புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 15/06/2024
by mohamed nizamudeen Today at 10:36 pm

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Today at 9:19 pm

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Today at 9:16 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:12 pm

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Today at 9:06 pm

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Today at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 6:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:44 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:37 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:03 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 3:12 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:59 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:37 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:39 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:12 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Today at 12:10 pm

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Today at 12:02 pm

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Today at 12:01 pm

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:25 am

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:24 am

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:23 am

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:22 am

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:21 am

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:23 pm

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:21 pm

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 11:09 pm

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 11:07 pm

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Yesterday at 9:53 pm

» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:45 pm

» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Yesterday at 1:00 pm

» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:59 pm

» உன் அழகை வர்ணிக்க…
by Dr.S.Soundarapandian Yesterday at 12:58 pm

» சிரிக்க சிந்திக்க மட்டும்.
by Dr.S.Soundarapandian Yesterday at 12:57 pm

» பலாப்பழமும் பாலபாடமும்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:54 pm

» நடிகர் அரவிந்த் சாமி மகளா இவர்? என்ன செய்கிறார் தெரியுமா? ...
by Dr.S.Soundarapandian Yesterday at 12:51 pm

» சினிமாவாகும் கிரண்பேடி வாழ்க்கை கதை!
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இங்கிலாந்து பட விழாவில் ‘கேப்டன் மில்லர்’
by ayyasamy ram Yesterday at 9:40 am

» குவைத்தில் உயிரிழந்த 7 தமிழர்கள் உள்பட 45 பேரின் உடல்களுடன் கொச்சி புறப்பட்டது சிறப்பு விமானம்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» தாலாட்டும்... வானகத்தில்... "பாலூட்டும்,,வெண்ணிலவே,,,
by ayyasamy ram Thu Jun 13, 2024 10:42 pm

» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by ayyasamy ram Thu Jun 13, 2024 9:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 13, 2024 6:53 pm

» Finest Сasual Dating - Actual Girls
by T.N.Balasubramanian Thu Jun 13, 2024 6:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
96 Posts - 49%
heezulia
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
54 Posts - 28%
Dr.S.Soundarapandian
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
21 Posts - 11%
T.N.Balasubramanian
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
7 Posts - 4%
prajai
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
3 Posts - 2%
JGNANASEHAR
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
223 Posts - 52%
heezulia
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
137 Posts - 32%
Dr.S.Soundarapandian
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
21 Posts - 5%
T.N.Balasubramanian
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
18 Posts - 4%
mohamed nizamudeen
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
16 Posts - 4%
prajai
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
5 Posts - 1%
JGNANASEHAR
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Barushree
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%
Karthikakulanthaivel
ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_m10ஓடிப்போகிறவள் - சிறுகதை Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓடிப்போகிறவள் - சிறுகதை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Sep 29, 2023 7:59 pm

தோட்டத்து முள்ளங்கி ஒரு கொதிக்கே பச்சைத்தண்ணீராக வெந்திருந்தது. இரவுக்கும் சேர்த்து குழம்பைக் கூட்டி வைத்திருந்தாள். பெருங்காயம் போட்டுத் தாளித்தபோது “சோறு வச்சிட்டீயாடீ..” என்றாள் கலாராணி. “எல்லாம் வச்சாச்சு...” திண்ணையில் படுத்துக்கிடந்த செல்வராசு “எம்மா... செயந்தீம்மா...’’ என்றான். “ம்ம்... சொல்லு!” சோற்றை வடிபானையிலிருந்து நிமிர்த்திக்கொண்டே பேசினாள் ஜெயந்தி.

``பாலிருந்தா டீ போட்டுக் கொண்டாய்யா... வாயெல்லாம் வறண்டுபோச்சு.” செல்வராசு வேலைவெட்டி என்று பிரத்யேகமாக எதுவும் வைத்துக்கொள்வதில்லை. பரம்பரையாக ஒதுங்கிய ஐந்து ஏக்கரை இரண்டாக்கி அதையும் குத்தகைக்கு விட்டிருந்தான்.

ஜெயந்தி ஏற்கெனவே கொடியடுப்பில் பாலை ஏற்றியிருந்தாள்.

``இரு, எடுத்தாரேன்...”

``சோறு திங்கற நேரத்தில டீய குடிக்கிற..?” என்றபடியே டீயை நுரைபொங்க ஆற்றி தகப்பனிடம் ஒரு கிளாசும் தாயிடம் ஒன்றுமாக நீட்டினாள்.

“சொல்லாமயே கொண்டாந்துட்டே...” என்றாள் கலாராணி.

``பால் எக்சா இருந்துச்சு... அதான்...’’ பின்னேரம் வரை மிஞ்சிப்போனால் வெயிலுக்குக் கெட்டுப்போய்விடும். பின்னேரமென்பது மாலை ஐந்து மணி. விரல் கூட்டி எண்ணினாள். ஐந்து மணிக்கு ஆறு மணி நேரமிருந்தது. நாள்களைக் கடத்துவதைவிட மணி நேரங்களைக் கடத்துவதுதான் கடினமானது.

``நீ குடிக்கில தாயீ...” என்றான் செல்வராசு காலி டம்ளரை நீட்டியபடி.

“எனக்கு வேணாம்... அதான் பயலுங்க வந்தவொடனே சாப்டப் போறோமே...” அவளையடுத்து பிறந்தவன் பத்தாவதும், பிறகு அடுத்தடுத்து இரண்டு பிள்ளைகளுமாக கலாராணி வரிசையாகப் பிரசவித்துக் கொண்டிருந்தபோது ஜெயந்தி படிப்பை விட நேர்ந்தது.

ஐந்தாம் வகுப்பு ஆசிரியை வீட்டுக்கே வந்துவிட்டார். “மா... டீச்சர் வந்திருக்காங்க’’ ஜெயந்தி ஓடி வந்தபோது எதற்கு வந்திருக்கிறாள் என்பதை கலாராணியும், என்ன சொல்லப் போகிறாள் என்பதை டீச்சரும் அறிந்திருந்தாலும் பேச்சு மட்டும் தொடர்ந்தது. அப்போது ஜெயந்தி சட்டியில் வறுத்துக்கொண்டிருந்த புளியங்கொட்டையைத் தட்டி உரித்து வாயில் போட்டுக்கொண்டிருந்தாள்.

வயக்காட்டிலும் டாஸ்மாக்கிலுமாக பெண்களும் ஆண்களும் பிரிந்திருக்க, சோடையாக நகர்ந்துகொண்டிருந்த அந்த மதியநேரத்தில் அவனும் தண்ணீர் எடுக்க வந்திருந்தான். “நீங்க வைக்கறதுன்னா வைங்க...” குடத்தை நகர்த்திக்கொண்டான். கும்பல் சேர்வதற்குள் தண்ணீர் பிடித்துவிடும் முனைப்போடு வந்தவளுக்கு, இளைஞன் ஒருவனைக் குழாயடியில் பார்த்தது வியப்பாக இருந்தது. அவன் அயிலம்மாவின் நாத்தனார் மகனாம். அயிலம்மா இவளுக்குப் பெரியம்மா முறை வேண்டும். இவள் பிறப்பதற்கு முன்பே வெளியூரில் கட்டிப் போய்விட்டாள். ஆளுக்கு பதிலாக அவளைப் பற்றிய பேச்சுகள் மட்டும் ஊருக்குள் மூச்சுபோல ஏறி அடங்கும். பெரியம்மாவின் யாருமற்ற வீட்டிற்கு எதற்காகவோ வந்திருக்கிறான். ராஜா என்று பெயராம். ராசாவாகவே இருந்தான்.

``இல்ல... நீங்களே வைங்க...’’ என்றாள். மதிய நேரங்கள் அவர்களுக்குப் பிடித்திருந்தன.

“இந்தூர்ல என்ன பண்ணுறீங்க..?” அவள் பேச்சுக் கொடுத்தாள்.

``ஒங்கள பாக்கதான் வந்தேன்...” அதைச் சொல்லுமளவுக்கு அவர்களிடம் அன்னியோன்யம் வளர்ந்திருந்தது. அவனுமே வளர்த்தியாகத்தான் இருந்தான். ஏதோ காரணத்தைச் சொல்லிவிட்டு அவள் அப்பிராணியாக ஊருக்குள் வரும் பேருந்துக்காகக் காத்திருந்தாள். அவனிடம் இருசக்கர வாகனமிருந்தது. இந்நேரம் அவளை அழைத்துக் கொள்வதற்காக அவன் நெடுஞ்சாலையில் விரைந்துகொண்டிருப்பான். அவனின் கிசுகிசுப்பான பேச்சும், அந்த அரையிருட்டு உணவக அறையும் அவளுக்கு அவனைத் திருமணம் செய்துகொண்டு படுக்கையறைக்குள் பேசிக்கொள்வதாகவே தோன்றியது. அவனின் முசுமுசுப்பான ரோமங்கள் நிறைந்த வலக்கை தட்டை அளாவி உணவைக் கூட்டுவதை ரசித்துக் கொண்டிருந்தாள். மேசை மீதிருந்த அவனது இடக்கையைத் தனது கைக்குள் பத்திரப்படுத்திக் கொண்டபோது, ராஜா அவளை நோக்கி மென்மையாகச் சிரித்துக்கொண்டே நீரெடுத்து அருந்தியதை அவள் அவ்வளவு தூரம் ரசிக்கவில்லை.

“தங்களுக்கு மாமன் மகன்... அத்தைமகன் என்று யாராவது..?’’ அவன் விளையாட்டாகக் கேட்பதை விளையாட்டாகக்கூட ஆமோதிப்பதற்கு அவளுக்கு யாருமில்லை.

``ஏனாம்..?” அவனுக்கென்றே அவளுக்குள் ஒரு தொனி உருவாகியிருந்தது. அதை அவன்தான் சொன்னான். “மொகமெல்லாம் சிணுங்கலா வச்சிக்கிட்டுக் கொஞ்சலா பேசற பாரு... அது எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு...” அதற்குப் பிறகுதான் அவள் தன் பேச்சுகளை கவனிக்கத் தொடங்கினாள். அம்மாவிடம் சற்று துடுக்கும்வெடுக்குமான தொனி. அப்பாவிடம் அலட்சியத்தொனி. தம்பிகளிடம் அதிகாரமும் சில சமயங்களில் அன்பும் கலந்த தொனி.

“அவ எம்மொறப்பொண்ணு அப்டிஇப்டின்னு சொல்லீட்டு எவனாது மொறச்சான்னு வையேன்... நமக்கெல்லாம் அடி தாங்காதும்மா...” அவன் சிரித்தபோது பல் வரிசை சீராக இருந்தது தெரிந்தது.

முறைப்பதற்கெல்லாம் ஆளிருந்தால் மகேஷின் பிரச்சினைக்கே முறைத்திருக்க வேண்டும். அப்போதுதான் ஊரில் திருவிழா முடிந்திருந்தது. வேம்பு, இளம்பிறை, பூமயில், இவள் உட்பட இளம்பெண்கள் கொண்டாட்டமாகப் பக்கத்து ஊர் தியேட்டருக்குச் சென்றிருந்தனர். கூட்டமாக நின்றிருந்த இவர்களைக் கண்டதும் ஊர்ப் பெயரைச் சொல்லி “நீங்கெல்லாம் அந்தூரு பொண்ணுங்கதானே...” என்றான். ‘‘ஐயே… என்னமோ பத்தூருக்குத் தெரிஞ்சவனாட்டம் பேச்சைப் பாரு…’’ பெண்கள் சிணுங்கிக் கொண்டனர். “சினிமா பாக்க வந்துருக்கியளோ...” “ம்க்கும்… கொட்டாய்க்கு சினிமா பாக்க வராம இவனையா பாக்க வருவாக…’’ பெண்கள் முனகிக்கொண்டாலும் யாரும் சத்தமாகப் பேசவில்லை. அவன் சினிமாக்காரனைப்போல முடி வெட்டியிருந்தான். மாநிறமான முகம். சாய்ந்துகொள்ள ஏதுவான பெரிய மார்பு. ஆண்கள் எல்லோருமே அழகுதான். நிமிர்ந்தபோது அவனது பார்வை தன்னை வெட்டியதை ஜெயந்தி குறுகுறுப்புடன் கவனித்தாள். அதற்காக அடுத்தநாளே அவன் கிளம்பி வந்துவிடுவான் என்றெல்லாம் அவள் நினைத்திருக்கவில்லை.

பூமயிலும் அவளும் ஏரி வேலை கலைந்து வந்துகொண்டிருந்தனர். வறண்ட ஓடையைக் கடந்தபோது அடம்பலற்ற கருவேலத்தின் பின்னிருந்து சிறு கல்லொன்று வந்து விழுந்தபோது முதலில் திடுக்கிட்டுதான்போனது அவளுக்கு. பிறகு செல்லமாக விழுந்த கற்கள் யாரோ குறும்பு செய்கிறார்கள் என்று உணர்த்தியபோது உள்ளுக்குள் ஏதோ சிலிர்ப்பாக ஓடியது. யாருமற்ற தருணத்தில் அவர்களை வழி மறிப்பதுபோல மகேஷ் குதித்து நின்றபோது தலை நிமிரவியலாத வெட்கம் வந்தது.

படபடவென்று தாளிதம் பொரிந்து கருகலாக குழம்பில் மிதந்ததில், ``சட்டிய அடுப்புல காய வச்சிட்டு என்னாத்தடீ பண்ணுன..?’’ என்றாள் கலாராணி. என்ன செய்தோம் என்பது அவளுக்கு நன்றாக நினைவிருந்தது. சமையலறையின் இரும்புகிராதியின் வழியே தற்செயலாகத்தான் மகேஷைப் பார்த்தாள். எதையோ தொலைத்ததுபோல நடந்தான். வீட்டைத் தேடுகிறானா, அல்லது, அதையும் தெரிந்து வைத்துக்கொண்டு என்னைத் தேடுகிறானா? உடையையும் தலைமுடியையும் படிய வைத்துக் கொண்டு சிரமப்பட்டு நடையை இயல்பாக்கியபடி வெளியே வந்தபோது அவன் வீட்டைக் கடந்திருந்தான். “பாவீ... இவ்ளோ தூரம் தேடீட்டு வந்துட்டியா...” செல்லமாகத் திட்டிக் கொண்டே தாளிதத்துக்காகச் சட்டியை அடுப்பில் ஏற்றினாள். அப்போதுதான் தாளிதம் கருகிப்போனது. அவள் உடம்பு முழுக்க ஓடிய அவனது கைகளைத் தடுத்துத் தடுத்து முன்னேற்றினாள். அவர்கள் இறுகக்கட்டிக் கொண்டனர். அவனுக்கு முப்பதாவது இருக்கும். இருபத்து மூன்றுக்கும் முப்பதுக்கும் அவ்வளவு வித்தியாசமில்லை.

மகேஷின் மீது மையல்கொண்டிருந்த நாள்களில் அவளைப் பெண் கேட்டு வந்தவனுக்கும் வயது முப்பதைக் கடந்திருந்தது. பெற்றோர் அதையே மறுப்புக்கு காரணமாக்கினர். ஒவ்வொரு வரனுக்கும் ஒவ்வொரு காரணம் என்றாலும் பதில் எல்லோருக்கும் ஒன்றுதான். ஆனாலும் செல்வராசு மேலும்கீழுமாக எச்சில்கோடுகள் பாலம் கட்ட வாயைப் பிளந்து அழுவான். “ஒன்ன கட்டிக்குடுக்க முடியிலியேன்னுதான்டீ அந்தாளு வெதும்புறாரு” செல்வராசின் எல்லாச் செயலுக்கும் கலாராணியால் அர்த்தம் கொடுக்க முடியும்.

விஷயம் கேள்விப்பட்ட பிறகு எதையெதை அர்த்தப்படுத்திக்கொள்வது என்றே புரியவில்லை அவளுக்கு. பூமயில் காணாமல்போனபோது இவளிடம்தான் விசாரிப்புக்காக வந்திருந்தனர். அப்போது அவள் கோலமாவு மூட்டையைப் பிரித்துப் பொட்டலம் போட்டுக் கொண்டிருந்தாள். யாரோ செருப்பால் அடித்ததைப் போன்ற அவமானத்தில் குறுகி துப்பட்டாவுக்குள் அழுதாள். அவன் அணைத்துக் கொள்ள வந்தபோது அதைப் புறந்தள்ள முடியாமல் மேலும் அழுதாள். அது வறண்ட வயலில் மல்லாக்கொட்டைச் செடியைப் பிடுங்கியபோது நிலத்தில் விழுந்து, உடனே மறைந்தும் போனது. நிலத்துக்காரன் “நாலு செடி ஆயங்குள்ளயும் நெளிக்கறே...“ என்று கத்தினான். எல்லாம் பழங்கதையாகி பூமயிலும் இப்போது நட்பாகிப்போனாள். ஊருக்கு வரும்போதெல்லாம் அவளை இழுத்து வைத்துப் பேசிக்கொண்டிருப்பாள்.

“அது கொக்கிய கழத்தறவரைக்கும் தூங்கறவ கணக்கா கெடப்பேன்... அதான் அதுக்குப் புடிக்கும்...” அவள் இப்போது மகேஷின் மனைவி.

``ஏன், நீதான் கழட்டீட்டுக் கெடக்கறது...”

“பொட்டச்சிங்க உருவியுருவிப் பேசணும்... ஒண்ணுந்தெரியாதவளாட்டம் இருக்கணும்... ஊருகாட்டுக்குப் போனான்னா ‘எப்பய்யா வருவே’ன்னு ஏங்கியேங்கி அழுவணும்... அத்த வுட்டுட்டு, ‘வாய்யா... வந்து படுய்யா’ன்னு கெடந்தா பயபுள்ள மெரண்டுற மாட்டான்...’’ ஓங்கியடித்துச் சிரித்தாள். “இதெல்லாம் டாக்குடீசுடீ...”

“என்னா ப்ராக்குடீசோ..?”

ராஜாவும் அவளும் படுக்கையில் நெளிந்தபோது கலாராணி எதற்கோ அழைத்துக் கொண்டிருந்தாள். இடைவெளியின்றி நெருக்கி அவனைக் கவ்விக் கொண்டபோது அவன் சட்டென்று அவளை விலக்கினான். கொக்கியின் முனை அவன் உடலை அழுத்துவதாக எண்ணிக் கொண்டு ஒருக்களித்து நகர்ந்து மீண்டும் அவனை இறுக்கிக்கொண்டாள். “சே... காதல்ன்னா இதொண்ணுதானா..?” அவளின் தொய்ந்து கிடந்த முந்தானையை ஒழுங்குபடுத்தி விட்டான். அவன் சொன்ன உணவின் பெயரை அவளால் உச்சரிக்க முடியவில்லை “மஷ்ரூம் மஞ்சூரியன்...” என்றபோது எச்சில் தெறித்தது. ஏன், காதல்ல இது முக்கியமில்லையா..? அவனை நிமிர்ந்து பார்த்துச் சிரித்தாள். அவனை இறுக்கிக் கொண்டபோது அவளுக்கு ஏதோ நெருடலிருந்தது. ஆண்கள் எல்லோருமே அவளை ஏமாற்றுகிறார்கள்.

ஐந்து மணிக்கு இன்னும் நான்கு மணி நேரமிருந்தது. ராஜாவும் அவளும் ஐந்து மணிக்கு பூமயிலைப்போல ஓடிப்போகத் திட்டமிட்டிருந்தனர். வாட்டர்டேங்க் அருகே சந்தித்துக்கொள்வதாக ஏற்பாடு. தனது உடுப்புகளை இரண்டிரண்டாக ஏற்கெனவே அவனிடம் சேர்ப்பித்திருந்தாள்.

”காதலு ஊதலுன்னு எம்புட்டுப் பேரு வச்சாலும் எல்லாங்கடேசில இதுக்குதேன்டீ...” பூமயிலுக்குப் பிள்ளையுண்டாகி இருந்த பூரிப்பு வேறு.

தன்னை முத்தமிடுமாறு அவள் ஒருமுறை கேட்டபோது ராஜா அடர்ந்த மீசைக்குள் புதைந்த உதடுகளால் மென்மையாகச் சிரித்தான்.

“அன்னிக்கு ராவு பத்து மணியிருக்கும்... வவுத்துப்புள்ளக்காரியில்லையா..? செத்த அசந்தாப்பல வந்துடுச்சு... அந்தாளு தவிச்ச தவிப்புல மயங்கனமேரியே கெடந்தேன்... அது எந்தலைய துணிய ஒழுங்குபண்ணிப் படுக்க வக்கிது... தண்ணீய கொண்டாந்து குடுக்குது... ஒரே கூத்துதான் போ...” அப்போதுதான் நடந்ததுபோல அனுபவித்துக் கிறங்கினாள் பூமயில்.

“மூலைக்குள்ள ஒக்காந்து என்னாத்தடீ பண்ணுறே..?’’ கலாராணி மகளைத் தேடிக்கொண்டு வந்துவிட, ‘‘என்னமோ பண்ணுறேன்...” என்றபடி எரிச்சலோடு வெளியே வந்தாள். சமையற்கட்டிலிருந்த குப்பையை அள்ளிக்கொண்டு தோட்டத்திற்குச் சென்றாள். தோட்டத்துக் குப்பைகளை அதிக சத்தத்தோடு கூட்டித் தள்ளினாள். சூரியன் சாய்ந்துகொண்டே வந்தது. மணி நான்கிருக்கலாம்.

காந்திமதி அத்தாச்சி தலையைத் தூக்கிக் கோடாலி முடிச்சுப் போட்டபடியே கலாராணியைத் தேடி வந்திருந்தாள். கிசுகிசுப்புகள் வம்புகளென அவர்களின் மாலைகள் சுவராஸ்யமாகக் கடந்து செல்லும்.

“இந்தாடீ… அத்தாச்சி வந்திருக்கு பாரு… செத்த தண்ணி கொண்டுட்டு வா” மகளின் பதில் குரல் கேட்காததால் கலாராணி பின்கட்டுக்கு வந்தாள்.

“இந்நேரத்துல என்னாத்துக்குடீ தோட்டத்த கூட்ற..?” கொல்லைக்கதவின் நிலைப்படியில் கையைத் தேக்கிக்கொண்டு கலாராணி கேட்டபோது, “ஏன் கத்தற இப்போ...” என்றாள் வெடுக்கென்று. மாடத்திலிருந்த தீப்பெட்டியை கொண்டுவந்து, குவித்து வைத்த குப்பைகளுக்குத் தீயிட்டாள். காய்ந்த சருகுகள் அனலில் படபடத்தன. மணி ஐந்தைக் கடந்திருந்தது. படபடத்த மனதை வன்மம் சமன் செய்திருந்தது.

சிறுவர்கள் தெருவில் விளையாட, எஞ்சியவர்கள் டியூஷன் வகுப்புக்குச் சென்றிருந்தனர். பெண்கள் சமையல் வேலையைத் தொடக்கியிருந்தனர். ‘கௌசல்யா சுப்ரஜா ராமபூர்வா ஸந்தியா பிரவர்த்ததே... நேரம் மாலை ஆறுமணி’ என்றது உள்ளூர்க் கோயில் கடிகாரம். அலுமினிய டேக்சாவில் உலைநீரை நிரப்பிக்கொண்டாள். கண்கள் தெருவிலிருந்தன. ராஜா பதற்றத்தோடு நடமாடுவதும் அவளைத் தேடுவதுமாக அலைந்தான். மகேஷ்கூட இப்படி அலைந்திருக்கிறான். ஆனால் அவளுக்காக அல்ல. உலையை அடுப்பில் ஏற்றி விறகைத் திணித்தாள்.

அரிசியை அளந்து நிதானமாக அரிக்கன்சட்டியில் கொட்டினாள். உலை கொதிக்கத் தொடங்கியிருந்தது.

“செயந்தீ... மச்சு வூட்டாச்சி முருங்கக்கா பறிச்சுட்டுப் போன்னுச்சு. வாச்சி வாச்சியா எளசா தொங்கீட்டு கெடக்கு... ரெண்டு பறிச்சாந்து பெரட்டி வையீ... ஒங்கப்பன் மணி ஏழாச்சுன்னா தட்ட தூக்கிடுவான்” என்ற கலாராணியை உற்று நோக்கினாள்.

களைந்த அரிசியைக் கீழே வைத்துவிட்டு, செருகியிருந்த புடவையை அவிழ்த்து விட்டுக் கொண்டாள். தோட்டத்து வழியே கிளம்பி ராஜாவின் பார்வைபடும்படியாக நின்று, பிறகு வாட்டர்டேங்க் நோக்கி நடந்தாள்.

- கலைச்செல்வி




ஓடிப்போகிறவள் - சிறுகதை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

Dr.S.Soundarapandian இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9711
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:09 pm

ஓடிப்போகிறவள் - சிறுகதை 3838410834 மீண்டும் சந்திப்போம்



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக