புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_c10இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_m10இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_c10இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_m10இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இருள் சூழ் சூரிய கிரகணம் ! அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில் அதன் தாக்கம் !

sugumaran
sugumaran
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 377
இணைந்தது : 05/08/2010

Postsugumaran Mon Apr 08, 2024 6:07 pm

இன்று (௮/௪/2024 ) சூரிய கிரகணம் ! இன்னமும் சற்று நேரத்தி நிகழ இருக்கிறது .அது குறித்து இந்த மாத வையம் இலக்கிய இதழில் வெளிவந்த , எனது கட்டுரையை நண்பர்களுக்கு அளிக்கிறேன் , படித்து கருத்துகளைக்கூறுங்கள் !
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் !
அடுத்த முழு சூரிய கிரகணம் ஒன்று ,வருகிற , ஏப்ரல் 8, 2024 அன்று நிகழ இருக்கிறது . சூரிய கிரகணங்கள் வரலாற்று ரீதியாக மரணம் மற்றும் அழிவைக் கொண்டுவரும் சகுனங்களாக உலகளைவில் நெடுங்காலமாக நம்பப்பட்டு  வருகிறது .நமது நாட்டிலும் அப்போது சில தோஷங்கள் ஏற்படுவதாகக்கூறி , அதற்காக பரிகார பூஜைகளும் , வேள்விகளும் இப்போதும்  நடை பெறுவதுண்டு .
சந்திரன் சூரியனின் தோற்றத்தை  முழுமையாக மறைக்கும் போது முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது.
மொத்த சூரிய கிரகணம் என்பது ஒரு அரிய நிகழ்வாகும்,
சராசரியாக ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் ஒருமுறை பூமியில் சூரிய கிரகணம்  எங்கோ நிகழும்,  இருப்பினும் சராசரியாக ஒவ்வொரு 360-410 வருடங்களுக்கும் ,ஒரு குறிப்பிட்ட அதே இடத்தில் மட்டுமே, மீண்டும் நிகழும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதுஇருக்கும் நிலையில் அதிக பட்சமாக  சூரிய கிரகணம்  7 நிமிடம் 32 வினாடிகளுக்கு மேல் நீடிக்க முடியாது.  இந்த மதிப்பு பல்லாயிரம் ஆண்டுகளாக மாறி, தற்போது குறைந்து வருகிறது.
கிமு 3000 முதல் குறைந்தது கிபி 8000 வரையிலான 11,000 ஆண்டு காலப்பகுதியில் மிக நீளமான முழு சூரிய கிரகணம் ஜூலை 16, 2186 அன்று நிகழும் , அப்போது அது மொத்தம் 7 நிமிடம் 29 வினாடிகள் நீடிக்கும்.  
ஒப்பிடுகையில், 20 ஆம் நூற்றாண்டின் மிக நீண்ட முழு கிரகணம் 7 நிமிடம் 8 வினாடிகளில் ஜூன் 20, 1955 இல் நிகழ்ந்தது , மேலும் 21 ஆம் நூற்றாண்டில் 7 நிமிடங்களுக்கு மேல் முழு சூரிய கிரகணங்கள் இருக்காது என்றுகூறபடுகிறது
இத்தோடு வானவியல் ஆய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை நிறுத்திக்கொண்டு , சூரிய கிரகணம்  பற்றிய  வரலாற்றின் சுமார் ஐயாயிரம் ஆண்டுகளின் குறிப்புகளைப்பார்க்கலாம் .
வரலாற்று கிரகணங்கள்  என்பது வரலாற்றாசிரியர்களுக்கு மிகவும் மதிப்புமிக்க ஆதாரமாகும், அவை மூலம்  சில வரலாற்று நிகழ்வுகளை துல்லியமாக தேதியிட இது துணபுரிகிறது  இதன் குறிப்பில் இருந்து ,  பிற வரலாற்றுத் தேதிகள் மற்றும் பண்டைய காலெண்டர்கள் கழிக்கப் பட்டு சரிவர நிருவபடுகிறது
உலகின் வரலாற்றின் ,பதிவு பெற்ற மிகப் பழமையான சூரிய கிரகணம் , அப்போதைய பாபிலோனின் , தற்போதைய  சிரியாவில் உள்ள உகாரிட்டில் கிடைத்த  ஒரு களிமண்பலகையில்  பதிவுசெய்யப்பட்டது ,
இரண்டு நம்பத்தகுந்த தேதிகள்  மேற்கோள் காட்டப்பட்டுள்ளன: 3 மே 1375 BC அல்லது 5 மார்ச் 1223 BC, என்று அந்த பாபிலோன்  உரையில் குறிப்பிடப்பட்டுள்ள
மேலும் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கிரகணத்தைக் கணிக்கத் தவறிய இரண்டு வானியலாளர்களான Hsi மற்றும் Ho ஆகியோரின் தலையை துண்டித்ததாகக் கூறப்படும் பழம்பெரும் சீன மன்னர்  ஜாங் காங் பற்றிய வரலாற்றுக் குறிப்பு கிடைத்துள்ளது
சீன வரலாற்று  ஆண்டுகளின்படி, ஜிச்சௌ ஆண்டில் ஜாங் காங் அரியணை ஏறினார். (2088 BC – 2075 BC) அதாவது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் , அவரது தலைநகரம் ஜென்க்சுனில் இருந்தது.
அவரது ஆட்சியின் 5 வது ஆண்டின் 9 வது மாதமான கெங்வு  நாளில், ஒரு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் அரசவையில் இடம் பெற்றிருந்த  வானியல் வல்லுநர்கள் சோம்பலாலும்  மற்றும்  அதிக குடிபோதையில்,நாட்டம் கொண்டிருந்ததால் ,, அவர்கள் இந்த கிரகணத்தை கணிக்கத் தவறிவிட்டனர்,
இதன் விளைவாக அப்போது ஏற்பட்ட அந்த சூரிய கிரகணத்தினால் சாதாரண மக்களிடையே குழப்பம் மற்றும் பீதி ஏற்பட்டது.
வானியல் அமைச்சர்கள் தங்கள் கடமைகளை புறக்கணித்ததற்காக அவர்களை தண்டிக்க ஜாங் காங் பிரபுகளை தண்டனைத் தர   அனுப்பினார்.
இது சீன அரசவைக்குறிப்பு ஆவணங்களின் புத்தகத்தில்   தண்டனைசெய்திகளை விவரிக்கும் பகுதி ஆவணத்தில்  முழுமையாக விவரிக்கப்பட்டுள்ளது.
சூரிய கிரகணங்கள் வரலாற்று ரீதியாக மரணம் மற்றும் அழிவைக் கொண்டுவரும் சகுனங்களாக பண்டைய காலத்தில் இருந்து பார்க்கப்படுகின்றன. ஆனால் உண்மையில், அவை பாதிப்பில்லாதவை - மேலும் அவை ஐன்ஸ்டீனின் சார்பியல் கோட்பாட்டை கூட நிரூபிக்க உதவியது.
ஹீலியம் கண்டுபிடிக்கப்பட்டதற்கு சூரிய கிரகணமும் காரணமாகும். மனிதர்களுக்குத் தெரிந்த இரண்டாவது இலகுவான மற்றும் இரண்டாவது மிகுதியான இந்த தனிமத்தின் இருப்புக்கான முதல் ஆதாரம்,
ஆகஸ்ட் 18, 1868 அன்று ஒரு முழு சூரிய கிரகணத்தின் போது பிரெஞ்சு வானியலாளர் ஜூல்ஸ் ஜான்ஸனால் கண்டுபிடிக்கப்பட்டது.
இதன் காரணமாக, இது கிரேக்க வார்த்தையின் பெயரால் அழைக்கப்படுகிறது. சூரியனுக்கு  ஹீலியோஸ். என்று பெயர் .
பாபிலோனியர்களும் பண்டைய சீனர்களும் கிமு 2500 ஆம் ஆண்டிலேயே சூரிய கிரகணத்தைக் கணிக்க முடிந்தது என்று எஞ்சியிருக்கும் பதிவுகள் காட்டுகின்றன.
பண்டைய தொல்பொருள் தளங்களில் காணப்படும் களிமண் பலகைகள், பாபிலோனியர்கள் கிரகணங்களை பதிவு செய்தது மட்டுமல்லாமல், முற்காலமாக அறியப்பட்ட பாபிலோனிய பதிவு மே 3, 1375 கிமு அன்று நடந்த கிரகணமாகும் - ஆனால் அவற்றைக் கணிப்பதில் மிகவும் துல்லியமாக இருந்தது. கிரகணங்களைக் கணிக்க சரோஸ் சுழற்சியை முதன்முதலில் பயன்படுத்தியவர்கள் அவர்கள். சரோஸ் சுழற்சி சந்திர சுழற்சியுடன் தொடர்புடையது
கிரேக்க வரலாற்றாசிரியர் ஹெரோடோடஸின் கூற்றுப்படி, கிமு 585 இல் ஒரு சூரிய கிரகணம் லிடியன்களுக்கும் ,மேதியர்களுக்கும் இடையிலான ஒரு போரை நிறுத்தியது, அவர்கள் கிரகணத்தால் இருண்ட வானத்தை ஒருவருக்கொருவர் சமாதானம் செய்வதற்கான அடையாளமாகக் கண்டனர் என்று பதிவு செய்துள்ளார் .
கிரேக்க வானியலாளர் ஹிப்பார்கஸ் சூரிய கிரகணத்தைப் பயன்படுத்தி சந்திரன் பூமியில் இருந்து சுமார் 429,000 கிமீ (268,000 மைல்) தொலைவில் இருப்பதைக் கண்டறிந்தார்.
இது இன்றைய விஞ்ஞானிகள் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையே இருப்பதாக கண்டறிந்துள்ள உள்ள சராசரி தூரத்தை விட 11% அதிகம். அத்தனை துல்லியமாக அப்போது எத்தகைய தற்போதைய நவீனக்கருவிகள் இல்லாமலேயே கண்டறிந்துள்ளனர் ,.
இவ்வாறு பல்வேறு வரலாற்றுக்குறிப்புகள் சூரிய கிரகணத்தைப் பற்றி  உலகெங்கும் கிடைக்கின்றன .
ஆனால் அவைகளில் எங்கும் இந்தியாவைப்பற்றியோ , தமிழ் நாட்டைப் பற்றியோ , வரலாற்றுக்குறிப்புகள் நிலைபெறவில்லை .
காரணம் நாம் அவைகளை சரிவர ஆவணபடுத்த வில்லை .மேல்நாட்டினர் தொகுத்ததைக்கொண்டே நமது வரலாறு கட்டமைக்கபடுக்கிறது ,
இப்போது தமிழ் நாட்டுக்கல்வெட்டுகளில் , கிடைத்துள்ள , சூரிய கிரகணம் பற்றிய தொகுப்புகளை சுருக்கமாகப்பார்க்கலாம் .
சூரிய கிரகணம் குறித்த தற்போதைய  தமிழ் நாட்டு நம்பிக்கைகள்குறித்தும் , இப்போதுதான் நாம் இவ்வாறு நம்பவைக்கப்படுகிறோமா அல்லது வரலாற்றில் கூட இப்படி இருந்துள்ளனவா என்று ஆராயும் போது வரலாற்றிலும் நிறைய இத்தகைய நம்பிக்கைப்பற்றி ஆதாரம் கிடைத்துள்ளது .
இத்தகைய நம்பிக்கைகள் உலகம் முழுவதும் பல்வேறுகாலகட்டத்தில் இருந்திருக்கிறது .
நாம் இப்போது தமிழ் நாட்டில் கிடைத்திருக்கும் சில வரலாற்று செய்திகளை மட்டும் காணலாம் .
தக்கோலம் எனும் திருவூறல் தேவார பாடல் பெற்ற
தலமாகு ம் இங்குள்ள ஜலநாதீஸ்வரர் திருக் கோவிலில் சோழர் இராஜகேசரிவர்மனது இருபத்திநான்காம் ஆண்டினைச் சேர்ந்த கல்வெட்டொன்று காணக்கிடைக்கிறது
இக்கல்வெட்டுக் குறிப்பிடும் இராஜகேசரிவர்மன் பிற்காலச் சோழ வேந்தனாகிய முதலாம் ஆதித்தசோழன் னென்று கருதப்படுகிறது.
தமிழ் மற்றும் கிரந்த எழுத்துகளால் எழுதப்பட்ட இக்கல்வெட்டு முதலாம் ஆதித்தனின் ஆட்சிக்காலத்தினை வரையறுப்பதற்கு ஏதுவான வானியல் நிகழ்வுகளையும் வரலாற்றுச் செய்திகளையும் ஒருங்கே கொண்டதாய் இக்கல்வெட்டு அமைந்துள்ளது
ஆனித் தலைபிறையால் தீண்டின சூரிய கிரகணத்தின் போது திருவூறல் மகாதேவர்க்கு கங்க மன்னனான மாரமரையரின் மகனான பிரிதிபதி முன்னூற்றுப் பதினேழு கழஞ்சு நிறை கொண்ட வெள்ளிக் கெண்டியொன்று வழங்கியச் செய்தியைத் தருகிறது இக்கல்வெட்டு.
இக்கல்வெட்டுக் குறிப்பிடும் சூரிய கிரகணத்திற்கான ஆண்டு கிபி 895ம் ஆண்டாகக் கணக்கிடப்படுகிறது. இவ்வாண்டு ஆதித்தனின் இருபத்தி நான்காம் ஆண்டாகக் கொள்ளப்படுவதால் ஆதித்தன் அரசேறிய ஆண்டு கிபி 871 எனக் கொள்ளப்படுகிறது.
முதல் பராந்தகன் அரசேறியது 907 எனக் கொள்ளப்படுவதால் இவன் முப்பத்தி ஆறு ஆண்டுகள் ஆட்சி புரிந்திருத்தல் வேண்டும்.
இக்கல்வெட்டுக் குறிப்பிடும் மாரமரையரின் மகனான பிரிதிபதி தக்கோலப் போரில் அபராஜிதபல்லவன் பக்கமிருந்து இரண்டாம் வரகுணனுக்கெதிராகப் போரிட்ட முதல் பிரதிபதியின் பெயரனாவான்.
இவனே முதல் பராந்தகன் காலத்தே உதயேந்திரம் செப்பேட்டினை வெளியிட்டவன்.
அந்த கல்வெட்டின் பாடத்தை காணலாம்
“ஸ்வஸ்தி ஶ்ரீ கோவிராசகே
சரி பன்மக்கு யாண்டு
இருபத்து நாலாவது ஆ
னித்தலை பிறையால்
தீண்டின ஸூர்ய்ய க்ரஹணத்
தி நான்று திருவூறல் மாதேவ
ர்க்கு மாரமரையர் மகனார்
பிரிதிபதியார் குடுத்த வெ
ள்ளிக் கெண்டி நிறை முன்நூ
ற்று ஒருபத்தேழு கழஞ்சு
இது பன்மாஹேஸ்வர ரக்ஷை
அதற்குகடுத்த சூரிய கிரகணத்தைப்பற்றிய செய்தியும் ,இவருக்கு பின் வந்த முதலாம் பராந்தகன் காலத்து(கி.பி.927-943தேவாரம் பாடல் பெற்ற குற்றாலம், குற்றாலநாதர் திருக்கோயில் அமைந்துள்ளது .
இத்திருக்கோயிலில் மொத்தம் 89 கல்வெட்டுகள் உள்ளன.
சோழ மன்னன் பரகேசரிவர்மன் என்ற முதலாம் பராந்தகன் காலத்து(கி.பி.927-943) வட்டெழுத்துக் கல்வெட்டுகள் 10. இம்மன்னன் காலத்துக்கல்வெட்டில் தமிழ்க் கல்வெட்டு ஒன்று உள்ளது. கல்வெட்டுகளில் இம்மன்னன் மதுரை கொண்ட பரகேசரிவர்மன் என்று குறிக்கப்படுகின்றார்.
முதலாம் பராந்தகச் சோழ மன்னனின் கல்வெட்டு பாண்டிய நாட்டில் இத்திருக்கோயிலில் மட்டுமே காணப்படுகின்றது. இம்மன்னன் காலத்துக் கல்வெட்டுகளில் சூரிய கிரகண நாள் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் இம்மன்னனின் ஆட்சிக்காலத்தினை அறிஞர்கள் கணக்கிட்டுள்ளனர்.
பாண்டிய மன்னன் சடையன் மாறன் (கி.பி. 921-922) காலத்தில் இத்திருக்கோயிலின் பெருமை தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததும், குற்றாலம் தேவார நாட்டின் பகுதியாக விளங்கியமையும், ’பாசுபதப் பெரு மக்கள்’ எனும் ஆலோசனைச் சபை இத்திருக்கோயிலுக்கு இருந்தது என்பதும் தெரிய வருகின்றது
திருச்சி மாவட்டம், குளித்தலை வட்டம், குழுமணி இனுங்கூர் சாலையில் நங்கவரம் எனும் வரலாற்றுச் சிறப்புமிக்க ஊர் அமைந்துள்ளது. சுந்தரரேசுவரர் என்று இன்றைய மக்களால் வணங்கப்பெறும் பராந்தகன் (907-955) காலத்திய இக்கோயில் காவிரியின் தென்கரையில் அமைந்த தேவதான நங்கை பிரமதேயமான அரிஞ்சிகை சதுர்வேதிமங்கலமென்று அழைக்கப்பட்டது.
கோயிலின் பெயர் மறவனீசுவரம் ஆகும்.
இத்திருக்கோயில் கல்வெட்டு பரகேசரிவர்மன் பராந்தகனுடைய பத்தாம் ஆண்டில் செம்பியன் இருக்குவேளான பூதி பராந்தகனார் தேவியார் சோழப் பெருந்தேவியார் தமது பிறந்த நாளில் சூரிய கிரகணம் நேர்ந்தமையால் 1080 கழஞ்சு (ஒரு கழஞ்சு – 5.33 கிராம்) பொன்னைப் பூஜைக்கும், நைவேத்தியத்திற்கும், விழாவுக்கும் முதலாக நிவந்தம் செய்தார் என்ற செய்தியை தருகின்றது.
சோழன் பராந்தகன் (907-955) காலத்திய கல்வெட்டுகளில் சூரிய கிரகணம் , தொடர்ச்சியாக கல்வெட்டுகளில் பதிவு செய்யப்பட்டுள்ளதால் , அப்போது வானவியலில் நிபுணத்துவம் பெற்ற பல தமிழர்கள் இங்கு இருந்திருப்பதை அறியமுடிகிறது
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் முக்கிய உபகோயில் அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலாகும்.
கி.பி. 14-ம் நூற்றாண்டுக்கு முன், பாண்டிய மன்னர்களால் சிவன் கோயிலாகக் கட்டப்பட்ட இக்கோயில், மாலிக்காபூரின் தாக்குதலுக்குப் பின் 17-ம் நூற்றாண்டில், திருமலைநாயக்கர் காலத்தில் அம்மன் கோயிலாக உருமாற்றம் பெற்றது.
இக்கோயிலில் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, கட்டடக்கலை நிபுணர் மணிவண்ணன் மற்றும் மகளிர் கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின்போது, கோயிலின் யாகசாலை அறை சுவற்றில் பழங்காலக் கல்வெட்டு ஒன்று கண்டறியப்பட்டது. முன், பின் எழுத்துக்கள் அழிந்த நிலையில் 4 வரிகள் மட்டுமே இதில் உள்ளன.
பலவைய பேர்களுக்கு...... சூரிய கிராணப் புண்ணிய காலத்தில்..... நீராகத் தாரை வாத்து---------கல்வெட்டிக் கொள்ள-------- என உள்ள இந்த எழுத்துகள் 17-ம் நூற்றாண்டின்போது சூரியகிரகணத்தன்று, பெரியநாயகியம்மன் கோயிலுக்கு நிவந்தத்துக்கு நிலம் தானமாக நீர்வார்த்துக் கொடுக்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மிக நீண்ட காலமாக ,ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் நாட்டில் சூரிய கிரகணம் என்பது அறியப்பட்டும் ,அதை ஆராதித்து வந்திருக்கின்றனர் என்பது இத்தகைய கல்வெட்டுகள் மூலம் தெரிகிறது .அதை முன்கூட்டியே அறியும் அறிவியலும் நம்மிடம் சிறப்புற இருந்ததும் தெரியவருகிறது .
இத்தகை நிலை நாயக்கர் ,மராட்டியர் முதலியோர் ஆளுகையுலும் தொடர்ந்தது .இன்றும்தீவிரமாக த்  தொடர்கிறது .
பண்டைய காலத்தில் நவீன கருவிகள் இல்லாமலேயே, சூரிய கிரகணத்தை தமிழர்கள் அறிந்துள்ளதும், அது நடக்கும் காலத்தில், இறைவனுக்கு நிவந்தங்கள் அளித்ததும், பழங்காலத்தில் சூரியகிரகண நேரத்தில் கோயில்களுக்குத் தானம் வழங்கும் பழக்கம் இருந்ததும் தெரியவந்துள்ளது.
பழனி மலைக்கோயில் கருவறை வடக்குப் பகுதியில், மல்லிகார்ச்சுனராயர் பொறித்த சூரியகிரகணம் குறித்த கல்வெட்டு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்தக் கல்வெட்டிலும், இதேபோல, சூரியகிரகண காலத்தை புண்ணியகாலம் என்றே தானத்துக்கு சிறந்த நேரமாகக் குறித்துள்ளனர்.
ஆனால்  தற்போது சூரியகிரகண நேரத்தை பேரழிவு ஏற்படும் காலமாக எண்ணி, அச்சப்பட்டு வருகிறோம்..தோஷம் கழிக்கிறோம் .
குமரிக் கண்டத்தில் 25,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஒரு நூல் " கோள்நூல்." அது வான் வெளி பற்றியது.என்று கூறப்படுகிறது ஆயினும் அது இன்று கிடைக்கவில்லை .இவ்வாறு பல வான அறிவியல் நூல்கள் இப்போது கிடைப்பதில்லை
.ஆனாலும் இதில் விந்தையான ஒன்று இன்றும் தமிழர் மத்தியில் புழக்கத்தில் இருக்கும் பஞ்சாங்கம் எனும் ஆண்டுக்கானகாலகணித குறிப்புநூல் .இதில் வாக்கியம் திருகணிதம் என்று இரு பிரிவு உண்டு .வாக்கியம் என்பது கணிதம் இல்லாது பண்டைய வாக்கியங்களைக்கொண்டு கணித்து எழுதப்படுவதாகும் .அவைகளில் இன்று வரை சூரிசந்திர கிரகணங்கள் மிகச் சரியாக குறிப்பிடப்படுவது விந்தையே .!
பல நவீன கருவிகளைக் கொண்டு கணிணியின் துணையுடன் துல்லியமாகக் கணிக்கப்படும் கிரகணங்களைத் தமிழர்களின் பஞ்சாங்கம் அந்தக் கருவிகளின் துணை இன்றி வினாடி சுத்தமாகக் கணித்துப் பல நூறு ஆண்டுகளாகச் சொல்லி வருகிறது என்றால் அதிசயமாக இல்லையா ? தமிழர்களின் பஞ்சாங்கக் கணிப்பு அதிசயமான ஒன்று!
அ,ஆ,இ,ஈ,உ,ஊ,எ,ஏ,ஐ ஆகிய ஒன்பது எழுத்துக்களை வைத்துக் கொண்டே பஞ்சாங்கத்தைத் தமிழர்கள் கணித்துவிடுவதாகக் கூறப்படுகிறது அதுபற்றி தமிழர்கள் தக்க கவனம் செலுத்தவேண்டும் .இக்கலையை அழியாமல் காக்கவேண்டும் .
பொதுவாக கிரகண காலத்தில் எல்லா கோயில்களின் நடைகளும் அடைக்கப்படுவது வாடிக்கை. ஆனால்,திருவாரூர் அருகிலுள்ள ஸ்ரீவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோயில் அப்போது திறக்கப்பட்டிருக்கும்.
கிரகண நேரத்தில் சிவனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடத்தப்படுகிறது
இன்னமும் நிறைய செய்திகள்  தொல் தமிழர்களின் வானியல் அறிவு பற்றி கூற இருக்கிறது .ஆனால் கட்டுரை நீண்டுவிடும் .எனவே இப்போதைக்கு சூரிய கிரகணத்துடன்
நிறைவு செய்வோம் .
அண்ணாமலைசுகுமாரன்
௮/௪/2024இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! TjHdAL0
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Cic54G0
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Tzw1Wy5
இருள் சூழ் சூரிய கிரகணம் !  அதை எதிர்கொண்ட வரலாறு , சமூகத்தில்  அதன் தாக்கம் ! Q8FSUGg

ayyasamy ram இந்த பதிவை விரும்பியுள்ளார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக