புதிய பதிவுகள்
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:54 pm

» கருத்துப்படம் 17/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:29 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Yesterday at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Yesterday at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Yesterday at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Yesterday at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Yesterday at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Yesterday at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
14 Posts - 70%
heezulia
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
3 Posts - 15%
mohamed nizamudeen
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
2 Posts - 10%
வேல்முருகன் காசி
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
1 Post - 5%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
139 Posts - 41%
ayyasamy ram
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
129 Posts - 39%
Dr.S.Soundarapandian
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
17 Posts - 5%
Rathinavelu
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
8 Posts - 2%
prajai
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
6 Posts - 2%
வேல்முருகன் காசி
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
4 Posts - 1%
Karthikakulanthaivel
சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10சித்திரைதான் புத்தாண்டு! Poll_m10சித்திரைதான் புத்தாண்டு! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சித்திரைதான் புத்தாண்டு!


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2009 11:07 pm

பன்னெடுங்காலமாக தமிழகத்தில் தமிழ்ப் புத்தாண்டுத் துவக்கமாகச் சித்திரை முதல் நாளையே தமிழக மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இது அறிவியல் பூர்வமாகவும், சரியானதாகவே அமைந்துள்ளது. சூரியனை மையமாகக் கொண்டு நாள்காட்டியை தமிழர்கள் அமைத்துக் கொண்டனர். பூமி தன்னைத் தானே சுற்றிக் கொண்டு, ஒரு நீள் வட்டப் பாதையில் சூரியனையும் சுற்றி வருகிறது. சூரியனின் சுற்றுப் பாதை முழுமையடைய 360 டிகிரி ஆகிறது. மீண்டும் "0' டிகிரியில் இருந்து தனது சுற்றுப் பாதையை சூரியன் துவக்கும் நாளே சித்திரை முதல் நாளாகும். எனவேதான் நமது புத்தாண்டு ஆங்கிலப் புத்தாண்டு போல நள்ளிரவில் துவங்குவதில்லை.

சித்திரை துவங்கி பங்குனி மாதம் வரை 12 மாதங்களின் பெயர்கள் அந்தந்த மாதத்தில் பெற்ர்ணமி தோன்றுகின்ற நட்சத்திரங்களின் பெயர்களாகத் தமிழர்கள் அமைத்துள்ளனர். கேரளத்தில் ராசிகளின் பெயர்களையே மாதங்களின் பெயர்களாக அமைத்துள்ளனர். மலையாளத்தில் சித்திரை மாதம், மேஷ மாதம் என அழைக்கப்படுகிறது. இன்றைய கேரளம் அன்றைய சேர நாடாக இருந்தது. அங்கு சித்திரை மாதத் துவக்கம் "விஷு கணி'யாகக் கொண்டாடப்படுகிறது. தமிழகத்தில் சித்திரைக் கனித் திருவிழாவாகத் தமிழர்கள் புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். முக்கனியாம் மா, பலா, வாழை உள்ளிட்ட கனி வகைகளை இறைவனுக்குப் படைத்தும், வீடுகளில் மங்கலப் பொருள்களை அலங்கரித்தும் சித்திரைக் கனி பூஜை செய்து, அதில் கண் விழிப்பார்கள். ஆலயங்களில் அதிகாலை சூரிய உதயத்தை மையமாக வைத்து, புத்தாண்டுக்கான சிறப்பு வழிபாடுகளும், பூஜைகளும் நடைபெறும். வழிபாட்டின் ஒரு பகுதியாக, அந்த ஆண்டுக்கான பஞ்சாங்கத்தையும், அதன் பலன்களையும் திருக்கோயில்களில் படிக்க, அனைவரும் கேட்பார்கள்.

யோகம், கரணம், நாள், நட்சத்திரம், திதி என 5 அங்கங்களை உள்ளடக்கியதால் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. தொலைநோக்கி கண்டுபிடிப்பதற்கு முன்பாகவே, வானவியல் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் படைத்தவர்களாக நமது முன்னோர்கள் விளங்கினார்கள் என்பதற்குப் பஞ்சாங்கம் சிறந்த சான்றாகும். பொதுவாக, ஒரு பழமொழி உள்ளது. அதாவது "சாமி பொய் என்பவன் சாணியைப் பார்; சாஸ்திரம் பொய் என்பவன் பஞ்சாங்கத்தைப் பார்' என்று சொல்வார்கள். சந்திர கிரகணம், சூரிய கிரகணம், அமாவாசை உள்ளிட்ட பல்வேறு நுட்பமான விஷயங்களைப் பஞ்சாங்கம் துல்லியமாகக் கணித்துள்ளது. பஞ்சாபில் பைசாகி பண்டிகை எனும் பெயரிலும் அசாம், ஒரிசா என இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களில் ஆண்டின் துவக்கமாக சித்திரை முதல் நாளையே கொண்டாடுகின்றனர். தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதித் திருநாள் சித்திரையை ஒட்டியே வருகிறது. வசந்த காலம், கோடை காலம் என பருவ காலங்களும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே வகுக்கப்பட்டுள்ளன. விவசாயம் செய்வது கூடத் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நடைபெற்று வருகிறது. ஆலயங்களில் நடைபெறும் வழிபாடுகள், திருவிழாக்கள் ஆகியவையும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே பஞ்சாங்கத்தின் மூலம் நிர்ணயம் செய்யப்படுகின்றன. தீபாவளி, பொங்கல், நவராத்திரி போன்ற பாரம்பரிய பண்டிகைகளும் தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நிர்ணயிக்கப்படுகின்றன. வீட்டில் நடக்கும் திருமண விழா, காதணி விழா, ஊர்த் திருவிழா ஆகியவை எல்லாம் மேற்கண்ட தமிழ் மாதங்களின் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகின்றன.

மதுரையில் தமிழ் மாதங்களின் பெயர்களிலேயே தெருக்கள் அமைந்துள்ளன. தமிழ் மாதங்களை மையமாக வைத்தே விவசாயம் மற்றும் பருவ காலங்கள் தொடர்பான பொன்மொழிகள் உருவாக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, "ஆடிப் பட்டம் தேடி விதை', "ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்' ஆகியவற்றைச் சொல்லலாம். கடந்தாண்டு முதல் தமிழக அரசு தமிழ்ப் புத்தாண்டாக இருந்த சித்திரை முதல் தேதி என்பதை மாற்றி, தை மாதம் முதல் தேதியை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே திருவள்ளுவர் ஆண்டு என ஒரு நாள்காட்டி முறையை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. பொதுமக்கள் யாரும் அதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை. ஆட்சியாளர்கள் தங்களை முன்னிலைப்படுத்திக் கொள்ளும் வகையிலும், தங்களின் வெற்றிகளை நினைவுகூரும் வகையிலும் புதுகாலக் கணிப்பை, புதுநாள்காட்டிகளை உருவாக்கிக் கொள்வது என்பது பன்னெடுங்காலமாக உலகம் முழுவதும் வழக்கத்தில் உள்ளது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 14, 2009 11:09 pm

மன்னர்கள் விக்கிரமாதித்தன், சாலிவாகனன் ஆகியோர் தாங்கள் பெற்ற பெரும் வெற்றியை நினைவுகூரும் வண்ணம் தங்களது பெயர்களில் விக்கிரம சகாப்தம், சாலிவாகன சகாப்தம் என வருமாறு சகாப்தங்களை தங்களது அரசுகளில் உருவாக்கினார்கள். அதே போல் கிறிஸ்தவர்கள் ஏசுவின் வாழ்க்கையை மையமாக வைத்து கிறிஸ்தவப் புத்தாண்டையும், இஸ்லாமியர்கள் முகமது நபியின் வாழ்க்கைச் சம்பவத்தை மையமாக வைத்து ஹிஜ்ரி ஆண்டு எனவும் நாள்காட்டியை அமைத்துக் கொண்டனர். கிரேக்க நாட்டிலும் மிகப் பழமையான நாள்காட்டி முறை பின்பற்றப்பட்டு வந்தது. அதில் கிரேக்க கடவுள்களின் பெயர்களும், மன்னர்களின் பெயர்களும் இடம் பெற்று இருந்தன. ரோம் நாட்டிலும் மிகப் பழமையான நாள்காட்டி முறை கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. சீனா போன்ற நாடுகளில் விலங்குகளின் வடிவமாக ஆண்டுகளை வடிவமைத்து நாள்காட்டிகளை உருவாக்கி அதைப் பின்பற்றி வருகின்றனர். கிறிஸ்தவ மதத் தலைமைக் குருவாகவும், வாடிகன் நாட்டின் அரசராகவும் இருந்த போப் கிரிகோரி என்பவரால் கிரிகோரி நாள்காட்டி முறை உருவாக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. தற்போது பாரத நாட்டிலும் கிரிகோரியன் நாள்காட்டி முறை ஆங்கிலக் கல்வியில் படித்தவர்களால் பரவலாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால் இன்றும் பாரத நாடு முழுவதும் பெரும்பான்மை மக்கள், தங்களது பாரம்பரியமான நாள்காட்டி முறையையே பின்பற்றுகின்றனர். நம் நாட்டில் நெடுங்காலமாக சூரியன், சந்திரன் மற்றும் கோள்களை மையமாக வைத்தும், பருவ காலங்களை மையமாக வைத்தும் அறிவியல் பூர்வமாக நமது நாள்காட்டியை வடிவமைத்துள்ளனர். தை முதல் நாள் என்பது தமிழருக்குத் திருநாள். தமிழர்கள் சூரியனுக்குப் பொங்கலிட்டு வழிபடும் நாள்.

குறிப்பாக உழவுத் தொழிலுக்கு மரியாதை செலுத்தும் நாளாகவும், பொங்கல் திருவிழாவாகவும் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். புண்ணிய காலமான அதாவது ஒளி பொருந்திய காலமான உத்ராயண காலத்தில் சூரியன் பிரவேசிப்பதை மகர சங்கராந்தி திருவிழாவாக அதாவது தைத் திருவிழாவாக நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். தற்போது தமிழக முதல்வர் கருணாநிதி, தை முதல் தேதியை புத்தாண்டாக அறிவித்து சட்டப்பேரவையில் அதற்குரிய மசோதாவையும் நிறைவேற்றியுள்ளார். தை முதல் தேதியை வருடத்தின் துவக்க நாளாகக் கொண்டாட விரும்புகிறவர்கள் தாராளமாகக் கொண்டாடட்டும்; யாரும் தடுக்கவில்லை. ஆனால் தற்போதைய தமிழக அரசு சித்திரைத் திருநாள் கொண்டாட்டத்தை சீர்குலைக்க வேண்டிய அவசியம் என்ன? சித்திரை முதல் நாளுக்கு அளிக்கப்பட்டிருந்த விடுமுறையை ரத்து செய்ய வேண்டிய காரணம் என்ன? தமிழகம் முழுவதிலும் உள்ள ஆலயங்களில் சித்திரை முதல் தேதியன்று நடைபெறும் பூஜைகளை நடத்தக் கூடாது என தடுப்பதும், ஆலயங்களில் பஞ்சாங்கம் படிக்கக் கூடாது எனத் தடை ஏற்படுத்துவதும் ஏன்? இந்து சமய விவகாரங்களில் மட்டும் தமிழக அரசு தொடர்ந்து தலையிடுவது தமிழர்களின் அடிப்படை உரிமையைப் பறிப்பதாகும்.

தமிழ்ப் புத்தாண்டை மாற்றி அமைப்பது போல கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் புத்தாண்டு தேதிகளை மாற்றி அமைக்க முடியுமா? அரசு மற்றும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி, தமது தனிப்பட்ட கொள்கைகளை மக்களின் மீது திணிப்பது எந்தவிதத்தில் ஜனநாயகமாகும்? சித்திரை முதல் நாளை வருடத்தின் துவக்கமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதற்குச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும், திருமுறை, திவ்யப் பிரபந்த பாடல்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன. ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் பிரித்தாளும் சூழ்ச்சியின் அடிப்படையில் தமிழகத்தில் விதைக்கப்பட்ட பிரிவினை சிந்தனையை வேரறுப்போம். என்றும் தமிழர் கொண்டாடும் பாரம்பரியமான தமிழ்ப் புத்தாண்டைக் கொண்டாடுவோம். தை மாதப் பிறப்பு தமிழர் திருநாள். சித்திரையே புத்தாண்டு!

நன்றி: அர்ஜுன் சம்பத்
தினமணி







சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Apr 14, 2011 8:05 am

உலகத் தமிழ் உறவுகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



சித்திரைதான் புத்தாண்டு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Thu Apr 14, 2011 8:11 am

இந்தியாவில் இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இந்த ஏப்ரல் மாதத்தில் தான் புத்தாண்டுகளைக் கொண்டாடுகின்றன... ஓரிரு நாட்கள் முன் பின் இருப்பினும் இந்த மாதத்தில் தான் இந்திய வருடங்கள் பிறக்கின்றன..

கலைஞர் எந்த ஜோதிடரிடம் தனக்கு சாதகம் விளையும் என்று ஜாதகம் பார்த்துக்கொண்டாரோ ... இப்படி நம்மை கட்டாயப்படுத்தி புத்தாண்டை தை மாதம் மாற்றி வைத்து தொலைத்தார்... என்ன கொடுமை சார் இது

ஈகரை உறவுகளுக்கும் உலகத்தமிழ் நண்பர்களுக்கும் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 14, 2011 9:59 am

இவரு தமிழ்புத்தாண்டை மாத்தி வச்சதால யாரும் தமிழ்புத்தாண்டு கொண்டாடமா இருக்காங்களா என்ன?
ஒரே விசயம் இவரு மாத்துனதால ஒரு நாள் லீவு போச்சு அவ்வளவுதான்.மத்தபடி தமிழக மக்கள் தமிழ்புத்தாண்டுக்கு என்ன செய்வாங்களோ அத செய்துட்டுதான் இருக்காங்க.அடுத்து ஆட்சி மாறும்போது இதுவும் மாறும்



சித்திரைதான் புத்தாண்டு! Uசித்திரைதான் புத்தாண்டு! Dசித்திரைதான் புத்தாண்டு! Aசித்திரைதான் புத்தாண்டு! Yசித்திரைதான் புத்தாண்டு! Aசித்திரைதான் புத்தாண்டு! Sசித்திரைதான் புத்தாண்டு! Uசித்திரைதான் புத்தாண்டு! Dசித்திரைதான் புத்தாண்டு! Hசித்திரைதான் புத்தாண்டு! A
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 14, 2011 12:09 pm

சிவா wrote:
சித்திரை முதல் நாளை வருடத்தின் துவக்கமாகத் தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் என்பதற்குச் சங்கத் தமிழ் இலக்கியங்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன. மேலும், திருமுறை, திவ்யப் பிரபந்த பாடல்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டு என்பதற்கு ஈராயிரம் அண்டுகளுக்கும் முற்பட்ட கழக இலக்கியங்களில் காணப்பெறும் சான்றுகள் சில:-

1. "தைஇத் திங்கள் தண்கயம் படியும்" – நற்றிணை

2. "தைஇத் திங்கள் தண்ணிய தரினும்" – குறுந்தொகை

3. "தைஇத் திங்கள் தண்கயம் போல" – ஐங்குறுநூறு

4. "தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ" – கலித்தொகை

சித்திரைக்கு ஆதாரங்கள் உள்ளன என்று பலரும் உரைக்க சொல்கிறார்களே தவிர, யாரும் இலக்கியத்தில் இருந்து ஆதாரம் காட்டுவதில்லையே?


(பாடல்கள் மேற்கோளிட்டமைக்கு நன்றி: திருத்தமிழ்)



சித்திரைதான் புத்தாண்டு! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 14, 2011 12:17 pm

மக்களின் விருப்பங்களை அரசானை மூலம் மாற்றுவதில் எனக்கு உடன்பாடில்லை..

பொதுமக்கள் அவர்கள் விரும்பும் நாளன்றே புத்தாண்டு கொண்டாடலாம்..

ஆனால்,
தை முதல் திங்களே தமிழ் புத்தாண்டின் முதல் நாள் என்பதற்கும், சித்திரை ஆரியர்கள் நம் மீது திணித்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன...



சித்திரைதான் புத்தாண்டு! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Thu Apr 14, 2011 12:45 pm

தமிழ் ஆண்டுகள் என்று சொல்கிறோமே..
அவற்றில் ஒரு பெயர் கூட தமிழில் இல்லை...

பல்லாயிரம் ஆண்டுகள் தொன்மை வாய்ந்த நம் தமிழ் சான்றோர் தமிழ் அல்லாத 60 பெயர்களைச் சித்திரையில் துவங்கும் ஆண்டுகளுக்கு சூட்டியிருப்பார்களா?

அந்த ஆண்டுகளின் பெயரை நீங்களே ஏதேனும் ஒரு சமஸ்கிருத மொழிபெயர்ப்பாளரிடம் மொழிபெயர்த்து கேளுங்கள்..
அவற்றின் அநாகரிகமான அர்த்தங்கள் புரியும்!!!



சித்திரைதான் புத்தாண்டு! Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Thu Apr 14, 2011 4:41 pm

ஆஹா அருமையான பகிர்வு சிவா....

காலை முதன் முதல் வாழ்த்து வந்தது புன்னகை கழுத்து வலி எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சித்திரைதான் புத்தாண்டு! 47
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Thu Apr 14, 2011 4:43 pm

மஞ்சுபாஷிணி wrote:ஆஹா அருமையான பகிர்வு சிவா....

காலை முதன் முதல் வாழ்த்து வந்தது புன்னகை கழுத்து வலி எப்படி இருக்குன்னு சொல்லவே இல்லையே...
நீயும் பதிவுக்கு பதிவு கழுத்துவலி எப்படி இருக்குன்னுதான் கேக்குற?அவருக்கு சரி ஆகலைன்னா அவரெ சொல்லி இருப்பாரு இல்ல?



சித்திரைதான் புத்தாண்டு! Uசித்திரைதான் புத்தாண்டு! Dசித்திரைதான் புத்தாண்டு! Aசித்திரைதான் புத்தாண்டு! Yசித்திரைதான் புத்தாண்டு! Aசித்திரைதான் புத்தாண்டு! Sசித்திரைதான் புத்தாண்டு! Uசித்திரைதான் புத்தாண்டு! Dசித்திரைதான் புத்தாண்டு! Hசித்திரைதான் புத்தாண்டு! A
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக