புதிய பதிவுகள்
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by சிவா Today at 9:10 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
63 Posts - 40%
T.N.Balasubramanian
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
Manimegala
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Balaurushya
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
prajai
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Saravananj
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
429 Posts - 48%
heezulia
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
303 Posts - 34%
Dr.S.Soundarapandian
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
77 Posts - 9%
T.N.Balasubramanian
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
36 Posts - 4%
mohamed nizamudeen
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
29 Posts - 3%
prajai
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
8 Posts - 1%
Karthikakulanthaivel
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
sugumaran
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
5 Posts - 1%
Srinivasan23
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
4 Posts - 0%
Ammu Swarnalatha
 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_m10 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 7:37 pm

First topic message reminder :





 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:43 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 0bVXGE1

மகரம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


கோள்கள் கூட பாதை மாறலாம், ஆனால் நீங்கள் குறிக்கோளிலிருந்து மாறமாட்டீர்கள். தவறு செய்ய வாய்ப்பு இருந்தும் தவறமாட்டீர்கள். பழைய நினைவுகளை அவ்வப்போது அசைபோடும் நீங்கள், கடந்து வந்த பாதையை திரும்பிப் பார்க்க தயங்க மாட்டீர்கள். குழந்தையின் அழுகையையும் சங்கீதமாய் பார்க்கும் அளவிற்குக் கலை ஞானம் உங்களுக்கு உண்டு

உங்களுக்கு 8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டங்களில் ராகுவும் கேதுவும் என்ன செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


இதுவரை உங்களின் ராசிக்கு நான்காம் வீட்டில் அமர்ந்திருந்த ராகு பகவான், இப்போது ராசிக்கு 3-ம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். எதிலும் வெற்றி உண்டாகும். முயற்சியில் இருந்த முட்டுக்கட்டைகள் யாவும் நீங்கும். கழுத்தை நெருக்கிப் பிடித்த கடன் தொல்லைகளை கொஞ்சம் கொஞ்சமாக பைசல் செய்வீர்கள். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும்.

கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிட்டும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். மகளுக்கு தள்ளிப்போய்க் கொண்டிருந்த வெளிநாட்டு வேலை வாய்ப்பு கூடி வரும். தாயாருக்கு இருந்து வந்த சர்க்கரை நோய், மூட்டுவலி எல்லாம் குறையும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். பாதியிலேயே நின்றுபோன வீடு கட்டும் பணியை முடிக்க வங்கிக் கடனுதவி கிடைக்கும்.

வி.ஐ.பிகள், கல்வியாளர்கள், தொழிலதிபர்கள் என உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். வெளியூர்ப் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பெரிய நோய் இருக்குமோ என்ற பயம், கனவுத் தொல்லை, தூக்கமின்மை எல்லாம் நீங்கும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் சஷ்டம, பாக்யாதிபதியான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகு செல்வதால் தந்தையாரின் ஆரோக்கியம் மேம்படும். வீடு, மனை வாங்குவீர்கள். பயணங்களால் அனுகூலம் உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும்.

உங்களின் ராசிநாதனும் தனாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் கல்யாணம் ஏற்பாடாகும். கால் வலி, வயிற்று வலி குறையும். மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் சாதகமாக முடியும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. நிர்வாகத் திறமை கூடும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

உங்கள் சேவக, விரயாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் திடீர்ப் பயணங்கள் அதிகரிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். தங்க ஆபரணங் களை இரவல் தர வேண்டாம். அவசர முடிவுகள் வேண்டாம்.

வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பும் மரியாதையும் ஒருபடி உயரும். வராது என்றிருந்த பணமெல்லாம் வந்து சேரும். இதுவரை தாய்வழி உறவினர்களால் இருந்து வந்த அலைச்சல்களும், செலவுகளும் நீங்கும். பேச்சில் தெளிவு பிறக்கும். அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். கன்னிப் பெண்களே! பாதியிலேயே விட்ட படிப்பை மீண்டும் தொடர்வீர்கள். தோல் அலர்ஜி, இரத்தசோகை நீங்கும். மாணவர்களே! உயர்கல்வியில் வெற்றியுண்டு. அரசியல்வாதிகள், வீண் விமர்சனங்களைத் தவிர்க்கவும். தலைமை உங்களுக்கு முக்கியத்துவம் தரும்.

வியாபாரிகளே! பற்று வரவு உயரும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில், உங்களை அலைக்கழித்த மேலதிகாரி மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். கணினித் துறையினருக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு அமையும். கலைஞர்களுக்குப் பெரிய நிறுவனங்களிடமிருந்து புது வாய்ப்பு வரும்.

கேதுவின் பலன்கள்


இதுவரையில் உங்கள் ராசிக்கு பத்தாமிடத்தில் அமர்ந்திருந்த கேதுபகவான் எந்த வேலையையும் முழுமையாகச் செய்யவிடாமல் உங்களை தத்தளிக்க வைத்தார். உத்தியோகத்தில் அடிக்கடி இடமாற்றங்களையும், அவமானங் களையும் சந்திக்க வைத்திருப்பார். இப்போது அவர், ராசிக்கு ஒன்பதாமிடத்தில் வந்து அமர்கிறார். ஆகவே, வேலைச்சுமை குறையும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல் குழப்பங்கள் மாறும். மூத்த சகோதரர் பக்கபலமாக இருப்பார்.

1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் சகோதரர்களின் கல்யாணத்தைச் சிறப்பாக நடத்தி முடிப்பீர்கள். உத்தியோகத்தில் நெடுநாளாக எதிர்பார்த்த சம்பள உயர்வும், பதவி உயர்வும் இப்போது கிட்டும். ரத்த அழுத்தம் சீராகும். நண்பர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். என்றாலும் 9-ம் இடத்தில் கேது அமர்வதால், உங்கள் தந்தையாரின் உடல்நிலை சற்று பாதிக்கப்படலாம். அவருடன் சின்னச் சின்ன கருத்துமோதல்கள் வந்துபோகும். கௌரவச் செலவுகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

கேதுபகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் சுக, லாப, பாதகாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத் தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் பிள்ளைகளுடன் சின்னச் சின்ன விவாதங்கள் வரும். அவர்களின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்து நீங்கும். முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். பூர்வீகச் சொத்தைப் பராமரிக்க அதிகம் செலவு செய்ய வேண்டி வரும். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வாகனத்தைக் கவனமாக இயக்குங்கள்.

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.02.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால், மனைவிவழி உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள். பழைய நகையை மாற்றிவிட்டுப் புது டிசைனில் நகை வாங்குவீர்கள். அரசாங்க விஷயங்களில் அதிகாரிகளின் ஆதரவும் உதவிகளும் கிடைக்கும். வெளிநாட்டில் இருக்கும் உறவினர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள். ரசனைக்கு ஏற்ப வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள்.

உங்களின் அஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 முதல் 26.4.25 வரை கேது பகவான் செல்வதால், எதிர்பாராத காரியங்கள் நல்லவிதத்தில் முடியும். ஆனால் நீங்கள் திட்டமிட்ட காரியங்கள் தாமதமாகும். குடும்பத்தில் கணவன்-மனைவிக்குள் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பிள்ளைகளிடம் கோபத்தைக் காட்டாதீர்கள்.

கேது ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் தந்தை வழிச் சொத்துக்களை அடைவதில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். பத்திரங்களைக் கவனமாகக் கையாளுங்கள். உங்களை அடிக்கடி பணம் கேட்டு நச்சரித்த அன்பர்கள், இனி உங்களின் நிலைமையைப் புரிந்துகொள்வார்கள்.

வேலையின்றி தவித்தவர்களுக்கு அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனத்தில் நல்ல வேலை கிடைக்கும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். எதிர்பார்த்தபடி பற்று வரவு உயரும். உத்தியோகத்தில், சகல விதத்திலும் மரியாதை கூடும். சக ஊழியர்களால் நிம்மதி பிறக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் கேது பகவான் சற்று உங்களை அலைக்கழிப்பார். என்றாலும் ராகுபகவானின் ஆதரவும் அனுக்கிரஹமும் உங்களுக்குப் பரிபூரணமாக உள்ளது. ஆகவே, அதிரடி முன்னேற்றம் உண்டாகும்.

பரிகாரம்:

அருகிலுள்ள சிவாலயத்துக்குச் சென்று வில்வத்தால் அர்ச்சனை செய்து சிவ வழிபாடு செய்து வாருங்கள். பிரதோஷ காலத்தில் நந்தி பகவானுக்குக் காப்பரிசி சமர்ப்பிக்கலாம். வாய்ப்பு கிடைக்கும் போது சிவாலய உழவாரப் பணிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்ளுங்கள்; அதீத நன்மைகள் உண்டாகும். மேலும், நாகராஜன் பூஜித்து பேறுபெற்ற ஊர், நாகப்பட்டினத்திற்கு அருகே உள்ள நாகூர். இங்கே அருளும் ஶ்ரீநாகவல்லி சமேத ஶ்ரீநாகநாதரை வழிபடுங்கள். ஏழை நோயாளிகளுக்கு உதவுங்கள்; தொட்டது துலங்கும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:50 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 PzcGlWn

கும்பம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


அணைக்கட்டு திறக்கப்பட்டதும் நீர் எவ்வளவு வேகத்துடன் ஆர்ப்பரித்துப் பாயுமோ, அதே சீற்றத்துடன் அநியாயங்களைத் தட்டிக் கேட்பீர்கள். ஒரு கண்ணில் சுண்ணாம்பு மறு கண்ணில் வெண்ணெய் என்பதுபோன்று ஓரவஞ்சனையாக நடந்துகொள்ள மாட்டீர்கள்.

8.10.23 முதல் 26.4.25 வரை உள்ள காலகட்டங் களில் உங்களுக்கு ராகுவும், கேதுவும் என்ன பலன் தரப் போகிறார்கள் என்று பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


ராகுபகவான் இப்போது உங்கள் ராசிக்கு இரண்டாம் வீட்டில் வந்து அமர்கிறார். பணம் எவ்வளவு வந்தாலும் எடுத்து வைக்க முடியாதபடி, தவிர்க்க முடியாத செலவுகளும் அடுத்தடுத்து வரும். சில வேலைகள் தடைப்பட்டு முடியும். வாக்கு ஸ்தானத்தில் ராகு நுழைந்திருப்பதால், சங்கடங்களில் சிக்காதபடி சமயோசிதமாகப் பேசவேண்டும். நீங்கள் நல்லதைச் சொல்லப் போக, அதைச் சிலர் வேறுவிதமாகப் புரிந்துகொள்வார்கள்.

உங்களின் முன்கோபத்தால் சிலரின் நட்பை இழக்க வேண்டியது வரும். குடும்பத்தில் எப்போதும் பிரச்னை இருப்பது போல தோன்றும். அவ்வப்போது தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்குவீர்கள். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளாதீர்கள். உங்களிடம் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள், இனி திருப்பித் தருவார்கள். இளைய சகோதரருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். சகோதரியின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள். அறுவை சிகிச்சைகள் தொடர்பாக ஒன்றுக்கு மேற்பட்ட மருத்துவர்களின் கருத்துகளையும் கேட்டறிந்து முடிவெடுப்பது நல்லது.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் பூர்வபுண்யாதிபதியும் அஷ்டமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். நண்பர்கள் மத்தியில் நிலவிய கோபதாபங்கள் நீங்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும்.

உங்களின் ராசிநாதனும் விரயாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகுபகவான் செல்வதால் உங்களிடம் மறைந்துகிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சில நேரங்களில் நெஞ்சு வலி, முதுகு வலி வந்து நீங்கும். யாரையும் விமர்சித்துப் பேச வேண்டாம். வாகனங்களில் கவனம் தேவை.

உங்கள் தனாதிபதியும் லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகு செல்வதால், பேச்சால் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். அரசால் ஆதாயம் உண்டு. வழக்கு சாதகமாகும். வாகன வசதியுண்டு.

பிள்ளைகளின் பிடிவாதக் குணம் மாறும். மகள் கல்யாணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். நீங்கள் விரும்பியபடி வெளிநாட்டில் வேலை பார்க்கும் வரன் வந்தமையும். மகனின் உயர் கல்வியைத் தொடர்வதில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பத்திரங்களில் கையெழுத்திடும் போது கவனம் தேவை. யாருக்கவும் ஜாமீன் கையெழுத்திடவேண்டாம். வழக்குகளில் இழுபறியான நிலை ஏற்படும். திடீர்ப் பயணங்களால் லேசாக உடல்நிலை பாதிக்கும். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது.

சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். கன்னிப்பெண்கள் அலட்சியம், சோம்பல், பயம் இவற்றிலிருந்து விடுபடுவார்கள். தடைப்பட்டுக் கொண்டி ருந்த கல்யாணம் சிறப்பாக நடந்து முடியும். மாணவர்களே! உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தி வெற்றிபெறுவீர்கள். அரசியல்வாதிகள், தலைமைக்கு நெருக்கமாவார்கள். வியாபாரிகள், நஷ்டத்தைத் தவிர்க்க புதுவித யோசனைகளைச் செயல்படுத்துவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு மேலதிகாரி ஆதரவு தருவார். கணினித் துறையினருக்கு, வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து புது வாய்ப்புகள் வரும்; சம்பள உயரும். கலைத்துறையினருக்கும் புதிய வாய்ப்புகள் தேடி வரும்.

கேதுவின் பலன்கள்


கேது உங்களின் ராசிக்கு எட்டில் வந்து அமர்கிறார். கொஞ்சம் அலைச்சல் இருக்கவே செய்யும். அதேபோல் உங்களின் அடிமனதில் ஒருவித பயம் இருக்கவும் செய்யும். எந்த வகையிலும் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட வேண்டாம்; வீண் பிரச்னைகளில் சிக்கிக் கொள்வீர்கள். அதேபோல், குறுக்குவழியில் சம்பாதிப்பவர்களின் நட்பையும் தவிர்த்துவிடுவது நல்லது.

கணவன் மனைவிக்குள் அவ்வப்போது சண்டை வரும். மனைவியுடன் விட்டுக்கொடுத்துப் போவது நல்லது. சிறுநீரகத் தொற்று, பைல்ஸ் பிரச்னை போன்ற சிரமங்கள் ஏற்படலாம். அவ்வப்போது வரும் வீண் கவலைகள், கனவுத் தொல்லையால் தூக்கம் கெடும். வெளிவட்டாரத்தில் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிப்பது நல்லது. மற்றவர்களிடம் பேசும்போது தடித்த வார்த்தைகள் வேண்டாம். உறவினர்கள் உங்கள் உண்மை நிலையை புரிந்துகொள்ளாமல் அவ்வப்போது உதவி கேட்டுத் தொந்தரவு தருவார்கள்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் சேவகாதிபதியும் ஜீவனாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரையிலும் கேதுபகவான் செல்கிறார். ஆகவே கமிஷன், ரியல் எஸ்டேட் மூலம் லாபம் உண்டு. இளைய சகோதர வகையில் அலைச்சலும் செலவும் இருக்கும். சொத்து வாங்கும்போது தாய்ப் பத்திரத்தைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். எந்த விஷயத்திலும் எவரை நம்பியும் முக்கிய முடிவுகளை எடுக்காதீர்கள்.

உங்களின் சஷ்டமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால், பயணங்கள் அதிகரிக்கும். பழைய உறவுகளை விசேஷ நிகழ்வுகளில் சந்தித்து மகிழ்வீர்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனை எப்படி அடைக்கலாம் என்பது குறித்து யோசிப்பீர்கள். தொந்தரவு தந்து வந்த வாகனத்தைச் சரி செய்வீர்கள். அவ்வப்போது தாயாருடன் மனத்தாங்கல் வரும். அவருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு.

உங்களின் சப்தமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.4.25 வரை கேது செல்வதால் முன்கோபத்தைத் தவிர்க்கப் பாருங்கள். சிலர் உங்களைச் சீண்டிப் பார்ப்பார்கள். உணர்ச்சிவயப்பட வேண்டாம். சிலருக்குத் திருமணம் கூடி வரும். தந்தை வழி உறவினர்கள் தக்க தருணத்தில் உதவுவார்கள்.

கேது 8-ல் அமர்வதால் முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் வரும். மற்றவர் களின் விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்காதீர்கள். செல்போனில் பேசிக் கொண்டு வாகனங்களை இயக்க வேண்டாம்.

1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் ஆன்மிகச் சிந்தனை, பொது அறிவு, யோகா, தியானம் ஆகியவற்றில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. வேலையாட்களிடம் அதிகம் கண்டிப்பு காட்டாதீர்கள். உத்தியோகத்தில் அதிக வேலைச்சுமையால், நேரந்தவறி வீட்டிற்குச் செல்ல நேரிடும்.

மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி, உங்களுக்கு சிற்சில சிரமங்களைக் கொடுத்தாலும் உலக அனுபவங்களைப் பெற்றுத் தருவதாக அமையும். அதேபோல், உங்களின் பலம் - பலவீனத்தை நீங்களே அறியும் வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கும்.

பரிகாரம்:

திருக்கோயில் திருப்பணிகளுக்கு இயன்ற உதவியை வழங்குவது சிறப்பு. புற்றுக் கோயில்களுக்குச் சென்று தீபமேற்றி வழிபட்டு வரலாம். அம்மன் கோயில் விளக்குப் பூஜைகளில் கலந்து கொண்டு வழிபடலாம். புதுக்கோட்டைக்கு அருகே, திருமயத்திலிருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது பேரையூர். ஒருமுறை இவ்வூருக்குச் சென்று அங்கே அருள் பாலிக்கும் ஸ்ரீநாகநாதரையும், ஸ்ரீபிரகதாம்பாளையும் வணங்கி வழிபட்டு வாருங்கள்; சுபிட்சம் பெருகும்!




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 8:56 pm

 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Kel1WP7

மீனம் - ராகுகேது பெயர்ச்சி பலன்கள்


தழைத்துக் குலுங்கும் மரங்களுக்கு ஆதாரமாக விளங்கும் ஆணி வேரைப் போன்று ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதி காப்பவர் நீங்கள். இயற்கையின் விநோதங்களை வியந்து ரசிக்கும் நீங்கள், சக மனிதர்களின் மனதில் உள்ளதை அறியாத, வெள்ளந்தியாக இருப்பீர்கள். எல்லோருக்கும் எப்போதும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு.

ராகுவும், கேதுவும் இணைந்து 8.10.23 முதல் 26.4.25 வரையுள்ள காலகட்டங்களில் எப்படிப்பட்ட பலன்களை தரப் போகிறார்கள். என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்


ராகு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே வந்து அமர்கிறார். ஓரளவு பிரச்னைகள் குறையும். இடம், பொருள் ஏவல் அறிந்து பேசும் வித்தையை கற்றுக்கொள்வீர்கள். சமயோஜித புத்தியுடனும் நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகரிக்கும். செலவுகளை இனி கட்டுப்படுத்துவீர்கள். அதேநேரம் ஆரோக்கியத்திக் கொஞ்சம் அக்கறை காட்டவேண்டும். யூரினரி இன்ஃபெக்சன், ஹார்மோன் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் தலை, தோள்பட்டையில் வலி வந்து போகும். மருத்துவரின் ஆலோசனையின்படி நடந்து கொள்ளுங்கள். </p><p>ராகுவின் நிலையால், இந்தக் காலகட்டத்தில் முன்கோபம் அதிகரிக்கும். சின்னச் சின்ன வேலைகளும் சிக்கலாகி முடியும். என்றாலும் உங்கள் ராசி நாதனான குருவுக்கு ராகு நட்புக் கிரகமாக வருவதால், அனைத்துப் பிரச்னை களிலிருந்தும் நூலிழையில் காப்பாற்றப்படுவீர்கள். வாகனத்தை இயக்கும்போது கவனம் தேவை; விபத்துகள் நிகழக் கூடும்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் சுகாதிபதியும், சப்தமாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத் தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகுபகவான் செல்வதால் வேலைச்சுமை இருக்கும். வாகனம் வாங்குவீர்கள். இடவசதியான வீட்டிற்கு மாறுவீர்கள். வேலை கிடைக்கும். சில நேரங்களில் வீட்டில் தாயா, தாரமா என்ற தடுமாற்றம் வரும். ஷேர் பணம் தரும். போட்டிகளில் ஜெயிப்பீர்கள். வி.ஐ.பிகளின் ஆதரவான பேச்சால் உற்சாகம் அடைவீர்கள்.

உங்களின் லாபாதிபதியும் விரயாதிபதியுமான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகு செல்வதால் இழுபறியாக இருந்த வேலைகள் உடனே முடியும். வேலைச்சுமை அதிகரிக்கும். கோபத்தைக் கட்டுப்படுத்துங்கள். வீடு, மனை வாங்குவீர்கள். அதேநேரம் திடீர் செலவுகளாலும் பயணங்களாலும் தடுமாறுவீர்கள்.

உங்கள் ராசிநாதனும் ஜீவனாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகு செல்வதால் செல்வாக்கு கூடும். பணப்புழக்கம் உண்டு. பெரிய பொறுப்புகளுக்கு தேர்ந்தெடுக்கப் படுவீர்கள். பழைய கடன் ஒன்று தீரும்.

ராசியில் நிற்கும் ராகு சலிப்பையும், அலட்சியப்போக்கையும் உண்டாக்குவார். வெளி உணவுகளை அறவே தவிர்த்துவிடுவது நல்லது. நேரம் கடந்து சாப்பிட வேண்டாம். எவருக்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடவேண்டாம். உறவினர்களில் சிலர் உங்களின் நிலைமையை புரிந்துகொள்ளாமல் நடந்து கொள்வார்கள். வீண்பகை, மனக்கசப்புகள் வரும். குழந்தைப் பாக்கியம் உண்டாகும். அயல்நாட்டுப் பயணங்கள் தேடி வரும். பழைய நண்பர்கள் உதவுவார்கள். புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம்.

கன்னிப்பெண்களே! பெற்றோருடன் முக்கிய விஷயங்களைப் பகிர்ந்து கொள்ளுவது நல்லது. தள்ளிப்போன கல்யாணம் முடியும். மாணவர்களே! விளையாட்டு, இலக்கியப் போட்டிகளில் பதக்கம், பரிசு கிடைக்கும். அரசியல் வாதிகளே! தலைமையைப் பற்றி குறை கூறவேண்டாம்.

வியாபாரிகளே! இருப்பதை வைத்து லாபம் சம்பாதிக்கப் பாருங்கள். முக்கிய வேலைகளை நீங்களே முன்னின்று முடிப்பது நல்லது. உத்தியோகஸ் தர்களே! தடைபட்ட உரிமைகளும், சலுகைகளும் உடனே கிடைக்கும். மூத்த அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணினித் துறையினருக்கு சம்பள உயர்வுடன் புதிய வாய்ப்புகள் தேடி வரும். கலைத்துறையினரே, உங்கள் படைப்பாற்றலுக்கு ஏற்ற நல்ல வாய்ப்புகள் வரும்.

கேதுவின் பலன்கள்


இதுவரை உங்கள் ராசிக்கு எட்டில் உட்கார்ந்து கொண்டு ஏகப்பட்ட தொந்தரவுகளையும், மன உளைச்சல்களையும் கொடுத்து வந்த கேது, ராசிக்கு ஏழாவது வீட்டில் அடியெடுத்து வைக்கிறார். இனி வீண் பயம் விலகும். பிரச்னைகளை நேருக்குநேராக எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.

தம்பதிக்கு இடையே பிரச்னைகளைப் பெரிதுபடுத்த வேண்டாம்; விட்டுக் கொடுத்து போங்கள். தேவையில்லாத பயணங்கள் இனி இருக்காது. பலரையும் நம்பி ஏமாந்த நிலை மாறும். பிரபலங்களின் அறிமுகமும் கிடைக்கும். அவர்களால் சிற்சில தருணங்களில் ஆதாயம் கிடைக்கும். நன்றி மறந்தவர்களை நினைத்து அவ்வப்போது வருத்தப்படுவீர்கள்.

சொத்துப் பிரச்னை, பங்காளிச் சண்டைக்காக நீதிமன்றம் செல்ல வேண்டாம். இயன்றவரையிலும் பேசித் தீர்க்கப் பாருங்கள். அரசுக் காரியங் களில் கவனமாக இருங்கள். குடும்ப விஷயங்களை வெளியே யாரிடமும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்


உங்களின் தனாதிபதியும் பாக்கியாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால், திடீர் யோகம் உண்டாகும். பணவரவு உண்டு. பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். சிலர் வசதியான வீட்டுக்குக் குடிபெயர்வீர்கள். விலகியிருந்த உறவினர்கள், சகோதரர்கள் விரும்பி வருவார்கள். சகோதரிக்குத் திருமணம் முடியும். தந்தையின் உடல் நிலை சீராகும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால், சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வரும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். வேலை கிடைக்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். சொத்து வாங்குவீர்கள்.

உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.4.25 வரை கேது செல்வதால் நீண்ட நாட்களாக இருந்த முதுகு வலி, கழுத்து வலி, பல் வலி விலகும். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். தந்தையார் உதவுவார். பொது அமைப்புகளில் பதவியும் பொறுப்பும் கிடைக்க வாய்ப்பு உண்டு.

1.5.24 முதல் கேதுவை குரு பார்ப்பதால் பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். உங்களின் நட்பு வட்டம் விரிவடையும். உங்களால் வளர்ச்சி அடைந்த சிலர் உங்களை வந்து சந்திப்பார்கள். அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்த வாகனத்தை மாற்றிவிட்டு நவீனரல வாகனம் வாங்குவீர்கள். உறவினர் களிடையே நிலவி வந்த மனஸ்தாபங்கள் விலகும். அவர்கள் உங்களைப் புரிந்துகொண்டு உதவிசெய்வார்கள்.

ராசிக்கு 7-ம் வீட்டில் கேது அமர்வதால் வியாபாரத்தில் கூட்டுத்தொழிலை தவிர்க்கப்பாருங்கள். மற்றவர்களை நம்பி பெரிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் மேலதிகாரியுடன் கருத்துவேறுபாடுகள் மாறும். உங்களின் நிர்வாகத் திறன் கூடும். உடன் பணிபுரிபவர்களால் நிம்மதி உண்டாகும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சியில் ராகு உங்கள் உடலையும், உள்ளத்தையும் உரசிப் பார்த்தாலும், கேதுவால் எதிர்நீச்சலில் வெற்றி பெறும் சக்தி உண்டாகும்!

பரிகாரம்

வீட்டில் அனுதினமும் விளக்கேற்றி வைத்து துர்கா ஸ்தோத்திரம் படித்து வழிபடுங்கள். பாம்பணையில் பள்ளி கொண்டிருக் கும் பெருமாளை சனிக் கிழமைகளில் தரிசித்து, துளசி சார்த்தி வணங்கி வழிபட்டு வாருங்கள்.

நன்னிலம் அருகில் இருக்கும் தலம் ஶ்ரீவாஞ்சியம். இந்த ஊரில் ராகுவும் கேதுவும் சேர்ந்து காட்சி தரும் அரிய கோலத்தைத் தரிசிக்கலாம். இவ்வூரில் அருளும் சிவனாரை வழிபட்டு வாருங்கள்; ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்யுங்கள்; தடைகள் அனைத்தும் உடைபடும்.




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 30, 2023 9:03 pm


 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 03ChymX

மிதுனம் - ராகு கேது பெயர்ச்சி பலன்கள்


வெற்றி ஒன்றையே இலக்காக கொண்டு வேலை பார்க்கும் நீங்கள், எதற்கும் அஞ்சாத குணம் கொண்டவர்கள். முதுகுக்குப் பின்னால் பேசாமல் முகத்துக்கு நேராக பளிச்சென்று பேசுவீர்கள். நல்லது கெட்டது நான்கையும் அறிந்து வைத்திருக்கும் பகுத்தறிவுவாதிகள். கண்ணீருடன் வரும் அன்பர்களின் மனக்காயங்களை ஆற்றுபவர் நீங்கள்!

8.10.23 முதல் 26.4.25 வரை ராகுவும், கேதுவும் சேர்ந்து உங்களுக்கு என்ன பலன்களைத் தரப் போகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.

ராகுவின் பலன்கள்:


ராகு பகவான் உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டில் வந்து அமர்கிறார். தொட்ட காரியங்கள் வெற்றி அடையும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். பணவரவு அதிகரிப்பதால் பழைய கடனில் ஒருபகுதியை அடைப்பீர்கள். விலையுயர்ந்த பொருள்களால் வீடு அழகாகும். ராகு உங்களைச் சுயமாக சிந்திக்க வைப்ப துடன், சுயமாக தொழில் செய்யும் வல்லமையையும் கொடுப்பார்.

மனைவிவழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. குழந்தை இல்லையே என வருந்திய தம்பதியர்களுக்குக் குழந்தைப் பாக்கியம் உண்டாகும். உங்களுடன் பழகிக்கொண்டே உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். உழைப்புக்கான பலனை அடைவீர்கள். குலதெய்வத்தை மறக்காதீர்கள். கல்வியாளர்கள், ஆன்மிகவாதிகளின் நட்பு கிடைக்கும். வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்குக் குடிபுகுவீர்கள்.

ராகு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் ராசிநாதனும்,சுகாதிபதியுமான புதனின் ரேவதி நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 15.6.24 வரை ராகு பகவான் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. வீட்டில் மங்கல இசை முழங்கும். பெரிய பதவிகள் தேடி வரும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நெருங்கிய சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். சகோதர பகை நீங்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை அடைக்க உதவிகள் கிடைக்கும். தன்னார்வ தொண்டு நிறுவனங்களால் கௌரவிக்கப்படுவீர்கள்.

உங்களின் அஷ்டம பாக்யாதிபதியான சனியின் உத்திரட்டாதி நட்சத்திரத் தில் 15.6.24 முதல் 22.2.25 வரை ராகு செல்வதால் திருமணம், கிரகப் பிரவேசம் என வீடு களைகட்டும். குழந்தைப் பாக்யம் கிடைக்கும். கடனாகக் கொடுத்திருந்த பணம் கைக்கு வரும். வேற்றுமொழியினர், உதவுவார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். தந்தைவழியில் சொத்துகள் சேரும்.

உங்களின் சப்தம ஜீவனாதிபதியான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 22.2.25 முதல் 26.4.25 வரை ராகுபகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த காரியங்கள் தடைப்பட்டு முடியும். எதிர்பாராத உதவிகள் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும்.

ராகு 10-ல் வருவதால் வெளிவட்டாரத்தில் வி.ஐ.பிகள், கல்வியாளர்கள் அறிமுகமாவார்கள். படபடப்பு, டென்ஷன் விலகும். மகனின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். வீட்டிற்குத் தேவையான சாதனங்களை வாங்குவீர்கள். சிலர் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவார்கள்.

கன்னிப்பெண்களே! விரக்தி, சோம்பலில் இருந்து மீள்வீர்கள். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். மாணவர்களுக்கு, நல்ல கல்வி நிறுவனத்தில் மேற்படிப்பைத் தொடரும் வாய்ப்பு கிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அரசியல்வாதிகள் தலைமையை அனுசரித்துப் போவது நல்லது.

வியாபாரிகளே! சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும். பாக்கிகள் வசூலாகும். வாடிக்கையாளர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகஸ்தர்களே! புதிய அனுபவங்களைக் கற்றுக் கொள்வீர்கள். திடீர் இடமாற்றம் உண்டு. மேலதிகாரியுடன் அவ்வப்போது மனஸ்தாபங்கள் வரும். முக்கிய ஆவணங்களை கையாளும் போது கவனம் தேவை. கணினித் துறையினருக்குச் சம்பள - பதவி உயர்வு உண்டு. கலைத்துறையினருக்கு, எதிர்பார்த்த நிறுவனத்திலிருந்து புது வாய்ப்பு தேடிவரும்.

கேதுவின் பலன்கள்:


இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் அமர்ந்து முன்கோபத்தால் பிரிவு, உறவினர்களிடையே கருத்துமோதல் என பல கசப்பான அனுபவங் களைத் தந்த கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு நான்காம் வீட்டில் வநந்து அமர்கிறார். ஆகவே, உங்களைப் பக்குவப்பட வைப்பார். கனிவான பேச்சாலேயே காரியங்களைச் சாதிப்பீர்கள்.

வீட்டில் தள்ளிப்போன சுப நிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். பிள்ளைகள் இனி உங்களின் விருப்பங்களுக்குக் கட்டுப்பட்டு பாசத்துடன் நடந்து கொள்வார்கள். மகனை படிப்பு-வேலை காரணமாக வெளிநாடு அனுப்பி வைப்பீர்கள். வீட்டில் பழுதான வாஷிங்க் மிஷின் போன்ற பொருள்களை மாற்றிவிட்டு புதிது வாங்குவீர்கள். ஆன்மிகத்தில் மனம் செல்லும். பழைமை யான புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். அரசாங்க அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

கேது பகவானின் நட்சத்திர சஞ்சாரம்:


உங்களின் ஆறாம் அதிபதியும், லாபாதிபதியுமான செவ்வாயின் சித்திரை நட்சத்திரத்தில் 8.10.23 முதல் 11.2.24 வரை கேதுபகவான் செல்வதால் இந்தக் காலக்கட்டத்தில் பண விஷயத்தில் கறாராக இருப்பது நல்லது. வீண் அலைச்சல், காரியத்தடைகள், ஏமாற்றம் வந்து போகும். போலி புகழ்ச்சிக்கு மயங்காதீர்கள். காய்ச்சல், சளித் தொந்தரவு வந்து நீங்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். பூர்வீகச் சொத்துப் பிரச்னை களை நிதானமாகக் கையாளுங்கள்.

உங்களின் தனாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திரத்தில் 11.2.24 முதல் 19.10.24 வரை கேது செல்வதால், புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வீடு கட்ட வங்கியில் லோன் கிடைக்கும். அரசுக் காரியங்கள் விரைந்து முடியும். இழுபறியாக இருந்த வேலைகளைப் பக்குவமான பேச்சால் செய்து முடிப்பீர்கள்.

உங்களின் சேவகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திரத்தில் 19.10.24 மதல் 26.4.25 வரை கேது செல்வதால், தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். தந்தைவழி உறவினர்கள் மதிப்பார்கள். வேலை கிடைக்கும்.

கேது 4-ம் வீட்டில் அமர்வதால் முக்கிய படிவங்களில் கையெழுத்திடும் போது ஒருதடவைக்கு, பலதடவை யோசித்து கையெழுத்திடுவது நல்லது. வீடு கட்ட தேவைப்படும் தொகையை முன்னரே சேமித்துக் கொண்டு வீடு கட்டத் தொடங்குங்கள். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். 1.5.24 முதல் கேதுவை குருபகவான் பார்ப்பதால், தாய் வழி உறவினர்களிடையே இருந்து வந்த கருத்துமோதல்கள் விலகும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் மற்றும் பயணச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். சொந்த ஊரில் மரியாதை கூடும். ஆன்மிகவாதிகள், கல்வியாளர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரத்தில் உங்களின் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளுவீர்கள். வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் பாராட்டும் பதவி உயர்வும் கிடைக்கும்.

மொத்தத்தில் இந்த ராகு-கேது பெயர்ச்சி சிற்சில தடைகளைத் தருவதாக இருந்தாலும் தளராத முயற்சிகளில் உங்களை ஈடுபட வைத்து பூரணமான வெற்றியைப் பெற்றுதருவதாக அமையும். இடைவிடாத உழைப்பால் உங்களை முன்னேற வைக்கும்.

பரிகாரம்

சங்கடஹர சதுர்த்தி தினங்களில் பிள்ளையாருக்கு அபிஷேகம் செய்ய பால் வாங்கிக் கொடுங்கள். அன்று மோதம் நிவேதனம் செய்து விநியோகிப்பது சிறப்பு. அம்பாள் நவகிரக நாயகி அல்லவா? செவ்வாய் வெள்ளிக் கிழமைகளில் அருகில் இருக்கும் கோயிலுக்குச் சென்று அம்பாளுக்கு வாசனை மலர்கள் சமர்ப்பித்து வழிபடுவதுடன், நவகிரகங்களில் ராகுவையும் கேதுவையும் வழிபட்டு வாருங்கள். தடைகளும் பிரச்னைகளும் தீரும்; முன்னேற்றம் உண்டாகும்




 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35021
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Oct 01, 2023 7:34 pm

krishnaamma wrote:வணக்கம் சிவா! புன்னகை........என்னுடைய ராசி பலனுக்காக காத்திருக்கிறேன்.... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: undefined

என்ன உங்கள் பலன்களை படித்துவிட்டீர்களா? எப்பிடி இருக்கிறது தேக நலன்கள் ?

@krishnaamma



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Oct 01, 2023 10:13 pm

T.N.Balasubramanian wrote:
krishnaamma wrote:வணக்கம் சிவா! புன்னகை........என்னுடைய ராசி பலனுக்காக காத்திருக்கிறேன்.... ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: undefined

என்ன உங்கள் பலன்களை படித்துவிட்டீர்களா? எப்பிடி இருக்கிறது தேக நலன்கள் ?

@krishnaamma
மேற்கோள் செய்த பதிவு: undefined
பார்த்துவிட்டேன் ஐயா............நான் நலமே....நீங்களும் மாமியும் நலமா ? புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Oct 05, 2023 9:23 pm

ராகு - கேது பெயர்ச்சி: பொதுப்பலன்கள்


 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 1.png?dpr=1

2023-ஆம் ஆண்டுக்கான ராகு - கேது பெயர்ச்சிக்கான பொதுப்பலன்களை ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்துள்ளார்.

வாக்கியப் பஞ்சாங்கப்படி, நிகழும் மங்களகரமான ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீசோபக்ருத் வருடம் - தக்ஷிணாயனம் - வர்ஷ ரிது - கன்னியா ரவி - புரட்டாசி மாதம் 21ம் தேதி (08.10.2023) - அன்றைய தினம் தினசுத்தி அறிவது ஞாயிற்றுக்கிழமை - க்ருஷ்ணபக்ஷ தசமியும் - பூச நக்ஷத்ரமும் - சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 23:59க்கு (மாலை மணி 03:40க்கு) கும்ப லக்னத்தில் ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும், கேது பகவான் துலா ராசியிலிருந்து கன்னியா ராசிக்கும் மாறுகிறார்.

ராகு-கேது பெயர்ச்சி திருக்கணித பஞ்சாங்கத்தின்படி ஸ்ரீசோபக்ருத் வருடம் அக்டோபர் 30-ம் தேதி ராகு-கேது பெயர்ச்சி நிகழ உள்ளது.

மாறக்கூடிய ராகு பகவான் விசுவாவசு வருஷம் - உத்தராயணம் - வஸந்த ரிது - சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) - வெள்ளிக்கிழமை வரை மீனத்தில் இருந்து அருளாட்சி வழங்குவார். அதேபோன்று மாறக்கூடிய கேது பகவான் சித்திரை மாதம் 13ம் தேதி (26.04.2025) - வெள்ளிக்கிழமை வரை கன்னியில் இருந்து அருளாட்சி வழங்குவார்.

பெயர்ச்சி ஆகும் நாயகர்களால் லோகத்திற்கும் நமக்கும் நற்பலன்கள் பெற பிரார்த்தனைகள் அவசியம்.

ராகு - கேதுக்கள் சகோதரர்களாவார்கள். ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்று அழைக்கப்படும். ஆனால் மற்ற கிரகங்களுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த கிரகங்களுக்கு உண்டு. எந்த வீட்டில் இருக்கிறார்களோ அவர்களது ஆதிபத்தியத்தை இந்த கிரகங்கள் நமக்குக் கொடுப்பார்கள். உதாரணமாக ஜெனன கால ஜாதகத்தில் மேஷ ராசியில் ராகு இருக்கிறார் என்றால் அவர் மேஷ ராசியின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிபத்தியத்தை எடுத்துக் கொள்வார்.

பொது பலன்கள்


அறிவியல் பூர்வமாக நமது DNAதான் நம்மைப் பற்றியும் நமது முன்னோர்களைப் பற்றியும் சொல்லும் விஷயமாகும். ராகு - கேது என்னும் கிரகங்கள் DNA போலதான். ராகுவை வைத்து தகப்பனார் வழிகளையும் - கேதுவை வைத்து தாயார் வழிகளையும் புரிந்துகொள்ள இயலும். எனவே தான் ராகு தந்தை வழி காரகன் என்றும் கேதுவை தாய் வழி காரகன் என்றும் சொல்கின்றனர்.

ராகு கேதுக்களை வைத்துதான் தார தோஷம்- களத்திர தோஷம் - பிதுர் தோஷம் - புத்திர தோஷம் போன்றவற்றைச் சொல்ல முடியும். கல்வி - ஞானம் - திருமணம் - மக்கட்பேறு - வேலை - வெளிநாடு சம்பாத்தியம் - கர்மா போன்ற நமது வாழ்வின் இன்றியமையாத காரகங்களுக்கு ராகு கேது முக்கியமானவர்களாகும்.

கன்னியா ராசி மற்றும் மீன ராசி என்பது உபய ராசியாகும். இதில் மீன ராசி பஞ்ச பூத தத்துவத்தில் நீரையும் - கன்னியா ராசி என்பது பஞ்ச பூத தத்துவத்தில் நிலத்தையும் குறிக்கும். ராகு என்பது மிகப்பெரிய என்ற விஷயங்களையும் கேது என்பது குறுகிய விஷயங்களையும் குறிக்கும். இந்த பெயர்ச்சியினால் வறட்சி குறையும். மழைப் பொழிவு அதிகமாக இருக்கும். ஏரி குளம் போன்றவை நிரம்பும்.

அரசாங்கம் சார்ந்த விஷயங்களிலிருந்து வந்த குழப்ப நிலை நீங்கும். புதிய ஆட்சி மாற்றம் ஏற்படலாம். தண்ணீர் சார்ந்த இடங்களில் அதிகளவு விபத்து - அகால மரணங்கள் போன்றவை ஏற்படும். விமானம் - கப்பல் போன்றவற்றில் அடிக்கடி பழுதாவதும் அதை சரி செய்வதுமாக இருப்பார்கள். பொருளாதாரத்தில் மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படும். ஐரோப்பிய தேசங்களில் இருந்து வந்த தொய்வு நீங்கும். அமெரிக்கத் தேசத்திலிருந்து வரும் சுணக்க நிலை மாறும்.

இஸ்லாமியத் தேசங்களில் ஒற்றுமையுணர்வு ஓங்கும். இந்தியத் தேசத்தைப் பொறுத்தமட்டில் ராஜாங்க ரீதியான நடவடிக்கைகள் ஏற்றம் பெறும். ராணுவ ரீதியாக மிகப் பெரிய வளர்ச்சி இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை புதிய புதிய மருந்துகள் கண்டுபிடிப்பார்கள். ரியல் எஸ்டேட் துறை கொஞ்ச கொஞ்சமாக வளர்ச்சி அடையும்.

பொது பரிகாரம்


ராகுவும், கேதுவும் நாகம் சம்பந்தமான கிரகங்கள் என்பதால் நாகதேவதையை வணங்குவது நல்லது.

ராகுவிற்கு ஸ்ரீதுர்கை அம்சமுள்ள அம்மனையும், கேதுவிற்கு விநாயகர்-ஆஞ்சனேயரையும் வணங்குவது நன்மையைத் தரும்.



 ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 - 2025 : கே.பி. வித்யாதரன்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக