புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm

» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
6 Posts - 46%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
3 Posts - 23%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
2 Posts - 15%
Ammu Swarnalatha
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
1 Post - 8%
T.N.Balasubramanian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
372 Posts - 49%
heezulia
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
239 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
72 Posts - 9%
T.N.Balasubramanian
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
25 Posts - 3%
prajai
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
3 Posts - 0%
Ammu Swarnalatha
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_m10ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு !


   
   

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:00 pm

இந்தக் கட்டுரை ஜகத்குரு ராமானுஜரின் ஆயிரமாவது வருடத்தை முன்னிட்டு தினமலரில் வெளிவந்தது. இதை இங்கு பகிர்வதில் மகிழ்கிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! HppFuRE


சற்றேறக்குறைய ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீபெரும்புதூர் கிராமமே மகிழ்ச்சியில் மூழ்கிக்கிடந்தது. அவ்வூரில் ஒரு பெரிய பெருமாள் கோயில்...சுவாமியின் திருநாமம் ஆதிகேசவப்பெருமாள்...அந்த ஊரில் வசித்தவர் ஆசூரிகேசவாசாரியார். இவர் வேள்விகள் செய்வதில் வல்லவர். அதாவது எந்த வேள்வியாக இருந்தாலும் அதைச் சிறப்பாகச் செய்வார். அதனால், இவருக்கு ஸர்வக்ரது என்ற பட்டத்தை வேதபண்டிதர்கள் வழங்கினர். இந்த சொல்லுக்கு எல்லா வேள்விகளையும் செய்பவர் என்று பொருள். இக்காரணத்தால், இவரை ஸ்ரீமத் ஆசூரி ஸர்வக்ரது கேசவ தீட்சிதர் என்று மக்கள் அழைத்தனர்.  இந்த சமயத்தில் மணக்கால் நம்பியின் சீடரான ஆளவந்தார் (யமுனைத்துறைவர்)என்பவர், தான் ஆட்சிசெய்த ராஜ்ய பரிபாலனத்தை விட்டுவிட்டு, ஸ்ரீரங்கத்தில் தங்கி துறவியாக மாறிவிட்டார். அவரது சீடர் பெரியநம்பி. பெருமாள் மீது ஆளவந்தார் இயற்றிய துதிகள் அருமையானவை. நாத்திகர்கள் கூட அவரது பாடலைப் படித்தால் பரவசத்தின் உச்சிக்கு சென்று விடுவார்கள் என்றால், அதன் இனிமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. பெரியதிருமலை நம்பி என்பவரும் ஆளவந்தாரின் சீடராக இருந்தார். இவர் ஆளவந்தாரை விட வயதில் மூத்தவர் என்றாலும், அவரைக் குருவாக ஏற்றுக் கொண்டார். பெரியதிருமலை நம்பிக்கு காந்திமதி, தீப்திமதி என்று இரண்டு தங்கைகள் இருந்தனர். அவர்களில் பெரிய தங்கை காந்திமதியை, ஆசூரி கேசவாசாரியார் என்பவருக்கு திருமணம் செய்து வைத்தார். தீப்திமதியை, அகரம் என்ற கிராமத்தில் வசித்த கமலநயனப்பட்டர் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்தை நடத்திய பிறகு, நிம்மதியடைந்த பெரியதிருமலை நம்பி, எந்நேரமும் பெருமாளின் திருவடிகளையே எண்ணி தியானத்தில் ஆழ்ந்து கிடந்தார். ஆசூர் கேசவாசாரியாரும் காந்திமதியும் இல்லற வாழ்வை நீண்டகாலம் மகிழ்ச்சியாகக் கழித்துக் கொண்டிருந்தனர். ஆனால், இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை. தம்பதிகளுக்கு இது பெரும் மனக்குறையாக இருந்தது. தெய்வத்திவம் முறையிட்டால் குறைகள் தீரும். அதிலும் வேள்விகள் இயற்றுவதில் சிறந்த கேசவாசாரியாருக்கு எந்த தெய்வத்திடம் குறையைச் சொல்லலாம் என யோசித்த போது, விருந்தாரண்யம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்ட பெருமாள் ஸ்தலம் நினைவில் வந்தது. திருவல்லிக்கேணி என்ற குளத்தின் கரையில் அது அமைந்திருந்தது.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:02 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! SFwjU9r

அந்த குளத்தின் பெயர் தான் இன்றைக்கு அவ்வூருக்கு அமைந்து விட்டது. ஆம்...அது தான் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயில். அங்கு சென்று அவர்கள் மகப்பேறு குறித்த வேள்விகளைச் செய்தனர். இதன் பிறகு, கேசவாசாரியார் ஓய்வெடுக்க ஓரிடத்தில் அமர்ந்தார். கண்களைச் சுழற்றவே தூங்கி விட்டார். அப்போது, பார்த்தசாரதி பெருமாள் கனவில் வந்தார். கேசவா! நீர் ஒழுக்கசீலர், வேள்விகள் இயற்றி எம்மைத் திருப்தி செய்பவர், உமது பக்தி ஆழமானது. குழந்தை இல்லா கவலை இனி உமக்கு தேவையில்லை. நானே உமக்கு குழந்தையாகப் பிறப்பேன். இவ்வுலக மக்கள் பூர்வாச்சாரியார்கள் அருளிய உபதேசங்களின் மகிமை புரியாமல், தங்களையே உயர்வாக எண்ணிக்கொண்டு வாழ்கின்றனர். அகந்தை கொண்டு தீமை பல புரிகின்றனர். எனவே, அவர்களைக் கடைத்தேற்ற நான் அவதாரம் எடுப்பேன். இனி நீர் ஊர் திரும்பலாம். உம் விருப்பம் விரைவில் நிறைவேறும், என்றார்.

மிகுந்த மகிழ்ச்சியுடன் கேசவாசாரியார் ஊர் திரும்பினார். ஓராண்டு கடந்தது. காந்திமதி அம்மையார் கர்ப்பவதியானார். கலியுகம் 4118, ஆங்கில ஆண்டு 1017, சித்திரை 12, வியாழன், திருவாதிரை, வளர்பிறை பஞ்சமியன்று அவதரித்தது அந்தத் தெய்வக்குழந்தை. இதனிடையே, காந்திமதி அம்மையாரின் தங்கையான தீப்திமதிக்கும் ஆண்குழந்தை பிறந்தது. அக்காவின் குழந்தையைப் பார்க்க தங்கை தீப்திமதி ஸ்ரீபெரும்புதூருக்கு வந்தார். தங்கள் இருவருக்கும் ஆண்குழந்தை பிறந்ததில் அவர்களுக்கு பரம சந்தோஷம். தங்கைகளுக்கு குழந்தை பிறந்த செய்தியறிந்த பெரிய திருமலை நம்பி ஸ்ரீபெரும்புதூர் வந்தார். காந்திமதியின் குழந்தை லட்சுமணனின் அவதாரம் என்பது புரிந்தது. எனவே, குழந்தைக்கு ராமானுஜன் என்று பெயர் வைத்தார். ராமனுக்கு இளையவன் என்பது இதன் பொருள். தீப்திமதியின் குழந்தைக்கு கோவிந்தன் என பெயரிட்டார். இன்னும் சிலகாலம் கழித்து, தீப்திமதி பெற்ற மற்றொரு ஆண் குழந்தைக்கு சிறிய கோவிந்தப் பெருமாள் என்று பெயர் சூட்டினர். அக்காலத்தில், குழந்தைகள் பிறந்து நான்கு மாதம் கழிந்ததும், சூரியனைப் பார்த்தல் என்னும் சடங்கைச் செய்தனர். ராமானுஜனுக்கும், கோவிந்தனுக்கும் இந்த சடங்கு நடந்தது. பிறகு முதல் சோறு ஊட்டுதல், காது குத்துதல், மொட்டையடித்தல், கல்வி துவக்கம், உபநயனம் என வரிசையாக சடங்குகள் நடத்தப்பட்டன..

தொடரும்...



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:03 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! OrjJonF


ராமானுஜருக்கு இளம்வயது முதலே கல்வியில் பேரார்வம். ஆசிரியர்கள் அவர் மீது கொண்ட அன்பிற்கு அளவில்லை. பள்ளிப் பிள்ளைகளில் முதலாவது இடத்தில் இருந்தார் ராமானுஜர். அது மட்டுமல்ல, மகான்களைக் கண்டால் அவர்கள் எந்த ஜாதியைச் சேர்ந்தவர் என்று பாராமல், அவர்களோடு உரையாடுவார். அவ்வகையில் அவரது உள்ளத்தில் நீங்கா இடம் பெற்றவர் திருக்கச்சி நம்பி என்னும் பக்தர். இவரை ஊரார் ஸ்ரீகாஞ்சி பூர்ணர் என்று அழைப்பார்கள். பரந்தாமனுடன் நேரில் உரையாடுபவர் என்று மக்கள் இவரைக் கருதினர். அவர் வேளாளர் குலத்தைச் சார்ந்தவர் என்பதால், தன்னை விட உயர்ந்த அந்தணர்களுக்கு தான் என்றும் ஈடல்ல என்ற கருத்தைக் கொண்டவர். ஆனாலும், அவர் சொல்லும் வார்த்தைகளை பரந்தாமனின் வார்த்தையாகக் கருதிய அந்தணர்கள் கூட மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். அவரது சொந்த ஊர் பூவிருந்தவல்லி (இன்றைய சென்னை பூந்தமல்லி). ஆனால், காஞ்சியில் குடியேறி விட்டவர். வரதராஜப் பெருமாளைத் தவிர அவருக்கு வேறு எந்த நினைவுமில்லை. தினமும் காஞ்சிபுரத்தில் இருந்து ஸ்ரீபெரும்புதூர் வழியாக திருக்கச்சிநம்பி பூவிருந்தவல்லியிலுள்ள பெருமாளை தரிசிக்கச் செல்வார். இதற்கு இடைப்பட்ட தூரம் 52 கி.மீ.,. தினமும் 104 கி.மீ., நடந்து சென்று வருவதென்றால், நம்பியிடமிருந்த பக்தியின் ஆழத்தைப் புரிந்து கொள்ள வேண்டும். அப்போது ராமானுஜர் அவரைச் சந்திக்க நேர்ந்தது. அவரது முகத்தில் வீசிய தெய்வீகக்களை ராமானுஜரை மிகவும் கவர்ந்தது. அவருடன் பழகுவதைப் பெருமையாகக் கருதினார். நம்பிகளோ பரமசங்கோஜி.

குழந்தாய்! நீர் பிராமணர். நான் வேளாளன். தாங்கள் என்னோடு நட்பு பூணுவது எவ்வகையிலும் பொருந்தாததாய் அமையுமென்றே கருதுகிறேன்,என்றார். இவ்விடத்திலே ராமானுஜர் சொன்ன கருத்து எக்காலத்திற்கும் ஏற்புடைய ஒன்று. காஞ்சி பூர்ணரே! தாங்கள் பகவானிடம் நேரில் பேசும் ஆற்றல் பெற்றவர். எங்களால் அது முடிகிறதா? பூணூல் அணிந்த காரணத்தால் மட்டும் ஒருவன் பிராமணன் ஆக முடியாது. யார் ஒருவன் பகவானே சரணமென அவனோடு ஒன்றிப் போகிறானோ, அவனே நிஜமான பிராமணன்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:05 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! ZsttcaM

ஐயனே! திருப்பாணாழ்வார் தாழ்த்தப்பட்ட குலத்தவராயினும், அவரை பிராமணர்கள் போற்றி மகிழ்கிறார்களே, என்றார். அந்த செல்லக்குழந்தையின் அறிவாற்றலையும், ஜாதி துவேஷமற்ற தன்மையையும் எண்ணி வியந்தார் திருக்கச்சி நம்பிகள். அன்று கோயில் சென்று திரும்பும்போது ஸ்ரீபெரும்புதூரில் ராமானுஜர் வீட்டிலேயே தங்கினார். அவருக்கு விருந்துக்கு ஏற்பாடு செய்த ராமானுஜர், இரவில் அவர் படுத்ததும், கால்களைப் பிடித்து விட்டார். திடுக்கிட்டு எழுந்த நம்பிகள், ஐயா! நான் உங்கள் தொண்டன். எனது கால்களை தாங்கள் பிடித்து விடுவதா? என்றார் நெகிழ்ச்சியுடன். ராமானுஜர் வருத்தப்பட்டார். காஞ்சி பூர்ணரே! தங்களுக்கு சேவை செய்ய விடாமல் என்னை நீங்கள் தடுக்கிறீர்களே. இதை எனது துரதிர்ஷ்டமாகவே கருதுகிறேன், என்றார். இப்படி இவர்கள் கொண்ட அன்பின் எல்லை விரிந்து கொண்டே சென்றது. ராமானுஜர் வாலிப பருவத்தை அடைந்தார்.

பதினாறு வயதானது. ஆசூரிகேசவாச்சாரியாரும், காந்திமதி அம்மையாரும் மகனுக்கு திருமண ஏற்பாடுகளைச் செய்தனர். ரக்ஷகாம்பாள் என்னும் அம்மையாரைத் திருமணம் முடிக்க ஏற்பாடாயிற்று. தஞ்சமாம்பபாள் என்றும் இவருக்கு பெயருண்டு. ராமானுஜரின் திருமணம் கி.பி. 1033ல் நிகழ்ந்தது. மாட்டுப்பெண்ணின் வரவு குடும்பத்தில் பெருமகிழ்ச்சியை வரவழைத்திருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சி ஒரே மாதத்தில் அழிந்து போனது. திடீரென நோய்வாய்ப்பட்ட ஆசூரி கேசவாச்சாரியார் காலமாகி விட்டார். திருமணப் பந்தலிட்ட வாசலில் ஒரே மாதத்தில் நிகழ்ந்த இச்சோக சம்பவத்தால் காந்திமதி அம்மையார் நிலை குலைந்து போய்விட்டார். ராமானுஜரும் கடுமையான வருத்தத்தில் ஆழ்ந்தார். எனினும், அவரது ஆன்மபலத்தால் சற்றே தேறினார். இருப்பினும், மனச்சஞ்சலமடைந்த அவர்கள் ஊரைவிட்டே செல்வதென முடிவெடுத்து ஸ்ரீபெரும்புதூரில் இருந்து ஆன்மிகநகராம் காஞ்சிபுரத்துக்கு இடம் பெயர்ந்தனர். ராமானுஜர் அங்கேயே ஒரு வீடு கட்டி விட்டார்.

காஞ்சிபுரம் வந்ததும் தான் ராமானுஜருக்கு சோதனைக்காலமும் ஆரம்பித்தது. அதுவும் தனக்கு அமைந்த குருவிடமிருந்து இப்படிப்பட்ட சோதனை வருமென ராமானுஜர் நினைத்திருக்க மாட்டார். காஞ்சியில் யாதவப்பிரகாசர் என்ற பண்டிதரின் மாணவரானார் ராமானுஜர். பரம பண்டிதரான அவரது புலமை பலரைக் கவர்ந்திழுத்தது. அத்வைதக் (கடவுளுக்கு உருவமில்லை எனச் சொல்லும் பிரிவு) கொள்கையில் நாட்டமுடையவர் அவர். ராமானுஜர் தனது மாணவரானதும் அவரது அறிவுத்திறன், தேஜஸ் ஆகியவற்றைக் கண்டு ஆனந்தம் கொண்டார். மிகக்கஷ்டமான பாடங்கள், மந்திரங்களைக் கூட ஒருமுறை கற்றுக் கொடுத்தாலே அதை உடனடியாகப் புரிந்து கொண்ட ராமானுஜர் பற்றி உயர்வான அபிப்ராயம் வைத்திருந்தார். ஆனால், ராமானுஜருக்கோ குருவின் அத்வைதக் கோட்பாட்டில் உடன்பாடு இல்லை. இருப்பினும், குருவின் சொல்லுக்கு மறுபேச்சு பேச அவர் விரும்பவில்லை. மொத்தத்தில் வகுப்பில் அதிகம் பேசாத மாணவராகவே ராமானுஜர் திகழ்ந்தார். அதேசமயம் நீண்டநாள் இந்த மவுனவிரதம் நீடிக்கவில்லை. ஒருநாள், மதியவேளையில் மாணவர்கள் உணவருந்தச் சென்றுவிட்டனர். யாதவப்பிரகாசர் ராமானுஜரை அழைத்து, ராமானுஜா, என் உடம்புக்கு இன்று நீ எண்ணெய் தேய்த்து விடு, என்றார். அக்காலத்தில் மாணவர்கள் தான் குருவின் சொந்தப்பணியைக் கூட கவனிக்க வேண்டும். அப்போது ஒரு மாணவன் அங்கு வந்தான்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:07 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! UAlOGk8

குருவே! தாங்கள் காலையில் நடத்திய பாடத்தில் ஒரு மந்திரத்தின் பொருள் எனக்கு புரியவில்லை. சாந்தோக்ய உபநிஷதத்தில் வரும் தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி என்பதற்குரிய விளக்கம் வேண்டும்,என்றான். யாதவப்பிரகாசர் அவனிடம், பொன்போன்று பிரகாசிக்கும் பரந்தமானின் கண்கள் குரங்கின் ஆஸனவாய் சிவப்பாக இருப்பது போன்ற நிறமுள்ள சிவந்த தாமரை போன்றவை, என்றார். இவ்விளக்கம் கேட்டு ராமானுஜர் கண்ணீர் வடித்து விட்டார். சூடான கண்ணீர் ஆசிரியரின் தொடையின் மீது விழுந்தது. அதன் உஷ்ணம் தாளாமல், ஆசிரியர் மேல்நோக்கி பார்த்தார். நின்று கொண்டிருந்த ராமானுஜர் கண்களில் இருந்து தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது. ராமானுஜா! ஏன் அழுகிறாய்? குருவே! தங்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை கொண்டுள்ளோம். தாங்களே மகாத்மா. ஆனால், உலகத்தைக் காக்கும் எம்பெருமானின் திருக்கண்களை குரங்கின் பிருஷ்டபாகத்திற்கு ஒப்பிட்டதை எப்படி ஏற்பது? என்றார். குருவுக்கு கோபம் மிதமிஞ்சி விட்டது. அப்படியானால் நீ தான் இந்த உலகத்திற்கே குருவோ? குருவின் கருத்தை மறுப்பவன் நல்ல சீடனாக இருக்க முடியாது. சரி! நீதான் என்னையும் மிஞ்சிய அறிஞன் ஆகிவிட்டாயே, எங்கே, இப்பதத்திற்கு என்னை விட வித்வானாகி விட்ட நீ தான் பொருள் சொல்லேன், என்றார்.
குருவே! தங்கள் ஆசியோடு இப்பதத்திற்கான பொருளைக் கூறுகிறேன், என பணிவுடன் துவங்கினார். ஆசிரியர் பெருமானே! கப்யாஸம் என்ற சொல்லில் உள்ள அஸ் என்ற மறைவுச்சொல்லுக்கு மலர்தல் எனப் பொருள். இதனடிப்படையில், ஆஸ என்பதற்கு மலர்ந்தது என பொருள் கொள்ள வேண்டும். கப்யாஸம் என்ற வார்த்தையை உள்ளடக்கிய மந்திரத்தை முழுமையாகக் கேளுங்கள். தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீக- மேவ மக்ஷீணி என்பதாகும். இதன் பொருள், சூரிய மண்டலத்திலுள்ள அந்த பரந்தாமனின் கண்கள் மலர்ந்த தாமரைப் பூப்போல் அழகாக இருக்கும், என்பதாகும். தாமரை சிவப்பை குரங்கின் ஆசனவாய் சிவப்பு என குறிப்பிட்டதைத் தான் மறுத்தேன், என்றார். இந்தப் பொருள் கேட்டு யாதவப்பிரகாசர் துள்ளிக்குதித்தார். ஏ ராமானுஜா! நான் சொன்ன விளக்கம் சங்கராச்சாரியார் சொன்னதின் அடிப்படையிலானது. நீ சொல்வது ஒரு வாக்கியத்தை பிரித்து வருவதால் ஆனது. இதை ஒப்புக் கொள்ள முடியாது. வேண்டுமானால், நீ இலக்கணத்தில் கெட்டிக்காரன் என்று வேண்டுமானால் பீற்றிக் கொள்ளலாம், என்றார் ஆவேசத்துடன். இந்த சம்பவம் யாதவப்பிரகாசரை மிகவும் பாதித்தது. பெரியவர்கள் சிறியவர்கள் சொல்லும் நற்கருத்தை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை என்ற உலக வாதத்திற்கு புறம்பாக அவர் இவ்விஷயத்தில் நடந்து கொண்டார். இதையடுத்து மற்றொரு நாளும் இதே போன்ற வாதம் எழுந்தது. யாதவப்பிரகாசர் அன்று வகுப்பெடுக்கும் போது, ஸத்யம் ஜ்ஞானம் அனந்தம் ப்ரஹ்ம என்ற மந்திரத்திற்கு, பரப்பிரம்மம் (இறைவன்) சத்தியமும், அறிவுமயமானதும், முடிவில்லாததும் ஆகும், என பொருள் சொன்னார். அப்போது எழுந்த ராமானுஜர், குருவே! அம்மந்திரத்திற்கு அப்படி பொருளல்ல.

தொடரும்.....






http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:10 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! FPVt3OZ


பரப்பிரம்மம் சத்தியம் என்ற பண்பை உடையது. ஞானமும் அதன் பண்பு தான். முடிவற்றதும் என்பதும் அதன் பண்பு தானே தவிர, அதுவே முடிவற்றதோ, சத்தியமானதோ, ஞானமோ என்று அறுதியிட்டு பொருள் கொள்ள முடியாது, என்றார் மிக்க அடக்கத்துடன். இதைக் கேட்டு பிரகாசர் கொதித்தே போய் விட்டார். ஏனடா! உனக்கு அகங்காரம் அதிகமாகி விட்டது. இங்கே நீ குருவா? நான் குருவா? நான் சொல்வதைக் கேட்பதாக இருந்தால் நீ இங்கே இரு. இல்லாவிட்டால், நீயே ஒரு பள்ளிக்கூடம் தொடங்கி, உன் சொந்தக் கருத்துக்களையெல்லாம் உன்னிடம் படிக்க வரும் மட சீடர்களிடம் திணி. சங்கரரின் கொள்கைக்கு எதிராக உன் கருத்துக்கள் உள்ளன. இனியும் நீ எழுந்து பேசினால், உன்னை குருகுலத்தில் இருந்து வெளியே அனுப்பி விடுவேன். ஜாக்கிரதை, என எச்சரித்தார். ஏதோ ராமானுஜரை அடக்க வேண்டும் என்பதற்காக ஆசிரியர் இப்படி சொல்லி விட்டாரே தவிர, அவரது உள்ளத்துக்குள் அச்சம் தோன்றலாயிற்று. யாதவப்பிரகாசர் அத்வைதக் கொள்கையில் ஊறிப்போனவர். அத்வைதம் என்றால், இரண்டாவது என்ற சொல்லுக்கே இடமில்லை எனக் கூறுவதாகும். அதாவது, உலகம் என்ற ஒன்றே கிடையாது. அது மாயை. அப்படியானால் நம் கண் முன்னால் காணும் இந்தப் பொருள்கள் எல்லாம் எப்படி வந்தன என்றால், அதெல்லாம் வெறும் மனபிரமை தான். மனம் தான் இப்படியெல்லாம் இருப்பதாக கற்பனை செய்து கொள்கிறது என்று வாதம் செய்வதாகும். நாராயணனை தெய்வமாக ஏற்கும் இந்த வாதம், அவருக்கு உருவமில்லை என்கிறது. இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கும் யாதவப்பிரகாசர், ராமானுஜரை துவைதத்தில் ஊறிப்போனவரோ என சந்தேகித்தார். துவைதம் உருவ வழிபாட்டுக்கு ஒப்புக்கொள்கிறது. இவர்களும் நாராயணனே உயர்ந்தவர் எனக் கூறினாலும், சில காரியங்கள் வெற்றி பெற பிற கடவுள்களையும் வழிபடுவர். ஒன்றுக்கு மேற்பட்டது என்பது துவைதத்தின் சுருக்கமான பொருள்.

இந்நிலையில் அவர் மனதில் விபரீதமான எண்ணமும் தோன்றியது. எந்த ஆசிரியர் மாணவனுக்கு நல்வழி காட்ட வேண்டுமோ, அதே ஆசிரியர் தன் மாணவனைக் கொலை செய்ய வேண்டும் என்று முடிவெடுத்து விட்டார். ஒரு மாணவன் தன்னை முந்துவதா என்ற பொறாமையா அல்லது தான் கொண்ட கொள்கையை நிலைநிறுத்த வேண்டும் என்ற வேட்ககையா...எப்படியிருப்பினும் மனதில் கொலைத்திட்டம் உருவாயிற்று. காஞ்சிபுரத்திலுள்ள பல இளைஞர்கள் யாதவப்பிரகாசரை இரண்டாம் சங்கராச்சாரியார் என செல்லமாக அழைப்பார்கள். அவர் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார்கள். அப்படிப்பட்ட தன் சீடர்களை ரகசியமாக அழைத்து, என் அன்புக் குழந்தைகளே! ராமானுஜன் என்னை எதிர்க்கிறான். என் உரைக்கு பதில் உரை கூறுகிறான். எனது புலமையில் குற்றம் கண்டுபிடிக்கிறான். அவன் இவ்வாறு சொல்வதற்கு காரணம் துவைதத்தின் மீது அவனுக்கு பிடிப்பிருப்பதால் தான். அவன் ஒரு நாத்திகன். அதனால் தான் இப்படியெல்லாம் பேசுகிறான். அவனை ஒழித்துக் கட்ட வேண்டும், என பிஞ்சுமனங்களில் நஞ்சை விதைத்தார். ஒரு மாணவன் எழுந்தான். குருவே! இதொன்றும் பிரமாதமான காரியமில்லை. உங்கள் கருத்துக்கு மறு கருத்து சொல்பவனை நம் குருகுலத்தை விட்டு விலக்கி விடுங்கள். அவ்வளவு தானே. இதற்காக கவலைப்படவே தேவையில்லையே, என்றான். உடனே மற்றொரு மாணவன் எழுந்தான். அட அசடே! உனக்கு ஆசிரியர் சொல்வது முழுமையாகப் புரியவில்லை. அவன் மகாபிரகஸ்தனாக இருக்கட்டும். நம் ஆசிரியரை எதிர்த்துப் பேசட்டும். அதுபற்றியா ஆசிரியர் கவலைப்படுகிறார். அத்வைதத்தை அழித்து, துவைதத்தை அவன் புகுத்தி விடுவானோ என்றல்லவா அஞ்சுகிறார். ஒருவேளை நம்மிடமிருந்து விலக்கப்படும் ராமானுஜன், வெளியே போய் தனியாக குருகுலம் துவங்கி, துவைதத்தை போதித்தால் நிலைமை என்னாவது? எனவே அவனைக் கொன்று விடுவது தான் இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு, என்றான். ஒரு பெரிய ஆசானின் தலைமையில், காஞ்சிமாநகரில் கொலைத்திட்ட சதி உருவாகிக் கொண்டிருந்தது.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:11 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! B1MGp7s


நல்லவர்கள் பார்வையில் எல்லாமே நல்லதாகத்தான் தெரியும். ராமானுஜருக்கு இதுபற்றியெல்லாம் எதுவும் தெரியாது. வழக்கம் போல், அவர் குருகுலம் வந்து சென்று கொண்டிருந்தார். ஒருநாள் சீடர்களை யாதவப்பிரகாசர் அழைத்தார். சீடர்களே! அத்வைதத்தை அழிக்க புறப்பட்டிருக்கும் ராமானுஜனை, கொல்வதற்குரிய திட்டம் ஏதாவது வைத்துள்ளீர்களா? என்றார் ரகசியமாக. யாரும் வாய் திறக்கவில்லை. பாவம்...ஏறத்தாழ 18 வயது நிரம்பிய வாலிபர்கள் அவர்கள். அந்த அன்பு நெஞ்சங்களில் கொலை வெறி ஏற்றப்பட்டது. யாதவப்பிரகாசரே தன் திட்டத்தைக் கூறினார். குழந்தைகளே! இவ்வுலகில் பாவம் தீர்ப்பது கங்கை நதி. நாமெல்லாம் காசி யாத்திரை புறப்படுவோம். செல்லும் வழியில், ராமானுஜனைத் தீர்த்துக் கட்டி விடுவோம். அந்தணனைக் கொன்ற பாவம் கங்கையில் மூழ்கினால் சரியாகி விடும் என்கின்றன சாஸ்திரங்கள். நாமும் கங்கையில் மூழ்கி பாவத்தை தொலைத்து விட்டு திரும்பி விடுவோம். ராமானுஜனும் தொலைந்து போவான். நம் பாவமும் தொலையும், என்றார். உல்லாசப்பயண ஏற்பாடுகள் ஜரூராக நடந்தது. ராமானுஜருடன் அவரது சித்தி மகன் கோவிந்தனும் படித்து வந்தார். அவரும் ராமானுஜர் வீட்டில் தங்கியிருந்தார். இருவரும் இணைந்தே பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் இந்த உல்லாசப் பயணத்தில் அதிக ஆர்வம் காட்டினர். காசியும், காஞ்சியும் எட்டாத தூரத்தில் இருப்பவை. மிக நீண்ட இந்தப் பயணம் பல அனுபவங்களைத் தரும் என்பதால், இவர்கள் ஆர்வம் காட்டியதில் வியப்பில்லை. இவ்வளவு தூரத்துக்கு தன் ஒரே மகனை அனுப்ப காந்திமதி அம்மையாருக்கு மனமில்லை. இருப்பினும், குருகுலத்தில் எல்லாக்குழந்தைகளும் செல்வதால், தன் மகனையும் அனுப்ப சம்மதித்தார்.

உல்லாசப்பயணம் ராமானுஜரையும், கோவிந்தனையும் பொறுத்தவரை ஆனந்தமாகவும், மற்றவர்களைப் பொறுத்தவரை திகிலுடனும் துவங்கியது. பல நாட்கள் கடந்து அவர்கள் விந்தியமலை அடிவாரத்திலுள்ள கோதண்டாரண்யம் என்ற காட்டை அடைந்தனர். அங்கே ஆள்நடமாட்டம் என்பதே இல்லை. யாதவதீர்த்தர் என்ற ஆசிரிய வடிவில் இருந்த புலி, மான் போல் அப்பாவித்தனமாக காட்சி தரும் ராமானுஜர் மீது பாயத் தயாரானது. சீடர்களை அழைத்தார். ராமானுஜனை கொல்ல இதை விட சரியான இடம் ஏதுமில்லை. சாட்சியம் எதுவும் இல்லாமல் அவனை அழித்து விடலாம், என போதித்தார். இந்தப் பூவுலகில் கொலைக்கு சாட்சியங்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், எங்கும் பரந்திருக்கும் ஸ்ரீமன் நாராயணனின் கண்களை விட்டு எதையும் மறைக்க இயலுமா? ராமானுஜரின் சகோதரர் கோவிந்தனின் காதில் இந்தப் பேச்சு விழுந்து விட்டது. ஆஹா...சகோதரனைக் கொல்ல சதியல்லவா நடக்கிறது? அவர் வேகமாக ராமானுஜரிடம் ஓடினார். அவர் ஒரு குளத்தில் கை, கால் கழுவிக் கொண்டிருந்தார். அவரை ஆரத்தழுவிக் கொண்டார்.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 18, 2024 9:12 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! ARX7EOM

அண்ணா! அந்த நாராயணனின் அருளால் இன்று நீங்கள் உயிர் பிழைத்தாய். உடனே இங்கிருந்து ஊருக்குத் திரும்பி விடுங்கள். நீ காசிக்கு வர வேண்டாம், என்றார் அவரது காதில் ரகசியமாக. ராமானுஜருக்கு ஏதும் புரியவில்லை. கோவிந்தா! இன்று உனக்கு என்னாயிற்று? தலையும் இல்லாமல், வாலும் இல்லாமல் ஏதோ சொல்கிறாயே. புரியும்படி சொல்,. கோவிந்தன் நடந்த சேதிகளை ஒன்றுவிடாமல் விளக்கமாகச் சொன்னார். ராமானுஜர் அதிர்ந்து விட்டார். சிறியவர்கள் பெரியவர்களின் கருத்தை மறுத்தால், புத்திமதி சொல்லி திருத்த வேண்டும். அல்லது வாதத்தால் வெல்ல வேண்டும். இரண்டும் இல்லாமல், உயிருக்கே உலை வைக்க துணிந்து விட்டாரென்றால்.... அவரால் ஜீரணிக்கவே முடியவில்லை.

கோவிந்தனிடம் விடை பெற்று அவ்விடத்தை விட்டு அகன்று விட்டார் ராமானுஜர். நீண்ட நேரமாக ராமானுஜரைக் காணாததால், கோவிந்தன் அழுவது போல நடித்தார். அண்ணா! நீங்கள் எங்கே போய் விட்டீர்கள். இந்த அடர்ந்த காட்டில் எங்களை விட்டு பிரிந்து விளையாட்டுத்தனமாக எங்காவது போகலாமா? நான் அம்மாவுக்கு என்ன பதில் சொல்வேன்? குருவே! வாருங்கள். அண்ணாவைத் தேடுவோம், என்றார் கண்களைக் கசக்கிக் கொண்டே. யாதவப்பிரகாசருக்கு மகிழ்ச்சி. ஒழிந்தான் அந்தப் பொடியன். நமக்கு இறைவன் எந்த வேலையும் வைக்கவில்லை. இந்தக் காட்டுக்குள் அதிகப்பிரசங்கித்தனமாக போயிருப்பான். காட்டு விலங்குகள் அவனை தூக்கிக் கொண்டு போய் சாப்பிட்டிருக்கும், என்று தனக்குள்ளாகவே ஒரு முடிவுக்கு வந்து விட்டார். மற்ற மாணவர்களும் இக்கருத்தை ஆமோதித்தனர். இருந்தாலும், கோவிந்தனிடம் நல்லவர்கள் போல் அவர்கள் நடித்தனர். கவலைப்படாதே கோவிந்தா! ராமானுஜன் வந்து விடுவான். அவன் ஒன்றும் குழந்தையல்ல, பதினெட்டு வயது வாலிபன். நாம் காத்திருப்போம். அவன் எவ்வளவு புத்திசாலி தெரியுமா? ஆசிரியரையே மடக்கும் அந்த புத்திசாலிக்கு, இந்த ஆரண்யமா ஒரு பெரிய விஷயம். வந்து விடுவான்...வந்து விடுவான், என்று ஆறுதல் சொன்னார்கள். மாலை வரை காத்திருந்தும் அவர் வராமல் போகவே, யாதவதீர்த்தர் அனைவரிடமும், சரி...இனி அவனுக்காக காத்திருந்து பயனில்லை. அவன் எப்படியும் நம்மைத் தேடிப்பிடித்து வந்து விடுவான். எல்லாரோடும் சேர்ந்து வராமல், என் அனுமதி பெறாமல் காட்டுக்குள் சென்றது அவனது தவறு தானே தவிர நம்முடையதல்ல, என்றவர் யாத்திரையை தொடர உத்தரவிட்டார். கோவிந்தனும் அவர்களுடன் வேறு வழியின்றி புறப்படுவது போல அழுவதுபோல் பாவனை செய்து கொண்டே சென்றார். மற்றவர்கள் அவரை சமாதானம் செய்வது போல் நடித்துக் கொண்டே சென்றனர். இவர்களிடமிருந்து தப்பிய ராமானுஜர் அங்கிருந்து புறப்பட்ட போது மாலை வேளையாகி விட்டது. சூரியன் இன்னும் சிறிது நேரத்தில் அஸ்தமிக்கும் நிலை. சற்று கூட திரும்பிப்பார்க்காமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் நடந்தார். கும்மிருட்டாகி விட்டது. பசி வாட்டியது. கால்கள் தள்ளாடி விட்டன. மயக்கம் வருவது போல் இருந்தது. ஒரு மரத்தடியில் அப்படியே சாய்ந்தார். தூங்கி விட்டார். மறுநாள் மதியத்திற்கு பிறகு தான் எழவே முடிந்தது. அருகிலுள்ள குளத்தில் தண்ணீர் குடித்தார். அப்போது கடா மீசையுடன் ஒரு உருவம் அவர் அருகே வந்தது.

தொடரும்.....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 8:57 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! 1lOPTqi


ராமானுஜருக்கு உள்ளுக்குள் சற்று நடுக்கம். ஏனெனில், எதிரே நின்றவரின் தோற்றம் அப்படி. ஆனால், அவரோடு ஒரு பெண்ணும் நின்றாள். வேடர்குல பெண்மணி. கண்ட நகைகளையும் உடலில் வாரி இறைத்திருந்தாள். ஆனால், முகத்தில் மட்டும் லட்சுமி களை. லட்சணமாக இருந்தாள். குரல் மட்டும் என்னவோ போல் இருந்தது. குழந்தே! இந்த காட்டுக்குள்ளே எப்படி வந்தே? இங்கே திருட்டு பயம் அதிகமாச்சே! நீ யாரு? எங்கே போய்கிட்டு இருக்கே, உன்னைப் பார்த்தா பிராமணர் போல் தெரியுதே, என்றாள் அப்பெண்மணி. மீசைக்காரரும் அவரிடம் இதையே திருப்பிக்கேட்டார். வரை ஆசுவாசமாக தடவிக் கொடுத்தார். ராமானுஜர் வேறெதுவும் சொல்லவில்லை. ஆனால், தான் காஞ்சிபுரம் போவதை மட்டும் கூறினார்.நல்லது...நல்லது...நாங்க இந்த விந்தியமலை அடிவாரத்தில் தான் வசிப்பவங்க தான். வயசும் ஆயிடுச்சு. எம்பெருமான் திருவடியை நல்லபடியா அடைய காஞ்சிபுரம் வழியாத்தான் ராமேஸ்வரம் யாத்திரை போறோம். எங்களோட வந்தா உன்னை காஞ்சிபுரத்திலே விட்டுட்டு கிளம்புறோம், என்றார் வேடன். ராமானுஜருக்கு மகிழ்ச்சி. நம்மை பாதுகாப்பாக காஞ்சியில் விட்டுச் செல்ல எம்பெருமானே இவர்களை அனுப்பியிருக்கிறார் போலும் என எண்ணியவராய் அவர்களுடன் புறப்பட்டார். இதற்குள் மாலை நெருங்கிக் கொண்டிருந்தது. தம்பி! கொஞ்சம் வேகமா நடந்தா இருட்டுறதுக்குள் பக்கத்தில் இருக்கிற ஆத்தங்கரைக்கு போய் சேர்ந்திடலாம். அங்கேயிருந்து காலையிலே புறப்படுவோம், என்றார் கடாமீசைக்காரர்.

அவர்கள் கிளம்பினர். ஆற்றங்கரையும் வந்தது. குளிர் அதிகமாக இருந்ததால் சுள்ளிகளைப் பொறுக்கி வந்து வேடன் தீ மூட்டினார். நடந்த களைப்பில் அப்பெண்ணுக்கு கடும் தாகம் ஏற்பட்டது. இருளில் ஆற்றில் இறங்குவது அபாயம். எனக்கு தண்ணீர் வேண்டுமே, என்றாள். அவர், பேசாம படு. இந்த பக்கத்துலே ஒரு கிணறு இருக்கு. காலையில் அங்கே போய் தண்ணீர் குடிச்சுக்கலாம், என்றார். எப்படியோ அவர்கள் உறங்கி விட்டனர். மறுநாள் வேடன் குறிப்பிட்ட கிணற்றின் பக்கமாகச் சென்றார் ராமானுஜர். படிக்கட்டின் வழியாக உள்ளே இறங்கினார். கை, கால்களை அலம்பி விட்டு, ஒரு குடுவையில் தண்ணீர் மொண்டு வந்தார். வேடன் மனைவிக்கு கொடுத்தார். அவளுக்கு தாகம் அடங்கவில்லை. திரும்பவும் கொண்டு வந்து கொடுத்தார். இப்போதும் தாகம் அடங்கியபாடில்லை. மீண்டும் கொண்டு வந்து கொடுத்தார். தம்பி! இன்னும் கொஞ்சம் தண்ணீர் எடுத்து வாயேன், என்றாள். ராமானுஜர் மீண்டும் தண்ணீர் எடுத்து வந்தார். வேடனையும், அவர் மனைவியையும் எங்கே? அவர்களைக் காணவில்லை. சுற்றுமுற்றும் தேடிப்பார்த்தார்.

தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Feb 22, 2024 8:58 pm

ஜகத்குரு ராமானுஜரின் வரலாறு ! DAvnxOT

பக்கத்தில் அவர்கள் இருப்பதற்கான அறிகுறியே தெரியவில்லை. இடமே வித்தியாசமாக தெரிந்தது. தெருக்கள், மாடமாளிகைகள் தெரிந்தன. ஒரு பெரியவர் அந்தப்பக்கமாக வந்தார். அவரிடம், ஐயா! இது எந்த ஊர்? என்றார் ராமானுஜர். ஓய்! சரியான ஆளைய்யா நீர். உம்முடைய ஊரையே யாருடைய ஊர் என்று கேட்கிறீர். உம்மை யாதவப்பிரகாசரின் மாணவர் என்று இந்த ஊரே சொல்லும். சரியான ஆள் தான். காஞ்சிபுரத்திற்குள் நின்றுகொண்டு காஞ்சிபுரம் அடையாளம் தெரியாமல் பேசுகிறீர். இது சாலக்கிணறு என்பதை நீர் அறியமாட்டீரோ?, என்றவாறு, ராமானுஜரின் விளக்கத்திற்கு காத்துக் கொண்டிராமல் அவர் போய்க் கொண்டே இருந்தார்.

ராமானுஜருக்கு ஆச்சரியம். ஆ... நேற்று விந்தியமலைச் சாரலில். இன்று காஞ்சி நகரில். இது எப்படி சாத்தியம்? அப்படியானால், என்னோடு வந்த அந்த தம்பதியர் ஸ்ரீமன் நாராயணனும், தாயார் லட்சுமிதேவியுமா? அவர்களால் மட்டும் தானே இது சாத்தியமாகும்? அந்த நபர் சொன்னது உண்மை தானா? அவரது சந்தேகத்தை நிவர்த்தி செய்யும் வகையில், தூரத்தில் காஞ்சிபுரத்து பெண்கள் சிலர் குடத்துடன் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க வந்தனர். ராமானுஜர் அப்படியே பரவசித்துவிட்டார். ஸ்ரீமன் நாராயணனை துதித்தார். லோகநாயகா! உலக மக்களுக்கு இது போன்ற சோதனைகள் வந்து கொண்டே இருக்கட்டும். அப்படியானால் தான் உன் தரிசனம் அடிக்கடி கிடைக்கும். பிறவியென்ற தொல்லை நீங்கும், என்று மனதாரச் சொன்னார். இதிலிருந்து ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். ஏ இறைவா! எனக்கு பணத்தை தா, சுகத்தை தா, வீடு வாசலைத்தா, அழகான மனைவியைத் தா, அந்த ஆணழகனை என் கணவனாக்கு, என்றெல்லாம் வேண்டினால், இறைவன் வரவும் மாட்டான். நாம் கேட்டதை தரவும் மாட்டான். ஏற்கனவே விதிக்கப்பட்ட விதியை அனுபவிக்கவே பூலோகம் வந்துள்ளோம். அவன் தரும் துன்பத்தை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்டால் இறைக்காட்சி நிச்சயம் கிடைக்கும். அப்படியே நடந்து வீட்டுக்கு வந்து விட்டார் ராமானுஜர்.
தொடரும்....



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக