ஆளு என்னா டயலாக் உட்டான், கண்ணுக்குள்ள வெச்சிக்கிறன்னான். இப்போ ஒடம்பு மோகம் தீந்துபோச்சி… போக்கா! அவனப் பத்திப் பேசனா நெஞ்சு வெடிக்குது...’’ என்பாள்.

பயணச்சீட்டுப் பரிசோதகர்களுக்கும், காவலர்களுக்கும் மாமூல் கொடுத்து, மாதம் ஒரு வழக்கு கொடுத்து, அபராதம் கட்டியும் கையில் நாலு காசு நின்றது.

வண்டியில் அதிகமான கூட்டம் இருந்தாலும், வியாபாரம் திண்டாட்டம்தான்... ஜன வெள்ளத்தில் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு நகரவே முடியாது. முன்பதிவு செய்யாதவர்களும ஏறிக்கொள்வார்கள். மாதுளைக் கொட்டைகளாய் ஒட்டிக் கொண்டிருப்பார்கள், வசைபாடுவார்கள். சில ஆண்கள் ஒதுங்க இடமிருந்தும் வழி விடாமல் முட்டுவதற்கு உடலைத் தோதாக்குவார்கள். ஒதுங்கி நிற்பதுபோல் தெரியும், அருகில் போகும் போது மன்மதராசாவாகிவிடுவார்கள். ஆனாலும் இந்தப் பயணம், இந்த வியாபாரம் இந்த ரயில் அவளுக்குப் பிடித்திருந்தது. விதவிதமான மக்களைப் பார்க்கப் பிடித்திருந்தது. பத்து நாள்கள் வியாபாரம் இல்லாவிட்டாலும் திடீரென ஒருநாள் பை நிறையும். சூதாட்டம் போல்தான்.

மொரப்பூரில் வண்டி நின்று கிளம்பியது, கழிவறை சென்று முகம் கழுவி மீண்டும் பையை மாட்டிக்கொண்டு சாவிமாட்டிகள் தாரை இரண்டு தோள்களிலும், இரண்டு பக்கம் சுமந்து கொண்டு உடம்பு முழுவதும் விலங்குகள் மாட்டி இழுத்து வரப்பட்ட கைதியைப் போல் நடக்கத் தொடங்கினாள். இந்தக் கடைசியிலிருந்து அந்தக் கடைசிக்கு மூன்றுமுறை வந்துவிட்டாள். வியாபாரம் சுத்தமாக இல்லை. அதே கூட்டம், அதே முகங்கள். முதல்முறை தொட்டுப் பார்த்தவர்கள், விலை கேட்டவர்கள் இந்த முறை என்னவென்றுகூடக் கண்டுகொள்ளவில்லை. பறவை ஒன்று மரம் விட்டு மரம் தாவுவதைப் போல் நகர்ந்துகொண்டே இருந்தாள். ஜோலார்பேட்டைக்கு முப்பது நிமிடங்கள் தாமதாக வந்தது. அவள் ஊருக்கு மாறிப் போக வேண்டிய வண்டி பத்து நிமிடங்களுக்கு முன்பே போய்விட்டிருந்தது.

இன்றைய இரவை ஜோலார்பேட்டையில் கடப்பதை நினைக்க நினைக்க மனம் அறுந்தது. பேருந்தைப் பிடித்துப் போனாலும் குப்பம் வரைக்கும்தான் போகமுடியும். அங்கிருந்து சங்கனஹள்ளி போகும் கடைசிப் பேருந்தைப் பிடிக்கமுடியாது. குப்பம் ரயில் நிலையத்தில் தங்குவது அதைவிடக் கொடுமை. கணவன் என்று சான்றிதழ் வைத்திருப்பவனை அழைத்துத் தகவல் சொல்லக்கூட அலைபேசியில் பணம் இல்லை. அப்படியே யார் போனிலிருந்தாவது அழைத்தாலும் வரமாட்டான். ‘‘எவன்னா பைக்குல வருவான், பின்னாடி ஒக்காந்துனு வந்துருடி, சொல்லணுமா... உனக்குத்தான் எல்லா ஆம்பளைங்களும் பழக்கமாச்சே...’’ என்பான்.

என்றாவது கோவை எக்ஸ்பிரஸ் தாமதமாகி லால்பாக்கைப் பிடிக்க முடியாமல்போனால் ஜோலார்பேட்டையில்தான் தங்க வேண்டும். கழுகுகளுக்கும் ஓநாய்களுக்கும் நடுவே ஒரு இரவைக் கடத்த வேண்டும். ஆந்தையாக விழிக்க வேண்டும். அசர முடியாது.

அடிபட்ட இடத்தில் ஒட்டிய மருந்துப் பட்டையைப் பிரிக்கும்போது ஒட்டிக்கொண்ட தோலும் பசையோடு வருமே அப்படியொரு வலி வலித்தது. அடிவயிறு இழுத்து இழுத்து விட்டது. புறப்படுவதற்கு முன்பே உதிரப்போக்கு அறிகுறி இருந்திருந்தால் வீட்டிலேயே நின்றிருப்பாள். குப்பம் வந்தபின் தெரிந்திருந்தாலாவது நாப்கின் வாங்கிக் கைவசம் வைத்திருப்பாள். ரயில் ஏறிய பின் ஒன்றும் செய்ய முடியவில்லை. ஒன்றையும் இரண்டையும் அடக்குவதைப்போல அதை நிறுத்தி வைக்க முடியவில்லை. கால் வரை இறங்குவதை உணர்ந்த போது துடித்தாள்.

காலை லால்பாக்கில் கூட்டம் இருந்தது,‌ ஜோலார்பேட்டை வருகிற வரை லைனுக்குப் போகாமல் கழிவறை கழிவறையாக மாறி மாறி போய்க் கொண்டிருந்தாள். ஒரே கழிவறைக்குள்ளும் உட்கார்ந்துகொண்டிருக்க முடியாது, பயணிகள் கதவைத் தட்டுவார்கள் சீட்டுப் பரிசோதகரிடம் சத்தம் போடுவார்கள். இன்னொரு பயணி உள்ளிருந்தால் பரவாயில்லை, மல்லிகாவைப் பார்த்துவிட்டால் மறுபடியும் எந்த வண்டியிலும் ஏற்ற மாட்டார்கள்.

காலை உடம்பெங்கும் ஒருமாதிரியாக இருந்த போதே வியாபாரத்துக்குப் போகாமல் வீட்டுக்குப் போய்விடலாம் என்று யோசித்தாள். ஐந்தாம் தேதி மகளிர்குழுவில் வாங்கிய கடனைக் கட்ட வேண்டும். ‘நீ ஒரு ரயில், நான் ஒரு ரயில்’ என்றவன், கல்யாணத்துக்குப் பிறகு குடிகாரனாகி ஸ்லீப்பர் கட்டையாகிவிட்டான். இல்லையில்லை கல்யாணத்துக்குப் பிறகுதான் தன் சுயமுகத்தைக் காட்டினான். புருசனை நம்பி எந்தக் கடனையும் விடமுடியாது. கையிலிருப்பதையும் பிடுங்கிக்கொண்டு போய்விடுவான். முன்பெல்லாம் வியாபாரத்திற்குப் போகும்போது குடிக்க மாட்டான். ரயிலை விட்டு இறங்கியதும் எந்த நேரமாக இருந்தாலும் எந்த விலை கொடுத்தாவது வாங்கிக் குடிப்பான். நூறு ரூபாய் பாட்டிலுக்குக் கூடுதலாக ஐம்பது ரூபாய் சொன்னாலும் வாங்கிக் குடிப்பான்.

கையில் காசு கொஞ்சம் மிச்சமாக இருக்கும் போது ரயிலில் குடிப்பதற்கு பாட்டில் வாங்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தான். எவனோ ஒருத்தன் ‘நூறு ரூபா மேல போட்டுத் தர்றேன், பாட்டில் இருந்தா கொடு' என்று கேட்க, இவனுக்குப் புத்திக்கேடாகி அடுத்த நாள் ஹெட் போன், செல்போன் கவர் வியாபாரத்தோடு மதுப் புட்டிகளையும் இரயிலிலேயே விற்றான். ஒரே நாளில் முதல் புட்டியிலேயே மாட்டிக் கொண்டான். வாங்கிக் குடித்தவன், போதையில் சீட்டுப் பரிசோதகரிடம் சொல்லிவிட்டான். அவர் கோலார் தங்கவயல் ரயில்வே காவல் நிலையத்தில் சொன்னார். இடுப்பைப் சுற்றிச் செருகியிருந்த ஒன்பது கால் புட்டிகளோடு காவல் படையிடம் பிடிபட்டான். கை விலங்கோடு கோலாருக்குத் துப்பாக்கி முனையில் உட்கார வைத்து அழைத்துக்கொண்டு போனார்கள்.

மல்லிகாவை குப்பம் காவலர்கள் பிடித்தார்கள். பெண் காவலர்கள் முகத்தைச் சுளிக்காமல், கண்களில் எந்தவிதமான தயக்கமோ வருத்தமோ இல்லாமல், துணியை உருவி சோதனை போட்டார்கள். அவளின் உடலைக் கண்ணீர் மட்டுமே மறைத்தது. ரயிலில் புத்தகம் விற்பவர்களை, பார்வையின்றி பாட்டுப்பாடி யாசிப்பவர்களை,‌ சமோசா விற்பவர்களை, வேர்க்கடலை விற்பவர்களை, லெதர்பர்ஸ் லெதர் பேக் விற்பவர்களை கொலைகாரர்களைப் பிடிப்பதைப் போல் பிடித்தார்கள். சென்னையிலிருந்து பெங்களூர் வரை, இந்தப் பக்கம் கோயம்புத்தூர் வரை உள்ள எல்லா ரயில் நிலையங்களிலிருந்தும் கைது செய்து வழக்குப் பதிந்தார்கள். அதிலிருந்து கெடுபிடிகளும் மிரட்டலும் அதிகமாயிற்று. வழக்கமாக நூறு இருநூறு என்றிருந்த `மாமூல்' ஐந்நூறு, ஆயிரம் என்றானது. பிடுங்கி எடுத்தார்கள்.

மல்லிகா மூன்று மாதங்கள் ரயிலேறாமல் இருந்தாள். வியாபாரத்திற்காக வாங்கிய சாவி மாட்டிகள் குடிசைக்குள் மூலையில் உப்புக்கண்டத்தைக் கோத்துத் தொங்க விட்ட மாதிரி தொங்கிக்கொண்டிருந்தது, தன் உயிரற்ற வாழ்க்கை தொங்கிக்கொண்டிருப்பதாக நினைத்தாள். `சேட்டுக்கடங்காரன் ரிட்டனும் வாங்க மாட்டான்... பணத்தக் கேட்டு நச்சரிக்கறான்... வேற ஆளுங்களுக்குத் தந்தா வித்துட்டுத் தருவானுங்களா? தர மாட்டாங்க...'

சமோசா விக்கிற காலு மாமிதான் ‘‘மலிக்கா! சத்தம் ஆப்பாயிருச்சி, லயினுக்கு வா. மாமூல் வெட்டுச்சின்னா அவங்களுக்குப் போதும், ரெயில்ல வித்தாவும் பாக்காமப் போவாங்க, ரெயிலையே எட போட்டு வித்தாலும் பாக்காமப் போவாங்க’’ என்றாள்.

மறுபடியும் மாட்டிகளை மாட்டிக்கொண்டு ரயிலேறினாள்.

கையில் ஒரு கீ செயின் விற்ற இருபத்தைந்து ரூபாய் மட்டுமே இருந்தது.

பஞ்சு அட்டைக்கே இருபத்தைந்து ரூபாய் ஆகிவிடும். இரவு உணவுக்கு யாரிடம் கேட்பது?

ரயில் நிலையத்தில் டீ விற்கும் சேகரைத் தேடினாள். அவனிடம் ஐம்பதோ நூறோ கேட்டால் கடன் தருவான். அவனைத் தேடி அலையும் போதே டிக்கெட் பரிசோதகர் ரேணு பார்த்துவிட்டான்.

“ஏய்… இங்க வா! என்ன பார்த்துட்டு பாக்காத மாதிரி நடையைக் கட்ற?”

“இன்னைக்கு வேபாரமே இல்ல சார்...”

“அடிங், எப்பப் பார்த்தாலும் இதே சொல்லினு... ஒழுங்கா துட்டு எடு...”

“நெசமாவே வேவாரம் இல்ல சார்... ஸ்டால்ல சேகர் அண்ணா இருந்துச்சினா அம்பது ரூவா கடனா வாங்கலாம்னு போறன்...”

“புதுசு புதுசா கத வுடறியா? ஒருநா இல்ல ஒருநா பெரிய கேஸா போட்டாதான் நீ வழிக்கு வருவ...” நெருங்கி வந்து எதையோ தொட வந்தான். விலகி வேகமாக நடந்தாள்.

இரவு இங்கேயே தங்குவது தெரிந்தால் விடமாட்டான். ஐந்நூறு ரூபாய் கொடுத்தால் கண்டுகொள்ளாமல் போய்விடுவான்.

ரயிலில் வியாபாரம் செய்யும் நாடோடிக் கூட்டம் இருக்கிறதா என்று பார்த்தாள். வழக்கமாக ஜோலார்பேட்டையில் தங்கும் சூழல் வந்தால் அந்தக் குழுவோடு இணைந்து கொள்வாள்.

அடிவயிறு உருள ஆரம்பித்தது. நெருப்பு பரவி தொடைகளில் பீறிட்டது. மூன்றாவது நடைமேடையில் இருக்கும் கழிவறையை நோக்கிப் போனாள். பூட்டியிருந்தார்கள். தண்ணீர் இல்லை. குடிநீருக்காகப் போடப்பட்டிருந்த எந்தக் குழாயிலும் ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லை, ஐந்து நடைமேடைகளிலும் இருபதுக்கும் மேற்பட்ட குழாய்கள் இருந்தன.

“சேகரண்ணா, இந்தக் கொழாய்ங்க என்னாத்துக்கு இக்கு? நானும் பாக்கறேன், அதுல சொட்டுத் தண்ணின்னு வந்தததேயில்ல” என்றாள் ஒருமுறை.

“அதுல தண்ணி வந்துச்சினா இங்க ஏஜன்ட் எடுத்தவங்களுக்கு வேபாரம் நடக்குமா? ஏழு ஸ்டால் இக்குது, தண்ணிவுடாம இக்கறதுக்கு இங்க மாசா மாசம் மேனேஜருக்கு மொத்தமா ஒரு அமௌண்டு போகும், மேலந்து பெரிய ஆபீசருங்க வர்றப்ப மட்டும் தண்ணி வரும்” எப்போதோ சொல்லியிருக்கிறான்.

முதல் வகுப்புப் பயணிகளுக்கான ஓய்வறைக்கு வந்தாள்.

“ஏய், அங்கயே நில்லு, எதுக்குக் கதவைத் தொறக்கற” கண்ணாடிக் கதவுகளைத் திறக்கும்போதே ஒரு பெண்மணியின் குரல். அந்தப் பெண்மணியே கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள்.

‘‘எக்கா! போகணும்.”

“இங்கெல்லாம் போக முடியாது, பிளாட்பார கடைசியில கக்கூஸ் இருக்கு போ.”

“அங்க தண்ணி வல்லக்கா... கால்ல எறங்குது...’’

“அதுக்கு, உன்னை இங்கவிடச் சொல்றியா? தூ... சனியன், ஒழுங்கு மரியாதையா போயிடு, வந்துட்டா ஆட்டிட்டு, எதுங்க எங்க நுழையணும்னு ஒரு வெவஸ்தை இல்ல...”

சொற்கள் அவளைச் சுட்டன. காற்றுக்கு அடித்துக்கொள்ளும் கதவைப் போல இதயம் அடித்துக்கொண்டது. கெஞ்சினாலும் ஆகாதென்று புரிந்தது.

தண்டவாளத்தைக் கடந்து முதல்நடை மேடையின் இருட்டான புங்க மரப் பின்னணிக்குப் போவதென்றால் தண்ணீர் வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் இருபது ரூபாய். இருந்த பணத்துக்கு நாப்கின் வாங்கிவிட்டாள்.

மீண்டும் சேகரைத் தேடிப் போனாள்.

ரப்திசாகர் எக்ஸ்பிரசில் ஒரு பெட்டியிலிருந்து இன்னொரு பெட்டிக்கு ஏற அவசர நடையாய் நடந்துகொண்டிருந்தான்.

அவளைப் பார்த்ததும் நின்றான்.

“அம்பது ரூபாய் வேணும்ணா, இன்னைக்கு சுத்தமா வேபாரம் இல்ல.”

பாக்கெட்டிலிருந்து எடுத்துக் கொடுத்துவிட்டுப் “போதுமா” என்றபடியே அடுத்த பெட்டியைப் பிடிக்கும் அவசரத்தில் நகர்ந்தான்.

“போதும்ண்ணா” என்றவள் யோசித்து, ‘‘அண்ணா! கொஞ்சம் நிக்கிறீயா, ட்ரயினுக்குள்ள பாத்ரூம் போயாந்தர்றன், வெளிய எங்கயும் தண்ணி இல்ல...’’ கேட்டாள்.

‘‘பயித்தமா உனக்கு? வண்டி ஒரு நிமிசந்தான் நிக்கும்’’ என்ற சேகர் ‘‘சாய்... சாய்...’’ என்று ஓடினான். ‘‘நானே ரிசவேசன் பொட்டிக்குள்ள ஏறி டீ விக்கிறதில்லை. எதனா திருடு போனா மாட்ட வெச்சிடுவாங்க...’’ கத்தினான்.

தண்ணீர்ப் புட்டி வாங்கப் போனவளை ரயில்வே காவலர் கரிபிரான் நிறுத்தினார்.

“இந்த மாசம் கேசுக்கு வந்தியா?”

“வந்தன் சார், ராஜேஷ் சார்தான் எழுதினாரு.”

“என் கணக்குக்கே வரலையே?” அவர் சுற்றி வளைத்து எதற்கு அடிபோடுகிறார் என்பது புரிந்தது.

“நாளிக்கி வந்து பாக்கறன் சார்.” நின்று பேசவே முடியவில்லை. உதறல் எடுத்தது.

“நாளைக்கா? திரும்ப நீ என் கண்ல படவா போற, இருக்கிறத கொடுத்துட்டுப் போ.”

“சத்திமா நாளிக்கி தர்றன் சார்!’’ ஐம்பது ரூபாயைக் கையிலிருந்து மறைக்க முடியவில்லை.

“ஆம்பளன்னா கையை வுட்டு எடுத்துருவன், கண்ட எடத்துல மறைச்சி வெப்பீங்க” கையிலிருந்த பணத்தைப் பிடிங்கினார்.

“சார்... சார்...” கெஞ்சியும் பலனில்லை. பின்னாடியே சென்றாலும் கிடைக்கப் போவதில்லை.

பெங்களுர் சொர்ணா எக்ஸ்பிரஸ் நான்கில் நுழைந்தது. சாவி மாட்டிகளை நடைமேடை பெஞ்சில் வீசி விட்டு, பயணிகள் இறங்குவதற்கு முன்பே அவசர அவசரமாக ஏறி கழிவறைக்கு ஓடினாள். தண்ணீர் வரவில்லை, ஒவ்வொரு பெட்டியாக ஏறி ஏறிப் பார்த்தாள். கடைசியாக வந்து நிற்கும் வண்டியில் தண்ணீர் இருக்காது என்பது அவளுக்குத் தெரியும்.

களைத்துப்போனாள். சாக்கடைக்குள் இறங்கி நிற்கிற மாதிரி இருந்தது. 'இப்பிடி கஷ்டப்படறத விட செத்துடலாம்' என்று யோசனை வந்தபோதுதான் அவள் கைப்பேசிக்கு அழைப்புப் பாடல் வந்தது.

“மல்லி, உன் புருசன் நீ வேவாரத்துல இருந்து வந்ததும் தர்றன்னு நூறு ரூவா வாங்கனான்டி… நானே கஷ்டத்துல இருக்கேன், வூட்டுக்கு வந்துட்டியா? ரொம்ப தொல்ல பண்ணுனான்னு கொடுத்தேன்...” எதிரில் அவள் பேசிக்கொண்டே இருந்தாள்.

அது முடிவதற்குள் இன்னொரு அழைப்பு, கடைக்காரன் சேட்டு.

பேசாமல் துண்டிக்கும்போது தின வட்டிக்காரனின் பாட்டு.

வழக்கமாக மல்லிகா வீட்டிற்குப் போகும் நேரம், வியாபாரம் முடித்து பணத்தோடு வந்திருப்பாளென்று விடாமல் மாறி மாறி பாடியது.

கைப்பேசி குட்டிப் பிசாசு போல் பயம் காட்டியது. பொத்தானை நீண்ட நேரம் அழுத்தி அதைத் தற்காலிகமாக சாகடித்தாள். ஒளியிழந்த அந்தக் கைப்பேசியைப் பார்த்தபோதுதான் அவளுக்குள் ஒளி வந்தது.

கைப்பேசியில் ஐந்து லிட்டரோ, பத்து லிட்டரோ தண்ணீர்ப் புட்டி இருப்பதாகக் கருதினாள்.

`ரெண்டு லிட்டர் தண்ணி வாங்கினு போயி கூட்சு மறவல நல்லா கழுவிக்கணும், கடைக்குப் போயி சால்னா நெறய ஊத்தி ரெண்டு பரோட்டாவ பெசஞ்சி தின்னணும், மெடிக்கல்ல வவுத்து வலிக்கும் தல வலிக்கும் மாத்தர வாங்கினு சூடா காபி வாங்கிப் போட்டுக்கணும்...' நினைத்துப் பார்க்கவே ஒரு நிம்மதி வந்தது.

சமோசா பாயிடம் ``அண்ணா, இந்தச் செல்ல வெச்சினு எரநூறு ரூவா தாயேன்’’ என்றாள். ``காதுல மூக்குல தங்கமா இக்குது இந்தப் பொழப்புல..?’’ கொஞ்சம் புலம்பலையும் கொட்டினாள். ஆணிடம் எதிரே நின்று பேசுவதற்கு சுயவெறுப்பாகவும் இருந்தது. தன்னிலிருந்து விரியும் துர்நாற்றம் தாக்குமோ என்ற தயக்கம்.

``சமோசாவ பாத்தியா தங்கச்சி, அப்படியே மீந்து போச்சி, கீச்செயினுன்னா ஊசிப் போவாது, சமோசா அப்பிடியா?’’ அவர் ஓடிக்கொண்டே சொன்னார்.

சேகர் தேநீர் உருளையைத் தூக்கிக்கொண்டு ஓடினான். அவனிடம் அடமானம் கேட்பதற்குக் கூச்சமாக இருந்தது. அவன் ஒருத்தனிடம் மட்டும் இருக்கிற மரியாதை போய்விடுமோ என்று யோசித்து அவனிடம் கேட்கவில்லை.

பழக்கடை செந்திலைக் கேட்டாள். அவன் ``நானென்ன அடகுக் கடையா வெச்சிருக்கேன்..?’’ என்றான். அதுவும் அந்தக் குரல் தூக்கலாக வந்தது.

நடக்கும்போது தொடைகள் இரண்டும் ஒன்றோடொன்று ஒட்டுகிற உராய்வில் பசை தடவின மாதிரி உணர்ந்தாள்.

ஏலகிரி விரைவு வண்டி மெதுவாக ஊர்ந்து நான்காவது நடைமேடைக்கு மிக நீளமான மலைப் பாம்பைப் போல் வந்து நின்றது, வண்டிக்குள் புகுந்து மூன்று பெட்டிகளின் கழிவறைகளில் தண்ணீர் வருகிறதா என்று பார்த்தாள், வரவில்லை.

ரயில் நிலையத்தில் நிற்கும் கடைசி வண்டி இதுதான். இதற்கு மேல் வேறு வண்டிகளை நம்ப முடியாது.

மல்லிகாவுக்கு மல்லிகாவே பைத்தியக்காரி போல் தெரிந்தாள்.

``என்னா கீச்செயினு, என்னா தேடற..?’’ குரல் கேட்டுத் திரும்பினாள். தண்ணீர் புட்டி விற்கிற கோவிந்தன். அவனை மல்லிகாவுக்குப் பிடிக்கவே பிடிக்காது.

``கோய்ந்து, தண்ணி வெச்சிருக்க?’’ என்று கேட்டாள்.

‘‘வெய்யக் காலத்துல தண்ணி மீறுமா? கூட்ஸ் பக்கம் வர்றியா, தண்ணி தர்றன்’’ காவி வாயைக் காட்டினான்.

``காரிமூஞ்சிடுவன் துழாவ மூடினு போயிடு காண்டுல இக்கறன், மண்டயப் பொளந்துறப் போறன்’’ என்றவள், அவனிடமே ``செல்ல அடமானம் வெச்சினு எரநூறு தாயேன்...’’

``திருட்டு செல்ல தொட மாட்டன், ஆள வுடு.’’ தலையை நேராக்கிக் கொண்டு போனான்.

மல்லிகா புத்திக்குள் இப்படி யோசிக்கவில்லை. கண்ணீர் வந்தது.

உயிரற்ற நிழலைப் போல் இருப்புப் பாதை பள்ளத்தில் இறங்கினாள், கொஞ்சமாய் நீர் தேங்கி இருந்தது. அங்கே உட்கார வளைந்தபோது நான்கு காவலர்கள் மடக்கினார்கள் ``ஐயா கூட்டினு வரச் சொன்னார் வாடி, ரொம்ப நேரமா உன்ன கேமிராவுல வாட்ச் பண்ணினுதான் இருக்காரு, வண்டி வண்டியா ஏறி கஞ்சாப் பொட்டலம் பதுக்கறியா? பொம்பள போலீஸ வுட்டு அவுத்தா எல்லாம் அம்பலமாயிடுது, வாடி...’’ தலைமயிரை இழுத்தார் தலைமைக் காவலர்.

விகடன்




சாவிமாட்டிகள் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9720
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

தொடர்வண்டியைத் தொடர்ந்து பயன்படுத்துபவர்களில் கஞ்சா கடத்துபவர்கள், ஹவாலா பணம் கொண்டு போகிறவர்கள், போதைப் பொருள் கடத்தல் பேர்வழிகள், தங்கம் கடத்துபவர்கள் என்று இப்படிப்பட்டவர்களே அதிகம் ! இரயில்வே போலீஸ் என ஒன்று இருப்பதாகச் சொல்கிறார்கள் , ஆனால் யாரும் பார்த்ததில்லை ! ஆனால் அவர்களுக்குத் தெரியாமல் எதுவும் நடக்காது என்று அதையும் சொல்கிறார்கள் !



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக